Monday, August 24, 2015

' மறை நீர் '!

   மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம்.  மொத்த உள்னாட்டு உற்பத்தியை ( Gross domestic product ) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிபிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது.  இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன்.  இந்த கண்டுபிடிப்புக்காக 'ஸ்டாக்கோம் வாட்டர் - 2008 ' விருது பெற்றவர்.
     ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர்.  இது ஒரு தத்துவம்.  பொருளாதாரம்.  ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம்.  மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், " கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை.  ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை.  ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது.  இதுவே மறை நீர் கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது " என்கிறார் ஆலன்.
-- டி.எஸ். சஞ்சீவிகுமார்.
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 16, 2013.  

No comments: