Thursday, May 31, 2012

விருந்து .வழக்கம்.

விருந்து .
மழை இரவு...
பசித்த பாம்புகளை
விருந்துக்கு அழைக்கின்றன
தவளைகள் !

வழக்கம்.
இன்று விரதம்தான்
இருந்தாலும் சமைத்துவிடு
வழக்கமாய் வரும்
காக்கைகள் .
--- குங்குமம் , 28 . 11. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Wednesday, May 30, 2012

ஜோக்கூ...


வெளியே
ஒரு ஆணின் படமும்
உள்ளே
பல பெண்களின்
படங்களும்
வரையப்பட்டிருப்பதுதான்
ஆண்களின்
கழிப்பறை.
---அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
--- குங்குமம் , 28 . 11. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Tuesday, May 29, 2012

ஹெல்மெட் இருந்தால்தான்...


' ஹெல்மெட் இருந்தால்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும் '
அசத்தலான புது கண்டுபிடிப்பு .
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவிகளான ஆர்த்தி, லைலாபானு, வினோதா ஆகிய மூவரும், ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாத வகையில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர் . ' ரிமோட் சென்சிங் புரோகிராம் ' என்ற தொழில்நுட்ப முறைப்படி இயங்கும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட்டை வாகன ஓட்டிகள் அணிந்தால் மட்டுமே அதற்குரிய இருசக்கர வாகனத்தை இயக்க முடியும் . மேலும், டூவீலர் உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் அதை அணிந்து ஸ்டார்ட் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம். இதனால் வாகனம் திருட்டுபோவதும் தவிர்க்கப்படும் .
அண்மையில் அகமதாபாத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், நாடெங்கிலும் உள்ள 12 ஆயிரத்து 800 பள்ளிகள் பங்கேற்றன.
இவற்றில் 8 ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன . அதில் 32 புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பானதாக அறிவிக்கப்பட்டன . தேர்வு செய்யப்பட்டவைகளில் நன்னிலம் பள்ளி மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர், மார்ச் 4 , 2012 .

Monday, May 28, 2012

நேரமும் அழகியும் ...


பிரெஞ்சு நாட்டுத் தத்துவஞானி பான்டெனல் என்பவரிடம் ஒரு அழகான பெண் வந்து, ' எனக்கும் கடிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? ' என்று கேட்டாள் .
அதற்கு அந்த ஞானி, ' கடிகாரம் நேரத்தை நினைவுப்படுத்துகிறது . ஆனால் நீயோ நேரத்தையே மறக்கும்படி செய்துவிடுகிறாய் ' என்றார் .
-- கஸ்தூரி, வேலூர் .
வாட விடவா ?
நேராக படித்தாலும், திருப்பி படித்தாலும் பொருள் மாறாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் ' பாலிண்ட்ரோம் ' என்பார்கள் . அப்படி தமிழில் இருக்கும் வார்த்தைகள் ...
மாமா, பாப்பா, காக்கா, குடகு, தாத்தா, டாட்டா, வாட விடாவா, விகடகவி, மாலா போலாமா? மாவடு போட்டுவமா ?, தேரு வருதே, யானை பூனையா ?.
--- எஸ். பானுஷங்கர், திருச்சி .
--- தினமலர், இணைப்பு . மார்ச் 3 , 2012 .

Sunday, May 27, 2012

அளவு :

சாக்பீஸ் அளவு :
சுற்றளவு : 9 மில்லி மீட்டர் .
உயரம் : 80 மில்லி மீட்டர் .
பென்சில் அளவு :
உயரம் : 19 செ.மீ,.
அகலம் : 6 மி.மீ,.
சுற்றளவு : 7 மி. மீ ,.
--- தினமலர் .

Saturday, May 26, 2012

சிரிக்க ... சிரிக்க ...


