Friday, July 31, 2015

'குரு பூர்ணிமா' - ஆடிப் பவுர்ணமி!

  ( சிறப்பு )
( இன்று  குரு  பூர்ணிமா )
     ஆடி  மாதத்துப்  பவுர்ணமி  நாளைக்  'குரு  பூர்ணிமா'  என்று  சொல்வார்கள்.  குரு  என்று  இங்குக்  குறிப்பிடப்படுபவர்  வேதவியாசர்  ஆவார்.
     இவர்  நாராயணனை  முதல்வராகக்கொண்ட  குரு  பரம்பரையில்  வருபவர்.  நாராயணனிடமிருந்து  பிரம்மதேவர்  பிறந்தார்.  பிரம்மனிடமிருந்து  வசிஷ்டர்  வந்தார்.  வசிஷ்டர்  மகன்  சக்தி.  சக்தியின்  மகன்  பராசரர்.  பராசரருக்கும்  சத்தியவதிக்கும்  மகனாகப்  பிறந்தவர்  வியாசர்.
     வேதவியாசர்  அருளிய  பிரம்மசூத்திரத்துக்கு  ஸ்ரீசங்கரர்  உரை  எழுதியிருக்கிறார்.  குரு  பூர்ணிமா  வியாச  பூஜையை  முடித்தபின்  சாதுர்மாஸ்ய  விரத  சங்கல்பம்  நடக்கும்.  சங்கல்பம்  செய்துகொண்ட  இடத்தில்  அந்த  துறவியர்  நான்கு  பட்சங்கள்  தங்கியிருப்பர்.
--தினமலர்.  பக்திமலர்.  30-7-2015.
     பூமத்திய  ரேகைக்கு  வடக்கே  சூரியனின்  ஓட்டம்  இருக்கும்போது ( ஜனவரி  முதல்  ஜூன்  வரை )  உத்ராயணம்  என்கிறோம்.  சூரியனின்  ஓட்டம் தெற்கே  இருக்கும்போது ( ஜூலை  முதல்  டிசம்பர்  வரை )  தட்சிணாயணம்  என்கிறோம்.
     உத்திராயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( தை  மாதம் )  'தன்ய  பவுர்ணமி'  என  அழைக்கிறோம்.  தட்சிணாயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( ஆடி  மாதம் )  'குரு  பவுர்ணமி'  என்கிறோம்.  இந்த  பவுர்ணமி  ஜூலை  மாதத்தில்  ஏற்படும்  தட்சிணாயண  காலத்தில்  6  மாதங்கள்  'உள்வாங்கிக்கோள்ளும்  தன்மையடையதாகவும்,  உத்திராயண  காலத்தில்  6  மாதங்கள்  'நிறைவடையும் '  தன்மையுடையதாகவும்  உள்ளன.
--சத்குரு  ஜக்கி  வாசுதேவ்.
-- தினமலர். திருச்சி. 31- 7-2015.  

கிழமை -- நட்சத்திரம் -- நிவேதனம்

கிழமை, நட்சத்திரம் மற்றும் திதி அடிப்படையில் அம்பாளுக்கு  ( நவராத்திரி நாட்களில் ) நிவேத்திக்க வேண்டிய பொருட்கள் :
ஞாயிறு  --  சர்க்கரைப் பொங்கல்.
திங்கள்  --  பால் சாதம்.
செவ்வாய்  --  வெண் பொங்கல்.
புதன்  --  கதம்ப சாதம்.
வியாழன்  --  எலுமிச்சம் பழ சாதம்.
வெள்ளி  --  பால் பாயசம்.
சனி  --  புளியோதரை அல்லது தேங்காய் சாதம்.
-- தினமலர். பக்திமலர். அக்டோபர் 3,2013.  

Thursday, July 30, 2015

கவிதை

 (சிறப்பு )
புதையல்  புதைகிற  வேளை ...!
விதைகள்  வெளிவரும்  நாளை ...!!
 வல்லரசின்  விருட்சமே  விடைகொடுத்தோம் - உன்
 விருப்பங்கள்  நிறைவேற்ற  படையமைத்தோம்
 நல்லபடி  ஓய்வெடுங்கள்  நாயகரே - உங்கள்
 நிழலாக  வளர்வார்கள்  வாலிபரே !

 கலாம்கண்ட  கனவென்றும்  கலையாது - அவர்
 கொடைதந்த  இலட்சியங்கள்  குலையாது
 சலாம்சொல்லி  வழியனுப்பும்  வையகம் - அவர்
 சொன்னபடி  சிலிர்த்தெழுக  பாரதம் ...
-- ஸ்ரீ தைலா  சில்க்ஸ்,  திருச்சி -2
-- தினமலர் . திருச்சி.  வியாழன் .  ஜூலை,  30, 2015.  

இந்தியன் எனும் ஏமாளி

  இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய 'குளோபல்
என்.சி.ஏ.பி. ஆய்வு. இந்த நிறுவனம் கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உள்படுத்தியபொது, 'சுசூகி - மாருதி  ஆல்டோ 800,'
'டாட்டா நானோ', 'ஃபோர்டு ஃபிஃகோ',  'ஹுண்டாய் ஐ- டென்,'  'ஃபோக்ஸ்வேகன் போலோ' ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால் அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் இருப்பவை இந்த கார்கள்.  நம் நாட்டில் விற்பனையாகும் ஐந்துகார்களில் ஒன்று இவற்றில் ஏதேனும் ஒரு கார் என்கிற பின்னணியில் இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் உண்மைகள் அதிரவைக்கின்றன.
     இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக ஆய்வை நடத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய நுக்ர்வோரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி மதிப்பிடுகின்றன என்பதை உணர்த்தப் போதுமானது.  அதாவது, 'இந்த கார்களில் காற்றுப் பைகள் கிடையாது.  நிறுத்த முடியாத அளவுக்கு கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும்.  ஆனால், அவை பொருத்தப்படவில்லை.  அதேசமயம் இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன ' என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
     இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்த கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்,  "கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 'ஃபோக்ஸ்வேகன்' நிறுவனம் தன்னுடைய 'போலோ' ரக கார்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது.  கூடவே, 'இனி விற்கப்படும் கார்களில் காற்றுப் பைகளும் பிரேக்குகள் பழுதாகாமல் இருப்பதற்கான சாதனமும் சேர்த்தே விற்கப்படும்.  அவற்றுக்காகக் கூடுதலாக 2.7% கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறது.
     இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.  இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%.  இந்தியாவில் விற்கும் கார்களில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களின் சந்தை 80%. மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த் சந்தை மேலும் பிரமாண்டமாக விரிவடையும்.  எனில், எவ்வளவு பெரிய ஆபத்து இது?
     பெருனிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக்கோள் என்பதும் இந்திய சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல.  ஆனால்,இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்க்கிறது?
--- தலையங்கம்.  கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ்.  பிப்ரவரி 3 , 2014.

Wednesday, July 29, 2015

'கட் ஆப்' மதிப்பு இப்படித்தான் !

 இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர முக்கிய பாடங்களின் கூட்டுத் தொகையை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படுகிறது.
     இன்ஜினியரிங் படிப்பில் சேர கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படும்.  மருத்துவ படிப்புக்கு உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களின் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும்.
     உதாரணமாக கணக்கு பாடத்தில் 200, இயற்பியலில் 200, வேதியியலில் 200 மதிப்பெண் பெற்றிருந்தால் அவரின் கட் ஆப் 200 ஆக வரும்.  மதிப்பெண் வேறுபடும்போது கட் ஆப், மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு, இன்னொரு உதாரணம் பார்க்கலாம்.  கணக்கு பாடத்தில் 190 மதிப்பெண் பெற்றிருந்தால் 190 ஐ, 2 ஆல் வகுக்க வேண்டும்.  இதன் மதிப்பு 95 ஆக வரும்.
     இதேபோல், இயற்பியல் பாடத்தில் 180 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.  மதிப்பு 45 ஆக வரும்.  வேதியியலில் 160 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.  இதன் மதிப்பு 40 ஆக வரும்.  இப்பொழுது இந்த மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும்.  அதாவது 95, 45, 40 ஆகிய மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும்.  இதன் மொத்த மதிப்பு 180 ஆக வரும்.
     இந்த மதிப்பே கட் ஆப் மார்க்.  இந்த மதிப்பெண்ணை வைத்தே இன் ஜினியரிங் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  அதேபோல், மருத்துவ படிப்பை பொறுத்தவரையில் உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு கட் ஆப் நிர்ணயிக்கப்படுகிறது.  இதில், உயிரியல் பாட மதிப்பெண்ணை 2 ஆல் வகுப்பார்கள்.  வேதியியல், இயற்பியல் பாடத்தேர்வு மதிப்பெண்ணை 4 ஆல் வகுப்பார்கள்.  இதன் கூட்டு மதிப்பே கட் ஆப் மதிப்பெண்ணாகும்.
-- தினமலர் நாளிதழ்.  சனி,  மே 10,  2014. 

Tuesday, July 28, 2015

தமிழில் பாரசீகம்


      நம்  தமிழ்  மொழியில்  200க்கும்  அதிகமான  பாரசீக  மொழிச்  சொற்கள்  கலந்துள்ளதாக  மொழியியல்  அறிஞர்கள்  சொல்கின்றனர்.
      ஜாகீர்,  ஜமீன்,  ஜமீந்தார்,  ஜமக்காளம்,  குல்கந்து,  குமாஸ்தா,  பீங்கான்,  ரசீது,  புதினா,  பிஸ்தா,  பந்தோபஸ்து,  பஜார்,  லுங்கி,  குஸ்தி  போன்றவை  அதில்  சில.
-- ச.ஹேமலதா,  திருச்சி.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.                           

