Saturday, April 30, 2016

'நீர்'

  'நீரின்றி அமையாது உலகு'.  நம் உடலும் அப்படித்தான்.  உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான  பொருள் நீர்.  அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம்.  இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கற்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளே சான்று!
    'கலங்கியதோர் தண்ணீர்தான்
    குடித்த பேர்க்கும்
    வாட்டமாய் வரம்பு
    தப்பித் திரிந்த் பேர்க்கும்
    வந்து சேரும் கல்லடைப்பு'  என்று பாடிய யூகி முனிவரும் சரி, 'நான் சிறுநீரகக் கல்லுக்கு அறுவைசிகிச்சை செய்ய மாட்டேன்; மருத்துவம் செய்யவே பரிந்துரைப்பேன்' என ஹிப்போகிரட்டீஸ் செய்த சபதத்திலும் சரி,  சிறுநீரகக்கல் அடைப்புக்கு மேற்கொண்ட வைத்தியமே ஒசாமா பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அமெரிக்கா கண்டறிய உதவிய சமீபத்திய சம்பவமும் சரி... பெருங்காலமாக அந்தச் சிறு கல்லை மனிதன் சுமந்து வந்திருக்கிறான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை  தொடரில் ).
-- ஆனந்த விகடன் . 9-10-2013. 

Friday, April 29, 2016

ஆங்கிலம் அறிவோமே - 2

முதலீடா  தூக்குத் தண்டனையா.
     கேப்பிடல் ( capital ) என்றால் என்ன அர்த்தம்?  தலைநகர் என்ற அர்த்தம்  capital க்கு உண்டு.  இந்தியாவுக்கு புது டெல்லி  capital , அமெரிக்காவுக்கு வாஷிங்டன் டி.சி. capital, ஜெர்மனிக்கு பெர்லின் capital என்று அடுக்குகிறீர்களா?  "ஒவ்வொரு ஆங்கில வாக்கியத்திலும் முதல் எழுத்து பெரிய அதாவது capital லெட்டரில்தான் இருக்கவேண்டும்" என்கிறீர்களா?  மறுக்க முடியாது.  தொழிலில் செய்யப்படும் முதலீடும் capital தான்.
     capital பனிஷ்மென்ட் என்பது குறித விவாதம் இப்போது அதிகமாக நடைபெற்று வருகிறது - அதாவது தூக்குத்தண்டனை.  எதற்காகத் தூக்குத்தண்டனைக்கு  capital Punishment என்று பெயர்?   capital Letter என்பதுபோல் இந்தத் தண்டனையும் 'பெரியதாக' இருப்பதாலா? அல்ல.  ஆங்கிலத்தின் பல வார்த்தைகள் லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றிலிருந்து வந்தவை.  லத்தீன் மொழியில் 'capital' என்ற வார்த்தைக்கு 'தலை தொடர்பான' என்று பொருள்.  இப்போது புரிந்திருக்குமே ஏன் capital punishment என்ற பெயர் என்று.
     capital என்பதை வேறொரு விதத்திலும் பயன்படுத்தலாம்.  "இந்த கார் எப்படி இருக்கிறது?"  என்ற கேள்விக்கு"capital" என்று பதிலளித்தால், அந்தக் கார் முதல்தரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
     கிட்டத்தட்ட இதே எழுத்துக்கள் கொண்ட இன்னொரு வார்த்தை Capitol.  அரசுக் கட்டடங்களை இப்படிக் குறிப்பிடுவார்கள்.  அதுவும் நாடாளுமன்றம் போன்றவைகளை.
Divers  --  Diverse  --  Divorce
     உயரத்தில் உள்ள ஸ்பிரிங் பலகையிலிருந்து நீச்சல் குளத்தில் குட்டிக் கரணம் அடித்து விழுவார்கள். Diving செய்யும் இவர்களை Divers என்று கூறலாம்.  இவர்களுடன் ஒரு 'E' ஒட்டிக்கொண்டால், Diverse.  அப்படியென்றால் விவாகரத்து என்று சொல்லிவிடக் கூடாது.  அது Divorce ( விவாகரத்தை அனுமதிக்காத நாடுகள் பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிகன்).  அப்படியென்றால் Diverse என்றால் 'பல விதமான' என்று அர்த்தம்.  This is a country of diverce cultures என்பதுபோல.  எனக்குத் தெரிந்த ஒருவரிடம் இது பற்றிப் பேசியபோது, "திசைதிருப்புவது என்கிற அர்த்ததிலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்களே" என்றார்.  அடடா, அது Divert.
-- ஜி.எஸ். சுப்ரமணியன்.( aruncharanya@gmail.com ).  வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 21, 2014.  

Thursday, April 28, 2016

"நேர மேலாண்மை"

"நேர மேலாண்மைக்கு ஓர் உதாரணம் சொல்லுங்களேன்?"
     "பிரபல இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த், தனக்கு மிகவும் உடல் நலமில்லாத நாளிலும் கதை எழுதிக்கொண்டு இருந்தாராம்.  அவர் மனைவி, 'ஏன் உடல் நலமில்லாத நிலையிலும் இப்படி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்?  நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டு உடலுக்குத் தேவையான சிகிச்சை செய்து நன்றாக உறங்கி , சாப்பிட்டு பிறகு எழுத்து வேலைகளைக் கவனிக்க வேண்டியதுதானே...' என்று கோபத்துடன் கேட்டிருக்கிறார்.  அதற்கு பிரேம்சந்த், 'ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான்.  எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலமும் அது ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கும்.  எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கு தானாகவே அணைந்துவிடும்!' என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார்.  நேரத்தின் மேலாண்மையை இதற்கு மேல் உனர்த்த வேண்டுமா என்ன?"
--ஹெச்.பாஷா,  சென்னை-106. ( நானே கேள்வி... நானே பதில்! ).
--  ஆனந்த விகடன்.  9-10-2013. 

