Wednesday, August 31, 2011
நரகம் நிரந்தரம் அல்ல !
* '' சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என கர்மாக்கள் மூன்று வகைப்படும் . அவற்றை முற்றிலுமாக அனுபவித்து, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பது இல்லை ! ' என்கிறது கடோபநிஷத் * மறுபிறவி சாத்தியம் என்பதற்கு உலகில் வாழும் ஆதாரங்களாகக் காட்டப்படுவது புத்த மதக் குருக்களான தலாய் லாமாக்களைத்தான் . தலாய் என்றால் கடல் . லாமா என்றால் குரு . கடலளவு விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவர் என்று பொருள் . ஒரு தலாய் லாமா இறந்த பிறகு, அவரது ஆன்மா மறுபடியும் பிறக்கும் ' என்பது தலாய் லாமாக்களின் நம்பிக்கை . * .ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலேயே அவனால் அந்தப் புது மொழியைப் பேச முடிந்தால், அதற்கு ' ஸெனோக்ளாஸி ' என்று பெயர் . உதாரணமாக, ஜெர்மன் மொழி கற்றிடாத அல்லது ஜெர்மனுக்கு ஒருமுறைகூடச் சென்றிடாத, ஜெர்மன் மொழி பேசுபவர்களைக்கூட அறிந்திடாத ஒருவர் ஜெர்மன் மொழியைச் சரளமாகப் பேசினால் அவரைத்தான் ' ஸெனோக்ளாஸ் ' என்கிறர்கள் . ' ஸெனோ ' என்றால் அந்நியம் , ' க்ளாஸி ' என்றால் மொழி அல்லது நாக்கு என்று அர்த்தம் . இப்படி உலகம் எங்கும் நிறைய ஸெனோக்ளாஸ்கள் இருக்கிறார்கள் . --- ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .
Tuesday, August 30, 2011
உயிர் துற... உண்மை திற !
தான் இறக்கப்பொகிறோம் என்ற நம்பிக்கையை முழுதாகக் குற்றவாளிக்குத் தருவதன் மூலம் அவனிடம் இருந்து உண்மைகளைக் கறக்கும் இந்த முறையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்துகின்றன . இதற்காகப் பயன்படுத்தப்படும் ஆளுயர நீர்த் தொட்டிகள்தான் இந்த ' சென்ஸரி டெப்ரிவேஷன் ' தொட்டிகள் . இவற்றில் குற்றவாளியை நிர்வாணமாக உள்ளே தள்ளி மூடிவிடுவார்கள் . தண்ணீர் திறந்துவிடப்பட்டு முழுக்க நீர் நிரப்பப்படும் . நீர்மட்டம் உயர உயர, நீரில் மூழ்கி தான் இறக்கப் போகிறோம் என்ற பயம் குற்றவாளிக்கு ஏற்படும் . அப்போது குற்றவாளியிடம் கேட்கும் கேள்விக்குத் தானாகவே பதில் வந்துவிடும் . அதையும் மீறி முரண்டு பிடித்தால், முழுக்க நீரால் சூழப்படுவார்கள் . அப்புறம் என்ன மரணம்தான் என்கிறீர்களா ? அதுதான் இல்லை . இந்த நீரில் கலந்திருக்கும் பெர்ஃப்ளூரோ கார்பன் என்ற வேதிப்பொருளை நம் நுரையீரல் சுவாசிக்கும் . ஆனால், நம் மூளையோ, ' நீரில் மூழ்கினால் மரணம் ' என்றுதான் சொல்லும் . அதோடு கேட்கும் திறன், தொடுதிறன், பார்க்கும் மற்றும் நுகரும் திறன் அனைத்தும் தற்காலிகமாக மறைந்துவிடும் .இந்த நீரில் இருக்கும் எப்சம் உப்பு, நம் உடலை இறந்த உடல் போலவே மிதக்கவைக்கும் . இதனால் குற்றவாளியின் மனம் தான் இறந்துவிட்டதாகவே நினைக்கும் . பத்து நிமிடங்கள் கழித்து தொட்டியைத் திறக்கும்போது, தான் உயிரோடு இருக்கிறோமா, இல்லையா என்பதே குற்றவாளிக்குத் தெரியாது . கிட்டத்தட்ட அல்ல... நிச்சயமாகவே இது ஒரு மறுபிறவி விசாரணைதான் ! --- தீபக் , ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .
Monday, August 29, 2011
மனித , மிருக கலவி !
மிருக கலவிக்கும், மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு . எல்லா மிருகங்களும் முகமே பாராமல்தான் கூடிப் புணரும் . அதுவும் இனப்பெருக்க காலத்தில் மட்டும், எந்தவித சுகமும் உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத சம்பிரதாயமாக இருக்கும் . ஆனால், முகம் பார்த்து, இன்னாருடன் உறவுகொள்கிறோம் என்று அறிந்து, பருவ காலம் மட்டும் அல்லாமல், தனக்குப் பிடிக்கும்போது எல்லாம் ஆசைக்காக உறவுகொள்ளும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்குத்தான் உண்டு . ஒன்று, மனிதன் . இன்னொன்று, பொனோப்போ . நடத்தையிலும் மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறது என்றால், மரபு அணுக்களில் ? பரிசொதனை செய்துபார்த்தால் ஆச்சர்யம் . ஆனால், உண்மை . பொனோப்போக்களின் மரபு அணுப்புரதங்கள் 98 சதவிகிதம் மனிதர்களைப்போலவே இருப்பதைக் கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள் . ஆக, மரபு அணுரீதியில் பார்த்தால் மனிதர்களும், பொனோப்பொக்களும் சகோதர இனங்கள் . இவற்றுக்குள் இனக் கலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது . ஆனால், இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . இவை மட்டும் அல்ல; நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பன்சிகளும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . அப்படியானால், மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூக முறையைத்தான் கடைபிடித்து இருப்பார்கள் என்றுதானே அர்த்தம் ! -- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .
Sunday, August 28, 2011
பெண்ணுக்கு அதிக திறமை !
குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள் . பெண்கள் வேட்டைக்குப் போனார்களா ? அது ஆண்களின் வேலை அல்லவா என்று ஆச்சரியம் எல்லாம் படக் கூடாது . எல்லா விலங்குகளிலும் ஆணைவிடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும் . கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் . அப்பிராணி, கடிக்காது . ஆனால், பெண் துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும் . காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது . இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன் ... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது . இந்தப் புலன் நுணுக்கத்தினாலேயே ஆணைவிட, பெண் அதிக திறமையுடன் வேட்டையாட முடிகிறது . --- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .
Saturday, August 27, 2011
வேண்டாம் இனி கண்ணாடி !
இனி கண்ணாடி என்ற பொருள் அனேகமாக யாருக்கும் தேவைப்படாது . ஏனென்றால் முகத்தில் கொஞ்சம் பவுடர் அதிகமாக இருக்கிறது, இடது ஓரம் எண்ணை வழியுது என்று குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டுவதற்கு என்றே வந்துவிட்டது பிரத்யேகமான செல்போன் . சந்தைக்குப் புதிதாக வந்துள்ள ஐ. போனில்தான் இந்தவசதிகள் உள்ளன . இந்த ஐபோனை உங்கள் முகத்தின் முன் வைத்து ஆன் செய்தால் போதும், முக அழகுக்கு பத்து மதிப்பெண்கள் வைத்து நிறைகுறைகளை சொல்லிவிடும் . அதிக மதிப்பெண் கிடைத்தால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம், குறைவான மதிப்பெண் கிடைத்தால் நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் . இந்த ஐபோனை டாப்பர் ஜென்டில்மேன் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது . இதில் உள்ள கேமரா, முக அழகை ஸ்கேன் செய்து, செல்போனில் உள்ள சாப்ட்வேர் புரோக்கிராமில் ஒத்துப்பார்க்கிறது . அதற்கு ஏற்ப முகத்தின் நிறைகுறைகளை மதிப்பீடு செய்து விடை சொல்கிறது . ஐபோனின் இந்த முடிவு மிகச் சரியாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . உலகின் மிக கிளாமரான சிலரை இந்த போனில் பரிசோதனை செய்தபோது குழப்பமான முடிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆனால், அது எந்த அளவு உண்மை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை . --- தினமலர் , அக்டோபர் 20 , 2010 .
