Monday, January 31, 2011

ஆபத்து ?

" நான்ஸ்டிக் " குக்கரால் ஆபத்து ?
நான்ஸ்டிக் குக்கர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு விதமான ரசாயனப் பொருள் தைராய்டு நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது . 20 வயதுக்கு மேற்பட்ட 3,966 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இருந்து சோதிக்கப்பட்டதில் அவர்களின் ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் 5.7 நானோகிராம் அளவில் பெர்புனோரோஆக்டானிக் என்ற அமிலம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் அவர்களுக்கு தைராய்டு வருவதற்கு இருமடங்கு சாத்தியகூறுகள் உள்ளன என்று தெரிய வந்துள்ளது . இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 163 பெண்கள் மற்றும் 46 ஆண்களுக்கு தைராய்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது . உடலில் உள்ள திசுக்களை பாழ் படுத்துவதில் நான்ஸ்டிக் குக்கர் தயாரிக்கும் ரசாயனப் பொருளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அதிர்ச்சி தரும் விஷயமாகும் . இந்த வேதிப்பொருள் எளிதாக உடைந்து விடாமல் உடலில் தங்கிவிடுகிறது என்பதுதான் இந்த பிரச்சனைக்கு முதன்மைக் காரணமாகும் .
( ஆதாரம் : Environmental Health Perspectives . Jan ).
--- பாடம் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Sunday, January 30, 2011

கிருபானந்த வாரியார் .

* வேலூர் அருகே , காங்கேயநல்லூரில் 1906 - ம் ஆண்டு , மல்லைய தாஸ் பாகவதர் -- கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . இவரோடு பிறந்தவர்கள் 11 பேர் . இவர் நான்காவது குழந்தை !
* வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா . வீட்டிலேயே இலக்கியம் , இலக்கணம் , இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார் . பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியரிடம் வீணை கற்றார் . எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது . 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார் . மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை !
* வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார் . 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம் .
* வாரியார் தனது 19 -வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார் . பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் , குழந்தைகள் இல்லை !
* தியாகராஜ பாகவத்ர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற ' சிவகவி ' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே !
* வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம் . தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தார் !
* எம். ஜி. ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் , ' பொன் மனச்செம்மல் ' என்பது அனைவராலும் சொல்லப்படுவது . அப்பட்டத்தை வழங்கியவர் இவரே !
* ' தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர் ' என்று கம்பர் கூறுகிறார் . ' தாமரையோ செவ்வண்ணம் உடையது . மது அருந்தியவருக்கும் , அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும் . அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும் ? " என்று கண்ணதாசன் கேட்க , ' அதை ' தம் அரைக் கண்ணால் ' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா ? ' என்று விளக்கம் கூறிக் கவியரசரை அசத்தினார் !
* ' எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது . பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும் , பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான் ' என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன் ! ' என்பார் !
* ' எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை !
* 20 வயதுக்கு மேல் , மேல் சட்டை அணிந்தது இல்லை . ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு ' இரை தேடுவதோடு இறையையும் தேடு ' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார் .
* லண்டனில் சொற்பொழிவை முடித்துவிட்டு , சுவாமிகள் திரும்பும்போது ( 07 - 11 - 1993 ) , விமானத்தில் அமர்ந்த நிலையிலேயே மரணம் சம்பவித்தது . ' மரணம் 88 வயதான அவரது பூத உடலுக்குத்தான் . அவருடைய ஆன்மாவுக்கு அல்ல . அவருடைய அழியாப் புகழுக்கு அல்ல . பூமிக்கு மேலே , சொர்க்கத்துக்கு அருகில் வாரியாரின் உயிர் பிரிந்திருப்பது வியப்பூட்டுகிறது ' என்று அன்று எழுதியது விகடன் !
--- ஆனந்தவிகடன் , 21 . 07. 2010.

Saturday, January 29, 2011

தலைவர் ஆகலாம் .

தலைவராக இருக்க என்ன தேவை ?
ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும் ? அதற்குத் தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது ?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்விதாமாக , " வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான் ? ' ( ' Where Have All The Leaders Gone ? ' ) என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது . இதை எழுதியிருப்பவர்கள் , பிரபல மேலாண்மை நிபுணர் , உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி .
இதற்கு , இவர்கள். 9 சி தேவை என்கிறார்கள் . ' 9 சி ' என்பது ' சி ' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது .
1 . Curiosity -- ஆர்வம் .
2 . Creativity -- படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை .
3 . Communication -- தகவல் தொடர்பு .
4 . Character -- ஒழுக்கம் .
5 , Courage -- தைரியம் .
6 . Conviction -- உறுதி .
7 . Charisma -- ஈர்ப்பு / கவர்சிகரமான ஆளுமை .
8 . Competence -- திறமை / தகுதி .
9 . Common Sense -- யதார்த்த அறிவு .
எப்பேர்ப்பட்ட தலைவரும் , அந்தரத்தில் கொடிகட்ட முடியாது . எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும் , எதார்த்தத்தைப் புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள் .
இந்த 9சியில் உங்க ஸ்கோர் என்ன ? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படுகிறது ? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளூங்கள் , நீங்களும் தலைவராகலாம் .
---என். சொக்கன் . குமுதம் . 21 . 07. 2010.

