Monday, October 31, 2011

' NOTABLEPERSONS '


NOTABLEPERSONS ' என சிலர் விளம்பரப்படுத்தப்படுகிறார்கள் . அவர்களில் பெரும்பாலோனோர் உருப்படியானவர்களாக இருக்கமாட்டார்கள் ! இந்த வாசகத்தை சிறிது மாற்றி அமைத்தாலே போதும் ; இந்த உண்மை விளங்கிவிடும் . எப்படி மாற்றவேண்டும் ? இதோ , இப்படித்தான் :
NOT ABLE PERSONS !
--- ' உலக சரித்திர நூலில் ' ஜவஹர்லால் நேரு .
கண நேரம் என்பது ...
நூறு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றினூடே ஊசியைச் செலுத்தினால் அவ்வூசி முனை ஓரிதழுக்கும் மற்றோரிதழுக்கும் இடையே கடந்து செல்லும் கால அளவுதான் கண நேரம் என்பது .
--- ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .

Sunday, October 30, 2011

தர்ப்பணம் .


தர்ப்பணம் : சில குறிப்புகள்..
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது .
* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது .
* குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது .
* சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது . அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம் .
* தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணை தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது .
* அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது .
* தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது .
* பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது . அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது .
* நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது ; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது .
--- தினமலர் இணைப்பு . ஜனவரி 6,. 2011 .

சூரியனின் பெருமைகள் !


பொன் வண்ணத்தேரில் மத்தியில் அமையும் பத்மாசனத்தில் இரண்டு மனைவியருடன், ஒளிமயமாக எழுந்தருளியிருப்பவன் சூரியன் .
சூரியதேவன் தேருக்கு ஏழு குதிரைகள் . காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்தி என்னும் ஏழு வகையான சப்த வஸ்ஸுக்கள் ஏழு பச்சைக் குதிரைகளாக அவனது பொன்வண்ணத் தேரை அலங்க்கரிக்கின்றன .
பொதுவாக தேர் என்றால் இரண்டு சக்கரங்கள்தானே இருக்கும் . ஆனால், சூரியதேவன் தேருக்கோ ஒரேஒரு சக்கரம்தான் உண்டு . கருடனுக்கு ஒரு சகோதரன் உண்டு . அவன் பெயர் அருணன் . அவன்தான் சூரியனுடைய தேரை ஓட்டக்கூடிய சாரதி .
அதிகாலை சூரியன் ரிக்வேத சொரூபமாக இருக்கிறார் . உச்சி காலத்தில் யஜுர் சொரூபமாகிறான் . மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாக இருக்கிறான் என்கிறார்கள் .
இப்படி பல பெருமைகள் படைத்த சூரியதேவன் தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு மூர்த்தியின் பெயரால் வணங்கப்படுகிறார் . சித்திரை மாதத்தில் விஷ்ணுவாகவும், வைகாசி மாதத்தில் அரியமா என்றும் . ஆனியில் விவஸ்வான் என்றும், ஆடியில் அம்சுமான் என்றும், ஆவணியில் பிரசன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் விஸ்வான் என்றும், தையில் பூஷ்வா என்றும், மாசியில் பகன் என்றும், பங்குனியில் துவஷ்டா என்றும் பெயர் பெறுகிறார் .
பருவங்களுக்கு சூரியனே காரணம் . ஆண்டினை ஆறு பருவங்ககளாகப் பிரிப்பார்கள் . கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் என்பவை ஆறு பருவங்களாகும் . இரண்டு இரண்டு மாதங்களை ஒரு பருவமாக சொல்வார்கள் . பருவத்தை ' ருது ' என்று வடமொழியில் சொல்வார்கள் . வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷருது, சரத்ருது, ஹேமந்தருது சிசிரருது என்பன ருதுக்கள் . சூரியன் ஒவ்வொரு ருதுவிலும் ஒவ்வொரு வர்ணத்தில் இருப்பாராம் .
உதயகிரி எனப்படும் மலையில் தோன்றுகிறார் சூரியன் . அவர் தோன்றும் போது தென்திசையில் இலங்கை நோக்கி துயில்கொள்ளும் த்ருமாலின் காலை பார்த்துக்கொண்டே உதயமாகிறாராம் . எனவேதான் அவர் உதயமாகும் நேரத்துக்கு காலை என்று பெயர் வைத்தார்களாம் . அதுபோலவே மறையும் நேரத்தில் சூரியன் திருமாலின் முழு உருவத்தையும் தரிசிப்பதால் மாலை என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்வார்கள் .
--- தினமலர் இனைப்பு . ஜனவரி 13 . 2011 .

Saturday, October 29, 2011

சிமென்ட்.


ஒளி ஊடுருவும் சிமென்ட்.
இத்தாலியை சேர்ந்த ' இத்தாலியன் சிமென்ட் குரூப் ' என்ற நிறுவனம் ஒளி ஊடுருவும் சிமின்டை கண்டுபிடித்துள்ளது . நிறமற்ற பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சிமென்ட் கலவையை கொண்டு கட்டடம் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையிலான இடைவெளி மூலம் வெளிச்சம் ஊடுருவும் . இதனால், சுவருக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எளிதாக பார்க்கலாம் .
ஒளி ஊடுருவும் வகையில் டிரான்ஸ்பிரன்ட் சிமென்ட் கலவை, நிறமற்ற பிளாஸ்டிக் கலவையால் ஆனது . இந்த கலவையை கொண்டு சுவர் கட்டினால், இரண்டு செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவை இருப்பதே தெரியாது . தொலைவில் இருந்து பார்ப்பதற்கு இரண்டு கற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பதுபோல் தெரியும் . ஒளி ஊடுருவும், நிறமற்ற கண்ணாடி போன்ற இந்த கலவையால் கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து அறைக்குள் ஒளி ஊடுருவும். இதனால் பகல் நேரத்தில் மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது . இதனால் கணிசமான அளவு மின்சாரம் சேமிக்கமுடியும் .
--- தினமலர் .ஜனவரி 9 , 2011 .

Friday, October 28, 2011

37 ஸ்பெஷல் !


37 என்ற எண்ணை 3 -ன் மடங்குகளால் பெருக்கினால் இப்படி ' மேஜிக் ' எண்கள் வரும் ! நண்பர்களிடம் சொல்லி அசத்துங்கள் !
37 x 3 = 111
37 x 6 = 222
37 x 9 = 333
37 x 12 = 444
37 x 15 = 555
37 x 16 = 666
37 x 21 = 777
37 x 24 = 888
37 x 27 = 999 .
--- தினமலர் , இணைப்பு . 14 . 1. 2011 .

Thursday, October 27, 2011

வீடுகளுக்கு கதவில்லை !


வீடுகளுக்கு கதவில்லை, வங்கிக்கு பூட்டு கிடையாது !
மாகாராஷ்டிரம் மாநிலம் அகமது நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகான சிற்றூர் ஷானி சிங்னாப்பூர் . உலகப் புகழ் பெற்ற ஷானி கோயில் இங்கு உள்ளது . இதை சூரியன் கோயில் என்றும் சொல்கிறார்கள் . தங்கள் ஊரை கடவுளே காவல் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர் .
இதனால், இந்த ஊரில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது . எல்லா வீடுகளும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது . ஆனால் கதவு மட்டும் இல்லை . நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் . அவர்கள் தங்குவதற்கு அழகான குடில்கள் உள்ளன . அவற்றுக்கும் கதவு இல்லை . எந்த பொருளும் திருடு போனதில்லை . திருடுபவர்களை கடவுள் ஷானி தண்டித்துவிடுவார் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர் .
இந்த கிராமத்தில் யூகோ வங்கி கிளை திறந்துள்ளது . வங்கியை பாதுகாப்பாக பூட்டி வைக்கவும் சேப்டி லாக்கர் அமைக்கவும் நிர்வாகம் முயன்றது . ஊர்மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . அப்புறம் என்ன, பகலும் இரவும் வங்கி திறந்தே இருக்கிறது . இந்த வங்கியில் கலெக்ஷன் ஆகும் பணத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமாவது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அருகில் உள்ள வங்கிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . எந்த வங்கியும் முன்வரவில்லை . இதனால் யூகோ வங்கியின் சேவை திறந்த பெட்டகமாகத்தான் இருக்கிறது .
--- தினமலர் 12 . 1. 2011 .
--- பின்குறிப்பு : நான் எங்கள் குடும்பத்துடன், அங்கு சென்று , ஒரு நாள் தங்கியபோது , அங்குள்ள விடுதிகளிலும் அறைகளிலும் இருக்கும் , குளியல் மற்றும் கழிவறைகளில் கூட கதவு இல்லை என்பதுதான் வேடிக்கை சுற்றுலாவில் சென்றதால் வேறு வழியின்றி தங்க நேரிட்டது . என்பதும் வேறு கதை .

Wednesday, October 26, 2011

டிப்ஸ் .


* தேங்காய் துருவுவதற்கு முன், தேங்காய் மூடியைத் தண்ணீரில் நனைத்துவிட்டுத் துருவினால், மூடியில் உள்ள நார், தேங்காய்த் துருவலில் விழாது .
* ரவா தோசை வார்க்கும் போது, ரவையை வறுத்துக் கொண்டு தோசை மாவில் கரைத்து வார்த்தால், கல்லில் ஒட்டாமல் வார்க்க வரும் .
* சன்னா மசாலா, பைங்கன் பர்தா போன்ற வட மாநில ரெசபிகள் செய்யும்போது கொஞ்சம் பதம் தப்பினாலும் கிரேவி நீர்த்துப்போய்விடும் . அப்போது சிறிதளவு வேர்க்கடலையைப் பொடித்து போடுங்கள் . கிரேவி ' திக் 'காகி விடும் .
* இழைக் கோலம் போட திடீரென்று மாவு தேவைப்படும்போது இந்த ஈஸி வழி உங்களுக்கு கை கொடுக்கும் . ஒரு டம்ளர் அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக மிக்க்ஸியில் அரைத்து ஓர் தட்டில் ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும் . நன்றாக காய்ந்ததும் அதை பொடி செய்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், இழைக் கோலம் போடும்போது தேவையான மாவை தண்ணீரில் கரைத்து இழைக் கோலம் போடலாம் .
* முட்டை உபயோகிக்கும் வீடுகளில் முட்டையை உடைத்து ஊற்றியபின், அதை அப்படியே முழு ஓட்டுடன் தூக்கி எறியக்கூடாது . முட்டையில் ஓட்டை ஒட்டி உள்ள பகுதியில் வெண்மையாக ஒரு திசு ஒட்டிக் கொண்டிருக்கும் . இந்த திசுவின் வாசனை, பாம்புகளுக்கும், எலிகளுக்கும் ரொம்பப் பிடிக்கும் . அதை சாப்பிட அவைகள் முட்டை ஓடுகளைத் தேடி வரும் . எனவே, முட்டை ஓடுகளை முழுவதுமாக தூக்கி எறியாமல் தூளாக உடைத்து, ஒரு பேப்பரில் பொட்டலம் கட்டி அப்புறப்படுத்த வேண்டும் .
--- குமுதம் சிநேகிதி , ஜனவரி 16 - 31 , 2011 . இதழ் உதவி ; N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு ) ,கொல்லுமாங்குடி