Sunday, May 31, 2015

கவிதைத் தூறல்

வரதட்சிணை
நிலத்தை  விற்றாள்
கல்வி  கற்க
வீட்டை  விற்றாள்
பட்டம்  பெற
தன்னையே  விற்றாள்
திருமணம்  செய்ய!
- ஜெ.ஜெயா, கோவை.
தண்டனை
வாழைப்பழம்
குற்றம்  எதுவும்
செய்யவில்லை
இருந்தாலும்  எல்லோரும்
தோல்  உரிக்கிறார்களே...!
- க.சு.கீர்த்தி, பெரணமல்லூர்.
மழலை
எல்லாம்  தெரியும்
என்று  சொல்பவர்கலும்
ஏங்குகிறார்கள்,
ஒன்றுமே  தெரியாத
மழலையின்  அன்புக்கு!
- வி.ஜானகி, கே.கே.நகர்.
-- மங்கையர் மலர்.  மார்ச் 16-31, 2015.
-- இதழ் உதவி : சந்திராசிவசிதம்பரம், செம்பனார்கோயில்.  

கோலங்கள்.

தெற்கில்  வேண்டாம் !
     வடக்கில்  குபேரனும்,  கிழக்கில்  இந்திரனும்,  மேற்கில்  வருணனும்,  தெற்கில்  எமனும்  வாசம்  செய்வதால்  தெற்கு  பார்த்தோ  அல்லது  தெற்கில்  கோலம்  முடிவுறும்படியோ  போடக்கூடாது.
மனதை  ஒருநிலைப்படுத்தும்...
   * இறந்தவர்  வீடுகளில்  தீட்டு  கழிப்பதற்கு  முன்  கோலம்  இடக்கூடாது.  மற்றும்  திதி,  அமாவாசை  போன்ற  நாட்களிலும்  கோலம்  இடக்கூடாது.
   * உடல்  குனிந்து,  நிமிர்ந்து  கோலம்  இடுவதால்  உடற்பயிற்சி  போல்  ஆகிறது.  ஒரு  புள்ளியில்  ஆரம்பித்து  எல்லா புள்ளியையும்  இணைத்துப்  போடுவதால்  மனம்  ஒருநிலைப்படுகிறது.
-- தினமலர், கோல மலர்.  12.12.12. 

Saturday, May 30, 2015

சோப்புகள்.

 சோப்புகளில்  டிஎப் எம்  76 %  என்று  போட்டிருக்கிறதே,  அதன்  அர்த்தம்:
     டோட்டல்  பேட்டி  மேட்டர்  என்பதன்  சுருக்கமே  டிஎப் எம்.  அதாவது  குளியல்  சோப்பில்  இருக்ககூடிய  கொழுப்பின்  சதவீதத்தை  குறிப்பதாகும்.
     நல்ல  தரமான,  நீடித்து  உழைக்ககூடிய,  நன்கு  அழுக்கு  நீக்கக்கூடிய  ஒரு  குளியல்  சோப்பின்  தரம்  அதில்  அடங்கி  உள்ள  கொழுப்பு  அளவு  76%  இருக்க  வேண்டும்.
     இப்படி  சோப்பில்  டிஎப் எம்  76 %  என்ற  குறிப்பு  இருந்தால்  அது  தரமான  நம்பர்  ஒன்  சோப்பு  என்று  பொருள்  கொள்ள  வேண்டும்.  சோப்பில்  60  சதவிகிதம் மற்றும்  அதற்கு  கீழ்க்  கொழுப்பு  சதவிகிதம்  இருந்தால்  அதன்  கிரேடு  3  ஆகும்.
--    தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.   

Friday, May 29, 2015

வங்கிகள்.

 வங்கிகளில்  பணம்  பரிவர்த்தனைகள்  எல்லாம்  செக்,  டிமாண்ட்  டிராப்ட்  மூலமாக  நடைபெறும்.
     இக்காலத்தில்  இணையதள  பயன்பாடு வந்த  பிறகு  வங்கிகளில்  இணையதள  சேவைகள்  நடைமுறைக்கு  வந்தன.  அவற்றில்  ஒன்று  ஆன்லைன்  இணையதள  பரிவர்த்தனையாகும்.
     ஆன்லைன்  வாயிலாக  மேற்கொள்ளப்படும்  பண  பரிமாற்றங்களில்,  தேசிய  மின்னனு  பணப்  பரிவர்த்தனை ( என்.இ.எப்.டி. )  பெரும்  பங்கு  வகிக்கிறது.  இது  போன்று  இன்னொரு  வசதிதான்  ஆர்டிஜிஎஸ்.  ரிசர்வ்  வங்கி  விதிமுறைகள்  படி  ஆர்டிஜிஎஸ்  சேவையில்  2  லட்சம்  முதல்  அதிகபட்சம்  5  லட்சம்  வரை  பணம்  பரிமாற்றம்  செய்யலாம்.
     என்.இ.எப்.டி.  சேவையில்  குறைந்தபட்சம்  இல்லை.  அதிகபட்சம்  5  லட்சம்.
---     தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.

Thursday, May 28, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  சூரியன்  ஒவ்வொரு  நாளும்  ஒரு  டிரில்லியன்  டன்  நீரை  ஆவியாக்குகிறது.
*  பண்டைய  சீனாவில்  நோயாளிகள்  குணமடைந்தால்  மட்டுமே  பணம்  வாங்கிக்கொள்வார்களாம்  மருத்துவர்கள்.
*  ஒரு  ஆலிவ்  மரம்  1,500  ஆண்டுகள்  வரை  உயிர்  வாழும்.
*  எறும்புகள்  மனிதர்களைப்  போலவே  தூங்கி  எழுந்தவுடன்  அன்றைய  வேலைகளை  செய்வதற்கு முன்  சோம்பல்  முறிக்கும்.
*  குழந்தை  பிறப்பதற்கு  ஏழு  வாரங்கள்  முன்பிருந்தே  கை  ரேகைகள்  உருவாகிவிடும்.
*  ஆஸ்திரியாதான்  முதன்முதலில்  தபால்  அட்டைகளை  பயன்படுத்திய  நாடு.
*  எந்த  உயிரையும்  அழிக்காமல்  கிடைக்கும்  ஒரே  இயற்கை  உணவு  பழங்கள்  மட்டும்தான்.
*  ஒரு  வண்னத்துப்பூச்சி  பறப்பதற்கு  அதன்  உடலின்  தட்பவெப்பம்  86  டிகிரிக்கும்  அதிகமாக  இருக்க  வேண்டும்.
*  இங்கிலாந்து  நாட்டில்  ஆங்கிலத்துக்கு  முன்பு  600  ஆண்டுகள்  அலுவல்  மொழியாக  பிரெஞ்சு  மொழி  இருந்தது.
--   தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.

Wednesday, May 27, 2015

எரிந்தும் எகிறும் எடை

  எல்லா  பொருட்களும்  எரிந்து  சாம்பலாகும்போது  எடை  குறையும்.  ஆனால்,  மக்னீஷியம்  இதற்கு  நேர்  எதிர்.  மக்னீஷியம்  எரியும்போது  எடை  அதிகரிக்கும்.  எரிந்தபின்  மிஞ்சும்  சாம்பல்,  எரிவதற்கு  முன்  இருந்த  பொருளின்  எடையை  விடவும்  அதிகமாயிருக்கும்.
அரசருக்கு  சிவப்பு.
     ஜப்பானில்  சிவப்பு  நிற  கார்களை  அரச  குடும்பத்தினர்  மட்டும்  பயன்படுத்துகிறார்கள்.
பறக்காத  காந்தி.
     காந்தியடிகள்  விமானத்தில்  பயணம்  செய்ததே  இல்லை.  அவரிடைய  தென்னாப்பிரிக்க  பயணம்,  இங்கிலாந்து  பயணம்  கப்பலில்தான்.  இந்தியப்பயணம்  யாவும்  ரயிலில்தான்.
தாஜ்மகாலும்  மோனாலிசாவும்...
     தாஜ்மகாலை  கட்டி  முடிக்க  ஷாஜகானுக்கு  22  ஆண்டுகள்  ஆனது.  மோனாலிசா  ஓவியத்தை  வரைய  டாவின்சிக்கு  3  ஆண்டுகள்  ஆனது.
---  தினமலர்,  பெண்கள் மலர்.  15.12.12. 

