Tuesday, March 31, 2015

நடந்தால் சார்ஜாகும் செல்!

 செல்போனில்  பேசிக்கொண்டிருக்கும்போது  பேட்டரி  சார்ஜ்  தீர்வது  பயங்கர  டென்ஷன்.  இதற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறது, நோக்கியா  நிறுவனத்தின்  புதிய  கண்டுபிடிப்பு. இந்த  நவீன  செல்போனைக்  கையில்  வைத்தபடி  அல்லது  பாக்கெட்டில்  போட்டு  சும்மா  நடந்தாலோ,  அல்லது  அதை  சிறிது நேரம்  அசைத்தாலோ  அது  தானாக  சார்ஜ்  ஆகிவிடும்.
     இது,  மாயமந்திரம்  அல்ல.  ' பீஸோ  எலக்ட்ரிக்  எஃப்ஃக்ட் '  என்ற  மின்னுற்பத்தி  தொழில்நுட்பம்தான்.
     அசையும்போது  மின்சாரத்தை  உருவாக்கும்  சக்தி  கொண்ட  படிகங்களை,  ' பீஸோஎலக்ட்ரிக்  கிறிஸ்டல் '  என்பார்கள்.  நோக்கியாவின்  புதிய  செல்போனில்  இந்த  ரக  கிறிஸ்டல்கள்  பொருத்தப்பட்டுள்ளதால்தான்  ஆட்டமேட்டிக்  சார்ஜிங்!
---தினமலர்  வாரமலர்.  மார்ச்  28,  2010. 

Monday, March 30, 2015

டயாபடீசை பிஸ்தா கட்டுப்படுத்தும்

.ஆய்வில்  தகவல்  --  டயாபடீசை  பிஸ்தா  கட்டுப்படுத்தும்
    " சர்க்கரை  நோய்  வராமல்  தடுப்பதற்கும்,  கட்டுப்படுத்துவதற்கும்  ரத்ததில்  சர்க்கரையின்  அளவை  சீராக  வைத்துக்கொள்ள  வேண்டியது  மிகவும்  அவசியமாகிறது.  இந்த  பணியை  பிஸ்தா  பருப்பு  சிறப்பாக  செய்கிறது" என  ஆய்வாளர்  சிரில்  கெண்டல்  தெரிவித்தார்.
     " இந்தியாவில்  குறிப்பாக  இளம்  வயதினர்  அதிக  அளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிஸ்தா  பருப்பை  சாப்பிட்டால்  ரத்ததில்  கொழுப்பு  அளவு  குறையும்  என்பது  அறிவியல்  பூர்வமாக  நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனவே  இதை  உணவில்  சேர்த்துக்  கொள்வதன்மூலம்  இதய  நோயிலிருந்து  பாதுகாத்துக்  கொள்ளலாம்".
-- தினகரன்  சென்னை  பதிப்பு.  6 - 1 - 2010. 

Sunday, March 29, 2015

சி.எப்.எல்.பல்புகள்.

 சி.எப்.எல். ( காம்பாக்ட்  புளோர  சண்ட்  லைட் )  மிகக்  முறைவான  மின்சாரத்தை  எடுத்துக்கொள்வதால்,  மின்சார  செலவைக்  குறைக்கின்றன.  அத்துடன்  அதிக  அளவு  வெப்பத்தையும்  வெளியிடுவதில்லை.  ஒரு  சி.எப்.எல்.  பல்பு,  வழக்கமான  குண்டு  பல்பைக்காட்டிலும்  ஐந்து  மடங்கு  வெளிச்சத்தைத்  தருகிறது.
     சி.எப்.எல்.  எரியும்  நேரம்  சாதாரண  பல்பைவிட  எட்டு  மடங்கு  அதிகம்.
     நீங்கள்  60  வாட்ஸ்  சாதாரண  பல்புக்கு  பதிலாக  15  வாட்ஸ்  சி.எப்.எல்.  பல்புகளை  உபயோகித்தால்,  குறைந்த  பட்சம்  ஒரு  மணி  நேரத்திற்கு  45  வாட்ஸ்  மின்சாரத்தை  மிச்சப்படுத்த  முடியும்.  ஒரு  மாதத்திற்கு  11  யூனிட்  மின்சக்தியைச்  சேமிக்க  முடியும்.  செலவையும்  குறைக்க  முடியும்.  சி.எப்.எல்.  பல்புகள்   5  முதல்  8  மாதங்கள்  வரை  உழைக்கும்.
     ஆனால்,  சி.எப்.எல்.  பல்புகளை  தயாரிப்பதிலும்,  பயன்படுத்திய  பிறகு  அழிப்பதிலும்  அதிகமான  பாதரச  நச்சு  காற்றில்  கலந்து  விடுகின்றன.  பாதரச  நச்சு  வளி  மண்டலத்தில்  கலந்துவிடும்  ஆபத்து  இருப்பதாகவும்  சில  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.
-- தினமலர்  சிறுவர் மலர்.  நவம்பர். 2,  2012.

