Wednesday, December 31, 2008

எப்படிப் பட்ட மழை !

இருபத்து நான்கு மணி நேரத்தில்,
2.5 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தால் :அது மிகச் சாதாரண மழை.
7.4மில்லி மீட்டர் வரை பெய்தால்................ :சாதாரண மழை.
7.4--34.9.மி.மீ வரை பெய்தால் .........................:சுமாரான மழை.
35--56.5 மி .மீ வரை எய்தால்.......................... ..:சற்றே கனத்த மழை.
56.6--120 மி.மீ வரை பெய்தால்....................... .:கனத்த மழை.
இதற்கு மேல் பெய்தால்.................................. ...:மிகக் கனத்த மழை என்று சொல்லப்படுகிறது
--கல்கி. 15-10-1978..

Tuesday, December 30, 2008

"C A N C E R "

"Cancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. இந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர்.!

Monday, December 29, 2008

மன்னரும் - ராஜ்யமும்.

மன்னர்களுக்கு மன்னனான பேரரசனைக் குறிக்க: கீழ்த் திசை அரசர் சாம்ராட் என்றும், தெற்குத் திசை அரசர் போஜர் என்றும், மேற்குத் திசை அரசர் ஸ்வராட் என்றும், வடக்குத் திசை அரசர் விராட் என்றும், மத்திய அரசர் ராஜா என்றும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்து.
அரச அதிகாரத்தின் பல படிகள்: ராஜ்யம், சாம் ராஜ்யம், பெளஜ்யம், ஸ்வாராஜ்யம், வைராஜ்யம், பாரமஸ்த்யம், மஹாராஜ்யம், ஆதிபத்யம், ஸ்ராவசியம் என்பவை.
-மஞ்சரி . நவம்பர், 1979.

Sunday, December 28, 2008

சூரியன்.

சதபத ப்ராஹ்மணம் என்ற நூலில் 12 மாதங்களுக்குப் பன்னிரு சூரியர்கள் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அவர்களாவன :
விவஸ்வான்-, அர்யமா-, பூஷா-, த்வஷ்டா- ஸவிதா- பக- தாதா- விதாதா- வருண - சக்ர - உருக்ரமா - ஸூர்ய.
சூரியனுக்கு உரித்தான அர்க்கபத்ரம் (எருக்க இலை ) விசேஷம் நிரம்பியது. குஷ்டம் போன்ற நோயைத் தீர்க்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. ரத சப்தமி அன்று இதை உடலில் வைத்து நீராடுவது ஒரு வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. ஆதியில் ஏழே கிரகங்கள்தான் . பிற்பாடுதான் ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒன்பதாயின.
-அமுதசுரபி. ஜனவரி, பொங்கல் இதழ். 1979.

Saturday, December 27, 2008

'அதமன்-மத்திமன்-உத்தமன்'

வயதான காலத்தில் தன்னை வைத்துக் காப்பாற்ற மகன் இல்லையே என்று ஏங்குபவன் "அதமன்".
தான் இறந்த பிறகு தனக்கு கருமம் செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் "மத்திமன்"
தான் இறந்த பிறகு தான் செய்துவந்த தான தருமங்களைத் தொடர்ந்து செய்ய மகன் இல்லையே என்று ஏங்குபவன் தான் "உத்தமன்"
-ஆனந்தவிகடன். 07-01-1979.

Friday, December 26, 2008

பரிவாரத் தலங்கள் !

பரிவாரத் தலங்கள் !
மகாலிங்கம் எனப்படும் திருவிடைமருதூரைச் சுற்றிலும் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அவை:
வினாயகர் - திருவலஞ்சுழி.
முருகன் - சுவாமிமலை.
நடராஜர் - தில்லை (சிதம்பரம் ).
தெட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
நவக்கிரகம் - சூரியனார்கோயில்.
பைரவர் - சீர்காழி.
நந்தி - திருவாவடுதுறை.
சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

Thursday, December 25, 2008

எண் விந்தை !

1,2,3,4,5,.....என்று 1000 வரை கூட்டினால் என்ன வரும்?
ஒன்று முதல் ஆயிரம் வரை கூட்டவேண்டும் இல்லையா? ஆயிரத்தில் பாதி எவ்வளவு? 500. சரி இப்போ 1000+1=1001,
999+2=1001, 998+3=1001 என்று யோசிச்சுப் பார்க்கலாம்.இந்த 1001 -ல் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது. இருக்கட்டும் !
இத்துடன் 500 -ஐ பெருக்குங்கள். அதாவது 1001X500=5005,,00.
-வாசுதேவன், 5-ம் நிலை .மாண்வன்,பெரம்பூர். (தினமணிக்கதிர்.08-07-1990.