Wednesday, April 27, 2016

போக்கிரிகள்.

"போக்கிரிகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் ?"
     "நாங்கள் சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த கொரில்லா குரங்கைப் பார்த்து பூங்கா ஊழியரிடம், 'இது ஆணா, பெண்ணா, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?' என்று ஓர் இளைஞன் கேட்டான்.  சுற்றிலும் குழந்தைகள், பெண்கள் இருந்ததால் அவர் சிரித்துச் சமாளித்தார்.  ஆனால், விடாமல் மீண்டும் மீண்டும் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான்.  அந்த ஊழியர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.  ஒருகட்டத்தில் அவன் கிண்டலும் நக்கலும் அத்துமீறிப் போகவே, 'தம்பி... அது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகோள்ள இன்னொரு கொரில்லாவுக்குத்தான் அக்கறை வேண்டும்.  நீ எதற்காக அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?' என்று கேட்டார்.  அதுவரை பூங்கா ஊழியரை வம்புக்கு இழுத்த அந்த இளஞரின் முகம் போன போக்கு இருக்கிறதே!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு-12.. ( நானே கேள்வி... நானே பதில்! ).
--  ஆனந்த விகடன்.  9-10-2013.     

Tuesday, April 26, 2016

காஸ்ட்லி திருமணம்

    உலகின் காஸ்ட்லி திருமணத்தை மற்றொரு முறை நடத்தியிருக்கிறார்கள் லட்சுமி மிட்டல் குடும்பத்தினர்.  லட்சுமி மிட்டலின் மகள் வனிஷாவுக்கு ஏறக்குறைய 46 மில்லியன் யூரோ செலவில் 2004-ல் திருமணம் நடத்திய லட்சுமி மிட்டல், இப்போது அவரின் தம்பி பிரமோத் மிட்டலின் மகள் ஸ்ரீஷ்டி மிட்டலின் திருமணத்தை 60 மில்லியன் யூரோ செலவில் நடத்தியிருக்கிறார்.  இது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 503 கோடி ரூபாய்.  உலக வரலாற்றில் டாப் 5-ல் இந்த இரண்டு திருமனங்களும் இடம் பிடித்திருக்கின்றன.  -  எவ்வளவு குழந்தைகளைப் படிக்க வெச்சிருக்கலாம்!
11.12.13.-ல் திருமணம்
     அதிர்ஷ்ட தேதியில் திருமணம் செய்து கொள்ள வெளிநாட்டு ஜோடிகள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள்.  ஆச்சர்யமாக, கடந்த 11.12.13 தேதிக்கு டெல்லிவாழ் மக்களிடையே அவ்வளவு ஆர்வம்.  ஆளாளூக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று இறங்க, டிராஃபிக்கில் சிக்கித் திணறிப்போனது டெல்லி.  அன்று ஒரு நாள் மட்டும் டெல்லியில் நடந்த திருமணங்கள் சில ஆயிரங்களைத் தாண்டுமாம்.  -  'ஆ...ஊ'னா கூட்டமா தலியைத் தூக்கிட்டு வந்திடுறாங்க!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  25-12-2013.    

Monday, April 25, 2016

கருத்தரிப்பு.

   25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம்போய், இப்போது கிட்டத்தட்ட  20 மில்லியந்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு.  எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்துவருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு.  என்ன காரணம்?  ஒரு பக்கம் நகரமயமாக்கம் தரும் வாழ்வியல் நெருக்கடி,  மகிழ்ச்சியை மறந்துபோய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம், விஷத் துணுக்குகளை அலங்கரித்துச் சந்தை விற்பனைக்குக் கொண்டுவரும் அபாய உணவுகள், காற்றில், தண்ணீரில் எனச் சூழலில் கசிந்து பல்வேறு ரசாயனங்கள்... இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து, நிறையப் பேருக்குக் கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல், கண்ணாடிக் குடுவையில் நிகழ்கிறது.
-- மருத்துவர் கு.சிவராமன்.  'ஆறாம் திணை' தொடரில்.
-- ஆனந்த விகடன். 26-06-2013.  

Sunday, April 24, 2016

புதிய கிரகம்.

பூமியைப் போன்று இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு.
     பிரபல விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'கெப்ளர் பிளானெட்  ஃபைண்டிங் மிஷன்' எனும் முயற்சியின் கீழ் கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த கிரகத்திற்கு 'கெப்ளர் 186 எஃப்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
     இந்த புதிய கிரகமானது, 8,700 மைல் சுற்றளவைக் கொண்டுள்ளது.  அதாவது, பூமியவிட 10 சதவீதம் அகலமானது.
     இதனுடைய சுற்றுப்பாதை 'கோல்டிலாக்ஸ் சோன்' எனும் பகுதியில் அமைந்துள்ளது.  இந்த கிரகத்தில் உள்ள தட்பவெப்பம் மிகவும் சூடாகவும் இல்லாமல், மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லாமல், மிதமாக இருப்பதால் உயிர் வாழ ஏற்ற கிரகம் என்று சொல்லப்படுகிறது.
     பூமி தன் சுற்றுப்பாதையைச் சுற்றி முடிக்க 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது எனில், இந்த கிரகம் தன் சுற்றுப்பாதையைச் சுற்றி முடிக்க 130 நாட்களை எடுத்துக் கொள்கிறது.  இந்த கிரகத்தின் நட்சத்திரங்கள் சிவப்புக் குள்ள நட்சத்திரங்கள் ஆகும்.  தன் நட்சத்திரங்களிடமிருந்தான் இந்த கிரகம் ஒளியைப் பெறுகிறது.  இந்த ஒளியைக் கொண்டு பூமியில் உள்ள பல செடிகள் வாழ முடியும் என்று கூறப்படுகிறது.
     விண்வெளி விஞ்ஞானிகளால் இந்த கிரகத்தின் உண்மையான வயதைக் கணிக்க முடியாவிட்டாலும் பல கோடி ஆண்டுகளாக இது பிரபஞ்சத்தில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
-- நியூயார்க் டைம்ஸ்.  ரிலாக்ஸ்.
--  'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 19, 2014.  

Saturday, April 23, 2016

புரியாத பூக்கள்

  ஒரு விண்வெளி அதிசயம் ஜப்பானில் நடந்துள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் விண்வெளி வீரர்கள், தங்களுடன் வான்வெளிக்கு செர்ரிப் பழ விதைகளையும் எடுத்துச் சென்றனர்.  வான்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் அந்த விதைகள் 8 மாதங்கள் இருந்தன.  பின்னர் அவற்றை ஜப்பானுக்கு கொண்டு வந்து ஒரு தோட்டத்தில் நட்டனர்.  செர்ரிப் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும்.  ஆனால் வான்வெளிக்குச் சென்று திரும்பிய இந்த செர்ரி விதைகள் மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன.  இதுவும் வான்வெளி ஆராய்ச்சி நிபுணர்களுக்குப் புரியாத புதிராக இருந்துவருகிறது.
-- விந்தை உலகம்.  வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 19, 2014.   

Friday, April 22, 2016

3டி வீடு

   முப்பரிமாணப் படம் ( 3D Film ) கேள்விப்பட்டிருப்பீர்கள்.  முப்பரிமாண வீடு கேள்விப்ப்ட்டிருக்கிறீர்களா?  உலகின் முதல் முப்பரிமாண அச்சாக்க முறையில் ( 3D printing ) உலகின் முதல் வீடு நெதர்லாந்தில் கட்டப்பட்டு வருகிறது.  முப்பரிமாண அச்சாக்கம் ( 3D printing ) என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம்.
     கணினியில் நாம் தட்டச்சு செய்யும் ஆவணங்களை எப்படி அப்படியோ பிரிண்ட் எடுக்கிறோமோ அப்படியே ஒரு வீட்டின் ப்ளானை மென்பொருட்களில் வரைந்து, ஒரு வீட்டையே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.  காகிதம், இங்கிற்குப் பதிலாக வீட்டின் மூலப் பொருட்களை இடவேண்டும்.  https:// www.youtube.com/watch?v=b- daGDQ7ZC8 இந்த Youtube முகவரியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம்.  இந்தத் தொழில் நுட்பம் தற்போது வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் முப்பரிமாண வீடு கட்டும் முயர்சியில் ஈடுபட்டுள்ளது.
     கட்டுமான தொழிலானது மிகவும் மாசு ஏற்படுத்தும் துறையாக இருந்து வருகிறது.  இம்மாதிரியான வீடுகள் கட்டப்படுவது பெருகும் நிலையில் அது குறையும் வாய்ப்புள்ளது.  முப்பரிமாண அச்சாக்க முறையில் போக்குவரத்து செலவுகளும் குறையும் வாய்ப்பும் உள்ளது.  மேலும் எல்லாவித பொருட்களையும் உருக்கிப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுசுழற்சியும் செய்யப்படுகிறது.  இந்த புதிய முறை கட்டுமானத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் . கேமர் மேக்கர் ( Kamer maker) என்னும் கருவியைத்தான் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.  75% தாவர எண்ணெய் மற்றும் மைக்ரோஃபைபர்கள் அடங்கிய ப்ளாஸ்டிக் கலவைதான் மூலப்பொருட்கள்.
--சுந்தர லட்சுமி.  சொந்த வீடு.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 19, 2014.   

Thursday, April 21, 2016

புலி...சில புள்ளிவிவரங்கள்.

*   இந்தியாவில் புலி வேட்டையாடத் தடை உள்ளது.  நாட்டில் இப்போது புலிகளுக்கென உள்ள 39 புகலிடங்களில் மூன்று   தமிழகத்தில் உள்ளன.
*   புலிகளின் உடல் மீதுள்ள வரிகள் ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும்.  அதைக் கொண்டுதான் புலிகளின் எண்ணிக்கை   கணக்கிடப்படும்.
*   இரை விலங்கை பதுங்கியோ, பின் தொடர்ந்தோ, ஒளிந்து தாக்கியோதான் புலி வேட்டையாடும்.  மூன்று பக்கமும்   சூழப்பட்டுவிட்டோம்  என்று உணர்ந்தால் மட்டுமே, மனிதர்களை
    நேருக்குநேர் பாய்ந்து தாக்கும்!
*   புலி பிராண்டிய குறிகள், பற் கடிகள், காலடித் தடங்களை வைத்து, அது ஆணா, பெண்ணா, எந்த திசையில் செல்கிறது, இந்த    இடத்தைவிட்டு சென்று எவ்வளவு நேரமாகிறது,  அதன்
    வாழிடம் எங்கே, கடைசியாக மனிதனைத் தாக்கியுள்ளதா என்பன  உள்ளிட்ட பல விவரங்களை அறியமுடியும்.
-- ச.ஜே.ரவி.
--  ஆனந்த விகடன்.  29-1-2014.  