Monday, July 27, 2015

பொதுப் போக்குவரத்துக்குக் கைகொடுப்போம்


     (  சிறப்பு )
     இன்றைய  உலகமயமாக்கல்  கொள்கை  அமலாக்கத்  துவங்கிய  பிறகு,  வாகனத்  தொழிலை  முன்னேற்றுகிறோம்  என்ற  பெயரில்  செய்யப்பட்ட  நடவடிக்கைகள்  காரணமாக  உயர்வர்க்கத்தினர்  மட்டூமே  கார்  ஓட்டுவது  என்பதுபோய்,  நடுத்தர  மக்களும்  ஏராளமானோர்  கடனில்  கார்வாங்கி  ஓட்டும்  நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள்.  தேவை  என்பது  போய், அந்தஸ்து  என்ற  போலிக்  கவுரவதில்  சிக்கிக்கொள்ளும்  நிலையில்  கொண்டுபோய்  அது  நம்மைத்  தள்ளிவிட்டது.  அதனால், ஒரே  வீட்டில்  ஒவ்வொருவருக்கும்  ஒரு  கார்  என்ற  நிலைக்கு  வந்துகொண்டிருக்கிறோம்.  காலையில்  8  மணி  முதல்  10  மணி  வரையிலான  பீக்  அவரில்  ஏற்படும்  நெரிசலின்போது, 99%  கார்களில்  ஒரே  ஒருவர்  மட்டுமே  பயணிப்பதைக்  காண  முடியும்.  இதனால்  காற்று  மாசுபாடு  மட்டுமல்ல, நம்நாடு  இறக்குமதி  செய்ய  வேண்டிய  கச்சா  எண்ணெயின்  அளவு  அதிகரிக்கிறது.  அந்நியச்  செலாவணி  வீணாகிறது.  இந்நிலை  மாற  வேண்டுமென்றால், தேவைக்கு  மட்டுமே  காரை  எடுப்பது,  ஒருவர்  மட்டும்  பயணிப்பதைத்  தவிர்த்து  பொதுப்  போக்குவரத்தை  உபயோகிப்பது,  அருகிலிருக்கும்  இடங்களுக்கு  சைக்கிளில்  செல்வது  போன்ற  நடவடிக்கைகளை  முடிந்த  வரையில்  மேற்கொள்ள  வேண்டும்.
--- கி. ரமேஷ், மின்னஞ்சல்  வழியாக...
-- இப்படிக்கு  இவர்கள்.  கருத்துப்  பேழை.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜூலை 27, 2015.                      

இன்பாக்ஸ்.

 " லட்சக்கணக்கான  குழந்தைகள்  வறுமை  காரணமாகப்  போதிய  உணவு  இல்லாமல்  வாடுவது  நாட்டுக்கே  தலைகுனிவான  விஷயம் !."  என்று  பிரதமர்  மன்மோகன்  சிங்  ஒருபுறம்  கவலை  தெரிவிக்கும்  அதே  சமயம்,  பெங்களூரில்  மட்டும்  ஆண்டுக்கு  943  டன்  உணவுப்  பொருட்கள்  கல்யாண  மண்டபங்களில்  குப்பையில்  எறியப்படுவதாகச்  சொல்கிறது  ஒரு  சர்வே.  ஒரு  சாப்பாட்டின்  விலை  ரூ 40  என்று  நிர்ணயித்தால்கூட,  சுமார்  ரூ339  கோடி  இப்படி  வீணாகிறதாம்.  - இது  இந்தியாவில்தான்  சாத்தியம்.
-- ஆனந்த விகடன். 24 - 10 - 2012 

Sunday, July 26, 2015

கரைகிறது எவரெஸ்ட்

  ( சிறப்பு ).
2100ல்  மாயமாகும்  அபாயம்.
     உலகின்  மிக  உயரமான  சிகரம்,  இமயமலையில்  அமைந்துள்ள  எவரெஸ்ட்  தான்.  இதன்  உயரம்  கடல்  மட்டத்திலிருந்து  8  ஆயிரத்து  848  மீட்டராகும்.  வடக்கு  நோக்கி  நகர்ந்த  இந்திய  ஆஸ்திரேலிய  தட்டு  மற்றும்  யூரேசியன்  கண்டங்கள்  இடையே  நிகழ்ந்த  மோதலால்  இமயமலை  உருவானது.  இந்த  மோதல்  7  கோடி  ஆண்டுகள்  முன்  தொடங்கியது.  வேகமாக  நகர்ந்த  இந்திய  ஆஸ்திரேலிய  தட்டு  5  கோடி  ஆண்டுகளுக்கு  முன்னர்  தெதைஸ்  என்ற  பெருங்கடலையே  முழுவதும்  மூடிவிட்டது.  இதன்  இருப்பு  அங்குள்ள  படிவ  பாறைகள்  மற்றும்  எரிமலைகள்  மூலம்  அறியப்படுகின்றது.
     இந்த  படிவுகள்  அடர்த்தி  குறைவாக  இருந்ததால்  அவை  கடலின்  கீழே  போகாமல்  ஒன்று  சேர்ந்து  மலையை  உருவாக்கின.  மியான்மரில்  உள்ள  அரகான்  யோமா  உயர்நிலங்கள்  மற்றும்  வங்காள  விருகுடா  பகுதியில்  உள்ள  அந்தமான், நிக்கோபார்  தீவுகள்  இந்த  மோதலால்  உருவானதுதான்.  இப்போது  இந்திய  ஆஸ்திரேலிய  தட்டு  ஆண்டுக்கு  67  மி.மீ  நகர்கிறது.  அடுத்த  10  லட்சம்  ஆண்டுகளில்  இது  ஆசியா  கண்டத்தினுள்  ஆயிரத்து  500  கி.மீ  நகர்ந்திருக்கும்.  இதனால்தான்  அடிக்கடி  இந்த  பகுதிகளில்  நிலநடுக்கம்  ஏற்படுகிறது.
     2100ம்  ஆண்டில்  உலகின்  உயரமான சிகரமான  எவரெஸ்ட்  பருவநிலை  மாற்றத்தின்  தாக்கத்தால்  கடுமையான  பாதிப்பு  அடையும்.
     பனிப்பாறைகள்  உருகும்.  வெள்ள  அபாயத்தில்  மலை  வாழ்வினங்கள்  பாதிக்கப்படும்.  உருகும்  பனிப்பாறைகளினால்  நேப்பாலத்தில்  தூத்கோசி  ஆற்றின்  நீரோட்டப்  போக்கே  மாறும்.  கிட்டத்தட்ட  எவரெஸ்ட்  சிகரத்தின்  பனிப்பாறைகள்  70%  உருகிவிடும்.  இந்த  நூற்றாண்டுக்குள்  எவரெஸ்ட்  முழுமையாக  மறைந்துபோய்  விடும்  என்று  விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர்.  இதற்கிடையே  சமீபத்தில்  நேபாளத்தில்  ஏற்பட்ட  மிகப்  பெரிய  நிலநடுக்கத்தால்  எவரெஸ்ட்  சிகரமே  3  செ.மீ.  அளவுக்கு  தென்மேற்கில்  நகர்ந்தது  குறிப்பிடத்தக்கது.
---- தினமலர்.  திருச்சி, 26-7-2015.  

வாழ்க்கை கணக்கு

வாழக்கை  ஒரு  கணிதம்.  அதில்  சிக்கல்களும்,  தீர்வுகளும்  நிரம்பியுள்ளன.
நல்லவற்றைக்  ' கூட்டி' க்கொள்.
தீயவற்றைக்  ' கழித்து' க்கொள்.
அறிவை  ' பெருக்கி 'க்கொள்.
நேரத்தை  ' வகுத்து 'க்கொள்.
இன்பதுன்பங்களை  'சமமாய் '  கருது.
வளர்பிறை  போல்  முன்னேறு.
செலவைக்  குறைத்து  வரவைப்  பெருக்கு.
அன்பைப்  பெருக்கு,  ஆணவத்தைக்  குறை.
நல்லவர்களுக்கு  இணையாக  இரு.
பிறரை  நம்பி  வாழும்  வாழ்வு  நிலையற்றது.
-- மா.கல்பனா,  கூத்தப்பாடி.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012. 

Saturday, July 25, 2015

இப்படித்தான் சுற்றணும்.

  பிரதட்சணம்  செய்யும்  முறை....
விநாயகருக்கு.........  --  ஒன்று
சூரியனுக்கு ..........   --  இரண்டு
சிவன்,  அம்பாள் ..... --  மூன்று
திருமால்,  திருமகள்..  --  நான்கு
அரசமரம் ............... ..--  ஏழு
நவக்கிரகம்................--  ஒன்பது
ஜீவ  சமாதிக்கு...........-  நான்கு.
-- ப.சங்கவி,  குளித்தலை.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.  

Friday, July 24, 2015

நிதி அமைச்சர் !

  " ' ஒரு  ரூபாய்  அரிசி  விலை  உயர்ந்தால்  மக்கள்  கூச்சல்  போடுகிறார்களே '  என்ற  ப. சிதம்பரத்துக்கு  நாட்டின்  நிதி  அமைச்சர்  பதவி  பரிசளிக்கப்பட்டுள்ளது  சரியா?"
       " உங்களை  ஆள்கிற  முதலமைச்சராகவோ  அல்லது  பிரதம  மந்திரியாகவோ  வராமல்போனாரே !
         ஒரு  சிறிய  கதை.  ஒருவர்  ஆசையோடு  வளர்த்த  மான்  காணாமல்  போனதால்  ரொம்பக்  கலங்கிப்  போனார்.  அவர்  கலக்கத்தைக்  கண்டு  மனம்  இரங்கி  இறைவன்  அவர்  முன்  தோன்றி, வேண்டிய  வரத்தைக்  கேட்கச்  சொன்னார்.
          அவர்,  ' என்  மான்  காணாமல்போக  யார்  காரணமோ,  அவர்  என்  கண்  முன்  வர  வேண்டும்.  என்  கையால்  அவருக்கு  நானே  தண்டனை  தர  வேண்டும்  என்றதும்  இறைவன்  அதிர்ந்துபோனார்.  பின்பு  தயங்கி,  ' அது  வேண்டாம்  பக்தனே...'  என்று  இழுத்தார்.  பக்தன்  கோபமுற்று,  ' இறைவா... ஒரு  பக்தனின்  வேண்டுகோளை  நிறைவேற்றாமல்  போவதற்குப்  பெயர்  வரமா? "  என்று  கேட்டார்.
         ' பக்தா...நன்றாக  யோசித்துத்தான்  கேட்கிறாயா...? '  என்ற  இறைவனைப்  பார்த்து,  ' ஆமாம்... நன்றாக  யோசித்த  பின்பே  கேட்கிறேன்.  முடியுமா..முடியாதா? '  என  பிடிவாதமாக  கேட்க,  இறைவன்  சலித்துப்போய்,  ' சரி...வேறு  வழி  இல்லை.  உன்  மானைக்  கொண்டுபோன  உயிரினம்  உன்  முன்  நிற்கக்  கடவது '  என்று  கூறி  மறைந்தார்.
          பக்தன்  முன்  தோன்றியது... ஒரு  சிங்கம்.
          பக்தன்  அலறினான்,  அலறி  என்ன  செய்ய?"
-- உ.அனந்த  கோபால்,  கரூர்.  நானே  கேள்வி...நானே  பதில்!
-- ஆனந்த விகடன்.  22 - 8 - 2012. 

Thursday, July 23, 2015

கோடிக்கு மேல்...

