Saturday, January 31, 2015

கிளியோபாட்ரா.

 " படித்ததில்  அதிர்ந்தது?"
     " கிளியோபாட்ரா  இறந்தபோத,  பண்டைய  எகிப்தில்  சம்பிரதாயப்படி  அவர்  உடல்  மூன்று  நாட்கள்  புதைக்கப்படவில்லை.  அந்த  மூன்று  நாட்களும்  அவருடைய  சடலம்  பலரால்  கற்பழிக்கப்பட்டதாம்.  இந்தச்  செய்தியப்  படித்ததும்  எனக்கு  ஒரே  ஆச்சரியம்.  எந்த  வகை  மனிதன்  ஒரு  பினத்தைக்  கற்பழிப்பான்  என்று  தோன்றியது.  பிறகுதான்  ஒரு  விஷயம்  எனக்கு  உறைத்தது.  அந்த  உண்மை  அப்படி  ஒன்றும்  அதிசயமில்லையே!  ' எல்லா  ஆண்களும்  பெண்களைப்  பிணமாக்கித்தான்  வைத்துள்ளனர்... குறைந்த  பட்சம்  உடலுறவின்போது !'  சொன்னவர்:  ஓஷோ  ரஜினீஷ்"
--- நானே  கேள்வி? .. நானே  பதில்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

Friday, January 30, 2015

பேல் பூரி.

கண்டது:
*  (  கோயம்புத்தூர்  காந்திபுரத்தில்  ஆம்னி  வேனின்  பின்புறத்தில் )
     போதிக்கும்போது  புரியாது
     பாதிக்கும்போது  புரியும்.
*  (  திருப்பூரில்  ஆட்டோவில்  கண்ட  வாசகம் )
     வழி  தவறுவதைவிட...
     வழி  கேட்பது  மேல்.
*  ( திண்டுக்கல்  கடிகாரக்கடை  ஒன்றில் )
     நகர்வது  முள்  அல்ல
     உங்கள்  வாழ்க்கை.
*  ( நெல்லை  பெருமாள்கோயில்  தெரு  தேநீர்க்கடை  ஒன்றில் )
     அன்பை  வாங்கினால்
     பிற்காலத்தில்  நன்மை  சேரும்.
     கடனை  வாங்கினால்
     பிற்காலத்தில்  வம்பு  சேரும்.
(  கிருஷ்ணகிரி  நேதாஜி  ரோட்டில்  உள்ள  ஒரு  முடிதிருத்தத்தில் )
     நண்பனுக்குக்  கடன்
     கொடுத்தால்
     கடனும்  போய்விடும்
     நண்பனும்  போய்விடுவான்.
--- தினமணி  கதிர்,  15 / 22  -  07 - 2012.
-  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Thursday, January 29, 2015

விழாக்கள்.

*  ஒரு  வருடம்  நிறைந்தால்  காகித  விழா.
*  ஐந்து  வருடம்  நிறைந்தால்  மர  விழா.
*  பத்து   வருடம்  நிறைந்தால்  தகரம்  அல்லது  அலுமினிய  விழா.
*  பதினைந்து   வருடம்  நிறைந்தால் படிக  விழா.
*  இருபது வருடம்  நிறைந்தால்  பீங்கான்  விழா.
*  இருபத்தைந்து வருடம்  நிறைந்தால் வெள்ளி  விழா.
*  முப்பது வருடம்  நிறைந்தால் முத்து  விழா.
*  நாற்பது வருடம்  நிறைந்தால் மாணிக்க  விழா.
*  ஐம்பது  வருடம்  நிறைந்தால் பொன்  விழா.
*  அறுபது  வருடம்  நிறைந்தால்  வைர  விழா.
*  எழுபத்தைந்து வருடம்  நிறைந்தால்  பவள  விழா.
*  நூறு   வருடம்  நிறைந்தால்  நூற்றாண்டு  விழா.
-- - தினமணி  கொண்டாட்டம்.  ஜூலை  22,  2012                                                          
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

Wednesday, January 28, 2015

ஆன்மிக வினா - விடை.

*  மூவர்  தேவாரம்  பெற்ற  தலங்கள்  எத்தனை?  --  நாற்பத்து  நான்கு.
*  தன்னைத்  ' தமிழ்  விரகர் '  என்று  கூறிக்கொண்டவர்  யார்?  --  திருஞானசம்பந்தர்.
*  அறுபத்து  மூவரில்  பெண்  அடியார்கள்  யாவர்?  --  காரைக்கால்  அம்மையார்,  மங்கையர்க்கரசியார்,  இசைஞானியார்.
*  கால  பைரவர்  சந்நிதி  எங்குள்ளது?  --  காசி  மற்றும்  விருத்தாசலம்.
*  ஈசனுக்கு  எழுப்பது  மாடக்கோயில்கள்  எழுப்பிய  மன்னன்  யார்?  --  கோச்செங்கட்சோழ நாயனார்.
*  நந்தி,  கொடிமரம்,  தட்சிணாமூர்த்தி  சந்நிதி  ஆகியவை  இல்லாத  சிவத்தலம்  எது?  --  ஆவுடையார்கோயில்.
*  பார்வதி - பரமசிவன்  திருமணம்  நடந்த  நாள்  எது?  --  பங்குனி  உத்திரம்.
*  அம்பிகையின்  மந்திரத்தை  என்ன  பெயரிட்டு  அழைக்கின்றனர்?  --  ஸ்ரீவித்யை.
--- தினமணி  வெள்ளிமணி.  ஜூலை  27,  2012  
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Tuesday, January 27, 2015

விதண்டாவாதம்.

