Wednesday, August 31, 2016

ஸ்மார்ட் போன்

   ஸ்மார்ட் போனில் பேட்டரி டக் டக்கென்று தீர்ந்து விடுவது இப்போது எல்லாருக்குமான பொதுப் பிரச்சனையாகவே ஆகிவிட்டது.  முக்கியமான நேரங்களில் கரெக்டாக பேட்டரி டெட் ஆகி சொதப்பி பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும்.  இதற்கு தீர்வாக யோட்டா என்னும் ரஷிய நிறுவனம் ஒரு புது வகை டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறது.  இது என்ன?  பொதுவாக மொபைல் ஃபோனின் பெரும்பாலான பேட்டரி பவர் அதன் டிஸ்பிளே, வைஃபை, மற்றும் பிரவுசிங்கில் தான் அதிகம் செலவாகிறது.  இதனால், 'இன்க் கேஸ் பிளஸ் என்னும் ஒரு கறுப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட ஒரு கேஸை மொபைலின் பின்னே பொருத்திவிட்டால் போதும் - பேட்டரி 20 சதவீதத்துக்கும் கீழே குறையும் போது போனில் மெயின் கலர் டிஸ்பிளேவை ஆப் செய்து பின்னால் உள்ள கறுப்பு வெள்ளை டிஸ்ப்பிளேயை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபலை கூடுதலாக 6 - 8 மணி நேரத்திற்கு உபயோகிக்க முடியும்.  ஆப்பிள் / சாம்சங் மொபைலுக்கு இன்க் பிளஸ் கேஸ் ஏற்கனவே ரெடி.  அனேக மொபைல் மாடல்களுக்கு இந்த கேஸை தயாரிக்க ஆரம்பித்து விட்டதாம் இந்த கம்பெனி.
-- ரவி நாகராஜன்.  டெக் மார்கெட் ( அறிவியல்...மருத்துவம்... தொழிநுட்பம் )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 20-7-2014. 

Tuesday, August 30, 2016

மார்பிள்

மார்பிள் கறையைப் போக்க...
     மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த முறை பேக்கிங் சோடாவைக் கொண்டு துடைப்பதுதான்.  வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து, மார்பிளில் உள்ள கறைகளை முற்றிலும் நீக்கிவிட முடியும்.  இன்னொரு முக்கியமான விஷயம் டூத் பேஸ்ட் மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்க உதவுகிறது.  டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.  தேய்த்த பிறகு ஈரமான துணியை வைத்து அந்த இடத்தைத் துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.  எலுமிச்சைப் பழத்தில் உள்ள சாறு கொண்டும் இதைச் சுத்தப்படுத்தலாம்.  பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தையும் மார்பிள் துடைக்கப் பயன்படுத்தலாம்.  ஆனால் கடினமான சோப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  அது மார்பிள் தரைக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
-- சொந்த வீடு.  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி. ஆகஸ்ட் 2. 2014.    

Monday, August 29, 2016

கொசுக்கள்

    உலகில் பாலைவனம் தவிர கொசுக்கள் இல்லாத இடங்களே இல்லை.  14 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமல்ல ; ஆர்டிக் பிரதேசத்திலும்கூட கொசுக்களின் ரீங்காரம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
     இந்தக் கொசுவின் வாய் குழல் வடிவில் நீண்டு தையல் ஊசிபோல் அமைந்திருக்கும்.  முனியில் ஒரு சிறிய ரம்பமும் இருக்கிறது.
பெண் கொசுக்கள் நமது உடலில் மென்மையாய் அமர்ந்து, ரம்பத்தால் ஒரு நுண்ணிய துளையை போடுகிறது.  அதன்பின் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்ற ஊசியை உள்ளே நுழைக்கிறது.  ஒரு குழல் வழியே எச்சிலை உள்ளே செலுத்தி, மறுகுழல் வழியே ரத்தத்தை உறிஞ்சுகிறது.  இந்த எச்சில் நம் ரத்தத்தை உரிஞ்சும்போது உறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
     இப்படி தடையில்லாமல் ரத்தத்தைக் கொசு உறிஞ்சிக் கொண்டேயிருக்கும்.  வயிறு நிரம்பிய பிறகு உபரி ரத்தம் குதம் வழியே வீணாக வழிந்துகொண்டிருக்கும்.
      இதில் ஆச்சரியம் என்னவெனில், பெண் கொசுக்கள்தான் இப்படி ரத்தத்தை உறிஞ்சும் வேட்டைகளில் ஈடுபடுகின்றன.  ஆனால் ஆண் கொசுக்களுக்கு இத்தகைய போர்க்குனம் கிடையாது.  சுத்த சைவம்.  பூ, பழம் மற்றும் மொக்குகளில் கிடைக்கும் திரவம்தான் தினசரி உணவு.  ஆண் கொசுக்களுக்கு ரத்த வாடை என்றால் அலர்ஜி!
-- டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்.  ஆச்சரியங்கள் 1000.
--  தினமலர். சிறுவர்மலர். ஜூலை 25, 2014.