Tuesday, May 26, 2015

12.12.12.

  இன்று  12.12.12.  உலக  அதிர்ஷ்ட  தினம்!  இனி  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  பின்னரே  வரும்.
     ஆங்கில,  தமிழ்  மாதங்கள்  12.  ஆங்கில  நாடகாசிரியர்  ஷேக்ஸ்பியர்  எழுதிய  புகழ்  பெற்ற  நாடகத்தில்  ஒன்று,  12வது  இரவு. தமிழ்  வளர்த்த  திருமுறைகள்  12.  சிதம்பரம்  சிவகாமி  அம்மை  பற்றிய  பிள்ளைத்தமிழ்  12.  கலிங்கத்து  பரணியில்  சக்தியின்  வடிவம்  12.  வராகி  படிம  அமைதியில்  காணப்படும்  வகைகள்  12.  சூரியபகவான்  தேரில்  வர  அவருக்கு  முன்பாக  சாமரம்  வீசி  வரும்  அப்சரஸ்களின்  எண்ணிக்கை  12.  தேவிபாகவதத்தில்  ஸ்ரீசக்கர  கோட்டைக்கால்  பித்தளை  பிரகாரத்தில்  அமைந்துள்ள  சக்திகளின்  எண்ணிக்கை  12.  காளி  தேவிக்கு  ஏவல்  செய்ய  உடன்  உள்ள  யோகினிகளின்  எண்ணிக்கை  12.  குமரி  மாவட்டத்தில்  காணப்படும்  அம்மன்  கோயில்களின்  எண்ணிக்கை  12.  துவாதச  ஆதித்யர்கள்  சூரியனை  12  விதமாக  வலம்  வருகின்றனர்.
     சூரியனது  சக்கரத்தில்  காணப்படும்  ஆரக்கால்களின்  எண்ணிக்கை  12.  இது  கும்பகோணம்  நாகேஸ்வரன்  கோயில்  கருங்கல்  தேர்  சக்கரத்தில்  காணப்படுகிறது.  சிற்ப  கட்டடக்  கலைக்கு  புகழ்  பெற்ற  ஒடுஷா  மாநிலம்  கொணார்க்  சூரியன்  கோயிலில்  காணப்படும்  சக்கரங்களின்  எண்ணிக்கை  12.  கங்கைகொண்ட  சோழபுரத்தை  சோழ  மண்டல  தலைநகராக  ராஜேந்திரசோழன்  மாற்றியது  12ம்  நூற்றாண்டு.  நவக்கிரக  ராசிகள்  12.  இதுபோல  இன்னும்  பல  சிறப்புகள்  இன்றைய  தேதிக்கு  உள்ளன.
     இதற்கு  முன்பு  நாம்  கடந்துவந்த  10.10.10.  11. 11. 11.  என்று  முன்னோக்கியும்,  12  மாதங்கள்  மட்டுமே  இருப்பதால்  இனி  வரும்  ஆண்டுகள்  13.13.13.  14.14.14.  என்று  அமைய வாய்ப்பில்லை  என்பதாலும்  இன்றைய  தேதி  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  ஒருமுறைதான்  வரும்  என்பது  சிறப்புக்குரியது.
-- மோகன்ராஜ்  பெருந்தச்சன்,  தஞ்சை  தமிழ்ப்  பல்கலைக்கழக  சிற்பக்துறை  ஆராய்ச்சியாளர்.
-- தினமலர்,   12.12.12. 

Monday, May 25, 2015

குடிப்பழக்கத்தை கைவிட....

குடிப்பழக்கத்தை  கைவிடணுமா  புதிய  வலைதளம்  தொடக்கம்.
       குடிப்பழக்கத்தை  கைவிடணுமா?  டாக்டர்களிடம்  இனி  செல்ல  வேண்டாம்.  இதற்காக  ஆன்லைனில்  பிரத்யேக  வலைதளம்  ஒன்று  தொடங்கப்பட்டுள்ளது.
       குடிப்பழக்கத்திலிருந்து  விடுபட  நினைப்பவர்கள்  டாக்டரிடமோ  அல்லது  அது  குறித்த  ஆலோசகர்களிடமோ  செல்ல  வேண்டும்  என்றில்லை.  இந்த  வலை  தளத்துக்கு  சென்று  எப்படி  அந்த  பழக்கத்தை  கைவிடலாம்  என்பது  குறித்து  சில  டிப்ஸ்களை  பெறலாம்.
       அவர்கள்  மட்டுமின்றி,  குடும்பத்தில்  உள்ள  உறுப்பினரின்  பழக்கத்தை  கைவிட  மற்ற  உறுப்பினர்களும்  இந்த  வலைதளத்தை  பயன்படுத்திக்கொள்ளலாம். இதில்  தங்களது  குடிபழக்கத்தின்  முறையை  கொடுத்து,  எப்படி  அந்த  பழக்கத்தை  குறைத்துக்  கொள்ளலாம்  என்று  வழிகாட்டப்படும்.  பாதிக்கப்பட்டவர்கள்  WWW. alcohol  webindia.in  என்ற  வலைதள  முகவரிக்கு  சென்று  பயனடையலாம்.
-- தினமலர் .11 . 12 . 2012. 

Sunday, May 24, 2015

வெனிஸ்

  ( சிறப்பு ).
   உலகின்  புகழ்பெற்ற  தண்ணீர்  நகரம் வெனிஸ்.  இத்தாலியில்  உள்ள  இந்த  நகரம்,  150  கால்வாய்களுக்கு  நடுவே  அமைந்த  100  தீவுகளைக்  கொண்டது.  400  பாலங்கள்  இந்தத்  தீவுகளை  இணைத்திருக்கின்றன.  எங்கு  செல்ல  வேண்டுமானாலும்  படகுப்  போக்குவரத்துதான்.  1,500  ஆண்டுகளுக்கு  முன்பு  நிர்மாணிக்கப்பட்ட  நீர்  நகரமான  வெனிஸ்,  மனத்தை  கொள்ளைகொள்ளும்  அழகுடன்  மிளிர்கிறது.
-- ஆர்.சீனிவாசன்,  தஞ்சாவூர். ஆஹா  தகவல்.
-- மங்கையர் மலர்.  மார்ச் 16-31, 2015.
-- இதழ் உதவி : சந்திராசிவசிதம்பரம், செம்பனார்கோயில். 

தெரியுமா உங்களுக்கு?

*  வடக்கே  பிறந்து,  தெற்கே  வாழ்ந்தவர்   ராம்சுரத்குமார்.  புனித  நதியான  கங்கைக்  கரையை  ஒட்டிய  நர்தரா  எனும்  கிராமத்தில்  பகவான்
    அவதரித்தார்.  ராம்தத்  குன்வர்  -  குகமாதேவி  ஆகிய  பாக்கியசாலி  தம்பதியர்  இந்த  அவதார  புருஷனைப்  பெற்றெடுத்தனர்.
*  ஷீரடி  சாய்பாபா  சித்தி  ஆனது  1918ம்  ஆண்டு  அக்டோபர்  மாதம்  15ம்  தேதி.
*  பகவான்  அவதாரம்  நிகழ்ந்த  அதே  1918ம்  ஆண்டு,  ஷீர்டி  பாபாவின்  சித்திக்கு  ஒன்றரைமாதம்  கழித்து,  அதாவது  டிசம்பர்  1 ம்  தேதி  பகவானின்
   அவதாரம்  நிகழ்ந்தது.
*  தும்பை  மலருக்கு  துரோர  புஷ்பம்  என்று  பெயர்.
--தினமலர் .  பக்தி மலர் .  டிசம்பர்  6,  2012. 

Saturday, May 23, 2015

தீபாராதனை விளக்கம் !