Wednesday, April 20, 2016

எத்தனுக்கு எத்தன்

"எத்தனுக்கு எத்தன் எப்படி யோசிப்பான்>"
     "அந்தக் கால பிரிட்டனில் யாராவது இறந்தால் உறவினர்களும் நண்பர்களும் சவப்பெட்டியில் ( மொய்க் காசு போல ) கரன்சி நோட்டுகளைப் போட்டு மூடிப் புதைப்பார்கள்.  அப்படி ஒரு சாவில், 'எல்லோரும் காசு போடுங்கள்.  கடைசியாக நீங்கள் எல்லாம் போட்ட அளவுக்கு நான் என் பங்குக்குக் காசை போடுகிறேன்' என்றான் ஒருவன்.  அனைத்து உறவினர்களும் போட்டதில் மொத்தமாக 1,000 பவுண்டு தேறியது.  அந்த 1,000 பவுண்டு கரன்சிகளையும் எடுத்துக்கொண்டு, 'என் பங்காக 1,000 பவுண்டாக மொத்தம் 2,000 பவுண்டுகளை நான் போடுகிறேன்' என்று சொல்லி ஒரு செக்கில் '2,000 பவுண்டு' என்று எழுதி அதை சவப்பெட்டியில் போட்டு மூடிவிட்டான் இவன்.  எத்தனுக்கு எத்தன் இப்படித்தான் யோசிப்பான்!"
-- ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
"வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன வித்தியாசம்?"
     "எங்கோ படித்தது,
      கடமையைச் செய்தால் வெற்றி...
      கட்ட்ட்ட்டமைக்குச் செய்தால் தோல்வி!"
-- கா.முத்துச்சாமி, தொண்டி.    ( நானே கேள்வி... நானே பதில் ! )  தொடரில்.
-- ஆனந்த விகடன்.  29-1-2014.  

Tuesday, April 19, 2016

சுட்டது நெட்டளவு

  ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும்போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.  "கடமையில் கருத்தாக இருப்பான்.  ஆனால் எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவதுதான் இவனது பலஹீனம்".
     அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்து விட்டு, "பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.  எடுத்ததெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?" என்று கேட்டார். அவனோ, "எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.  இப்போதுகூட ஒரு பந்தயம்.  உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.  பந்தயம் நூறு ரூபாய்" என்றான்.
      "எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.  நீ தோற்று விட்டாய்.  நீயே பார்" என்று கூறிய அவர் தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.
     மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.
     புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.  "அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.  இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்."  என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.
     உடன் பதில் வந்தது.  "நீங்கள் தான் தோற்றுப்போய் விட்டீர்கள்.  புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐனூறு ரூபாய் பந்தயன் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான்.  வெற்றி அவனுக்குத்தான்".
-- எஸ்.சித்ரா.  ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ்.  வெள்ளி, ஏப்ரல் 18, 2014.  

Monday, April 18, 2016

மழைத்துளிகள்

மழைத்துளிகள் வானத்திலிருந்து பூமிக்கு வர எத்தனை வினாடிகள் ஆகும்?
     நொடிக்கு 18 அடி என்கிற வேகத்தில் பொதுவாக மழைத்துளிகள் விழுகின்றன.  ஆக 20,000 அடி தூரத்தைக் கடக்க 1,111நொடிகள் அல்லது 18.52 நிமிடங்கள் தேவைப்படுகின்றன.  தோராயமாக 10 நிமிடங்கள் என்றும் கணக்கிடுகிறார்கள்.
     மழைத்துளியின் அளவு பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் அது உருவானது என்பதையும் பொறுத்தது இது.  அதிக அளவுள்ள மழைத்துளி என்றால், அதிக வேகத்துடன் கீழிறங்கும்.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல்18, 2014.   

Sunday, April 17, 2016

இசைத்தூண்கள்!

 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மண்டபத்தில் பிரம்மாண்டமான இரு தூண்கள் காணப்படுகின்றன.  ஒவ்வொரு தூணிலும் நடுவே பெரிய தூண் ஒன்றும், அதைச் சுற்றி 18 சிறிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றைத் தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு ஒலி எழுகிறது.
வித்தியாசமான மூர்த்தம்!
     திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் விசேஷமானது.  இதில் அம்பிகை இடக்கையால் சிறிய
நந்தியைப் பற்றிக் கொண்டு இருப்பது போன்று உள்ளது.
தலையைத் திருகினால் !
      திருவண்ணாமலையை வலம் வருகையில் வழியில் ஓர் அதிசய விநாயகர் காணப்படுகிறார்.  அவரது தலையைத் திருகி தனியே எடுத்தால் உள்ளே கையளவு பள்ளம் காணப்படுகிறது.  இப்பள்ளத்தில் காசுகளைப் போட்டு மீண்டும் எடுத்துக் கொண்டால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை!  காசை எடுத்துக் கொண்டதும் தலையைப் பழையபடி சரியாக பொருத்திவிட வேண்டும்.
மூன்று வகை பிரார்த்தனை!
     ஆண்டவனைப் பிரார்த்திக்கும் முறையை வாசிகம்,உபாம்சு, மானஸம் என மூன்று விதமாகக் குறிப்பிடுகிறார்கள்.
வாசிகம் : பிறர் காதில் விழும்படி ஜபிப்பது.  இதற்கு ஒரு மடங்கு பலன்.
உபாம்சு : தன் காதில் மட்டும் விழும்படி பிரார்திப்பது.  இதற்கு  நூறு மடங்கு பலன் உண்டு.
மானஸம் : மனதிற்குள் தியானிப்பது.  வெளியில் கேட்காமல், கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி மனதுக்குள் பிரார்த்திப்பதால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டுமாம்.
--- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 16 - 30.  2014.  

Saturday, April 16, 2016

கண்டுபிடிப்புகள், கண்டறிந்தவர்கள்

*   வானில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் வெப்பக் காற்று பெரும் பலூனைக் கண்டுபிடித்தவர் சகோதரர்கள் ஜோசப் மைக்கேல்
     மான்கோல்ஃபர், ஜாக் எடின் மான்கோல்ஃபர்.  ஆண்டு 1782.
*   சட்டகமில்லா பாராசூட்டைக் கண்டுபிடித்தவர் ஏ.கே.கார்னரின்.  ஆண்டு 1797.  பாராசூட்டில் பறந்த முதல் உயிரினங்கள்,
    வாத்து, செம்மறியாடு, சேவல்.
*   தீப்பொறியை உருவாக்க உதவும் தீப்பெட்டி , தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர் ஜான் வாக்கர்.  ஆண்டு 1827.
*   துணிகளைச் சலவை செய்யும் வாஷிங் மிஷின் இன்றைக்கு மிகவும் பயன்படுகிறது.  இதைக் கண்டுபிடித்தவர்
    ஆல்வா ஜே.பிஷர்.  ஆண்டு 1908.
*  சந்திரனில் உள்ள மண்ணின் வயது, சுமார் 3,500 கோடி ஆண்டுகள்.
-- ஆ.சுஜீஜீ, ஜெய்கோபால் சுரோடுயா.  சென்னை- 82.
-- பொது அறிவு.  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 16, 2014. 

