Monday, March 31, 2014

பெண்களின் சூழலுக்கு ஏற்ற கவிதை.



கொட்டுவது சுலபம்; அள்ளுவது?

  2010 - ல் மெக்ஸிகோ வளைகுடாவில் நேரிட்ட எண்ணெய்க் கசிவுதான் வரலாற்றிலேயே மிக மோசமான கசிவு.  பிரிட்டிஷ் பெட்ரோலியத்துக்குச் சொந்தமான எண்ணெய் துரப்பணக் கிணற்றில் நடந்த இந்த விபத்தில், 40 லட்சம் பீப்பாய்கள் அளவு எண்ணெய் வெளியானது.  விபத்துக்குப் பிறகு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 1.7 லட்சம் பேரும் ஏதாவது ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  என்ன செய்வது என்று கையைப் பிசைகிறார்கள்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
--  -' தி இந்து '  நாளிதழ் .செவ்வாய், அக்டோபர் 29, 2013.  

Sunday, March 30, 2014

புதிய சூரியக் குடும்பம்.

7 கோள்களுடன் புதிய சூரியக் குடும்பம்.
      நமது சூரிய மண்டலத்தைப் போலவே, நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் 7 கோள்கள் அடங்கிய சூரியக் குடும்பத்தை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    இந்த சூரியக்குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
    ஏழு கோள்கள் சுற்றி வரும் அந்த நட்சத்திரம் எச்டி 10180 என அழைக்கப்படுகிறது.  இதனை 5 கோள்கள் சுற்றி வருகின்றன.  அங்கு மேலும் 2 கிரகங்கள் இருப்பதற்கான தடயங்களையும் வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  அதில் ஒன்றின் நிறை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில்  மிகக்குறைவானதாகும்.
    நமது சூரியக் குடும்பத்தைப் போலவே, புதிதாகக் கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்திலும் கோள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கமான பாதையில் சுற்றிவருவதைக் கண்டறிந்துள்ளனர்.
    அங்கு சனி போன்ற ஒரு கிரகம் குறைந்தது 65 பூமிநிறையுடன் 2200 நாள்கள் சுற்றுப்பாதையை கொண்டுள்ளது.  மற்றொன்று மிகக்குறைந்த நிறையைக் கொண்டுள்ளது.  புவியின் நிறையைவிட 1.4 மடங்கு அதிகம்.  பூமிக்கு 1.18 நாள்கள் என்பது.  அக்கோளூக்கு ஒரு ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் சிலியில் லா சில்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் இந்த சூரியக் குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது.
--  பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- -' தி இந்து '  நாளிதழ் .. சனி, அக்டோபர் 26, 2013. 

வாழ்க்கையைக் கொண்டாடியவர்!

 ( சிறப்பு )
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மறைவு .  ( 2-2-1915  --  20-3-2014 )    
      எவ்வளவு பெரிய புத்திஜீவியாக இருந்தாலும் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கும்போது பயம் வந்துவிடும்.  ஆனால், எதைப் பற்றியுமே கவலைப்படாத குஷ்வந்த், 30 வயதைத் தாண்டாத இளைஞராக இருந்தபோதே ( 1943-ல்) தன் கல்லறை வாக்கியம் எப்படி இருக்கும் என்று எழுதி வெளியிட்டார்.  அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு இது :
     'கடவுளையோ, மனிதனையோ யாரையும் விட்டு வைக்காதவன் இங்கே உறங்குகிறான்.  யாரும் இவனுக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம்.  ஏனென்றால், இவன் ஒரு பொறுக்கி.  அசிங்கமாக எழுதுவது இவனுக்கு ஒரு விளையாட்டு.  நல்லவேளை செத்துவிட்டான்... ரவுடிக்குப் பிறந்த ரவுடி!'
      ஆனால், குஷ்வந்த் விரும்பியபடி அவர் புதைக்கப்படவில்லை.  மண்ணில் இருந்து வந்த நாம் மண்ணுக்கே போவதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.  பல நிர்வாகக் காரணங்களால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை.  உயிரோடு இருந்திருந்தால் இதையும் கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
      குஷ்வந்த் சிங் பற்றி சுருக்கமாகச் சொன்னால், அவரைப் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தோமோ, அதேபோல் அவரைப் படித்த பிறகும் இருக்க முடியாது !
-- சாரு நிவேதிதா.  எழுத்தாளர்.
-- ஆனந்த விகடன்.  02-04-2014. 

Saturday, March 29, 2014

காற்றின் பெயர்கள்.

  தமிழில் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித்தனி பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
வாடை........................................ வடக்கில் இருந்து வீசும் காற்று.
சோழகம், தென்றல்................ தெற்கில் இருந்து வீசும் காற்று.
கொண்டல் ................................. கிழக்கில் இருந்து வீசும் காற்று.
கச்சான் ........................................ மேற்கில் இருந்து வீசும் காற்று.
--  ஆதி வள்ளியப்பன், பொது அறிவு. வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும் . சிறப்புப் பகுதி.
--   -' தி இந்து '  நாளிதழ் ..திங்கள், அக்டோபர் 28, 2013.