** " அன்பே ! உனக்காக நான் வீட்டை விட்டுட்டு ஓடி வரட்டுமா ? "
" வேண்டாம், வீட்டை வித்துட்டு ஓடி வாங்க !"
** " லைசென்ஸூ, இன்ஷூரன்ஸூ எதுவுமே இல்லை . ஆனா, எந்த தைரியத்துல வண்டியை ஓட்டிட்டு வந்தே ?"
" பையில் 500 ரூபா இருக்கிற தைரியத்துலதான் சார் !"
** " இந்த ஆபரேஷனில் நான் பொழைக்கிறது கஷ்டமா டாக்டர் ? "
" ஆமாம் ."
" பிறகு எதுக்கு இந்த ஆபரேஷன் ?"
" நான் பொழைக்கணுமே ! "
** " ஆபரேஷனுக்கு வந்த பேஷண்ட்டை நீங்க எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்புனீங்க ? "
" நீங்கதானே டாக்டர் அவரை எப்படியாவது காப்பாத்தணும்னு சொன்னிங்க !"
** " ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு என் பையன் அடம்பிடிக்கிறான் ."
" என்ன படிக்கிறான் ? "
" ஆசிரியரா இருக்கான் !"
** " என் மனைவி எல்லாத் துறையிலும் வெளுத்துவாங்குவா ..."
" நீ ... ?"
" ஹி...ஹி... நமக்குப் படித்துறை மட்டும்தான் !"

Thursday, May 24, 2012

மேஜிக் கணக்கு .


பெருக்கலில் 5ல் முடியும் இரண்டு இலக்க எண்கள் ஒரே மாதிரி இருந்தால் அதற்கு ஒரே விநாடியில் விடை கொடுக்க முடியும் .
உதாரணம் :
35 x 35 ஒரே வரியில் விடை பெற
கடைசி எண் 5 ஐ 5 ஆல் பெருக்க வேண்டும் .
விடை : 25 .
முதல் எண் 3 ஐயும் 3 க்கு அடுத்து வரும் எண் 4 ஐயும் பெருக்க வேண்டும் .
விடை : 3 x 4 = 12 .
ஆக 35 x 35 = 1225 .
--- தினமலர் . 2 . 3 . 2012 .

Wednesday, May 23, 2012

தேசிய கீதம் -- தேசிய பாடல் !


நம் நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் . தேசியப் பாடலை எழுதியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி . தேசிய கீதம் 19 ம் நூற்றாண்டிலும், தேசிய பாடல் 18 ம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டது .
இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ' ஜன கண மன ' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது . 1911 டிசம்பர் 27 ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும் .
' வந்தே மாதரம் ' பாடலை 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது . இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் .
--- தினமலர் . 24 . 2. 2012 .

Tuesday, May 22, 2012

மேஜிக் கணக்கு !


9ம் எண்ணுடன் ஏதாவது ஒரு இலக்க எண் முதல் மிகப் பெரிய இலக்க எண் வரை பெருக்க சூப்பர் குறுக்குவழி இருக்கிறது.
உதாரணம் : 1 . 76 x 9 .
எண் 76 வுடன் 0 சேர்த்துக்கொள்ளுங்கள். 760 .
எண் 760ஐ 76 வுடன் கழிக்கவும் . 760 -- 76 = 684 . இதுதான் விடை .
உதாரணம் : 2 . 345 x 9 = 3450 -- 345 = 3105 .
-- தினமலர் . 24 . 2. 2012 .

Monday, May 21, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** கரையில் இருந்தால்தான் படகுகளுக்கு பாதுகாப்பு . ஆனால், அவை கடலுக்குள் செல்வதற்குத்தான்
உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, கரையில் நிறுத்தி வைப்பதற்கு அல்ல என்று சொல்வார்கள் .
** யானையில் இருந்து எலி வரை மிருகங்களில் ஆனாதிக்கம் மட்டுமே உண்டு . சில பூச்சிகளில் மட்டும் ( சிலந்தி மாதிரி ! ) பெண்ணாதிக்கம் .
** பிறந்த வருடத்தில் நடந்தது என்ன ? -- http:// Whathappenedinmybirthyear . com .
நீங்கள் பிறந்த வருடத்தின் உலக நடப்புகளைச் சொல்லும் தளம் ! உங்கள் பிறந்த வருடத்தைத் தட்டினால் அந்த வருடத்தில்வெளியான திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், போர்கள், நோபல் பரிசு வெற்றியாளர்கள், கண்டுபிடிப்புகள் எனத் தகவல் மழை பொழிகிறது !
** சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்தில்
இருந்து வடியும் பால் ஆகும் . சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது . அந்த எண்ணையிலிருந்து
வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது .
** நீங்கள் வாங்கும் பெரும்பாலான பொருட்களில் கறுப்பு வெள்ளை நிறக்கோடுகள் பட்டையாக இருப்பதை பார்த்திருப்பீர்கள் .
இதன் பெயர் பார்கோட் . கீழே சில எண்களும் குறிக்கப்பட்டிருக்கும் . இந்த பார்கோடு முறை அமெரிக்காவில் ரயில்
பாதையில் வரும் வண்டியின் எண்ணிக்கையை கணக்கிட பயன்படுத்தினர் . பிறகு, சூப்பர் மார்க்கெட் வணிகம் பெருகியதும்,
ஒரு பொருளின் விலை, தரம், விற்பனை அளவு, வரிசை எண் போன்ற விவரங்களை ரகசிய குறியீடுகளாக பார்கோடுகள்
விளக்குகின்றன . பார்கோடுகளை ஒளியியல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யும் போது வெள்ளைக் கோடுகளின் மூலம்
ரகசிய தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவாகி விடும் . அதில் உள்ள விவரங்களையே நம்மிடம் பில்லாக பிரின்ட் எடுத்துக்
கொடுப்பர் .

Sunday, May 20, 2012

பொது அறிவு !


** நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைரோலஜி புனேயில் உள்ளது .
** கலிலியோ பிறந்தது பிசா என்ற இடத்தில்.
** தைவான் நாட்டின் பழைய பெயர் போர்மோசா .
** யென் என்ற கரன்ஸி ஜப்பான் நாட்டின் பணம் .
** காக்பிட் ஆப் யூரோப் என்றழைக்கப்படும் நாடு பெல்ஜியம் .
** மூளை என்பது சுரப்பியல்ல .
** திட்டக்கமிஷன் 1950 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது .
** மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு .
** சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 28 .
** உலகின் மிகச் சிறிய குடியரசு நாடு -- நவுரா ( 21 சதுர கி.மீ ) -- தென் பசிபி .
** பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா .
** ஜப்பான் பார்லிமென்ட் பெயர் டயட் .
** செய்னே நதிக்கரையில் பாரீஸ் அமைந்துள்ளது .
-- தினமலர் . 20 . 2. 2012 .

Saturday, May 19, 2012

குறும்புக் கேள்விகள் !


** காதலர் தினம் அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்தால், காதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அர்த்தம் ?
--- நீல நிற ஆடைகள் !
** தமிழ் இலக்கியத்தில் ' உடன்போக்கு ' என்று குறிப்பிடப்படுவது எது ?
மனமொத்த காதலனும் காதலியும் இணைந்து வாழ முடிவு எடுத்து, தத்தமது பெற்றோரை விட்டு விலகிச் செல்வது !
--- ஆனந்தவிகடன் , 15 . 2 . 2012 .
** காதலர் தினம் அன்று என்ன நிறத்தில் ஆடை அணிந்தால், காதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அர்த்தம் ?
--- நீல நிற ஆடைகள் !
** தமிழ் இலக்கியத்தில் ' உடன்போக்கு ' என்று குறிப்பிடப்படுவது எது ?
மனமொத்த காதலனும் காதலியும் இணைந்து வாழ முடிவு எடுத்து, தத்தமது பெற்றோரை விட்டு விலகிச் செல்வது !
--- ஆனந்தவிகடன் , 15 . 2 . 2012 .

Friday, May 18, 2012

அறிந்து கொள்வோம் !