Friday, April 15, 2016

நாடுகள், நானயங்கள்.

*   அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் நாணயங்கள்  --  டாலர் என்றே
    அழைக்கப்படுகின்றன.
*   எகிப்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் நாணயங்கள்  --  பவுண்டு.
*   ஏமன், ஈரான் ஆகிய நாடுகளின் நாணயங்கள் --  ரியால்.
*   பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, கியூபா  ஆகிய நாடுகளின் நாணயங்கள்  --  பீசோ.
-- பொது அறிவு.  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், ஏப்ரல் 16, 2014.    

Thursday, April 14, 2016

சோரியாசிஸ்

   'காளாஞ்சகப்படை'  என அழைக்கப்படும் சோரியாசிஸ், மன அழுத்தத்தில் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று.  தோலில் தீயினால் சுட்ட புண் போல் சிவந்தும், செதில் செதிலாக உதிர்ந்தும், சில நேரங்களில் உள்ளங்கை உள்ளங்கால் தோலில் வெடிப்புகளும் பெருகிச் சிரமப்படும் இளைஞர் யுவதிகள் இன்று அதிகம்.  எளிய தமிழ்நாட்டுத் தாவரமான வெட்பாலை மரத்தின் இலையை மட்டும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும்.  அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப்பூச்சாகப் பூசி, இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.  மருந்துடன் மனசையும் இலகுவாக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
-- மருத்துவர் கு.சிவராமன்.  'ஆறாம் திணை'  தொடரில்...
-- ஆனந்த விகடன்.  01-01-2014. 

Wednesday, April 13, 2016

குழந்தையை மீட்கலாம்.

1,000 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையையும் மீட்கலாம்!
     ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற மதுரையைச் சேர்ந்த எம்.மணிகண்டனால் உருவாக்கப்பட்டுள்ள போர்வெல் ரோபோ கருவியின் செயல்பாடு குறித்து அவரே விளக்குகிறார்.
     ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட இக்கருவியின் உதவியால் மீட்க முடியும்.
'12 வி' பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது.  குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.  மின்சப்ளை இல்லாத இடங்களிலும்பேட்டரி மூலம் இதை இயக்க முடியும்.  குழந்தையை மீட்டு வரும்போது குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
     மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம்.  குழிக்குள் இக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள 'பிரஸ்ஸர் சேஞ்' அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
     குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.  சென்னை ஐ.ஐ.டி. யில் இந்த இயந்திரத்திற்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது.  2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.
--  'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், ஏப்ரல் 15, 2014.  

Tuesday, April 12, 2016

தீபப் பலன்கள் !


     கிழக்குத் திசையில் தீபமேற்றி வழிபட துனபம் நீங்கி இல்லத்தில் சர்வமங்களமும் உண்டாகும்.  மேற்குத் திசையில் தீபமேற்றி பூஜிக்க சனி, பீடை, கடன் தொல்லைகள், பங்காளிப்பகை, கிரகதோஷம் ஆகியவை அகலும்.  வடக்குத் திசையில் தீபமேற்றி வழிபட திரண்ட செல்வமும், மங்களமும் உண்டாகும்.  த்ற்குத் திசையில் தீபமேற்றுவதால் சுமாரான பலனே உண்டாகும்.  எனவே தெற்குத் திசையில் தீபம் ஏற்றாமல் இருப்பதே நல்லது.
முருகன் பாதத்தில் அசுரன் !
     திருவானைக்காவலில் முருகப் பெருமான் ஆங்கார கோலத்தில் காட்சியளிகிறார்.  காமனை ஓர் அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார்.  இது ஓர் அபூர்வ வடிவமாகும்.
அர்த்தமுள்ள படிகள் !
     திருவீழிமழலை கோயிலில் மகா மண்டபத்திற்குச் செல்பவர்களுக்கு வாரத்தை நினைவுபடுத்த கிழக்குப் புறமிருந்து 7 படிகளும், மாதத்தை நினைவுபடுத்த தென்புறமிருந்து 12 படிகளும், நவக்கிரகங்களை நினைவுபடுத்த வடபுறமிருந்து 9 படிகளும் உள்ளன.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர் 1- 14,  2013.                                           

Monday, April 11, 2016

துபை முதலிடம்

உலகின் சிறந்த 25 இடங்களில் துபை முதலிடம்.
     சுற்றுலா செல்பவர்களுக்காகப் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய இணையதளமான 'ட்ரிப் அட்வைசர்',  2014ம் ஆண்டுக்கான 'டிராவலர்ஸ் சாய்ஸ்' விருதுக்காக, உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோள்கள் கொண்டு பட்டியலிட்டது.  அதில் துபை முதலிடம்பிடித்துள்ளது.  மக்கள் கண்டுகளிக்க துபையில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
     சுமார் ஒரு வருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள் தரம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு 25 சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டன.
    "25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்."என்றார் துபை சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இஸாம் காஸிம்.
-- பி.டி.ஐ.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், ஏப்ரல் 15, 2014.  

Sunday, April 10, 2016

முதலில் எது?


     ராமாயண காலத்தில் அனுமனும், ராமனும் ஒரே இலையில் சாப்பிட அமர்ந்தார்கள்.  ராமன் பக்கம் முதலில் சாதம் பரிமாறப்பட்டதால், வடகலையினரின்றும் முதலில் சாதமே பரிமாறுவார்கள்.  அனுமன் பக்கம் முதலில் காய்கறிகள் பரிமாறப்பட்டதால், தெங்கலை மக்கள் முதலில் காய்கறிகலைத்தான் வைப்பார்கள்.
கருடன் விலகி இருக்கும் தலம் !
     சில தலங்களில் சில காரணங்களுக்காக நந்தி விலகியிருப்பது உண்டு.  கருடன் விலகி இருக்கும் தலம் ஒன்றும் உண்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேறை என்னும் பெருமாள் கோயிலில் சந்நதிக்கு இடது ஓரமாக கருடன் விலகி நிற்கிறார்.  நம்மாழ்வார் பாசுரம் பாட , அதைப் பெருமாள் கேட்பதற்காக கருடாழ்வார் விலகி வடக்கு பக்கமாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்திரன் வழிபட்ட தலம் !
     மதுராந்தகம் அருகேயுள்ள கிணார் தலத்தில் இந்திரன் வழிபட்டதை உறுதிப்படுத்திடும் வகையில் மூலவருக்கும் நந்திக்கும் இடையே ஐராவதத்தின்மீது அமர்ந்த நிலையில் இந்திரன் காட்சியளிக்கிறார்.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர் 1- 14,  2013.                                           

Saturday, April 9, 2016

லிங்க வடிவில் மும்மூர்த்திகள் !

 மகாராஷ்டிரா பிரம்மகிரிமலை அடிவாரத்தில் உள்ள கோதாவரி நதிக் கரையில் த்ரியம்பகேஸ்வரர் ஆலயம் உள்ளது.  இங்கு ஈசன், பிரம்மா, திருமால் மூவரும் ஒரே பீடத்தில் லிங்க வடிவில் அருள்கிறார்கள்.  தங்கக் கவசத்துடன் கூடிய பெரிய ராஜகோபுரமும், சூலாயுதமும் உள்ளது.  கருவறை முன் உள்ள அரைவட்ட வடிவ மண்டபத்தின் நாற்புறங்களிலும் நுழை வாயில்கள் உள்ளன.  மேற்குப் புற வாயிலில் நுழைந்து சுவாமியை தரிசிக்கலாம்.  லிங்கங்கள் இருக்கும் பீடத்தில் இருந்து புனித நீர் ஊற்றாகப் பெருகுகிறது.  பிரம்மகிரி மலையில் கோதாவரி உற்பத்தி ஆகும் இடத்தில் கௌதம மகரிஷியின் குகை உள்ளது.  மேலும் இங்கு 1,000 லிங்க மூர்த்திகளைக் காணலாம்.
கண் திறந்த பெருமால்!
     கும்பகோணம் - ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள பாடகசேரி என்ற ஊரில், கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் உள்ளது.  இக்கோயிலில் மூலவர் பெருமாள் நின்றகோலத்தில் தனது இரு விழிகளைத் திறந்து பக்தர்களின்மீது தனது பார்வையை படரவிட்டு அருள் பாலிப்பதுபோல அமைந்திருக்கிறார்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  டிசம்பர் 1- 14,  2013. 

Friday, April 8, 2016

கவுரவர்களின் பெயர்கள்!

  பாண்டவர்களாகிய ஐவரின் பெயர் பலருக்கும் தெரிந்திருக்கும்.  ஆனால், கவுரவர்கள் நூறு பேருடைய பெயர்களும் யாருக்காவது தெரியுமா?  இதோ அவர்களின் பெயர்கள் :--
     துரியோதனான்;  துச்சாதனன்;  தூர்த்தருசன்;  துன்முகன்;  சலந்தன்;  சகன்;  சமன்;  விந்தன்;  அனுவிந்தன்;  துருவாசகன்;  சுபாகு; துஷ்பதருஷ்னன்;  துஷ்டந்தன்;  சித்திரயோதி; துஷ்கிரமன்;  விம்சதி; விகருணன்; சலசந்தி;  சுலோசகன்; சித்திரன்; சித்திராகவன்; சாருசித்திரன்;  சாரசன்;  துன்மருஷ்ணன்;  விவிட்சன்;  விசுபசமன்; பூரணநாமன்;  சுநாபன்;  நந்தன்;  உபநந்தன்;
சேநாதிபதி;  சுசேணன்;  குண்டோதரன்;  மகோதரன்;  சித்திரத்துவம்ஷன்;  சித்திராதன்;  சித்திரபாகு;  அமித்திரசித்து;  சித்திரபாணன்;  சித்திரவன்மி;  சுவன்மி;  துருவிமோகன்;  சித்திரசேனன்;  சித்திரகண்டன்;  சுசித்ரன்;  சித்திரவன்மதரன்;  அபராகிகன்;  பண்டிதன்;  விசாலாட்சன்;  மார்பரன்;  அசிதன்;  சயந்தன்;  சுவேச்சை;  துர்ச்சயன்;  துருட அஸ்தன்;  சுகஸ்தன்;  பாதவேகன்;  சுவரசேனன்;  ஆதித்தகேதன்;  பகாசி;  நாகநந்தன்;  உக்கிரசாயி;  சுவசி;  நிஷாங்கி;  பாசி;  தண்டரகன்;  தனுக்கிரகன்;  பீமரதன்;  பீமவேகன்;  பீமவாகு;  ஆலோகலன்;  பீமகருணன்;  சுபாகன்;  பிவிக்ராந்தன்;  அபயன்;  ருடிகருமன்;  துருடிதரன்;  அநாதிருஷ்யன்;  குண்டபேதி;  விராவி;  தீர்க்கலோசனன்;  தீர்க்கவசன்;  தீர்க்கபுஜன்;  ஆதீர்க்கன்;  தீர்க்கன்;  தீர்க்கபாகன்;  மகாபாகு;  வியோடோராஸ்கன்;  கனகத்துவசன்;  மகாகுண்டன்;  குண்டன்;  குண்டசன்;  அருகவன்;  சித்திரகன்; துக்கிராயுதன்;  பாலகீர்த்தி;  கந்தாயு;  விரோசன்;  சகுண்டலன்;  விசுடன்.
     அப்பாடி!  நூறு பெயர்களை எப்படி என்று மலைக்கிறீர்களா?
     இந்த நூறு கவுரவர்களுக்கு ஒரு சகோதரி துர்ச்சலை என்ற பெண் உண்டு.  எனவே, கவுரவர் நூறு பேர் என்பது தவறு.  நூற்றி ஒன்று பேர் என்பதே சரி !
--'மகாபாரத இலக்கிய நாடகம்' என்ற நூலிலிருந்து,  இளவல் அரிஹரன்.
-- தினமலர். வாரமலர். பிப்ரவரி 9, 1992.  

