Monday, February 28, 2011

' கவித்துவமான சிந்தனை ! '

' கவித்துவமான சிந்தனைக்கு ஓர் உதாரணம் ? '
" நார்வே பெண் கவிஞர் செல்மாவின் வரி இது ...
' பனிக்கட்டி என்பது தண்ணீரின் சோம்பேறித்தனம் ! ' "
---- ஆனந்தவிகடன் , 11. 8. 10 .
' ப்ராப்தி பலசித்தி ரஸ்து '
அர்ச்சனையின்போது " ப்ராப்தி பலசித்தி ரஸ்து " என்று கூறுவதன் பொருள் :
அர்ச்சனை என்பது மூன்று செயல்பாடுகளை உள்ளடக்கியது . சங்கல்பம் , அர்ச்சனை , பிரசாதம் பெறுதல் .
முதலில் செய்யும் சங்கல்பம் என்பது நாம் எந்த நோக்கத்திற்காக அர்ச்சனை செய்கிறோம் என்று சொல்வது . இதனைக் ' குறிக்கோள் பகருதல் ' என்றும் சொல்லலாம் .
இரண்டாவது இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, அர்ச்சகர் அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லிச் செய்யும் பொழுதும், நிவேதனம் தீபாராதனை இவைகளைச் செய்யும்பொழுதும் சுவாமியைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும் .
மூன்றாவது பிரசாதம் பெறுதல் . இதுவே நாம் செய்து கொண்ட சங்கல்பம், அர்ச்சனைகள் இவைகளின் பலனாகும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியர் . தினமலர் , ஆகஸ்ட் 5 . 2010.

Sunday, February 27, 2011

ஷேக்ஸ்பியர் -- ஹேம்லட்.

ஹேம்லட்டில், ஷேக்ஸ்பியர் சிட்டுக் குருவியைப் பற்றி குறிப்பிடுகிறார் . லேகிய சிட்டுக்குருவி அல்ல ; பைபிளில் வரும் சிட்டுக்குருவி .
' There is special providence in the fall of a sparrow . If it be now it is not to come ; if it be not to come , it will be now ; if it be not now , yet it will come -- the readiness is all . ' என்ன ஒரு கவித்துவம் ! பொலோனியஸின் மகன் லார்ட்டஸுக்கும் தன் வளர்ப்பு மகனான இளவரசன் ஹேம்லட்டுக்கும் வாள் சண்டைக்கு ஏற்பாடு செய்கிறான் க்ளாடியஸ் அரசன் . வாள் சண்டையில் ஹேம்லட் மரணமடைய வேண்டும் என்பது அரசனின் திட்டம் . அதற்காக லார்ட்டனின் வாள் முனையில் கடும் விஷம் தடவப்படுகிறது . அப்படியும் ஹேம்லட் சாகாவிட்டால் என்ன செய்வது என்று போட்டியின் இடையே அவனுக்கு விஷம் கலந்த ஒயினும் கொடுக்க ஏற்பாடு செய்கிறான் அரசன் .
ஏற்கனவே லார்ட்டஸின் தந்தையான பொலோனியஸைக் கொன்றவன் ஹேம்லட் ; மேலும் , லார்ட்டஸின் சகோதரி ஒஃபிலியாவுக்குப் பைத்தியம் பிடித்து அவள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணமாக இருந்தவன் ஹேம்லட் . இப்படி தன் தந்தை, சகோதரி ஆகிய இருவரின் மரணங்களுக்கும் காரணமான ஹேம்லட்டைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறான் லார்ட்டஸ் . இந்தச் சதியை யூகித்துவிட்ட ஹேம்லட்டின் நண்பன் ஒராஷியோ, ' இந்த வாள் சண்டையில் கலந்துகொள்ளாதே ' என்று ஹேம்லட்டைத் தடுக்கிறான் . அப்போது ஹேம்லட் சொல்லும் வாசகமே இது . என்ன அர்த்தம் ? ' இப்போது நடக்கும் என்றால் , அது நடக்காமல் போகலாம் ; நடக்காது என்றால் , நடந்தாலும் நடந்துவிடலாம் ; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும் . எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது . எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது !'
அந்தச் சண்டையில் விஷம் தோய்ந்த வாள் பட்டதால் லார்ட்டஸும் சாகிறான் . சாவதற்கு முன்னால் க்ளாடியஸ் அரசனின் சதிபற்றி ஹேம்லட்டிடம் சொல்லிவிடுவதால், அதே விஷ வாளினால் க்ளாடியஸைக் குத்தி, அவன் ஏற்பாடு செய்திருந்த விஷ ஒயினையும் அவனையே அருந்தச் செய்கிறான் ஹேம்லட் . சோக காவியம் என்பதால் முடிவில் எல்லோரும் இறந்துவிடுகிறார்கள் .
--- மனம் கொத்திப் பறவை ! தொடரில் , சாருநிவேதிதா . ஆனந்தவிகடன் , 11. 8. 10 .

Saturday, February 26, 2011

தாய்ப்பால் கொடுங்க !

உங்க குழந்தை புத்திசாலியா இருக்கணுமா ? தாய்ப்பால் கொடுங்க !
பிறக்கும் குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் . தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்லாது தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது !
தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான் அனைத்து சத்துக்களும் இருக்கிறது .
தாய்மார்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மிலி முதல் 1.5 லிட்டர் வரையில் பாலை உற்பத்தி செய்கின்றன . ரத்தத்தில் உள்ள குளுகோஸ், கால்ஷியம், விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன . அதனால் எல்லா சத்துக்களும் அடங்கிய தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது . ஆனால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்தும் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகிறது .
குழந்தைகள் குறித்து லண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது . அதில், ' குழந்தையின் செரிமான உறுப்புகளைப் பாதுகாக்கும் அதிசய ஆற்றல் படைத்த ஒரு ரசாயனப்பொருள் தாய்ப்பாலில் இருக்கிறது ; குழந்தை பிறந்தவுடன் சுரக்கின்ற முதலில் சீம்பாலில் இது மிக அதிக அளவில் இருக்கிறது ; இந்தப் பொருள் , குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பிகளினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பக்குவப்படுத்துகிறது ' என்று கண்டறிந்துள்ளனர் . தாய்ப்பாலில் உள்ள அன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்தான் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .
--- ராஜி வெங்கடேஷ் , தினமலர் . 7. 8. 2010.

Friday, February 25, 2011

ஒரு குட்டிக் கதை ....

போனில், ஒரு சிறுவனுக்கும், வீட்டு உரிமையாளர் பெண்ணிற்கும் இடையே நடக்கும் உரையாடல்....
சிறுவன் : உங்க வீட்டு தோட்டத்தை நான் சுத்தப்படுத்தட்டுமா ?
பெண் : அந்த வேலைக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறானே ?
சிறுவன் : அவனை விடக் குறைவா சம்பளம் கொடுத்தா போதும் . நான் நல்லா வேலை செய்வேன் ....
பெண் : வேண்டாம் , அவனே நல்லா வேலை பண்றான் .
சிறுவன் : வீட்டை சுத்தப்படுத்தற வேலை கூட செய்வேன் .
பெண் : வேண்டாம் . அதையும் அவனே நல்லா செய்றான் .
இதன்பின், சிறுவன் ' நன்றி ' என்று கூறி போனை வைக்கிறான் .
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அந்தச் சிறுவனிடம், " வேலை செய்ய வேண்டும் என்ற உன் எண்ணம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . நீ என் கடைக்கு வேலைக்கு வர்றியா ? " என்று கேட்கிறார் .
அதற்கு அந்தச் சிறுவன், " நான் இப்ப போனில் பேசிட்டிருந்த பெண்மணியின் வீட்டில்தான் வேலை செய்யறேண் . நான் செய்யற வேலை அவங்களுக்கு திருப்தி தருதான்னு தெரிஞ்சுக்கத்தான் போன் பண்ணி கேட்டேன் ! " என்று சொல்லிவிட்டு சிட்டாக ஓடி மறைகிறான் அந்த சிறுவன் !
இந்தச் சிறுவன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு பாடம், நம்மை நாமே ' சுய மதிப்பீடு ' செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் .
--- தினமலர் , 7. 8. 2010.

Thursday, February 24, 2011

கையை கவனியுங்க .

