Thursday, February 9, 2017

தள்ளாமை தவிர்க்கும் வாழையிலை

*   வேப்பிலைக்  கொழுந்தை  அரைத்துத்  தயிருடன்  கலந்து  சாப்பிட்டால்  பருத்தொல்லை  நீங்கும்.
*   காலையில்  சத்துள்ள  உணவும்  இரவில்  அரை  வயிறு  உணவும்  சாப்பிட்டு  வந்தால்  ஆயுள்  அதிகரிக்கும்.
*   வாழையிலையில்  தொடர்ந்து  சாப்பிட்டு  வந்தால்  முதுமை,  தலை  நரைத்தல்,  தள்ளாமை  ஆகியவை  காலம்  தாழ்த்தி வரும்.
 *  வெந்தயத்தை  தினமும்  பச்சையாகச்  சாப்பிட்டு  வந்தால்  வயிற்றிலுள்ள  கிருமிகள்  அழிந்துவிடும்.
*   எண்ணெய்  தேய்த்துக்  குளிக்கும்போது  வெந்நீரில்  சிறிதளவு  வினிகர்  கலந்து  குளித்தால்  தலைமுடி  மிருதுவாகும்.
*   காய்ச்சல்  குணமாக  மிளகைப்  பொடி  செய்து  கஷாயமாகக்  குடித்துவரலாம்.
*   புதினா  இலைகளை  வெயிலில்  காயவைத்துப்  பொடி  செய்து  வைத்துக்  கொண்டு  தனமும்  பல்  துலக்கும்போது  அந்த
    பொடியுடன்  உப்பு  சேர்த்துத்  துலக்கினால்  பல்  நோய்கள்  வராது.
-- சொ.மு.முத்து.  ஓமலூர்.  ( குறிப்புகள்  பலவிதம் ). .
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று  இணைப்பு. ஞாயிறு , டிசம்பர்  7 , 2014. 

Wednesday, February 8, 2017

பிணந்தின்னிக் கழுகுகள்

  தமிழகத்திலுள்ள  திருக்கழுக்குன்றத்தில்  கழுகுகள்  தினசரி  உணவுக்கு  வருவதை, அந்த  ஊரில்  வாழும்  மக்கள்  கதைகதையாய்ச்  சொல்வார்கள்.  கோயில்  நிர்வாகம்  கழுகுகளுக்கு  உனவளிப்பதற்காகவே  தனி  மானியம்  வழங்கிவந்தது.  பல்வேறு  அச்சுறுத்தல்களால்  1994-ம்  ஆண்டிலிருந்து  அங்குக்  கழுகுகள்  வருவதில்லை.  கோவில்  கோபுரத்தில்  கழுகுகள்  வரும்  வழியில்  கூடு  போன்ற  அமைப்பை  1994-ம்  ஆண்டு  நடந்த  குடமுழுக்கின்போது  அடைத்துவிட்டதே,  கழுகுகள்  வராததற்குக்  காரணம்  என்று  பலரும்  சொன்னாலும்  சூழலியல்  காரணங்களை  யாரும்  முன்னிறுத்துவதில்லை.  கோவில்  தூணில்  கழுகுக்கு  உணவளிப்பதைப்  போன்ற  சிற்பம்  மட்டுமே  அங்கு  எஞ்சி  உள்ளது.
     காடுகளிலுள்ள  கழுகுகளைப்  பற்றி  நாம்  பேசுகிறோம்.  காட்டைத்  துப்புரவு  செய்து  தூய்மையாக  வைத்திருக்கும்  உயிரினம்தான்  கழுகுகள்.  நமது  வீடுகளில்  ஒரு  சுண்டெலி  சந்து,  பொந்துகளில்  சிக்கி  இறந்து  போனால்  வீடெங்கும்  வீசும்  கெட்ட  வாடையைப்  பொறுத்துக்கொள்ள  முடியாமல்  அதைத்  தேடி  எடுத்துத்  தூக்கி  எறிந்து,  வீட்டைச்  சுத்தப்படுத்திய  பிறகுதானே  நிம்மதியடைகிறோம்.
      ஆட்கள்  நுழைய  முடியாத  ஒரு  அடர்ந்த  காட்டில்  யானை  இறந்து  போனால்  அதைச்  சுத்தப்படுத்துவது  யார்?  கழுகுகள்தான்!  காட்டில்  கழுகுகள்  அற்றுப்போனால்  யானையின்  உடல்  மக்கி  மறைய  வெகு  நாட்கள்  ஆகும்.  அதன்  உடலில்  இருந்து  வெளியேறும்  நோய்க்  கிருமிகள்  காட்டில்  வாழும்  மற்ற  உயிரிங்களுக்கும்  தொற்றும்.  காட்டுக்குள்  மேய்ந்து  வரும்  நமது  கால்நடை களையும்  பாதிக்கும்.
     கழுகுகள்  வாழும்  பகுதியைச்  சுற்றிலும்  100  கி.மீ. சுற்றளவுக்கு  டைகுளோஃபிளாக்  மருந்தின்  பயன்பாடு  அறவே  கூடாது  எனச்  சுற்றுச்சூழல்  அமைச்சகம்  நெறிமுறை  வகுத்துள்ளது.
-- கோவை  சதாசிவம்.  (  உயிர் பாதுகாப்பு )  உயிர் மூச்சு.
--   'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்.,ஜனவரி 21, 2014.  

Tuesday, February 7, 2017

கிரகங்கள்

  ஜோதிடம்  என்பது  வானிலுள்ள  நட்சத்திரங்கள்,  கிரகங்கள்  இவற்றின்  அவ்வப்போதைய  நிலையை  வைத்துக்  கணக்கிட்டுக்  கூறப்படுகிறது.
     சூரியனைச்  சுற்றித்தான் கிரகங்கள்  வலம்  வருகின்றன.  குரு,  சுக்கிரன்,  புதன்,  செவ்வாய்,  சந்திரன்,  சனி  ஆகிய  கிரகங்கள்  சூரியனை  வலப்புறமாகச்  சுற்றிவருகின்றன.  ஆனால், ராகு,  கேதுக்கள்  சூரியனை  இடப்புறமாக  சுற்றிவருகின்றன.  சந்திரன்  சூரியனைச்  சுற்றுவதோடு  பூமியையும்  சுற்றிவருகிறது.
     வான்  மண்டலத்தில்  முட்டை  வடிவப்  பாதையில்  கிரகங்கள்  சுற்றிவருகின்றன.  இவை  சுற்றிவரும்  பாதையில்தான்  27  நட்சத்திரங்களும்  உள்ளன.  வான்  மண்டலத்தில்  எண்ணற்ற  கோடி  நட்சத்திரங்கள்  இருப்பினும்  அஸ்வினி  முதல்  ரேவதி  வரையிலும்  உள்ள  27  நட்சத்திரங்கள்தான்  ஜோதிட  ரீதியாகக்  கணக்கிடப்படுகின்றன.
     இந்த  27  நட்சத்திரங்கள்  உள்ள  ஓட்டப்  பாதையை  12  ராசிகளாகப்  பிரிந்துள்ளன.  சந்திரன்  இரண்டேகால்  நாட்கள்  ஒரு  ராசியில்  சஞ்சரிப்பார்.  இந்தச்  சந்திரனின்  ஓட்டத்தைக்  கொண்டே  ஒருவரது  ஜாதகம்  கணிக்கப்படுகிறது.  சூரியனை  வைத்து  லக்னத்தையும்  சந்திரனை  வைத்து  ராசியும்  கணிக்கப்படுகிறது.
     ஜோதிட  விதிப்படி  நாழிகை  கணக்கு  முக்கியமானது.  ஒரு  நாள்  என்பது  24  மணி  நேரம்.  24  மணி  நேரம்  என்பது  60  நாழிகை.  ஒரு  மணி  நேரத்துக்கு  இரண்டரை  நாழிகை  எனக்  கணிக்கப்படுகிறது.
     ஒருவரது  ஜாதகத்தில்  லக்னம்  எங்கு  குறிக்கப்பட்டுள்ளதோ  அதனை  ஒன்றாம்  வீடாக  கொண்டு  எண்ணுதல்  வேண்டும்.
     உதாரணமாக  மேஷம்  1-வது  வீடு  எனக்  கொண்டால்  மிதுனம்  3-ம்  இடம்.  சிம்மம்  5-ம்  இடம்.  ராசி  வேறு  லக்னம்  வேறு  என்று  ஜோதிடவியலில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒருவரது  ஜாதகத்தில்  சந்திரன்  இருக்கும்  வீடு  எதுவோ  அதுவே  அவரது  ராசி  வீடு.
     லக்னத்துக்கு  1,5, 9-ம்  வீடுகளுக்கு திரிகோண  ஸ்தானங்கள்  என்று  பெயர்.
     சந்திரன்  இருக்கும்  இடத்திலிருந்து  அப்போதைய  நேரத்துக்குக்  கிரகங்கள்  எங்குள்ளன  என்று  கண்டறிந்து  பலன்  சொல்லும்  முறைக்கு  கோட்சாரப்பலன்  என்று  பெயர்.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , டிசம்பர்  7 , 2014. 