Saturday, March 28, 2015

சந்தியாவந்தனம் - தர்மம்..

சந்தியாவந்தனம்.செய்ய  வேண்டிய  நேரங்கள்:
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு!'  --என்பது  வாக்கியம்.
அதாவது,  சூரியன்  கண்ணுக்குத்  தெரியாதபோது,  சூரிய  உதயத்துக்கு  முன்  அர்க்யம்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பதை  குறிக்கும்.  கோணாமல்  என்பது,  சூரியன் தலைக்கு  நேராக  உள்ள  உச்சி  காலத்தில்,  அர்க்யம் கொடு  என்பது.
அடுத்து,  கண்டு  கொடு  என்பது,  சூரியன்  மறைவதற்கு  முன்,  மாலை  வேளையில்  அர்க்யம்  கொடுக்க  வேண்டும்.  இதை  சிரத்தையுடன்  செய்து  வந்தால்,  ஆரோக்கியம்,  புண்ணியம்  எல்லாம்  கிடைக்கும்.
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு....'  என்பதற்கு,  வேறு  ஒரு  விளக்கமும்  உள்ளது.  தர்மம்  செய்யும்  போது,  அதை  விளம்பரப்படுத்தாமல்,  யாருக்கும்  தெரியாமல்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பது.
கோணாமல்  கொடு  என்பது,  தர்மம்  செய்யும்  போது,  மனம்  கோணாமல்,  முழு  மனதோடு  கொடு  என்பது.  கண்டு  கொடு  என்பது,  யாருக்கு  என்ன  தேவை  என்று  பார்த்து,  ஸ்த்  பாத்திரத்துக்கு  கொடு  என்பது.  படிப்பில்  ஆர்வம்  இல்லாதவனுக்கு  புத்தகமும்,  கல்யாண  ஆசை  இல்லாதவனுக்கு  பெண்ணும்,  பசி  இல்லாதவனுக்கு  அறுசுவை  உணவும்  கொடுப்பது  பயனற்றது.
இப்படியாக  காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு  என்பதர்கு,  சந்தியாவந்தனம்  செய்வதிலும்,  தர்மம்  செய்வதிலும்  சில  நியதிகல்  உண்டு.  இவைகளைத்  தெரிந்து  செய்வது  நல்லது !
-- வைரம்  ராஜகோபால் . ( ஞானானந்தம்  பகுதியில் )
-- தினமலர் வாரமலர் .  சென்னைப்  பதிப்பு.  மே  8, 2011.  

Friday, March 27, 2015

அழகான வீடு.