  ' வித்து '  என்றால்  விதை,  ' அண்டம் '  என்றால்  மரம்.  முதலில்  விதையிலிருந்து  மரம்  முளைத்ததா  அல்லது  மரத்திலிருந்து  விதையா  என்று  வாதம்  செய்வதுதான்  விதண்டாவாதம்.  இப்படி  விதண்டாவாதம்  புரிபவர்களை  இலேசில்  கன்வின்ஸ்  செய்ய  முடியாது.
-- அனுஷா  நடராஜன். மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )   

Monday, January 26, 2015

வைரக்கோள்.

விருச்சிக  ராசி  மண்டலத்தில்  வைரக்கோள்.
      அமெரிக்காவைச்  சேர்ந்த  இந்திய  வம்சாவளி  விஞ்ஞானி  நிக்கு  மதுசூதன்  தலைமையிலான  பிரான்கோ  ஆராய்ச்சிக்குழுவினர்,  விருச்சிக  ராசி
 நட்சத்திர மண்டலத்தில் பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரிய  வைரக்  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளனர்.  அதற்கு ' 55 கேன்சரி இ'  என்று  பெயரிட்டுள்ளனர்.
     இது  குறித்து  ஆராய்ச்சிக்குழுவின்  தலைவர்  நிக்கு  மதுசூதன்  கூறுலையில் ' கடினமான  பாறைகள்  மற்றும்  கிராபைட்டால்  ஆன,  பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரியதும்,  செவ்வாய்  கிரகத்தை  போன்று  8  மடங்கு  பெரிய  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளோம்.  விருச்சிக  ராசி  மண்டலத்தில்  உள்ள  சூரியனைப்  போன்ற  ஒரு  நட்சத்திரத்தை  ' 55  கேன்சரி  இ'  என்ற  வைரக்கோள்  சுற்றிவருகின்றது.  அந்த  கோள்  பூமியைவிட  வேகமாக  18  மணி  நேரத்தில்  அந்த  நட்சத்திரத்தை  சுற்றிவருகிறது.
     இந்த  கிரகத்தின்  மேற்பரப்பில்  3  ஆயிரத்து  900  டிகிரி  பாரன்ஹீட்  வெப்பம்  நிலவுகிறது.  பூமியை  காட்டிலும்  வித்தியாசமான  வேதியியல்  கலவையால்  ஆன  இந்த  கோளை  முதல்முறையாக  கண்டுபிடித்துள்ளோம். சிறிது  நேரமே  அந்த  கோளை  பார்க்கமுடிந்தது. இருப்பினும்  இந்த  அளவுக்கு  பெரிய  வைரக்கோள்  கண்டுபிடித்துள்ளது  இதுவே  முதல்முறை  என்றார்.
--  தினமலர்.  அக்டோபர்  13, 2012. 

Sunday, January 25, 2015

நமஸ்காரம்.

  நமஸ்காரங்களில்  ஐந்து  வகை  உள்ளன.  அவை  ஏகாங்கம்,  திலியாங்கம்,  திரியாங்கம்,  பஞ்சாங்கம்,  அஷ்டாங்கம்  என்பன.  உடலுருப்புக்கு  அங்கம்  என்று  பொருள்.
     ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையாகிய  உறுப்பை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதலாகும்.
     திவியாங்க  நமஸ்காரம்  என்பது  வலக்கையை  மட்டும்  தலையில்  குவித்து  வணங்குவதாகும்.
     திரியாங்க  நமஸ்காரம்  என்பது  தலையின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதலாகும்.
     பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  முழங்கால்கள்  ஆகிய  ஐந்து  உறுப்புகளும்  தரையில்  பொருந்தும்படி
வணங்குதலாகும். இந்த  வகை  நமஸ்காரத்தை  பெண்கள்தான்  செய்ய  வேண்டும்.  ஸ்திரீகளின்  திருமாங்கல்யம்  தரையில்  படக்கூடாது  என்பதற்காகத்தான்  மண்டியிட்டு  இந்த  நமஸ்காரத்தைச்  செய்யவேண்டும்  என்று  ஆன்றோர்கள்  சொல்லியுள்ளனர்.  மேலும்,  இதை  பெண்கள்  ஒருதரம்  செய்தல்  குற்றமாகும்.  3,  5,  7  அல்லது  12  முறை  செய்யவேண்டும்.
     அஷ்டாங்கம்  என்பது  தரையோடு  தரையாக  படுத்து ந்ம்முடைய  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  செவிகள்,  மோவாய்,  இரண்டு  புஜங்கள்  ஆகிய  எட்டு  அங்கங்களும்  பூமியில்  படும்படி  செய்யவேண்டும்.  இந்தவகை  நமஸ்காரத்தை  ஆண்கள்தான்  செய்ய  வேண்டும்.
--- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )