Saturday, October 31, 2015

சிதம்பரம் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுடையது இல்லை;  அரசு மீட்க வேண்டும்.
     2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் கோயில் இருந்ததற்கான எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது.  இப்போதுள்ள மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும், வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும், கிழக்குக் கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிகனாலும், தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிகனாலும், எழுப்பப்பெற்றவை.
     முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினான்.  படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.
     சிதம்பரத்தை வைதீகமரபோடு பிணைத்து சமஸ்கிருதத்தில் ஸ்தலபுராணம் எழுதப்பட்டது. 'சிதம்பர மஹாத்மியம்' என்ற நூலில் சிதம்பரம் எட்டுமைல் சமசதுரம் உள்ளதெனவும், அழகிய நான்கு கோபுரங்களைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுவதால், கோபுரங்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என யூகிக்கலாம்.
-- ரவிக்குமார் . விவாதக் களம்.
-- ' தி இந்து; நாளிதழ்.வியாழன், ஜனவரி 9, 2014.  

Friday, October 30, 2015

துளசி

  துளசியை எப்படிப் பறிக்க வேண்டும்?
      ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்க வேண்டும்.  பறிக்கும் போது :
' துளஸ்யம்மருத ஐந்மாஸி ஸாதாத்வம்
 கேஸவப்ரியே கேஸவார்த்தம்லு நாளி த்வாம்
 வரதா பவ ஸோபதே '
என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும்.  நான்கு இலைகளூம் நடுவில் தளிரும் ( ஐந்து தளங்கள் ) இருப்பது போலத் துளசியை கிள்ளி சேகரிக்க வேண்டும்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.   

Thursday, October 29, 2015

தெரிஞ்சுக்கோங்க...!

*  கோலம் :  அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.  அந்த இல்லத்தில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்கிறது சாஸ்திரம்.
                     கணவன் வீட்டைவிட்டு செல்லும் முன் போடப்பட வேண்டும்.  வேலைக்காரர்களை வைத்து கோலம்
                     போடக்கூடாது.  கோலத்துக்கு காவியும் தீட்டினால், அங்கு பகவானும் லட்சுமியும் எழுந்தருள்கிறார்கள் என்பது தர்ம
                      சாஸ்திரம்.  சுப காரியங்களை முன்னிட்டு கோலமிடும்போது ஒற்றைக்கோடு போடக்கூடாது.  அசுப காரியங்களுக்கு
                      இரட்டைக் கோடு ஆகாது.  இதை இழை கோலம் போடும்போது கவனத்தில் கொள்ளவேண்டும்.
கூடாது...கூடாது...
                      புண்ணிய தீர்த்தங்களில் குளிக்கும் போது, எடுத்தவுடன் காலை வைக்கக்கூடாது.  தீர்த்தத்தை வலது கையால்
                      எடுத்து தலையில் தெளித்துக் கொண்ட பின்பே , வலது காலை வைக்க வேண்டும்.  ஆடையின்றி குளிக்கக்கூடாது.
                      நீரில் எச்சில் உமிழக்கூடாது.  வாய் கொப்பளிக்கக்கூடாது.  தான் குளிக்கும் தீர்த்தத்தை இன்னொரு தீர்த்ததுடன்
                      ஒப்பிட்டுப் பேசி உயர்வு தாழ்வு கற்பிக்கக்கூடாது.
--  தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

Wednesday, October 28, 2015

பஞ்சாட்சர மந்திரம்.

  பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூக்குமம் என்று இரண்டு வகைப்படும்.  நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.  சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம்.  ஆரம்ப நிலை ( சமய தீட்சை ) தீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும்,  மேல்நிலை ( விசேஷ தீட்சை முதலியன ) தீட்சை பெற்றவர்கள் சூக்கும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும்.  உபதேசம் பெறுவது முக்கியம்.
      பஞ்சாட்சர மந்திரத்தை காலை குளித்த பிறகு 108 தடவை, மதியம் சாப்பிடும் முன் 108 தடவை, மாலை விளக்கேற்றும் வேளையில் 108 தடவை ஜபம் செய்யவேண்டும்.  இதுவல்லாமல் இயன்ற பொழுதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
பிரதோஷ நாள்.
      பிரதோஷ நாளில் சிவனுக்கு மல்லிகை, நந்தியாவர்த்தம் போன்ற மலர்களினால் மாலை அணிவித்து, வில்வ இதழ்களினால் அர்ச்சனை செய்தும் பிரதோஷத்தில் வழிபட வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்ச்சாரியார்.   அறிவோம்! தெளிவோம்!  தொடரில்...
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.

Tuesday, October 27, 2015

குளிக்கும்போது...


     நாம் குளிக்கும் போது அந்த தண்ணீரில் கங்கை முதலான எல்லா புண்ணிய நதிகளும் இருப்பதாக நம்பிக்கையுடன் நினைக்க வேண்டும்.  அப்போது அந்த நீர் புனித நீராகிறது.  நீராடும் முன் ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக் கொண்டு, பின் வரும் சுலோகத்தைச் சொல்லி நதி தேவதைகளை வணங்கி, இந்த நீரில் எழுந்தருள்க என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
     குளிக்கும் போது சொல்ல வேண்டிய சுலோகம் இது :
' கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா
 சிந்து காவேரி ஜலேஸ்மின் சாந்நிதம் குரு '
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 9, 2014.                                                     

Monday, October 26, 2015

பரமாச்சாரியார்.


