Monday, March 23, 2015

தகுவன -- தகாதன.

  பள்ளியறையிலன்றி,  மாதரைப்  பிறவிடத்து  நிர்வாணமாய்ப்  பார்க்கலாகாது.  கண்ணுக்கு  மையிடும்போது,  எண்ணெய்  நீராடும்போது,  கவனக்  குறைவாய்  அமர்ந்துள்ளபோது,  இருமல் - கோட்டுவாய்  உள்ள  போது,  மேலாடை  நெகிழ்ந்தபோது,  மனைவியாயினும்  பார்த்தல்  கூடாது.
      மாதவிலக்கான  மூன்று  நாட்களுக்குள்  மனைவியைக்  கூடுதல்  கெடுதல்.  ஒரே  படுக்கையும்,  அவளோடு  பேசுவதும்  கூடாது.  அனுமதிக்கப்பட்ட  நாட்களில்  இல்லின்பம்  நுகர்வோன்  மேன்மைகள்  பெறுவான்.  அல்லாத  அவனுக்கு  வலிமை,  வாழ்நாள்,  பார்வை,  ஞானம்  குறையும்.
     தலைக்குக்  குளித்த  பின்னர்,  அந்நாளே  எண்ணெய்  முழுக்குக்  கூடாது.
     அமாவாசை,  சதுர்த்தசி,  அஷ்டமி,  பௌர்ணமி,  ஏகாதசி  நாட்களிலும்  மாதவிலக்கின்  பின்  தலை  முழுகி  வந்த  நாளிலும்  உறவு  கொள்ளக்  கூடாது.
     பிறன்  மனையாளைக்  கூடின்  ஆயுள்  குறையும்.
     தினவற்ற  பொழுது,  பிறப்புறுப்பை,  உடல்  உறுப்புகளை,  முடியைத்  தொடக்கூடாது.
     சூத்திரன்  முன்னிலையில்  பிராமணனுக்கு  தரும,  நோன்பு  உரைக்கக்  கூடாது.  ஓமம்  செய்த  மீதமும்,  உணவு  மீதமும்  சூத்திரனுக்குத்  தருவது  கூடாது.  இம்மைப்  பயன்  நூல்களான  பொருளியல்  போன்றவற்றையும்  சூத்திரனுக்குக்  கற்பித்தல்  கூடாது.
-- காவ்யா  மநுதர்மம்  என்ற  நூலில்  தமிழ்நாடன்.
-- இதழ் உதவி:  P.சம்பத்  ஐயர்,  திருநள்ளாறு. 

No comments: