Sunday, May 31, 2009

இரகசியம் !

பத்து விரல் இரகசியம் !
"மனிதனுக்குப் பத்து விரல் இருக்கே அது எதுக்காக ?
அவன் ரொம்ப அவசரத்திலே இருக்கான் . எதை எதையோ மறந்துடறான் . எதை மறந்தாலும் பத்து மாதம் சுமந்து பெத்த அம்மாவை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் பத்து விரலை வச்சிருக்கான் . வேலை செய்யற போது பத்து விரலும் கண்ணிலே படும் . அப்போதாவது அம்மா ஞாபகம் வரும் இல்லையா ? சில சந்தேகப் பேர்வழிகள் கேட்டாங்க , அப்போ காலிலே பத்து விரல் இருக்கே , அது எதுக்காகன்னு . சில பேர் தாயாரைக் காலாலே உதைக்கிற அளவுக்கு கொடூரமானவங்களா இருப்பாங்க . அப்படி உதைக்கிற சமயத்துலே , ' பத்து மாதம் சுமந்து பெத்தவடா . அந்த அம்மா ' ன்னு நினைவு வரட்டுமேன்னு தான் காலிலேயும் ஆண்டவன் பத்து விரலை வச்சான் ."
--- இந்த விளக்கத்தை வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கூற காஞ்சிப் பெரியவர் கேட்டு மிகவும் பாராட்டினாராம் .
வில்லும் -- உடுக்கையும் .
வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் ஒரு கலை .
அதில் பயன்படுத்தும் வில் இராமேஸ்வரத்தை -- தனுஷ்கோடியை நினைவு படுத்தும் . வில்லுப்பாட்டில் பயன்படும் உடுக்கை , கையிலை மலையில் உள்ள சிவனை நினைவூட்டும் . கயிலை முதல் இராமேஸ்வரம் வரை நினைவு வருவதால் வில்லுப்பாட்டு தேசிய ஒருமைப் பாட்டை நினைவு படுத்தும் ஒரு கலை .
--- காஞ்சிப் பெரியவர் .05 - 01 - 1983 .

Saturday, May 30, 2009

புதுப்பாடலா ?

தமிழ்த்தாய்க்கு புதுப்பாடலா ?
' இந்திர விழா ' என்ற திரைப்பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசிய பேச்சு , வெளிநாடுவாழ் தமிழர்கள் மனதில் பிரிவினையைத் தூண்டுவதாக இருந்தது . வெளிநாடுகளில் மொழி , இனம் , என வேறுபாடுகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் .திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக்கொண்டிருக்கும் எந்தத் தமிழனும் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என்று கேட்கவில்லை .
' நீராரும் கடலுடுத்த ' என்ற பாடலில் எந்தக் குறையும் கண்டுபிடிக்கவில்லை , பாட முடியாமல் தவிக்கவும் இல்லை . தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோண்மனியம் சுந்தரனார் பெயரில் தமிழக அரசு பல்கலைக்கழகம் ஏற்படுத்தி கவுரவித்திருக்கிறது . அப்படிப்பட்ட ' நீராரும் கடலுடுத்த ' என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை வெளிநாடுகளில் பாட முடியாதாம் . ஏனெனில் அப்பாடலில் இந்திய எல்லைகள் வருகிறதாம் . அதனால் ஏ . ஆர் . ரகுமான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வைரமுத்து புதிதாய் எழுதப்போகிறாராம் .ஏ .ஆர் . ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் , உலகப் புகழ்பெற வில்லையா ? அது தமிழ்ப்பாடலா ? அது பாரதத்தாய் வாழ்த்து !
' ஆனந்த மடம் ' நாவலில் இந்த வந்தே மாதரம் பாடலைக் கண்டு எடுத்தவர் ஆங்கிலநாட்டு சகோதரி நிவேதிதை . இந்த வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக வந்திருக்க வேண்டும் . ஆனால் , அப்பாடலில் நாட்டை காளியாகவும் , பராசக்தியாகவும் வர்ணிக்கப்படுகிறது . இதை இஸ்லாமியர்கள் விரும்பவில்லை . சுதந்திர இந்தியா தன்னை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று அறிவித்துக் கொண்டது . அதனால் , ' வந்தே மாதரம் ' தேசியகீதமாக பங்குபெறவில்லை .ஆனால் , ஓர் இஸ்லாமிய தமிழனால் அதே வந்தே மாதரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது . செப்புமொழி பதினெட்டுடையாள் --- எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்றான் பாரதி .
சினிமாவுக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர் , தேசப்பற்றில்லாமல் குறுகிய தனித்தமிழ்நாடு என்ற எண்ணத்தில் பேசுவதால் தமிழர்களை வட இந்தியர்கள் கண்டுகொள்வதில்லை . காஷ்மீரிகளை தென்னிந்தியர்கள் கண்டுகொள்வதில்லை .பாரதத்தாயே தமிழ்த்தாய் . வெளிநாடுவாழ் தமிழர்களுக்கென்று தமிழ்த்தாய் வாழ்த்து எழுதி விஷ விதையை விதைக்க வைரமுத்து போன்றோர் முயலவேண்டாமே .
--- எஸ் . ராமச்சந்திரன் , வேலூர் . தினமலர் .04 -03 - 2009 .

Friday, May 29, 2009

சட்டங்கள் .

வேடிக்கையான சட்டங்கள் .
வெளிநாடுகளில் இருக்கும் சில சட்டங்கள் நமக்கு வேடிக்கையாக தோன்றும் . அத்தகைய சட்டங்களில் சில :
மிக்சிகன் நாட்டில் உள்ள பெண்களின் முடியை வெட்டிக்கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை . அங்கு பெண்களின் முடி கணவனுக்கே சொந்தமானது . அவனது அனுமதியில்லாமல் முடியை வெட்டிக்கொள்ளக் கூடாது .
வளர்ச்சி அடைந்த நாடுகளை கொண்ட இங்கிலாந்தில் ( யூ . கே . ) ஒரு விசித்திரச் சட்டம் இருக்கிறது . கர்ப்பிணி பெண்கள் அவசர ஆத்திரத்திற்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம் . அதற்கு காவலரின் தலைக்கவசத்தை கேட்டாலும் போலீஸ்காரர் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் . அப்படி கொடுக்காவிட்டால் குற்றம் .
அலெக்சான்டிரியா நாட்டில் கணவன் , மனைவியோடு உடலுறவு கொள்ளும் போது வாயில் துர்நாற்றம் இருக்க கூடாது . வெங்காயம் , பூண்டு போன்றவற்றை சாப்பிட்டு அதன் மூலம் வாயில் வாடை வந்தால் கூட மனைவியோடு உடலுறவு கொள்ள முடியாது . மீறி உடலுறவு கொண்டால் கணவனுக்கு , மனைவி தண்டனை வாங்கி தரலாம் .
இங்கிலாந்தில் 14 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் ஒரு மணி நேரம் குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை கட்டாயமாக செய்தே ஆக வேண்டும் .
டென்மார்க்கில் சிறைக் கைதிகள் தப்பித்துப் போவது குற்றமில்லை . மீண்டும் பிடிபட்டால் சிறையில் அவன் மற்ற கைதிகளுக்கு சேவகம் செய்ய வேண்டும் .
வெர்மான்ட் நாட்டில் பற்களை கட்ட வேண்டும் என்றால், பெண்கள் கணவனிடம் அனுமதி கடிதம் பெற்று டாக்டர்களிடம் கொடுத்தால் மட்டுமே பற்களை மாற்ற முடியும் .
தாய்லாந்தில் ஆண் , பெண் இரு பாலரும் உள்ளாடை அணியாமல் ஆடை அணியக்கூடாது . உள்ளாடை இல்லாமல் வெளியே யாராவது உலாவினால் அவர்களுக்கு தண்டனை உண்டு . இப்படி பல விநோத சட்டங்கள் உலகமெங்கும் இருக்கின்றன .
--- தினத்தந்தி , ( மும்பை பதிப்பு ) . 08 -02 -2009 .

Thursday, May 28, 2009

ஊனம் ஒரு தடையில்லை .

சராசரி மனிதன் ' கடவுளே , எனக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள் ' என்று பிரார்த்தனை செய்வான் .
தன்னம்பிக்கையுள்ள மனிதனோ , ' கடவுளே , எந்தப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியை எனக்குக் கொடு ' என்று பிரார்த்தனை செய்வான் . நீங்கள் தன்னம்பிக்கையுள்ள மனிதனாக இருங்கள் .
' மூச்சு விடும் ' வாட்ச் !
மிக வேகமாகப் பாதிக்கப்பட்டுவரும் உலக சுற்றுச்சூழல் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி . ஜேம்ஸ் கெர்ஷா, சாட் கார்ன் என்ற இருவர் உருவாக்கியிருக்கும் ' ஈகோ 2 ' என்ற கைக்கடிகாரம் கார்பன் - டை - ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடுகிறது . இயக்க ஆற்றலில் இயங்கும் இந்தக் கைகடிகாரம் , குறைந்தபட்சம் இதை அணிந்திருக்கும் நபர் வெளியிடும் கார்பன் - டை - ஆக்ஸைடையாவது உள்ளிழுத்துக் கொண்டு உலகத்துக்கு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்கும் . இந்தக் கைகடிகாரத்தை அணிவதன் மூலம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது பங்கை கஷ்டமின்றி அளிக்க முடியும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள் . அதிகமானோர் இதை அணியும்போது பெருமளவில் நல்ல தாக்கம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் .
--- தினத்தந்தி , குடும்பமலர் .( மும்பை பதிப்பு ), 08 - 02 - 2009 .

Wednesday, May 27, 2009

எஸ் . எம் .எஸ் .