     பரமாச்சாரியார், பெரியவாள், பெரியவர், மகாப்பெரியவர் என பக்தர்களால் அழைக்கப்பட்டவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
     அத்வைத தத்துவஞானி ஆதி சங்கரர் கி.மு. 482 முதல் 477 வரை காஞ்சிமடத்தின் முதல் தலைவராக இருந்து குருபரம்பரையை துவக்கி வைத்தார் என்கிறது காஞ்சிமடத்தின் இணைய தளம்.  பரமாச்சாரியார் அதன் 68வது மடாதிபதி.
     விழுப்புரத்தில் வாழ்ந்த கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கு சுவாமிநாதன் 1894ல் பிறந்தார்.  அவர்தான் 1907 பிப்ரவரி 3ல், 13-வது வயதில் மடத்தின் தலைவராகி பரமாச்சாரியார் ஆனார்.  1911 முதல் 1915 வரை மடம் அரசாங்கத்துக்கு போனது.  1915ல் அவருக்கு 21 வயதானதும் மடத்தின் நிர்வாகம் அவரிடம் திரும்பியது.
     87 வருடங்கள் மடத்தின் தலைவராக இருந்தார்.  வடக்கே வாரணாசிக்கும் தெற்கே ராமேஸ்வரத்துக்கும் பாதயாத்திரை சென்று வந்தார்.  சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்களை, ஆழமாக கற்றார்.  அவற்றை பரப்பவும் பலப்படுத்தவும் பல மாநாடுகளை நடத்தினார்.  பல அறக்கட்டளைகளை ஆரம்பித்து மடத்தை பலப்படுத்தினார்.  அவரின் காலம் பொற்காலம் எனப்படுகிறது.
     மடாதிபதிகள் பட்டு ஆடைகளை அணிவதே வழக்கம்.  அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்தபோது பட்டாடைகளை நீரில் எறிந்துவிட சொன்னார்.  கதர் ஆடைகளுக்கு மாறினார்.  தனது சீடர்களையும் அவ்வாறு செய்ய அறிவுறுத்தினார்.  கேரளத்தில் பரமாச்சாரியார் - காந்தியடிகள் சந்திப்பு நடந்தது.
     நேபாள மன்னர் இந்திய பிரதமர்கள் முதல் மிக முக்கியமானவர்கள் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.  ஆனாலும், ஏழை பணக்காரர் அனைவரையும் சமமாக நடத்தினார்.  1994ல் ஜனவரி 8ம் நாளில் முக்தி அடைந்தார்.
-- தேசம்.
--  ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.                                       

Sunday, October 25, 2015

கள்ள ரூபாய் நோட்டு

  இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு பாகிஸ்தானே காரணாம்.
     துபாய், ஹாலந்தில் அச்சிட்டு வங்கதேசம் வழியாக அனுப்பப்படுகிறது.  இதற்கான தொழில்நுட்பங்களை மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரவழைத்து அச்சடிக்கின்றனர்.  வங்கதேசம் வழியாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும்போது, நேபாளம் வழியாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
     கள்ளநோட்டு விநியோகம் செய்பவர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதையே   2006-ம் ஆண்டில்தான் முதலில் தமிழக காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.  வேலூர் சி.எம்.சி.யில் இருதய அறுவை சிகிச்சைக்காக சேர்ந்த ஒருவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தன.
0.0006 சதவிகிதம் கள்ளநோட்டுகள்
     இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, "4 ஆண்டுகளுக்கு முன்புவரை கள்ள நோட்டுகளுக்கும், நல்ல நோட்டுகளுக்கும் சுமார் 13 வித்தியாசங்கள் இருந்தன.  ஆனால், தற்போதுள்ள கள்ள நோட்டுகளில் 2 வித்தியாசம் மட்டுமே உள்ளன.  கள்ள நோட்டுகளை அச்சடிப்பவர்களும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்"  .
     கள்ள நோட்டுகளே இல்லாத நாடு ஆஸ்திரேலியா.  இந்த நாட்டு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வழக்கமான காகிதத்தில் இல்லாமல், பாலிமரில் அச்சடிக்கப்படுகின்றன.
     இந்த நோட்டுகள் கசங்காது, கிழியாது.  இதை அச்சடிப்பதும் கடினம்.  இதற்கான தொழில் நுட்பம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.  அதற்கு ஆஸ்திரேலிய அரசின் உதவியையும் கேட்டிருக்கிறது.
-- ஆர்.சிவா.  மாநிலம்.
-- ' தி இந்து' நாளிதழ், புதன், ஜனவரி 8, 2014.  

Saturday, October 24, 2015

மறுநிர்ணயம் காலத்தின் கட்டாயம்!

   "சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட இந்திய நேரத்தைவிட , ஒரு மணி நேரம் அதிகம் இருக்குமாறு அசாமில் உள்ளூர் கடிகாரங்களில் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, தனி நேர மண்டலம் உருவாக்கப்படும் " என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் தருண் கோகோய்.
      அசாமில் கோடைக் காலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் நன்கு இருட்டிவிடுகிறது.  அசாமிலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத்தில், அசாமில் சூரிய உதயம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் சூரியன் உதயமாகிறது.
     இந்தியாவின் கால அளவு உத்தரப்பிரதேசத்தின் மீர்சாபூர் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி தீர்க்க ரேகையை அடிப்படையாகக்கொண்டே கணிக்கப்படுகிறது.  இந்தக் கோட்டுக்குக் கிழக்கே உள்ள மாநிலங்களுக்கு, மேற்கே உள்ள  மாநிலங்களைவிட மிகக் குறைவான பகல் பொழுதே கிடைக்கிறது.
     பகல் பொழுதை வீணாக்காமல் இருக்க பிரிட்டிஷார் 150 ஆண்டுகளுக்கு முன் 'சாய் பகான்' எனும் காலமுறையைக் கடைப்பிடித்தனர்.  அதை அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமல்படுத்தினர்.  அதனால் தொழிலாளர்கள் சூரிய உதயத்துக்கு ஏற்ப அதிகாலையிலேயே எழுந்து, வீட்டில் வேலையை முடித்துவிட்டு, தோட்ட வேலைக்கு வந்துவிடுவர்.  இதனால், அவர்களுடைய உழைப்பு நேரமும் உற்பத்தித் திறனும் இன்றளவும் வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
     இந்தியா மிகவும் பரந்துவிரிந்த தேசமாக இருப்பதால், இங்கு சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரே நேரத்தில் எல்லா
மாநிலங்களிலும் நடப்பதில்லை.  பொதுவான நேர நிர்ணயத்தால் சிற்சில சங்கடங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
-- 'தி இந்து' நாளிதழ். தலையங்கம். ஜனவரி 8,2014.  

Friday, October 23, 2015

'சுஜோக்' தெரபி.