** பைக்கானோர் விண்கலம் ஏவுதளம் கஜகஸ்தானில் உள்ளது .
** மாவீரன் அலெக்சாண்ட்ர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு கி.மு. 326.
** ஒடென்டோலஜி என்ற படிப்பு பற்கள், ஈறுகள் பற்றியது .
** சார்க் நாடுகளின் நிரந்தர தலைமை செயலகம் காத்மாண்டுவில் உள்ளது .
** மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு 1948 .
** நாட்டின் பழமையான, மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்தியன் மியூசியம் கோல்கத்தாவில் உள்ளது .
** வல்லபாய் படேல் ஸ்டேடியம் மும்பையில் உள்ளது .
** ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர் 1564 ல் பிறந்தார் .
-- தினமலர் . 13 . 2 . 2012 .

Thursday, May 17, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** ஜப்பான் தங்கள் நாட்டை இப்படி அழைப்பர் . -- நிப்பான் .
** உலகின் மிகப் பழமையான நகரமாக கருதப்படுவது -- டமாஸ்கஸ் .
** ஆங்கிலக் கால்வாய் நீளம் -- 564 கி.மீ .
** உலகில் ரப்பர் அதிகம் விளையும் நாடு -- மலேஷியா .
** வங்கதேசத்தின் முதல் அதிபர் -- ஷேக் முஜிபூர் ரகுமான் .
** உலகின் மிக நீண்ட நெடுஞ்சாலை -- டிரான்ஸ் கனடா .
** இத்தாலியின் தேசிய மலர் -- லில்லி .
** ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்தவர் -- ஜேம்ஸ் குக் .
** நியூயார்க் நகரின் செல்லப் பெயர் -- பிக் ஆப்பிள் .
-- தினமலர் . 13 . 2 . 2012 .

Wednesday, May 16, 2012

வலை வீச்சு .


** ஒளிமயமான எதிர் காலத்தை காங்கிரஸ் மட்டுமே தரும் : ராகுல்காந்தி .
-- எல்லாருக்கும் ' பல்பு ' தருவீங்கதானே...?!
** போதிய பக்குவம் இல்லாததால் தான் சட்டசபையில் நாக்கைக் கடிக்கிறார் விஜயகாந்த் : திருமாவளவன் .
-- கரீட்டுங் ... இலங்கைபோய் ராஜபக்சே முன்னாடியே மீசை முறுக்கின உங்க ' பக்குவம் ' அவர்கிட்ட இல்லீங் ...
** ' தி.மு.க. ஓட்டுகளை நம்பி இல்லை ! ' : ஸ்டாலின் .
-- எந்தக் கட்சியுமே நம்பியிருப்பது வாக்காளர்களின் அறியாமை அல்லது பேராசையைத் தான் .
** அதிமுகவால் தான் தேமுதிக வெற்றி பெற்றது: ஜெ . தேமுதிகவால் தான் அதிமுக வெற்றி பெற்றது: விஜயகாந்த.
-- திமுகவால்தான் நீங்க ரெண்டு பேரும் ஜெயிச்சீங்க ...! ( கருணாநிதியின் மைன்ட் வாய்ஸ் ).
** சட்டமன்றத்தில் ஆக் ஷன் செய்வது, வசனம் பேசுவது கூடவே கூடாது : ராமதாஸ் .
-- நீங்க ஏன் இப்போ பூட்டின வீட்டுக்கு முன்னாடி சவுண்டு குடுக்குறீங்க ... ?
--- கர்ணா , தினமலர் . 12 . 2 . 2012 .

கட்டுப்பாடு .

செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு .
செல்போன் பேச்சுக்கு கட்டுப்பாடு வந்தாச்சு ' லிட்டில் ஜாமர் ' கருவி .
இந்த கருவியை வீட்டில் பொருத்தினால் 50 முதல் 100 அடி தொலைவுக்கு செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது .பெற்றோர்கள் இந்த ' ஜாமரை ' தங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைவிடத்தில் பொருத்திவிட்டால், அவர்கள் என்னதான் செல்போனுடன் மல்லுகட்டினாலும் நெட்வொர்க் ( டவர் ) கிடைக்காது .
பெற்றோர்களும் கவலையில்லாமல் நிம்மதியாக தூங்கலாம் . இதன் விலையும் மலிவுதான் . ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலான விலைகளில் இந்த ஜாமர் கருவி கிடைக்கிறது . சீனாவின் தயாரிபான இந்த ' லிட்டில் செல்போன் ஜாமர் கருவி ' விற்பனை தற்போது சென்னையிலும் சக்கை போடு போடுகிறது . ஆனால், செல்போன் ஜாமரை மிகவும் ரகசியமாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது .
--- தினமலர் . 12 . 2 . 2012 .