 கோடிக்கு  மேற்பட்ட  எண்ணிக்கையைக்  குறிப்பிடும்,  உச்சரிக்கும்  வார்த்தைகளைப்  பழந்தமிழில்  இருந்து  பரிந்துரைக்கிறோம்.
1,00,00,000...................................-- கோடி
10,00,00,000.................................--  அற்புதம்
1,00,00,00,000..............................--  நிகற்புதம்
10,00,00,00,000............................--  கும்பம்
1,00,00,00,00,000.........................--  கனம்
10,00,00,00,00,000.......................--  கற்பம்
1,00,00,00,00,00,000.................... -- நிகற்பம்
10,00,00,00,00,00,000......... .........-- பதுமம்
1,00,00,00,00,00,00,000.................-- சங்கம்
10,00,00,00,00,00,00,000...............--  வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000............--  அன்னியம்
10,00,00,00,00,00,00,00,000...........-- மத்தியம்
1,00,00,00,00,00,00,00,00,000.........-- பிராத்தம்
10,00,00,00,00,00,00,00,00,000.......-- பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000....-- பிரம்மகற்பம்.
--- ஆனந்த விகடன்,  29 - 8 - 2012.  

Wednesday, July 22, 2015

அதிசய கிரகம்

4  சூரியன்  கொண்ட  அதிசய  கிரகம் !
     விண்வெளியில்,  ஒரு  சூரியனை  பல  கிரகங்கள்  சுற்றிவரும்  பல  சூரிய  மண்டலங்கள்  உள்ளன.  2  சூரியனைச்  சுற்றிவரும்  6  அதிசய  கிரகங்கள்  ஏற்கனவே  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  4  சூரியன்களைச்  சுற்றிவரும்  அதிசய  கிரகம்  இப்போதுதான்  முதன்முறையாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
     பொதுமக்களூக்கான  பிளானட்  ஹன்டர்ஸ்  இணையதளத்தைப்  பயன்படுத்தி  கண்டுபிடிக்கப்பட்ட  முதல்  கிரகம்  என்பதால்,  இதற்கு  பிஎச் - 1  என்று  பெயரிடப்பட்டுள்ளது ( பிளானட்  ஹன்டர்ஸ்  என்ற  ஆங்கில  வார்த்தைகளின்  முதல்     எழுத்துக்கள்  ' பி ,' ' எச் '. முதல்  கண்டுபிடிப்பு  என்பதைக்  குறிக்க ' 1' ).  பிஎச் - 1  கிரகம்  நெப்டியூன்  கிரகத்தைவிட  கொஞ்சம்  பெரியதாக  உள்ளது.  இதன்  விட்டம்,  பூமியை  விட  ஆறு  மடங்கு  அதிகம்.  இந்த  கிரகம்,  2  சூரியன்களை  சுற்றி  வருகிறது.  இந்த  2  சூரியன்களின்  வெளிப்பகுதியில்  மேலும்  2  சூரியன்கள்  சுற்றி  வருகின்றன.
     பல  சூரிய  மண்டலங்கள்  நெருக்கமாக  இருக்கும்  விண்வெளி  பகுதியில்  இந்த  2  அடுக்கு  சூரிய  மண்டலம்  எப்படி  உருவானது  என்பது  ஆச்சரியமாக  இருக்கிறது.  இந்த  அதிசய  அமைப்பால்,  பிஎச் - 1 கிரகத்துக்கு  ஒரே  வேளையில்  4  சூரியன்களின்  ஒளி  கிடைத்து  வருகிறது.  பிஎச் - 1  கிரகம்  பற்றிய  ஆய்வுகள்,  விண்வெளி  ஆய்வியலில்  புதிய  திருப்புமுனைகளை  ஏற்படுத்தும்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
-- தினமலர்.  17 - 10 - 2012.

Tuesday, July 21, 2015

மெட்ரோ ரயில்


     (  சிறப்பு ).
      இப்போதாவது  வந்ததே  என்றுதான்  நாம்  திருப்திப்பட்டுக்கொள்ள  வேண்டும்.  ஜூன்  29-ம்  தேதியன்று  தொடங்கப்பட்ட  சென்னை  ஆலந்தூருக்கும்  கோயம்பேட்டுக்கும்  இடையேயான  மெட்ரோ  ரயில்  திட்டம்,  சரியாக  115  ஆண்டுகள்  தாமதமாகத்தான்  நமக்கு  வந்துள்ளது.  ஆம்,  பாரீஸ்  நகருக்கு  மெட்ரோ  ரயில்  வந்தது  1900-ம்  ஆண்டு.  உலகிலேயே  அதிக  எண்ணிக்கையிலான  மக்கள்  பயன்படுத்தும்  ஒருசில  மெட்ரோக்களில்  பாரீஸும்  ஒன்று.  214  கிலோ  மீட்டர்களில்  303  ஸ்டேஷன்களை  இணைக்கிறது  பாரீஸ்  மெட்ரோ.  பூமிக்கு  கீழே  ஐந்து  அடுக்குகளில்  ரயிகள்  போய்கொண்டும்  வந்துகொண்டும்  இருக்கின்றன.  ஐந்தாவது  அடுக்கில்,    ஓட்டுநர்  இல்லாமல்  தானே  இயங்கும்  ரயில்.  மொத்தம்  700  ரயில்கள்.
     சென்னையின்  மக்கள்  தொகையைவிட  பாரீஸின்  மக்கள்  தொகை  பாதிதான்.  சென்னை  44  லட்சம்.  பாரிஸ்  22  லட்சம்.  ஆனால்,  ஒரு   நாளில்  பாரிஸ்  மெட்ரோவைப்  பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை  42  லட்சம்!  புற நகர்களில்  வசிக்கும்  மக்களும்  பெருமளவில்  மெட்ரோவைப்  பயன்படுத்துகிறார்கள்.  அதனால்தான்  இந்தக்  கணக்கு.  இது  பற்றி  ஒரு  நகைச்சுவையும்  உண்டு.  பாரிஸ்  நகரின்  மக்கள்  தொகையைவிட  இரண்டு  மடங்கு  மக்கள்  பூமிக்குள்  இருக்கிறார்கள்!  காரணம், அங்கே  மெட்ரோ  ரயில்கள்  அநேகமாக  பூமிக்குள்தான்  ஓடுகின்றன.
-- சாரு  நிவேதிதா.  எழுத்தாளர்.  (  கருத்துப்பேழை ).
--   'தி இந்து'  நாளிதழ்.  வியாழன்,  ஜூலை , 2,  2015.                                   

ஆன்மிக கேள்வி - பதில்!

*  விநாயகர்  அகவலை  இயற்றியவர்  யார்?  --  ஔவையார்.
*  திருவாரூர்  கமலாலயக்  குளக்கரையில்  உள்ள  விநாயகர்  பெயர்  என்ன?  --  மாற்று  உரைத்த   விநாயகர்.
*  சந்தானக்  குரவர்கள்  யாவர்?  --  மெய்கண்டார்,  மறைஞான  சம்பந்தர்,  அருனந்தி  சிவாச்சாரியார்,  உமாபதி  சிவம்.
*  சைவ  சமயக்  குரவர்கள்  யாவர்?  --  திருநாவுக்கரசர்,  சுந்தரர்,  திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.
*  பெருந்தமிழன்  என்று  தன்னைக்  கூறிக்கொண்ட  ஆழ்வார்  யார்?  --  பூதத்தாழ்வார்.
*  திருவிண்ணகரம்  என்று  அழைக்கப்படும்  தலம்  எது?  --  உப்பிலியப்பங்கோவில்.
*  பைந்தமிழின்  பின்சென்ற  பச்சைப்  பசுங்கொண்டல்  என்று  திருமாலைப்  புகழும்  நூல்  எது?  --  மீனாட்சியம்மை  பிள்ளைத்தமிழ்.
*  திருவாவினங்குடி  தலத்தின்  தற்போதைய பெயர்  எது?  --  பழனி.
-- தினமணி  வெள்ளிமணி,..11 - 5 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

Monday, July 20, 2015

இன்பாக்ஸ்.

  பீகர்  மாநிலம்  கயா  மாவட்டத்தில்  உள்ள  கெலார்  கிராமத்தைச்  சேர்ந்த  தசரத் மான்ஜி,  தன்  ஊர்  மக்கள்  பக்கத்து  ஊர்  மருத்துவமனைக்குச்  செல்ல  தனி  நபராக  ஒரு  மலையைக்  குடைந்து  பாதை  அமைத்திருக்கிறார்.  2007-ல்  இறந்த  இவர்  பெயரில்  இந்த  ஆண்டு  சிறப்பு  விருதினை  சமூக  சேவகர்களுக்காக  அறிவித்து  இருக்கிறது  மத்திய  அரசு.  ஆனால்,  அவர்  உயிரோடு  இருந்தபோது,  அவர்  பெயரை  பத்ம  பூஷண்  விருதுக்குப்  பரிந்துரைத்த  போது  நிராகரித்ததும்  இதே  அரசுதான்.  அவர்  பாதையில்  பயணிப்போம்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 .  

Sunday, July 19, 2015

எரிகல் பூமியை நெருங்குகிறது

ரூ.30  லட்சம்  கோடி  பிளாட்டின  விண்கல்
     யு.டபிள்யூ- 158  என்று  பெயரிடப்பட்டுள்ள  ராட்சத  எரிகல்  நாளை  அதிகாலை  பூமிக்கு  மிக  நெருக்கமாக  சுமார்  15  லட்சம்  மைல்  தொலைவில்  கடந்துச்  செல்கிறது.
     பூமியை  நெருங்கி  வரும்  யு.டபிள்யூ- 158  எரிகல்  சுமார்  பத்து  கால்பந்து  மைதானங்களுக்கு  சமமானது  ஆகும்.  இதன்  மொத்த  எடை  9  லட்சம்  டன்  ஆகும்.  இந்த  எரிகல்லில்  பிளாட்டினம்  உலோகம்  நிறைந்து  காணப்படுகிறது.  அதன்  சர்வதேச  சந்தை  மதிப்பு  ரூ.30  லடசம்  கோடியாகும்.
     மேற்படி  எரிகல்  போன்று  விண்வெளியில்  பல்வேறு  உலோக  எரிகற்கள்  சுற்றி  வருகின்றன.  என்றாவது  ஒருநாள்  இந்த  எரிகற்களில்   இறங்கு  உலோகங்களை  வெட்டி  எடுக்க  முடியும்  என்று  விஞ்ஞானிகள்  நம்புகிறார்கள்.  அந்த  நாள்  வெகுதொலைவில்  இல்லை  என்றும்  தெரிவித்தனர்.
     விண்கல்  பூமியை  கடந்து  செல்வதை  இந்திய  நேரப்படி  நாளை  ( திங்கட்கிழமை )  அதிகாலை  4  மணி  முதல்  பல்வேறு  இணையதளங்களில்  நேரடியாக  இந்தியாவைச்  சேர்ந்தவர்கள்  காணமுடியும்.  இங்கிலாந்து  நேரப்படி  இன்று  இரவு  11  மணிக்கு  பூமியை  கடந்து  செல்கிறது.  இந்த  விண்கலம்  பூமியை  கடந்து  செல்வதை  வடமேற்கு  ஆப்பிரிக்காவைச்  கேனரி  தீவுகளில்  அமைக்கப்பட்டுள்ள  வானிலை  ஆய்வு  மையம்  இன்டர்நெட்டில்  நேரடியாக  ஒளிபரப்புகிறது.  
-- கடைசிப் பக்கம் .
--  'தி இந்து'  நாளிதழ். ஞாயிறு,  ஜூலை  19, 2015.
-- தினமலர்  திருச்சி  19-7-2015.  

கிளியோபாட்ரா.

   " படித்ததில்  அதிர்ந்தது?"
     " கிளியோபாட்ரா  இறந்தபோத,  பண்டைய  எகிப்தில்  சம்பிரதாயப்படி  அவர்  உடல்  மூன்று  நாட்கள்  புதைக்கப்படவில்லை.  அந்த  மூன்று  நாட்களும்  அவருடைய  சடலம்  பலரால்  கற்பழிக்கப்பட்டதாம்.  இந்தச்  செய்தியப்  படித்ததும்  எனக்கு  ஒரே  ஆச்சரியம்.  எந்த  வகை  மனிதன்  ஒரு  பினத்தைக்  கற்பழிப்பான்  என்று  தோன்றியது.  பிறகுதான்  ஒரு  விஷயம்  எனக்கு  உறைத்தது.  அந்த  உண்மை  அப்படி  ஒன்றும்  அதிசயமில்லையே!  ' எல்லா  ஆண்களும்  பெண்களைப்  பிணமாக்கித்தான்  வைத்துள்ளனர்... குறைந்த  பட்சம்  உடலுறவின்போது !'  சொன்னவர்:  ஓஷோ  ரஜினீஷ்"
--- நானே  கேள்வி? .. நானே  பதில்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 .

Saturday, July 18, 2015

பேல் பூரி.

கண்டது:
*  (  கோயம்புத்தூர்  காந்திபுரத்தில்  ஆம்னி  வேனின்  பின்புறத்தில் )
     போதிக்கும்போது  புரியாது
     பாதிக்கும்போது  புரியும்.
*  (  திருப்பூரில்  ஆட்டோவில்  கண்ட  வாசகம் )
     வழி  தவறுவதைவிட...
     வழி  கேட்பது  மேல்.
*  ( திண்டுக்கல்  கடிகாரக்கடை  ஒன்றில் )
     நகர்வது  முள்  அல்ல
     உங்கள்  வாழ்க்கை.
*  ( நெல்லை  பெருமாள்கோயில்  தெரு  தேநீர்க்கடை  ஒன்றில் )
     அன்பை  வாங்கினால்
     பிற்காலத்தில்  நன்மை  சேரும்.
     கடனை  வாங்கினால்
     பிற்காலத்தில்  வம்பு  சேரும்.
(  கிருஷ்ணகிரி  நேதாஜி  ரோட்டில்  உள்ள  ஒரு  முடிதிருத்தத்தில் )
     நண்பனுக்குக்  கடன்
     கொடுத்தால்
     கடனும்  போய்விடும்
     நண்பனும்  போய்விடுவான்.
--- தினமணி  கதிர்,  15 / 22  -  07 - 2012.
-  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

Friday, July 17, 2015

மெதுவாக சுழலும் பூமி

  (  சிறப்பு  ).
நாளை  பிறக்க  ஒரு  நொடி  தாமதமாகும்.
இன்று  ஒரு  லீப்  நொடி  சேர்க்கப்படுகிறது.
     பூமியின்  தற்போதைய  சுழற்சி  சீராக  மெதுவாகக்  குறைந்துகொண்டே  வருகிறது.  பொதுவாக  ஒரு  நாள்  என்பது  86,400  நொடிகள்  கொண்டது.  கடைசியாக  1820-ம்  ஆண்டில்தான்  மிகச்  சரியாக  24  மணி  நேரம்  என்ற  கால  அளவு  இருந்தது.  புவி  வெப்பமடைதல், சூரியன், நிலா, பூமிக்கு  இடையிலான  ஈர்ப்பு  விசைப்  போட்டிகள், கடல்  அலைகளின்  அசைவுகள்  உள்ளிட்டவை  காரணமாக  பூமியின்  சுழற்சி  வேகம்  குறைந்து  கொண்டே  வருகிறது.
     இதனால், ஒரு  நாளுக்கு  86,400,0002  நொடிகளாகிறது.  அதாவது, 2  மில்லி  செகண்டுக்கள்  அல்லது  ஒரு  நொடியில்  2  ஆயிரத்தில்  ஒரு  பங்கு  நேரம்  கூடுதலாக  ஆகிறது.  இந்த  தாமதம்  ஆண்டு  முழுக்க  தொடர்ந்து  நடக்கிறது.
     எனவே  இந்த  நேரத்தை  ஈடுகட்ட , இந்தக்  கூடுதல்  நேரம்  ஒரு  நொடி  சேர்ந்தவுடன்  அது, வழக்கமாக  நாம்  பின்பற்றும்  நேரத்தில்  ( யு.டி.சி )  ஜூன்  30-ம்  தேதி  அல்லது  டிசம்பர்  31-ம்  தேதி  அன்று  ஒரு  நொடி  நிறுத்தி  வைக்கப்பட்டு  சரி  செய்யப்படுகிறது.
     வழக்கமாக, நள்ளிரவு  23:59:59  மணிக்குப்  பிறகு  அடுத்த  நாள்  00:00:00:  என்று  தொடங்கும்.  இன்று ( ஜூன் 30-ம்  தேதி ) நள்ளிரவு  லீப்  நொடி  சேர்க்கப்படும்.
     இதனால், ஜூன்  30-ம்  தேதி  நள்ளிரவு  அடுத்த  நாள்  தொடங்குவதற்கு  முன்பு  23:59:60  என  ஒரு  நொடி  சேர்க்கப்பட்டு
( துல்லியமாகச்  சொல்வதானால்  ஒரு  நொடி  நிறுத்தி  வைக்கப்பட்டு)  பின்னர்  ஜூலை  1-ம்  தேதி 00:00:00  என  மாறும்  என்று  நாசா  தெரிவித்துள்ளது.
     லீப்  நொடி  முறை  முதன்முதலில்  1972-ம்  ஆண்டு  பின்பற்றப்பட்டது.  அதன்  பிறகு, சுமார்  26  முறை  இம்மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.  கடந்த  2000-ம்  ஆண்டுக்குப்  பிறகு  ஜூன்  மாதத்தில்  லீப்  நொடி  சேர்க்கப்படுகிறது.  இது  நான்காவது  முறையாகும்.
-- பி.டி.ஐ.   ( சர்வதேசம் ).
--  'தி இந்து'  நாளிதழ்.  செவ்வாய்,  ஜூன்  30, 2015. 

விழாக்கள்.

*  ஒரு  வருடம்  நிறைந்தால்  காகித  விழா.
*  ஐந்து  வருடம்  நிறைந்தால்  மர  விழா.
*  பத்து   வருடம்  நிறைந்தால்  தகரம்  அல்லது  அலுமினிய  விழா.
*  பதினைந்து   வருடம்  நிறைந்தால் படிக  விழா.
*  இருபது வருடம்  நிறைந்தால்  பீங்கான்  விழா.
*  இருபத்தைந்து வருடம்  நிறைந்தால் வெள்ளி  விழா.
*  முப்பது வருடம்  நிறைந்தால் முத்து  விழா.
*  நாற்பது வருடம்  நிறைந்தால் மாணிக்க  விழா.
*  ஐம்பது  வருடம்  நிறைந்தால் பொன்  விழா.
*  அறுபது  வருடம்  நிறைந்தால்  வைர  விழா.
*  எழுபத்தைந்து வருடம்  நிறைந்தால்  பவள  விழா.
*  நூறு   வருடம்  நிறைந்தால்  நூற்றாண்டு  விழா.
-- - தினமணி  கொண்டாட்டம்.  ஜூலை  22,  2012                                                          
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.

Thursday, July 16, 2015

ஆன்மிக வினா - விடை.

*  மூவர்  தேவாரம்  பெற்ற  தலங்கள்  எத்தனை?  --  நாற்பத்து  நான்கு.
*  தன்னைத்  ' தமிழ்  விரகர் '  என்று  கூறிக்கொண்டவர்  யார்?  --  திருஞானசம்பந்தர்.
*  அறுபத்து  மூவரில்  பெண்  அடியார்கள்  யாவர்?  --  காரைக்கால்  அம்மையார்,  மங்கையர்க்கரசியார்,  இசைஞானியார்.
*  கால  பைரவர்  சந்நிதி  எங்குள்ளது?  --  காசி  மற்றும்  விருத்தாசலம்.
*  ஈசனுக்கு  எழுப்பது  மாடக்கோயில்கள்  எழுப்பிய  மன்னன்  யார்?  --  கோச்செங்கட்சோழ நாயனார்.
*  நந்தி,  கொடிமரம்,  தட்சிணாமூர்த்தி  சந்நிதி  ஆகியவை  இல்லாத  சிவத்தலம்  எது?  --  ஆவுடையார்கோயில்.
*  பார்வதி - பரமசிவன்  திருமணம்  நடந்த  நாள்  எது?  --  பங்குனி  உத்திரம்.
*  அம்பிகையின்  மந்திரத்தை  என்ன  பெயரிட்டு  அழைக்கின்றனர்?  --  ஸ்ரீவித்யை.
--- தினமணி  வெள்ளிமணி.  ஜூலை  27,  2012  
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

Wednesday, July 15, 2015

4 மணி நேர பயணம்

  ( சிறப்பு ).    
மும்பையில்  இருந்து  லண்டனுக்கு  4  மணி  நேரத்தில்  பறக்காலாம்.
     அமெரிக்காவின்  பாஸ்டன்  நகரைச்  சேர்ந்த  விமான  தயாரிப்பு  நிறுவனம்  ஸ்பைக்  ஏரோஸ்பேஸ்.  இந்த  நிறுவனம்
எஸ்-512  என்ற  பெயரில்  புதிய  சூப்பர்சானிக்  ஜெட்  விமானத்தை  தயாரித்துள்ளது.
     131  அடி  நீளம்,  60  அடி  இறக்கைகளை  கொண்ட  இந்த  விமானம்  மணிக்கு  அதிகபட்சமாக  2205  கி.மீட்டர்  வேகத்தில்  பறந்து  செல்லும்  திறன்  படைத்தது.  தற்போதைய  பயணிகள்  விமானம்  அதிகபட்சமாக  மணிக்கு  1126  கி.மீட்டர்  வேகத்தில்  மட்டுமே  பறக்கிறது.
     இந்தையாவின்  மும்பையில்  இருந்து  7197  கி,மீட்டர்  தொலைவில்  பிரிட்டிஷ்  தலைநகர்   லண்டனுக்கு  சராசரியாக  9  மணி  நேரத்தில்  பயணிகள்  விமானம்  சென்றடைகிறது.  இனிமேல்  புதிய  சூப்பர்சானிக்  ஜெட்  விமானத்தில்  4  மணி  நேரத்தில்  பறந்து  செல்லாலாம்.  இதேபோல  லண்டனில்  இருந்து  அமெரிக்காவின்  நியூயார்க்  நகருக்கு  விமானத்தில்  செல்ல  தோராயமாக  7  மணி  நேரமாகிறது.  புதிய  சூப்பர்சானிக்  ஜெட்  விமானத்தில்  3  மணி  நேரத்தில்  செல்ல  முடியும்.
     அதினவீன  அம்சங்களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ள  இந்த  விமானத்தில்  18  பேர்  மட்டுமே  பயணம்  செய்ய  முடியும்.  வரும்  2018  முதல்  எஸ்-512  விமானங்கள்  பயன்பாட்டுக்கு  வரும்  என்று  அந்த  நிறுவனம்  அறிவித்துள்ளது.
-- பிடிஐ.  ( கடைசிப் பக்கம். )
-- 'தி இந்து'  நாளிதழ். திங்கள்,  ஜூலை  13, 2015.