---மில்டனுக்குக் கண்பார்வை கிடையாது . ஆனால் , அவர் எழுதிய ' பாரடைஸ் லாஸ்ட் ' டைப் படிக்காத கண்களே கிடையாது .
--- டிக் ஷனரியை தயாரித்த ஜான்சன் பள்ளிக்கூடத்தில் மந்தமான மாணவனாக இருந்தவர் .
--- எடிசனுக்குக் காது சரியாக கேட்காது . ஆனால் , அவர் கண்டுபிடித்ததில் ஒன்றுதான் தொலைபேசி .
--- 2 லட்சம் கோடி டன் பனிக்கட்டிகள் அண்டார்டிக்கா , அலாஸ்கா , கிரீன்லாந்து ஆகிய கடல் பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் உருகி விட்டன .
--- 1, 30, 000 லட்டுகள் ஒவ்வொரு நாளும் திருப்பதியில் தயாரிக்கப்படுகின்றன .
--- 174 உயிர் காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .
--- 50 லட்சம் பேர் , உலகில் ஆண்டுதோறும் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர் .
--- 33 லட்சம் கி. மீ . -- இந்தியாவில் உள்ள சாலைகளின் தூரம் .
--- 22 தொல்பொருள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் உள்ளன .
--- 4,80, 000 ஏக்கர் கோயில் நிலங்கள் , தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது .
--- 591 கடலோரக் கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன.
--- 2,500 மொழிகள் , உலகில் அழியும் அபாயத்தில் இருப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது .
--- கடிகாரத்திலுள்ள பாலன்ஸ் வீல் ஒருநாளில் 4,32, 000 தடவை முன்னும் பின்னும் நகர்கிறது .
--- 1900- ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இத்தாலியின் வெனிஸ் நகரம் 25 சென்டி மீட்டர் வரை புதைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் .
--- கண்களைச் சிமிட்டாமல் தவளையால் தன் இரையை விழுங்கவே முடியாது . ஏனெனில் , தொண்டையின் திறவு கோல் அதன் கண்ணில் உள்ளதாம் .
--- ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்பவர்தான் 1888-ல் காமிராவைக் கண்டுபிடித்து விற்பனை செய்தபோது , அவர் செய்த விளம்பரம் மக்களைக் கவர்ந்தது . அந்த விளம்பர வாசகம் : YOU PRESS THE BUTTON , WE DO THE REST.
--- 1,390 கோடி செலவில் , உலகம் வெப்பமாவதைப் பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது !
--- குழந்தைகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்படுவதற்கு child sexual abuse -- என்று பெயர் .
--- ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் அதிகாரிகள் , இந்தியாவில் முதன்முறையாகப் பார்வையற்றவர்களும் வாக்களிக்க வசதியாக பிரெய்லி முறையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை அமைத்துள்ளனர் .
--- குதிரைகள் நின்றுகொண்டுதான் தூங்கும் .
--- எந்த ஒரு உடற்பயிற்சியையும் நாம் நிறுத்திய 48 மணி நேரத்துக்குள் இயற்கையான நம் உடல் வடிவம் , மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கி விடும் .

Tuesday, May 26, 2009

தமாஷ் !

" சார் ! இந்த ஊதுபத்தியை வாங்கிக்குங்க... வாசனை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் ! "
" ஸாரிப்பா ... நான் இளங்கோவன் கோஷ்டி ! "
" எங்க வீட்டுப் பூட்டை உடைச்சு ஒரு லட்சம் ரூபாயைத் திருடிட்டுப் போய்ட்டாங்க இன்ஸ்பெக்டர் ! "
" ஆச்சர்யமா இருக்கு . பூட்டுக்குள்ளயா ஒரு லட்ச ரூபா வெச்சிரும்தீங்க ! "
" ரேஷனுக்கும் ஃபேஷனுக்கும் என்னடா ஒற்றுமை ? "
" ரேஷன்ல எடை குறையும் , ஃபேஷன்ல உடை குறையும் " .
" என்னது ! இதுதான் தலைவரோட செல் நம்பரா... பத்து டிஜிட் வரலியே ? "
" அட, நீ வேற... இது அவரோட பாளையங்கோட்டை செல் நம்பர் ! ".
" காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு எங்கப்பா வசதி செஞ்சு வெச்சுட்டுப் போயிருக்கார் ! "
" நிறைய சொத்து சேர்த்து வெச்சுட்டுப் போயிருக்கிறாரா ? "
" அதில்லை... செம ஸ்டிராங்கா ஒரு டைனிங் டேபிள் வாங்கி வெச்சிட்டாரு ! "
" டாக்டர் இருக்காருங்களா ?"
" ரவுண்ட்ஸ்ல இருக்கார் ! "
" அப்படியா ! தெளிஞ்சதும் வர்றேன் ! "
" உடம்புக்கு என்ன செய்யுது ?"
" காஸ் டிரபிள் டாக்ட ... ரெண்டு நாளா சாப்பாடே இல்லே ..."
" அடடா ! அடிஷனல் சிலிண்டர் ஒண்ணு புக் பண்ணி வைச்சுக்க கூடாதா !"
" என்னோட முதல் மனைவி என்னைச் ' சுவாமி 'னும் , இரண்டாவது மனைவி ' நாதா' ன்னும் தான் கூப்பிடுவாங்க !"
" பரவாயில்லையே ! சரித்திரக் கதை படிக்கிற மாதிரி இருக்கே ! அப்ப ... உங்க பெயர்தான் என்ன ? "
" சுவாமிநாதன் !"
" உங்க வீட்டுக்கு நாளை வரலாம்னு இருக்கேன் . எப்படி வரணும் ?"
" ஒரு டஜன் ஆப்பிள் வாங்கிட்டு வரணும் !"
பஸ்ஸில் :
இவள் :" பையா ...இது உன் பையா ? "
அவன் : " ஆமாம் பாட்டி . நீ வை பாட்டி !"
" என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு ...!'
" முடியவே முடியாது .."
": ஏன்...? "
" என்னை மன்னிச்சுட்டேன்ங்கறது ரெண்டு வார்த்தை . ஒரு வார்த்தை இல்லை !"
" ஏய் மிஸ்டர் ! பின் ஸீட்லேர்ந்து முன்னால இருக்கிற என் காலை ஏன் நெருடறீங்க ?"
" இங்கமிங் கால் மேடம் !"
" அந்தக் காலை இப்ப நான் கட் பண்றேன் !"

Monday, May 25, 2009

காரணம் .நிகழ்வு

சீனாவின் காரணம் .
மூன்றே வருடங்களில் சாலைப் போக்குவரத்து முழுவதையும் மின்சார - ஹைப்ரிட் மயமாக்க ( மின்சாரம் மற்றும் எரிவாயு இரண்டிலும் ஒரு சேர இயங்கும் வாகனங்கள் ) திட்டமிட்டுள்ளது சீனா .
சுற்றுச்சூழல் சீர்கேடுதான் இம் முடிவுக்குக் காரணம் என்று சீனா கூறினாலும் , அந்நாட்டுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வர வேண்டிய பெட்ரோலியப் பொருட்கள் அமெரிக்கக் கடல் பிராந்தியத்தைத் தாண்டி வரும் ரிஸ்க்கை அது விரும்பாததே உண்மையான காரணமாக இருக்கலாம் !
--- ஆனந்தவிகடன் . 15 - 04 - 2009 .
நெகிழ்ந்த நிகழ்வு ?
ஒருநாள் மாணவன் ஒருத்தன் வகுப்பறைக்குள்ள வேகமா ஓடிவந்து தான் ஒரு இரட்டை வால் பூனையைப் பார்த்ததா கூறினான் . அவன் சொன்னதை யாரும் நம்பல .அதைக் கேட்ட ஆசிரியர் அவன் பொய் சொல்லி குறும்பு செய்வதா நினைச்சு அவனை பிரம்பால் நாலு போடு போட்டாரு . அன்னையிலிருந்து அவனை எல்லோரும் பொய்யன்னு அழைத்துக் கிண்டல் செஞ்சாங்க . நண்பர்களால் ஒதுக்கப்பட்டான் . ஆசிரியர்களால் வெறுக்கப்பட்டான் . இதனால அவன் படிப்புல ஆர்வம் இழந்தான் . அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு . ஒருநாள் அவன் காணாமப்போயிட்டான் .
எல்லாரும் அவனைத் தேடினப்ப அவன் ஒரு மரத்துல தூக்குப் போட்டுத் தொங்கறதைப் பார்த்தாங்க . அவனோட இறுதிச் சடங்குக்கு பள்ளி ஆசிரியர்களும் , மாணவர்களும் போனாங்க . அப்ப அங்க ஒரு பூனையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாங்க . அந்தப் பூனைக்கு இரண்டு வால்கள் இருந்திச்சு .
இது ஒரு உண்மை நிகழ்ச்சி . இது அமெரிக்காவுல முசோரி நகர்ல , 1970 -ல நடந்ததாம் .
--- பாக்யராஜ் , பாக்யா இதழ் , ஏப்ரல் 24 -- 30 ; 2009 .

Sunday, May 24, 2009

ஒரு மனிதன் .

ஒரு மனிதன் தன்னைத்தானே எப்படி மதிக்கிறான் ( உள்ளுறவு ), பிறருடன் எப்படிப் பழகுகிறான் ( உலக உறவு ) என்பதை வைத்துத்தான் அவனை ஊரும் உலகமும் எடை போடுகிறது !
அமெரிக்காவில் நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தீர்களானால் , இந்தியா போல யாரும் அங்கு பாட சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு உங்கள் அறிவை மீண்டும் சோதிப்பதில்லை . நிறுவனதிலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காணச்செய்கிறார்கள் . அதன் மூலம் , பிறருடன் அவரால் எளிதாகப் பழக முடியுமா , அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப்போக முடியுமா என்று பார்க்கிறார்கள் .
' என்னைப் பாராட்டும் ஒருவனை , உலகின் இரண்டாவது பெரிய மனிதனாக நான் நினைக்கிறேன் !' என்றொரு வாசகம் உண்டு . இனிமையாகப் பழகும் ஒருவனிடம் எல்லோரும் இனிமையாகப் பழகத் துவங்குகிறார்கள் . ஹாஸ்யமாகப் பேசும் ஒருவனுடன் இருப்பதை எல்லோரும் விரும்பி வரவேற்கிறார்கள் . பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன் வருகிறது .
அறிவு , திறமை , கற்பனை , துணிச்சல் , முடிவெடுக்கும் திறன் , வியூகம் என்ற இவற்றுடன் வாழ்வின் வெற்றிக்குத் தேவையான மிக முக்கிய குணம் ' பழகும் தன்மை 'தான் .
அதிகாரத்தின் முன்னிலையிலோ , செல்வாக்கின் முன்னிலையிலோ , பணத்தின் பின்புலத்திலோ , ஒரு தலைவனின் செல்வாக்கு நிழலிலோ நீங்கள் ஒரு பதவியைப் பெறக்கூடும் . ஆனால் , பிறருடன் உங்களால் அனுசரித்துப்போக முடியவில்லை என்றால் , உங்கள் பதவி நிலைக்காது . அரசியல் உலகில் இத்தகைய ஆர்ப்பாட்டக்காரர்களின் பதவி ஆட்டம் காண்பதையும் , பிறகு அவர்கள் பிறர் காலில் விழுவதையும் அன்றாடக் காட்சியாகக் காண்கிறோமே !
--- டாக்டர் எம் . எஸ் . உதயமூர்த்தி

Saturday, May 23, 2009

பலன்கள் .சிந்தனை .