Tuesday, May 15, 2012

தெரிந்து கொள்ளுங்கள் !


** அண்மையில் திருமணம் ஆன நான் ' ஹேப்பி'யாக வாழ ஓர் அறிவுரை ப்ளீஸ்...? -- ரொம்ப சிம்பிள் ! வாயை
மூடிக்கொள்ளவும். பர்ஸைத் திறந்துவைத்துக்கொள்ளவும் !
** என் மனைவி என் மீது உயிரை வைத்திருக்கிறாள். அந்த அளவுக்கு என்னால் பதிலுக்கு ஆசையைப் பொழிய
முடியவில்லை என்று மனம் சங்கடப்படுகிறது . என் மீது தவறா ? -- ஒன்று மட்டும் நிச்சயம் . பசித்த புலியிடம்
இருந்தும், ரொம்ப ஆசை வைக்கும் பெண்ணிடம் இருந்தும் தப்புவதற்கு சான்ஸே இல்லை என்று பழமொழி உண்டு !
-- ஹாய் மதன் . கேள்வி -- பதில் .
-- ஆனந்தவிகடன் . 15 .2 . 2012 .

Monday, May 14, 2012

வலை பாயுதே ! facebook.


** கேஸ் நிக்காதுங்க ! எங்க கேப்டன் ரகசியம் பேசும்போது கை நீட்டியும் டான்ஸ் ஆடும்போது நாக்கை
மடிச்சும்தான் ஆடுவார்!
** மின்வெட்டு படிபடியாகக் குறைக்கப்படும்: ஜெயலலிதா # உங்க மின்வெட்டுக்கு எத்தனை படிகள் இருக்கு ? அதைச்
சொல்லுங்க மொதல்ல !
** ' என் மனைவிகள்கூட என்னை ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள் !' -- மு.கருணாநிதி # இப்ப என்ன ஓய்வுதானே
எடுக்கிறாரு !
** கேப்டனைப் பற்றி கட்சியினர் புகழாரம் : ' அல்கொய்தாகிட்டேயும் ஜெயலலிதாகிட்டேயும் கை நீட்டிப் பேசுன ஒரே
தலைவர் நம்ம கேப்டந்தான் !'
** காரமா இருந்தா, அது குருமா ; காரமா இருக்கிற மாதிரி நடிச்சா... அது திருமா !
** கல்யாணம் செய்யாதவன் வாழ்வது பேச்சிலர் வாழ்க்கை ; செய்தவன் வாழ்வது பேச்சில்லார் வாழ்க்கை !
** கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி . சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது
அம்மா # அம்மாடா !
** பயணம் செல்ல அம்மா கிளம்பும்வரை பொறுமையாகக் காத்திருக்கும் நாம்தான் மனைவி கிளம்புவதற்குள் 100
முறை ஹார்ன் அடிக்கிறோம் !
-- ஆனந்தவிகடன் . 15 .2 . 2012 .

Sunday, May 13, 2012

துணுக்கு !