விதண்டாவாதம்.

  ' வித்து '  என்றால்  விதை,  ' அண்டம் '  என்றால்  மரம்.  முதலில்  விதையிலிருந்து  மரம்  முளைத்ததா  அல்லது  மரத்திலிருந்து  விதையா  என்று  வாதம்  செய்வதுதான்  விதண்டாவாதம்.  இப்படி  விதண்டாவாதம்  புரிபவர்களை  இலேசில்  கன்வின்ஸ்  செய்ய  முடியாது.
-- அனுஷா  நடராஜன். மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

Tuesday, July 14, 2015

வைரக்கோள்.

விருச்சிக  ராசி  மண்டலத்தில்  வைரக்கோள்.
      அமெரிக்காவைச்  சேர்ந்த  இந்திய  வம்சாவளி  விஞ்ஞானி  நிக்கு  மதுசூதன்  தலைமையிலான  பிரான்கோ  ஆராய்ச்சிக்குழுவினர்,  விருச்சிக  ராசி
 நட்சத்திர மண்டலத்தில் பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரிய  வைரக்  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளனர்.  அதற்கு ' 55 கேன்சரி இ'  என்று  பெயரிட்டுள்ளனர்.
     இது  குறித்து  ஆராய்ச்சிக்குழுவின்  தலைவர்  நிக்கு  மதுசூதன்  கூறுலையில் ' கடினமான  பாறைகள்  மற்றும்  கிராபைட்டால்  ஆன,  பூமியின்  குறுக்களவை  போல்  2  மடங்கு  பெரியதும்,  செவ்வாய்  கிரகத்தை  போன்று  8  மடங்கு  பெரிய  கோள்  ஒன்றை  கண்டுபிடித்துள்ளோம்.  விருச்சிக  ராசி  மண்டலத்தில்  உள்ள  சூரியனைப்  போன்ற  ஒரு  நட்சத்திரத்தை  ' 55  கேன்சரி  இ'  என்ற  வைரக்கோள்  சுற்றிவருகின்றது.  அந்த  கோள்  பூமியைவிட  வேகமாக  18  மணி  நேரத்தில்  அந்த  நட்சத்திரத்தை  சுற்றிவருகிறது.
     இந்த  கிரகத்தின்  மேற்பரப்பில்  3  ஆயிரத்து  900  டிகிரி  பாரன்ஹீட்  வெப்பம்  நிலவுகிறது.  பூமியை  காட்டிலும்  வித்தியாசமான  வேதியியல்  கலவையால்  ஆன  இந்த  கோளை  முதல்முறையாக  கண்டுபிடித்துள்ளோம். சிறிது  நேரமே  அந்த  கோளை  பார்க்கமுடிந்தது. இருப்பினும்  இந்த  அளவுக்கு  பெரிய  வைரக்கோள்  கண்டுபிடித்துள்ளது  இதுவே  முதல்முறை  என்றார்.
--  தினமலர்.  அக்டோபர்  13, 2012. 

Monday, July 13, 2015

நமஸ்காரம்.

  நமஸ்காரங்களில்  ஐந்து  வகை  உள்ளன.  அவை  ஏகாங்கம்,  திலியாங்கம்,  திரியாங்கம்,  பஞ்சாங்கம்,  அஷ்டாங்கம்  என்பன.  உடலுருப்புக்கு  அங்கம்  என்று  பொருள்.
     ஏகாங்க  நமஸ்காரம்  என்பது  தலையாகிய  உறுப்பை  மட்டும்  தாழ்த்தி  வணங்குதலாகும்.
     திவியாங்க  நமஸ்காரம்  என்பது  வலக்கையை  மட்டும்  தலையில்  குவித்து  வணங்குவதாகும்.
     திரியாங்க  நமஸ்காரம்  என்பது  தலையின்  மீது  இரண்டு  கைகளையும்  குவித்து  வணங்குதலாகும்.
     பஞ்சாங்க  நமஸ்காரம்  என்பது  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  முழங்கால்கள்  ஆகிய  ஐந்து  உறுப்புகளும்  தரையில்  பொருந்தும்படி
வணங்குதலாகும். இந்த  வகை  நமஸ்காரத்தை  பெண்கள்தான்  செய்ய  வேண்டும்.  ஸ்திரீகளின்  திருமாங்கல்யம்  தரையில்  படக்கூடாது  என்பதற்காகத்தான்  மண்டியிட்டு  இந்த  நமஸ்காரத்தைச்  செய்யவேண்டும்  என்று  ஆன்றோர்கள்  சொல்லியுள்ளனர்.  மேலும்,  இதை  பெண்கள்  ஒருதரம்  செய்தல்  குற்றமாகும்.  3,  5,  7  அல்லது  12  முறை  செய்யவேண்டும்.
     அஷ்டாங்கம்  என்பது  தரையோடு  தரையாக  படுத்துனம்முடைய  தலை,  இரண்டு  கைகள்,  இரண்டு  செவிகள்,  மோவாய்,  இரண்டு  புஜங்கள்  ஆகிய  எட்டு  அங்கங்களும்  பூமியில்  படும்படி  செய்யவேண்டும்.  இந்தவகை  நமஸ்காரத்தை  ஆண்கள்தான்  செய்ய  வேண்டும்.
--- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

Sunday, July 12, 2015

இவை எல்லாமே ஆஹா தான்.

*  இறைவனின்  திருநாமத்தை  வாய்விட்டோ,  உதட்டளவிலோ  உச்சரிக்காமல்  மனத்திலிருந்து  திரும்பத்திருமப  சொல்லும்போது  அட்ரீனலின்  சுரப்பு
   குறைவதோடு  மூளையானது,  நைட்ரிக்  ஆக்ஸைடு  என்ற  வேதிப்பொருளை  வெளிப்படுத்தி  இரத்த  அழுத்தத்தைச்  சீராக்குகிறது  என்று  ட்யூக்
   பல்கலைக்கழக  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர். இறைவனின்  நாமத்தை  உளமாற  ஜபித்து  உயர்  இரத்த  அழுத்தத்திலிருந்து  விடுபடலாமே!
*  கடலைப்  பருப்பு  ஒரு  கிலோ,அரிசி  கால்  கிலோ,  வரமிளகாய்  6,  ஓமம்  1  ஸ்பூன்.  இவற்றை  மிஷினில்  அரைத்து  வைத்துக்  கொண்டால்,  பஜ்ஜி,
    போண்டா,  ஓமப்பொடி  எதுவானாலும்  உடனடியாக  செய்யலாம்.
*  அல்வா  போன்ற  ஸ்வீட்  செய்யும்போது  வெண்ணெயை  அரைப்  பதமாக  உருக்கி  வைத்துக்கொண்டு,  கொஞ்சம்  கொஞ்சமாகச்  சேர்த்துக்
   கிளறினால்  நெய்  பதமாகக்  காய்ந்து  ஸ்வீட்  கமகமக்கும்.
*  தோல்  சீவிய  பிரண்டைத்  துண்டுகளை  வேக  வைத்து  காய  வைக்கவும்.  அதைப்  பொடி  செய்து  அதனுடன்  ஒரு  ஸ்பூன்  இந்துப்பு,  எலுமிச்சைச்சாறு
   கலந்து  உலர்த்திக்  கொள்ளவும்.  இந்தப்  பொடியைத்  தினமும்  சாப்பிடுவதற்கு  முன்  ஒரு  ஸ்பூன்  நீரில்  கலந்து  உட்கொண்டால்  உடல்  பருமன்
   குறையும்.
*  வீட்டில்  எலி  தொந்தரவா?  Rat  Gum  Pad  கடைகளில்  கிடைக்கிறது.  அதை  வாங்கி  எலி  நடமாடும்  இடங்களில்  வைத்தால்,  அதில்  எலிகள்
   சுலபமாக  ஒட்டிக்கொள்ளும்.
*  பட்டு  வாங்கும்போது  ஒரிஜினல்  பட்டுத்துணிதானா  என்பதைக்  கண்டுபிடிக்க,  கைவிரலை  துணிமீது  வைத்து  அழுத்தினால்  கைரேகை  பதிந்ததும்
   சட்டென  மறைந்துவிடும்.  வேறு  நூல்கள்  கலந்திருந்தால்  கைரேகை  அப்படியே  இருக்கும்.
*  விழாக்களின்  அழைப்பிதழ்கள்  தபாலில்  ஐம்பதுக்கும்  மேல்  அனுப்பும்போது,  அதற்குரிய  தொகையை  தபால்  அலுவலகத்தில்  செலுத்தினால்
   அவர்களே  எந்திரம்  மூலம்  அஞ்சல்  முத்திரையைப்  பதித்து  விடுவார்கள்.  ஸ்டாம்ப்  ஒட்டும்  வேலை  மிச்சம்.
-- மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

Saturday, July 11, 2015

யோசனை.

*  தேங்காய்  மூடியை  ' பிரீசரில் '  மூன்று  மனி  நேரம்  வைத்த  பிறகு   துருவுங்கள்.  சிரமம்  இல்லாமல்  சரசரவென்று  துருவி  விடலாம்.
*  ஆணும்,  பெண்ணும்  உதடுகளில்  முத்தமிடும்போது  278  வகையான  பாக்ட்ரியாக்கள்  பரிமாறிக்கொள்ளபடுகின்றன.
*  உடலில்  90  சதவிகித  நோய்களுக்கு  காரணமே  மன அழுத்தம்தான்.
*  பால்  கலக்காத  தேநீர்  பருகுவதால்  உடல்  எடை  குறைவதாக  ஜப்பான்  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.  அதிலும்  பச்சைத்  தேநீர் (கிரீன் டீ)
   மிகவும்  நல்லது.
*  ஜலதோஷம்  பிடித்து  தலை  பாரமாக  உள்ளதா?  தலையனைக்குப்  பதில்  சணல்  கோணியைப்  பயன்படுத்துங்கள்,  பலனை  சீக்கிரம்  உணர்வீர்கள்.
*  சூரியகாந்திச்  செடிகளை  வளருங்கள்.  உங்கள்  வீட்டில்  யாருக்கும்  ஜலதோஷம்   எட்டிப்  பார்க்காது.
-- வாராந்தரி ரானி.  25 - 3 - 2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

பிறப்புகள்.

