Thursday, April 30, 2009

விஞ்ஞானிகள் !

--- உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் , துப்பாக்கி சுடுவதில் கில்லாடி . முதல் உலகப் போரின் சமயம் , குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர்காத்தார் .
--- புவிஈர்ப்பு சக்தியை ஆப்பிளினால் அறிந்த ஐசக் நியூட்டனுக்கு , அவருடைய அம்மாவோ , அப்பாவோ எதுவுமே சொல்லித் தந்ததில்லையாம் . காரணம் , நியூட்டன் பிறப்பதற்கு மூன்று மாதம் முன்பே அப்பா காலமானார் . நியூட்டனின் மூன்றாம் வயதில் அவரைப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு , அம்மா மறுமணம் செய்துகொண்டு தொலைதூரம் போய்விட்டார் .
--- சாளேஸ்வரக்காரர்களின் வரப்பிரசாதமாக மூக்குக் கண்ணாடி கண்டுபிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் , நாணயங்களை மட்டுமே நம்பியிருந்த இந்த உலகத்தைத் தைரியமாக ரூபாய் நோட்டுக்கு மாறவைத்த பெருமைக்கும் உரியவர் . பின்னே... சுலபத்தில் கள்ளநோட்டு தயாரிக்க முடியாத அளவுக்கு ஒரிஜினல் அமெரிக்க டாலரைத் தயாரிக்கும் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவராச்சசே . ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இன்றும் அமெரிக்க மக்கள் போற்றும் அன்புத் தலைவர் இவர் .
--- ' குரங்கில் இருந்து வந்தவன்தான் மனிதன் ' என்று நம் பூர்வீகத்தைத் சொன்ன சார்லஸ் டார்வினுக்கு மொத்தம் பத்து குர... ஸாரி , குழந்தைகள் ! விஞ்ஞானி என்றாலே குடும்ப விஷயத்தில் விட்டேத்தி என்பது இவரைப் பொறுத்தவரை பொய் ! நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் முடித்திருந்ததால் , தன் குழந்தைகளுக்கு லேசாகக் காய்ச்சல் வந்தால்கூட பதறிப் போய் , அவர்கள் பக்கத்திலேயே இருப்பார் . பத்தில் இரண்டு குழந்தைகள் அல்பாயுசில் இறந்துபோனது இவரால் தவிர்க்க முடியாத சோகம் .
--- தற்போதைய கம்யூட்டரின் மூல விதையான டிஃபரன்ஸ் இஞ்சினை வடிவமைத்த சார்லஸ் பேபேஜூக்கு எட்டாவது வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது , சிறுவனைக் கட்டாயப்படுத்தி அதைப்படி , இதைப்படி என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்காதீர்கள் என்று டாக்டர்கள் புத்தி சொன்னார்களாம் . ஆக , ' ஃப்ரீயா வுடு மாமே ' தத்துவத்தில் வளர்ந்தாலும்கூட , குழந்தைகள் மகா புத்திசாலியாக இருக்கும் என்பதற்கான உதாரணம் இவர் .
--- மோனலிஸா ஓவியம் தந்த லியனார்டோ டாவின்சி ஒரு சூப்பர் விஞ்ஞானியும் கூட ! விமானமே கண்டுபிடிக்காத காலகட்டத்தில் பாராசூட் பற்றிக் கற்பனை செய்தவர் ! அறிவியலின் மீதிருந்த தாகத்தால் , மதகுருமார்களின் கட்டுப்பாடுகளை மீறி , கல்லறையில் புதைக்கப்பட்ட சடலங்களை ரகசியமாகத் தோண்டி எடுத்து , மனித உடற்கூறுகளை அறுத்துப் பார்த்துப் படமாக வரைந்து வைத்துவிட்டுப் போனார் டாவின்ஸி !
--- சார்பியல் தத்துவத்தைச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் , ஆரம்பத்தில் காப்புரிமை ஆபீஸில் கிடைத்த சாதாரண உத்தியோகதையே ஆசையாகப் போய் ஏற்றுக்கொண்டார் . பிற்பாடு உலகமே கொண்டாடும் விஞ்ஞானியாக அவர் உருவெடுத்த பிறகு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிகூட அவருக்கு தங்கத் தட்டில் வைத்து நீட்டப்பட்டது . அதை அவர் ' ஜஸ்ட் லைக் தட் ' மறுத்தது வேறு விஷயம் !
--- மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞானி மட்டுமின்றி , பக்கா வியாபாரி . அவர் தொழிற்சாலையில் புதுமை கண்டுபிடிப்புகள் மெகா புரொடக்க்ஷன் ஆகி , லாபம் குவிந்தது தனிக் கலை , ' ஜெனரல் எலெக்ரிக் ' உட்பட 14 கம்பெனிகளைத் தோற்றுவிக்கக் காரணமாக விளங்கிய எடிசன் , சின்ன வயதிலேயே ரயிலில் மிட்டாய் -- காய்கறி -- பேப்பர் விற்ற அனுபவம் கொண்டவர் .
---ஆனந்தவிகடன் . 28 - 01 - 2009

