Sunday, May 31, 2015

கவிதைத் தூறல்

வரதட்சிணை
நிலத்தை  விற்றாள்
கல்வி  கற்க
வீட்டை  விற்றாள்
பட்டம்  பெற
தன்னையே  விற்றாள்
திருமணம்  செய்ய!
- ஜெ.ஜெயா, கோவை.
தண்டனை
வாழைப்பழம்
குற்றம்  எதுவும்
செய்யவில்லை
இருந்தாலும்  எல்லோரும்
தோல்  உரிக்கிறார்களே...!
- க.சு.கீர்த்தி, பெரணமல்லூர்.
மழலை
எல்லாம்  தெரியும்
என்று  சொல்பவர்கலும்
ஏங்குகிறார்கள்,
ஒன்றுமே  தெரியாத
மழலையின்  அன்புக்கு!
- வி.ஜானகி, கே.கே.நகர்.
-- மங்கையர் மலர்.  மார்ச் 16-31, 2015.
-- இதழ் உதவி : சந்திராசிவசிதம்பரம், செம்பனார்கோயில்.  

கோலங்கள்.

தெற்கில்  வேண்டாம் !
     வடக்கில்  குபேரனும்,  கிழக்கில்  இந்திரனும்,  மேற்கில்  வருணனும்,  தெற்கில்  எமனும்  வாசம்  செய்வதால்  தெற்கு  பார்த்தோ  அல்லது  தெற்கில்  கோலம்  முடிவுறும்படியோ  போடக்கூடாது.
மனதை  ஒருநிலைப்படுத்தும்...
   * இறந்தவர்  வீடுகளில்  தீட்டு  கழிப்பதற்கு  முன்  கோலம்  இடக்கூடாது.  மற்றும்  திதி,  அமாவாசை  போன்ற  நாட்களிலும்  கோலம்  இடக்கூடாது.
   * உடல்  குனிந்து,  நிமிர்ந்து  கோலம்  இடுவதால்  உடற்பயிற்சி  போல்  ஆகிறது.  ஒரு  புள்ளியில்  ஆரம்பித்து  எல்லா புள்ளியையும்  இணைத்துப்  போடுவதால்  மனம்  ஒருநிலைப்படுகிறது.
-- தினமலர், கோல மலர்.  12.12.12. 

Saturday, May 30, 2015

சோப்புகள்.

 சோப்புகளில்  டிஎப் எம்  76 %  என்று  போட்டிருக்கிறதே,  அதன்  அர்த்தம்:
     டோட்டல்  பேட்டி  மேட்டர்  என்பதன்  சுருக்கமே  டிஎப் எம்.  அதாவது  குளியல்  சோப்பில்  இருக்ககூடிய  கொழுப்பின்  சதவீதத்தை  குறிப்பதாகும்.
     நல்ல  தரமான,  நீடித்து  உழைக்ககூடிய,  நன்கு  அழுக்கு  நீக்கக்கூடிய  ஒரு  குளியல்  சோப்பின்  தரம்  அதில்  அடங்கி  உள்ள  கொழுப்பு  அளவு  76%  இருக்க  வேண்டும்.
     இப்படி  சோப்பில்  டிஎப் எம்  76 %  என்ற  குறிப்பு  இருந்தால்  அது  தரமான  நம்பர்  ஒன்  சோப்பு  என்று  பொருள்  கொள்ள  வேண்டும்.  சோப்பில்  60  சதவிகிதம் மற்றும்  அதற்கு  கீழ்க்  கொழுப்பு  சதவிகிதம்  இருந்தால்  அதன்  கிரேடு  3  ஆகும்.
--    தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.   

Friday, May 29, 2015

வங்கிகள்.

