Monday, November 30, 2009

சுலோகம் !

ஒரு சமயம் நாடகத் தந்தை சம்பந்த முதலியார் அவர்கள் சிவகெங்கையில் ஒரு வயோதிகரைச் சந்தித்தார் . அவருக்கு சுமார் 90 வயது இருக்கும் என்று முதலியார் அவர்கள் தீர்மானித்து , சற்று தயக்கத்தோடு அவரிடம் , " உங்களுக்கு என்ன வயதாகிறது ?" என்று கேட்டார் .
உடனே அவர் " ஒருவன் தன் வயதை வெளியில் சொல்லக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருகிறது .." எனச் சொல்லி அப்படி இருக்கும் அந்த வடமொழி சுலோகத்தையும் சொன்னார் .
இச்சம்பவம் நடந்த பிறகு , சம்பந்தமுதலியார் அவர்கள் " அந்த வடமொழி சுலோகத்தை நான் அவரிடம் சரியாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்லாமல் பொய்விட்டேன் ... தற்போது தங்கள் வயதைச் சொல்லிக் கொள்ளத் தயங்கும் சினிமா நடிகைகளுக்கும் , நடிகர்களுக்கும் அந்த் சுலோகத்தைச் சொல்லிக் கொடுத்திருப்பேனே !" என் வருந்தினாராம் .
--- ஆனந்தவிகடன் ( 21 - 02 - 1965 ) .

Sunday, November 29, 2009

தலைமுறை ஏழு .

ஆணின் விந்தில் உள்ள பல நூறு அணுக்களில் ஒன்றும் , பெண்ணிடம் உருவாகும் கருமுட்டைகளில் ஒன்றும் இணைந்து கரு உருவாகிறது என்பது இயற்கை . அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது . இந்தச் செய்தியை முன்னோர்கள் சிந்தித்தனர் . ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தரவும் தில தர்ப்பணம் கொடுப்பதற்கும் இதுவே காரணம் .
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Saturday, November 28, 2009

முன்னோர் வழிபாடு .

வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவது முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Friday, November 27, 2009

அப்படியா ?.

* ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் நபரின் வேலைத்திறன் 25 சதவீதம் உயர்வதாக ராடல் என்ற நார்வே உளவியல் நிபுணர் கண்டுபிடித்துள்ளார் .
*' ஒன் மொமன் ட் ப்ளீஸ் ' என்ற ஆங்கில சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறோம் . மோமன்ட் என்பது ஒன்னரை நிமிட நேரத்தைக் குறிக்கும் சொல்லாகும் .
* செஸ்பி என்ற நட்சத்திரம் சூரியனைப் போல் 1200 மடங்கு பெரியதாம் . இதனுடைய விட்டம் 160 கோடி கிலோ மீட்டராம் .
* வெள்ளை நிறத்தைக் கண்டு பயப்படும் ஒரே விலங்கு புலி .

Thursday, November 26, 2009

ஜூலை மாதம் .

* ஜூலை 24 , 1969 நிலவுசென்று மீண்டும் பூமிக்கு திரும்பியது அப்பல்லோ - 2 விண்கலம் .
* ஜூலை 25 , 2002 ஜனாதிபதியாக அப்துல்கலாம் பதவி ஏற்றுக்கொண்ட தினம் .
* ஜூலை 25 , 1978 முதல் சோதனைக் குழாய் குழந்தை இங்கிலாந்தில் பிறந்தது .
* ஜூலை 25 , 2007 இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி ஏற்பு .
* ஜூலை 26 , 1856 ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறப்பு .
* ஜூலை 26 , 1956 சூயஸ் கால்வாய் தேசியமயமானது .
* ஜூலை 27 , 1876 நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறப்பு .
*ஜூலை 27 , 1877 நவீன அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் மறைவு .
*ஜூலை 28 , 1979 மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் .
*ஜூலை 29 , 1883 சர்வாதிகாரி முசோலினி பிறப்பு .
* ஜூலை 29 , 1927 இந்தியாவின் 2 வது வானொலி நிலையம் கல்கத்தாவில் உருவானது .
* ஜூலை 30 , 1863 மோட்டார் கார் தயாரிப்பாளரான ஹென்றி போர்டு பிறப்பு .

Wednesday, November 25, 2009

தெரிந்து கொள்வோம் .

* வால்பாறையிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள ' சின்னக்கல்லாறு ' புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் . ' தமிழகத்தின் சிரபுஞ்சி ' என்றே அழைக்கப்படுகிறது . இதுதான் உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் இரண்டாவதாகும் . அங்கிருந்து சோலையாறு பக்கம் . ஆசியாவின் மிக ஆழமான இரண்டாவது அணை இதுதான் .
* ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவது போலவே , ஓர் ஆண் இன்னோர் ஆணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் இன்னோர் பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதும் இயல்பானதே .
* இருபால் சேர்க்கையாளர் ( Hetro Sexuals ) போலவேதான் ஓரினச் சேர்க்கையாளர்களையும் ( Homo Sexuals ) கருத வேண்டும் .
* ' உலகம் முழுதுமே இருபால் சேர்க்கையாளர்களால் தான் ஹெ.ஐ.வி. அதிகமாகப் பரவுகிறது . ஓரின சேர்க்கையாளர்களால் அல்ல ' என்கிறது ஓர் ஆய்வு
* குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை அவர்கள் அறிந்த விஷயங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள் .
* நினைவாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் கலைகளில் மிக முக்கியமானது அவதானம் . கவனகம் என்றும் சொல்வார்கள் .
* ஒரு நபர் ஒரு நேரத்தில் 10 விஷயங்களைச் செய்து காட்டினால் அவர் தசாவதானி . சோடஷாவதானம் என்றால் 32 விஷயங்களைச் செய்து காட்டுவது . 100 விஷயங்களைச் செய்து காட்டினால் அதன் பெயர் தசாவதானம் .

Tuesday, November 24, 2009

தமாஷ் !

* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* தாத்தா : " காலம் ரொம்பத்தான் மாறிப் போச்சு ! "
பேரன் : " ஏன் தாத்தா ? "
தாத்தா : " ராஜாவை மந்திரியாக்கிட்டாங்களாமே ! "
* ஒரு கல்லூரி மாணவரின் செல்ஃபோனை குடைந்தபோது கிடைத்த எஸ். எம். எஸ் .:
" இளநீர் , தண்ணீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . பீர் , பிராந்தி , ரம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும் ."
* இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் இரண்டு KINGS யாரெனத் தெரியுமா உங்களுக்கு ....?
1 . SMO - KING 2 . DRINK - KING . முடிஞ்சா இந்த மோசமான KINGS - கிட்டேர்ந்து உலகைக் காப்பாத்திக்கோங்க .
* " காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?"
" பைக் பஞ்க்சர் சார் !"
" சரி .... பஸ்ல வர்றது ...?"
" பஸ் வாங்க வசதி இல்லை சார் !"
* " டாக்டர் ! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும் ..."
" அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க !"
* " தவளை தண்ணியிலேயும் இருக்கும் , தரையிலேயும் இருக்கும் . ஆனா , நம்ம தலைவர் ..."
" தண்ணியிலே தரையில கிடப்பார் !"
* " நம்ம தலைவரு அஞ்சாவது படிக்கும்போதே கள்ளச்சாராயம் வித்தவர்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலை !"
" எதனால அப்படிச் சொல்றே ?"
" தலைவர் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்காரா ?"
* ' LOVE ' என்று சொன்னாலும் , ' காதல் ' என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது ... PICK UP , DROP , ESCAPE என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் .
* " வக்கீலுக்கும் , டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ?"
" தெரியவில்லையே "
" வக்கீல் சரியாக இல்லைன்னா கேஸ் முடியாது , டாக்டர் சரியில்லைன்னா கேஸ் முடிந்து விடும் !"