Saturday, October 30, 2010

உடல் பருமனை குறைக்க ...

உலகம் முழுவதும் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது . இந்நிலையில் , குடமிளகாயில் உள்ள ஒரு பொருள் உடல் பருமனை குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது .
ஆராய்ச்சியாளர் ஜாங் ஒன் யுன் தலைமையிலான குழுவினர் , உடல் பருமனை குறைப்பதில் குடமிளகாயின் பங்கு குறித்து ஆய்வு செய்தனர் . ஒரு பிரிவு எலிகளுக்கு அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுடன் குடமிளகாய் கலந்த உணவைக் கொடுத்து வந்தனர் . மற்றொரு பிரிவுக்கு அதே கொழுப்புச் சத்து உணவை மட்டும் கொடுத்தனர் .
குறிப்பிட்ட நாட்கள் கழித்து எலிகளின் உடல் பருமனை சோதனையிட்டனர் . குடமிளகாய் கலந்த உணவு சாப்பிட்ட எலிகளின் எடை அதை சாப்பிடாத எலிகளைவிட 8 சதவிகிதம் வரை குறைந்திருந்தது . மேலும் , கொழுப்புச் சத்தின் அளவு கட்டுப்பட்டிருந்தது .
" குடமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற பொருள் , கொழுப்பை குறைக்கிறது . உடல் பருமனிலிருந்து விடுபட உதவுகிறது . பருமனை குறைக்க மருந்து தயாரிக்க இந்த ஆராய்ச்சி உதவும் " என ஜாங் தெரிவித்தர்ர் .
---- தினகரன் , ஜூலை 23 . 2010.

Friday, October 29, 2010

டாவின்சி .

இன்று உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படுபவர் டாவின்சி . அவர் தனது வாழ்வின் வெற்றிப்பாதைக்கு SMART என்றொரு திட்டம் வகுத்திருந்தார் . அந்தத் திட்டம் இதுதான் :
S -- SPECIFIC........................ எது வேண்டும் என்று குறிப்பாக அறிந்து வைத்திருத்தல் .
M -- MEASURABLE................ அளவிடத் தக்கதாக இலக்குகளைக் கொள்ளுதல் .
A -- ACCOUNTABILITY............ இலக்குகளை எட்டுவதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றல் .
R -- REASLISTIC / RELEVANT..இலக்குகளை யதார்த்தமானதாகவும் , பொருத்தமானதாகவும் அமைத்தல் .
T -- TIMELINE ......................... இலக்குகளை எட்டக் கால எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுதல் .
இவைதான் டாவின்சியின் வெற்றி ரகசியங்கள் .
--- நம்பிக்கை மின்னல்கள் , நூலில் மரபின்மைந்தன் ம . முத்தையா

Thursday, October 28, 2010

பலூன் !

லஸ்கோ என்ற பிரேசில் நாட்டு மதகுருதான் பலூனைக் கண்டுபிடித்தவர் .1709 - ம் ஆண்டுதான் முதன்முதலாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன . அதைக் கடவுளின் வருகைபோல வியப்போடு பார்த்ததாக சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன . பலூன் என்பது தமிழ் வார்த்தை இல்லை . அது பலூனீ என்ற இத்தாலியச் சொல்லில் இருந்து உருவானது . பெரும்பான்மை நாடுகளில் பலூன் அதே பெயரில்தான் அழைக்கப்படுகிறது .
--- எஸ். ராமகிருஷ்ணன். ஆனந்தவிகடன் . 09. 06. 2010.

Wednesday, October 27, 2010

விமானங்கள் !

பெருமாள் கோயிலின் புகழ்பெற்ற விமானங்கள் !
திருவரங்கம் ............. ..........-- பிரணவாஹ விமானம் .
திருவல்லிக்கோணி.............-- ஆனந்த விமானம் .
திருப்பதி ..............................-- ஆனந்தநிலைய விமானம் .
காஞ்சீபுரம் ................ ..........-- புண்யகோடி விமானம் .
ஒப்பிலியப்பன் கொயில்... -- சுத்தானந்த விமானம் .
திருக்கண்ணபுரம் .............. -- உத்பலாவதாக விமானம் .

' ஆரூட ' ஆக்டோபஸ் பால் திடீர் மரணம் .

தென்னாப்பிரிக்காவில் சில மாதங்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில், விளையாட்டு வீரர்களைவிட அதிகமாக பிரபலமடைந்தது பால் என்ற ஆக்டோபஸ் .
போட்டிகளின் முடிவை துல்லியமாக அது கணித்ததுதான் இந்த புகழுக்குக் காரணம் . ஜெர்மனியில் உள்ள சீ லைப் செண்டர் என்ற அருங்காட்சியகத்தில் வளர்க்கப்பட்டது இந்த 2 வயது ஆக்டோபஸ் பால் .
இப்படி உலகம் முழுக்க பிரபலமான பால், தனது கண்ணாடி தொட்டிக்குள் நேற்று முன்தினம் ( திங்கள் கிழமை ) இரவு உயிரிழந்தது .
இது குறித்து ஓபர்ஹாசன் விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ' இது எங்களுக்கு பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது . அதன் பெருமையை நினைவு கூறும் வகையில் நிரந்தரமான ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் . இதற்காக அதன் உடல் குளிர்பதனப்படுத்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது .
பாலை போலவே ஜோதிடம் கூறும் திறன் பெற்ற இன்னொரு குட்டி ஆக்டோபஸை அங்கு, வளர்க்க தொடங்கி விட்டனர் அருங்காட்சி நிர்வாகத்தினர் .
--- தினகரன் & தினமலர் . அக்டோபர் 27 , 2010 .

எவரெஸ்ட்

எவரெஸ்ட் : சில சுவாரஸ்யங்கள் .
* இருக்கும் இடம் : நேபாளம் -- திபெத் எல்லைப்பகுதி .
* நேபாளப் பெயர் : சாகர் மாதா ( வான்தேவதை ).
* திபெத்தியப் பெயர் : சோமாலங்கா ( பிரபஞ்ச தேவதை ).
* பழைய ஆங்கிலப் பெயர்கள் : பீக் பி ( 1854 வரை ) ; பீக் 15 ( 1854 முதல் 1865 வரை )
* ' எவரெஸ்ட்' பெயர் பின்னணி : பிரிட்டிஷ் இந்திய அரசில் தலைமை சர்வேயராக இருந்தவர் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் . இவர்தான் இந்த சிகரத்தின் அதிகாரபூர்வ உயரத்தை முதலில் பதிவு செய்தவர் . இவரைக் கவுரவிக்கும் வகையில்
1865ல் இந்த சிகரத்தை அவரது பெயரையே சூட்டினர் .
* இதில் முதன்முதலில் ஏறியவர்கள் : எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ( 1957 மே 29 ).
* இதில் முதன்முதலில் தனியாக ஏறியவர் : ரீன்ஹோல்டு ( 1980 ஆகஸ்ட் 20 ).
* இதில் முதன்முதலில் ஏறிய பெண் : ஜப்பானைச் சேர்ந்த ஜங்கோதபேய் ( 1975 மே 16 ).
--- தினமலர் , ஜூன் 4 , 2010 .

Monday, October 25, 2010

மூலிகைகள் !

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள் !
நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை .

Sunday, October 24, 2010

' வெள்ளை மாளிகை ' நிறம் மாறுகிறது !

அமெரிக்க ' வெள்ளை மாளிகை ' நிறம் மாறுகிறது . அக்டோபர் மாதம் ,ஆர்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம் . அதற்கான குறியீடு.... பிங்க் நிறம் . வெள்ளை மாளிகையை பிங்க் நிறத்தில் மாற்றிவிட்டால், உலகமே உற்று கவனிக்கும் என்று ஒபாமாவின் மனைவி மிஷேலிடம் ஐடியா சொல்லி, அனுமதி வாங்கிவிட்டார்கள் . அதனால், விளக்குகளின் வெளிச்சத்தில் இந்த மாத இறுதிவரை பிங்க் நிறத்தில் ஜொலிக்க இருக்கிறது வெள்ளை மாளிகை .
பி ( ங் )க் ஐடியா !
--- இன்பாக்ஸ் , ஆனந்த விகடன் . 27 . 10 . 10 .

ஸ்ரீ காளஹஸ்தி !

கஷ்டங்களைக் கேட்டுக் கேட்டே மனம் உடைந்து , நொறுங்கிவிட்டது ஸ்ரீகாளஹஸ்தி !
சுனாமியாகச் சீறுகிறது கடல் . லைலாவாக அலைகிறது காற்று . பூகம்பமாக வெடிக்கிறது பூமி . இப்படிப்பட்ட இயற்கையின் கோபம் இப்போது கோபுரங்களிலும் தெறிக்கிறது .
சீகாளத்தி என்பதுதான் அந்தத் தலத்தின் பெயர் . சீ என்பது சிலந்தியையும், காளம் என்றால் பாம்பையும், அத்தி என்பது யானையையும் குறிக்கும் . இம்மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாக ஆனதால், இப்பெயர் பெற்றதாக ஐதீகம் . தென்கைலாசம் என்று இதை அழைப்பார்கள் . பெண்ணாறு ஆற்றின் கிளை நதியான ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் இந்த ராஜ கோபுரத்தைக் கட்டியவர் கிருஷ்ணதேவராயர் . பஞ்சபூத சிவ தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் . திருப்பதியில் இருந்து 38 கி. மீ. தொலைவில் உள்ள இந்த ராகு, கேது தோஷநிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் . கம்பீரமான 140 அடி உயரம் ராஜகோபுரத்தில் திடீரன மேலிருந்து கீழ் வரை விரிசல் ஏற்பட்டு, 26 . 05. 2010 அன்று இரவு 8. 00 மணிக்கு தரைமட்டம் ஆனது அந்த திருக்கோயில் . அந்த ராஜகோபுரம் இடிந்து விழும்போது, அருகில் இருந்த வீடுகளும் கடைகளும் நொறுங்கின . ஆனால், அடிவாரத்தில் இருந்த கிருஷ்ணதேவராயரின் சிலை மட்டும் அப்படியே இருந்தது . சிதறிக்கிடக்கும் கோபுரச் சிதறலை எடுத்துச் செல்ல பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது . உள்ளே புதையல்கள் இருக்கலாம் என்ற வதந்திக்கும் பஞ்சம் இல்லை .
அதைப் பார்வையிட வந்த ஆய்வாளர் வெங்கட கிருஷ்ணப் பிரசாத்திடம் கேட்ட போது, " ஞான பிரசுரனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், 1988 -ம் ஆண்டு இந்தக் கோபுரத்தில் இருந்த சிற்பத்தில் சிறு உடைப்பு ஏற்பட்டு, 15 லட்சம் செலவு செய்து மராமத்துப் பார்த்தார்கள் . ஆனால், அது கடந்த 25 .05. 2010. அன்று இரண்டாகப் பிளவுபட்டது என்றார் .
ஜோதிடரும் ஆய்வாளருமான டாக்டர் வித்யாதரனைக் கேட்டபோது, " இக்கோயில், ஒருபக்கம் மலையும் , இன்னொரு பக்கம் ஆறும் இருக்கும் பிரசித்திபெற்ற அமைப்பு பெற்றது . இதுபோன்ற ஸ்தலங்களில் திருக்குளம் இருக்க வேண்டும் . வரும் பக்தர்கள் பாவங்களைக் கழுவுவார்கள் . அந்தத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புது நீர் பாய்ச்சப்படும் . அதாவது தோஷங்கள் தேங்காமல் வெளியேற்றப்படும் . அப்படிப்பட்ட திருக்குளம் இங்கு இல்லை . அதனால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . கோபுரக் கலசம் விழுந்தாலே , ஆள்வோருக்கு ஆகாது என்பார்கள் . இப்போது கோபுரமே விழுந்து இருக்கிறது . மேலும் இதனுடைய பிரதிபலிப்பு 80 கி. மீ. தூரம் வரை இருக்கும் என்பது ஐதீகம் " என்றும் பயமுறுத்துகிறார் .
கோபுர தரிசனத்தைப் பாப விமோசனமாகச் சொல்வார்கள் . அதையே பாவம் செய்ய விட்டுவிடக் கூடாது !
---- தினகரன் , 25 , 26. 05.2010 .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,09. 06. 2010.
கண்ணப்பரை ஆட்கொண்டு அருள் புரிந்த இடம்; அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற ஸ்தலம்; நக்கீரர் சாப விமோசனம் பெற்று ' கயிலை பாதி, காளத்தி பாதி ' என்று பாடிய இடம்; ஆதிசங்கரர் விஜயம் செய்து, அம்மன் ( ஞானபிரஸுனாம்பிகை ) சந்நதியில் ஸ்ரீ சக்ரம் பதித்த இடம்; காஞ்சிப் பெரியவர்களின் திருப்பாதம் பட்ட இடம்; பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுத் தலம்.... இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றிருப்பது ஸ்ரீ காளஹஸ்தி க்ஷேத்திரம் .
---- ஆனந்தவிகடன் .. விகடன் ,16. 06. 2010.

எவரெஸ்ட் .

எவரெஸ்ட் : சில சுவாரஸ்யங்கள் .
* இருக்கும் இடம் : நேபாளம் -- திபெத் எல்லைப்பகுதி .
* நேபாளப் பெயர் : சாகர் மாதா ( வான்தேவதை ).
* திபெத்தியப் பெயர் : சோமாலங்கா ( பிரபஞ்ச தேவதை ).
* பழைய ஆங்கிலப் பெயர்கள் : பீக் பி ( 1854 வரை ) ; பீக் 15 ( 1854 முதல் 1865 வரை )
* ' எவரெஸ்ட்' பெயர் பின்னணி : பிரிட்டிஷ் இந்திய அரசில் தலைமை சர்வேயராக இருந்தவர் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் . இவர்தான் இந்த சிகரத்தின் அதிகாரபூர்வ உயரத்தை முதலில் பதிவு செய்தவர் . இவரைக் கவுரவிக்கும் வகையில்
1865ல் இந்த சிகரத்தை அவரது பெயரையே சூட்டினர் .
* இதில் முதன்முதலில் ஏறியவர்கள் : எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ( 1957 மே 29 ).
* இதில் முதன்முதலில் தனியாக ஏறியவர் : ரீன்ஹோல்டு ( 1980 ஆகஸ்ட் 20 ).
* இதில் முதன்முதலில் ஏறிய பெண் : ஜப்பானைச் சேர்ந்த ஜங்கோதபேய் ( 1975 மே 16 ).
--- தினமலர் , ஜூன் 4 , 2010 .

Saturday, October 23, 2010

வர்க்கம்.... ஈஸி டெக்னிக் !

இரண்டு இலக்க எண்களின் வர்க்கத்தை மிக வேகமாகக் கண்டுபிடிக்க இந்த ஈஸி டெக்னிக் உங்களுக்கு உதவும் ...
உதாரணமாக, 36ன் வர்க்கம் கண்டுபிடிக்கலாமா ?
36 ன் ' ஒன்றுகள் ' இடத்தில் உள்ளது ' 6 ' ; ' பத்துகள் ' இடத்தில் உள்ளது ' 3 ' .
முதல் கட்டம் : 6 ஐ 6 ஆல் பெருக்குங்கள் . விடை 36 .
2வது கட்டம் : 3ஐயும் 6 ஐயும் பெருக்கி 20 ஆல் பெருக்குங்கள் . விடை 360 .
3வது கட்டம் : 3ஐ 3 ஆல் பெருக்கி 100 ஆல் பெருக்குங்கள் . விடை 900 .
4வது கட்டம் : மூன்று விடைகளையும் கூட்டுங்கள் . விடை 36 + 360 + 900 = 1,296 . இது தான் 36 ன் வர்க்கம் !
--- தினமலர் . ஜூன் 4 , 2010 .

Friday, October 22, 2010

விமானங்களை வீழ்த்த...

விமானங்களை வீழ்த்த தீவிரவாதிகள் புது வியூகம் .
விமானங்களை கடத்தாமலேயே வீட்டில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன் விமானத்தை தரையில் மோதவைத்து சின்னாப்பின்னமாக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர் தீவிரவாதிகள் . இந்த அதிர்ச்சித் தகவல் உலக நாடுகள் அனைத்தையும் கலக்கம் அடைய வைத்திருக்கிறது . இதைக் கண்டுபித்தவர்கள், பிரிட்டன் நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் விஞ்ஞானிகள்தான் சொல்லியுள்ளனர் .
அதாவது விமானங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்குகின்றன . இந்த கம்ப்யூட்டர்கள்தான் தீவிரவாதிகளுக்கு குறி . அதாவது விமானங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மாஸ்டர் செர்வர்கள், தரைக்கட்டுப்பாட்டு நிலயங்களில்தான் இருக்கும் . இந்த செர்வர்களில், தீவிரவாதிகள் தங்கள் சொல்படி கேட்கக்கூடிய வைரஸ்களை புகுத்துவார்களாம் . பிறகு, அந்த வைரஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும்படி புரோகிராமிங் வடிவமைப்பார்களாம் . அதன்பிறகு, அந்தரத்தில் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, தரையில் இருந்தபடியே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள் தீவிரவாதிகள் . அதன்பிறகு, விமானத்தை தரையிலோ, மலையிலோ, கடலிலோ விழவைக்கவோ, மோதச்செய்யவோ உத்தரவு பிறப்பிப்பார்களாம் . அடுத்த நிமிடம் விமானம் சின்னாபின்னமாகிவிடும் . அப்புறம் என்ன அதில் இருப்பவர்கள் அத்தனைபேரும் காலி .
இந்த சைபர் கிரைம் குற்ற நிகழ்வுகள் இன்னும் சில மாதங்களில்கூட நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் . விமானங்களை மட்டுமல்ல, அணு உலைகள், மின்சார உற்பத்தி கேந்திரங்கள் என எதைவேண்டுமானாலும் தீவிரவாதிகளால் தகர்க்க முடியுமாம் .
பொதுவாக கம்ப்யூட்டர் சார்ந்த போலி வைரஸ்கள் உற்பத்தி கேந்திரமாக சீனா விளங்குவதால், அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
--- தினமலர் . அக்டோபர் 21 , 2010 .

