Saturday, October 31, 2009

மம்மி !

பெண் பெயரில் ஆண் . ' மம்மி ' யிலும் குழப்பம் .
நியூயார்க் , ஜூன் 29 - 2009 .
புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் பெண் பெயரில் பராமரிக்கப்பட்ட மம்மியை ஸ்கேன் செய்த போது , அது ஆண் என்று தரியவந்தது .
அமெரிக்காவின் புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 எகிப்திய ' மம்மி ' க்கள் பராமரிக்கப்பட்டு வந்தது . இதில் ' லேடி ஓர் ' என்று பெயரிடப்பட்ட மம்மியின் மீது பெண் என்று எழுதப்பட்டு இருந்தது . கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ' மம்மி ' பெண் என்று கருதப்பட்டு வந்தது ..
இந்நிலையில் , நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் , அந்த மம்மிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர் . அப்போது , ' லேடி ஓர் ' என்ற பெண் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
எகிப்திய மன்னர்கள் இறந்த போது அவர்கள் உடலை பாடம் செய்து , ' மம்மி ' யாக்கிய முறை பற்றியும் , எகிப்தியர்கள் வாழ்க்கை முறை பற்றியும் ஆய்வு செய்வதற்காக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
இது குறித்து அமெரிக்காவின் நார்த் ஷேர் பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மிச்செல் பின்டோ கூறுகையில் , ' மம்மியின் எலும்புக்கூடு மற்றும் அவற்றைப் பற்றிய கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில்தான் , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரியவந்தது ' என்றார் .
--- தினமலர் , 29 - 06 - 2009 .

Friday, October 30, 2009

அதிசய மனிதர் !

ஜி.டி. நாயுடு ( 23 - 03 - 1893 --- 04 - 01 - 1974 )
ஒன்றரை ஆண்டுக் காலமாக உள்ளே பூட்டிக் கிடந்த துப்பாக்கி ஒன்று வேலை செய்கிறதா என்று சோதிக்க விரும்பிய ஜி . டி . நாயுடு , ஒரு வாழை மரத்தின் அடிப்பாகத்தில் குறி பார்த்துச் சுட்டார் . குண்டு,வாழை மரத்தைத் துளைத்துக்கொண்டு மறு பக்கம் போய் விழுந்தது .
வாழை மரத்தில் விழுந்த துளை நாயுடுவின் சிந்தனையைத் தூண்டியது . உடனே ரொட்டிகளைக் கொண்டு வரச் சொல்லி , அந்தத் துளையில் அடைத்தார் . மேலும் சில வாழைகளைத் துளைத்து ஒன்றில் சாணம் , இன்னொன்றில் கோமியம் , மற்றொன்றில் மாமிசம் இவற்றைத் திணித்து அந்த வாழை மரங்களின் வளர்ச்சியில் ஏதேனும் மாறுதல் காண்கிறதா என்று கண்காணித்து வந்தார் . மரங்களும் , காய்களும் இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்தன . எதேச்சையான ஆராய்ச்சி எதிர்பாராத பலனை அளிக்கவே , நாயுடு தமது ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து , ஆரஞ்சு , பப்பாளி , பருத்தி போன்ற செடிகளையும் சோதனைக்கு உள்ளாக்கினார் . அதன் விளைவு : ' உலகிலேயே மிகச் சிறந்த பப்பாளி விளைவிக்கும் செப்பிடு வித்தைக்காரர் நாயுடு என்ற புகழ் அவருக்குக் கிட்டியது . ஜி . டி . நாயுடுவைச் சந்திக்கச் செல்கிறவர்கள் , அவர் தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சாப்பிடாமல் தப்ப முடியாது .
பல ஆண்டுகளுக்கு முன் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ' எலெக்ட்ரிக் ஸேஃப்டி ரேஸர் ' மேனாட்டு விஞ்ஞானிகள் பலரால் பாராட்டப்பட்டது .
தாவர இயல் , பொறி இயல் , மருத்துவம் , சோதிடம் இவ்வளவையும் அறிந்துள்ள நாயுடுவின் முழுப் பெயர் துரைசாமி . இவரை , ' இலக்கண துரைசாமி ' , ' மருத்துவ துரைசாமி ' , ' சோதிட துரைசாமி ' என்றும் அழைப்பதுண்டு . ஆயினும் சோதிடத்தில் இவருக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது .
ஜி . டி . நாயுடு ஆங்கிலம் அதிகம் படித்தவரில்லை . ஆனாலும் , பல முறை உலக நாடுகளைச் சுற்றியதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் , உரையாடவும் அனுபவம் பெற்றுள்ள இவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியக்காதவர்களே இல்லை .
1893 - ல் கலங்கல் கிராமத்தில் உழவரின் மகனாகப் பிறந்த இவர் தம்முடைய சலியாத உழைப்பால் உயர்ந்து , தென்னகத்தின் பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார் .
--- ஆனந்தவிகடன் , 10 - 06 - 2009 .

Thursday, October 29, 2009

உறவு முக்கோணம் !