  (  சிறப்பு  ).
     இந்த  கலியுகத்தில்  பிறப்புகள்  யோனி  வழியாகவே   நிகழ்த்தாக  வேண்டும்.  இவ்வாறு  பிறவாதவர்களை  'அயோனிஜர்'  என்பர்.  பாண்டவர்கள்  வாழ்ந்த  துவாபர  யுகத்தில்  யோனி  மட்டுமின்றி,  யோக  வழியிலும்  கருக்  கொள்ள  இடமளிப்பதாய்  இருந்தது.  ஆனால்,  மகாபாரத  காலத்தில்  யோக  வழியில்  பலர்  பிறந்திருக்கின்றனர்.  பாண்டவர்கள்  பிறப்பே  யோகவழி  முறைதான்!  கர்ணனும்  அந்த  வழியில்  காதைக்  கருவறையாகக்  கொண்டு  பிறந்தவன்.  பின்  அதுவே  காரணப்  பெயராகி  விட்டது.  'கர்ணம்'  என்றால்  'காது'  என்று  பொருள்.
     துரியோதனன்  உள்ளிட்ட  அவன்  சகோதர,  சகோதரிகள்  நூறுபேரும்  கூட  யோக  சக்தியாலே  மண்  கலயத்தில்  உயிர்ப்பிக்கப்பட்டனர்.
     திரவுபதியின்  தந்தையான  துருபதன்  கூட  பத்துமாத  சிசுவாக  வளராமல்  மிக  குறுகிய  காலத்தில்  'துரு'  என்ற  மரத்தின்  நிழலில்,  இரு  பாதங்களுக்கு  கீழே  குழந்தையாக  உருவெடுத்து  வந்த  காரணத்தால்  'துருபதன்'  என்றானவனே!
     யோகம்  என்பதற்கு  'வழிமுறை,  அதிர்ஷ்டம்,  நிகரற்ற  பயம்,  சேர்க்கை'  என்று  பல  பொருள்  உண்டு!
-- இந்திரா சவுந்தர்ராஜன்.  ( தெரிந்த  பாரதம்  தெரியாத  பாத்திரம் - 2 )  தொடரில்...
-- தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92. 

Friday, July 10, 2015

தொடர்ந்த ஏழு.

எம்.ஜி.ஆர்.  பிறந்தது        -- 1917
நாடக  நடிகரானது            -- 1927
காங்கிரசில்  சேர்ந்தது       -- 1947
தி.மு.க.வில்  இணைந்தது  -- 1957
எம்.எல்.ஏ. ஆனது             -- 1967
முதல்வரானது                  --  1977
இயற்கை  எய்தியது          --  1987
-- ஜி.மகாலிங்கம்,  காவல்காரபாளையம்.
-- வாராந்தரி ரானி.  25 - 3 - 2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

Thursday, July 9, 2015

மனசாட்சி.

 மனசாட்சி  என்பது  இதயத்தின்  ஆத்மா,  மனித  இதயத்திலிருந்து  சுடர்விட்டு  வழிகாட்டும்  ஒரு  பேரொளி.  வாழ்க்கை  எப்படி  உண்மையோ  அதைப்போன்றது  அது.  நேர்மைக்குப்  புறம்பாகச்  சிந்தித்தாலோ,  நடந்தாலோ  அது  தன்  எதிர்ப்பைக்  காட்டும்.
     மனசாட்சி  என்பது  நமது  பாரம்பரியத்தில்  வந்து  உதித்த  ஒன்று.  தப்பையும்  சரியானவற்றையும்  நமக்குச்  சரியான  நேரத்தில்  உணர்த்தும்  ஓர்  அறிவார்ந்த  மரபணு  உண்மை.  நமது  குற்றங்களைப்  பதிவு  பண்ணும்  ஓர்  வாழ்க்கைப்  புத்தகம்.  அது  நம்மைப்  பயமுறுத்தும்,  நம்பிக்கை  கொடுக்கும்,  பாராட்டும்,  தண்டனை  அளிக்கும்.  நம்மைக்  கட்டுக்குள்  வைக்கும்.  ஒரு  தடவை  மனசாட்சி  உறுத்தினால்  அது  எச்சரிக்கை.  மறுமுறை  உறுத்தினால்  அது  தண்டனை.
     ஒரு  நிகழ்வு  நடந்தால்  --  கோழை  கேட்பான்  இது  பாதுகாப்பானதா  என்று  --  பேராசைக்காரன்  கேட்பான்  இதனால்  எனக்கு  என்ன  லாபம்  என்று  --  தற்பெருமைக்காரன்  கேட்பான்  நான்  மகானாக  முடியுமா  என்று  --  இச்சையாளன்  கேட்பான்  அதில்  என்ன  சந்தோஷம்  உண்டு  என்று  --  ஆனால்  மனசாட்சி  ஒன்றுதான்  கேட்கும்  அது  சரியா  என்று.  ஆனால்,  ஒட்டு  மொத்தமான  பதில்  என்ன  தெரியுமா?  ஒரு  மனிதன்  தன்  மனசாட்சிப்படி  நடப்பது  ஒன்றுதான்.
-- முன்னாள்  குடியரசுத்தலைவர்  A.P.J.அப்துல்கலாம்  அவர்களின்  உரையிலிருந்து.
-- R.அஜாய் குமார், T.G.T.  MAGGHS,  KARAIKKAL., ஆசிரியர்  நண்பன்,  ஆகஸ்ட்  2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.    

இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க்கிருமிகள்

  (  சிறப்பு )
     மத்திய  அறிவியல்  மற்றும்  தொழில்  ஆய்வு  மையத்தின்  கீழ்  இயங்கும் 'இன்ஸ்டியூட்  ஆஃப்  ஜினோமிக்ஸ்  அண்ட்  இன்டக்ரேட்டிவ்  பயாலஜி  மையத்தைச்  சேர்ந்த  விஞ்ஞானிகள்  சமீபத்தில்  இந்திய  ரூபாய்  நோட்டுகளை  ஆராய்ந்தனர்.
     இதற்காக  முதன்முறையாக, 'ஷாட்கன்  மெட்டாஜினோம்  சீக்வென்சிங்'  என்னும்  தொழில்நுட்பம்  பயன்படுத்தப்பட்டது.  அதன்மூலம்  சுமார்  78  நோய்க்கிருமிகளும், 18  வகையான  ஆன்டிபயாடிக்  எதிர்ப்புக்  கிருமிகளும்  இருப்பது  தெரியவந்தது.  'இந்த  நோய்க்  கிருமிகளில்  70%  யூகார்யோட்டா ( மெய்க்கருவுயிரி ),  9 %  பாக்டீரியா  மற்றும்  1%  வைரஸ்  ஆகியவை  இருக்கின்றன'  என்று  கூறப்பட்டுள்ளது.
     ரூபாய்  நோட்டுகள்  கடினத்தன்மையுடன்  இருக்கும்  காரணத்தால்,  அவற்றில்  நோய்க்கிருமிகள்  நீண்ட  நாட்கள்  வாழும்.  மேலும்,  ரூபாய்  தாள்கள்  எவ்வளவு  முறை  கைமாறுகின்றன,  எவ்வளவு  தூரம்  ஈரத்தன்மை  இழுத்துக்கொள்ளப்படுகிறது  போன்றவற்றின்  அடிப்படையில்  அந்த  நோய்க்கிருமிகள்  கெடுதலை  ஏற்படுத்தும்  என்று  கூறப்படுகிறது.
     கடந்த  ஆண்டு 'பயோடெக்னாலஜி' எனும்  அறிவியல்  இதழில்  வெளியான  ஆய்வுக்  கட்டுரை  ஒன்றில், பாலஸ்தீன  ரூபாய்  நோட்டுகளில்  96.25 % நோய்க்கிருமிகளும்,  கொலம்பியா  நாட்டு  ரூபாய்  நோட்டுகளில்  91.1%,  தென்னாப்பிரிக்கா  ரூபாய்  நோட்டுகளில்  90%,  சவுதி  ரூபாய்  நோட்டுகளில்  88 % மற்றும்  மெக்சிகோ  ரூபாய்  நோட்டுகளில்  96%  நோய்க்கிருமிகள்  இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருந்தது.
     அதேபோல, 'ஜர்னல்  ஆஃப்  ரிசர்ச்  இன்பயாலஜி'  எனும்  ஆய்விதழில்  வங்கிகள்,  மருத்துவமனை  போன்றவை  கையாளும்  ரூபாய்  நோட்டுகளில்  அதிகளவு  நோய்க்கிருமிகள்  இருப்பதாகவும்,  அதற்கடுத்து  இறைச்சி  விற்பனையாளர்கள்  கையாளும்  ரூபாய்  நோட்டுகளில்  நோய்க்கிருமிகள்  இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
-- தேசம்.
--  'தி இந்து'  நாளிதழ்.  புதன், ஜூலை 8, 2015.  

Wednesday, July 8, 2015

பொது அறிவு.

*  தேசியக்  கொடியின்  நீள,  அகலம்  --  3 , 2.
*  நாட்டிய  சாஸ்திரத்தை  எழுதியவர்  --  பரத  முனிவர்.
*  தாண்டியா  --  குஜராத்  மாநில  நடனம்.
*  சத்யமேவ  ஜெயதே  என்ற  வாசகம்  --  முண்டக  உபனிஷத்திலிருந்து  எடுக்கப்பட்டது.
*  மோகினியாட்டம்  --  கேரள  மாநில  நடனம்.
*  ஜெகன்நாதர்  ரத  யாத்திரைக்கு  புகழ்  பெற்ற  பூரி  நகரம்  --  ஒரிசாவில்  உள்ளது.
*  ஜாரே  ஜகான்  சே  அச்சா,  தேசபக்தி  பாடலை  எழுதியவர்  --  முகமது  இக்பால்.
*  சாகித்ய  அகாடமி  அமைப்பின்  அலுவலகம்  --  டில்லியில்  உள்ளது.
*  பூமியில் கிடைக்கும்  கடினமான  பொருள்  --  வைரம்.
*  பொட்டாஷியம்  நைட்ரேட்  --  உரத்தில்  உள்ளது.
--  தினமலர்.   