Thursday, April 7, 2016

ஆன்மிகம்.

*  அபிமன்யுவின் தாய் சுபத்திரை.
*  ஜனகர், ராஜ ரிஷி என அழைக்கப்படுகிறார்.
*  மனீஷா பஞ்சகம் என்னும் நூலை இயற்றியவர் ஆதிசங்கரர்.
*  பீமன், அனுமனின் தம்பி.  இருவருமே வாயு பகவானின் புதல்வர்கள்.
*  'மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்' எனப் பாடியவர் வள்ளலார்.
*  வைணவத் தத்துவத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இறைவனிடம் சரணாகதி அடைதல்.
*  உலகெலாம் என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் அடி.  இறைவனே முதல் அடி எடுத்துக் கொடுத்ததாக
    ஐதீகம்.
*  ஆறு விதமான தத்துவப் பார்வைகள் ஷட் தரிசனங்கள் எனப்படுகின்றன.  வைசேஷிகம் அவற்றில் ஒன்று.
*  ராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேசுவரத்தில் காளி கோயில் பூசாரியாக இருந்தார்.
*  ருத்ரம் என்பது யஜுர் வேதத்தின் ஒரு பகுதி.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 17,2014.   

Wednesday, April 6, 2016

சனி கிரகம்

சனி கிரகத்துக்கு புதிய துணை கிரகம்.  நாசா கண்டுபிடிப்பு.
      சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் சனி கிரகமாகும்.  சனி கிரகத்துக்கு 61 துணைகோள்கள் உள்ளன.  இந்நிலையில் சனி கிரகத்துக்கு புதிதாக 62 வது துணைக் கிரகம் தோன்றியிருப்பதை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
      சனிகிரகத்துக்கு  இருப்பதுபோன்றே புதிய துணைகிரகத்துக்கும் பிரகாசமான வளையம் உள்ளது.  பனிக்கட்டியை போன்று பளபளப்பாக அந்த வளையம் காணப்படுகிறது.
     இதுகுறித்து  நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கார்ல் கூறுகையில், 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள துணைகோள் ஆயிரத்து 200 கி.மீ. நீளமும், 10 கி.மீ. அகலமும் உள்ளது. சனி கிரகத்தில் இது போன்ற துனை கிரகத்தை இதற்கு முன் பார்த்ததில்லை.  புதிதாக கண்டுபிடித்துள்ள துணை கிரகத்துக்கு 'பெக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளது,  புதிய துணை கிரகத்தின் மூலம் சனி கிரகத்தின் துணைக்கிரகங்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
-- தினமலர்.  17-4-2014.  

Tuesday, April 5, 2016

விடை தேடும் பயணம்


1.  தக்கல் முறையில் ரயிலில்முன்பதிவு செய்தால் -- முதல் வகுப்பில் செல்வது, முதியோருக்கான கட்டணச் சலுகையை
     அனுபவிப்பது, பள்ளி மாணவர்களுக்கான கட்டணச் சலுகையை அனுபவிப்பது ஆகிய மூன்றும் சாதியமில்லாதது.  பயணம்
     செல்வதற்கு அதிகபட்சம் ஒரு நாள் முன்னதாகச் செய்யப்படும் தக்கல் முறை முன்பதிவில் முதல் வகுபிலும் செல்ல
     முடியாது,வேறு எந்தச் சலுகைகளையும் அனுபவிக்க முடியாது.
2.  ஸ்விட்சர்லாந்தின் தேசிய மொழி -- ஜெர்மன் தான்.  ஸ்விஸ் என்பது ஒரு மொழி கிடையாது.   ஸ்விட்சர்லாந்தைப்
     பொறுத்தவரை நான்கு தேசிய மொழிகள் உண்டு.  அவை ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலியன், ரோமான்ஷ் ஆகியவை.
3. "சஷ்டியை நோக்க சரவண பவனார்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் --  இயற்றப்பட்டது ஈரோட்டின் அருகிலுள்ள
      சென்னிமலையில்.  இதை எழுதியவர் தேவராய சுவாமிகள்.  இவர் தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்.
4.  ஆக்ரா கோட்டை ஜலாலுதின் முகம்மதுவால் எழுப்பியது.  திகைக்க வேண்டாம்.  அதுதான் அக்பரின் அசல் பெயர்.
5.  ஒடிஷாவில் தோன்றிய ஒடிஸியிலும், ஆந்திரத்தில் பிரபலமான குச்சிபுடி நடனத்திலும் சலங்கை அணிவார்கள்.  மணிப்புரி
     நடனத்தில் சலங்கைகள் அணிவதில்லை.
6.  ஸ்மார்ட் கார்டு என்பது சட்டைப் பைக்குள் வைக்கும்படியான ஒரு சிறிய பிளாஸ்டிக் அட்டை.  இதில் ஒருங்கிணந்த
     மின்னணுச் சுற்றுகள் ( integrated circuits ) இருக்கும்.  இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும்
     அட்டையாகவோ, இவற்றின் தொடர்பான செயல்பாடுகளுக்காகவோ பயன்படுத்தலாம்.  ஏ.டி.எம். அட்டை ,  கடன் அட்டை ,
     செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு மூன்றுமே ஸ்மார்ட் கார்டுகள்தான்.
7.  நம் உடலை ரத்தம் முழுவதுமாக ஒரு முறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் 23 நொடிகள்.  தேசிய கீதத்தை உரிய
     முறையில் பாட எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் 52 நொடிகள்.  ஒரு குயரில் 24 தாள்கள் இருக்கும்.
--  ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014.                  

