Monday, November 30, 2015

இணைய வெளியிடையே...

*  உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா!  கியூபாவில் 1000 பேருக்கு 6.7 மருத்துவர்கள் உள்ளனர்.
    ( இந்தியாவில் 0.6 தான் ).
*  சில எறும்புகள் துண்டு இலைகளை தமது இருப்பிடத்தில் புதைத்து மக்கச் செய்து புஞ்சைகளை வளர்த்து விவசாயம் செய்து
    சாப்பிடும் !
*  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று திரும்பியபோது அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனையிட்டார்களாம்!
   -- tamilfacts@twitter.com
*  தாத்தா உறவினர்களுக்கு ஆதரவாக இருந்தார் !  அப்பா ஆறுதலாக இருந்தார் !  நான் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்திக்
   கொள்கிறேன் !
   -- naiyandi @twitter.com
*  பிள்ளை பெற்றபோது அவள் அழுதாள்.  பில்லைப் பெற்ற போது நான் அழுதேன்.  # மருத்துவமனை.!
   --oruvan@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  ஞாயிறு,  6-4-2014.  

Sunday, November 29, 2015

ஐம்பூதங்கள்

  இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு ( வானம் ) ஆகியவை.
--  சூழல் மரபு. உயிர்மூச்சு .  டி.கார்த்திக் ஆதி
     ஐம்பூதங்களின் அடிப்படையில்தான் இந்தப் பூவுலகும், அதில் உள்ள உயிரினங்களும் தோன்றின என்பது தமிழர் கோட்பாடு. இது அறிவியல்பூர்வமானது.  தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம், இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.  இந்தியத் தத்துவ மரபில் இரண்டு போக்குகளைக் காணலாம்.  ஒன்று அறிவைப் பரவலாக்குவது.  மற்றொன்று அறிவைத் தடை செய்வது.  தமிழ் மரபு அறிவைப் பரவலாக்கும் பணியைச் செய்தது.  ஐம்பூதங்களின் தன்மையை, இயல்பை ஆராய்ந்த நூல் தொல்காப்பியம்.  அதனால்தான் தொல்காப்பியருக்கு ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என்று பெயர்.  மேலும் விசும்பை ( வானம் ) தமிழ் மரபு மட்டுமே ஐம்பூதமாக ஏற்றுக்கொண்டிருந்தது.
-- பேராசிரியர் நெடுஞ்செழியன்.
     ஐம்பூதம் என்பது முழுக்கத் 'தமிழ்க் கொள்கைதான்.  பூ என்றால் பூத்தல்.  விரிதல் என்று பொருள். சங்க இலக்கியத்தில் பூ என்ற சொல் 33 இடங்களில் வருகிறது.
-- சூழலியல் எழுத்தாளர் பாமயன். ( நிலம் ).
    மண்ணுக்கு மேல்தான் உயிர்கள் வாழ்வதாக நினைக்கிறோம்.  இது தவறு.  மண்ணுக்கு மேல் இருப்பதைப் போல அடியில் 100 மடங்கு நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
-- அரச்சலூர் செல்வம், இயற்கை விவசாயி. ( நிலம் ).
     தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது.  தண்ணீரை வியாபாரிகள் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.  நம்முடைய நிலத்தில் இருந்து எடுத்த தண்ணீரை, நமக்கே விற்றுக் கோடி கோடியாகத் தனியார் பெரு நிறுவனங்கள் லாபம் பார்த்து வருகின்றன.
--- சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.  ( நீர் ).
     காஞ்சிபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பாக்கம் என்ற பெயரில் நிறை ஊர்கள் உண்டு.  பாக்கம் என்றால் நீர் மிகுந்த பகுதி என்று பொருள்.  ஆனால் இப்போதோ சென்னையில் எங்கும் தண்ணீர் கிடையாது.
--- பேராசிரியர் சாமுவேல் ஆசிர்ராஜ்.  ( நீர் ).
     நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் - எரிசக்தி ஆதாரங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் தீர்ந்து போகக் கூடியவை.  பெட்ரோல் 29-30 ஆண்டுகளிலும், நிலக்கரி 100 ஆண்டுகளிலும் தீர்ந்து போய் விடக்கூடும்.  காற்றாலை மின்னுற்பத்திதான் மின்சாரம் குறைந்த சமூகப் பாதிப்பைக் கொண்டிருக்கிறது.
--- பொறியாளர் சி.இ. கருணாகரன்.  ( நெருப்பு ).
     வெப்பம் மனிதர்களுக்கு மிகவும் அவசியம்.  எப்போது உடலில் வெப்பம் குறைகிறதோ, உடல் சில்லிடுகிறதோ அப்போது மனிதன் இறந்து விடுகிறான்.  பூமியில் முதன்முதலில் மழை பெய்தபோது மரமே கிடையாது.  மனிதர்கள் மரங்களை நடுவதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இயற்கை இல்லை.  அதை மனிதர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
---திரைப்பட இயக்குநர் ம. செந்தமிழன்.  ( நெருப்பு ).
    நம் அண்டை மாநிலமான கேரளாவில் மணல் எடுக்க முடியாது.  ஆனால்,தமிழகத்தில் மணல் வியாபாரிகள்தான் அரசியல் கட்சித் தலைவர்களாக உள்ளனர்.
--- கி.வெங்கற்றாமன், தமிழர் உழவர் முன்னமி ஆலோசகர்.  ( காற்று ).
    பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடு.  இதில் 2 டிகிரி செ.கி. அதிகரித்தாலும் உலகில் பல்வேறு பிரச்னைகள் வந்து விடும்.  அதைத்தான் புவி வெப்பமடைதல் என்கிறார்கள்.  புவி வெப்பமடைந்தால் என்னவாகும்?  துருவப்பிரதேசங்களில் பனிப்பாறைகள் கரைந்து, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.  கடலோரப்பகுதிகள் நீரில் மூழ்கும்.
--- சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன்,  ( விசும்பு - வானம் ).
--- சூழல் மரபு. உயிர்மூச்சு .
--  'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 11, 2014.  