பாலியல் வழக்கில் சமரசம்

  (  சிறப்பு ).
     பாலியல்  வழக்கில்  சமரசம்  கூடாது  என்று  உச்ச  நீதிமன்றம்  கண்டிப்புடன்  கூறியிருப்பது  வரவேற்கக்  கூடியது  அல்ல.  குற்றவியல்  விசாரணை  நடைமுறைச்  சட்டம்  பிரிவு  320-ல்  56  குற்றங்களுக்குச்  சமரசம்  செய்துகொள்ளலாம்  என்று  கூறப்பட்டிருக்கிறது.  அதில்  43  குற்றங்கள்  நீதிமன்ற  அனுமதி  இல்லாமலேயே  சமரசம்  செய்துகோள்ளாலாம்  என்றும்,  13  குற்றங்கள்  நீதிமன்ற  அனுமதியுடன்  செய்துகோள்ளலலாம்  என்றும்  கூறப்பட்டுள்ளது.  மேலும்,  ஆந்திர  மாநிலத்தில்  மேலும்  இரண்டு  குற்றங்களும், மத்திய  பிரதேசத்தில்  மேலும்  நான்கு  குற்றங்களும்  சமரசம்  செய்துகொள்ளலாம்  என்று  அந்த  மாநில  அரசுகள்  சட்டத்  திருத்தம்  கொண்டுவந்துள்ளன.  இவற்றில்  நீதிமன்ற  அனுமதி  இல்லாமலேயே  சமரசம்  செய்துகொள்ளலாம்  என்ற  குற்றங்கள்  பாட்டியலில்  இந்திய  தண்டனைச்  சட்டம்  பிரிவுகள்  497, ( பிறன்மனை  புணர்தல் ) , 498 ( திருமணமான  பெண்ணைக்  கடத்திச்  செல்லுதல் )  ஆகிய  குற்றங்கள்  அடங்கியுள்ளன  என்பதை  நாம்  கவனத்தில்  கொள்ளவேண்டும்.  இதில்  ஆச்சர்யமான  விஷயம்  என்னவென்றால்,  பிரிவு  497  குற்றத்திற்குப்  பாதிக்கப்பட்ட  பெண்ணின்  கணவன்  குற்றவாளியுடன்  சமரசத்துக்குத்  தகுதியானவன்  என்று  கூறப்பட்டிருக்கிறது.
     பிரிவி  498  குற்றத்துக்கு  அந்த  பெண்ணின்  கணவனும்  அந்த  பெண்ணும்  குற்றவாளியுடன்  சமரசம்  செய்துகொள்ளலாம்.  இந்த  விஷயங்களில்  எல்லாம்  பெண்ணின்  கண்ணியத்துக்கு  எதிரானது  எனக்  கண்டுகொள்ளாத  உச்ச  நீதிமன்றம்,  இந்த  விஷயத்தில்  கண்டிப்புடன்  இருப்பது  வியப்பாக  உள்ளது.  உச்ச  நீதிமன்றங்கள்  தத்துவார்த்த  சிந்தனைகளிலிருந்து  விடுபட்டு,  யதார்த்த  நடைமுறைபற்றிச்  சிந்தித்தால்  நல்லது.  மேலும், சமரசம்  கட்டாயப்படுத்தப்படவில்லை   என்பதையும்  பாதிக்கப்பட்ட  பெண்ணின்  விருப்பத்தைப்  பொறுத்ததே  என்பதையும்  மறந்துவிடக்  கூடாது.
-- பொ.நடராசன்,  நீதிபதி ( பணி  நிறைவு ), உலகனேரி,  மதுரை.
-- ( இப்படிக்கு  இவர்கள் ).  கருத்துப்பேழை.
--  'தி இந்து'  நாளிதழ்.  செவ்வாய்,  ஜூலை  7, 2015.  

Tuesday, July 7, 2015

புதிய கருந்துளை.

கன்னிராசி  மண்டலத்தில்  புதிய  கருந்துளை.
இந்திய  விஞ்ஞானி  கண்டுபிடிப்பு.
     தம்முள்  புகும்  ஒளி,  மின்காந்த  அலைகள் உட்பட  எதுவும்  மீண்டும்  வெளிவராத  அளவு  அடர்த்தியும்,  ஈர்ப்பு  சக்தியும்  கொண்ட  ' பிளாக்  ஹோல் '
எனப்படும்  கருந்துளைகள்  விண்ணில்  ஏராளமாக  இருப்பதாக  விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.  விண்ணில்  மிதக்கும்  தூசு  மற்றும்  இதர  மாசுக்களால்  இந்த  கருந்துளைகள் மூடப்பட்டிருப்பதால்  இந்த  கருந்துளைகளை  காண  முடிவதில்லை.
     இருப்பினும்  இந்த  கருந்துளைகள்  தனது  அருகில்  உள்ள  நட்சத்திர  மண்டலங்களை  தனக்குள்  ஈர்த்துக்  கொள்ளும்போது  அதனால்  ஏற்படும்  வெப்பத்தால்  கருந்துளையில்  இருந்து  கதிர்வீச்சுக்கள்  வெளியாகும்.  இந்த  கதிர்வீச்சுக்களை  கொண்டு  விஞ்ஞானிகள்  கருந்துளைகளை  கண்டுபிடிக்கின்றனர்.
     இந்நிலையில்,  கன்னிராசி  மண்டலத்தில்  சூரியனைக்காட்டிலும்  பல  ஆயிரம்  மடங்கு  அடர்த்தி  வாய்ந்த  பிரம்மாண்டமான  கருந்துளை  இருப்பதை  கண்டுபித்துள்ளனர்.  யுகே  இன்பராரெட்  டெலஸ்கோப் ( யுகேஐஆர்டி )  எனப்படும்  அதிநவீன  டெலஸ்கோப்  மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள  கருந்துளைக்கு  யுஎல்ஏஎஸ்ஜே  1234+0907  என்று  பெயரிட்டுள்ளனர்.  இது  தொடர்பான  கட்டுரையில்:  பூமியில்  இருந்து  வெகு  தொலைவில்  உள்ள  இந்த  கருந்துளையில்  இருந்து  வெளியாகும்  ஒளி  பூமியை  வந்தடைய  ஆயிரத்து  100  கோடி  ஆண்டுகள்  ஆகும் .  இதுபோன்று  விண்ணில்  400க்கும்  அதிகமான  பிரம்மாண்ட  கருந்துளைகள்  இருக்கலாம்  என்று  நம்புகிறோம்.  ஒவ்வொரு  நட்சத்திர  மண்டலத்திலும்  ஒரு  கருந்துளை  இருக்க  வாய்ப்பு  உள்ளது என்கிறது..
-- தினமலர் .  11- 10 - 2012.  

உனவு கொடுங்கள்

   (  சிறப்பு ).
உனவு  கொடுங்கள்,  பைபிள்  வேண்டாம்.  --  நேபாள  பிரதமர்  கோபம்.
மரணத்திலும்  ஆதாயம்  தேடும்  கிறிஸ்துவ  அமைப்பு
   பூகம்பத்தால்  பாதிக்கப்பட்டு  சின்னாபின்னமாகி  இருக்கிற  நேபாள  மக்களுக்கு  இந்தியா  உட்பட  பல்வேறு  உலக
 நாடுகள் தங்களால்  ஆன  உதவிகளை  செய்வதோடு,  ஏராளமான  நிவாரணப்  பொருட்களையும்  அனுப்பி  வரும்  சூழ்நிலையில், கிறிஸ்துவ  அமைப்பு  ஒன்று, 1  லட்சம்  பைபிள்களை  நேபாளுக்கு  அனுப்பி  இருக்கிறது.  இது  நேபாள  பிரதமர்  சுஷில்  கொய்ராலாவுக்கு  கடும்  கோபத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.  "என்  மக்கள்  ஆயிரக்கணக்கில்  இறந்துள்ளனர்.  80  லட்சத்துக்கும்  மேற்பட்டவர்கள்  உணவு, தண்ணீர்  இல்லாமல்  தவித்து  வருகின்றனர்.  கடும்  குளிரில்  போர்த்திக்கொள்ள  கம்பளி  இல்லாமல்  குழந்தைகள், பெண்கள்  அவதிப்படுகின்றனர்.  இந்த  நேரத்தில்  இதுபோல  பைபிளை  அனுப்பி  இருப்பது  முட்டாள்தனம்.  எங்களுக்கு  வேண்டியது,  உணவு,  தண்ணீர், இடிபாடுகளை  நீக்கும்  இயந்திரங்கள்,  குளிருக்கு  போர்த்திக்கொள்ள  கம்பளிகள்.  இந்த  பைபிளை, குளிருக்கு  போர்த்திக்  கொள்ள  முடியாது.  சாப்பிட  முடியாது.  ஒரு  விமானம்  முழுவதும், எதற்குமே  உதவாத  முட்டாள்தனத்தை  நிரப்பி  அனுப்பி  இருக்கிறீர்கள்.  இதைப்  பார்த்தவுடன்  கடும்  கோபம்  ஏற்படுகிறது.  முடிந்தால்  உண்மையான  உதவியை  செய்யுங்கள்.  இல்லையென்றால், விட்டுவிடுங்கள்.  இனி  இதுபோல  நடந்து  கொள்ள  வேண்டாம்  என்று  கடுமையாக  எச்சரித்துள்ளார்.
-- சுதேசி.  மாதமிருமுறை  இதழ்.  மே 1 - 15,  2015.
-- இதழ்  உதவி : செல்லூர்  கண்ணன். 

Monday, July 6, 2015

பஞ்சவடி, சாகா, பழம்.

   ராமாயணத்தில்  வரும்  பஞ்சவடி  என்னும்  இடம்  கோதாவரி  தீரத்தில்  உள்ள  நாசிக்  என்ற  இடமே.  ' வடம் '  என்பது  ஆலமரத்தின்  பெயர்.  அங்கே ஐந்து  ஆலமரங்கள்  இருந்தன.  அதனால்  பஞ்சவடி  என்ற  பெயர்  வந்தது.  அங்கே  வனவாசத்தின்போது  ராமர்  வந்து  தங்கியபோது  சூர்ப்பனகை  வந்து  மூக்கு  அறுபட்டாள்.  நாசிகை  என்பது  மூக்கு.  சூர்ப்பனகையின்  மூக்கு  விழுந்த  இடமாதலில்  ' நாசிகா '  என்று  வந்து  அதுவே  ' நாசிக் '  ஆயிற்று.
      'சாகா'  மிருகம்  என்று  குரங்குக்குப்  பெயர்  சொல்வார்கள்.  ஆனால்,  அது  சாகாது  என்று  பொருள்  இல்லை!   சாகா  என்பது  தழையைக்  குறிக்கும்.  ஊனுண்ணாமல்  தழை,  தளிர்  முதலியவற்றை  உண்ணுவதால்  குரங்குக்கு  அந்தப்  பெயர்  வந்தது.
      எத்தனையோ  பழங்கள்  இருக்க  ஆண்டவன்  வழிபாட்டுக்கு  வாழைப்பழத்தை  பயன்படுத்துவது  ஏன்?  என்று  பலருக்குச்  சந்தேகம்.  வாழைப்பழம்  எல்லாக்  காலங்களிலும்  கிடைக்கும்  என்பதே  காரணம்!
-- ( ' விடைகள்  ஆயிரம் '  என்ற  நூலில்,  கி.வா.ஜகந்நாதன் ).
-- தினமணி கதிர்.  1 - 4 - 2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.      