' வர்ணாச்சிரம தர்மம் '

' வர்ணாசிரம தர்மம் என்பது தொழில் அடிப்படையிலானது ; பிறப்பு அடிப்படையிலானது அல்ல ' என்பதற்கு நமது ஆன்மிகப் பாரம்பரியத்திலேயே ஏராளமான சாட்சியங்கள் உண்டு .
இந்து மதத்தின் அடிப்படையான வேதங்களைத் தொகுத்தவர் வேதவியாசர் . அவர், பிறப்பால் பிராமணர் அல்ல . பராசர முனிவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் அவர் .
ராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான ராவணன் , பிரம்மாவின் பேரன் . பிறப்பால் பிராமணரான அவர் , குணத்தால் அரக்கனாகவும், தொழிலால் சத்ரியராகவும் இருந்தவர் .
இந்து மதத்தின் புனிதனூலான ஸ்ரீமத் பகவத்கீதையை அருளிய ஸ்ரீகிருஷ்ணர் , யாதவ குலத்தில் பிறந்தவர் .
--- பூஜ்யா , தினமலர் . 05. 06 . 2010.

Thursday, October 21, 2010

படிக்காத மேதைகள் !

மொகலாய மன்னர்களிலேயே எழுதப்படிக்கத் தெரியாதவர் அக்பர் . ஆனால் அவர் 24 நாலாயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து பிறர் படிப்பதை ஊக்குவித்தார் .
பெரும் தத்துவ மேதையான சாக்ரடீசுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது . இவர் சொல்வதை நண்பர்கள் எழுதுவார்கள் . விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன் , மைக்கேல் பாரடே ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களே .
--- டி. உமாமகேஸ்வரி , திருவெண்காடு . தினமலர் ,05.06. 2010.
கவிதை .
கவிதை -- என்பது வார்த்தை தொகுப்பு
காதல் -- என்பது வயசுக் கொழுப்பு .
--- எஸ். சிநேகா, மண்ணச்சநல்லூர் . தினமலர் ,05.06. 2010.

Wednesday, October 20, 2010

சிலந்தி வலை !

இயற்கையின் மகா ஆச்சர்யங்களில் சிலந்தியும் ஒன்று . 65 அடி அகலத்துக்கு , ஆயிரத்துக்கும் மேற்பட்ட ' ஜங்ஷன் 'களோடுகூடிய ஒரு சிலந்தி வலையைக் காட்டில் ஆய்வாளர்கள் பார்த்துப் பிரமித்து இருக்கிறார்கள் . ஒரே ஒரு சிலந்தி கட்டிய வலை !
சிலந்தியின் வயிற்றில் இருந்து பீச்சியடிக்கப்படும் திரவம்தான் , வலை பின்னப் பயன்படும் நூல் . உடலில் இருந்து திரவமாக வெளியேறிய மறு விநாடி, திடமாக மாறிவிடுகிற இழை அது . ( உதாரணமாக , மனிதன் நம்பர் 1 போகிறான் . வெளியேறும்போதே சிறுநீர் திடப் பொருளாக மாறிவிட்டால் எப்படி இருக்கும் ?!. ஆனால், 50 ஆயிரம் வகையான சிலந்திகளில் பெரும்பான்மையானவை வலை பின்னுவது இல்லை என்பது வேறு விஷயம் . சரி , சிலந்தி -- தன் வலையில் சிக்காததற்கு -- ஆச்சர்யமாக இருக்கும் . அது தனக்காக ஸ்பெஷலாக ' நூல் பாதை ' போட்டுக்கொள்கிறது . அதன் வழியாகத்தான் அது போகும் . அந்த நூலில் அதன் கால்கள் ஒட்டிக்கொள்ளாது . ஒட்டிக்கொண்டால் சிலந்தி இனம் என்பதே இருந்திருக்காது !
--- ஹாய் மதன் , ஆனந்த விகடன் . 07. 04. 2010.

Tuesday, October 19, 2010

அளவு மாற்றும் வழி !

அளவுகளை மாற்ற இந்த பட்டியல் உங்களுக்கு உதவும் :
இன்ச் x 2. 54 = சென்டிமீட்டர் .
அடி x 0. 30 = மீட்டர் .
யார்டு x 0. 91 = மீட்டர் .
மைல் x 1. 60 = கிலோமீட்டர் .
அவுன்ஸ் x 28. 34 = கிராம் .
பவுண்டு x 0. 45 = கிலோகிராம் .
ஏக்கர் x 0. 40 = எக்டேர் .
--- தினமலர். ஏப்ரல் 30 . 2010.

Monday, October 18, 2010

Murder -- Assassination.