Monday, February 6, 2017

விதியும் மதியும்

  இஸ்லாமியக்  கலிபாக்களில்  ஒருவரான  ஹஜ்ரத்  அலியைச்  சந்தித்த  யூத  இளஞன்  விதிக்கும்,  பகுத்தறிவுக்கும்  உள்ள    வித்தியாசத்தைச்  சொல்ல  முடியுமா?  என்று  கேட்டான்.   ஹஜ்ரத்  அலி  அவனிடம், "உன்  வலதுகாலைத்  தூக்கு"  என்றார்.  அவனும்  தனது  வலதுகாலைத்  தூக்கியபடி  நின்றான்.
    "சரி... இப்போது  உன்  வலது  காலை  கீழிறக்காமலேயே  இடது  காலையும்  தூக்கு"  என்றார்.
    "அது  எப்படி  முடியும்?"  என்றான்  இளஞன்.
    "ஒற்றைக்  காலை  மட்டும்  தூக்கு  என்றதும்  உன்னால்  முடியும்  என  நினைத்துச்  செய்தாய்  அல்லவா?  அதுதான்  பகுத்தறிவு.  இன்னொரு  காலையும்  தூக்கச்  சொன்னபோது  அது  முடியாது  என உணர்ந்தாய்  அல்லவா?  அதுதான்  விதி"  என்றார்.  அந்த  வித்தியாசத்தை  உணர்ந்தாலேபோது.
     விதியை  மதியால்  வெல்லுங்கள்.  வாழ்வு  வசப்படும்.  மகிழ்ச்சி  உங்களைத்  தேடி  வரும்.
-- மு.கோபி சரபோஜி,  ராமநாதபுரம்.  ( வெற்றிக்கொடி  இணைப்பு ).
-- 'தி இந்து' நாளிதழ் .  செவ்வாய்,  டிசம்பர் 9, 2014.

Sunday, February 5, 2017

டயர் பஞ்சர்ஸ்

டயர்  பஞ்சர்  ஆனாலும்  கவலையில்லை.
     திருச்சி  நெ.1  டோல்கேட்டில்  பஞ்சர்  கடை  நடத்திவரும்  கே.அக்தர் அலி ( 54 ), தான்  தயாரித்த  பவுடரைப்  பயன்படுத்தி  டிராக்டர்,  ஜே.சி.பி., கார்,  லாரி,  டூ  வீலர்  உட்பட  ஆயிரத்து  500  வாகனங்களை  பஞ்சர்  ஆனாலும் பாதிக்காத  நிலையில்  ஓடவிட்டிருக்கிறார்.
     இந்த  பவுடரை  பயன்படுத்துவது  எளிது.  டயரில்  இருக்கும்  டியூப்பை  கழற்றி  எடுத்துவிட்டு,  பவுடரை  சாதாரண  தண்ணீருடன்  கலந்து  டயரின்  உட்புறம்  செலுத்தினால்  போதும்.   டிஸ்க்குடன்  சேர்ந்து டயரில்  அப்ளை  ஆகிவிடும்.   அப்புறம்  வழக்கம்போல  காற்று  நிரப்பி  ஓட்ட  வேண்டியதுதான்.  இதை  அப்ளை  செய்வதால்  மைலேஜ்  குறையாது.  காற்றின்  அளவு  சரியாக  இருந்தால்  போதும்.  டயரில்  முள்,  ஆணி  முதலியவை  குத்தியிருந்தால், அப்படியே  ஓடுகிறது.
     முள்ளை  வெளியே  எடுத்தால்  அந்த  இடத்தில்  உள்ளே  இருக்கும்  பவுடர்  கரைசல்  அந்த  இடத்தை  அடைத்துக்கொள்கிறது.  இதனால்  பஞ்சரைப்  பற்றி  கவலையில்லை.
--  ஜி.ஞானவேல்முருகன்.  ( ஊர் வலம் ).
--  'தி இந்து' நாளிதழ் .  செவ்வாய்,  டிசம்பர் 9, 2014. 