விளக்கேற்றுதல் பலன்கள் .
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் .
* ஒரு முகம் ஏற்றுவது ---- மத்திய பலன் .
* இரு முகம் ஏற்றுவது ---- குடும்ப ஒற்றுமை .
* மூன்று முகம் ஏற்றுவது -- புத்திர சுகம் .
* நான்கு முகம் ஏற்றுவது -- பசு , பூமி லாபம் .
* ஐந்து முகம் ஏற்றுவது ---- ஐஸ்வர்யம் .
மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் அல்லது வெள்ளி , பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது .
--- தினத்தந்தி , 16 - 09 - 2008 .
வாரியாரின் சிந்தனை .
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார் . அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , " நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? " என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , " ஊர் கோடியில் இருக்குது ! " என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள் .
உடனே , " ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர் .அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , " இதோ இங்கே இருக்குது... " என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு .
அசைவம் கூடாது என்ற கருத்தை முன்வைத்து அவர் இப்படி பேசியது , சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது .
--- தினத்தந்தி , 03 - 06 - 2008 .

Friday, May 22, 2009

பணிவிடை.

16 வகை பணிவிடை.
கடவுளை விருந்தினர் போலப் பாவித்து செய்யும் பதினாறு வகையான பணிவிடைகள் :
* ஆசனம் --------- அமர்வதற்கு தவிசு அளித்தல் .
* பாத்யம் --------- கால் அலம்ப நீர் தருதல் .
* அர்க்யம் -------- கை கழுவ நீர் கொடுத்தல் .
* ஆசமனீயம் --- பருகுவதற்கு நீர் வழங்குதல் .
* அபிஷேகம் ---- திருமுழுக்கு நீர் ஆட்டுதல் .
* வஸ்திரம் ------- அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல் .
* கந்தம் ------------- நறுமணப் பொருட்கள் தருதல் .
* புஷ்பம் ----------- மலர் மாலைகள் சூட்டுதல் .
*தூபம் --------------- அகில் சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல் .
*தீபம் ----------------- ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல் .
* நைவேத்யம் --- உணவுப் பொருட்கள் படைத்தல் .
* கற்பூரம் ----------- கற்பூரம் ஏற்றிக் காட்டிப் பணிதல் .
* சாமரம் ------------ கவரி வீசுதல் .
* ஆலவட்டம் ---- விசிறி கொண்டு வீசுதல் .
* சத்ரம் --------------- குடை கவித்தல் .
* தர்ப்பணம் ------- கண்ணாடி காட்டுதல் .
--- தினத்தந்தி , 16 - 09 - 2008 .

Thursday, May 21, 2009

தேச ஒற்றுமை .

ஆட்டோ ஸ்டாண்டில் தேச ஒற்றுமை .
மத வேற்றுமைகளும் , ஜாதி வேறுபாடுகளும் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதை தவறு என்று சுட்டிக்காட்டி மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அம்பாசமுத்திரம் பகுதி ஆட்டோ டிரைவர்கள், முயற்சி சற்று வித்தியாசமானது .
இந்தியாவில் இருக்கும் இந்து மதம் , ஜைன மதம் , புத்த மதம் , சீக்கிய மதம் , இஸ்லாமிய மதம் , கிறிஸ்துவ மதம் ஆகியவற்றை எழுதி அவற்றில் இருக்கும் எழுத்துக்கள் மூலமாக இந்தியன் என்று பளிச்சிட வைத்திருக்கிறார்கள் ... இப்படி :
H I N D U I S M
J A I N I S M
B U D D H I S M
S I K H I S M
I S L A M
C H R I S T I A N I T Y . ( PROUD TO BE INDIAN . ) --- தினமலர் 02 -03 -2009 .
டிப்ஸ் .
உங்களுக்குத் தெரியுமா ? டிப்ஸ் .
பெரிய ஓட்டல்களில் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது சர்வ சாதாரணம் . இந்த டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் ஆரம்பித்தது இங்கிலாந்தில் தான் . அங்கு சத்திரங்களில் ஏராளமானவர்கள் வந்து தங்குவார்கள் . அப்படித் தங்குபவர்கள் சத்திரங்களில் உள்ள பணியாட்கள் தங்களைச் சீக்கிரம் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு , அவர்களுக்குத் தனியாகப் பணம் கொடுப்பார்கள் . ' To Insure Promptitude ' என்பதில் உள்ள மூன்றெழுத்துக்கள்தான் Tip ஆயிற்று .
' குழந்தை வேண்டுமென்று
மக்கள் அரசைச் சுற்றியது
அந்தக் காலம் .
குழந்தை வேண்டாமென்று
அரசு மக்களைச்
சுற்றுவது இந்தக் காலம் ' என்பது புகழ்பெற்ற கு. க. கவிதை

Wednesday, May 20, 2009

சவுக்கு மரமும் , வாழை மரமும் !

" எனக்குப் பொன்னாடை போர்த்தி , ' ஹாஸ்யச் சக்ரவர்த்தி ' என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறீர்கள் . நான் ஒரு சாதாரண சினிமா நடிகன் .என்னை ஒட்டி இவ்வளவு பெரிய விழா எடுத்திருப்பது , ஒரு நாயின் முன் முழுத் தேங்காயைப் போட்டது போலத்தான் . அந்த நாய் தேங்காயை உருட்டிக் கொண்டிருக்குமே தவிர , வேறொன்றும் செய்யாது ; செய்யவும் முடியாது
சவுக்கு மரங்களைச் சாரம் கட்டித்தான் புதுக் கட்டட வேலையைச் செய்வோம் .வேலை முடிந்ததும் சவுக்கு மரங்களைத் தூரப் போட்டுவிட்டு , கட்டட வேலைகளில் எவ்விதப் பங்கும் பெறாத வாழை மரங்களைக் கொண்டு வந்து கட்டி , பூஜை செய்வோம் .அது போல , இந்த ஆலய திருப்பணிக்காக இரவு பகலாகப் பாடுபட்டு உழைப்பவர்களுக்கு நன்றி கூற மறந்து , ஏதேதோ பேசிவிட்டேன் ! அவர்களுக்கு என் நன்றி ! "
--- திருச்சி தில்லை நகரில் அருளானந்தர் கோயிலில் நடந்த விழாவில் திரைப்பட நடிகர் , நாகேஷ் ஆற்றிய உரை .
கவிதை !
அன்பை எங்கெங்கோ
தேடினேன்
அகத்தில் இருப்பதை
அறியாமல் .
உண்மையை எங்கெங்கோ
தேடினேன்
உள்ளத்துள் இருப்பதை
அறியாமல் .
அமைதியை எங்கெங்கோ
தேடினேன்
அடிமனதில் இருப்பதை
அறியாமல் .
புத்துணர்வை எங்கெங்கோ
தேடினேன்
புதைந்துகிடப்பதை அறியாமல் .
உற்சாகத்தை எங்கெங்கோ
தேடினேன்
உணர்வில் இருப்பதை
அறியாமல் .
நிம்மதியை எங்கெங்கோ
தேடினேன்
நினைவில் இருப்பதை
அறியாமல் .
மகிழ்ச்சியை எங்கெங்கோ
தேடினேன்
மனதில் இருப்பதை அறியாமல் .
என்னை எங்கெங்கோ
தேடினேன்
எனக்குள் இருப்பதை
அறியாமல் !
--- வாஞ்சி கோவிந்தராஜன் , மத்திய சிறைவாசி , திருச்சி .--- ஆனந்தவிகடன் ,25 -02 -2009 .

Tuesday, May 19, 2009

சிதம்பர ரகசியம் ?!

பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .
நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!
" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"
" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .
இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும் !" --- ஆனந்தவிகடன் . 25 -02 -2009 .

நீதித்தீர்ப்பு !