கொலையை ஆங்கிலத்தில் Murder , Assassination என இரண்டாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் . இரண்டுக்கும் உள்ள வேறுபாடு :
முடிவாக ( ! ) ஒரே அர்த்தம்தான் . ' மர்டர் ' என்கிற ஆங்கில வார்த்தை பண்டைய சமஸ்கிருத ' மர் ' என்கிற வார்த்தையில் இருந்து வந்தது . ( இந்தியில்கூட ' மர்கயா ' என்றால் இறந்துபோய் விட்டதாக அர்த்தம் ! ). Assassination என்கிற வார்த்தையை இப்போது வி. ஐ. பி -- க்களுக்குத் தான் பயன்படுத்துகிறோம் . சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், புனிதப் போரில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களைக் கொல்ல அரேபியர்கள் ' கெரில்ல ' ப் படை அமைத்தனர் . அந்த வீரர்கள் கொலை செய்யக் கிளம்புவதற்கு முன்பு Hashish என்கிற ஒரு வகை கஞ்சாவை மென்று போதை ஏற்றிக்கொள்வார்கள் . ( அப்போதுதான் வெறி அதிகமாகும் ! ). அந்த வீரர்கள் Hashshashins என்று அழைக்கப்பட்டார்கள் . அது இங்கிலீஷில் பிறகு Assassin என்று ஆகிவிட்டது !
--- ஹாய் மதன் . ஆனந்த விகடன் , 28. 04. 2010.

Sunday, October 17, 2010

' ஸ்பேஸ் டூர் '

' ஸ்பேஸ் டூர் ' என்பது 1990 - ம் ஆண்டுகளின் இறுதியில்தான் உருவானது . டென்னிஸ் டிடோ என்கிற அமெரிக்கர்தான் 2001 -ல் முதன்முதலா ஒரு ஸ்பேஸ் டூரிஸ்டாக விண்வெளியில் 9 நாட்கள் தங்கியிருந்தார் .
இந்த டூரில் 2 வகை இருக்கிறது . பூமியிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் போய், ஒரு இரண்டரை மணிநேரம் இருந்துவிட்டு, உடனே திரும்பி வருவது . இதில் ஜாலியான விஷயம், புவியீர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கின்ற அற்புத உணர்வுதான் . அங்கிருந்து பூமி முழுவதையும் பறவைப் பார்வையில் பார்க்கலாம் .
இன்னொருவகை டூர்... ஏற்கனவே வான்வெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் இருந்துவிட்டுத் திரும்புவது .' ஸ்பேஸ் அட்வென்சர் லிமிடெட் ' என்கிற அமெரிக்க நிறுவனம், ரஷ்ய விண்வாகனங்களில் 2001 - ம் ஆண்டிலிருந்து இப்படி டூர் அனுப்பி வருகிறது . இதுவரை 8 பேர் இப்படி ஜாலியாகப் போய் வந்திருக்கிறார்கள் . அங்கே அதிகபட்சம் 15 நாட்கள் தங்கியிருக்க முடியும் . அதற்காக நாம் கட்டவேண்டிய தொகை 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இந்திய மதிப்பில் சுமார் 91 கோடி ரூபாய் ! நம் தலை கிறுகிறுக்க ஆரம்பித்து விட்டது .
--- மயில்சாமி அண்ணாதுரை , ' சந்திராயன் விண்வெளித் திட்ட இயக்குனர் .
--- நாச்சியாள் . அவள் விகடன் , 26. 03. 2010.

Saturday, October 16, 2010

செயற்கை மார்பகம் .

பெண்கள் செயற்கை முறையில் ' அவற்றை ' பெரிதாக மாற்றிக்கொள்வது விஞ்ஞான வளர்ச்சியா ? இதனால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாதா ?
மனித இனத்துக்கு மட்டுமே நேர்த்தியான மார்பகங்கள் உண்டு . மற்ற அனைத்து பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் மட்டுமே உண்டு . கூடவே, சிறிய ' பை'கள் இருக்கலாம் . பெரிய மார்பகத்துக்கும் பால் உற்பத்திக்கும் சம்பந்தம் கிடையாது . ஒப்பிடும்போது மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு இன்னும் நிறைய பால் சுரக்கக்கூடும் . மார்பக அளவு என்பது வம்சத்தைப் பொருத்தது ( குறிப்பாக அப்பா வழி ! ) ஆகவே , அவற்றைத் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதே நல்லது . அதைப் பெரிதாக்கும் சர்ஜரி பேஜாரானது . முலைக் காம்பில் துவங்கி நேர்க்கோடாகக் கீழ் நோக்கி வெட்டித் திறந்து , ' சிலிகான் ' என்கிற ' இம்ப்ளான்ட்' டை நுழைத்துப் பொருத்திப் பெரிதாகுகிறார்கள் . ( சிலிகான் உலோகம் அல்ல . அது குவார்ட்ஸ்போல இயற்கையில் கிடைக்கிற , சற்று மிருதுவான , மினரல் ). சில சமயங்களில் காம்புகளை வெட்டித் தனியே எடுத்து ( கோணலாகப் போகக் கூடாது என்பதற்காக ) பிறகு மீண்டும் பொருத்தி.... ஏராளமான தையல்கள் போட வேண்டியிருக்கும் . பிற்காலத்தில் ' இம்ப்ளான்ட் ' நகர்ந்து ... எசகுபிசகாகிப் போகவும் வாய்ப்பு உண்டு . பால் சுரப்பதுகூட சற்றுத் தடை படலாம் . தேவையா இதெல்லாம் ? !
---ஹாய் மதன் . ஆனந்த. விகடன் , 05. 05 .2010.