 வங்கிகளில்  பணம்  பரிவர்த்தனைகள்  எல்லாம்  செக்,  டிமாண்ட்  டிராப்ட்  மூலமாக  நடைபெறும்.
     இக்காலத்தில்  இணையதள  பயன்பாடு வந்த  பிறகு  வங்கிகளில்  இணையதள  சேவைகள்  நடைமுறைக்கு  வந்தன.  அவற்றில்  ஒன்று  ஆன்லைன்  இணையதள  பரிவர்த்தனையாகும்.
     ஆன்லைன்  வாயிலாக  மேற்கொள்ளப்படும்  பண  பரிமாற்றங்களில்,  தேசிய  மின்னனு  பணப்  பரிவர்த்தனை ( என்.இ.எப்.டி. )  பெரும்  பங்கு  வகிக்கிறது.  இது  போன்று  இன்னொரு  வசதிதான்  ஆர்டிஜிஎஸ்.  ரிசர்வ்  வங்கி  விதிமுறைகள்  படி  ஆர்டிஜிஎஸ்  சேவையில்  2  லட்சம்  முதல்  அதிகபட்சம்  5  லட்சம்  வரை  பணம்  பரிமாற்றம்  செய்யலாம்.
     என்.இ.எப்.டி.  சேவையில்  குறைந்தபட்சம்  இல்லை.  அதிகபட்சம்  5  லட்சம்.
---     தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.

Thursday, May 28, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  சூரியன்  ஒவ்வொரு  நாளும்  ஒரு  டிரில்லியன்  டன்  நீரை  ஆவியாக்குகிறது.
*  பண்டைய  சீனாவில்  நோயாளிகள்  குணமடைந்தால்  மட்டுமே  பணம்  வாங்கிக்கொள்வார்களாம்  மருத்துவர்கள்.
*  ஒரு  ஆலிவ்  மரம்  1,500  ஆண்டுகள்  வரை  உயிர்  வாழும்.
*  எறும்புகள்  மனிதர்களைப்  போலவே  தூங்கி  எழுந்தவுடன்  அன்றைய  வேலைகளை  செய்வதற்கு முன்  சோம்பல்  முறிக்கும்.
*  குழந்தை  பிறப்பதற்கு  ஏழு  வாரங்கள்  முன்பிருந்தே  கை  ரேகைகள்  உருவாகிவிடும்.
*  ஆஸ்திரியாதான்  முதன்முதலில்  தபால்  அட்டைகளை  பயன்படுத்திய  நாடு.
*  எந்த  உயிரையும்  அழிக்காமல்  கிடைக்கும்  ஒரே  இயற்கை  உணவு  பழங்கள்  மட்டும்தான்.
*  ஒரு  வண்னத்துப்பூச்சி  பறப்பதற்கு  அதன்  உடலின்  தட்பவெப்பம்  86  டிகிரிக்கும்  அதிகமாக  இருக்க  வேண்டும்.
*  இங்கிலாந்து  நாட்டில்  ஆங்கிலத்துக்கு  முன்பு  600  ஆண்டுகள்  அலுவல்  மொழியாக  பிரெஞ்சு  மொழி  இருந்தது.
--   தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.

Wednesday, May 27, 2015

எரிந்தும் எகிறும் எடை

  எல்லா  பொருட்களும்  எரிந்து  சாம்பலாகும்போது  எடை  குறையும்.  ஆனால்,  மக்னீஷியம்  இதற்கு  நேர்  எதிர்.  மக்னீஷியம்  எரியும்போது  எடை  அதிகரிக்கும்.  எரிந்தபின்  மிஞ்சும்  சாம்பல்,  எரிவதற்கு  முன்  இருந்த  பொருளின்  எடையை  விடவும்  அதிகமாயிருக்கும்.
அரசருக்கு  சிவப்பு.
     ஜப்பானில்  சிவப்பு  நிற  கார்களை  அரச  குடும்பத்தினர்  மட்டும்  பயன்படுத்துகிறார்கள்.
பறக்காத  காந்தி.
     காந்தியடிகள்  விமானத்தில்  பயணம்  செய்ததே  இல்லை.  அவரிடைய  தென்னாப்பிரிக்க  பயணம்,  இங்கிலாந்து  பயணம்  கப்பலில்தான்.  இந்தியப்பயணம்  யாவும்  ரயிலில்தான்.
தாஜ்மகாலும்  மோனாலிசாவும்...
     தாஜ்மகாலை  கட்டி  முடிக்க  ஷாஜகானுக்கு  22  ஆண்டுகள்  ஆனது.  மோனாலிசா  ஓவியத்தை  வரைய  டாவின்சிக்கு  3  ஆண்டுகள்  ஆனது.
---  தினமலர்,  பெண்கள் மலர்.  15.12.12. 