நீதித்தீர்ப்பு நெருங்கிவிட்டது !
பிரளயத்தின் சமிக்ஞை
பிரகடனம் செய்யப்பெற்றுவிட்டது !
நல்லவர்கள் சத்ய யுகத்திற்குத்
தயார் ஆகுங்கள் !
மற்றவர்கள் செத்தொழியத்
தயார் ஆகுங்கள் !
சூரியயோகி எச்சரிக்கை !
ஏறத்தாழ 3600 ஆண்டுகளுக்கு முன் பூமியில் பிரளயம் நிகழ்ந்தது . நிலமாய் இருந்த குமரிக்கோடு இந்துமகா சமுத்திரம் ஆனது . சமுத்திரமாய் இருந்தது வடக்கு இமயமலை ஆனது .
மீண்டும் அதே பிரளயத்தை நிகழ்த்த வேண்டி ' Nibiru ' என்ற கறுப்புச் சூரியன் பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது . இந்தச் செய்தி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ' NASA ' வுக்கு 1983 லேயே தெரியும் .
மக்களைப் பயமுறுத்த விரும்பாமல் வேறு கிரகங்களில் குடியேறித் தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிய வண்ணம் உள்ளனர் .
ஆனால் , அந்த நாள் நெருங்கி விட்டது .
தன்னைச் சுற்றி 7 கிரகங்களுடன் அந்தக் கறுப்புச் சூரியன் நம் சூரியக் குடும்ப எல்லைக்குள் 3600 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நுழைய உள்ளது .
2012 டிசம்பர் 21 ஆம் நாள் ' Nibiru ' என்ற அந்த தூமகேது , சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நுழைந்து குழப்பத்தை உண்டாக்கும் .
2009 மே 15 ஆம் தேதி முதல் சிவப்பு வண்ணத்தில் அந்தச் சூரியன் பூமியின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தெரியத் தொடங்கிவிடும் . 2011 மே மாதம் ' Nibiru ' நம் நிலவைப்போன்ற அளவுக்கு இரண்டாவது சூரியனாகத் தெரியத் தொடங்கிவிடும் .
பூமி அதிர்ச்சி , எரிமலை வெடிப்பு , கடல் சீற்றம் ( சுனாமி ) போன்றவை அப்போதே நிகழத் தொடங்கிவிடும் . 2013 பிப்ரவரி 14 ஆம் தேதி பூமியின் காந்தப்புலமே மாறிவிடும் . அப்போது இமயமலை வெடித்துக் கடல் ஆகலாம் . கண்டங்கள் அனைத்தும் உடைந்து சிதறிப்போகலாம் .
மூன்று நாட்களுக்கு பூமி சுழல் முடியாதவண்ணம் தடுமாறி நிற்கும் . பூமியில் கடும் இருள் சூழும் . ' Big Brother ' என்னும் பெரிய சுனாமி உலகைக் கதிகலங்க வைக்கும் . 700 கோடி மக்களில் ஏறத்தாழ 630 கோடி மக்கள் முற்றிலும் அழிய வாய்ப்பு நேரலாம் .
இந்தச் செய்தி நாஷ்டர்தாம் என்ற தீர்க்கதரிசியின் குறிப்பிலும் உள்ளது .
எபிரேய மொழியில் உள்ள பைபிளின் ஆதிக் குறிப்பில் உள்ளது . ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார் . கால நாட்காட்டியை வரைந்த மயன் 2012 ஆம் ஆண்டுடன் நாட்காட்டியை நிறுத்தியுள்ளார் .
பகவான் புத்தர் தம் தீர்க்கதரிசனத்தில் இதைக் குறித்துள்ளார் . அருட்பிரகாச வள்ளல் பிரான் , ' வார்த்த கடல் உலகறிய மரணம் உண்டே அந்தோ! ...' என்ற வரிகளின் மூலம் எச்சரித்துள்ளார் . கால நூலில் காகபுசண்டரின் அவதாரமான தலையாட்டிச் சித்தர் இதைத் தெரிவித்துள்ளார் . பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் இதைத் தம் கிரந்தத்தில் தெரிவித்துள்ளார்கள் .
இந்த விபரீதங்களை எல்லாம் உணராத அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் காகிதக் கரன்சிகளைச் சேர்ப்பதில் ஆர்வமாய் உள்ளனர் . மதவாதிகள் குண்டு வைத்து மதங்களைக் காப்பாற்றுவதில் தீவிரமாய் உள்ளனர் . இந்தக் கொடுமையாளர்கள் அனைவரும் அழியப்போகும் ஜந்துக்கள் . இவர்களைப் பற்றிய கவலையை விடுங்கள் .
வாழவேண்டிய மகாத்மாக்களுக்கு மட்டும் நாம் அழைப்பு விடுக்கிறோம் . இதுகடைசி அழைப்பு . கடைத்தேற விரும்புவோர் மட்டும் கவனித்து வந்தால் போதும் . முட்டாள்களும் , மூடர்களும் , பேராசைக்காரர்களும் , துரோகிகளும் வேண்டாம் .
நம் குடும்பத்தின் தலைவனாகிய சூரியன் மட்டுமே நம்மைக் காப்பற்ற முடியும் . எனவே , அந்த ஆதி சிவத்திடம் சரணடையுங்கள் .
சூரிய பகவானின் உதவியால் நாம் உங்களைக் காப்பாற்றுவோம் . சுத்த தேகத்துடன் , கள்ளமற்ற குழந்தை உள்ளத்துடன் உண்மை அன்புடன் ஓடி வாருங்கள் .
இந்தப் பிரளயத்தில் நாம் தான் உங்களைக் காப்பாற்றப் போகும் ' NOVA '.
--- கவனகர் முழக்கம் , வெளியீடு - 87 . ஏப்ரல் 2009 .

Monday, May 18, 2009

கண் உண்டு !

காதலுக்குக் கண் உண்டு !
உணர்ச்சி மட்டுமல்ல...அந்த உணர்ச்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் சேர்ந்ததுதான் காதல் !
ஒரு தாய் தனது குழந்தையைக் கொஞ்சும்போது அந்தக் குழந்தை அதனை அங்கீகரிப்பது போல நடந்துகொள்ள வேண்டும் . இல்லை எனில் , தாய்க்கு நாளடைவில் குழந்தையைக் கொஞ்ச வேண்டும் என்கிற ஆசையே இல்லாமல் போய்விடும் . இது காதலுக்கும் பொருந்தும் .
பொதுவாக , காதலை ' கம்பேனியனேட் லவ் ', ' ரொமாண்டிக் லவ் ' என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் . கம்பேனியனேட் லவ் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டும் நிகழ்வது அல்ல . பெற்றோர் , குழந்தை , அண்ணன் , தங்கை , நண்பர்கள் இடையேயான பாசமும் ஈர்ப்பும் இவ்வகை . இதில் செக்ஸ் இருக்காது . ரொமாண்டிக் லவ் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே மட்டும் நிகழ்வது . இதில் செக்ஸும் தவிர்க்க முடியாத அங்கம் .
' மூளையில் எண்டார்பின் என்கிற ரசாயனம் அதிகம் சுரந்தால் கம்பேனியனேட் லவ் உண்டாகும் . டொபாமைன் , நார் எபினெர்ஃபின் , செரோட்டினின் போன்ற ரசாயனங்கள் அதிகம் சுரந்தால் ரொமாண்டிக் லவ் உண்டாகும் .
--- டாக்டர் டி . நாராயணரெட்டி . ஆனந்தவிகடன் . 11 - 02 - 2009 .

Sunday, May 17, 2009

அப்படியா !

--- அர்ஜுனனுகுரிய பல பெயர்களில் " பல்குநன் " என்பதும் ஒரு பெயர் . பங்குனி உததிர நாளன்று பிறந்ததால்
அவனுக்கு " பல்குநன் " என்று பெயர் அமைந்தது .
--- தமிழ் நாட்டிலேயே ஹரிஜனங்களுக்காகத் திறந்து விடப்பட்ட முதல் ஆலயம் மதுரை ஆலயம்தான் .
--- சிற்ப சாஸ்திரங்களின்படி , சிவன் கோயிலின் கிழக்கு , மேற்கு கோபுரங்கள்தான் மிகவும் முக்கியம் .
--- பூமி வெப்பமாவதைத் தடுக்க உலகம் முழுவதும் 700 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை .
---ஷு லேஸின் பிளாஸ்டிக்கால் ஆன கூர்முனைக்குப் பெயர் ' ஆக்லெட்ஸ் '
--- நம் உடம்பில் காதுகளும் மூக்கும் சாகும்வரை வளர்ந்துகொண்டே இருக்குமாம் .
--- எல்லா நாடுகளிலும் ' இண்டியன் இங்க் ' என்று அழைக்கப்படும் இந்த இங்க் உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான் .
--- மலர்களிலிருந்து தேனை வண்டுகள் சேகரிப்பதில்லை . மலர்கள் சுரக்கும் திரவம் தேனீக்களின் உடலுக்குள் சென்ற பிறகுதான் தேனாக மாறுகிறது .
--- மங்கோலிய நாட்டில் ஒட்டகப் பாலில் எடுக்கப்பட்ட மோரை தேசிய உணவாக வைத்துள்ளார்கள் .
--- காபி தயாரிக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரையை லேசாக வறுத்துப் போட்டு ஆற்றினால் நல்ல நுரை கிடைக்கும் .
--- உழைப்பு மூன்று தீமைகளை களைகிறது . பொழுதுபோக்காமை , கெட்ட பழக்கம் , வறுமை .
--- யானையின் துதிக்கையில் நாற்பதினாயிரம் நரம்புகள் உள்ளன . நமக்கு 527 நரம்புகள்தான் .
--- ஒரு நிமிடம் பாராளுமன்றம் இயங்குவதற்கு அரசு செலவழிக்கும் தொகை 26 ஆயிரம் ரூபாய் .
--- வியர்வை வெளியேற முடியாமல் உடலின் துவாரங்கள் அடைபட்டிருந்தால்தான் வேர்க்குரு . அந்த இடங்களில் பாக்டீரியாக்கள் உருவானால் அதுதான் வேனல்கட்டி .
--- அற்புதமான கண்டுபிடிப்பு அணு . ஆபத்தான கண்டுபிடிப்பு அணுகுண்டு .
--- முப்பத்தைந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற ஒரே மனிதர் வால்ட் டிஸ்னிதான் .

Friday, May 15, 2009

டார்வின்

சார்லஸ் டார்வின் .200 !
பிரபல விஞ்ஞானி டார்வினின் 200 வது பிறந்த நாள் பிப்ரவரி 12ம் நாள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் கொண்டாடப்படுகிறது .
இங்கிலாந்தில் உள்ள சிரீஸ்புரி என்ற இடத்தில் 1809ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சார்லஸ் டார்வின் பிறந்தார் .இவரது தந்தை ராபர்டர் டார்வின் ஒரு டாக்டர் . பைனான்சிரியராகவும் இருந்து வந்தார் .பள்ளியில் படிக்கும் போது கோடைகாலங்களில் தந்தையின் சிறிய மருத்துவமனையில் பணியாற்றினார் .
தன் மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார் . ஆனால் இயற்கை , கடல் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவே டார்வின் விரும்பினார் .
அட்லாண்டிக் கடற்பகுதிகள் , தெற்கு அமெரிக்கா , ஆஸ்திரேலியா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார் .
2 ஆண்டுகள் திட்டமிட்டபயணம் 5 ஆண்டுகள் வரை நீண்டது .கடல் ஓரத்தில் இருந்த நிலப்பகுதிகளில் 3 ஆண்டுகள் 3 மாதங்களும் , கடல் பகுதிகளில் 18 மாதங்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் . அப்போது பெரிய பாலூட்டி ஒன்றின் மண்ணில் புதைந்திருந்த உடல்பாகங்களை கண்டுபிடித்து , அது குறித்து ஆராய்ச்சி செய்தார் . இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை 1859ம் ஆண்டு வெளியிட்டார் . இந்த புத்தகம் உலகின் உயிரின தோற்றம் குறித்த மிக முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது . மனித இனம் குரங்கு இனத்துடன் தொடர்புடையது என்று இவர் கூறிய கருத்துக்கள் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது . எனினும் இப்போது அந்த கருத்துக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டார்வின் தனது 73வது வயதில் 1882ம் ஆண்டு காலமானார் .--- தினமலர் . 12 -02 -2009 ..

Thursday, May 14, 2009

காந்திஜி பொருட்கள் ஏலம் .