Wednesday, April 29, 2009

கேட்டவனும் , கேட்காதவனும் .

" என் தாத்தா பீஷ்மர்மீது நான் எப்படிப் பாணங்களைப் போடுவேன் ! என் குரு துரோணரை நான் எப்படிக் கொல்லுவேன் ? இவர்களைக் கொல்லுவதைவிட , இந்த உலகில் பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை சிறந்தது " என்கிறான் அர்ஜூனன் .
இந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதையை உபதேசிக்கிறான் . " உன் கடமையைச் செய் . உன் கடமையைச் செய்யும்போது உற்றார் , உறவினர் என்றெல்லாம் பார்க்காதே " என்கிறான் .
இருந்தும் , போரில் முதல் நாலைந்து நாட்களுக்கு அர்ஜுனன் பீஷ்மரைப் பலமாகத் தாக்க நடுங்குகிறான் . பீஷ்மர் விட்ட பாணங்களையெல்லாம் தம் மீது வாங்கிக்கொண்டு , கண்ணன் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட நின்ற பிறகுதான் அர்ஜுனனுக்கு ஆவேசம் பிறக்கிறது . மூர்க்கத்தனமாக சண்டை போட ஆரம்பிக்கிறான் .
இது கேட்டவன் , அதாவது கீதையைக் கேட்டவன் !
ஆனால் கீதையைக் கேட்காதவன் , அதுதான் கர்ணன் எப்படி நடந்துகொள்லுகிறான் என்று பாருங்கள் .
யுத்த ஆரம்பத்திலிருந்தே கர்ணனுக்கு பஞ்சபாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பது தெரியும் . தெரிந்தும் , அவன் மூர்க்கத்தனமாகவே அவர்களைத் தாக்கினான் . கடனையைச் செய்யும்பொழுது உற்றார் , உறவினர் என்று பார்க்கக்கூடாது என்ற கீதையின் கோட்பாட்டை அறியாமலேயே அவன் பின்பற்றுகிறான் .
தர்மம் தலை காக்கும் என்று சொல்லுவார்கள் . அது போலவே அர்ஜுனனின் பாணங்கள் அவனைக் கொல்லமுடியாதபடி அவன் செய்த புண்னியம் அவனைக் காப்பாற்றுகிறது . அதைக்கண்ட கண்ணன் , அவன் புண்ணியத்தையும் , ஒரு கிழ , அந்தணர் உருவில் சென்று யாசகமாகக் கேட்டுப் பெறுகிறான் . கர்ணன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் ரத்தத்தைக்கொண்டே தாரை வார்த்துக் கொடுக்கிறான் .
இந்த இரு செயல்களையும் பாராட்டி கண்ணன் இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டார் .
-- புலவர் சிதம்பரம் சுவாமினாதன் . சென்னை அமைந்தகரை , அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து . மே 29 . 1990 .

Tuesday, April 28, 2009

சுற்றுலாவின் வகைகள் 'அபாப்டோசிஸ்'---.