Friday, January 28, 2011

தூக்கம் வருவதற்கு !

தூக்கத்தை பீன்ஸ் தரும் . மீன் , யோகர்ட் , கீரையும் உதவும் .
எவ்வளவு காசு , பணம் இருந்தும் தூக்கம் மட்டும் வரவில்லை என்று தவிப்பவரா நீங்க ... !
இரவு உணவில் பீன்ஸ் , யோகர்ட் , மீன் , பசலை கீரை சேர்த்துக் கொள்ளுங்க , உடனே , குறட்டை விட்டு கொர்...கொர்....தான் !
இதை டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . மேற்கண்ட உணவுகளில் டோகோசஹிசோனிக் என்று ஒரு ரசாயனம் இருக்கிறது . அதை சுருக்கமாக டிஎச்ஏ என்கின்றனர் . தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோனை இந்த ரசாயனம் அதிகரிக்கச் செய்கிறதாம் . மீனில் இது அதிகமுள்ளது .
பீன்ஸில் விட்டமின் பி அதிகம் . பி6 , பி12 , போலிக் ஆசிட் ஆகியவையும் உள்ளன . இவை தூக்கத்தை முறைபடுத்தும் . செரோடோனின் என்ற ரிலாக்சுக்கு உதவும் அமிலத்தை தருகின்றன . குறைந்த கொழுப்புள்ள யோகர்ட்டில் கால்ஷியம் , மெக்னீஷியம் உள்ளன . அதை தூக்கத்தை தூண்டும் மினரல்களுக்கு மிக அவசியம் .
அடுத்து பசலைக்கீரை . அதில் அதிக இரும்பு சத்து உள்ளது . தூக்கத்தை தடுக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் என்ற பிரச்னையை இரும்பு சத்து விரட்டி , தூக்கம் கண்களைத் தழுவச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள் .
--- தினகரன் , ஜூலை 20 . 2010 .

Thursday, January 27, 2011

வடிவமைப்பாளர்கள் .

* சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் -- சபர்ணாராய் சவுத்ரி .
* பழைய டெல்லியை வடிவமைத்தவர் -- ஷாஜகான் .
* புது டெல்லியை வடிவமைத்தவர் -- எட்வின் லுட்தயன்ஸ் .
* கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் -- ஜாப் சார்நாக் .
* சண்டிகரை வடிவமைத்தவர் -- லேதகார் பூசியர் .
* ஐதராபாத்தை வடிவமைத்தவர் -- முகமது அலி குதுப்ஷா .
--- தினத்தந்தி , 19 .06. 2010. இதழ் உதவி : N.G. கலியபெருமாள் , திருநள்ளாறு

Wednesday, January 26, 2011

சிறப்புப் பெயர்கள் .

* கடல்களின் அரசி -- பசிபிக் பெருங்கடல் .
* அரபிக்கடலின் அரசி -- கொச்சி ( கேரளா ) .
* ஏட்ரியாட்டிக்சின் அரசி -- வெனிஸ் ( இத்தாலி ).
* மலை வாழிடங்களின் அரசி -- ஊட்டி ( தமிழ் நாடு ).
* டெக்கானின் அரசி -- புனே ( மராட்டியம் ).
* பால்டிக் கடலின் பேரரசி -- ஸ்டாக்ஹோம் ( சுவீடன் ).
* கடற்கரைகளின் அரசி -- கோவா .
* சாத்பூரா மலையின் அரசி -- பஞ்சவடி .
* மலைகளின் இளவரசி -- வால்பாறை ( கோவை ).
--- தினத்தந்தி , 19 .06. 2010. இதழ் உதவி : N.G. கலியபெருமாள் , திருநள்ளாறு .

Tuesday, January 25, 2011

தெரியுமா தெரியுமே !*

!* அத்தி , மா , பலா , வாழை , ஆல் , அரசு , வேம்பு , பூவரசு போன்ற மரங்களில் இருக்கும் இலைகளுக்கு மட்டும்தான் இலை என்று பெயர் .* அகத்தி , பசலை , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலகளுக்கு கீரை என்று பெயர் .* அருகு , கோரை முதலியவற்றின் இலைகளுக்கு புல் என்று பெயர் .* உசிலை , சப்பாத்திக்கள்ளி , தாழை இவைகளின் இலைகளுக்கு பெயர் மடல் .* கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகளுக்கு தோகை என்று பெயர் .* தென்னை , பனை முதலியவற்றின் இலைகள் , ஓலைகள் என்று சொல்லப்படுகின்றன . ---- தினமலர் , ஜூலை 16 , 2010.