** தபால் கார்டை உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரேலியா . 7 . 10 . 1869ம் ஆண்டில்தான் உலகில் முதல் போஸ்ட்கார்டு அறிமுகமானது .
** ஒரு குழந்தையின் மூளை அந்தக் குழந்தைக்கு ஒரு வயது முடியும்போது 50 சதவீத வளர்ச்சியையும், ஆறு வயதாகும் போது 90 சதவீத வளர்ச்சியையும் அடைகிறது . முழு வளர்ச்சி அடைந்த குழந்தையின் மூளையின் எடை மூன்று பவுண்ட் ஆகும் .
** உயிரினங்களில் அதிக நேரம் மூச்சை அடக்கும் தன்மை கொண்டது முதலை தான் . தண்ணீருக்குள் 6 மணி நேரம் மூச்சுத் திணறாமல் இருக்கும் .
** வட அயர்லாந்து நாட்டில் ஒரு பிடி வைக்கோலை வீட்டில் சொருகி வைத்திருந்தால் அந்த வீட்டில் ' நாய் இருக்கிறது 'என்று அர்த்தம் .
--- தினமலர் இணைப்பு . 11 .2 . 2012 .

Saturday, May 12, 2012

மேஜிக் கணக்கு !


எண் 75 ஐ ஏதாவது ஒரு இரண்டு இலக்க எண்ணுடன் பெருக்க ஒரு எளிமையான வழி :
100 ல் 3/4 பங்கு 75 . இந்த முறையை வைத்துதான் மேஜிக் கணக்கு செய்ய வேண்டும் .
உதாரணம் : எண் 35. இதை 75 ஆல் பெருக்க வேண்டும் . எண் 35 ஐ 4 ஆல் வகுக்க வேண்டும் . 35 / 4 = 8.75 .
இந்த விடையுடன் எண் 3 ஐ பெருக்க வேண்டும் . 8.75 x 3 = 26.25.
இந்த விடையுடன் எண் 100 ஐ பெருக்க வேண்டும் . 26.25 x 100 = 2625 . இதே போல் வேறு இரண்டு இலக்க எண்ணை 75 உடன் பெருக்கிப் பாருங்கள் .
--- தினமலர் இணைப்பு . 10 .2 . 2012 .

Thursday, May 10, 2012

தெரியுமா உங்களுக்கு ?


** பாரத ரத்னா விருதுடன் வழங்கப்படும் பதக்கம், அரச மர இலையைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் .
** உலக சிரிப்பு நாள் ஜனவரி 10 .
** மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு 1956 .
** எச்சிலில் உள்ள என்சைம் அமிலேஸ் .
** இந்து சுவராஜ்யம் என்ற நூலை எழுதியவர் மகாத்மா காந்தியடிகள் .
** மறைந்த பெனசீர் புட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் .
** ' பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ' கோப்பை கோல்ப் விளையாட்டுடன் தொடர்புடையது .
** ' Namesake ' என்ற நூலை எழுதியவர் ஜும்பாலகரி .
** முகலாய மன்னர் ஜகாங்கீர் ஆட்சி காலத்தில், கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் தொழிற்சாலை துவக்கினர் .
** நவீன டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் பைனரி சிஸ்டம் முறையைப் பயன்படுத்துகின்றன.
** கம்ப்யூட்டர் கீபோர்டில் நீளமானது ஷிப்ட் கீ
** மைக்ரோ புராசசரைக் கண்டுபிடித்தவர் ஹப் .
** சிந்து சமவெளி நாகரிக இடங்களில் லோத்தால் என்ற இடத்தில் கப்பல் தளம் இருந்தது .
** ஹார்லி டேவிட்சன் என்பது பைக் .
** ராணுவம் தொடர்பான துருவ் என்பது இலகுரக ஹெலிகாப்டரைக் குறிப்பது .
--- தினமலர் . 6 . 2 . 2012 .

Wednesday, May 9, 2012

R.S .V.P.


கல்யாணம் மற்றும் இதர விழா அழைப்பிதழ்களின் அடியில், R. S. V. P. என்று போட்டு ஒரு தொடர்பு எண் தரப்படுகிறதே... அப்படின்னா என்ன அர்த்தம் ?
' re' pondez sil vous plait ' என்ற பிரெஞ்ச் வார்த்தையின் சுருக்கமே R.S. V . P. அப்படின்னா " விருப்பமிருந்தால் பதில் கொடுங்க !"என்று பொருள் .
--- அனுஷா நடராஜன் ,
--- மங்கையர் மலர் . பிப்ரவரி , 2012 .