காந்திஜி பொருட்கள் ஏலம் .
தடுக்க கட்சிகள் கோரிக்கை
நம்நாட்டின் சுதந்திரத்திற்குக்காக பாடுபட்ட காந்திஜி அணிந்திருந்த கண்ணாடி , இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருக்கும் வாட்ஸ் ஆகியவை அவரின் நிரந்தர அடையாளங்களாகும் . ராணுவ அதிகாரி கர்னல் எஸ். ஏ . ஸ்ரீ திவான் நவாப் என்பவருக்கு 1930ம் ஆண்டு தனது கண்னாடியை கொடுத்து விட்டார் .
அதே போல் , அவர் அணிந்திருந்த செருப்புகளை லண்டனில் உள்ள இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஒருவருக்கு 1931ம் ஆண்டில் கொடுத்துவிட்டார் . தன்னுடைய ' பாக்கெட் வாட்ச் ' சை பேத்தி அபா காந்திஜியிடம் கொடுத்தார் .
இந்நிலையில் இந்த பொருட்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பிளேட் , கிண்ணம் போன்ற அனைத்தும் லண்டனில் 04 ,05 --03 - 2009ம் தேதிகளில் ஏலத்துக்கு வருகின்றன என அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ' ஆண்டிகோரம் ஆக்ஸனீர்ஸ் ' ஏலமையம் அறிவிதுள்ளது . .
இந்த பொருட்கள் 30 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது இந்திய பணத்தில் 21 லட்ச ரூபாய் ஆகும் .
இதற்கிடையே இந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு நம்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது . காந்திஜி பயன்படுத்திய பொருட்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிவித்தியாசம் பாராமல் எழுந்துள்ளது .ஏலத்தில் அரசு கலந்துகொண்டு அதை வாங்கி , நம் நாட்டுக்கு கொண்டு வந்து மியூசியதில் வைக்க வேண்டும் என்றும் , கட்சி தலைவர்கள் கோரி உள்ளனர்
இந்திய பாரம்பரியம் மிக்க அந்த பொருட்கள் நம் தாய் மண்ணில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் , நம் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களான இந்த பொருட்களை நாம் திரும்ப பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் , நம் அன்புக்குரிய காந்திஜி பயன்படுத்திய மதிப்பு வாய்ந்த பொருட்களை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும். கோரி உள்ளனர் .
--- தினமலர் .15 -02 - 2009 . மற்றும் 01 -03 -2009 .
இந்தியாவுக்கு ' சூப்பர் ' நிபந்தனை .
காந்திஜி பொருட்களை திரும்ப பெற இந்தியாவுக்கு ' சூப்பர் ' நிபந்தனை .
காந்திஜியின் அபூர்வ பொருட்கள் ஏலம் போவது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று காந்திஜி பேரனும் , சமூக ஆர்வலருமான துஷார் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார் . ஏலத்தில் பங்குபெற்று காந்திஜி பொருட்களை மீட்போம் என்று பிரபல ஓட்டல் உரிமையாளர் சந்த் சிங் சத்வால் உட்பட சில இந்திய கோடீஸ்வரர்கள் முன்வந்தனர் .
இந்நிலையில் , ஒரேஒரு நிபந்தனையுடன் காந்திஜி பொருட்களை இந்தியாவிடம் தரத் தயார் என்று ஓடிஸ் திடீரென்று அறிவித்துள்ளார் .இந்திய உள்நாட்டு உற்பத்தி தொகையில் 5 சதவீதத்தை கொண்டு ஏழைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தால் 5 பொருட்களையும் தானமாகவே தருவேன் என்று ஓடிஸ் நேற்று தெரிவித்தார் . இதற்கிடையே , காந்திஜி ரத்த பரிசோதனை அறிக்கையும் விடுதலை போராட்டத்தின் போது மாணவர்களுக்கு அவர் அனுப்பிய தந்தியும் தன்னிடம் இருப்பதாக ஓடிஸ் தெரிவித்தார் .--- தினமலர் . 04 - 03 - 2009 .
தொழில் அதிபர் விஜய் மல்லையா .
பெங்களூர் , மார்ச் 7 , 2009 .
மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை தொழில் அதிபர் விஜய் மல்லையா ரூ . 9.3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார் . அதை ஏலத்தில் வாங்கிக்கொள்ள 30-க்கும் மேற்பட்ட முக்கிய பணக்காரர்கள் முன்வந்தார்கள் . இந்த ஏலத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் , மகாத்மா காந்தி பயன்படுத்திய இப்பொருட்களை இந்தியாவின் மதுபானத் தொழில் மன்னர் கோடீஸ்வரத் தொழிலதிபர் , விஜய் மல்லையா ஏலத்தில் எடுக்க முடிவு செய்தார் . விஜய் மல்லையாவின் சார்பில் அவரது உதவியாளர் டோனி பேடி , காந்தியின் பொருட்களை 9 .3 கோடிக்கு ஏலம் எடுத்தார். காந்தி பயன்படுத்தியதை அரசிடம் அளிக்கப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார் .
மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக்குக்காக குரல் கொடுத்து வந்தார் . ஆனால் , விஜய் மல்லையாவோ வகை வகையாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறார் . இப்படிப்பட்டவரை , மகாத்மா காந்தியின் பொருட்களை ஏலம் எடுக்கவிட்டது சரிதானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர் .
திப்புசுல்தான் வாள் .
திப்புசுல்தானின் வாளையும் ஏலத்தில் , 2003 -ல் ரூ. 1.5 கோடிக்கு விஜய் மல்லையா எடுத்தார் . வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை ஏலத்தில் எடுப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியானது என்கிறார் விஜய் மல்லையா . இந்தியாவுக்குச் சொந்தமான பொருட்கள் இந்தியாவிற்கே திரும்பக் கிடைக்க வேண்டும் , மகாத்மா காந்தியின் பொருட்களை அரசிடம் ஒப்படைப்பதாக நான் ஏற்கனவே உறுதி அளித்துள்ளேன் என்கிறார் அவர் . எனவே இதற்கு இறக்குமதி வரி எதையும் அரசு விதிக்காது என்று நம்புகிறேன் என்றும் கூறுகிறார் அவர் .
திப்புசுல்தான் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளன . அவற்றை இந்தியாவிற்கு கொண்டு வர நான் பெரிதும் விரும்புகிறேன் . மைசூரிலோ அல்லது பெங்களூரிலோ திப்பு சுல்தான் அருங்காட்சியகம் அமைக்க விரும்புவதாகவும் , அதை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க விரும்புவதாகவும் , தற்போது மரப்பெட்டிகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது தனக்கு வருத்தத்தைத் தருவதாகவும் , கூடிய விரைவில் அவற்றை இங்கே கொண்டு வரவேண்டும் என்பதுதான் தனது விருப்பமாகும் என்றும் அவர் கூறினார் .
--- மாலைமுரசு . 07 -03 -2009 . தினசரி கொடுத்து உதவியவர், எனது மைத்துனர் . G .இரெத்தினசபாபதி . காசாளர் . S.B .I . அரியலூர்

Wednesday, May 13, 2009

குளோனிங் எருமை கன்று !

உலகத்திலேயே முதன் முதலாக குளோனிங் முறையில் நம்.நாட்டில் உருவாக்கப்பட்ட எருமை கன்று பிறந்த ஒருவாரத்துக்குள் இறந்தது .
மிருகங்கள் , மனிதர்களின் உடல் பாகத்தில் இருந்து உயிரணுக்களை எடுத்து அறிவியல் முறையில் இன்னொரு மிருகம் அல்லது மனிதனை உருவாக்குவதற்கு குளோனிங் முறை என்று பெயர் .
இந்த ஆராய்ச்சியில் இப்போது மிருகங்கள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன .மனிதனை உருவாக்குவதற்கு எல்லா நாடுகளும் தடை விதித்துள்ளன .
நம் நாட்டில் குளோனிங் ஆராய்ச்சிகள் நடந்தன . அரியானா மாநிலம் கர்நாலில் உள்ள தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி மையத்தில் கால் நடை பயோ - டெக்னாலஜி பிரிவில் உள்ள சிங்லா , மாணிக் , சாகான் , பால்டா , ஷா , ஜார்ஜ் ஆகிய 6 விஞ்ஞானிகள் குளோனிங் எருமையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர் .
அரியானா உட்பட நம் நாட்டின் பல பகுதிகளில் வளர்க்கப்படும் அதிக பால் தரக்கூடிய முரா வகை எருமை வகையில் இருந்து மரபணுக்கள் எடுக்கப்பட்டு குளோனிங் எருமை உருவாக்கும் பணிகள் தொடங்கின . அவர்களின் ஆராய்ச்சி வெற்றிப்பாதையை நோக்கி நகர்ந்தது .குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பெண் எருமை கன்றுக்குட்டி பிப்ரவரி 6ம் தேதி பிறந்தது .
உலகில் முதன் முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட இந்த கன்றுக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் ? என்பது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டனர் .
ஆனால் , இந்த சாதனையின் வெற்றி பெரும் சோகத்தில் முடிந்தது . நேற்று முன்தினம் இரவு (12 -02 -2009 ) திடீரென குளோனிங் எருமை கன்று இறந்து விட்டது . பிறந்து ஒரு வாரத்துக்குள் இது இறந்தது விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது .--- தினமலர் . 14 -02 -2009 .

Tuesday, May 12, 2009

பாம்புகளின் அரசன் .

பாம்புகளில் பல வகை உண்டு .
நாகங்களின் தலைவனாக ராஜ நாகத்தை குறிப்பிடுவார்கள் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ' பைதான் ' என்ற ஹாலிவுட் படம் மூலம் , பைதான் எனப்படும் ராட்சத மலைப்பாம்புதான் பாம்பு இனங்களில் மிகப் பெரியது என்ற கருத்து நிலவி வந்தது .ஆனால் , கொலம்பியா நாட்டில் சமீபத்தில் ' பாசிலாக ' கண்டுபிடிக்கப்பட்ட ' டைட்டானோபா' என்ற பாம்புதான் மிகப் பெரிய பாம்பு என்று தெரியவந்துள்ளது .
பாம்புகளின் ராஜா , ' பாசில் ' ( உறைபடிமம் ) கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது . முன் வாழ்ந்த பாம்பினம் .
' டைட்டானோபா ' --- மொத்த நீளம் 13 மீட்டர் . 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது .
' பைதான் பாம்பு ' --- 7--9 மீட்டர் நீளம் .
' அனகோண்டா பாம்பு ' --- 6 --8 மீட்டர் நீளம் . .
' ராஜ நாகம் ' --- 4 .5 --5 மீட்டர் நீளம் .
' சாரைப் பாம்பு ' --- 1 .7 மீட்டர் நீளம் .--- தினமலர் . 13 - 02 -2009 .

