எந்த ஒரு திருப்புமுனையையும் யாருமே கவனிக்காத மிகச் சின்னதொரு சம்பவம்தான் துவக்கிவைக்கும். இதற்கு மிகச் சிறந்த ( ! ) உதாரணம் எய்ட்ஸ் !
ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஆதிவாசி உடலில் தொற்றிய எய்ட்ஸ் கிருமி , இன்று உலகையே ஆட்டிப் படைக்க எடுத்துக்கொண்ட காலம் மிக மிகச் சொற்பம். ஆரம்ப நாட்களில் அமெரிக்காவின் பல்வேறு மாகாண மருத்துவமனைகளுக்கு வித்தியாசமான பாலின நோயுடன் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அது எய்ட்ஸ் என்று தெரியவர, 'அமெரிக்காவில் எய்ட்ஸ் கிருமி நுழைந்தது எப்படி?' என்று ஆராய்ந்தார்கள். சில நூறு நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆப்பிரிக்காவில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு கை நிறைய பணத்தையும், உடல் நிறையக் கிருமிகளையும் சுமந்து வந்ததுதான் காரணம் என்று கண்டுபிடித்தனர். அமெரிக்காவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது அந்த நூறு ஊழியர்கள் , ஆயிரம் டன் சர்க்கரையின் ஒரு துகள் !.
--கி.கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 17-09-2008 ).
No comments:
Post a Comment