Tuesday, May 8, 2012

இன்விடேஷன்


உங்கள் வீட்டுக்கு ஒரு இன்விடெஷன் வந்து, அதன் உரையின் மேல் முகவரிக்குப் பக்கத்தில் உங்கள் புகைப்படமும் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு நிமிடம் சந்தோஷமாகிவிடமாட்டீர்களா ? அப்படி ஒரு சந்தோஷத்தை ஏகப்பட்ட பேருக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் .
சில வருடங்களுக்கு முன்பு அவரது மூத்த மகளின் திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் புகைப்படம் எடுத்து எல்லோரையும் போல் ஆல்பத்தைப் பரணில் போட்டுவிடாமல், அடுத்த வாரம் நடக்கப் போகும் இரண்டாவது மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழின் கவரில் அவரவர்களின் புகைப்படத்தையும் பிரிண்ட் செய்து அனுப்பியிருக்கிறார் . பிகேபி.யின் ஐடியா புதுமையாக இருந்தது . ஒரு கொசுறுத் தகவல், இதை செயல்முறைப் படுத்தியது டிஸைனரான மணப்பெண் ஸ்வர்ணப்பிரியாதான் !
--- அரசு பதில்கள் , குமுதம் , 8 . 2 . 2012 .

Monday, May 7, 2012

சிரிக்கலாம் வாங்க !


** " சார் ! உங்களுக்கும் மன்மோகன் சிங்குக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு ! அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் ! "
" எனக்குத் தெரியாதே ! "
" அதேதான் ! "
** " மாப்பிள்ளை, என் பெண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ! "
" எனக்குக் கை கொஞ்சம் நீளம் ; சமாளிச்சிடுவேன் மாமா !"
** " நீங்க பொண்ணு வீட்டுக்காரங்களா, மாப்பிள்ளை வீடுக்காரங்களா ?"
" எல்லா கல்யாண மண்டபங்களிலும்தான் பார்த்துக்கிறோம், அப்புறம் என்ன கேள்வி ?"

Sunday, May 6, 2012

வலை பாயுதே ! - facebook

** பல் செட்டைச் சுத்தம் செய்பவர்கள்தான் எவ்வளவு சிரத்தையாகச் செய்கிறார்கள் . எதுவுமே இருக்கும்போது, அதன்
அருமையை நாம் உணர்வது இல்லை !
** பத்து லட்சம் பணத்தைக் காப்பாற்றிவிடும் அலுவலகத்தில், பைக் துடைக்கும் துணியைக் காப்பாற்ற முடிய
மாட்டேங்குது...
** நிஜமாகவே அடி வாங்குகிறவனுக்குப் பேரு ...' டூப்பு ' # அதுதாண்டா சினிமா !
** ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா ? டெடிகேட் டூ மன்னார்குடி
முன்னாள் சுற்றத்தார் !
** என்ன ஆகும் 2ஜி வழக்கு ? 11 நாட்களில் ஓய்வுபெறுகிறார் நீதிபதி ! # இனி புதுசா ஒருத்தர் வந்து, ' கையைப்
புடிச்சு இழுத்தியா ? 'னு ஆரம்பிப்பார் !
** அதட்டி, மிரட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்வது ... பொய் பேசுவதற்குத்தான் !
--- சைபர் ஸ்பைடர் , ஆனந்தவிகடன் . 8 . 2 . 2012 .
** எடை குறைவா இருந்தா ரேஷன் !
உடை குறைவா இருந்தா பேஷன் !
** சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டம் எங்களுடையது : கருணாநிதி .
-- டீச்சர் அந்த பென்சில் டப்பா என்னோடது .. !!
-- தினமலர் , 5 . 2 . 2012 .

Saturday, May 5, 2012

பிறந்தநாள் -- தளம் !