Monday, April 4, 2016

ஆங்கிலம் அறிவோமே.

 ENQUIRT  --  INQUIRY
உங்கள் பெயர் என்ன?
உங்கள் ஊர் எது?
திருச்சிக்கு எப்படி போக வேண்டும்?
இந்த பஸ் எப்போது கிளம்பும்?
    -- மேலே உள்ள கேள்விகளை எப்படிக் குறிப்பிடலாம்? Enquiry என்றா?  அல்லது Inquiry என்றா?
     Enquiry என்றுதான்.  Enquiry என்றால் தகவலைக் கேட்பது .  அப்படியானால் மற்றொரு வார்த்தையான Inquiry என்பதற்கு என்ன பொருள்?
     inquiry என்றால் ஆழ்ந்த விசாரனை என்று பொருள்.
     அதாவது Departmental inquiry, Police Inquiry என்பது போல.
     மனைவி கணவனிடம் இப்படிக்கேட்கிறாள்.
    "என்னங்க, பைக்கிலே யாரோ ஒரு பெண்ணை இன்னிக்கு ஏத்திக்கிட்டு வந்தீங்களாமே.  அவ யாரு ?"
     கணவன் ( கலக்கத்துடன் மனதிற்குள் யோசிக்கிறான் ) -- "இது சாதாரண Inquiry -- யா? அல்லது ஒரு Inquiry--யின் தொடக்கமா?"
--  ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014. 

Sunday, April 3, 2016

ஆழிப் புதையல்

  நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது.  அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை.  இனிக்கிறது.  இது எப்படி சாத்தியம்?
     இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான்.  இப்படிக் கடற்கரையோர, கடல் சூழ்தொகிதி ( Coastal and marine ecosystem)பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
-- நேயா.  பொது அறிவு.
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014. 

Saturday, April 2, 2016

ஆங்கிலம் அறிவோமே.

   ARTIST --  ARTISTE.  எம்.எஃப்.ஹூசேன், சின்னக்குயில் சித்ரா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்.  ஆம் ஓவியரை மட்டுமல்ல பிற கலைஞர்களையும் ஆர்டிஸ்ட் என்றுதான் ஆங்கிலத்தில் கூறுவது வழக்கம்.
     அப்படியானால் பின்வருமாறு குறிப்பிடலாமா?
    "M.S.Hussain, A.R.Rahman and Chinna are popular artists".  இல்லை இது தப்பு. Hussin artist மற்ற இருவரும் artistes
( அதிகப்படியாக ஒரு "E"உட்கார்ந்து இருப்பதைக் கவனித்தீர்களா? )  அதாவது ஓவியரை artist என்று குறிப்பிடுகிறோம்.  ராஜா ரவிவர்மா, பிக்காசோ, எம்.எஃப்.ஹுசேன் எல்லோரும் artists.
     பாடகர், நடனக் கலைஞர் போன்ற perforrmers-ஐ artists என்று குறிப்பிடுவதுதான் வழக்கம்.
     பிரெஞ்சு மொழியில் artist என்பதையே artiste என்றுதான் எழுதுவார்கள்.  அது வேறு விஷயம்.
     சொல்லும்போதுகூட இந்த இரண்டு வார்த்தைகளையும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உச்சரிக்க வேண்டும்.  artist என்பதை ar-tist இரண்டு பகுதிகளையும் சமமான அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.  artiste என்று சொல்லும்போது "Teast" என்ற இரண்டாம் பகுதியை அதிக அழுத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.
     எம்.எஸ்.சுப்லட்சுமி - artiste, வான்கோ - artist.   சூர்யாவின் அப்பா சிவகுமார் எப்படி?  "E" உள்ள ஆர்டிஸ்டா அல்லது "E"இல்லாத ஆர்டிஸ்டா?  அவர் ஓவியர், நடிகர் ஆகிய இரண்டும் என்பதால் இரண்டும்தான்.
     இன்னொன்றையும் கூற வேண்டும்.  இப்போதெல்லாம் சிலர் நடைமுறையில் artiste என்று நான் சொன்னவகையைச் சேர்ந்தவர்களைக்கூட artist என்றே குறிப்பிடுகிறார்கள்.  Kerosene Oil என்று கூவி விற்றுக்கொண்டு போனால் புரியாது.  கிருஷ்ணாயில் என்று சொன்னால்தான் சுலபமாகப் புரியுமல்லவா அந்த மாதிரி ஆகிவிட்டது.
-- ஜி.எஸ்.சுப்ரமணியன்,மனித வள ஆலோசகர், எழுத்தாளர், க்விஸ் மாஸ்டர்,.    வெற்றிக்கொடி.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஏப்ரல் 14 , 2014.  

Friday, April 1, 2016

யுவான் சுவாங்.

   உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.  அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.  ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங்.
     நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம்.  அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல்.  புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.  ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல.  கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம்... ஆகியவை.
     தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.  கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்டு வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி.645-ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தபோது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65-வது வயதில் இறப்பதுவும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல வாசகன் முன் விரிகிறது.
-- 'போதியின் நிழல்'  நூலில், அசோகன் நாகமுத்து.
-- ஆனந்த விகடன். 16-10-2013.