26-11-2008 .மும்பையில் கடந்த 26 முதல் 29-ம் தேதிவரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் .
மும்பைக்கு சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் தவராமல் பார்ப்பது சில இடங்களை.....
அதில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் மூன்று....
ஒன்று கேட்வே ஆப் இந்தியா , நரிமன் பாயிண்ட் , வி . டி .ரயில்வே நிலையம் .
இந்த முன்று இடங்களையும் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம்
சுற்றுலா வரும் ஒவ்வொருவரும் , தவறாமல் பார்ப்பது இந்தியாவின் நுழைவு வாயிலில் கேட்வே ஆப் இந்தியாவை .அதை ரசிக்கும் பலர் கடலுக்குள் படகு மூலம் ஒரு ரவுண்ட் சென்று வருவர் . அப்படிச் செல்லும்போது கடலுக்குள் இருந்து பார்க்கும் போது தெரியும் தாஜ் ஓட்டலின் அழகே தனி . மும்பைக்கு அதுதான் தாஜ்மஹால் . 100 வருடங்களுக்கு மேலான பாரம்பரியம் உள்ள ஓட்டல் . உலகிலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்ட ஓட்டல்களில் இது முதலிடம் வகித்தாலும் ஆச்சர்யமில்லை . அவ்வளவு பேர் அதை புகைப்படம் எடுத்திருப்பார்கள் . இந்தியாவில் உள்ள தாஜ் ஓட்டல்கள் அனைத்தும் டாடாவிற்கு சொந்தமானவை . ஒரு முறை ஜாம்ஜெட்ஜி டாடா வெளினாட்டில் வாட்சன் ஓட்டலில் சென்று ரூம் கேட்டபோது அவருடைய தோலின் நிறத்தை ( கருப்பர் ) பார்த்து ரூம் இல்லை என்று சொல்லப்பட்டது . ( வள்ளல் அழகப்ப செட்டியார் மும்பை வந்திருந்தபோது , ரிட்ஜ் ஓட்டலில் ரூம் இல்லை என்று மறுக்கப்பட்டபோது , ' உங்களது ஓட்டல் என்ன விலை ?, ஒரே செக்கில் கொடுத்துவிடுகிறேன் ' என்று சொன்னார் என்பது வரலாறு ).
அந்த வெளிநாட்டு பயணத்திலிருந்து நாடு திரும்பியதும் மும்பையில் ஒரு ஓட்டல் கட்டவேண்டும் என்று எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் ' தாஜ் ஓட்டல் ' . அந்த தாஜில் தங்குவதற்கு கட்டணங்கள் அதிகம் . ஒரு இரவுக்கு ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் .
அந்த புராதன தாஜ் ஓட்டலின் மேல் பகுதியில் ஒரு டோம் உள்ளது .( கோயிலின் கோபுரம் போன்று உள்ள பகுதி ) அங்கு உள்ள பிரசிடன்சியல் சூட் தான் உலகத்திலேயே அதிக கட்டணங்கள் உள்ள ரூம்களில் ஒன்று . நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் கட்டணம் . அந்த டோம் தீவிரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்தபோது பலரின் மனதும் பதறிதுடித்தது என்னவோ உண்மைதான்
--தினமலர் . ( 03-12-2008 ).
No comments:
Post a Comment