அலையகச் சுற்றுலா , மலையகச் சுற்றுலா , கலையகச் சுற்றுலா , வரலாற்றுச் சுற்றுலா , வர்த்தகச் சுற்றுலா , மருத்துவச் சுற்றுலா , மனமகிழ்ச் சுற்றுலா , ஆய்வுச் சுற்றுலா , ஓய்வுச் சுற்றுலா , பண்பாட்டுச் சுற்றுலா , பாரம்பரியச் சுற்றுலா , சுற்றுச்சூழல் சுற்றுலா , சுறுசுறுப்புச் சுற்றுலா , இலக்கியச் சுற்றுலா , இதிகாசச் சுற்றுலா , கல்விச் சுற்றுலா , தொல்லியல் சுற்றுலா , ஆன்மிகச் சுற்றுலா , சமயச் சுற்றுலா , கானகச் சுற்றுலா , ஊரகச் சுற்றுலா , விளையாட்டுச் சுற்றுலா , வீரதீரச் சுற்றுலா , சாகசச் சுற்றுலா , புனைவியல் சுற்றுலா , பொழுதுபோக்குச் சுற்றுலா , அருவிச் சுற்றுலா , ஆரவாரச் சுற்றுலா , பண்டிகைச் சுற்றுலா , பலகாரச் சுற்றுலா என்று எண்ணற்ற சுற்றுலாக்கள் உள்ளன .
-- இறையன்பு . தி.ம. 14 -01 - 2009 .
'அபாப்டோசிஸ்'---
நம் முதுமையை நிர்ணயிக்கும் ' அபாப்டோசிஸ் ' என்ற என்சைம் எனும் புரதப்பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ம் தேதி கண்டுபிடித்தனர் . என்சைம் ( நொதி அல்லது நொதியம் ) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கியாகும் .
உடலில் உள்ள எல்லா செல்களின் இயக்கத்திற்கும் இது அவசிய தேவையாகும் . என்சைம்கள் இல்லாவிட்டால் , சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு மெதுவாகவே நடக்கும் . மெதுவான செயல்பாட்டால் மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ இயலாது .
நம் உடலில் 1000க்கும் மேலான வெவ்வேறு வகை என்சைம்கள் உருவாகி செயல்படுகின்றன . இன்று வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 4 ஆயிரம் உயிர் - வேதியியல் வினைகளுக்கு என்சைம்கள் அடிப்படையாக உள்ளன . செடி கொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது போல மனிதர்களின் உடலில் உணவு செரிப்பது , மூளை இயங்குவது , இதயம் துடிப்பது , மூச்சு விடுவது ஆகிய அனைத்துக்குமே என்சைம்கள் இன்றியமையாதவையாகும் .
சர்க்கரைக் கரைசலை ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரியை கொண்டு லூயி பாஸ்ச்சர் என்பவர் நொதிக்கவைத்து ஆல்கஹாலாக மாற்றினார் . ஆல்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட் செல்கள் உயிர்ப்புடன் இருந்ததுதான் என்று கண்டுபிடித்தார் .
அபாப்டோசிஸ் என்னும் என்சைம் குறைபாட்டால் நம் உடலில் உள்ள செல்கள் தினமும் இறக்கின்றன . இதனால் சீக்கிரம் முதுமை ஏற்படுகிறது என்பதை அறிஞ்ர்கள் கண்டுபிடித்தனர் .
இந்த என்சைம்கள் நம் உடலில் சரியான அளவில் இருந்தால் முதுமை அடைவது தள்ளிப்போகிறது என்றும் கண்டுபிடித்தனர் . இந்த ஆய்வு முடிவை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அறிவித்தார் . தி.ம. 14 -01 -2009 .

Monday, April 27, 2009

உறுதிமொழிகள் ! செல்லாது !

'டாப் 10 ' உறுதிமொழிகள் !
1 . தீவிரவாதத்தை அழிக்கும் ' தீ 'யாக நான் திகழ்வேன் .
2 . புதைப்போம் தீவிரவாதத்தை ! விதைப்போம் தேசப்பற்றை ! காப்போம் தேசத்தை !
3 . தாயைப் பழித்தவனை விடேன் ; எம் தேசத்தை பங்கப்படுத்துபவனை விடேன்...விடேன் ...
4 . தேசத்தாயின் கருவறையில் தான் பிறந்தேன் . தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியேற்பேன் .
5 . நேசம் வளர்ப்போம் , நாசம் தவிர்ப்போம் , தேசம் காப்போம் .
6 . சுவாசிக்காமல் கூட இருப்பேன் ; என் தாய் நாட்டை நேசிக்காமல் இருக்கமாட்டேன் .
7 . தீவிரவாத முள் மரத்தை என் கைகளால் வெட்டி வேரறுப்பேன் .
8 . மதத்தின் பெயரால் , மனதால் விலங்காய் மாற மாட்டேன் .
9 . எனது தாயையும் , எனது நாட்டையும் தெய்வமாக போற்றுவேன் .
10. வேரறுப்போம் தீவிரவாதத்தை ; விதைப்போம் சகோதரத்துவத்தை ... தி.ம. சிறு. மல .ஜன . 16 . 2009 .
இது செல்லாது !
குற்றவாளிகளிடம் இருந்து உண்மையை வரவழைக்க , ' உண்மை கண்டறியும் சோதனை ' என்ற பெயரில் குற்றவாளியை மருந்து மூலம் மயக்கம் அடையச் செய்து மயங்கிய நிலையில் கேள்விகளை திரும்ப , திரும்ப கேட்டு தகவல்களை பதிவு செய்கிற முறை இந்தியாவில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது . இதை ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' என்று கூறுவர் . தென்னிந்தியாவில் இப்போது பெங்களூரில் இந்த மையம் உள்ளது . சென்னையில் மையம் துவக்கப்பட உள்ளது . இந்த உண்மை கண்டறியும் சோதனை பயனற்றது , நம்பகத்தன்மை அற்றது எனக்கூறி அமெரிக்கா 30 ஆண்டுகளுக்கு முன்பே இதை தடை செய்துவிட்டது . இந்த முறை இந்திய அரசியல் அமைப்பின் 20 (3) ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதால் செல்லாது என ஐகோர்ட் கூறியுள்ளது . மேலும் , இந்திய தண்டனைச் சட்டம் 126 பிரிவு 2-ல் குற்றவாளி பதில் கூறாமல் மவுனம் காக்கும் உரிமையை வழங்கியுள்ளது .
எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் சுயநினைவுடன் எழுதும் உயில்தான் செல்லும் என்பது சட்டம் . அப்படியிருக்க சுயநினைவு தவறிய நிலையில் கூறுவது எப்படி செல்லுபடியாகும் . மேலும் , உலகின் எந்த அறிவியல் அமைப்பும் ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' முறையின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவே இல்லை . நம் நாட்டின் தடயவியல் விஞ்ஞானி சந்திரசேகரனும் இதையே கூறியுள்ளார் . எனவே , உதவாத , மனிதௌரிமைக்கு எதிரான , அடிப்படை உரிமைக்கு மாறான இந்த முறையை கைவிட வேண்டும் .
--ஆர். டி. மூர்த்தி , திருவையாறு . தி.ம. 13 - 01 - 2009 .

Sunday, April 26, 2009

யோஜனை ! சலுகை ! கொட்டாவி !

விருந்தாளிகளுக்கு உபசரிப்பதற்காக ஒரு தட்டில் நாலைந்து ஜூஸ் டம்ளர்களை அல்லது தண்ணீர் டம்ளர்களை வைத்து எடுத்துச் செல்கிறீர்கள் . நடையின் அசைவில் ஜூஸ் அல்லது தண்ணீர் தளும்பி வழிகிறதா ? கவலை வேண்டாம் . ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு ஸ்பூன் போட்டு எடுத்துச் செல்லுங்கள் : தளும்பாது .
தம்பிகளுக்கே சலுகை !
ராமாயணத்தில் பட்டம் கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தம்பிகளாகவே இருப்பதைக் காணலாம் .
ராமன் காட்டுக்குச் செல்ல , தம்பி பரதனுக்குதான் முதலில் அரசாளும் உரிமை வருகிறது .
வாலி வதத்திற்குப் பிறகு , தம்பி சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாகிறான் .
ராவண வதத்திற்குப் பிறகு , ராவணனின் தம்பி விபீஷணன் இலங்கையின் அரசனாகிறான் .
-- ரகோத்தமாச்சார் சொற்பொழிவிலிருந்து .
ஆ.வி .21 - 01 - 2009 .
கொட்டாவி !
குழந்தை தாயின் வயிற்றில் 20 வாரக் கருவாக இருக்கும் போதே கொட்டாவி விடுவது தொடங்கிவிடுகிறது .
ஒவ்வொரு கொட்டாவியும் சுமார் 6 லிருந்து 7 நொடிகள் வரை நீடிக்கிறது . அப்போது இதயம் 30 தடவைகளுக்கு மேல் அதிகமாக துடிக்கிறது என்றும் கண்டுபிடித்தனர் . பிறகு , பறவைகள் , விலங்குகள் , மனிதர்களின் கொட்டாவிகளைத் தொடர்ந்து கண்காணித்ததில் விஞ்ஞானிகள் கண்ட உண்மை : கொட்டாவி மூளையின் வெப்பத்தை கட்டுப்படுத்தி , அதனைக் குளிர்விக்கிறது என்பதே . கொட்டாவியை ஒரு ' தெர்மோ ரெகுலேட்டர் ' என்கிறார்கள் விஞ்ஞானிகள் . ரத்த ஓட்டத்தைக் குளுமைப்படுத்தி மூளையையும் அதன் மூலம் ' கூல் ' படுத்துகிறதாம் கொட்டாவி .