Friday, October 15, 2010

ஞாபக சக்தி

ஞாபக சக்தி குறைந்து விடும் .
அதிகம் செல்போன் பேசினால் ஞாபக சக்தி குறைந்து விடும் . ஆய்வில் அதிர்ச்சி தகவல் .
செல்போனில் தினமும் பல மணி நேரம் பேசிக் கொண்டே இருந்தால் ஞாபக சக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது .
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் பாதி பேருக்கு தங்கள் வாழ்க்கை துணையின் நம்பர் கூட மறந்து விடுகிறது . 10 ல் 7 பேருக்கு நெருங்கிய நண்பரின் போன் நம்பரை சட்டென நினைவுக்கு கொண்டுவர முடிவதில்லை .
51 சதவீதம் பேருக்கு பெற்றோரின் போன் நம்பர் ஞாபகத்தில் இருப்பதில்லை . தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவோரில் 10ல் 9 பேருக்கு திடீரென கேட்டால் முக்கிய நம்பர்களை உடனடியாக சொல்ல முடியவில்லை . 5 முதல் 10 விநாடிகள் யோசித்தே சொல்ல முடிகிறது . இது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது . அவசர நேரத்தில் முக்கிய பெயர்கள் , நம்பர்கள் நினைவுக்கு வராது . இதை ' கோல்டு பிஷ் மெமரி ' என்கிறோம் .
இதற்கு முன் நடந்த ஆய்வு ஒன்றில் , ' சராசரியாக ஒவ்வொருவரும் 5 முக்கிய போன் நம்பர்கள் , பாஸ்வேர்டுகள் , 2 வாகன நம்பர் பிளேட்கள் , 3 செக்யூரிடி அடையாள எண்கள் , 3 வங்கி கணக்கு எண்களை தினசரி வாழ்க்கையில் நினைவில் கொள்கின்றனர் . அதற்கு மேல் மறதி ஏற்படுகிறது ' என்று கூறப்பட்டது .
--- தினகரன் , 15 ஜூலை . 2010 .

Thursday, October 14, 2010

மனநோய் மருத்துவமனை !

தேர்வு வைக்க புத்திசாலித்தனம் தேவை .
" ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள் . ' மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள் . அதற்கு அவர் , ' மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம் . பின்பு குழாயைத் திறந்துவிடுவோம் . நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம் ' என்றார் . குழம்பிய பத்திரிகயாளர்கள் , ' இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ? ' என்று கேட்டார்கள் . ' மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள் ' என்றார் ! "
--- அ. பேச்சியப்பன், ராஜபாளையம் . ஆனந்த. விகடன் , 05. 05. 2010.

Wednesday, October 13, 2010

வி. எஸ். காண்டெகர் .

விபரீதமான கேள்வி -- புத்திசாலித்தனமான பதில் !
" புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் வி. எஸ். காண்டெகர் . அவருடைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டான் . ' என்ன சீக்கிரம் ?' என்று கேட்டார் காண்டேகர் . ' யாரோ ஒரு தலைவர் இறந்துவிட்டாராம் . அதனால் பள்ளிக்கு விடுமுறை ' என்றான் . அதோடு விடவில்லை , ' தலைவர்கள் இறந்தால் கட்டாயம் விடுமுறை விட வேண்டுமா ? ' என்று கேட்டான் . ' புகழ் பெற்றவர்கள் இறந்தால் விடுமுறை விடுவது மரபு ' என்றார் காண்டேகர் . உடனே, அந்த விபரித்மான கேள்வியைக் கேட்டான் சிறுவன் . ' அப்படி என்றால் , நீங்கள் இறந்தாலும் விடுமுறை விடுவார்களா ? ' ஒருகணம் திகைத்த காண்டேகர், ' யாருக்கு விடுமுறையோ இல்லையோ கண்டிப்பாக உனக்கு விடுமுறை ' என்றார் !"
--- கோ. ஞானகுரு , விருதுநகர் . ஆனந்த விகடன் , 05. 05. 2010.

Tuesday, October 12, 2010

10 ஏ. சி = ஒரு மரம் !

நாம் அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வைத்து அதனை விருந்தினரைப் போல் கவனிக்க உறுதியெடுப்போம் ...!
காரணம் , 10 ஏசி மெஷின்கள் 24 மனி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது . 18 பேர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்க தேவையான பிராணவாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன . எனவே மரம் நடுவோம் , நல்ல காற்றை சுவாசிப்போம் !
--- ஆர். சாவித்ரி , முருங்கப்பேட்டை. தினமலர் ,1. 05. 2010.

Monday, October 11, 2010

ராகு காலங்களை மனனம் செய்ய...

தினசரி ராகு காலங்களை மனனம் செய்ய ஒரு எளிய வழி .
ராகுகாலத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடாது என்பார்கள் . அத்தகைய ராகுகாலம் தினசரி எந்த நேரத்தில் வருகிறது என்பது பலருக்கும் தெரியாது . அப்படிப்பட்ட நேரத்தை மனதில் பதித்துக்கொள்ள ஒரு எளிய வழி இது :
' திருவாரூர் சந்தையிலே வெற்றிலை புஷ்பம் விற்ற செட்டியாரும் ஞானியரே ! '
திருவாரூர் -- திங்கள் -- காலை 7.30 முதல் 9.00 மணி வரை .
சந்தையிலே -- சனி -- காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை .
வெற்றிலை -- வெள்ளி -- காலை 10.30 மணி முதல் 12 .மணி வரை .
புஷ்பம் -- புதன் -- மதியம் 12 மணி முதல் 1. 30 மணி வரை .
விற்ற -- வியாழன் -- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை .
செட்டியாரும் -- செவ்வாய் -- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை .
ஞானியரே -- ஞாயிறு -- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை .
--- காமேஸ்வரன் , சென்னை. தினமலர் ,மே 6 , 2010 .

Sunday, October 10, 2010

ப்ரிட்ஜ்.

பாக்டீரியா, பூஞ்சைக் காளான், நுண்ணுயிர்கள் ஊடுருவும் போதுதான் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகின்றன . இந்த ஊடுருவலும் உணவு பாதிப்பும் , வெதுவெதுப்பான இடங்களில்தான் அதிகமாகவும் வேகமாகவும் நடக்கும் . குளிர்ந்த சூழ்நிலை, இந்த ஊடுருவலையும் பாதிப்பையும் தடுத்து விடும் . ப்ரிட்ஜுக்குள் குளிர்ந்த சூழல் இருக்கிறது அல்லவா ? இதுதான் அதில் வைக்கப்படும் உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது .
--- தினமலர், மே , 7 , 2010.