  கொரிய மொழியில், 'சு' என்பது  கைகளையும் 'ஜோக்' என்பது பாதங்களையும் குறிக்கும்.  இரண்டும் இணைந்த வார்த்தை
'சுஜோக்'.  நமது உடலின் 'ரிமோட்' கன்ட்ரோலாக கைகளையும் பாதங்களையும் கருதலாம்.  உடலின் செயல்பாடுகள் இந்த இரண்டு உறுப்புகளிலும் பிரதிபலிக்கிறது.  எனவே, உடலின் எந்த பாகத்தில் வலி அல்லது நோய் ஏற்பட்டாலும் அதை புரிந்து கொண்டு அது தொடர்புடைய புள்ளி, நமது கைகள் அல்லது பாதங்களில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து 'அழுத்தம்' ( பிரஷர் ) தந்து அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு 'சுஜோக்' என்று பெயர்.  'அழுத்தம்' கொடுப்பது, வண்ணம் தீட்டிக் கொள்வது ( கலர் தெரபி ), பச்சை பயறு, மிளகு, வெந்தயம் போன்ற விதைகள் வைத்து அழுத்துவது ( சீட் தெரபி ), பிரத்யேக காந்தம் வைத்து டேப் மூலம் சுற்றுவது ( மேக்னட் தெரபி ) போன்றவை 'சு- ஜோக்' முறை வைத்தியத்தில் இடம்பெறுகிறது.
     தென்கொரியாவில் தோன்றிய இயற்கை மருத்துவ சிகிச்சை முறையுள் மருந்துகளே கிடையாது.  பேராசிரியர் 'பார்க் ஜெ வூ '
என்பவரால் உலகுக்கு உணர்த்தப்பட்ட 'சு- ஜோக்' வைத்திய முறையில், எல்லாவிதமான வலிகளையும் விரட்ட முடியும்.  உடலில் 14 விதமான சக்தி ஓட்டங்கள் உள்ளன.  கொரியா, சீனா, ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட இந்த மருந்தில்லா மருத்துவ முறை 1987ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது.  'சு-ஜோக்' மருத்துவர்கள் உலக அளவில் அமைப்பு வைத்துள்ளனர்.  இதன் மூலம் 'சு-ஜோக்' மருத்துவத்தின் நன்மைகளை மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.
--  தினமலர். 5-1-2014.  

Thursday, October 22, 2015

அப்படியா?!

*  அமெரிக்காவை மைனஸ் 51 டிகிரிக்கு உறைய வைத்த பனிப்புயல்.  20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.
   இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு.  மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம், போதுமான உணவை
   கையிருப்பில் வைத்துக் கொள்ளவும், ஐந்து நிமிடங்கள் வரை ஆடை மூடாத பகுதிகள் இந்த குளிரால் பெருமளவு பாதிக்கப்
   படும், கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டார்ட் செய்யமுடியாது, நீர் செல்லும் சாலைகளில் நீர் உடனடியாக உறைந்துவிடும்,
   குடிநீர் குழாய்கள் உறைந்து வெடித்து விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன.  இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை
  கொண்டவை அல்ல.  மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை.  இருந்தும் மேகங்கள் பால்
  போன்ற வெண்மை நிறத்தில் இருப்பது ஓர் ஆச்சர்யமான அறிவியல் உண்மை.
--   ' தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஜனவரி 7, 2014. 

Wednesday, October 21, 2015

குச்சி ஐஸ் !

 1905 ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பிராங்க் எபெர்சன் வீட்டில் சோடா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  இதற்காக பல முயற்சிகளை கையாண்ட அவர், வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்தில் அவற்றை ஊற்றி ஒரு குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார்.  பின்னர் இரவில் சீதோஷ்ண நிலை மாறி பனிகொட்டியது.  அடுத்த நாள் காலையில் அவர் அதை பார்க்க நேர்ந்தபோது, அது அப்படியே குச்சியுடன் இணைந்து ஐஸ் ஆனது.  11 வயது நிரம்பிய எபெர்சன் அதை பெரிய கண்டுபிடிப்பாக கருதவில்லை.  ஆனால், அவருக்கு 18 வயதானபோது, அவருக்கு அது நினைவுக்கு வந்தது.  இதனால் அதே பணியில் 7 வகையான பழரச சுவையுடன் குச்சியில் செருகி குச்சி ஐஸ் விற்பனையைத் தொடங்கியதோடு, அவற்றுக்கு காப்புரிமையையும் பெற்றார்.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 5-1-2014.   

Tuesday, October 20, 2015

பொன்மொழி

*  மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும்.  இந்த நியதிக்கு யாரும் விதி
   விலக்கு அல்ல.  - புத்தர்.
*  உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்.  காலம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும்.  இனி அழுகை என்ற
   பேச்சே இருக்கக் கூடாது.  சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.  -- சுவாமி விவேகானந்தர்.

Monday, October 19, 2015

புதிய தீவு

எரிமலை வெடிப்பால் ஜப்பான் அருகே புதிய தீவு உதயம்.
     பசிபிக் பெருங்கடலில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்புகளால் ஜப்பான் அருகே குட்டித் தீவு புதிதாக உருவாகியுள்ளது.
     இந்த சிறுதீவு 660 அடி சுற்றளவு கொண்டது.  போனின் தீவுகள் என அழைக்கப்படும் ஆளில்லாத் தீவு அருகே இந்த புதிய தீவு  உருவாகியுள்ளது என ஜப்பான் வானியல் ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.
     டோக்கியோவிலிருந்து தென் திசையில் 1,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் 30 சிறு தீவுகள் உள்ளன.  இவை, பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் எரிமலை வெடிப்புகளால் உருவானவை.  எரிமலை தொடர்ந்து குழம்பை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் அடர்கரும்புகை, சாம்பலுடன் வெளியேறியபடி உள்ளது.
     கடந்த 1970ஆம் ஆண்டுகளின் மத்தியில் இப்பகுதியில் உள்ள எரிமலைகள் குமுறத் தொடங்கின.  அதற்குப் பிறகு தற்போதுதான் எரிமலகள் லேசாக குமுறி வருகின்றன.
     ஜப்பான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " எவ்வளவு சிறிய தீவாக இருந்தாலும், அது ஜப்பானின் ஆட்சிப் பரப்புக்குள் வருவது வரவேற்கத்தக்கது.  இது போன்று ஏற்கனவே பல தீவுகள் உருவானதும், காணாமல் போனதும் நிகழ்ந்துள்ளது" என்றார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
---   ' தி இந்து' நாளிதழ். வெள்ளி,நவம்பர் 22, 2013. 

Sunday, October 18, 2015

' பிறை தெரிந்துவிட்டது...'


 இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு.  கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்.
     கி.பி. 6 -7 ம் நூற்றாண்டின் மானசாரம் கட்டிடக் கலை மற்றும் சூரியனின் நகர்வு அடிப்படையிலான நாட்காட்டியைக் கொண்டு பழந்தமிழர் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு இன்று ( ஜனவரி 5ம் தேதி ) பிறப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
     இது குறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியதாவது :
     சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர்.  அதன் அடிப்படையில்  இன்று ( 5.1.2014 ) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.  சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள்.  சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும், தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது.  தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றனர்.
     அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை ( ஜனவரி 1-ம் தேதி ) முடிந்த மூன்றாம் நாள் ( ஜனவரி 4-ம் தேதி ) மாலை பிறை தெரியும்.  அதற்கு மறுநாள்தான் ( ஜனவரி 5-ம் தேதி ) தை முதல் நாள்.  ராஜராஜசோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.
     12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும்.  அதன் பெயர் 'ஆட்டைத் திருவிழா.'  இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.
     அதன் அடிப்படையில் இன்று மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
     இவ்வாறு தென்னன் மெய்ம்மன் கூறியுள்ளார்.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014.                                    