Saturday, April 25, 2009

அரச மரம் ! முன்னோர்கள் !

மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
தி. ம . பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .
முன்னோர்கள் !
காக்கைக்கு உணவு இடுவது ஏன் ?
இறந்து போன முன்னோர்கள் எந்தப் பிறவியில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது .
தெய்வமாக இருக்கலாம் , யாகம் மூலம் ப்ரீதி செய்கிறார்கள் . மனிதராக இருக்கலாம் , மனிதரை அமர்த்தி வணங்கி உணவிடுகிறார்கள் . பறவையாகவோ , விலங்காகவோ பிறந்திருக்கலாம் , வாயசம் எனப்படும் காக்கைதான் பித்ரு சொரூபம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது . எனவே , காக்கைக்கு உணவிடுகிறார்கள் . ரிஷியாக இருக்கலாம் , அர்க்யம் கொடுத்து வழிபடுகிறார்கள் . முன்னோர் பித்ரு லோகத்திலேயே இருந்தால் தர்பணம் அவர்களைச் சென்றடைகிறது . கீழே சிந்தும் எள்ளும் , தர்ப்பையும் அவர்கள் பைசாசமாக இருந்தால் அவர்களைச் சென்றடைகிறது என்பது சாஸ்திரம் . எனவெதான் திவச நாட்களில் காக்கைக்கு உணவிடுகிறோம் .
கயா முதலிய இடங்களில் செய்யும் விசேஷத் திவசத்தில் விஷ்ணு பாதத்துக்கு பிண்டமிடுவதற்கு முன் ஒரு தனி உருண்டையைக் காக்கைக்கு இடுவார்கள் .
-- மானஸ தெவதா . --- தி. ம. பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .

Friday, April 24, 2009

தாலி ,YAHOO ,அபூர்வ மனிதர் !

' அடுக்களைத் தாலி '
இரண்டாம் , மூன்றாம் தாரமாக , கிழவர்கள் ரகசியமாக இரவில் தாலி கட்டிக் கூட்டி வருவார்கள் . அதற்கு ' அடுக்களைத் தாலி ' என்று பெயர் . தாலி எனில் தமிழில் கீழாநெல்லி என்றும் மட்பாண்டம் என்றும் பொருள் தருவது . தாலி என்பது ஒரு பாக்கியமாகக் கருதப்படுகிறது . தாலி பாக்கியம் என்பதும் தாலிப் பிச்சை என்பதும் தமிழ் வழக்குகள் .
YAHOO !
' YET
ANOTHER
HIERARCHICAL
OFFICOUS
ORACLE '
இதுதான்
YAHOO வின்
விரிவாக்கம் .
அபூர்வ மனிதர் !
கோல்கட்டாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தேவேந்திர ஹார்னோவுக்கு கைகளில் 12 விரல்களும் , கால்களில் 13 விரல்களும் உள்ளன .
அனைத்து விரல்களுமே செயல்படக் கூடியவை . இதனால் , இவனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது .
இது போன்ற விரல்கள் கொண்டவர்களை , ' பாலிடேக்டலிசம் ' என்று கூறுகின்றனர் . கிரேக்க மொழி வார்த்தையான இதற்கு பல விரல்கள் என்று பொருள் .
-- தினமலர் .சென்னை பதிப்பு . 12 - 08 - 2008 .