Saturday, November 28, 2015

மிருகம் விரட்டுங்கள்!

  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி கோபம்.  அதை தவிர்த்தாலே நினைத்ததை சாதிக்கலாம்.  சிடுமூஞ்சியானாலும் கோபத்தை
தவிர்க்க வழியுண்டு.  இதோ...
1.  தொடர்ந்து இயற்கை உணவுகளை சாப்பிட்டுப் பழகலாம்.
2.  தியானம், சாந்தி ஆசனம் செய்யலாம்.
3.  ஒன்று முதல் 10 வரை எண்ணலாம்.
4.  தண்ணீர் குடிக்கலாம்.
5.  கோபத்துக்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதலாம்.
6.  பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடிக்கலாம்.
7.  கோபம் வரும்போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடியில் பார்க்கலாம்.
8.  கோபத்துக்குக் காரணமான சொல், செயல், எண்ணத்தை மாற்றலாம்.
9.  கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
10. நீர்வீழ்ச்சியில், ஷவரில், தொட்டியில் குளிக்கலாம்.
11. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
     இவற்றை கடைபிடித்தால் எவ்வளவு பெரிய கோபக்காரரும் சாந்த சொரூபியாகி விடுவார்.  அப்புறம் என்ன?  கோப உணர்ச்சிகளால் ரத்த அழுத்தம், கண் சிவப்பு, அமில சுரப்பு, வயிற்றுப்புண் போன்ற நோய்களும், மிருக குணமும் நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 23-2-2014. 

Friday, November 27, 2015

வண்ண டைல்ஸ்கள்

 முன்பு குளியல் அறைக்குக்கூட வழுக்கக்கூடிய டைல்ஸ்களையே பயன்படுத்தப்பட்டன.  இப்போதோ அக்குபஞ்சர் மற்றும் கிரிப்பர் வகை டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான டைல்ஸ்களில் ஷாம்பு கொட்டியிருந்தால்கூடக் கால் வைத்தாலும் வழுக்காது.
     வீட்டின் முகப்புப்பகுதியில் ஒரே வண்ணத்தில் டைல்ஸ் பதிக்கும் வழக்கமே முன்பு இருந்தது.  தற்போது ஸ்டைலான, கலர்ஃபுல்லான டிசைகளில் டைல்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.  போர்டிகோ பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் போதும், நடக்கும் போதும் பிடிமானம் இருக்கும் வகையில் சொரசொரப்பான டெரகோட்டா வகை டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.
     வீட்டின் உள் பகுதிக்கு மங்கலான நிறம் கொண்ட டைல்ஸ் பயன்படுத்தப்பட்ட காலம் மாறிப் பளிச்சிடும் வண்ணங்களில் டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.  சுமார் 1000 சதுர அடி பரப்பில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு 500 முதல் 600 டைல்ஸ்கள் தேவைப்படும்.  சமையல் கூடத்திற்குச் சிம்னி உயரம் வரை வால் டைல்ஸ் பதிக்க வேண்டும்.
     வரவேற்பறை, சமையலறை, பூஜையறை, படுக்கையறை, படிக்கும் அறை என அனைத்துக்கும் தனித்தனி டைல்ஸ்கள் இன்று விற்பனைக்கு உள்ளன.  ஆனால், டைல்ஸ்களில் சீதோஷ்ண நிலையின் தாக்கம் கணிசமாகத் தெரியும்.  கோடைகாலத்தில் உள் கூடங்களில் டைல்ஸ் சற்று சூடாகத் தெரிவதும், குளிர்காலத்தில் குளிர்ச்சியாகத் தெரிவதும் டைல்ஸ்களில் உள்ள ஒரு குறைபாடு.
     மொட்டை மாடியில் பதிக்கவும் இன்று நிறைய டைல்ஸ்கள் சந்தைக்கு வந்துவிட்டன்.  இவற்றில் உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்ளும் டைல்ஸ்களும் அடங்கும்.
-- மகேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, பிப்ரவரி 22, 2014.  