Saturday, October 17, 2015

பொது அறிவு

*  ஒரு நாளைக்கு ஒரு நபர் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு 1.5 லிட்டர்.
*  ஒரு மனித மூளையில் உள்ள செல்கள் அல்லது நியூரான்களின் எண்ணிக்கை 10,000 கோடி.
*  நிலநடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி.பி.132 ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர்.  ரிக்டர் வடிவமைத்த
   அளவிகோல், நிலநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமே கூறும்.
*  தன்னைத் தானேயும், சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கும் பூமிப் பந்தின் மீது சூரியனும், நிலவும் செலுத்தும் ஈர்ப்பு விசை
   காரணமாகவே கடலில் பல்வேறு வகை அலைகள் ( உயர் அலை, தாழ்வு அலை, அலை ஏற்றவற்றம் ) ஏற்படுகின்றன. 

Friday, October 16, 2015

வலைஞர் வாக்கு.

*  நாம் பெற்ற குழந்தையைப் போன்றது பொய் !  மிகக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.  -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
*  பெண் தனக்கு பாதுகாப்பான தூரத்தில் ஆணை நிறுத்திவிடுகிறாள்.  ஆணின் துரதிர்ஷ்டம் அது நடுத் தெருவாக
    அமைந்துவிடுகிறது.  -- அரசு.
*  விட்டுக்கொடுக்காமல் ஒரு சாலையையே கடக்க முடியாது.  வாழ்க்கையை எப்படி கடக்க முடியும். - அசோக் குமார்.
*  கல் கிடைக்கும்வரை நாய் மீது அன்புகாட்டுங்கள்... ராஜதந்திரம்...!  - சத்தியம்.
*  முதுகில் குத்துபவன் நண்பனாகவோ, எதிரியாகவோதான் இருக்க வேண்டும் என்று இல்லை.  மசாஜ் பார்லர் பெண்ணாகவும்
   கூட இருக்கலாம்.  - ரைட்டர் பிசாசு.
*  கொசு மாதிரி சாப்பாட்டுக்கு அலையக் கூடாது !  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வர வைக்கணும்!  அதான்
   வெற்றி!   --  ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
--   ' தி இந்து' நாளிதழ்களிலிருந்து

Thursday, October 15, 2015

தெரிந்ததும் தெரியாததும்.

  கரஹரப்ரியா, ஸ்ரீரஞ்சனி, ஆபோகி ஆகிய மூன்று ராகங்களும் ஒரே பரம்பரையில் உள்ளவை.  கரஹரப்ரியா ஒரு சம்பூர்ண மேளகர்த்தா ராகம்.  அதன் மேளம் 22.  அதிலிருந்து பஞ்சமத்தை அகற்றினால் ( வர்ஜ்யம் ).  அதுவே ஸ்ரீரஞ்சனி.  பஞ்சமமும் நிஷாதமும் ( நி) இல்லாமல் பாடினால் கிடைப்பது ஆபோகி.  இது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.  தெரியாதது இதுதான்.  வீணைக்கென்றே பிறப்பெடுத்த எஸ்.பாலசந்தர், இந்த மூன்று ராகங்களையும் சற்றும் சுவை குன்றாமல் உரிய சிரமத்துடன் ஆல் இந்தியா ரேடியோ கச்சேரி ஒன்றில் அடுத்தடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார்.
-- எஸ்.சிவகுமார்.  இசை நாட்டியம் நாடகம்.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014. 

Wednesday, October 14, 2015

செல்போன் சார்ஜ் ஆகும்!

நடந்தால் போதும்...செல்போன் சார்ஜ் ஆகும்!
     செல்போனில் சார்ஜ் குறைகிறதே என்று பிளக் பாடின்ட் தேடி ஓடவேண்டிய அவசியம் இனி இல்லை.  செல்போனை பாக்கெட்டில் வைத்து நடந்தாலே போதும்... சார்ஜ் ஆகிவிடும்.
     மொபைல் ஜெனெரேட்டர் ஜேனியோ ( mobile generator genneo ) என்ற சாதனம் நாம் நடப்பது, ஓடுவது, குதிப்பது, கையாட்டுவது போன்ற மனித அசைவுகளிலிருந்து பெறப்படும் சக்தியை வைத்து செல்போன்களை சார்ஜ் செய்கிறது.  பத்து இஞ்-க்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சாதனத்தை சட்டைப் பையிலோ, கைப்பையிலோ வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.  நமது அசைவுகளை சக்தியாக மாற்றி அதன் பேட்டரியில் சேமித்துகொள்ளும்.  இந்த சாதனத்துடன் கொடுக்கப்படும் யு.எஸ்.பி. கேபிளைக் கொண்டு தொடுதிரை செல்போன்கள், டேப்லட்கள், ஐ-பாட், கேமரா போன்ற தொழில்நுட்ப சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
     அமெரிக்காவின் ஜெனியோ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாதனம் இரண்டு விதங்களாக அறிமுகப்படுத்தப்படுகிறது.  G4000 என்ற வடிவம் 9.7 இஞ்ச் நீளம் கொண்டது.  இதை ஐந்து மணி நேரம் பையில் வைத்து எடுத்துச் சென்றால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும்.  மற்றொன்று G3000.  இது 8.2 இஞ்ச் நீளமுள்ளது.  இதை ஏழு மணி நேரம் பையில் வைத்திருந்தால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும்.
     எதிர் காலத்தில் சூரிய மற்றும் மனித நடவடிக்கைகளின் சக்திகளை நோக்கித்தான் உலகம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கைகளை ஆட்டுவது, நடப்பது போன்ற செயல்களால் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பு இருந்தன.  அதேபோல, இப்போது வரும் சாதனமும் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
     ஆபத்தான நேரங்களில் உடனடியாக சார்ஜ் வேண்டுமானால் அந்த சாதனத்தை ஒரு நிமிடம் வேகமாக ஆட்டினால் மூன்று நிமிடங்கள் வரை பேச முடியும்.  மின்சார வசதி இல்லாத மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகளிலும், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற அவசரக் காலத்திலும் இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-- வி.சாரதா.
--  ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர், 22, 2013. 

Tuesday, October 13, 2015

காபி கு(ப)டிக்கலாமா...?

  பில்டர் காபி அல்லது தூள் காபி இதுதான் நமக்குத் தெரிந்த காபி வகைகள்.  இன்னும் கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினால் லைட் காபி, மீடியம், ஸ்டிராங் என்று உட்பிரிவுகளாக்கி வகைப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரிடம் காபி பற்றி கேட்டுப் பாருங்கள்.  எல்லாம் புதிதாக முளைத்துவரும் காபி ஷாப்புகள் உபயம்.  உலகளவில் புகழ்பெற்ற காபி வகைகள். இப்போது நம்மூரிலும் கிடைக்கின்றன.  அப்படி எத்தனை வகை காபிகள்தான் இருக்கின்றன...? கொஞ்சம், குடித்து, சாரி...படித்துப் பார்ப்போமா...?
எஸ்ப்ரசோ ( espresso )
எஸ்ப்ரசோ மாச்சியாடோ ( espresso macchiato ).
காப்பசீனோ ( cappuccino )
காபி லட்டே ( cafe latte ).
மோக்கசினோ ( mocha chino ).
அமெரிக்கானோ ( americano ).
ஐரிஷ் காபி ( irish coffee ).
டர்கிஷ் காபி ( turkish coffee ).
வெள்ளை காபி ( white coffee ).
பில்டர் காபி ( filter coffee ).
--  சண்டே ஸ்பெஷல்.  தினமலர். இணைப்பு. 5-1-2014.  

Monday, October 12, 2015

கொலுப்படிகள்

  ( சிறப்பு )
     நவராத்திரிப்  பண்டிகை  என்று  ஒன்பது  நாட்களைக்  குறிக்கும்  இப்பண்டிகையைக்  கொலுப்பண்டிகை  என்ற  பெயரிலும்  பொருத்தமாக  அழைப்பது  இப்பண்டிகைக்கே  உள்ள  தனிச்சிறப்பு.
படி  ஒன்று :......ஓரறிவு  உயிரிகளான  புல், செடி, கொடி  போன்ற  தாவரங்களின்  பொம்மைகளைப்  படி  ஒன்றில்  வைக்கப்பட
                           வேண்டும்.  தவிரப்  பொதுவாகக்  கொலு  வைக்கும்  இல்லங்களில்  பூங்கா  அமைப்பது  உண்டு.
படி  இரண்டு:....ஈரறிவு  கொண்ட  நத்தை, சங்கு  போன்ற  பொம்மைகள்  அந்த  காலத்தில்  திண்ணைகளில்  அமர்ந்து  சோழி
                           உருட்டி  விளையாடுவது  வழக்கம்.  இந்தச்  சோழிகளையும், சோழிகளால்  செய்யப்பட்ட  பொம்மைகளையும்
                           இந்தப்  படியில்  வைக்கலாம்.
படி  மூன்று :.....மூன்றறிவு  உயிர்களான  கரையான், எறும்பு, சிறு  பூச்சிகள், மண் புழு  ஆகியவற்றின்  பொம்மைகள்.
படி  நான்கு :.....நான்கறிவு  உயிர்களான  நண்டு, வண்டு, பட்டா,பூச்சி  ஆகியவற்றின்  பொம்மைகள்.
படி  ஐந்து :........ஐந்தறிவு  உள்ள  மிருகங்கள், பறவைகள்  ஆகியவற்றின்  பொம்மைகள்.
படி  ஆறு :.........ஆறறிவு  மனிதர்களின்  பொம்மைகளை  வைக்க  வேண்டும்.  சாதனையாளர்கள், உலகத்  தலைவர்கள்
                           ஆகியவற்றை  வைத்தால்,  இல்லத்திற்கு  வரும்  விருந்தாளிகள்  அச்சிலையில்  உள்ளவர்களின்  சாதனைகளை
                            நினைவுகூற  முடியும்.
படி  ஏழு : ..........மனித  நிலையிலிருந்து  உயர்நிலையை  அடைந்த  சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள்  ராமகிருஷ்ண  பரமஹம்சர்,
                            விவேகானந்தர், ரமணர், வள்ளலார்  முதலானோரின்  பொம்மைகள்.
படி  எட்டு :........தேவர்கள், அஷ்டதிக்  பாலகர்கள், நவக்கிரக  அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய  தெய்வ  உருவங்களை
                            மண்  பொம்மைகளாக  வைக்கலாம்.
படி  ஒன்பது :     பிரம்மா, விஷ்ணு, சிவன்  ஆகியொரின்  சிலையுடன்  அவ்வவர்களின்  தேவியருடன்  அமைந்திருக்குமாறு  இந்த
                            மேல்  உச்சிப்படியில்  வைக்க  வேண்டும்.  இவற்றின்  நடுவில்  ஆதிபாராசக்தி    இருக்குமாறு  அமைக்க
                            வேண்டும்.
-- விக்னேஷ்  ஜி.                  
-- 'தி இந்து'  நாளிதழ்.  ஆனந்த  ஜோதி  இணைப்பு.  வியாழன்,  அக்டோபர்  8, 2015. 

ஹிட்லர் - ஈவா.

 வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த ஹிட்லர் திடீரென்று, " கோயபெல்ஸ், என் உயிலை டிக்டேட் பண்னப் போகிறேன்.  எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார்.
     கலங்கியவாறு நின்ற கோயபெல்ஸ், அதற்குத் தயாரானார்.  ஹிட்லர் சொல்ல ஆரம்பித்தார் :
   " இத்தனை காலப் போராட்டத்தின் இடையில் திருமணம் என்கிற பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாமல் போனது.  எனக்காகவே வாழ்ந்து, கடைசிவரை என்னைப் பிரியாமல் துணைநிற்கும் ஈவாவை, இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்வதற்கு முன்பு, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்.  ஈவா அவளாகவே என்னிடம் வந்தாள்.  என் சுக துக்கங்களில் பங்கு கொண்டாள்.  என்மீது அவள் வைத்திருந்த காதல் ஆச்சரியமானது.  என்னோடு தானும் இறக்கவேண்டும் என்பது அவள் விருப்பம்.  மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்துக்கொண்ட நான், அவளுக்கென்று எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை.  மரணத்தையாவது நாங்கள் கைகோற்த்து ஒன்றாக சந்திக்கிறோம்..." என்று முடித்தார்.
     பெருமிதத்துடனும், வேதனையுடனும், விம்ம ஆரம்பித்தார் ஈவா.
---மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில்...
--- சண்டே ஸ்பெஷல்.  தினமலர். இணைப்பு. 5-1-2014.

Sunday, October 11, 2015

இணைய வெளியிடையே...