  தீபாராதனையின்  போது  விதவிதமான  தீபங்களால்  ஆராதனை  நடத்தப்படுகிறது.  அவை  பற்றிய  விளக்கம்:
      நட்சத்திர  தீபம்:   நட்சத்திரங்கள்  இறைவனை  வழிபட்டு  ஒளி  பெறுவதைக்  குறிக்கும்.
      ஒன்பது  தீபம்:  நவசக்திகளைக்  குறிக்கும்.
      ஏழு  தீபம்:  சப்த  மாதர்களைக்  குறிக்கும்.
      பஞ்ச  தீபம்:  நிவர்த்தி  கலை,  பிரதிட்டா  கலை,  வித்யா  கலை,  சாந்தி  கலை,  சாந்தி  அதீத  கலை  என்று  ஐந்து  கலைகளைக்  குறிக்கும்.
      மூன்று  தீபம்:  சூரியன்,  சந்திரன்,  அக்னி  ஆகிய  மூன்று  ஒளிகளைக்  குறிக்கும்.
       ஒற்றை  தீபம்:  சரஸ்வதியைக்  குறிக்கும்.
       தீபாராதனை  முடிந்த  பிறகு  இறுதியில் ' கும்ப  தீபம் ' காண்பிப்பது  சதாசிவ  தத்துவத்தைக்  குறிக்கும்.
-- தினமலர் .  பக்தி மலர் .  டிசம்பர்  6,  2012.   

Friday, May 22, 2015

தேவைப்பட்ட நேரம்.

 கொலம்பஸின்  கடற்பயணத்தை  தெரிந்து  கொள்ள  ராணி  இசபெல்லாவுக்கு  5  மாதங்கள்  ஆனது.  ஆபிரகாம்  லிங்கனின்  படுகொலையை  கேட்டறிய  ஐரோப்பாவிற்கு  இரண்டரை  வாரங்கள்  ஆனது.  ஆனால்,  நிலவில்  மனிதன்  நடக்க  முடியும்  என்று  நீல்  ஆம்ஸ்ட் ராங்கிடம்  இருந்து  தெரிந்து  கொள்ள  1.3  வினாடிகளே  ஆனது.
-- வாசுகி  முருகன்,  சீர்காழி.
--  தினமலர் .  பெண்கள் மலர்.  டிசம்பர்  8 ,  2012.  

Thursday, May 21, 2015

ஜாமம்..நாழிகை...

  ஒரு  ஜாமம்  என்பது  2  மணி  நேரம்  24  நிமிஷம்  கொண்டது.
     ஒரு  நாளுக்கு  10  ஜாமங்கள்.
     ஆறு  நாழிகைகள்  கொண்டது  ஒரு  ஜாமம்.
     அறுபது  நாழிகைகள்  கொண்டது  பகல்,  இரவு  கலந்த  ஒரு  நாளாகும்.
     ஒரு  நாளுக்கு  16  முகூர்த்தங்கள்.
     முகூர்த்தம்  என்பது  1.30  மணி  நேரமாகும்.
     அதிகாலை  4.30  மணி  முதல்  6.00  மணி  வரை  உள்ள  நேரம்  பிரம்ம  முகூர்த்தம்  ஆகும்.
-- ச.விசாலராணி, முத்துப்பேட்டை.
-- தினமலர் .  பெண்கள் மலர்.  டிசம்பர்  8 ,  2012. 

Wednesday, May 20, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  போக்குவரத்து  சிக்னல்  அமைப்பு  முதலில்  லண்டன்  நகரில்  அறிமுகமானது.
*  ஆச்சரியமான  விஷயம்,  அக்காலக்கட்டத்தில்  லண்டனில்  பெட்ரோல்,  டீசல்  போன்ற  எரிபொருளில்  இயங்கும்  வாகனங்கள்  எதுவுமே  கிடையாது.
   குதிரைகள்  இழுத்துச்  செல்லும்  வாகனங்கள்  மட்டுமே  இயங்கின.
* அமெரிக்காவில்  1890ம்  ஆண்டு  இறுதி  வாக்கில்  தான்  கார்கள்  அறிமுகமாயின.
*  உலகின்  மக்கள்  தொகையில்,  13  சதவீதம்  பேர்,  இடது  கை  பழக்கம்  உடையவர்கள்  என்று  ஐ. நா.  அறிக்கை  தெரிவிக்கிறது.
*  பரிணாமம்  என்றால்  மாற்றம்  என  சொல்லலாம்.  வளர்ச்சி  என்பது  எல்லாவற்றிலும்  உண்டு.  ஆனால், உள்ளது  சிறத்தல்  என்பதே  பரிணாம
   வளர்ச்சியின் முக்கிய  கோட்பாடு!
--- - தினமலர் .  சிறுவர்மலர் .  டிசம்பர்,  7 , 2012.

Tuesday, May 19, 2015

ஆண் மேதைகள்?


     ஆண்கள்  மேதைகள்  ஏன்?
     முளையின்  கார்டெக்ஸ்  பகுதியில்  இருக்கும்  இன்பீரியர்  பரைடல்லாபுலே  என்ற  இடம்,  பெண்  மூளையைவிட  ஆணுக்கு  சற்று  அகன்று  இருக்கும்.  இதனாலேயே,  அறிவியல்  மேதை,  கணித  மேதை  என்று  பல  ஆண்கள்  புகழ்பெற  முடிந்தது  என்கின்றனர்  அறிவியலாளர்கள்.
--- தினமலர் .  சிறுவர்மலர் .  டிசம்பர்,  7 , 2012.                     

Monday, May 18, 2015

ஏபிசிடி சிறப்பு !


*  ஒன்றிலிருந்து  99  வரை  ஆங்கிலத்தில்  எண்களை  எழுதினால்  ஏ,பி,சி,டி  என்ற  நான்கு  எழுத்துகள்  வராது.
*  ஒன்றிலிருந்து 999  வரை  ஆங்கிலத்தில்  எண்களை  எழுதினால்  ஏ,பி,சி  என்ற  மூன்று  எழுத்துகள்  வராது.
*  ஆயிரம்  என்ற  எண்  பெயரில்  மட்டுமே  ஏ  என்ற  எழுத்து  வரும்.
*  ஒன்றிலிருந்து 99,   9, 99, 999  வரை  ஆங்கிலத்தில்  எண்களை  எழுதினால்  பி,சி  என்ற  எழுத்துகள்  இடம்  பெறாது..
*  பில்லியன்  என்ற  எழுதும்  போது  மட்டுமே  பி  எழுத்து  வரும்.
--  தினமலர் .  சிறுவர்மலர் .  டிசம்பர்,  7 , 2012.                     

Sunday, May 17, 2015

ஐஎம்இஐ எண் தெரிஞ்சுக்கலாம்!

  ஒரு  மொபைல்  வாங்கி  இயக்கத்  தொடங்கியவுடன்...
     * # 06 #  என்ற  எண்ணை  அழுத்தி  அதன்  தனி  அடையாள  எண்ணைத்  (  International  Mobile  Equipment  Itentity )  தெரிந்து  வைத்துக்  கொள்ளுங்கள்.  உங்கள்  மொபைல்  போனுக்கான  வாரண்டி  இதனைச்  சார்ந்ததாகும்.  மேலும்  உங்கள்  மொபைல்  தொலைந்து  போனால்  இந்த  எண்ணைக்  கொண்டு  தேடிக்  கண்டுபிடிக்கலாம்.
-- தினமலர் .  சிறுவர்மலர் .  டிசம்பர்,  7 , 2012. 

Saturday, May 16, 2015

..டிப்ஸ்...