Thursday, November 26, 2015

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை.  ஐக்கிய அரபு நாடுகள் 'பத்வா'.
     நெதர்லாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம், செவ்வாயில் குடியிருப்பை உருவாக்கி அங்கு மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றச் செய்யும் ஒருவழி பயணமான 'மார்ஸ் ஒன்' திட்டத்தை அறிவித்துள்ளது.  இதற்காக உலகம் முழுவதும் உள்ள மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, முதற்கட்ட தேர்வும் முடிந்துள்ளது.  இந்த திட்டத்தின் மூலம், வரும் 2024 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர், ஒரு வழி பயணமாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
     இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு செல்வது இஸ்லாமுக்கு எதிரானது என ஐக்கிய அரபு நாடுகளின் இஸ்லாமிய விவகார மற்றும் அறக்கட்டளையின் பொது அதிகார குழு 'பத்வா' விடுத்துள்ளது.
     இதுகுறித்து குழுவின் தலைவர் பரூக் அமதா கூறுகையில், 'செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழி பயணமாக செல்வது பாதுகாப்பு இல்லாதது.  தற்கொலைக்கு சமமானது.  ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது இஸ்லாமுக்கு எதிரானது.  எனவே, மார்ஸ் ஒன் திட்டத்துக்கு பத்வா விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
     சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்து 500 க்கும் அதிகமானோர், மார்ஸ் ஒன் திட்டத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--  தினமலர். 23-2-2014. 

Wednesday, November 25, 2015

இணைய வெளியிடையே...

*    தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்?  அப்போ இது உங்களுக்குத்தான்...
     யாராவது அறிவுகெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ளக்கூடாது.  அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள்.  அறிவு +Get + வனே.  Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம்.  ஆக, அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும்.
     நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே.  அந்த வார்த்தையையும் பிரியுங்கள்.  விளங்கு + ஆதவனே.  அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம்.  ஆதவன் என்றால் சூரியன்.
     மேலும் திட்ட பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு.  அதையும் பிரிப்போம்.  தண்டம் + சோறு.  தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம்.  Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு.  ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும்.
    -- sowmya @ twitter.com
*   வயதான காலத்தில் சிலருக்கு விலங்குகள் வாரிசாகவும், வாரிசுகள் விலங்காகவும் மாறிவிடுவது விந்தை!
    - arun @ twitter.com.
*  யானை என்ற வார்த்தையில் 'னை' யே யானையின் உருவத்தை ஒத்திருப்பது அழகு!
   -- girl @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 23-2-2014. 

Tuesday, November 24, 2015

மரம் இல்லாத கதவுகள்

  வீட்டுக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?  கதவுதான்.  வீட்டு வாசல்கள் அழகாக இருப்பதில் கதவுகளுக்கும் முக்கிய இடம் உண்டு.  அழகிய அம்சம் சார்ந்த வாசல் கதவுகள் தற்போது கண்ணாடி இழைகள் மற்றும் ரீஇன் டோர்ஸ்டு பிளாஸ்டிக்கிலும் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.
     மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறன.  தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது.  எனவே, விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிட கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட  பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்னாடி இழை கதவுகளைப் பயன்படுத்தலாம்.  இவற்றின் விலை குறைவு.  மேலும் கண்ணைக்கவரும் வகையில் பல டிசைங்களிலும் கிடைக்கின்றன.
     அசல் மரக்கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும்.  மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும்.  மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும்.  ஆனால், கண்னாடி இழை கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை.  100 சதவிகிதம் வாட்டர் ஃபுரூப்புடன் எல்லா சீதோஷ்ண நிலைகளையும் தாங்கக்கூடியவை.
     குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும்.  குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைங்களிலும், வண்ணங்களிலும் வடிவமைக்கலாம் என்கின்றனர் கட்டுநர்கள்.
-- மிதிலேஷ்.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி,பிப்ரவரி 15,2014.