*  சாத்தானுக்கு பெண்பால் இல்லை,  தேவதைக்கு ஆண்பால் இல்லை!
   araathu@ twitter.com
*  மனைவியே உலகம் என்று சொல்லிக்கொள்பவர்கள் மனதிற்குள் மாயன் காலண்டர் விரும்பிகளாக இருப்பார்கள்.
    உலகம் எப்போ...
    dimitry@facebool.com
*  உன்னோடு சண்டையிட்டு மீண்டும் பேசி விடுவதற்கு இடையேயான குறுகிய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாதென் மரணம்!!
    babypriya@twitter.com
*  மருத்துவமனையில் செய்யப்படும் பல சோதனைகளின் போது அவர்களை அறியாமலேயே நம் பொறுமையையும்
   சோதிக்கிறார்கள்!
   priya@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.  தினமலர். இணைப்பு. 5-1-2014.   

Saturday, October 10, 2015

'பெரிஸ்'!


எல்லா வயதினருக்கும் பொருந்தும் 'பெரிஸ்'
சிகிச்சையின்போது பிராணவாயு செலுத்தும் புதிய கருவி.
     அறுவைச் சிகிச்சையின்போது எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும்வகையில் சீராகவும், எளிதில் கையாளக்கூடியதுமான பிராணவாயு செலுத்தும் புதிய கருவி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமியால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
     " அறுவை சிகிச்சை அரங்குக்குள் நோயாளியின் அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சீராக இருக்கிறதா,எந்த உறுப்பிலாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அளவிடுவோம்.  இதை அடிப்படையாகக் கொண்டுதான், நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய மயக்க மருந்தின் அளவு, செயற்கை சுவாசத்தின் அளவு போன்றவை முடிவு செய்யப்படும்.
       பிராணவாயுவைக் கொடுக்க நோயாளியின் வயதுக்கேற்ப கருவியை உபயோகிக்க வேண்டி இருந்தது.  குழந்தைக்கு, சிறியவர்களுக்கு, பெரியவர்களுக்கு தகுந்தாற்போல் கருவியில் பிராணவாயு வெளிப்படுத்தும் திறனைக் கூட்டிக் குறைத்துபயன்படுத்தவேண்டியிருந்தது.
      இதனால் அறுவைச் சிகிச்சை நேரத்தில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுவதோடு, நோயாளியின் ரத்த அழுத்தம் போன்றவைகளை அளப்பதிலும் சிரமம் இருந்தது.  இது குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை, கொச்சியில் 1999-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இந்திய அளவிலான கருத்தரங்கில் சமர்ப்பித்தேன்.  அதன்பிறகு, மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தை அணுகி கருவியும் தயாரிக்கப்பட்டது.  பெரியசாமி என்னும் எனது பெயரின் தொடக்கமாக " பெரிஸ்" என்ற பெயரில், 2010 -ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்துள்ளது.  இந்தக் கருவிக்கான காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.
-- கே.சுரேஷ்.  பூச்செண்டு.
--  ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர், 22, 2013.                               

Friday, October 9, 2015

விவாதி ராகங்கள்.

 .' விவாதி ராகம் என்றால் என்ன?'
      எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ' ஆள் மாறாட்டம் ' போல ' ஸ்வர மாறாட்டம் '.  கர்னாடக சங்கீதத்தில் உள்ல ஏழு ஸ்வரங்களில் 'ஸ', 'ப'  தவிர இதர ஐந்து ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் 'மேல்' என்றும் 'கீழ்' என்றும் பகுக்கப்படுகின்றன. இதில்,ஒரே  ஸ்வரத்தில் மேல் மற்றும் கீழ் பிரிவுகள் ஒரே ராகத்தில் அமைந்தால் அவற்றைப் பாடுவது கடினம்.  உதாரணமாக, 'மேல் க', 'கீழ் க'  ( அதாவது, காந்தாரம்) ஆகிய இரண்டும் ஒரே ராகத்தில் இடம் பெற்றால், 'க',  'க' வென்று பாடுவது சற்று குழப்பமாகத் தோன்றும்.  அப்படிப்பட்ட ராகங்களில் கீழ் 'க' வின் பெயரை 'ரீ' என்று மாற்றி அமைக்கிறது சங்கீத சாஸ்திரம்.  இந்த மூன்றாவது 'ரீ' ( சதுஸ்ருதி ரிஷபம் ) ஒரு விவாதி ஸ்வரம்.  இப்படி நான்கு விவாதி ஸ்வரங்கள் உள்ளன.  விவாதி ஸ்வரங்கள் இடம்பெறும் ராகங்கள் விவாதி ராகங்கள்.  இந்த விவாதி ஸ்வரத்திற்கும் அதற்கடுத்த ஸ்வரத்திற்கும் நடுவே உள்ள இடைவெளி மிகக் குறைவாக இருப்பதுதான் சங்கீதக்காரர்களுக்குத் தலைவலி.
      கர்னாடக சங்கீதத்தின் 72 மேளகர்த்தா ( அல்லது 'தாய்' ) ராகங்களில் 40 விவாதி மேளங்கள்.  இவற்றிலிருந்து பிறக்கும் நூற்றுக்கணக்கான ஜன்ய ராகங்களும் விவாதி ராகங்கள்.  இந்த விவாதி ராகங்களைப் பாடக் கூடாது.  பாடுவது மங்களகரம் அல்ல, விவாதி தோஷம் வந்து சேரும் என்பது ஒரு சிலரின் கருத்து.  அந்தக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் அப்படிப்பட்ட கருத்து பரவியிருந்தது.  தியாகராஜா சுவாமிகள்கூட ஐந்து பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் இரண்டு ( நாட்டை, வராளி ) விவாதி ராகங்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே, என்பது எதிர்க் கருத்து.
      இக்காலத்திலும் சிலர் ' அமங்கலம்', 'தோஷம்' என்றெல்லாம் நினைக்காவிட்டாலும், விவாதி ராகங்கள் விஸ்தாரமாகப் பாட இடம் தராதவை.  அவற்றில் 'உயிர்' இல்லை என்று பல சங்கீத வித்தகர்கள் கருதுவதுண்டு.
     பிரபல சங்கீத மேதை ஜேசுதாஸ் ' விவாதி வேண்டும்' என்கிற கட்சியைச் சேர்ந்தவர்.  முதல் மேளகர்த்தாவான கனகாங்கி என்ற விவாதி ராகம் கைக்குள் வர வேண்டும் என்று நான்கு ஆண்டுகள் பயிற்சி செய்தேன் என்று அடிக்கடி சொல்லுவார்.  இம்முறை சென்னை கல்சுரல் அகாடமியில் 36ஆம் மேளகர்த்தாவான சலநாட்டை ராகத்தை, அதன் லட்சணங்களை விளக்கி, பாடி, பிய்த்து உதறிவிட்டார்.  ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களைப் பாடி தூள் கிளப்பிவிட்டார்.
-- ம.ரமேஷ்.   இசை நாட்டியம் நாடகம்.
-- ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, ஜனவரி 3,2014. 