Monday, May 11, 2009

விபத்து !

விண்வெளி விபத்து !
விண்வெளியில் முதல் விபத்து .
விண்வெளியில் முதல் முறையாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது .
கடந்த செவ்வாய்க்கிழமை பூமியின் வளிமண்டலத்திலிருந்து 790 கிலோ மீட்டர் உயரத்தில் நடந்த அதுதான் உலகின் மிக உயரமான விபத்தாக இருக்கும் ! அமெரிக்காவின் வர்த்தகச் செயற்கைக்கோளான இரிடியமும் , ரஷ்யாகைவிட்ட ராணுவத் தகவல் செயற்கைக் கோளான காஸ்மோஸ் 2251 ம் வினாடிக்கு 11.7 கிலோ மீட்டர் வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன .
இந்த விபத்தால் இரண்டு செயற்கைக் கோள்களும் 600 -க்கும் மேற்பட்ட துகள்களாக உடைந்து சிதறி , கிட்டத்தட்ட 17,500 மைல் வேகத்தில் படுவேகமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன . இந்த உடைந்த பாகங்கள் எந்த நேரமும் , உலகின் எந்தப் பகுதியிலும் விழலாம் என்கிற பயம்தான் அலர்ட் அறிவிப்பிற்கு காரணம் .
விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமாக கருதப்பட்ட செல்போன் முதல் , இன்டர்நெட் வரை இயங்குவதற்காக , ஒவ்வொரு நாடும் தங்கள் தேவைக்காக போட்டி போட்டுக் கொண்டு 12 ஆயிரம் செயற்கைக் கோள்கள் ' விண்வெளி குப்பை' கள் போல் பூமியைச் சுற்றிக்கொண்டுள்ளன .
அமெரிக்க நிறுவனமான இரிடியம் அனுப்பிய செயற்கைக் கோளுடன் ரஷ்யா செயற்கைக் கோள் மோதியதாக அமெரிக்காவின் நாசா அமைப்பு அறிவித்துள்ளது . ரஷ்யாவின் சைபீரியா பகுதி வானில் இரு செயற்கைக் கோள்களும் கடந்த செவ்வாய்க் கிழமை ( 10 - 02 -2009 ) பகல் 11 : 55 மணிக்கு சைபீரியாவுக்கு மேல் சுற்றியபோது , மிகக் கடுமையாக மோதியுள்ளன .
பூமியில் இருந்து 790 கி . மீ ; உயரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது .இரிடியம் நிறுவனம் செல்போன் சேவைக்களுக்காக இந்த செயற்கைக் கோளை கடந்த 1997ம் ஆண்டு அனுப்பியிருந்தது . இதன் எடை 560 கிலோ . 1993ம் ஆண்டு சென்ற ரஷ்ய செயற்கைக் கோளும் தொலைத்தொடர்பு சேவைக்கு பயன்பட்டது . எனினும் சில ஆண்டுகளாக இந்த செயற்கைக் கோள் கட்டுப்பாடின்றி விண்வெளியில் சுற்றியதாக தெரிகிறது . இதன் எடை ஆயிரம் கிலோ .
விண்வெளியில் இரு செயற்கைக் கோள்கள் மோதி விபத்துக்குள்ளாவது இதுதான் முதல்முறை .இந்த விபத்து காரண்மாக வெடித்து சிதறிய இவற்றின் உதிரி பாகங்கள் விண்வெளியில் மேகக் கூட்டம் போன்று சுற்றிவருகின்றன . இதனால் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஜான்சன் விண்வெளி மைய நிபுணர் மார்க் மாட்னி கூறியுள்ளார் .இது போன்ற விபத்து நடக்கும் என்று நீண்ட காலமாகவே தான் எதிர்பார்த்ததாக அவர் தெரிவித்தார் .
ஆனால் , விண்வெளி மையத்துக்கும் அதில் உள்ள 3 வீரர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா அறிவித்துள்ளது விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் 435 கி.மீ ; தூரத்தில் நிலை கொண்டிருப்பதால் ஆபத்து எதுவும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர் . தினமலர் . வெள்ளி , பிப்ரவரி 13 , 2009 .
--- தினமலர் ,வெள்ளி , பிப்ரவரி 13 ,2009 .
---- தினகரன் ,கோவை பதிப்பு , 13 -02 -2009 .
--- ஆனந்தவிகடன் . 04 - 03 - 2009 .

Sunday, May 10, 2009

திருப்பனந்தாள் !

காமத்தால் விளையும் பாவம் !
மனிதருள் பலர் காமத்துக்கு அதிகம் இடம் தருகிறார்கள் .காமுகர்களிடம் நியாயம் என்பது இருக்க வாய்ப்பில்லை . மனைவியாக இருந்தாலும் கூடச் சிலநாட்கள் உறவுகொள்ளத் தகாதவை என்று நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது . ஐந்து , இரண்டு , ஏழு , எட்டு , ஆறாவது மற்றும் ஏகாதசி திதி நாட்கள் , திருவோணம் , ஆதிரை முதலான சில நட்சத்திரங்கள் , மாதப்பிறப்பு நாட்கள் , வியதிபாத நாட்கள் ஆகியவை உறவு கொள்ளக் கூடாத நாட்களாகும் . இந்த நாட்களில் மனைவியுடன் உறவு கொண்டால்கூட பாவம்தான் விளையும் என்பது புராணம் .
மாற்றான் மனைவியை விரும்புதல் , வேசியருடன் தொடர்பு கொள்ளுதல் , பேதைகளைப் புணர்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நரகமே நிச்சயம் .
பெருந்தவ முனிவரின் மனைவியை விழைந்தவன் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா ? அகலிகையை விரும்பிய பழியும் விருத்திராசுரனைக் கொன்றதால் வந்த தோஷமும் நீங்க இந்திரன் திருப்பனந்தாளுக்கு வந்தான் . செஞ்சடையப்பரை வணங்கினான் . அகலிகையைத் தழுவியதால் விளைந்த பாவத்திலிருந்தும் , கொலைப்பழியிலிருந்தும் மீண்டான் என்கிறது திருப்பனந்தாள் புராணம் .
குருபத்தினியை விரும்புவது மாகா பாவம் . அந்தப் பழியிலிருந்து சந்திரன் சாபம் நீக்கம் அடைந்த தலம் திருப்பனந்தாள் . பக்திமலர் , 12 -02 -2009 .

Saturday, May 9, 2009

தத்துவம் .

நவராத்திரியின் தத்துவம் .
மனிதனுக்குத் தேவை மூன்று . அவையாவன : தனம் , கல்வி , வீரம் . அதனால்தான் அபிராமி பட்டர் சொன்னார் :
" தனம் தரும் , கல்வி தரும் , ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் ...." என்று . இந்த மூன்று தேவதைகளையும் வழிபடுவதற்காகத்தான் நவராத்திரி . முதல் மூன்று நாள் துர்க்கையையும் , இடை மூன்று நாள் லட்சுமியையும் , கடைசி மூன்று நாள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம் . இப்படி வழிபட்டால் தனம் , கல்வி , வீரம் மூன்றும் கிடைக்கும் . அதன் காரணமாக வெற்றி கிடைக்கும் . அதனால்தான் பத்தாவது நாளை விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம் .
படிகள் வைப்பதிலும் ஒரு தத்துவம் உள்ளது . பொதுவாக ஒன்பது படிகள் வைப்பார்கள் . முதல் படியில் புல் , இரண்டாவது படியில் இரு அறிவுப் பிராணிகள் , மூன்றாவது படியில் மூன்று அறிவுப் பிராணிகள் என்று இப்படி கொண்டு போய் , ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த மனிதன் இருப்பான் , ஏழாவது படியில் மனிதனுக்கு மேம்பட்ட மகரிஷிகள் , எட்டாவது படியில் தேவர்கள் , ஒன்பதாவது படியில் மும்மூர்த்திகளும் அவர்களுடைய தேவியரும் காட்சியளிப்பர் . மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று , கடைசியில் தெய்வம் ஆகவேண்டும் என்கிற தத்துவத்தை இப்படிகளில் உள்ள பொம்மைகள் காண்பிக்கின்றன .
நவராத்திரி கொலுவை பராசக்தியின் விசுவரூப தரிசனம் என்றே கூறலாம் . எல்லாப் பொருள்களிலும் நான்தான் இருக்கிறேன் என்று காட்டுகிறாள் ஈஸ்வரி , கொலுப் பொமைகள் மூலம் .
-- சிதம்பரம் சுவாமிநாதன் . விசாலாட்சி தோட்டம் , ஆன்மிகப் பேரவையில் ஆற்றிய " நவராத்திரி வைபவம் " என்ற சொற்பொழிவின் போது . ஞாயிறு , அக் 1 , 1989 .

Friday, May 8, 2009

சிவராத்திரி !

5 வகையான சிவராத்திரி !
சிவராத்திரியை ஐந்து வகையாகப் பிரிப்பார்கள் .மாசி மாதத்தில் வருவது மகா சிவராத்திரி .
கிழமைகளில் திங்கள்கிழமை காலை முதல் 60 நாழிகை அமாவாசை அல்லது திங்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பது யோக சிவராத்திரி . இதை வார சிவராத்திரி என்பார்கள் . திங்கள் இரவு நான்காம் காலத்தில் அரைநாழி தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அது யோக சிவராத்திரியாகவே சொல்லப்படும் . யோக சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் மூன்று கோடி சிவராத்திரியை அனுஷ்டித்த பலன் உண்டு .
ஒரு வருடம் முழுமையும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி நாட்களில் வரும் இரவினை நித்திய சிவராத்திரி என்பார்கள் . தை மாதத்தில் தேய்பிறை பவுர்ணமி முதல் 13 நாட்கள் ஒரே ஒரு வேளை மட்டும் உணவினை உண்டு 14 ம் நாள் இரவு முழுமையாக கண் விழித்து உபவாசம் இருந்து நோன்பு நோற்பது பட்ச சிவராத்திரி எனப்படும் .
ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி மாதசிவராத்திரி .
மகாசிவராத்திரி நாளில் தரிசிக்க வேண்டிய சிவத்தலங்கள் பல உண்டு . அவற்றுள் முக்கியமான தலங்கள் நான்கு என்பார்கள் . திருக்கோகர்ணம் , ஸ்ரீசைலம் , காளஹஸ்தி , திருவைகாவூர் என்பவை அவை . தினமலர் ,பக்தி மலர் , 19 - 02 - 2009 .