  ஒரு  வீடு  அழகாக,  பளிச்சென்று  இருந்தாலே  அமைதியும்,  மகிழ்ச்சியும்  அந்த  குடும்பத்தைத்  தேடி  வரும்.  உங்கள்  வீடு  அழகாகவும்,  மகிழ்ச்சியாகவும்  இருக்க  சில  டிப்ஸ்கள்:
*  பூசணிக்காய்  சாற்றில்  தங்கநகைகளை  ஊறவைத்துக்  கழுவினால்  அவை  நன்றாக  பளிச்சிடும்.
*  பாத்ரூம்  டைல்ஸ்களில்  படிந்திருக்கும்  துருப்பிடித்த  கறைகளை  நீக்க  கெரசினை  உபயோகிக்கலாம்.
*  எலுமிச்சை,  ஆரஞ்சு  தோல்களை  அலமாரியில்  வைத்தால்  சிறு  பூச்சிகள்  அண்டாது.
*  குளிர்சாதனப்பெட்டியை  துடைக்கும்போது  பச்சைக்கற்பூரம்  கலந்த  நீரில்  துடைத்தால்  பூச்சிகள்,  சிறுவண்டுகள்  நுழையாது.
*  பட்டுச்  சேலைகளைத்  துவைக்கும்போது  அலசும்  நீருடன்  சிறிது  எலுமிச்சைச்  சாறு  கலந்து  கொண்டால்  சாயம்  போகாது,  மங்காது.
*  உலோக  ஃபர்னிச்சர்களில்  இருக்கும்  துருபிடித்த  கறையைப்  போக்க  டர்பண்டைன்  பயன்படுத்தித்  துடைக்க  வேண்டும்.
*  குளியலறைக்  கதவுகளில்  திட்டுத்  திட்டாக  படிந்திருக்கும்  சோப்பு  கறைகளை  நீக்க  வெள்ளை  வினிகரை  ஸ்பாஞ்சில்  தொட்டுத்  துடைக்க
   வேண்டும்..
*  நிறம்  மங்கிப்போன  லெதர்  பர்ஸ்,  பெல்ட்  மற்றும்  ஹேண்ட்  பேக்குகளை  கிளிசரினில்  ஸ்பாஞ்  தோய்த்துத்  துடைத்தால்  நன்கு  பளபளப்பாக  மாறும்.
-- சத்யா  சுரேஷ்,  குமுதம் .  24 - 10 - 2012. 

Thursday, March 26, 2015

வாஸ்து புருஷன்.

வாஸ்து  புருஷன்  விழிப்பு  காலங்களில்  பூமி  பூஜை  செய்யலாமா?  அல்லது நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டுமா?
வாஸ்து  புருஷன்  நித்திரை  விடும்  காலங்களில்  பூமி  பூஜை  செய்வதற்கு  நாள்  நட்சத்திரம்  பார்க்க  வேண்டியதில்லை.இந்த  விஷயம்  பூமி  பூஜைக்கான  சிறப்பு  விதி.  90  நிமிடங்கள்  கண்  விழித்திருப்பார்.  இந்த  நேரத்தில்  18  நிமிடம்  பல்  குலக்குதல், 18  நிமிடம் குளித்தல்,  18  நிமிடம் சிவபூஜை,  18  நிமிடம் சாப்பிடுதல்,  18  நிமிடம்  தாம்பூலம்  போடுதல்  ஆகிய  5  வேலைகளைச்  செய்து  கொள்கிறார்.  இவற்றில்  மற்றைய  நேரங்களை  விடுத்து  கடைசியாகத்  தாம்பூலம்  போடும்  18  நிமிட  நேரத்தில்  மனை  முகூர்த்தம் பூமி  பூஜை  செய்தால்,  கட்டட  வேலைகள்  நல்லபடியாக  முடியும்.
--  மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012. 

Wednesday, March 25, 2015

நவக்கிரகங்களின் தேவியர்.

சூரியன்..............-- உஷா,  பிரத்யுஷா.
சந்திரன்.............-- கிருத்திகா,  ரோகிணி.
செவ்வாய்..........--  சக்திதேவி.
புதன்................--  ஞானதேவி.
குரு .................--  தாராதேவி,  சங்கினி  தேவி.
சுக்கிரன்...........--  கஷூரி  சிருங்கினி,  சுபகீர்த்தி.
சனி.................--  ஜோஷ்டா  தேவி.
ராகு................--  ஸிம்ஹி  தேவி.
கேது...............--  சித்திரலேகா.
(  இந்த  விவரம்  மாயூரம்  சேது  ராமநாத  குருக்கள்  எழுதிய  ' நவக்கிரகம் .  என்ற  நூலில்  இருந்து  எடுத்தது )
-- மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.
-- தினமலர் ,  பக்திமலர் .  1 - 11 - 2012.