Thursday, October 8, 2015

பொன்மொழி

*  ஆங்கிலேயர்கள் இல்லாமலேயே ஆங்கில ஆட்சியை விரும்புகிறோம்.  புலி இருக்கக் கூடாது.  ஆனால், புலியின் சுபாவம்
    இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.  - மகாத்மா காந்தி.
வலைஞர் வாக்கு.
*  நண்பன் ஜெயிச்சதுல இருக்குற சந்தோஷத்தைவிட நம்ம கூட அவனும் தோத்து உக்காந்தா கிடைக்கற சந்தோஷம் ஜாஸ்தி !
பொது அறிவு.
*  எந்த ஒரு மனிதனாலும் கண்ணைத் திறந்துகொண்டு தும்மல் போட முடியாது.
எண்ணங்கள்
*  நான் இப்போதும் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தனாகவே வாழ்கிறேன்.  அதற்காக எனக்கு ஒரு பக்குவம் வரக் கூடாதா என்ன...
   ரோம சாம்ராஜ்யம் எங்கள் முன்னோர்களைச் சிந்திக்கவிடாமல் சிலுவையைச் சாத்தி அமைதியாக்கியதுபோல, என்னையும்
   சிந்திக்காமல் அமைதியாக்கிவிட முடியாது.  பைபிளையும் ஜெபமாலையையும் பிரம்மாண்டமான தேவாலயங்களையும் எங்கள்
   பொறுப்பில் விட்டுவிட்டு, எங்கள் சொத்துகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். -- எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.  

Wednesday, October 7, 2015

இந்திய நாணயங்கள்.


     ஒரு ரூபாய் நோட்டை கரன்சி என்றும் பிற ரூபாய் நோட்டுகளை பேங்க் நோட் என்றும் சொல்வார்கள்.  எல்லாவிதமான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் வடிவங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.  ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு இந்த வடிவங்களுக்கான சிபாரிசுகளை மத்திய அரசுக்கு அனுப்பும்.
     கரன்சி நோட்டுகள் நாசிக்கில் அச்சடிக்கப்படுகின்றன.  பேங்க் நோட்டுகள் தேவாஸ் என்ற இடத்தில் அச்சடிக்கப்படுகின்றன.  சல்போனி மற்றும் மைசூர் ஆகிய இடங்களிலும் இவை அச்சடிக்கப்படுகின்றன.
--  குட்டீஸ் சந்தேக மேடை ?!  . ஜி.எஸ் .எஸ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.                         

Tuesday, October 6, 2015

ஆதார் அட்டை.

  அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அதிகாரபூர்வ எண் உண்டு.  இதன் மூலம் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட அத்தனை முக்கிய தகவல்களையும் அரசினால் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்க முடியும். அவரைப் பற்றிய பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அல்லது அவரது குற்றப்பின்னணி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ, ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம்.
     இதுபோன்ற ஒரு எண் கொண்டதுதான் ஆதார் அட்டை.  உலகில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை இந்த எண்ணைக் கொண்டு சரிபார்க்க முடியும்.  இதை ஏற்கத்தக்க அடையாளமாகப் பயன்படுத்த முடியும்.  வங்கிக் கணக்கு தொடங்க, பயணச் சீட்டுகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்ள, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இப்படி பல விதங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-- குட்டீஸ் சந்தேக மேடை ?!  . ஜி.எஸ் .எஸ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.  

Monday, October 5, 2015

ஒரே விசா


வளைகுடா நாடுகளுக்கு விரைவில் ஒரே விசா.
     வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ( ஜி.சி.சி) உள்ள நாடுகளுக்கு ஒரே விசாவில் சுற்றுப் பயணம் செய்ய அனுமதிக்கும் முறை விரைவில் அமலாக உள்ளது.  இந்த கவுன்சிலில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இதன்மூலம் அந்த நாடுகளுக்கு ஒரே விசாவில் செல்லலாம்.
-- பி.டி.ஐ.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 26 2013.                                      

பிளாஸ்டிக் அரிசி

  (  சிறப்பு  )
     பிளாஸ்டிக்  அரிசி  குறித்த  பீதி  பல  தரப்பினரிடமும்  அதிகரித்துள்ளது.  தாவரத்தில்  இருந்து  விளையக்கூடிய  ஒரு  தானியத்தை,  இயந்திரங்களின்  உதவி  மூலம்  செயற்கையாக  உற்பத்தி  செய்யும்  இந்த  புதிய  முறை  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
எது பிளாஸ்டிக்  அரிசி?
     உண்மையில்  பிளாஸ்டிக்  அரிசி  என்பது  பிளாஸ்டிக்கில்  செய்யப்படுவதில்லை.  உருளைக்கிழங்கு  மற்றும்  சர்க்கரைவள்ளிக்  கிழங்குடன்  செயற்கைப்  பிசினைக்  கலந்து, பிளாஸ்டிக்  அரிசி  செய்யப்படுவதாகச்  சொல்லப்படுகிறது.  ஏற்கனவே  தங்கள்  நாட்டு  உயர்ந்த  அரிசி  வகையிலேயே  போலியைத்  தயாரித்து  விற்பனை  செய்த  சீனா, தற்போது  முழுக்க  முழுக்க  செயற்கை  அரிசியைத்  தயாரிக்க  ஆரம்பித்துவிட்டது.
எப்படிக்  கண்டுபிடிப்பது?
     பிளாஸ்டிக்  அரிசி  தனியாக  விற்பனை  செய்யப்படுவதில்லை.  இவை  அரிசியுடன்  கலக்கப்பட்டே  விற்பனைக்கு  வருகின்றன.  தவிர, சமைத்தால்  மட்டுமே  அரிசியில் பிளாஸ்டிக்  அரிசி  கலப்படம்  செய்யப்பட்டிருப்பதைக்  கண்டுபிடிக்க  முடியும்.  சமைத்த  பிறகு  பிளாஸ்டிக்  அரிசி  முழுவதும்  வேகாமல்  முரட்டுத்தன்மையுடன்  இருக்கும்.  பொதுவாக  அரிசியை  வேகவைத்தால்  அதிலிருக்கும்  ஸ்டார்ச்,  மேலே  படலமாகப்  படியும்.  பிளாஸ்டிக்  அரிசி  வேகும்போது  கண்ணாடி  போன்ற  படலம்  வரும்.  இதை  வெயிலில்  காயவைத்தால்  மெல்லிய  பிளாஸ்டிக்  ஷீட்  போல  மாறிவிடும். பிளாஸ்டிக்  அரிசியை  நெருப்பில்  காட்டினால்  சர்க்கரைவள்ளிக்  கிழங்கின்  மணம்  வெளிப்படும்.
     சர்க்கரையில்  கலந்திருக்கும்  ரவையையும்,  மிளகுடன்  கலக்கப்பட்டிருக்கும்  பப்பாளி  விதையையும்  நம்மால்  கண்டுபிடித்துவிடுகிற  மாதிரி பிளாஸ்டிக்  அரிசியை  எளிதில்  அடையாளம்  காணமுடியாது.  இதற்கென  இருக்கும்  ஆய்வகங்களின்  துணையோடு  மட்டுமே  இந்த  ரசாயன  அரிசியை, திட்டவட்டமாக  இனம்  காணமுடியும்.
என்னென்ன  பாதிப்பு?
      பிளாஸ்டிக்  அரிசி  எளிதில்  ஜீரணமாகாது.  தொடர்ந்து பிளாஸ்டிக்  அரிசியை  சாப்பிட்டுவந்தால்,  பிளாஸ்டிக்  பைகளை  உட்கொள்வதற்குஸ்  சமமான  பாதிப்புகள்  ஏற்படலாம்.  குடலியக்கச்  செயல்பாடு  சார்ந்த  பிரச்னைகளில்  தொடங்கி  மரணம்  வரை  இது  இட்டுச்செல்லும்  ஆபத்து  இருக்கிறது.
     "அரிசியில்  இருக்கிற  கார்போஹைட்ரேட்டுக்கு  இணையாக  ரசாயனம்  மூலம்  அரிசி  தயாரிப்பது  எந்த  வகையில்                                நியாயம்"
-- பிருந்தா  சீனிவாசன்.  ( நலம்  வாழ ). இணைப்பு .
--  'தி இந்து' நாளிதழ். சனி,  ஜூலை, 18, 2015. 