Thursday, May 7, 2009

ஒட்டுவதுதான் ஒட்டும் !

ரஷ்யாவுக்கு சொந்தமானது அலாஸ்கா தீவு . ஆனா , ஒரு கோடியில ஒதுங்கியிருந்தது . பத்தாதற்கு பனிப்பிரதேசம் வேறே . தனக்குச் சொந்தமான அந்தத் தீவை பரிமாணிப்பது ரஷ்யாவுக்கு கொஞ்சம் தலைவலியாகவும் இருந்தது . இந்த நேரத்துல அமெரிக்கா தன்னோட நாட்டை 50 மானிலங்களாகப் பிரிச்சு , தன்னோட கொடியில 50 நட்சத்திரங்களைப் பதிக்க நினைச்சது .ஆனா , மானிலங்களைப் பிரிச்சப்ப 49 தான் தேறுச்சு . என்னடா பண்றதுன்னு யோசிச்சப்ப , பக்கத்துல இருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்கா தீவு கண்ணுல பட்டது . பனிப்பிரதேசமா இருந்தாலும் பரவாயில்லைன்னு வாங்கி அதை ஒரு மானிலமா சேர்த்துக் கொடியில 50 நட்சத்திரங்களைப் பதிக்க முடிவு பண்ணி ரஷ்யாகிட்ட அலாஸ்காவை விலைக்குக் கேட்டது . எப்படியும் பனிப்பிரதேசம் , அதோட நமக்கும் மெயின்டன் பண்ற சிக்கல் இருக்கேன்னு ரஷ்யா தள்ளி விற்றுச்சு .
அதை வாங்கி பனியில மீன் பிடிக்கிற சுற்றுலா ஸ்தலமா அதை அமெரிக்கா மாத்த முயற்சி பண்ணும் போதுதான் கீழே ஆயில் ஆறு ஓடறது தெரிஞ்சதாம் . அமெரிக்காவுக்கு அதிஷ்டம் கூரையைப் போத்துகிட்டு கொட்றதுக்குப் பதிலா பூமியப் போளந்துகிட்டு எகிறிடுச்சு . --- பாக்யா . பிப்ரவரி 13 --19 , 2009 .
வாசகம் .
' Foods are not good or bad . Eating habits are '
'உணவுல நல்லது கெட்டது இல்லை . சாப்பிடுற நேரம் காலம் அளவு பழக்கங்கள்லதான் அது இருக்கு ' பாக்யா , பிப் . 13 --19 .2009 .

Wednesday, May 6, 2009

பிரபக்தி .

பக்தியிலும் சிறந்தது பிரபக்தி .
பிரபக்தி என்றால் சரணாகதி , அதாவது பகவானை அடைக்கலம் புகுதல் என்று பொருள் .இதைச் செய்வதற்குச் சில விதிகள் உள்ளன .
முதலாவதாக , மனம் , வாக்கு , காயம் மூன்றினாலும் அவனைச் சரண் அடைய வேண்டும் .
இரண்டாவதாக நம்முடைய குறைகளை வெளிப்படையாக அவனிடம் சொல்லவேண்டும் . அதனால்தான் திருமிழிசை ஆழ்வார் , " நான் நல்ல குலத்தில் பிறக்கவில்லை . நற்கலைகள் ஒன்றும் கற்கவில்லை . என் புலன்களையும் வெல்லவில்லை " என்று கூறினார் . அதே போல , ஆளவந்தார் , " எனக்குக் கர்ம யோகத்தில் அந்வயம் இல்லை . ஞானயோகத்தில் தொடர்பு இல்லை . பக்தி யோகமும் இல்லை . உன் சரணாரவிந்தம் ஒன்றுதான் தெரியும் " என்று கூறுகிறார் .
பகவானிடம் செல்லும் போது , நாம் படித்தவன் என்ற அகந்தை கூடாது . பகவானிடம் என்ன , யாரிடமுமே நாம் அகந்தையுடன் செல்லக்கூடாது .
ஸ்ரீ ரங்கத்துத் தெரு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தான் பட்டர் என்னும் ஐந்து வயதுச் சிறுவன் . இவன் கூரத்தாழ்வானின் மகன் . அப்பொழுது , பல்லக்கில் ஒரு பண்டிதர் வந்தார் . தம்மைவிடக் கற்றவர்கள் யாரும் கிடையாது என்று அவர் இறுமாப்புக் கொண்டிருந்தார் . பட்டர் கை நிறைய மணலை எடுத்து , அவரைப் பார்த்து , " இது எத்தனை மணல் ? " என்று கேட்டான் . மணலின் எண்ணிக்கையை எப்படிச் சொல்வது என்று அந்த பண்டிதர் திகைத்துக் கொண்டிருக்கையில் , அந்தச் சிறுவன் , அவரைப் பார்த்து , " ஒரு பிடி மணல் என்று சொல்லத் தெரியவில்லையே ? நீரும் ஒரு பண்டிதரா !" என்று கேட்டான் .
மூன்றாவதாக , பகவானுடைய குணங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் . அவன்தான் கதி என்று நம்ப வேண்டும் .
நான்காவதாக , சரணாகதி அடைந்து விட்ட பிறகு , வேறு ஒரு சாதனத்தையும் தேடக்கூடாது . தேடினால் , அது , " சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போல ஆகிவிடும் " என்கிறார்கள் பெரியவர்கள் .
இலங்கை சென்ற அனுமனை இந்திரஜித் பிரம்மாஸ்த்திரதினால் கட்டுகிறான் . அதற்கு மேலே அரக்கர்கள் அனுமனைக் கயிறு கொண்டு கட்டுகிறார்கள் . உடனேயே பிரம்மாஸ்திரத்தின் கட்டு போய் விடுகிறது >
-- பிள்ளைலோகம் , ஸ்தலசயனத் துறைவார் ஸ்வாமி , சென்னை , தியாகராயநகர் , வாணி மஹாலில் நிகழ்த்திய " திருப்பாவை" ச் சொற்பொழிவின் போது . வெள்ளி ,ஜன 19 , 1990 .

Tuesday, May 5, 2009

அப்படியா !

--- தந்தையின் நற்குணம் மலையைவிட உயரமானது . தாயின் நற்குணம் கடலைவிட ஆழமானது .
--- சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம் . அது நின்றாலும் , ஓடினாலும் உபயோகமில்லை .
---விலங்கினத்தில் யானைக்கு மட்டுமே 4 முழங்கால்கள் அமைந்துள்ளன . விலங்கினத்தில் யானையால் மட்டுமே குதிக்க முடியாது .
--- பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் ஒன்று , இரண்டு , மூன்று என தன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எண்ணிக்கை தெரியும் . இதற்கு உதாரணம் அடை காக்கும் கோழி , அடை காக்கும்
முட்டைகளில் ஒன்று குறைந்தால் கூட , கத்திக் கூச்சலிட்டு சுற்றி வந்து தேடுமாம் .
--- சிசிலி நாட்டில் உள்ள சன்க் என்ற இடத்தில் சேறும் சகதியும் நிறைந்த களிமண் ஏரி உள்ளது . இந்த ஏரியில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக விழுந்து குளிக்கின்றனர் . ஞாயிற்றுக்கிழமைகளில் சகதிக் குளியல் அமர்க்களப்படுமாம் . நிர்வாணக் கோலத்தில் இருக்கும் பெண்கள் உடம்பில் உள்ள களிமண்ணை யார் வேண்டுமானாலும் வழித்துவிடலாமாம் .
--- மீன் கொத்திப் பறவைகள் தாம் தின்ற மீன்களின் முட்களைக் கொண்டே கூடுகளை கட்டிக் கொள்ளூமாம் .
--- மனிதனுக்கு பக்கத்திற்கு 12 விலா எலும்புகள் தான் உள்ளன . ஆனால் , குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளனவாம் .
--- 98 நிமிடத்திற்கு ஒருமுறை ஆங்கில மொழியில் ஒரு புதிய வார்த்தை உருவாகிறதாம் . தற்போது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை 9,99,844 . இது 29 - 4 - 2009 ல் பத்து லட்சம் வார்த்தைகள் கொண்ட மொழியாக ஆங்கிலம் திகழப் போகிறதாம் .
--- பெண்களை விட ஆண்களுக்கு இரு மடங்கு அதிகம் வியர்க்குமாம் .
--- போலந்திலுள்ள உஜாக்கோட்டை 17- ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . இந்தக் கோட்டையின் நான்கு வாயிலகள் 4 பருவ காலங்களையும் , 12 மாடங்கள் 12 மாதங்களையும் , 52 அறைகள் ஆண்டுக்கு
52 வாரங்களையும் , 365 ஜன்னல்கள் 365 நாட்களையும் குறிக்கின்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாம் .
--- மக்னீஷியம் ஒரு வினோதமான உலோகம் . இது எரிந்த பிறகு அதன் சாம்பல் இந்த உலோகத்தை விட அதிக எடை உடையதாக இருக்கிறது .
--- குறைந்த நாளைக் கொண்ட கிரகம் வியாழன் . அங்கு 5 மணி நேரம் பகலாகவும் , 5 மணி நேரம் இரவாகவும் இருக்கும் . பாக்யா , பிப்ரவரி 13 -- 19 ; 2009

Monday, May 4, 2009

காரணம் ! ஓரினம்...