Saturday, October 9, 2010

பசு பராமரிப்பு .

பழங்காலத்தில் பசு மாடுகள் கட்டப்படும் தொழுவத்தைக் கோயிலாக கருதியிருக்கிறார்கள் .ஆக்கோட்டம் என்று அவற்றை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . காலப்போக்கில் பசுத்தொழுவங்களை பசுமடம் என்று அழைக்கலாயினர் .
பசு மாட்டுத் தொழுவத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் பல உண்டு .
நல்ல காற்றோட்டம், சரிவான அமைப்பு, மிதமான சீதோஷ்ணம் உடைய நிலையில் மண்தரை அமைக்கப்பட வேண்டும், அந்த மண் தரை ஆற்று மண் , புற்று மண் , ஓடை மண் , அரச மரத்தடி மண் , வில்வ மரத்தடி மண் என்னும் ஐவகை மங்கள் கலந்ததாய்த் தூய்மையானதாய் அமைக்கப்படவேண்டும் .
--- புலவர் வே. மகாதேவன் , தினமலர் , மே 16 . 2010 .

Friday, October 8, 2010

தாயின் கண்ணீர் .

காந்திஜி -- கஸ்தூரிபாய் தம்பதியின் மகன் ஹீராலால் பெற்றோருக்கு இருந்த நற்குணங்களுக்குப் பகையான குணக்கேடுகள் ஹீராலாலிடம் நிறைந்திருந்தன .
ஒருமுறை , அவருக்கு கஸ்தூரிபா எழுதிய கடிதம் :
' என் அன்பு மகன் ஹீராலாலுக்கு ,
சென்னை நகரில் நள்ளிரவில் நடுத்தெருவில் குடிவெறியோடு நீ பல தவறுகள் செய்தாய் என்றும் , மறுநாள் ஒரு பெஞ் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார் என்றும் கேள்விப்பட்டேன் . இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்துவிட்டார்களே ! இது ஒரு பாரபட்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது . உன் தந்தையின் பெருமையை மனதில் கொண்டு அந்த மாஜிஸ்த்ரேட் உனக்கு சிறு தண்டனை அளித்திருக்க வேண்டும் ... நீ செய்தது பெருந்தவறு .
கண்ணியம் உள்ளவனாக இரு என்று பல முறை உன்னிடம் கண்ணீருடன் கூறியிருக்கிறேன் . நீயோ மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய் . இறுதிக் கட்டத்தை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தை எண்ணிப்பார்...
--- முனைவர் அமுதா எழுதிய ' கஸ்தூரிபா காந்தியின் வாழ்வும் பணியும் ' நூலில் ஒரு பகுதி .

Thursday, October 7, 2010

கோமாதா !

முழுமுதல் தெய்வங்கள் என பிரம்மா , விஷ்ணு , ருத்திரன் , மகேஸ்வரன் , சதாசிவன் ஆகியவர்களைச் சொல்வார்கள் . அதனை அடுத்து அமைபவர்கள் தேவர்கள் முப்பத்து மூன்று கோடி என்றும் சொல்வார்கள் . இந்த எல்லா தெய்வங்களும் பசுவில் இடம்பிடித்திருக்கின்றன என்று புராணங்கள் சொல்கின்றன .
பசுவின் உடலில் வலது கண்ணில் சூரியன், இடது கண்ணில் சந்திரன், இரண்டு கண்களுக்கும் இடையில் ( நடுவில் ) சிவபெருமான், மூக்கின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், மண்டையில் தீர்த்தராஜன், வலது கொம்பில் எமன், இடது கொம்பில் இந்திரன், நெஞ்சில் மகாவிஷ்ணு, இடது முன் கழுத்தில் சரஸ்வதி, கீழ் பக்கம் ராகு, மேல் பக்கம் கேது, முன் கால் நடு முண்டுக்கு மேல் செவ்வாய், அதன் கீழ் சனி, அதன் மேல் சுக்கிரன், புதன், கொண்டையில் பிரம்மா, கொண்டையின் கீழ்ப்பக்கம் குரு, முன்பக்க வலது காலில் பைரவர், இடது காலில் அனுமன், நடு முதுகில் அக்னி, பின்பக்கம் முதுகில் வருணன், குபேரன், வாலின் கீழ் லட்சுமி, அதன்கீழ் கங்கை, வாலில் நாகராஜன் வாசம் செய்கிறார்கள் என்கிறது பக்தவிலாசம் என்னும் நூல் .
--- தினமலர் , ஏப்ரல் 1 , 2010.

Wednesday, October 6, 2010

மொபைல்

மொபைல் காணாமல் போகும் போது....
" ஒவ்வொரு மொபைலுக்கும் I M E I நம்பர் உண்டு . அதனைக் குறித்து வைத்துக் கொண்டால் , மொபைல் காணாமல் போகும் போது அந்த நம்பரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம் . மொபைலில் #06# என்று டைப் செய்தால் நம்பர் தெரிந்துவிடும் ."
--- சுபா . தஞ்சை . மங்கையர் மலர் , ஜூன் 2010 .

Tuesday, October 5, 2010

பூமி :

* பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கை கோள் -- ஸ்புட்னிக் .
* பூமியைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் -- ஜான் என் . ஹெலன் .
* பூமியைச் சுற்றி வந்த பெண் விண்வெளி வீராங்கனை -- வாலண்டினா .
* பூமிக்கும் , சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் -- 9 கோடியே 50 லட்சம் மைல்கள் .
* பூமி சூரியனுக்கு தூரத்தில் இருக்கும் நாள் -- ஜூலை 3 .
* பூமி சூரியனுக்கு அருகிலிருக்கும் நாள் -- ஜனவரி 3 .
* பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றவர் -- கோபர்நிக்கஸ் .
--- தினத்தந்தி , 24. 04. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Monday, October 4, 2010

மனிதன் மட்டும் !