Friday, August 26, 2011
ஏ.டி.எம் கார்டு பாதுகாப்பானதா ?
' உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை electronic data capture இயந்திரத்தில் ஸ்வைப் செய்வார்கள் . அப்போது கார்டில் உள்ள தகவல்கள் அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடங்கலாமா என்பதை முடிவு செய்யும் . அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது . அதை skimmerனு சொல்வாங்க . கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துட்டு நீங்க அதைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், மறைவிடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒரு முறை உங்கள் கார்டைத் தோய்த்துவிட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்துவைத்துக்கொள்ளும் . ஒரே ஒரு ஸ்கிம்மர் இயந்திரத்தில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்துகொள்ள முடியும் . பிறகு, அந்தக் தகவல்களைவைத்து டம்மி கார்டு தயாரிப்பார்கள் . சம்பந்தப்பட்ட வங்கியில் தங்களின் கைகூலியாக வேலை செய்யும் நபர் மூலம், கார்டு உரிமையாளர் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் . அந்த டூப்ளிகேட் கார்டு மூலம் ஏ.டி. எம்.ல் பணம் எடுக்க முடியாது . ஆனால், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விமான, டிரெய்ன் டிக்கெட் பதிவது, ஷாப்பிங் விண்டோ மூலம் பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம் .வங்கியில் உள்ள இவர்களின் பார்ட்னர் மூலம் ' ஒன்டைம் பாஸ்வேர்டு ' பெற்று பரிவர்த்தனைகளை முடித்துவிடுவார்கள் . மாதாந்திர வங்கி ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது அக்கவுன்டில் பணம் குறைவதை உணரும்போதோதான் இந்த மோசடியை கார்டின் நிஜ உரிமையாளர் உணர்ந்துகொள்ள முடியும் . ஆக, நீங்கள் உங்கள் கிரெடிட் / டெபிட் கார்டை மற்றொரு நபரிடம் கொடுக்கும்போது மிகவும் உஷாராக இருங்கள் ! " என்கிறார் சென்னை மாநகர போலீஸ் சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் . ---பா. பிரவின்குமார் . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .
Thursday, August 25, 2011
தெரியுமா ? தெரியுமே !
* சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் ' பதுக்கி இருக்கும் கறுப்புப் பணம் ?! ஜஸ்ட் ஒன்றரை ட்ரில்லியன் டாலர்கள்தான் ! ஒரு ட்ரில்லியன் ( Trillion ) என்பது ஆயிரம் பில்லியன் ( Billion ) ஒரு பில்லியன் என்பது 100 கோடி . மொத்தமாக சுமார் ரூ. 50 லட்சம் கோடி ! வறுமை நாடா இந்தியா ?! * ' சச்சின் எப்போது எல்லாம் சீக்கிரம் அவுட் ஆகிறாரோ அப்போதெல்லாம் இந்திய பங்குச் சந்தை சுமார் 20 % இறங்குகிறது ' என்று ஆச்சரியத்தகவல் அளித்திருக்கிறது, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் . ' எப்படி... அப்படி ? ' என்று கேட்டால், ' சச்சின் அவுட் ஆனால், முதலீட்டாளர்களின் மனம் பாதிக்க்ப்படுகிறது . அதனால் இந்தச் சரிவு ! என்று வருகிறது பதில் . * ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் முறையைத்தான் பாலி ஆண்ட்ரி ( poly andry ) என்போம் * நத்தைகளின் வேகம் மணிக்கு 0.048 கி.மீ . உலகின் மிக மெதுவான உயிரினம் நத்தை .. --- ஆனந்த விகடன் 20 . 10 . 10 & 3 . 3 . 10 .
Subscribe to:
Posts (Atom)