தாய்தான் காரணம் !
ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கக் காரணம் தாய்தான் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் . உண்மையில் பாலினத்தை ( gender ) நிர்ணயிப்பது தந்தைதான் . குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கும் ப்ளூபிரிண்ட் , பெற்றோர்களின் குரோமோசோம்களில் உள்ளது . பரம்பரைத் தன்மையைக் கொடுப்பது இந்த குரோமோசோம்கள்தான் . மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸில் 23 ஜோடிகள் குரோமோசோம்கள் இருக்கும் . இந்த 23 ஜோடிகளில் 22 ஜோடிகள் மனிதனின் நிறம் , உயரம் , வடிவம் , குணம் போன்றவற்றை நிர்ணயிக்கும் . 23 வது ஜோடிக்கு செக்ஸ் குரோமோசோம் என்று பெயர் . இந்த செக்ஸ் குரோமோசோம் ஆணிடம் XY ஆக இருக்கும் . பெண்ணிடம் X X ஆக இருக்கும் . அதாவது , ஆணின் உயிரணுக்களில் 50 சதவிகிதம் X குரோமோசோமும் , 50 சதவிகிதம் Y குரோமோசோமும் இருக்கும் . பெண்ணின் உயிரணுக்களில் X மட்டுமே இருக்கும் . கருவாகும்போது ஆணிடமிருக்கும் Y ஆனது பெண்ணின் X உடன் சேர்ந்தால் ஆண் குழந்தை உருவாகும் . ஆணிடமிருக்கும் X பெண்ணிடம் இருக்கும் X உடன் சேர்ந்தால் பெண் குழந்தை உருவாகும் . எனவே , ஒரு பெண்ணின் கருவில் உருவாக வேண்டியது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று நிர்ணயிக்கும் ஆற்றல் ஆணின் உயிரணுக்களில்தான் இருக்கிறது . எந்த குரோமோசோம் இணைய வேண்டும் என்பதை எந்த ஒரு ஆணும் தீர்மானிக்க முடியாது . எல்லாம் இயற்கையின் முடிவு .
--- டாக்டர் டி . நாராயண ரெட்டி , செக்ஸாலஜிஸ்ட் . ஆனந்தவிகடன் , 04 -02 - 2009 .
ஓரினம்...ஈருடல்...ஓருயிர் !
" உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவும் உணர்வது ஓர் அரவாணிக்குரிய இயல்பு . இதனால் இவர்களது பாலியல் நாட்டம் சராசரி உணர்வுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் . ஆனால் , உடலாலும் மனதாலும் முழுமையான ஆணாகவே இருந்தும் , இன்னொரு ஆண் மீது பாலியல் நாட்டம் கொள்கிறவர்கள்தான் ' ஹோமோசெக்ஸுவல்ஸ் '. அதுபோல உடலாலும் மனதாலும் பூரணமான பெண்ணாக இருந்து கொண்டே , இன்னொரு பெண் மீது பாலியல் நாட்டம் கொள்பவர்கள்தான் ' லெஸ்பியன்' கள் . இதுதான் அடிப்படை வித்தியாசம் --- பாரதி தம்பி . ஆனந்தவிகடன் , 04 - 02 - 2009 .

Sunday, May 3, 2009

காந்திஜி சமாதி !

காந்திஜியின் சமாதியில் ஆண்டுதோறும் ராணுவ மரியாதை நடத்தப்படுகிறதே , இது சரியா ?
' சரியல்ல என்கிறார் காந்திஜியின் அந்தரங்கச் செயலாளர் திரு . பியாரிலால் . ' அகிம்சா மூர்த்தியின் சமாதியில் ராணுவ வீரர்கள் தளவாடங்களுடன் மரியாதை செய்வது தவறு . இது காந்திஜியின் கொள்கைக்கு முரணானது ' என்று ' மகாத்மா காந்தி நூற்றாண்டுகள் ' என்ற நூலில் எழுதியிருக்கிறார் அவர் .
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் கரியப்பாவின் கருத்தும் இதுவேதான் . இந்தப் பழக்கத்தைக் கை விடுமாறு ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் அமைந்த ஒரு கமிட்டி , அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள இருந்ததாம் . ஆனால் , கேட்கப்படவில்லை .
இது பற்றி ராஜாஜியின் கருத்து என்ன ?
" இத்தனை ஆண்டுகளாக இது நடக்கும்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை . ஒரு நாடு ராணுவத்தை வைத்துக்கொண்டு இருக்கும்போது , நாட்டின் பெரிய தலைவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ராணுவம் கலந்துகொள்வது இயல்பே என்றுதான் எனக்குப் படுகிறது " என்கிறார் அவர் .
இவ்விஷயத்தில் மவுண்ட்பேட்டன் பிரபு என்ன கருதுகிறார் ?
" அகிம்சா மூர்த்தி காந்திஜிக்கு ராணுவ மரியாதை தேவையில்லை !" என்கிறார் .
--- ம . சிவராமன் , லண்டன் . ஆனந்தவிகடன் . 27 - 01 - 1974 .

Saturday, May 2, 2009

நிறம் !

பச்சை நிறம் !
சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளை எடுப்பதற்கு பேக்ரவுண்டாக பச்சை அல்லது நீலகலர்களையே பயன்படுத்துகிறார்கள் . அது ஏன் ?
கலர்களில் அடிப்படை கலர்கள் சிவப்பு , பச்சை , நீலம் ( R G B ) . இதில் , நம் தோலின் பொதுவான நிறம் சிவப்பு . இந்த சிவப்பு நிறத்திற்கு நேர் எதிர்மாறான நிறங்கள் பச்சை , நீலம் .
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு பின்புலம் எனப்படும் பேக்கிரவுண்ட் , முன்புலம் என்று சொல்லக்கூடிய ஃபோர்கிரவுண்டுக்கு எதிரான வண்ணத்தில் அதாவது கான்ட்ராஸ்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பச்சை அல்லது நீலம் பின்புல கலராகப் பயன்படுத்தப்படுகிறது . அதிலும் குறிப்பாக பச்சை பிரைட்டான கலர் என்பதால் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள் . அது பின்புலத்தை எளிதில் பிரித்தெடுத்து வேறு பின்புலத்தை காட்சியில் இணைப்பதற்கு வசதியாக இருக்கும் .உலகில் ஜப்பானியர்கள் , சீனர்கள் , மங்கோலிய இனத்தவர்களின் சருமத்தில் மட்டும் கொஞ்சம் மஞ்சள் நிறம் மிகுந்து காணப்படும் . அவர்களுக்குப் பச்சைநிற பின்புலத்தை பயன் படுத்த முடியாது . அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கு நீலநிற பேக்கிரவுண்ட்களையே பயன்படுத்துகின்றனர் .
திரையில் ஆட்கள் இல்லாமல் பொருட்களை வைத்து ஸ்பெஷல் எஃபெக்ட் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தைக்கூட பேக்கிரவுண்ட் கலராக பயன்படுத்த முடியும் . பேக்கிரவுண்டுக்கு நாம் எந்த அடிப்படை கலரைப் பயன்படுத்தினாலும் அதன் சாயல் கொண்ட நிறங்கள் ஃபோர்கிரவுண்டில் இல்லாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது . ----- குமுதம் .28 - 01 - 2009 .

Friday, May 1, 2009

ரகசியம் .

வெற்றியின் ரகசியம் .
குருக்ஷேத்திரத்தில் , மகாபாரதப் போருக்காக , கௌரவ சேனை ஒரு பக்கமும் , பாண்டவ சேனை இன்னொரு பக்கமும் அணிவகுத்து நிற்கின்றன . போர் ஆரம்பிக்கப் போகும் சமயம் . அப்பொழுது என்று தருமர் தம் கவசத்தைக் கழற்றித் தேரில் வைத்தார் . தம் ஆயுதங்களையும் வைத்தார் . தேரிலிருந்து இறங்கி பீஷ்மரை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார் . அவருடைய செய்கையின் நோக்கம் புரியாமல் , அவருடைய சகோதரர்களும் , கிருஷ்ணரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள் . " எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் !" என்று கேட்டதற்கு அவர் பதிலே சொல்லவில்லை .
இதைப் பார்த்து கௌரவ சேனையில் ஒரே குதூகலம் ! " நம் படை பலத்தைப் பார்த்து தருமர் பயந்துவிட்டார் ! அதனால் பீஷ்மரிடம் சரணாகதி அடையச் செல்லுகிறார் " என்று நினைத்தார்கள் .
தருமர் நேரே பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கினார் . " தாத்தா ! நாங்கள் தங்களோடு யுத்தம் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது . அதற்காக எங்களை மன்னிப்பதோடு , அதற்கு உத்தரவும் , தங்கள் ஆசியும் வழங்க வேண்டும் " என்று சொல்லி கை கூப்பி நின்றார் .
இதைக் கேட்டு பீஷ்மர் மகிழ்ந்து , " குழந்தாய் ! நீ மட்டும் இப்படி என்னை அனுமதி கேட்டிராவிட்டால் நான் உன்னைச் சபித்திருப்பேன் . என் பூரண ஆசிர்வாதம் உனக்கு இருக்கிரது .நீதான் வெற்றி பெறுவாய் . உனக்கு வேறு என்ன வேண்டும் . கேள் " என்றார் .
" தங்களை நான் வெற்றி கொள்ளுவது எப்படி ?" என்று தருமர் கேட்டார் .
" இன்னொரு சமயம் சொல்லுகிறேன் " என்றார் பீஷ்மர் .
பிறகு தருமர் துரோணரை வணங்கி நின்றார் . அவரையம் " தங்களை வெல்லுவது எப்படி ! " என்று கேட்டார் . அதற்குத் துரோணர் , " என் கையில் வில் உள்ளவரை என்னை யாராலும் வெல்ல முடியாது . ஆனால் , எனக்குப் பிடிக்காத செய்தி எதையாவது கேட்டால் அப்பொழுது நான் வில்லைக் கீழே வைத்து சமாதியில் ஆழ்ந்து விடுவேன் . அப்பொழுது என்னைக் கொல்லலாம் : என்றார் .
பிறகு தருமர் குலகுரு கிருபாச்சாரியாரை வணங்கினார் . அவரை எப்படி வெல்லுவது என்று கேட்க தருமரால் முடியவில்லை . துக்கம் அவர் தொண்டையை அடைத்தது . அவர் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருபாச்சாரியார் , " என்னை யாராலும் வெல்ல முடியாது . ஆனால் நீதான் வெற்றி பெற வேண்டும்ம் என்று நான் தினம் காலை பகவானை வேண்டிக் கொள்ளுவேன் " என்றார் .
யுத்த சமயத்திலும் கூட , பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் , அவர்களுடைய ஆசியைப் பெற வேண்டும் என்கிற தருமரின் உத்தமமான குணம்தான் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது என்று சொல்லவும் வேண்டுமா ?
-- மகாபாரதம் பீஷ்ம பர்வத்திலிருந்து . வெள்ளி , நவம் 3 , 1989 .