விதைகளிலிருந்து
எழுந்திருக்கும் விருட்சம்
அடுத்த விருட்சங்களை நம்பி,
கிளைகளை விரிக்கவில்லை !
கிளைகளிலிருந்து
எழுந்திருக்கும் பறவை
அடுத்த பறவைகளை நம்பி
சிறகுகளை விரிக்கவில்லை !
சிறகுகளிலிருந்து
எழுந்திருக்கும் நம்பிக்கை
அடுத்த நம்பிக்கைகளை நம்பி
கரங்களை விரிக்கவில்லை !
தாயின் கருவறையிலிருந்து
எழுந்திருக்கும் மனிதன் மட்டும்
அடுத்தவர்களை நம்பி நம்பியே
வாழ்ந்து தோற்கிறானே.....?!
--- பொட்ட்ல்குழி ரா. ரெத்தினமணி, பாளை மத்தியச்சிறைச்சாலை. தினத்தந்தி , 09. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Sunday, October 3, 2010

எல்லாமே நம்பர் 3 .

அயோத்தி தீர்ப்பில் எல்லாமே நம்பர் 3 .
அதன் விவரம் :
* அயோத்தி வழக்கை விசாரித்தது .3 நீதிபதிகள் .
* தீர்ப்பு அறிவித்த நீதிமன்ற அறை எண் 21 . அதாவது ( 2 + 1 ) = 3 .
* தீர்ப்பு வெளியான நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு .
* தீர்ப்பு வெளியான தேதி அக்டோபர் 30 .
* தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதம் அவகாசம் .
* சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க தீர்ப்பு .
* எண் கணித ஜோதிடப்படி வியாழக்கிழமைக்கு ( தீர்ப்பு வெளியான நாள் ) வழங்கப்பட்டுள்ள எண் 3 .
* 60 ஆண்டுகளாக வழக்கு நடந்தாலும் , தீர்ப்பு வெளியான ஆண்டு 2010 . அதாவது ( 2 + 0 + 1 + 0 ) = 3 .
இன்னும் யோஜித்து நிறைய சொல்வார்கள் .
--- தினகரன் . 2 அக்டோபர் 2010 .

அட்சய திருதியை !

அட்சய திருதியை நாளில் நடந்தவை .
* பரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் அட்சய திருதியை நாளில்தான் .
* இந்தியாவின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்தது ஒரு அட்சய திருதியை அன்றுதான் .
* திரவுபதையின் மானம் காக்க கிருஷ்ண பரமாத்மா அவளுக்கு அட்சய வஸ்திரம் அளித்தது அட்சய திருதியை நாளில்தான் என்கிறார் மகாபாரதம் தந்த வியாசர் .
* மதுரை மீனாட்சியை, சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை தான் .அதனால்தான் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்று கூறுவோரும் உண்டு .
* பிரம்மதேவன் பூமியை படைத்ததும் இந்த நாளில்தான் .
* மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரவுபதிக்குக் கொடுத்தான் . அதுவும் இதே நாளில்தான் !
* காசி அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்ன பிட்சை அளித்ததும், ஐஸ்வரிய லட்சுமி உதயமானதும் இதே நாளில்தான் .
--- தினத்தந்தி , ஆன்மிகம் . 11. 05. 2010. இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு.

Saturday, October 2, 2010

தமிழை அப்படி வளர்த்தார் !

உ. வே. சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கவிதை பாடும் வேகத்தில் தனியானதோர் ஆற்றலைப் பெற்றிருந்தார் . ' நாகைபுராணம் ' என்பதை ஒரு நாளைக்கு 200 செய்யுட்கள் வீதம் இயற்றினார் . அந்தக் காலத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம் .லண்டனிலிருந்து அவருக்கு கடிதம் எழுதிய ஒருவர் ' மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்தியா ' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் . அந்தக் கடிதம் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டது .
இப்படிப்பட்ட பேரறிஞர், தமிழை முற்றிலும் கற்பதற்காக ஒரு பிச்சைக்காரப் பரதேசியுடன் நாள் முழுக்க, வாரக் கணக்கில் சுற்றினார் என்பதை அறியும்போது, நமக்கு உடம்பு என்னவோ செய்யும் ! எல்லாவற்றையும் திறம்படக் கற்ற அவர், அணியிலக்கணத்தைச் சரியாக கற்க விரும்பினார் . முறையாக அவருக்குப் பாடம் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை . திருச்சியில் ஒரு பரதேசிக்கு அணியிலக்கணம் நன்றாகத் தெரியும் என்று கேள்விப்பட்ட அவர், நேராக அந்தப் பரதேசியிடம் சென்றுவிட்டார் .
பரதேசி பல நாட்கள் அவர் பக்கமே திரும்பவில்லை . வீடு வீடாகப் பிச்சை கேட்க அந்தப் பரதேசி போகும்போது , பிள்ளை அவர்களும் , கூடவே வீடு வீடாகப் போயிருக்கிறார் ! கடைசியாகப் பரதேசியின் பலவீனம் ஒன்று , பிள்ளை அவர்களுக்குப் புரிந்து விட்டது . ' கஞ்சா ' குடிப்பது அந்தப் பரதேசியின் வழக்கம் ! பரதேசியின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப ' கஞ்சா ' வைத் தன் கையால் எடுத்துத் தர ஆரம்பித்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ! பல நாட்கள் இப்படிக் கஞ்சா கொடுத்த பிறகு, ஒருநாள் பரதேசி மனம் இரங்கி பிள்ளை அவர்களிடம் பேசியிருக்கிறார் . அதைச் ' சிக் ' கெனப் பிடித்து, பாடத்தைக் ' கஞ்சா ' பரதேசியிடம் தெளிவாகக் கற்றார் மீனாட்சிசுந்தரம்பிள்ளை .
--- பொக்கிஷம் , ஆனந்த விகடன் . 14. 04. 2010 .