Friday, January 31, 2014

ஆன்மிகம்.

வார்த்தையிலும் வேண்டும் மங்கலம்!
    சென்ற தலைமுறையில் குழந்தைகளை ஏசுவதென்றால் கூட, மறந்துபோய்கூட அமங்கலமான வார்த்தைக்ளை பேசமாட்டார்கள்.
   ' நாசம் அற்று போக ' என்றுதான் கூறுவார்கள்.  அதாவது, தீங்கு இல்லாமல் போகட்டும் என்பதே அதன் பொருள்.
    அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை,  அப்போதே பலித்து விடும்.
-- ஸாந்த்ரானந்தா,  தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.   

Thursday, January 30, 2014

அறிவியல் அறிவோம்.

கோள்கள், நட்சத்திரங்கள் ஏன் கோள வடிவிலேயே உள்ளன ?
     பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன.  கோள்களும், நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள்.  இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
     நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது.  அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது.  கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள் எப்போதும் சம நிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளூக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது.  வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு.  எனவே, பெரும் கோள்களும், நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
     பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோளவடிவத்திலேயே உள்ளன.  நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.
-- உயிர் மூச்சு.  பசுமையின் சுவாசம். சிறப்புப்பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் , நவம்பர் 5, 2013. 

Wednesday, January 29, 2014

பசும்பால்.

புற்றுநோயை குணப்படுத்தும் பசும்பால்.
     பெய்ஜிங் :  வயிற்றுப் புற்றுநோய்க்கு காரணமாக அமையும் செல்களை அழிக்கும் திறன் பசும்பாலுக்கு உண்டு என்று தைவானைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
     பசும்பாலில் லாக்டோபெரிசின் பி25 என்ற கூறு உள்ளது.  இது, மனிதர்களின் வயிற்றில் உருவாகும் புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் திறனுடையது.
     வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் மீது லாக்டோபெரிசின் பி25 மூலக்கூறை வைத்து சோதனை நடத்தியபோது, 24 மணி நேரத்தில் அவை புற்றுநோய் செல்களை செயலிழப்பு செய்ய வைத்து அவற்றின் பரவும் திறனை முடக்குவது தெரியவந்தது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--   ' தி இந்து ' நாளிதழ்,  சனி , நவம்பர் 9, 2013. 

Tuesday, January 28, 2014

அறிவோம்! தெளிவோம் !

பாக்கெட் பாலை அபிஷேகத்திற்குப் பயன்படுத்தலாமா?
     காஞ்சி மகாபெரியவர் ஒருமுறை வடதேச யாத்திரை சென்றிருந்தார்.  அவர் தினமும் வழிபடும் சந்திர மவுளீஸ்வரர் பூஜைக்கு ஒரு வட இந்தியர் நிறைய பால் வாங்கிக் கொடுத்தார்.  பால் அபிஷேகம் செய்யத் துவங்கும் நேரம் பெரியவர் சுற்றும்முற்றும் பார்த்தார்.  ஒரு ஓரமாக முதியர் ஒருவர் சிறிய கூஜாவை வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.  பெரியவர், அம் முதியவரை அழைத்து கூஜாவை வாங்கித் திறந்து பார்த்தார்.  அதில் பால் இருந்தது.  அது மட்டும்  சந்திர மவுளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  பூஜைகள் முடிந்து பிரசாதம் பெறும் போது,  தான் கொண்டு வந்த பாலை அபிஷேகத்திற்கு சேர்த்துக் கொள்ளாததைப்பற்றி அந்த வடைந்தியர் வருத்தத்துடன் கேட்டார்.
    " இவ்வளவு பால் எப்படிக் கறக்கப்பட்டது? " என்று பெரியவர் வினவினார்.
    " மிஷின் மூலமாக " என்றார் வடைந்தியர்.
    " கன்றுக்குட்டிக்கு ஊட்டி, அதன் பிறகு கறக்கப்படும் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது.  நீர் கொண்டு வந்த பாலின் தரத்தை அறிந்துதான் அதை உபயோகிக்கவில்லை.  சிறிதளவு செய்தாலும், கன்று ஊட்டி கறந்த பசும் பால்தான் உயர்ந்தது" என்று கூறினார்.
     மிஷினில் கறக்கப்படும் பசும் பாலுக்கே இந்த கதி என்றால், பாக்கெட் பாலைப் பற்ரி நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன்.
-- ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்,  மயிலாடுதுறை.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 7, 2013

Monday, January 27, 2014

தெரிஞ்சுகோங்க !

*  முனிவர்களின் தலைவர் என்றழைக்கப்படும் முனிவர் பெயர் என்ன ?
    துருவாச முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைவர்.
*  வெண்மையான மலர்களை பூஜைக்கு பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை.  எனினும் நந்தியாவட்டை மட்டும் சிவபூஜையில் விசேஷமாக இடம்
    பெறும் மலராகும்.
*  கோயிலில் சுவாமிக்கு முன்னால் இருக்கும் காளை ( ரிஷப )  வடிவங்களை நந்தி என்கிறோம்.  நந்தி வேறு, ரிஷபம் வேறு என்பதனைக் காட்டும்.
    அஷ்டபரிவாரங்களில்  நந்தி தேவர் கிழக்கிலும், ரிஷபதேவர் மேற்கிலும் இருப்பர்.
*  ' நந்தி ' என்ற பெயர் சிவபெருமானுக்கு உரிய திருநாமமாகும்.  ' நந்தி நாமம் நமச்சிவாயவே ' என்பர் திருஞானசம்பந்தர்.  திருமூலர் திருமந்திரம் எடுத்த
    எடுப்பில், விநாயக வணக்கப்படலான ' ஐந்து கரத்தனை ' எனத் தொடங்கும் பாடலில், ' நந்தி மகன் ' என  விநாயகரைக் குறிக்கும்.
*   நந்தி என்ற சொல்லுக்கு அழிவு அற்றது; குற்றங்கள் இல்லாதது என்று பொருள்.  இத்தனமைகளுடைய சிவபெருமானே நந்தியாவார்.
-- தினமலர் இணைப்பு இதழ்களிலிருந்து.

Sunday, January 26, 2014

சிரிப்போ... சிரிப்பு !

*  ஆசிரியர் :  " இரு செல் உயிரிக்கு உதாரணம் சொல்லு பார்ப்போம் ...?"
    மாணவன் : " எங்க அப்பா... "
    ஆசிரியர் : " எப்படி ?"
    மாணவன் : " அவர்தான் ரெண்டு செல் ( போன் ) வெச்சிருக்காரே...!"
* " புலவரே... நீங்கள் எப்படி... மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?"
  " இரண்டும் இல்லை மன்னா.  தாங்கள் கொடுக்கும் துட்டுக்கு பாட்டு."

Saturday, January 25, 2014

' டிரை கிளீனிங் '

   எந்த ஒரு திரவத்தையும் சேர்க்காமல் எப்படி ' டிரை கிளீனிங் ' ( Dry cleaning )  முறையில் துணிகளை சுத்தம் செய்கிறார்கள்?
     துணிகளைச் சுத்தம் செய்ய இந்த முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.  இதனால் மட்டும்தான்,  அதை உலர் சலவை  அல்லது டிரை கிளீனுங் என்கிறோம்.  மற்றபடி மண்ணெண்ணெய், ஒரு வகை பெட்ரோல், பெர்க்ளோரோ எத்திலின் போன்ற திரவங்கள் பயன்படுத்தப்படுவதால் துணிகள் சுத்தம் அடைகின்றன.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 8, 2013.