Sunday, July 5, 2015

பிரெஞ்சு புரட்சி

 பிரெஞ்சு  புரட்சியின்போது  கொடிய  பாஸ்டில்  சிறை  உடைக்கப்பட்டது.  பல  வருடங்களாக  கை,  கால்களில்  விலங்குகளோடு  வாழ்ந்தவர்கள்,
வெளிச்சத்தையே  பாராமல்  இருட்டில்  சிறை  வைக்கப்பட்டவர்கள்  விடுதலை  செய்யப்பட்டனர்.  ஆனால்,  விடுவிக்கப்பட்டவர்களால்  வெளியே  வாழ  முடியவில்லை.  வெளிச்சத்தையே  அவர்களால்  பார்க்க  முடியவில்லை.  மறுபடியும்  சிறைக்குள்  வாழவே  அவர்கள்  அனுமதி  கேட்டுக்  கெஞ்சினார்கள்.  நம்ப  முடிகிறதா?  அடிமைகளுக்குத்  துயரங்களே  வாழ்வாகி  விடுகிறது.  அவர்கள்  எஜமானர்கள்  ஆக  விரும்புவதே  இல்லை!
-- சுகி.சிவம். ' எப்போதும்  சந்தோஷம் ' தொடரில்.
-- தினகரன்  ஆன்மிக  மலர்.  7 - 8 - 2010

Saturday, July 4, 2015

தமாஷ் !

*  " ஊட்டியில  எஸ்டேட்  இருக்குன்னு  சொன்னீங்களே ..... "
   " ஆமா,  அது  எம்  பேர்ல  இருக்குன்னு  சொல்லலையே  டார்லிங் ! "
*  " இனிமேல்  சத்தியமா  குடிக்க  மாட்டேன்னு  சொன்னீங்களே..."
   " விட்டுட்டேன்  டாக்டர் !"
   " குடிக்கிறதையா?"
   " ம் ஹூம்,  சத்தியம்  பண்றதை !"
* " ஜெனரல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா...ஸ்பெஷல்  வார்டுல  இருக்க  விரும்புறீங்களா?"
  " எங்கே  வேணாலும்  இருக்கென்  டாக்டர்.  ஆனா,  நான்  இருக்கணும்!"

வியாழனும், வெள்ளியும் அருகருகே!

  (  சிறப்பு ).
அற்புத  காட்சியை  இரவில்  காணலாம்.
     கடந்த  சில  நாட்களாக  இரவில்  வானத்தின்  வடகிழக்கில்  வெள்ளி  கிரகமும்,  வியாழன்  கிரகமும்  அருகருகே  தோன்றுகின்றன.  வெள்ளி  கிரகம்  மிகவும்  பிரகாசமாக  காட்சி  அளிக்கிறது.  இப்போது  வெள்ளிகிரகம்  பூமியில்  இருந்து  10  கோடி  கிலோ  மீட்டர்  தூரத்தில்  உள்ளது.  ஆனால்,  வியாழன்  கிரகம்74  கோடி  கிலோ  மீட்டர்  தூரத்தில்  இருக்கிறது.  2  கிரகங்களும்  சூரியனை  சுற்றி  வருகின்றன.  வியாழன்  விரைவில்  சூரியனை  சுற்றிவிடும்.
     ஆனால்  வெள்ளி  சுற்ற  ஆண்டுக்கணக்கில்  ஆகும்.  அவ்வாறு  வெவ்வேறு  சுற்றுப்பாதைகளில்  சுற்றும்  2  கிரகங்களும்  அருகருகே  வருவது  இயல்பு.  அதேபோல்தான்  இப்போது  வெள்ளி  கிரகம்  சுற்றும்போது  அது  வியாழன்  அருகே  வருகிறது.  அவ்வாறு  வரும்போது  வெள்ளி  கிரகமும்,  வியாழன்  கிரகமும்  அருகருகே  தெரியும்.
     இந்த  காட்சி  ஆண்டுக்கு  5  அல்லது  6  நாட்கள்தான்  தெரியும்.  இந்த  ஆண்டு  2  கிரகங்களும்  அருகருகே  தோன்றும்  காட்சி  கடந்த  30-ம்  தேதி  முதல்  தெரிகிறது.  தினமும்  இரவில்  7  மணி  முதல்  8.15  வரை  அந்த  காட்சியை  காணலாம்.  4-ஆம்  தேதி  இரவு  வரை  இந்த  அற்புத  காட்சியை  சாதாரண  கண்களிலேயே  காணலாம்.
-- தினமலர்  திருச்சி . வெள்ளி. ஜூலை  3,  2015.   

Friday, July 3, 2015

அறிந்து கொள்வோம் !

*  போலியோ  தடுப்பு  மருந்தை  கண்டுபிடித்தவர்  --  ஜோன்ஸ்  சால்க் .
*  நெயில்  பாலிஷில்  உள்ள  ரசாயனம்  --  அசிடோன் .
*  மத்திய  காபி  ஆராய்ச்சி  நிலையம்  --  பலேஹன்னூர்,  கர்நாடகாவில்  உள்ளது .
*  பெயின்ட்  தொழிலில்  வெளிப்படும்  மாசு  --  அலுமினிய  மாசு .
*  டெசிமல்  முறைக்கு  இந்தியா  --  1957 ம்  ஆண்டு  மாறியது .
*  சீக்கியர்களின்  10வது  குரு  கோவிந்த்சிங்கின்  மனைவி  பெயர்  --  மாதா  சுந்தரி .
*  ராயல்  பெங்கால்  புலிக்கு  முன்,  இந்தியாவின்  தேசிய  விலங்கு  --  சிங்கம் .
*  ஆசியாட்டிக்  சொசைட்டியை  நிறுவியவர்  --  வில்லியம்  ஜோன்ஸ் .
*  எமர்ஜென்சி  கொண்டுவரப்பட்டபோது  நாட்டின்  ஜனாதிபதியாக  இருந்தவர்  --  பக்ருதீன்  அலி  அகமது .
*  பீடியில்  சுற்றப்பட்டிருக்கும்  இலையின்  பெயர்  --  டெண்டு  இலை .
*  கடந்த  1962 ம்  ஆண்டு  இந்தியா  --  சீனா  போர்  நடந்தபோது,  இந்தியாவின்  ராணுவ  அமைச்சராக  இருந்தவர்  --
   கிருஷ்ண  மேனன் .
*  அதிக  பிரிகுவன்சி  கொண்டது  --  மைக்ரோவேவ் .
----   தினமலர் .23 . 1 . 2012 . 

Thursday, July 2, 2015

தெரியுமா ? தெரியுமே !

*  தலைக்கு  உள்ளே  இருக்கின்ற  காதுகளினாலும்,  உடலாலும்  மீன்கள்  தண்ணீருக்குள்ளே,  தங்களைச்  சுற்றி  எழும்
  சப்தங்களை  உள்வாங்கிக்  கொள்கின்றன  என்கிறது  நேஷனல்  வைல்ட்டு  லைப்  பெடரேஷன்  ஆய்வு !
*  இயற்கையாக  மனிதர்களுக்கு  வயது  ஏறஏற  முளையின்  அளவு  சிறியதாகிப்  போகிறது .  ஒவ்வொரு
    புத்தாண்டிற்கும்  1.9  சதவீதம்  மூளை  தன்னுடைய  கன  அளவை  இழக்கிறதாம் .இதனால்  நினைவாற்றல்
   குறைகிறது .  அதனால்தான்  ஞாபகமறதி  ஏற்படுகிறது 

Wednesday, July 1, 2015

டிப்ஸ்...டிப்ஸ் !

*  நாம்  நினைத்தது  நிறைவேற  வேண்டும்  என்றால்,  அதற்கு  நாம்  தீவிரமாக  ஆசைப்பட  வேண்டும்.  அது  நிச்சயம்  நடந்தே  தீரும்  என்று  நம்ப
    வேண்டும்.    -- குடியரசுத்  தலைவர்.  ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
* கோயில்களில்  இருக்கும்  கொடிமரத்தின்  தாத்பரியமே,  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  ஆகாயத்தில்  அமைந்துள்ள  பிரம்மத்தின்  கதிர்களை  கோயிலின்
  கும்பத்திற்கு  செலுத்தி,  அங்கிருந்து  மூலவருக்கு  அதனை  அளிப்பதுதான்.  கொடி  மரத்திற்கு  முன்னால்  மட்டும்தான்  விழுந்து  கும்பிடவேண்டும்.  மற்ற
  இடங்களில்  செய்வது  தவறாகும்.
* பிரம்ம  முகூர்த்த  நேரத்தில் ( அதிகாலை  4.30  மணி  முதல்  5.30  மணி  வரை )  வாசல்  தெளித்து  கோலம்  போடும்  வீட்டின்  உள்ளே  ஸ்ரீமகாலஷ்மி
  ஆசையோடு  வருனாள்.  கோலத்தின்  நடுவில்  அகல்  விளக்கை  கிழக்கு  முகமாக  ஏற்றி  வைத்தால்,  அந்த  வீட்டில்  மங்கலம்  பெருகி,  செல்வம்
  நிறையும்.
* கோலத்தைக்  குனிந்து  நின்றுதான்  போட  வேண்டும்.  அமர்ந்தபடி  பொடக்கூடாது.  கோலத்தில்  தவறு  வராமல்  போடுவது  மிகவும்  நல்லது.
   ஒரு  வேளை  புள்ளிகளோ  இழைகளோ  தவறாகி  விடுமானால்,  அவற்றை  ஈரத்  துணியால்  ஒற்றி  எடுத்துவிட்டு  மறுபடி  போடவேண்டும்.  கோலத்தை
   ஒருபோதும்  கையாலோ  அல்லது  காலாலோ  அழிக்கக்கூடாது.
* பெரும்பாலான  கோயில்களில்  பலிபீடம்  அமைந்திருக்கும்.  பலிபீடம்  என்பது  பாசத்தைக்குறிக்கும்.  பலிபீடத்தை  ஸ்ரீபலிநாதர்  என்றழைப்பர்.
   ஆலயத்தில்  எட்டு  மூலைகளில்  பலி  பீடங்கள்  அமைந்திருக்கும்.  இதனை ' அஷ்ட  திக்பாலகர்கள் '  என்று  கூறுவர்.  இதற்கெல்லாம்  முதன்மையானது
   சிவனுக்கு  எதிரில்  நந்தியின்  பின்புறமாக  அமைக்கப்பட்டிருக்கும்!
--- குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006.