Tuesday, May 26, 2015

12.12.12.

  இன்று  12.12.12.  உலக  அதிர்ஷ்ட  தினம்!  இனி  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  பின்னரே  வரும்.
     ஆங்கில,  தமிழ்  மாதங்கள்  12.  ஆங்கில  நாடகாசிரியர்  ஷேக்ஸ்பியர்  எழுதிய  புகழ்  பெற்ற  நாடகத்தில்  ஒன்று,  12வது  இரவு. தமிழ்  வளர்த்த  திருமுறைகள்  12.  சிதம்பரம்  சிவகாமி  அம்மை  பற்றிய  பிள்ளைத்தமிழ்  12.  கலிங்கத்து  பரணியில்  சக்தியின்  வடிவம்  12.  வராகி  படிம  அமைதியில்  காணப்படும்  வகைகள்  12.  சூரியபகவான்  தேரில்  வர  அவருக்கு  முன்பாக  சாமரம்  வீசி  வரும்  அப்சரஸ்களின்  எண்ணிக்கை  12.  தேவிபாகவதத்தில்  ஸ்ரீசக்கர  கோட்டைக்கால்  பித்தளை  பிரகாரத்தில்  அமைந்துள்ள  சக்திகளின்  எண்ணிக்கை  12.  காளி  தேவிக்கு  ஏவல்  செய்ய  உடன்  உள்ள  யோகினிகளின்  எண்ணிக்கை  12.  குமரி  மாவட்டத்தில்  காணப்படும்  அம்மன்  கோயில்களின்  எண்ணிக்கை  12.  துவாதச  ஆதித்யர்கள்  சூரியனை  12  விதமாக  வலம்  வருகின்றனர்.
     சூரியனது  சக்கரத்தில்  காணப்படும்  ஆரக்கால்களின்  எண்ணிக்கை  12.  இது  கும்பகோணம்  நாகேஸ்வரன்  கோயில்  கருங்கல்  தேர்  சக்கரத்தில்  காணப்படுகிறது.  சிற்ப  கட்டடக்  கலைக்கு  புகழ்  பெற்ற  ஒடுஷா  மாநிலம்  கொணார்க்  சூரியன்  கோயிலில்  காணப்படும்  சக்கரங்களின்  எண்ணிக்கை  12.  கங்கைகொண்ட  சோழபுரத்தை  சோழ  மண்டல  தலைநகராக  ராஜேந்திரசோழன்  மாற்றியது  12ம்  நூற்றாண்டு.  நவக்கிரக  ராசிகள்  12.  இதுபோல  இன்னும்  பல  சிறப்புகள்  இன்றைய  தேதிக்கு  உள்ளன.
     இதற்கு  முன்பு  நாம்  கடந்துவந்த  10.10.10.  11. 11. 11.  என்று  முன்னோக்கியும்,  12  மாதங்கள்  மட்டுமே  இருப்பதால்  இனி  வரும்  ஆண்டுகள்  13.13.13.  14.14.14.  என்று  அமைய வாய்ப்பில்லை  என்பதாலும்  இன்றைய  தேதி  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  ஒருமுறைதான்  வரும்  என்பது  சிறப்புக்குரியது.
-- மோகன்ராஜ்  பெருந்தச்சன்,  தஞ்சை  தமிழ்ப்  பல்கலைக்கழக  சிற்பக்துறை  ஆராய்ச்சியாளர்.
-- தினமலர்,   12.12.12.