*  சாதாரண  பூட்டாக  இருந்தாலும்,  கதவிலேயே  பொருத்தப்பட்ட  பூட்டு  துவாரமாக  இருந்தாலும்,  சரியாகத்  திறந்து  மூட  முடியவில்லை  என்றால்,
   உங்களிடமுள்ள  சென்ட்  ( பெர்ஃப்யூம் )  பாட்டிலிலிருந்து கொஞ்சம்  திரவத்தை,  துவாரங்களில்  ஸ்பிரே  செய்யுங்கள்.  இனி  சுலபமாகத்  திறக்கலாம்.
*  எளிமையான  வடை  தயாரிக்கலாமா?  அரை  டம்ளர்  பயத்தம்பருப்பை,  பத்து  நிமிடங்கள்  ஊற  வையுங்கள்.  ஊறியபிறகு,  ஐந்தாறு  மிளகு,
   தேவையான  உப்பு  சேர்த்து,  கொரகொரவென்று  அரைத்து,  சின்னச்  சின்ன  வடையாகப்  பொரித்து  சூடாகப்  பரிமாறுங்கள்.  விருப்பப்பட்டால்...
   கறிவேப்பலை,  வெங்காயத்தையும்  வடை  மாவுடன்  சேர்த்துக்  கொள்ளலாம்.
*  மோர்க்குழம்பு  தயாரிக்கும்போது,  தேங்காய்,  பச்சை  மிளகாய்,  சீரகத்துடன்,  சிறிது  பச்சைக்  கடுகையும்  சேர்த்து  பால்  விட்டு  அரைத்துக்
   கொள்ளவும்.  மோர்க்குழம்பின்  சுவையும்,  மணமும்  அருமையாக  இருக்கும்.
*  பிரெட்  துண்டுகள்  காய்ந்து  அட்டை  போல  கெட்டியாக  இருக்கின்றனவா?  அவற்றைப்  பிய்த்து  மிக்ஸியில்  போட்டு,  கூடவே  பச்சை  மிளகாய்த்
   துண்டுகள்,  நறுக்கிய  வெங்காயம்,  கொஞ்சம்  உப்பு  ஆகியவற்றையும்  போட்டு  கொரகொரப்பாக  அரைத்து,  பிசைந்து  கொள்ளுங்கள்.  வாணலியில்
   எண்ணெய்  காய்ந்ததும்,  பக்கோடாக்களாகப்  பொரித்தெடுத்தால்... மொறுமொறுப்புடன்  மஞ்சூரியன்  போல  சுவையாக  இருக்கும்.
--- அவள் விகடன்.  18 -12 - 2012.                              
--  இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).  

Friday, May 15, 2015

மௌனமே பதில்!

 மகான்  ஒருவரிடம்  மன்னன்,  " முட்டாளுடன்  பழக  நேரிடும்போது  என்ன  செய்ய  வேண்டும் ?"  என்று  கேட்டான்.
     மகான்  பதில்  கூறவில்லை.  மன்னன்  மீண்டும் , மீண்டும்  கேட்டும்,  மகான்  அமைதியாக  இருந்தார்.
     கோபதுடன்  கத்தினான்  மன்னன்.  உடனே  மகான்,  " மன்னா!  உங்கள்  கேள்விக்கு  தகுந்த  பதில்  அளித்துவிட்டேனே?  நீங்கள்தான்  புரிந்து  கொள்ளவில்லை!"  என்றார்.
     "நீங்கள்  பதிலேதும்  சொல்லவில்லையே?"  என்றார்  மன்னர்.
     " ஆம்,  அரசே!  அதுதான்  என்  பதில்.  முட்டாள்களுடன்  பழக  நேரிட்டால்,  மௌனம்  சாதிக்க  வேண்டும்!"  என்றார்  மகான்.
-- குமுதம்  பக்தி  ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

Thursday, May 14, 2015

தெரியுமா? தெரியுமே!

*  ராமானுஜரின்  மறு  அவதாரம்  என்று  போற்றப்படும்  மகான்,  மணவாளமாமுனிகள்.
*  மையப்  புள்ளியின்றி  ஒரு  வட்டத்தை  வரையமுடியாது.  இறைவன்தான்  நம்முடைய  வாழ்வின்  மையம்;  மற்றும்  சாரமும்  அவனே!  நம்  வாழ்வின்
   லட்சியமும்  இறைவனே  என்பதை  நினைவில்  கொண்டு,  நாம்  நமது  அன்றாடக்  கடமைகளைச்  செய்து  வருகிறோம்.  இதுவே  ஆலயத்தில்  நாம்
   பிரதட்சணம்  செய்வதின்  உட்பொருள்.
*  சோழ,  விஜயநகர  மன்னர்களின்  ஆட்சிக்காலத்தைக்  குறிக்கும்  ஆயிரம்  ஆண்டுகளுக்கும்  முற்பட்ட  ( கி.பி. 1101 )  பல  அரிய  கல்வெட்டுகள்
   கண்டறியப்பட்ட  திருத்தலம்  பாலூர்.
*  கிராம  தெய்வங்கள்  என்றாலே  குலவைச்  சத்தமும்  நாட்டுப்புறப்  பாடல்களுமே  பிரதானம்.
*  நெருப்புக்குப்  பக்கத்தில்  யார்  போனாலும்  வியர்க்கும்.  ஆனால்  நெருப்புக்கு  வியர்க்குமா?
---  குமுதம்  பக்தி  ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

Wednesday, May 13, 2015

டிப்ஸ்...டிப்ஸ்...

*  தொட்டிகளில்  ரோஜா  செடி  வளர்ப்பவர்கள் ... தினமும்  தண்ணீர்  ஊற்றும்போது,  நீருடன்  சிறிது  உப்பு  சேர்த்து  கலந்து  ஊற்றினால்  ரோஜா
    பூக்கள்  அதிக  மணத்துடன்  மலரும்.
*  ஜாதி  மல்லிகைப்  பூ  பழுப்பு  நிறமாக  மாறுவதைத்  தடுக்க... பூவை  லெசாக  உலர்த்தி  செய்தித்தாளில்  போட்டு  பொட்டலாமாக  கட்டி  ஃப்ரிட்ஜினுள்
   வைத்துவிட்டால்  புத்தம்  புதிது  போல்  இருக்கும்.
*  பிடிகருனைக்கிழங்கை  வேக  வைக்கும்  போது  அதனுடன்  சில  கொய்யா  இலைகளை  போட்டு  வேகவைத்தால்  கிழங்கு  சீக்கிரம்  வெந்துவிடும்.
   காரமும்  இருக்காது.
*  ஒரு  பங்கு  மக்காச்சோளத்தை  ரவையாக  உடைத்து  அரை  பங்கு  உளுத்தம்  பருப்பு  சேர்த்து  ஊறவைத்து  அரைத்து  உப்பு  சேர்த்து  கலந்து
   இட்லி  வார்த்தால்  சுவையான  சத்தான  இட்லி  தயார்.
*  கோலக்  குழாயில் கோலப்  பொடியை  நிரப்பும்  போது  பொடி  அதிகம்  கொட்டாமல்  இருக்க  வேண்டுமா?  கோலப்பொடியுடன்  சிறிதளவு  மைதாமாவு
   ( அ )  கோதுமைமாவு  சேர்த்துக்  கொண்டால்  கோலப்பொடி  கொட்டவே  தொட்டாது.
*  கோலப்  பொடியை  நன்றாக  சலித்துவிட்டு  கோலக்  குழாயில்  நிரப்பைனால்...துளைகள்  அடைபடாமல்  இருப்பதோடு,  குழாயும்  தரையில்
   சீராக  உருளும்.
--- குமுதம்  சிநேகிதி,  டிசம்பர்  1 - 15 ,  2012.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).  

Tuesday, May 12, 2015

சிலந்திகள்!

 பாலைவனங்களில்  வாழும்  ' டாடெண்டுல்லா '  மாதிரியான  சிலந்திகளில்  ஆண்,  பெண்ணைவிட  சின்னதாய்  இருக்கும்.  பருவ  காலம்  வந்தவுடன்  இந்தக்  குட்டி  ஆண்,  பெரியதொரு  பெண்  சிலந்தியிடம்  தன்  விந்தணுக்களை  எல்லாம்  முதலீடு  செய்யும்.  இப்படி  ஆண்  விந்தணுக்களை  உட்செலுத்தி  முடித்ததும்  அப்படியே  பல்டி  அடித்து  தலையை  முன்னால்  நீட்டும்.  உடனே  பெண்  சிலந்தி  அந்த  ஆண்  சிலந்தியின்  தலையை  கடித்து  சாப்பிட்டுவிடும்!
    ' என்னது ?!  சாப்பிட்டுவிடுமா?  அதுவும்  பெண்  ஆனை  சாப்பிடுவிடுமா?  அதுவும்  கலவி  கொள்ளும்போதா...?  சே,  என்ன  ஒரு  நயவஞ்சகமான  பெண்  சிலந்தி...!  என்று  உடனே  அதை  வைது  வைக்காதீர்கள்.  அதற்கு  முன்னால்  சில  அறிவியல்  தகவல்களை  சொல்லிவிடுகிறேன்.  இந்த  வகை  சிலந்தியை  பொறுத்தவரை,  ஆணின்  ஆயுட்காலம்  மிக  குறைவே.  அவன்  விந்தணுக்களை  வெளியேற்றிவிட்டால்,  அத்தோடு  அவன்  ஜென்ம  பலன்  முடிந்துவிடுவதால்,  அவன்  எப்படியும்  பொட்டென்று  போய்த்தான்  சேருவான்.  இப்படி  அவன்  மாண்டுபோய்  வேறு  எங்கு  விழுந்து  கிடந்தாலும்,  உணவே  கிடைக்காத  இந்த  பாலைவனத்தில்  வேறு  ஏதாவது  ஜீவராசி  அவன்  உடலை  தின்று  அதன்  சக்தியை  பெற்றுவிடும்.  அதற்கு  பதிலாக,  இவனுடைய  சக்தி  அவன்  வாரிசுகளுக்கே  போய்ச்  சேருவது  உசிதம்  ஆகாதோ?  அதனால்தான்  அவன்  அப்படி  பல்டி  அடித்து,  பெண்  லாவகமாக  தன்  தலையைக்  கொய்து  சாப்பிடும்படி  உடலை  வளைக்கிறான்.  எப்படியும்  அடுத்த  சில  கணங்களில்  செத்து  மடியும்  அவன்  உடலை  உட்கொண்டால்,  அவள்  உடல்  மூலமாய்  அவன்  வாரிசுகளுக்குத்தானே  அவன்  சக்தி  போய்ச்  சேரும்.
     அதற்காக,  கலவி  கொண்டிருக்கும்போதே  தின்று  தீர்க்க  வேண்டுமா?  அவன்  வேலையை  முடித்து  கொஞ்சம்  ரிலாக்ஸ்  ஆன  பிறகு  சாப்பட்டால்  ஆகாதா  என்றும்  நமக்குத்  தோன்றலாம்.  இதிலும்  ஓர்  அறிவியல்  விளக்கம்  உண்டு.  ஆணின்  கலவியல்  வேலையை  நிர்ணயிப்பது  அவனுடைய  மூளை  அல்ல,  அவனுடைய  முதுகுத்தண்டு.  அதனால்  தலையே  இல்லாமல்  மூளை  அறுந்து  பிரிந்தபிறகும்  ஆண்  சிலந்தியின்  முண்டம்  மட்டும்  தொடர்ந்து  விந்தணுக்களை  மடமடவென்று  பீய்ச்சி  அடித்துக்கொண்டே  தான்  இருக்கும்.  ஆக  தலை  போனாலும்  அவனுடைய  இனப்பெருக்க  பணியில்  அவன்  மிக  மும்முரமாகத்தான்  இருக்கப்  போகிறான்.  அந்தப்  பணியும்  முடிந்து  அவன்  உடல்  செயலிழந்து  செத்துக்  கிடக்கும்போது,  அதையும்  வாயில்  போட்டுக்கொண்டு  போய்விடும்  பெண்  சிலந்தி.
-- டாக்டர்  ஷாலினி.  ( உறவு  மேம்பட  தொடரில் ).
-- குமுதம்  சிநேகிதி,  டிசம்பர்  1 - 15 ,  2012.
-- இதழ் உதவி:  N.கிரி,  நியூஸ்  ஏஜென்ட் ,  திருநள்ளாறு.  (  கொல்லுமாங்குடி ).   

Monday, May 11, 2015

தவளை.

   தவளை.யே  ஒரு  ஆச்சர்யமான  உயிரினம்தான்!  தவளைகள்  நீரிலும்  நிலத்திலும்  வாழும்  இயல்புடையவை.    இயற்கையாகவே  தவளைகள்  தமது  கண்களால்  கேட்கவும்  செய்கின்றன.  தவளைகளின்  கண்களே  காதுகளாகவும்  இயங்குகிறது.
    தவளைகளுக்கு  அதனுடைய  கண்களுக்குப்  பின்புறம்  முளையிலிருந்து  வரும்  நுண்ணீய  நரம்பு  அமைந்துள்ளது.  அந்த  நரம்புகள்தான்  காதுகளின்  பணியினைச்  செய்கிறது.
--   தினமலர்  இணைப்பு சிறுவர் மலர் .  30 -11 - 2012.

Sunday, May 10, 2015

தங்கத்தில் கலப்படம்

  (  சிறப்பு ).
தங்கத்தில்  கலப்படத்தை  கண்டுபிடிக்க  புதிய  கருவி.
நகையை  வைத்தால்  'கலப்பு'  எவ்வளவு  என  கூறிவிடும்.
   ஓஸ்மீயம்,  பல்லேடியம்,  ருத்தீனியம்,  இரிடியம்  ஆகிய  வெள்ளை  உலோகங்கள்  தற்போது  பெரும்பாலான  தங்க நகைகளில்  கலக்கப்படுகின்றன.  இதைக்  கண்டறிவது  மிகவும்  கடினம்.  நகைகளை  உருக்கினால்தான்  இந்த  உலோகங்களைக்  கண்டுபிடிக்க  முடியும்.  அதுவும், 2,200  டிகிரி  பாரன்ஹீட்  அளவுக்கு  வெப்பப்படுத்த  வேண்டும்.  ஆனால், அந்த  அளவு  வெப்பத்தில்  தங்கம்  துகளாக  மாறி  காற்றில்  கலந்துவிடும்.  இந்த  முறைக்கு  மாற்றாக, தங்கத்தின்  தூய  தன்மையை  எளிதில்  கண்டறிய  தற்போது  எக்ஸ்.ஆர்.எஸ் ( XRS ) என்ற  கருவி  உள்ளது.  இந்த  கருவியில்  ஒரு  தங்க  நகையை  வைத்தால்,  அதில்  எந்த  அளவுக்கு  தங்கம், வெள்ளி, செம்பு, இதர  உலோகங்கள்  உள்ளன  என்பதை  சிறிது  நேரத்தில்  கண்டறிந்து  தெரிவித்துவிடும்.
   நகை  எந்த  அளவுக்கு  சுத்தமாக, தரமாக  இருக்கிறது  என்பதை  நுகர்வோர்  இந்த  கருவி  மூலம்  உறுதிப்படுத்திக்கொள்ள  முடியும்.  இக்கருவி  தற்போது  சந்தையில்  கிடைக்கிறது.
-- எஸ்.ரேணுகாதேவி. (கடைசிப்பக்கம் )
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், மே  6,   2015.                      
இதையும்  தெரிந்துகொள்ளுங்கள்
   இந்தக்  கருவி  கெட்டி  நகை  எனப்படும்  ஆண்கள்  அணியும்  காப்பு,  பெண்கள்  அணியும்  வலையல்  போன்றவற்றில்  உள்ள  தரத்தை  அறிய  முடியாது.  ஏனெனில், இது  ஒரு  குறிப்பிட்ட  மைக்ரான்  அளவுதான்  உள்ளே  ஊடுருவிச்  சென்று  தரம்  அறிய  முடியும்.  இந்தக்  கருவி  எப்போதோ  வந்துவிட்டது.  இதன்  விலை  பல  லட்சங்கள்.  எனவே, பெரிய  நகைக்  கடைகளில்  மட்டுமே  இருக்கும்.
-- பாலாஜி, 'தி இந்து' இணையதளம்  வழியாக... ( இப்படிக்கு  இவர்கள் ). கருத்துப்  பேழை.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மே  7,   2015.  

ஐ நோ யுனோ!

  அண்ணாவைப்  பார்க்க  இங்கிலாந்தைச்  சேர்ந்த  செய்தியாளர்  ஒருவர்  வந்திருந்தார்.  ஆங்கிலத்திலும்  உலகச்  செய்திகளிலும்  அண்ணா  வல்லவர்  இல்லை;  ஐ. நா.சபை  'UNO '  பற்றி  அவருக்கு  ஒன்றும்  தெரியாது ? என்று  நினைத்தார்.  அண்ணாவை  எப்படியாவது  கேள்வியில்  மடக்கி  விட  வேண்டும்  என  நினைத்துக்கொண்டு ' பன்னாட்டு  அவை ( யுநோ ) யைப்  பற்றித்  தங்களுக்குத்  தெரியுமா?  என்று  கேள்வி  கேட்டார்.
     அதற்கு  அண்ணா  கொஞ்சம்கூட  தாமதிக்காமல்,  ' ஐ நோ  யுனோ.  ஐ  நோ  யு நோ  யுனோ.  பட்  யு  டோன்ட்  நோ  ஐ  நோ  யுனோ.'  I  Know  UNO,  I  Know  you  Know  UNO,  But  you  don't  Know  I  Know  UNO '  என்று  சரவெடியாக  வெடித்தார்.
     அண்னாவின்  பதிலைக்  கேட்டு,  அதிர்ந்த  அந்த  செய்தியாளர்  தன்னுடைய  தவறான  கணிப்பை  நினைத்து  தலைகவிழ்ந்து  நின்றார்.
--  தினமலர்  இணைப்பு சிறுவர் மலர் .  30 -11 - 2012. 

Saturday, May 9, 2015

11 ஆல் பெருக்க.

   இரு  இலக்கங்களின்  கூட்டுத்தொகை  10 - ஐ  விட  குறைவாக  இருக்கும்  எண்களை  11 - ஆல்  பெருக்கும்  முறையைப்  பார்ப்போம்.
     ஒரு  உதாரணம்:  52 - ஐ  11 - ஆல்  பெருக்கலாம்.
      52 - ன்  இரு  இலக்கங்களின்  கூட்டுத்தொகை  5 + 2 = 7.
     விடையின்  முதல்  இலக்கமாக  5 - ஐ  எழுதுங்கள்;  நடு  இலக்கமாக  7 - ஐ  (  கூட்டுத்தொகை )  எழுதுங்கள்.  கடைசி  இலக்கமாக  2 - ஐ  எழுதுங்கள்.
அவ்ளொதான்... 52  பெருக்கல்  11 = 572 .
     இனி,  இரு  இலக்கங்களின்  கூட்டுத்தொகை  10  அல்லது  அதைவிட  அதிகமாக  இருக்கும்  எண்களை  11 - ஆல்  பெருக்கும்  முறை.
     ஒரு  உதாரணம்:  59 - ஐ  11 - ஆல்  பெருக்கலாம்.  59 - ன்  இரு  இலக்கங்களின்  கூட்டுத்தொகை  5 + 9 = 14.
     விடையின்  முதல்  இலக்கம்  =  5 + 1 = 6.  அதாவது,  ( பெருக்கப்பட  வேண்டிய  முதல்  இலக்கமான 5 ) + ( கூட்டுத்தொகையான ) 14 - ன்  முதல்  இலக்கமான  1 ) =  6.
     விடையின்  இரண்டாவது  இலக்கம் =  4.  அதாவது,  கூட்டுத்தொகையான  14 - ன்  இரண்டாவது  இலக்கம்.
     விடையின்  மூன்றாவது  இலக்கம்  =  9.  அதாவது,  பெருக்கப்பட  வேண்டிய  59 - ன்  இரண்டாவது  இலக்கம்.
     அவ்ளோதான்... 59 பெருக்கல்  11 =  609.
-- தினமலர்  இணைப்பு சிறுவர் மலர் .  17 - 6 - 2011.

Friday, May 8, 2015

காசு பணம் துட்டு

*   ரூபாய்  நோட்டுகளின்  பின்பக்கத்தில் 15  மொழிகளில்  அதன்  மதிப்பு   அடுத்தடுத்து  குறிப்பிடப்பட்டிருக்கும்.  ரூபாய்
    நோட்டின்  மையப்  பகுதியில்  இந்தியிலும், பின்பக்கம்  ஆங்கிலத்திலும்  மொத்தம்  17  இந்திய  மொழிகளில்  மதிப்பு
    குறிப்பிடப்பட்டிருக்கும்.
*   நாம்  நினைப்பதற்கு  மாறாக  ரூபாய்  நோட்டுகள்  காகிதத்தால் ஆனவை  அல்ல.  இன்றைக்கு  நாம்  பயன்படுத்தும் ரூபாய்
    நோட்டுகள்  பருத்தி, பருத்தி  கழிவால்  உருவாக்கப்படுகின்றன.
*   மக்களின்  பொதுப்  புழக்கத்துக்காக  500 ரூபாய்  நோட்டுகள் 1987-ம்  ஆண்டும், 1000 ரூபாய்  நோட்டு  2000-ம்  ஆண்டும்
    வெளியிடப்பட்டன.*   75, 150, 1000  ரூபாயிலும்  நாணயங்கள்  இருக்கின்றன.  2010-ம்  ஆண்டில்  பல்வேறு
    நினைவுநாட்களைக்  கொண்டாட  மேற்கண்ட  மதிப்புகளில்  நாணயங்கள்  வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால், இவை
    பொதுப்பயன்பாட்டுக்கானவை  அல்ல. ரிசர்வ்  வங்கியின்  75-ம்  ஆண்டு விழா,  ரவீந்திரநாத்  தாகூரின்  150-வது  ஆண்டு
    விழா,  தஞ்சை  பிரகதீஸ்வரர் கோயிலின்  1000-வது  ஆண்டு  விழாக்களை  கொண்டாடும்  வகையில்  இந்த  நாணயங்கள்
    வெளியாயின.
*   2011-ம்  ஆண்டு  நாணயச்  சட்டத்தின்படி  1000 ரூபாய்  வரையிலான  மதிப்பில்  நாணயங்களை  வெளியிடலாம்.
    ஒவ்வொரு  ரூபாய்  நோட்டின்  இடது  கைப்பக்கத்தில்  தூக்கலாகச்  செதுக்கப்பட்ட ஏதாவது  ஒரு  வடிவம்  இருக்கும்.
    ஆயிரம்  ரூபாயில்  வைரம்,  500  ரூபாயில்  வட்டம், 100  ரூபாயில்   முக்கோணம்,  ரூ, 50ல்  சதுரம், ரூ.20-ல்  செவ்வகம்,
    ரூ.10-ல் எந்த  வடிவமும்  இருக்காது.  இந்த  வடிவங்களைத்  தடவிப்  பார்த்தே  பார்வையற்றவர்கள்  ரூபாயின்  மதிப்பை
    அறிகிறார்கள்.
*   நாசிக் ( மகாராஷ்டிரா), தேவாஸ் ( ம.பி ), மைசூர் ( கர்நாடகம் ),  சல்பானி ( மே.வ )  ஆகிய  4  இடங்களில்  ரூபாய்
    நோட்டுகள்  அச்சிடும்  அச்சகங்கள்  உள்ளன.
*   மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத்தில்  உள்ள  நாணயச்  சாலைகளில்  நாணயங்கள்  உருவாக்கப்படுகின்றன.
*   எந்த  நாணயச்  சாலையில்  நாணயம்  உருவாக்கப்படுகிறது  என்பதற்கு  அடையாளமாக  நாணயத்தில்  ஆண்டுக்குக்  கீழே
    டெல்லி  என்றால்  புள்ளி,  மும்பை  என்றால்  வைரம், ஹைதராபாத்  என்றால்  நட்சத்திரம், கொல்கத்தா  என்றால்  எந்த
    அடையாளமும்  இன்றி  இருக்கும்.
*   பயன்படுத்த  முடியாத  பழைய  ரூபாய்  நோட்டுகள்  என்ன  செய்யப்படுகின்றன  என்று  தெரியுமா? பயன்படுத்த  முடியாத
    நோட்டுகளை  வங்கிகளில்  கொடுத்துப்  புதிய  நோட்டுகளைப்  பெற்றுக்  கொள்ளலாம்.  அந்தப்  பழைய  ரூ. நோட்டுகளை
    ரிசர்வ்  வங்கி  சேகரித்து,  அவற்றை  துண்டு  துண்டாக்கி, பந்தைப்  போல  மாற்றி,  தேநீர்க்  குவளை  மூடிகள், பேப்பர்
    வெயிட்,  பேனா  ஸ்டாண்ட் , கீ  செயின்  போன்றவை  செய்யப்  பயன்படுத்துகிறது.
-- தொகுப்பு:  ஆதி.  ( மாயாபஜார் ).  இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், மே 6, 2015.  

ஆதார் அட்டை

    " இந்திய  அரசாங்கம்  வழங்கும்  ' ஆதார்  அடையாள  அட்டை' யை  எப்படிப்  பெறுவது?"
      " மத்திய  அரசு  இந்தியக்  குடிமக்களுக்கு  வழங்கும்  அடையாள  அட்டை,  ஆதார்.  பெயர்,  முகவரி,  சுய  விவரக்  குறிப்புகள்,  கைரேகை  போன்ற  நுட்பமான  குறிப்புகளால்  பதிவுசெய்யப்படுவதால்  ஆதர்  அட்டை  எல்லாவிதமான  பயன்பாடுகளுக்கும்  செல்லத்தக்க  வகையில்  இருக்கும்.
        ஆதார்  அட்டை  பெற  தலைமை  அஞ்சல்  அலுவலகங்களில்  10  ரூபாய்  கொடுத்து  விண்ணப்பம்  பெற  வேண்டும்.  விண்ணப்பத்தைப்  பூர்த்திசெய்து  சிக்கல்  இல்லாத  முகவரிச்  சான்றிதழ்  இணைக்க  வேண்டும்.  உதாரணத்துக்கு  ரேஷன்  கார்டில்  சரியான  முகவரி  இருக்காது.  வாக்காளர்  அட்டை,  பாஸ்போர்ட்  நகல்  போன்ற  ஏதேனும்  ஒன்றின்  நகலை  இணைப்பது  நல்லது.  ஆதார்  அட்டை,  30  நாட்களில்  கிடைத்துவிடும்.
-- அனிதாபட்,  நிதி  ஆலோசகர்.
--  ஆனந்த விகடன்,  28 - 11 - 2012. 

Thursday, May 7, 2015

பிரதட்சணம்.

 பிரதட்சணத்தை  ஏன்  இடமிருந்து  வலமாக  ( Clock  wise )  செய்கிறோம்?
போக்குவரத்து  இடையூறு  இல்லாமல்  இருக்கும்  என்பதற்காக  இந்த  வழக்கம்  ஏற்பட்டது  போல்  தோன்றலாம்.  அப்படியல்ல.  நாம்  பிரதட்சணம்  செய்யும்போது,  இறைவன்  எப்போதும்  நமக்கு  வலப்பக்கமாகவே  இருக்கிறான்.
     இந்தியாவில்  வலப்பக்கம்  என்பது  மங்கலத்தைக்  குறிப்பது!  ' வலது  காலை  எடுத்து  வைத்து  வா '  என்பர்.  எதையும்  கொடுக்கும்  போதும்,  வாங்கும்  போதும்  இடது  கையால்  செய்யாமல்  வலது  கையால்  கொடுப்பதும்,  வாங்குவதும்  மங்கலகரமானது  என்பதும்  நமது  நம்பிக்கை.
    ஆங்கிலத்தில்கூட  வலதுபக்கத்தை  Right  Side  -  அதாவது,  சரியான  பக்கம்  என்றே  குறிக்கின்றனர்.  எனவே  இறைவனது  கர்ப்ப  கிரகத்தை  சுற்றி  வருகையில்  நமக்கு  என்றும்  உறுதுணையாக,  இறைவன்  நமது  வலது  கையாக  இருக்கிறான்  என்ற  எண்ணம்  நமக்கு  தோன்றும்.
--  அனிதா , குமுதம்  பக்தி ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

Wednesday, May 6, 2015

நிந்தாஸ்துதி !

   தமிழ்க்  கவிதை  உலகில்  குறை  கூறுவது  போல்  பாராட்டும்   மரபு  உண்டு.  அதை நிந்தாஸ்துதி  என்று  அழைப்பர்.  தமிழ்க்  கடவுள்  முருகனை  கவிமணி   நிந்தாஸ்துதி  செய்து  பாடியிருக்கும்  கவிதை  மிகவும்  சுவையானது.
      தந்தை  மலையாளி  தாய்மாமன்  மாட்டிடையன்
      வந்த  ஒரு  மச்சானும்  வாணியனே சந்தமும்
      விண்  முகத்தை  எட்டும்  அயில்  வேலேந்து
      பன்னிருகைச்  சண்முகத்திற்கு  சாதியெதுதான்.
      என்பது  தான்  அப்பாடல்.
கயிலைமலையிலே  உள்ள  சிவன்,  முருகனின்  தந்தை.  அவர்  மலையிலே  வாழ்வதால்  மலையாளி  என்றார்  கவிமனி.  திருமால்  முருகனின்  தாய்மாமன்.  மாடு  மேய்த்த  கண்ணன்  திருமாலின்  ஒன்பதாவது  அவதாரம்.  அதனால்  அவரை  மாட்டிடையன்  என்றார்.  திருமாலின்  மகன்  பிரம்மன்.  அதனால்  அவர்  மச்சான்  ஆகிறார்.  அவர்  கலைமகளான  வாணியின்  கணவர்.  இந்த  அடிப்படையில்  பிரம்மனை  வாணியன்  என்றார்  கவிமணி.  அதனால்  முருகனே  உன்னை  என்ன  சாதியில்  சேர்ப்பது  என்ற  கேள்வியை கவிமணி  நகைச்சுவையாக  எழுப்புகிறார்.  இதுதான்   நிந்தாஸ்துதி  என்னும்  குறை  கூறுவது  போல்  பாராட்டும்  மரபு.  இதனை  தமிழ்  இலக்கனம்  வஞ்சப்புகழ்ச்சி  என்று  கூறும்.
--- கவிமணி  தேசிகவிநாயகம்  பிள்ளை.
--  குமுதம்  பக்தி ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

Tuesday, May 5, 2015

" பான் கார்டு "

" பான்  கார்டு  தொலைந்தால்  மீண்டும்  பெறுவது  எப்படி?"
     " உங்கள்  ஊரில்  அமைந்திருக்கும்  பான்  கார்டு  வழங்கும்  அலுவலகத்தில்  பான்  கரெக் ஷன்  விண்ணப்பம்  பெற்றுக்கொள்ளூங்கள்.  அதை  நிரப்பி  அத்துடன்  நீங்கள்  பணிபுரிவதற்கான  அல்லது  படித்துக்கொண்டு  இருப்பதற்கான  அடையாள  அட்டை,  இருப்பிட  அடையாள  முகவரி  சான்றிதழ்  ஆகியவற்றின்  நகலையும்  உங்கள்  புகைப்படத்தையும்  விண்ணப்பத்துடன்  இணைத்து  அதே  அலுவலகத்தில்  சமர்ப்பியுங்கள்.  கட்டணமாக  100  ரூபாய்  செலுத்தினால்,  45  நாட்களுக்குள்  புது  பான்  கார்டு  பெற்றுக்கொள்ளலாம்.  பான்  கார்டு  கரெக் ஷன்  விண்ணப்பத்தில்  உங்கள்  பெயர்,  பிறந்த  நாள்,  முகவரி,  மின்னஞ்சல்  முகவரி  போன்றவற்றைக்  குறிப்பிடவேண்டும்.  தொலைந்துபோன  பான்  கார்டில்  தவறாக  இருந்தால்,  அதை  இதன்  மூலம்  திருத்திக்கொள்ளலாம்.  உங்கள்  ஊரில்  இந்த  அலுவலகம்  அமைந்திருக்கும்  முகவரி  அறிந்துகொள்ள  www.tin- nsdl.com  என்ற  தளம்  தட்டுங்கள்! "
-- ராஜன்,  இயக்குநர்,  ஹோலிஸ்டிக்  இன்வெஸ்ட்மென்ட்  பிளானர். ( இதுதான்...இதற்குத்தான்...இப்படித்தான் ! )
--  ஆனந்த விகடன்,  28 - 11 - 2012.

Monday, May 4, 2015

ஜோக்ஸ்.

*  " ஒற்றன்  வேலைக்கு  ஆள்  தேவை  என்பதை  எப்படிக்  கண்டுபிடித்தாய்?"
   " ஒட்டுக்  கேட்டேன்  மன்னா...."
   " யு  ஆர்  அப்பாயின்டட் !"
*  " நீ  மனசு  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?  மூளை  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?"
   " என்  சம்சாரம்  சொல்றதைக்  கேட்டுதான்  நடப்பேன் !"
*  " நீ  செய்த  தப்பு  என்ன  தெரியுமா?"
   " மாட்டிக்கிட்டதுதான்  எஜமான் !"
--- ஆனந்த விகடன்,  28 - 11 - 2012.  

Sunday, May 3, 2015


தவளை - தேரை.

தவளைக்கும்  தேரைக்கும்  என்ன  வித்தியாசம்  தெரியுமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தவளை                                                                                              தேரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தண்ணீர்  உள்ள  பகுதியில்  வசிக்கும்                                    வாழ  தண்ணீர்  தேவையில்லை.
உடம்பு  மெல்லியதாகவும்,  ஈரப்பதத்துடன்  இருக்கும்             உடம்பு  சொரசொரப்பாகவும்,  வரண்டுபோய்  இருக்கும்.
ஒல்லியான  தேகம்                                                              குண்டு  குண்டாக  இருக்கும்.
நீண்ட  கண்கள்  இருக்கும்                                                    பந்து  போல்  உருண்டையான  கண்கள்/
முன்னங்கால்கள்  நீண்டு  இருக்கும்                                       முன்னங்கால்கள்  குட்டையாக  இருக்கும்.
தத்தித்  தாவ  முடியும்                                                           குதிக்க  முடியாது.
-- தினமலர் ,  சிறுவர்மலர்.   நவம்பர்,  23.  2012.   

Saturday, May 2, 2015

இன்பாக்ஸ்

 *  ரிமோட்  கன்ட்ரோல்  இல்லாத  டி.வி.. கற்பனை  செய்ய  முடிகிறதா  உங்களால்?  1955 ல்  டி.வி.  ரிமோட்டைக்  கண்டுபிடித்த  யூகன்  போலே,  கடந்த  வாரம்  இறந்து  போனார். ஜப்பானின்  சிகாகோ  நகரில்  பிறந்து,  ஜெனித்  எலெக்ரானிக்ஸ்  நிறுவனத்தில்  வேலை  பார்த்த  போலே,  ரிமோட்டைக்  கண்டுபிடித்தபோது  முதலில்  யாரும்  அதன்  இயக்கத்தை  நம்பவில்லையாம்.  ஆயுளின்  இறுதியில்  போலே  வசம்  இருந்தது  மொத்தம்  18  பொருட்களுக்கான  காப்புரிமை.  அதில்  ஒன்று  ஃப்ளாட்  டி.வி. ரிமோட்.  சல்யூட்  சார்!
-- ஆனந்த விகடன்,  6 - 6 - 2012.  

Friday, May 1, 2015

ஜோக்ஸ் !

*  " உன்னைக்  கட்டிகிட்டதுக்கு  ஒரு  கழுதையைக்  கட்டியிர்க்கலாம்!"
   " நீங்க  சொல்லிட்டு  இருக்கீங்க... நான்  எப்பவோ  செஞ்சுட்டேன்!"
*   "சாமியாருக்கு  ஆங்கிலப்  பேச்சாற்றல்  அவசியமா  குருஜி?"
    "பின்னே... ஃபாரின்  ஃபிகர்ஸை  எப்படி  உஷார்  பண்றதாம்!"
*  " குற்றவாளிக்  கூண்டில்  இப்படி  எதுவுமே  பேசாம  நின்னா  எப்படி?"
   " மைக்...சோடா...இல்லாட்டி  எனக்குப்  பேச  வராது  ஜட்ஜையா!"
*  " திஸ்  வேஷ்டியை  வாஷ்  அண்ட்  கம்..."
   " தலைவர்  இங்கிலீஷ்ல  வெளுத்து  வாங்குவார்னு  சொன்னேன்ல்ல.." ;
--  ஆனந்த விகடன்,  6 - 6 - 2012.

சிதம்பர ரகசியம்

  (  சிறப்பு )   சிதம்பரம்  நடராஜர்  கோயில்  கும்பாபிஷேகம்  01-05.2015 .
பஞ்சபூத  தலங்களில்  ஒன்று
     உலகில்  வாழ்வதற்கு  பெரிதும்  ஒத்திசைவாக  இருப்பதில்  நிலம்,  நீர்,  காற்று,  ஆகாயம்,  நெருப்பு  என்னும்  பஞ்சபூதங்கள்  பெரும்பங்கு  வகிக்கின்றன.  அதில்  திருவாரூர்  தியாகராசர்  நிலதின்  அதிபதியாகவும்,  திருவானைக்காவல்  ஜம்புகேஸ்வரர்  நீருக்கு   அதிபதியாகவும்,  திருக்காளத்தி  காளஹஸ்தீஸ்வரர்  காற்றின்   அதிபதியாகவும்,  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  நெருப்பின்   அதிபதியாகவும்,  ஆகாயத்தின்   அதிபதியாக  சிதம்பரம்  நடராஜ  பெருமானும்  உள்ளனர்.
தரிசிக்க  முக்தி
     திருவாரூரில்  பிறந்தால்  முக்தி,  காஞ்சியில்  வாழ்ந்தால்  முக்தி,  திருவண்ணாமலையை  நினைக்க  முக்தி,  சிதம்பரத்தை  தரிசிக்க  முக்தி,  காசியில்  இறக்க  முக்தி  என்பார்கள்.
உடலின்  அமைப்பு
     மனிதனின்  உருவ  அமைப்பிற்கும்,  தங்கத்தால்  ஆன  நடராஜர்  சன்னதிக்கும்  நிறைய  ஒற்றுமை  இருக்கிறது.  பொன்னம்பலத்தில்  சிவாய  மந்திரம்  பொறிக்கப்பட்டு  வேயப்பட்டுள்ள  21  ஆயிரத்து  600  ஓடுகள்,  மனிதன்  ஒரு  நாளைக்கு  விடும்  சுவாசத்தின்  எண்ணிக்கையைக்  குறிக்கும்.  பொன்னம்பலத்தில்  அடிக்கப்பட்டுள்ள  72  ஆயிரம்  ஆணிகள்,  மனிதனின்  நாடி  நரம்புகளைக்  குறிக்கிறது.  கோயிலில்  உள்ள  9  வாசல்கள்,  மனித  உடலிலுள்ள  9  துவாரங்களை  நினைவுபடுத்துகிறது.  இது  தவிர  ஆன்மிக  ரீதியிலான  அமைப்பும்  உண்டு.  ஐந்தெழுத்து  மந்திரமான  சிவாயநம  என்பதின்  அடிப்படையில்  பொன்னம்பலத்தின்  ஐந்து  படிகளும்,  64  கலைகளின்  அடிப்படையில்  சாத்துமரங்களும்,  96  தத்துவங்களைக்  குறிக்கும்  விதமாக  96  ஜன்னல்களும்,  4  வேதங்கள்,  6  சாஸ்திரங்கள்,  பஞ்சபூத  அடிப்படையில்  தூண்களும்  அமைக்கப்பட்டுள்ளன.
தேரோட்டத்தில்  உலாவரும்  மூலவர்
    சிற்சபையில்  வீற்றிருக்கும்  மூலவரே,  தேரோட்டத்தின்  போது,  உற்சவராக  மாறி  தேரில்  அமர்ந்து  உலா  வருவது,  வெளியில்  வருவது  வேறு  எந்த  ஆலயத்திலும்  காணமுடியாத  ஒன்றாகும்.
10  தீர்த்தக்  குளங்கள்
       மூர்த்தி,  தலம்,  தீர்த்தம்  மூன்றாலும்  சிறப்பு  பெற்றதுடன்,  10  தீர்த்தங்கள்  உள்ளது  இத்தலம்.  
     இங்குள்ள  ஆயிரங்கால்  மண்டபத்தில்தான்,  சேக்கிழார்  பெரியபுராணம்  பாடி  அரங்கேற்றினார்.  இத்தலத்தில்  உள்ள  முருகப்பெருமானை  தனது  திருப்புகழில்  பாடியுள்ளார்,  அருணகிரிநாதர்.  
-- தொகுப்பு :-  நெய்வாசல்  நெடுஞ்செழியன்.
-- தினத்தந்தி.  அருள்தரும்  ஆன்மிகம்  இணைப்பு.  28-4-2015.
-- இதழ்  உதவி:  மு. விஷ்ணுவர்த்தன்,  திருநள்ளாறு.