Saturday, February 4, 2017

சோலார் பவர் ஸ்கூல் பேக்!

  கிராமப்புற  மாணவர்களுக்கு  பயன்படக்கூடிய  வகையில்  சோலார்  ஸ்கூல்  பேக்  தயாரிக்கப்பட்டுள்ளது.  புத்தகத்தை  வைத்து  தூக்கிச்  செல்வது  மட்டுமல்லாமல், டெஸ்க்  போலவும்  பயன்படுத்தலாம்.  இரவு  நேரங்களில்  படிக்க  எல்இடி  விளக்கு  உள்ளது.  மின்சாரம்  இல்லை  என்றாலும்  படிக்கலாம்.
அதிவேக  கேமரா.
     ஒரு  விநாடியில்  100  பில்லியன் ( 10,000 கோடி )  பிரேம்களில்  படம்  பிடிக்கும்  உலகின்  அதிவேக  கேமராவை  கண்டுபிடித்துள்ளனர்.  தற்போது  விநாடிக்கு  10  மில்லியன் ( 1 கோடி )  படங்களைப்  பிடிக்கும்  கேமராதான் உலகின்  அதிவேக  படம்பிடிக்கும்  கேமராவாக  உள்ளது.
ஜொலிக்கும்  ஹோட்டல்.
     தங்குவதற்குத்தான்  ஹோட்டலைத்  தேடுவோம்.  ஆனால்,  வளமைமிக்க  துபாயில்  7  நட்சத்திர  ஹோட்டல்  தங்கத்தகடுகளால்  ஜோலிக்கிறது.  இந்த  ஹோட்டலில்  இருக்கைகள்  கைப்பிடிகள்  எல்லாம்  24  காரட்  தங்கத்தால்  செய்யப்பட்டுள்ளது.  இந்த  ஹோட்டல்  பகலிலேயே  தக தகவென  மின்னுகிறது.
--  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.   

Friday, February 3, 2017

புத்திசாலி ஐ - போன் !

  பல  ஆயிரம்  கொடுத்து  ஆசை  ஆசையாய்  வாங்கும்  ஸ்மார்ட்  போன்கள், ஒரு  நொடிப்பொழுதில்  கைதவறி  கீழே  விழும்போது  ஏற்படும்  தவிப்பு  சொல்லி  மாளாது.  மேலும்  அதில்  நாம்  சேமித்து  வைத்திருந்த  செல்போன்  எண்கள்  உள்ளிட்டவை  அனைத்தையும்  மீட்க  முடியுமா  என்ற  பரிதவிப்பு  பலருக்கும்  ஏற்படுவதுண்டு.  இதைப்  போக்கும்  வகையில்  புதிய  வகை  புத்திசாலி  ஐ - போன்களை  உருவாக்குகிறது  ஆப்பிள்  நிறுவனம்.
     இந்த  ஸ்மார்ட்டபோன்கள்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  செயல்பட்டு  முக்கியமான  பகுதிகள்  சேதமடைவதைத்  தடுத்துவிடும்.  கீழே  விழுவதில்  ஏற்படும்  சேதத்தைக்  கணக்கிட்டு  முக்கியமான  பகுதிகளை  போனின்  மையப்பகுதிக்கு  நகர்த்திவிடும்.
     இப்போது  வரும்  ஐ - பேட்  மற்றும்  ஐ - போன்களில்  ஆக்சிலரோமீட்டர்கள்,  கைரோஸ்கோப்ஸ்  மற்றும்  ஜிபிஎஸாகியன  உள்ளன.  போன்  கீழே  விழும்போது  அதிலுள்ள  சென்சார்கள்  போனின்  முக்கிய  பகுதிக்குத்  தகவல்  அனுப்பு  விடும்.  அப்போது  அதிலுள்ள  மோட்டார்  விரைவாக  செயல்பட்டு  ஐ - போன்  பக்கவாட்டில்  விழும்படி  செய்து  சேதத்தின்  அளவைக்  குறைத்துவிடும்.
     நாம்  வாங்கும்  ஐ -போன்  புத்திசாலித்தனமாகச்  செயல்பட்டால்  நல்லதுதானே!
--  (  தொழில்  நுட்பம் ).  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள் 8,  2014.