மனோதத்துவ அறிஞர்கள் , மனித உறவுகளில் எழும் சிக்கல்களைப் போக்கும் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தார்கள் . அதுதான் உறவு முக்கோணம் .
ஒரு முக்கோண வலையைக் கற்பனை செய்யுங்கள் . இந்த வலையின் ஒவ்வொரு கோணத்தின் நுனியையும் ஒரு மரத்தில் கட்டி இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . இந்த முக்கோண வலையின் ஒவ்வொரு கோணத்துக்கும் ஒரு பெயர் இடுங்கள் . ஒன்றின் பெயர் அன்பு ; மற்றொன்றின் பெயர் உண்மை ; மூன்றாவதன் பெயர் கருத்துப் பரிமாற்றம் . இதையே ஆங்கிலத்தில் Affinity , Reality , Communication என்று கூறுகிறார்கள் .
இந்த மூன்றும் வலுவாக ஒன்றை ஒன்று பிணைத்து நிற்கும்போது , பிரச்னைகள் எல்லாம் சுமூகமாகத் தீர்க்கப்படுகின்றன . இந்த உறவு முக்கோணம் எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம் .
மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான் . அப்பா எதிர்க்கிறார் . " என்னடா இது ! அவர்கள் சாதி என்ன , நம்ம சாதி என்ன ? அது எப்படி அங்கு போய்ப் பெண் எடுக்க முடியும் ? உனக்குப் புத்தி இருக்கா ? "
என்கிறாள் அம்மா .
இதன் விளைவாக , அப்பாவும் அம்மாவும் பையனுடன் பேசுவது இல்லை . இந்த மூவருக்கும் இடையே இருந்த ஒரே ஒரு தொடர் - கருத்துப் பரிமாற்றம் , எண்ணப்பரிமாற்றம் - பேச்சு - விடுபட்டுப் போக ,
அவரவர்கள் வழியே சரி என்று எண்ணி , அதிலே ஊறிப்போகிறார்கள் .
அதுவே , உறவு முக்கோணத்தை உணர்ந்தவர்கள் என்ன செய்வார்கள் ?
என்ன இருந்தாலும் , " அவன் நம் மகன் , அவனது நன்மைதான் நமது நன்மை " என்று அன்பால் கட்டுப்படுவார்கள் . " கீழ் சாதியாவது , மேல் சாதியாவது ! அவன் யாருடனாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான் ! இதோ பாருங்க ! அறியாத பிள்ளை அது . அதோடு பேசுங்க . என்ன விஷயம் , யாரு பொண்ணு என்னனு தெரிஞ்சுக்குவோம் . நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுவோம் ! " என்கிறார் தாய் .
கருத்துப் பரிமாற்றம் சிக்கல்களை அவிழ்க்கிறது . அன்புடன் கூறப்படும் உண்மைக் கருத்துக்கள் , மகனின் எண்ணத்தை மாற்றவும் செய்யலாம் .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .

Wednesday, October 28, 2009

தண்டனை வேண்டும் .

கடுமையான தண்டனை வேண்டும் .
பரஸ்பரம் சம்மதத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது டில்லி ஐக்கோர்ட் . இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவின் கீழ் தண்டிப்பது அடிப்படை உரினையை மீறியது ஆகும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது . இதில் அடிப்படை உரிமை என்ற பிரச்னைக்கே இடமில்லை .
விரும்பியபடி ஆடை அணிவது ஒருவருடைய அடிப்படை உரிமையாகும் . ஆனால் , ஆடையே அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது அடிப்படை உரிமை இல்லை . மிருகங்கள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாதபோது இதற்கு உரிமை கோருபவர்கள் மிருகங்களைவிட கேவலமானவர்கள் . இது நாகரிக மக்களின் சமுதாயப் பிரச்னை . இந்த அநாகரிக அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட் உடனே தடை விதிப்பதுடன் இதற்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் .
--- கே. கே. வேதபுரி , காவேரிப்பாக்கம் . தினமலர் .17 - 07 - 2009

Tuesday, October 27, 2009

அப்படியா !

* வாத்து ' க்வாக் ' சத்தத்தை வெளியே விடுவது இல்லை . உள்வாங்கி எழுப்பும் ஒலி அது ! எதிரொலி ஏற்பட ஒலியின் அலைகள் வெளிப்பட வேண்டும் . அதனால் , வாத்துகள் எழுப்பும் ' க்வாக் ' சத்தம் எதிரொலிப்பது இல்லை .
*சில ஹீரோக்களின் தொப்புளுக்கும் , மார்புக்கும் இடையே , ' ஸ்பீட் பிரேக்கர்ஸ் ' மாதிரி இருக்கும் தசைகளின் பெயர்தான் ' சிக்ஸ் பேக் '. இடது மார்பில் மூன்று , வலது மார்பில் மூன்று .
* தன் உடம்பை விற்கும் ஆண்களுக்கு ' Gigolo ' என்று பெயர் . பொதுவாக , Call boys என்று அழைக்கப்படுகிறார்கள் . புரியும்படி சொன்னால் ' விலைமகன் '

Monday, October 26, 2009

மரணம் .

" மரணம் என்பது முற்றுப்புள்ளியா ?"
" எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் அது கால்புள்ளிதான் . ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார் . ' பிறக்கும் முன்பு நான் இறந்திருந்த்தேன் . இறந்த பின்பு நான் வாழ்ந்திருப்பேன் !'"
--- மா. செ. சரவணகுமார் , சென்னை - 17 .
மனித உறவுகள் .
மனித உறவுகளைப் பற்றி எழுதும் அறிஞர்கள் முக்கியமான மூன்று குறைபாடுகள் உறவுக்குக் குறுக்கே நிற்பதாகக் குறிப்பிடுகிறார்கள் .
பிறர் சொல்வதை நாம் கவனமாகக் கேட்பதில்லை ; பிறர் சொல்வதன் முழு அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்வதில்லை ; தவறு ஏற்படும்போது நாம் அதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .
--- எம்.எஸ். உதயமூர்த்தி .ஆனந்தவிகடன் , 15 - 07 - 2009.

Sunday, October 25, 2009

ஐ. ஏ. எஸ். தேர்வு .

2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?'
கேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா ? அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் ? நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .
---ரீ. சிவகுமார் , ( நேற்று...இன்று...நாளை ! ) ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .