Saturday, October 30, 2010

உடல் பருமனை குறைக்க ...

உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது . இந்நிலையில் , குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர் , உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர் . ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவைக் கொடுத்து வந்தனர் . மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர் .
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர் . குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவிகிதம் வரை குறைந்திருந்தது . மேலும் , கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது .
" குடமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள் , கொழுப்பை குறைக்கிறது . உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது . பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் " என ஜாங் தெரிவித்தர்ர் .
---- தினகரன் , ஜூலை 23 . 2010.

Friday, October 29, 2010

டாவின்சி .

இன்று உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படுபவர் டாவின்சி . அவர் தனது வாழ்வின் வெற்றிப்பாதைக்கு SMART என்றொரு திட்டம் வகுத்திருந்தார் . அந்தத் திட்டம் இதுதான் :
S -- SPECIFIC........................ எது வேண்டும் என்று குறிப்பாக அறிந்து வைத்திருத்தல் .
M -- MEASURABLE................ அளவிடத் தக்கதாக இலக்குகளைக் கொள்ளுதல் .
A -- ACCOUNTABILITY............ இலக்குகளை எட்டுவதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றல் .
R -- REASLISTIC / RELEVANT..இலக்குகளை யதார்த்தமானதாகவும் , பொருத்தமானதாகவும் அமைத்தல் .
T -- TIMELINE ......................... இலக்குகளை எட்டக் கால எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுதல் .
இவைதான் டாவின்சியின் வெற்றி ரகசியங்கள் .
--- நம்பிக்கை மின்னல்கள் , நூலில் மரபின்மைந்தன் ம . முத்தையா

Thursday, October 28, 2010

பலூன் !

லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர் .1709 - ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன . அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன . பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை . அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது . பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது .
--- எஸ். ராமகிருஷ்ணன். ஆனந்தவிகடன் . 09. 06. 2010.

Wednesday, October 27, 2010

விமானங்கள் !

பெருமாள் கோயிலின் புகழ்பெற்ற விமானங்கள் !
திருவரங்கம் ............. ..........-- பிரணவாஹ விமானம் .
திருவல்லிக்கோணி.............-- ஆனந்த விமானம் .
திருப்பதி ..............................-- ஆனந்தநிலைய விமானம் .
காஞ்சீபுரம் ................ ..........-- புண்யகோடி விமானம் .
ஒப்பிலியப்பன் கொயில்... -- சுத்தானந்த விமானம் .
திருக்கண்ணபுரம் .............. -- உத்பலாவதாக விமானம் .

' ஆரூட ' ஆக்டோபஸ் பால் திடீர் மரணம் .

தென்னாப்பிரிக்காவில் சில மாதங்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில், விளையாட்டு வீரர்களைவிட அதிகமாக பிரபலமடைந்தது பால் என்ற ஆக்டோபஸ் .
போட்டிகளின் முடிவை துல்லியமாக அது கணித்ததுதான் இந்த புகழுக்குக் காரணம் . ஜெர்மனியில் உள்ள சீ லைப் செண்டர் என்ற அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்டது இந்த 2 வயது ஆக்டோபஸ் பால் .
இப்படி உலகம் முழுக்க பிரபலமான பால், தனது கண்ணாடி தொட்டிக்குள் நேற்று முன்தினம் ( திங்கள் கிழமை ) இரவு உயிரிழந்தது .
இது குறித்து ஓபர்ஹாசன் விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ' இது எங்களுக்கு பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது . அதன் பெருமையை நினைவு கூறும் வகையில் நிரந்தரமான ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் . இதற்காக அதன் உடல் குளிர்பதனப்படுத்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது .
பாலை போலவே ஜோதிடம் கூறும் திறன் பெற்ற இன்னொரு குட்டி ஆக்டோபஸை அங்கு, வளர்க்க தொடங்கி விட்டனர் அருங்காட்சி நிர்வாகத்தினர் .
--- தினகரன் & தினமலர் . அக்டோபர் 27 , 2010 .

எவரெஸ்ட்

எவரெஸ்ட் : சில சுவாரஸ்யங்கள் .
* இருக்கும் இடம் : நேபாளம் -- திபெத் எல்லைப்பகுதி .
* நேபாளப் பெயர் : சாகர் மாதா ( வான்தேவதை ).
* திபெத்தியப் பெயர் : சோமாலங்கா ( பிரபஞ்ச தேவதை ).
* பழைய ஆங்கிலப் பெயர்கள் : பீக் பி ( 1854 வரை ) ; பீக் 15 ( 1854 முதல் 1865 வரை )
* ' எவரெஸ்ட்' பெயர் பின்னணி : பிரிட்டிஷ் இந்திய அரசில் தலைமை சர்வேயராக இருந்தவர் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் . இவர்தான் இந்த சிகரத்தின் அதிகாரபூர்வ உயரத்தை முதலில் பதிவு செய்தவர் . இவரைக் கவுரவிக்கும் வகையில்
1865ல் இந்த சிகரத்தை அவரது பெயரையே சூட்டினர் .
* இதில் முதன்முதலில் ஏறியவர்கள் : எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ( 1957 மே 29 ).
* இதில் முதன்முதலில் தனியாக ஏறியவர் : ரீன்ஹோல்டு ( 1980 ஆகஸ்ட் 20 ).
* இதில் முதன்முதலில் ஏறிய பெண் : ஜப்பானைச் சேர்ந்த ஜங்கோதபேய் ( 1975 மே 16 ).
--- தினமலர் , ஜூன் 4 , 2010 .

Monday, October 25, 2010

மூலிகைகள் !

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள் !
நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை .