Monday, April 30, 2012

தெரியுமா ? தெரியுமே !


* தலைக்கு உள்ளே இருக்கின்ற காதுகளினாலும், உடலாலும் மீன்கள் தண்ணீருக்குள்ளே, தங்களைச் சுற்றி எழும்
சப்தங்களை உள்வாங்கிக் கொள்கின்றன என்கிறது நேஷனல் வைல்ட்டு லைப் பெடரேஷன் ஆய்வு !
* இயற்கையாக மனிதர்களுக்கு வயது ஏறஏற முளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9
சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம் .இதனால் நினைவாற்றல் குறைகிறது . அதனால்தான்
ஞாபகமறதி ஏற்படுகிறது .
* ' ப்ரளீயந்தே அஸ்மின் தோஹா ' என்பது ப்ரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் . அதாவது அனைத்து
தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள் .
* வள்ளலார் 30 . 1 . 1874 ஸ்ரீமுக வருஷம் தை மாதம் வெள்ளிக்கிழமையுடனான தைப்பூச நன்நாளில் நள்ளிரவு 12 மணிக்கு
சித்தியடைந்தார் .

அறிந்து கொள்வோம் !


* போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் -- ஜோன்ஸ் சால்க் .
* நெயில் பாலிஷில் உள்ள ரசாயனம் -- அசிடோன் .
* மத்திய காபி ஆராய்ச்சி நிலையம் -- பலேஹன்னூர், கர்நாடகாவில் உள்ளது .
* பெயின்ட் தொழிலில் வெளிப்படும் மாசு -- அலுமினிய மாசு .
* டெசிமல் முறைக்கு இந்தியா -- 1957 ம் ஆண்டு மாறியது .
* சீக்கியர்களின் 10வது குரு கோவிந்த்சிங்கின் மனைவி பெயர் -- மாதா சுந்தரி .
* ராயல் பெங்கால் புலிக்கு முன், இந்தியாவின் தேசிய விலங்கு -- சிங்கம் .
* ஆசியாட்டிக் சொசைட்டியை நிறுவியவர் -- வில்லியம் ஜோன்ஸ் .
* எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் -- பக்ருதீன் அலி அகமது .
* பீடியில் சுற்றப்பட்டிருக்கும் இலையின் பெயர் -- டெண்டு இலை .
* கடந்த 1962 ம் ஆண்டு இந்தியா -- சீனா போர் நடந்தபோது, இந்தியாவின் ராணுவ அமைச்சராக இருந்தவர் --
கிருஷ்ண மேனன் .
* அதிக பிரிகுவன்சி கொண்டது -- மைக்ரோவேவ் .
---- தினமலர் .23 . 1 . 2012 .

Sunday, April 29, 2012

வலை பாயுதே !


** சமையல் நிகழ்ச்சிகளில் சொல்வதைப் போல் எதையும் நைசாக அரைக்க முடிவது இல்லை. மிக்ஸியில்
அரைக்கும்போது, யாருக்கேனும் தெரிந்துவிடும் !
** 'இறைவன் கதவை மூடினால் ஜன்னலைத் திறப்பார் ' என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, 10 மணிக்கு
மேல் டாஸ்மாக்குக்குப் பொருந்தும் !
** ' நீங்க ஏன் அரசியலுக்கு வரவில்லை? -- ' எனக்கு அவ்வளவு நடிப்பு வராது ' -- கமல்! # ரசித்த பதில் !
** அவசரத்துக்கு அடகு வைக்கத்தான் வாங்கறேன்னு சொல்லி வாங்கும் நகைகளை ஆற அமரத் தெரிவு செய்வதன் மர்மம்
பெண்களுக்கு மட்டுமே தெரியும் !
** நல்ல லாயர் -- புத்திசாலி லாயர் என்ன வித்தியாசம் ? நல்ல லாயருக்கு லா தெரியும் . ஆனா, புத்திசாலி
லாயருக்கு ஜட்ஜையே தெரியும் ! # படிச்சது .
** சென்னைக்கு மிக அருகில் திண்டிவனமும் மிகமிக அருகில் அரக்கோணமும் இருப்பது ரியல் எஸ்டேட் ஆட்கள்
சொல்லித்தான் தெரிகிறது .
** கோபமா இருக்கோம்னு காட்ட நல்ல வழி... உப்புமா செஞ்சு வைக்கிறதுதான் . சீக்கிரமா சண்டை முடிவுக்கு
வந்துடுது !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்த விகடன் . 25 .1 . 12 / 1 . 2 . 12 .

Saturday, April 28, 2012

குப்புறப் படுத்தால்...


தூக்கம் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவசியமானது . மனிதன் ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கியாக வேண்டும் . அப்போதுதான் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் .
தூங்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தூங்குவார்கள் . மல்லாந்து படுப்பார்கள் சிலர் . ஒரு பக்கம் திரும்பிப் படுப்பார்கள் இன்னும் சிலர் . சிலருக்கு குப்புறப் படுத்தால்தான் தூக்கம் வரும் . குப்புறப் படுத்துத் தூங்குவதால் ஆபத்தாம் .
குப்புறப்படுத்து பல மணி நேரம் தூங்குவதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது . சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரகக் கற்கள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது .
குடலைக் குறைக்கலாமா ...?
உடல் பருமன், கொழுப்புக்கு காரணம் அதிகம் சாப்பிடுவது. அதற்கு காரணம் அடங்காத பசி . அப்படிப்பட்ட ' நோயாளி'க்கு பசியைக் குறைக்க ஆலோசனை சொல்வது உண்டு . அதுபற்றி குடல் நோய் சிகிச்சை நிபுண்ர் கூறியதாவது :-
அதிக குண்டாக இருப்பவர்கள் பசியை குறைக்க பெருங்குடலின் நீளத்தை குறைப்பது உண்டு . அதன் மூலம் அடிக்கடி பசி எடுப்பதும், சாப்பிடுவதும் குறையும் . ஆனால், பெருங்குடலின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல . அப்படிச் செய்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமலேயே போய்விடும் . அதனால் உடல் பலவீனம், சோர்வு, தளர்ச்சி ஏற்படலாம் . மேலும் அது விலை உயர்ந்த சிகிச்சை . அதனால் சுயமாக வாயை கட்டுவதும், உடற்பயிற்சியும் போதும் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Friday, April 27, 2012

அறிந்து கொள்வோம் !


** ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்த வார்த்தைகளில் ஒன்று -- Assassination -- படுகொலை .
** ஒரு பசு தன் வாழ்நாளில் கொடுக்கும் பாலின் உத்தேச அளவு -- 2 லட்சம் டம்ளர் .
** பச்சோந்தியின் நாக்கு நீளம் -- உடல் அளவில் 2 மடங்கு .
** குதிக்க முடியாத ஒரே விலங்கு -- யானை .
** எகிப்தின் தேசிய மலர் -- தாமரை ( நிம்பாபியா லோட்டஸ் ) .
** உலகிலேயே அதிக தபால் அலுவலகங்கள் கொண்ட நாடு -- இந்தியா .
** பட்டர்பிளையின் ( வண்னத்துப்பூச்சி ) உண்மை பெயர் -- பட்டர்பை .
** எதிரியுடனும் உணவருந்தக்கூடிய ஒரே உயிரினம் -- மனிதன் .
** மனித உடலின் வலுவான தசை நாண் -- நாக்கு .
** கத்திரியை கண்டுபிடித்தவர் -- லியர்னாடோ டாவின்சி .
** லைட் இயர் என்பது தூரத்துடன் தொடர்புடையது .
** இந்திய நாடு அதிக அளவில் மைக்கா தயாரிக்கிறது .
** லால் பகதூர் சாஸ்திரியை 'மேன் ஆப் பீஸ் ' என்று அழைப்பர் .
** சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதை கண்டரிந்தவர் எய்ன்ஸ்டீன் .
--- தினமலர் , 30 .1 . 2012 .

Wednesday, April 25, 2012

ஆண்கள் மேதைகள் ஏன் ?


மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் இருக்கும் இன்ஃபீரியர்பரைடல்லாபுலே என்ற இடம், பெண் மூளையைவிட ஆணுக்கு சற்று அகன்று இருக்கும் . இதனாலேயே, அறிவியல் மேதை, கணித மேதை என்று பல ஆண்கள் புகழ்பெற முடிந்தது என்கின்றனர் அறிவியலார்கள் .
இமை மூடி...
ரத்த அழுத்தம் திடீரென கூடுகிறதா ? சும்மா இருந்தால் சுகம் கிடைக்கும் . என்ன ? புரியவில்லையா ? சற்றுநேரம் கண்களை மூடி எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தாலே இந்த திடீர் ரத்த அழுத்தம் குறைந்துவிடுமாம் . இங்கிலாந்து நாட்டு மருத்துவ நிபுணர்கள் " சும்மா இருப்பதே சுகம் " என்று கூறிய நமது சித்தர்களின் கூற்றுக்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்துள்ளனர் .
--- டாக்டர் S. A . சையத்சத்தார் . யுனானி மருத்துவம் , ஜனவரி 2012 .
--- இதழ் உதவி : M. செல்லத்துரை , திருநள்ளாறு .

Tuesday, April 24, 2012

கணபதி ஹோமம் .


வீட்டில் ஹோமங்களை அடிக்கடி செய்து கொண்டேயிருங்கள் . பிறறையும் செய்யச்சொல்லுங்கள் . ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல; உங்கள் ஊரையே காப்பாற்றும் . இப்படி எல்லா ஊர்களிலும் எல்லோரும் செய்யத் துவங்கிவிட்டால், காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படுகிறது . உரிய காலத்தில் மழை பெய்யும் . இயற்கை சீற்றங்கள் ஏற்படாது . ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் . எத்தனை அணுமின் நிலையங்கள் துவங்கினாலும் கவலைப்படவேண்டாம் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழந்த போபால் விஷவாயு விபத்தில் தினமும் ஹோமம் செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
--- ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , மயிலாடுதுறை .
--- தினமலர் இணைப்பு , 26 . 1 . 2012 .