பிறந்த நாளை நினைவுப்படுத்தும் தளம் !
பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்த, திருமண நாளை நினைவு படுத்தி வாழ்த்துச் சொல்வது சற்று சிரமம்தான் . நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்துவிட்டது என்று அசடு வழிபவர்களுக்கு நினைவுபடுத்த, ஒரு தளம் உள்ளது . அதன் பெயர் http:// live. ss& birthday reminder.com .
இத்தளத்தில் Signup செய்து புதிதாக இலவச அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . அடுத்து நமது நண்பர்கள், உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ தினங்களை இத்தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும் .
ஒவ்வொருவருக்கும் செல்லப் பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்ததினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் இத்தளம் குறிப்பிட்ட தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு மின்னஞ்சல் மூலம் ஞாபகப்படுத்தும் . நாளை உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நம் மின்னஞ்சலில் செய்தி வரும் .
அதை அறிந்து கொண்டு, நாம் ஞாபகமாக மொபைல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் . பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து வாழ்த்து சொன்னதால் அவர்களின் மனதிலும் நீங்கள் இடம்பிடிக்கலாம் .
--- தினமலர் 24 . 1 . 2012 .

Friday, May 4, 2012

வித்தியாசம் .


" சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் என்ன வித்தியாசம் ? "
" உங்க மனைவியை லீவுக்கு ஊருக்கு அனுப்பிவெச்சா, உங்களுக்குக் கிடைக்கிறது சுதந்திரம். உங்க மனைவிக்குக்
கிடைக்கிறது விடுதலை ! "
-- கி.ரவிக்குமார் , நெய்வேலி . ஆனந்தவிகடன் . 25 . 1 . 2012 .

Thursday, May 3, 2012

தமாஷ் !


** " ஆபரேஷன் பண்ணப்போற பெஷன்ட்டுக்கு எல்லாம் அதிகாலையில ஒரு காபி கொடுப்பாங்க ! "
" 'டெட் காபி'னு சொல்லுங்க ! "
** " ஹலோ... நான் ஊர்ல இல்ல, பெங்களூர்ல இருக்கேன் ! "
" தலைவா ! நீங்க பேசறது லேண்ட் லைன் போன் ! "
** " ஊட்டியில எஸ்டேட் இருக்குன்னு சொன்னீங்களே ... "
" ஆமா, அது எம் பேர்ல இருக்குன்னு சொல்லலையே டார்லிங் "

Wednesday, May 2, 2012

மரணம்


சனிக்கிழமை வாய்த்தது
சண்முகத்துக்கு
நிச்சயிக்கப்படாத மரணம்
ஆதலினால்
ஒரு கறுப்பு நிறக்
கோழிக்கு
வாய்த்தது அன்றைக்கு
நிச்சயிக்கப்பட்ட மரணம் !
-- வீ. விஷ்ணுகுமார் .ஆனந்தவிகடன் . 25 . 1 . 2012 .

Tuesday, May 1, 2012

குழந்தைகள் தண்ணீ ர்.


குழந்தைகள் தண்ணீர் என்றால், குதூகலத்தோடு விளையாட ஆரம்பிக்கிறார்கள் . கருக்பைக்குள் தண்ணீருக்குள் வளர்ந்து வெளிவரும் உணர்வினால்தான் அப்படித் தண்ணீரிலும் விளையாடுகிறார்களா ?
உண்மைதான் என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள் . ஆகவேதான் ரஷ்யாவில் சில மருத்துவமனைகளில் பிரசவ வலி ஏற்பட்ட உடனே அம்மாவை நீர்த் தொட்டிக்குள் அமர்த்தி... குழந்தை வெளியே வந்தவுடன் தண்ணீருக்குள்ளேயே வளையவிட்டு
( குழந்தையைப் பொருத்தமட்டில், சின்னதில் இருந்து பெரிய ஸ்விம்மிங் பூல் !) பிறகு வெளியே எடுப்பார்கள் . குழந்தைக்கு மூச்சுத் திணறாது . கருப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் அதற்குத் துளியும் அதிர்ச்சி இருக்காது . ' இதுதான் பெஸ்ட் ' என்கிறார்கள் சில ரஷ்ய மருத்துவர்கள் . இப்போது இந்த முறை பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது ( தாய் விரும்பினால் ) !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 1 . 2 . 2012 .