Sunday, October 4, 2015

அப்படியா!

*  சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
*  இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*  வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டைய்டும்.
*  மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை.  இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
*  ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*  கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
*  இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
*  சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014. 

Saturday, October 3, 2015

' செக்ஸ் '

*  2013 -ம் ஆண்டு இனையத்தில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம்!  இந்தியா இரண்டாம் இடம் பிடிக்க,  கிழக்கு தைமூர், எத்தியோப்பியா, வங்காளதேசம்... ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.  இந்த டாப்-10 பட்டியலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் எதற்கும் இடம் இல்லை என்பதுதான் ஹைலைட் !  -- அந்த நாடுகள்ல ' அதுக்கு ' வேற வார்த்தை!
*  பறவைகள் தற்கொலையாலேயே பிரபலம் அடைந்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம்.  ஒவ்வொரு வருடமும் இந்தக் கிராமத்துக்கு இடம்பெயர்ந்துவரும் ஆயிரக்கணக்கான பறவைகள், அங்கேயே இறந்துவிடுகின்றன.  இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது என பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சுற்றுச் சூழல் ஆய்வகம்.  செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை பறவைகள் இறப்பு சதவிகிதம் அதிகரிக்க, கிராம மக்கள் பயன்படுத்தும் விளக்கு வெளிச்சம்தான் காரணம்.  அங்கு மட்டும் பூமியின் காந்த சக்தி அதிகமாக உள்ளது என ஆளூக்கொரு காரணம் சொன்னாலும், இன்னமும் அழுத்தமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.  --  பறவைகளைக் காப்பாத்துங்க ப்ளீஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 8-1-2014.  

Friday, October 2, 2015

நிகழ்ந்ததும் நிகழாததும்

 கன்னட பக்தி இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பெயர் அக்கா மகாதேவி.  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கா மகாதேவி, சைவ பக்தி மரபில் வந்தவர்.  சிவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு கவிதைகள் புனைந்தவர்.  மனிதக் காதலை நிராகரித்து தீராக்காதலோடு இறைவனைக் கண்டடைய முனைபவை அவரதது கவிதைகள்.
அது லிங்கம் என்று நான்
சொல்லவில்லை
அது லிங்கத்துடனான
இணைதல் என்று நான்
சொல்லவில்லை
அது ஒற்றுமை என்று
சொல்லவில்லை
அது இசைவு என்று
சொல்லவில்லை
அது நிகழ்ந்துவிட்டது என்று
நான் சொல்லவில்லை
அது நிகழவில்லை என்றும்
சொல்லவில்லை.
அது நீ என்று சொல்லவில்லை
அது நான் என்றும்
சொல்லவில்லை.
சென்ன மல்லிகார்ஜுனாவின்
லிங்கத்துடன் இணைந்த பிறகு
நான் எதுவும் சொல்லவில்லை.
என்ற கவிதை அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளில் கவிந்திருக்கும் கவித்துவ அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
-- கவிதா முரளிதரன்.  கலை இலக்கியம்.
--  ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.  

Thursday, October 1, 2015

தெரிந்து கொள்ளுவோம்!

*  அதிக பிராண வாயு தரும் மரங்களை வளர்த்தால், மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  ஒரு வளர்ந்த அரச மரம்
   1,800    கிலோ  கரியமில வாயுவை உள் இழுத்து 2,400 கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது.
*  பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
*  இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன.  மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும்
   பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது.  அதனால், நெப்பந்தசேயி காசியானா என்பது தாவரவியல் பெயர்.  கடல் மட்டத்தில்
   இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.  ஈரமிக்க காடுகள், சதுப்பு நிலங்கள்,
   குட்டை ஓரங்களில்  நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
*  பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், குளமங்கலத்தில் சுற்றுச்சூழலுக்குக் கேடு
   விளைவிக்கும் விதமாக அதிகளவில் குவிந்து ஆண்டுக்கணக்கில் மக்காமல் கிடக்கும் பிளாஸ்டிக் மாலைக்கு தடை விதிக்க
   வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
*  கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வானகம் என்ற பண்ணைத் தோட்டத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்                உடல் அடக்கம் நேற்று 1.1.14 புதன்கிழமை , சித்தர்களின் ஆகம முறைப்படி செய்யப்பட்டது.
*  ராமாயணத்தில் வரும் சத்துருக்னனின் மனைவி பெயர் சுரீதகீர்த்தி.
-- ' தி இந்து ' நாளிதழ்களில் இருந்து.