நம்மூரில் ஒவ்வொருவரது எதிர்காலத்தை கணிக்க கைரேகை பார்ப்பார்கள் . ஆனால் தலைவர்களின் மனநிலையை அவர்களின் கையசைவை வைத்து கணிக்கிறார்கள் மேற்கத்திய விஞ்ஞானிகள் .
அரசியல் தலைவர்களின் மனநிலைக்கும் சொல்லவந்த கருத்துக்கும் ஏற்ப அவர்களின் கையசைவு இருக்கிறது என்பது நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . இதை நிரூபிக்க அவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல்களை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டனர் .
அமெரிக்க அதிபர் ஒபாமா நேர்மறையான மனநிலையில் இருக்கும்போது இடது கையைத்தான் பயன்படுத்துவார் . அதே எதிர்மறையான தகவல்களை சொல்ல வரும்போது வலது கையை வேகமாக அசைப்பார் .
இவர் பொதுவாக இடது கைக்காரர் . அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் . இவரும் இடது கைக்காரர் . இவரும் ஒபாமாவைப்போல நேர்மறையான செய்திகளை சொல்ல வரும் போது இடது கையையும் , எதிர்மறையான செய்திகளை சொல்ல வரும் போது வலது கையையும் பயன்படுத்தினார் .
அதிபர் தேர்தல் பிரசார வீடியோக்களை கூர்ந்து கவனித்தபோது இது தெரியவந்தது .
இதே போன்று 2004 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ் , ஜான் கெர்ரி ஆகிய வேட்பாளர்களின் கையசைவுகளும் இதே போல காணப்பட்டது . ஆனால் இவர்கள் இருவரும் வகது கைக்காரர்கள் . அதற்கேற்ப நேர்மறையான பெச்சுக்களுக்கு வலது கையும் எதிர்மறை பேச்சுக்களுக்கு இடது கையும் பயன்படுத்தினார்கள் .
அதாவது ஒருவர் பொதுவாக எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறாரோ அதையேதான் மகிழ்ச்சியான , ரிலாக்சான மனநிலையில் இருக்கும்போது பயன்படுத்துவார் . வெறுப்பான , கோபமான மனநிலையில் இருக்கும்போது மற்றொரு கையை பயன்படுத்துவார் .இதுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களை ஆராய்ந்ததில் தெரியவந்தது .
இந்த வினோத ஆராய்ச்சியை செய்திருப்பது நெதர்லாந்து நாட்டின் மேக்ஸ் பிளாங்கி மன மொழியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் டேனியல் கசான்டோ தலைமையிலான குழு கை அசைவை வைத்து மன ஓட்டத்தை கண்டுபிடிக்கும் இந்த புது வகை ' ஜோதிடம் ' சாதாரண மனிதர்களுக்கும் பொருந்துமா என்பதை விஞ்ஞானிகள் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் .
--- தினமலர் , 7. 8. 2010..

Wednesday, February 23, 2011

பிரெஞ்சு புரட்சி !

பிரெஞ்சு புரட்சியின்போது கொடிய பாஸ்டில் சிறை உடைக்கப்பட்டது . பல வருடங்களாக கை , கால்களில் விலங்குகளோடு வாழ்ந்தவர்கள் , வெளிச்சத்தையே பாராமல் இருட்டில் சிறை வைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் . ஆனால் விடுவிக்கப்பட்டவர்களால் வெளியே வாழ முடியவில்லை . வெளிச்சத்தையே அவர்களால் பார்க்க முடியவில்லை . மறுபடியும் சிறைக்குள் வாழவே அவர்கள் அனுமதி கேட்டுக் கெஞ்சினார்கள் . நம்ப முடிகிறதா ? அடிமைகளுக்குத் துயரங்களே வாழ்வாகி விடுகிறது . அவர்கள் எஜமானர்கள் ஆக விரும்புவதே இல்லை !
--- சுகி. சிவம் , தினகரன் இணைப்பு . 7. 8. 2010.

Tuesday, February 22, 2011

தகவல் .

கேள்வி : எங்கள் வீட்டுப் பிள்ளைகள் காஸ்ட்லியான லெதர் சோஃபாவில்கூட பால்பாயிண்ட் பேனாக்களினால் கிறுக்கி வைத்துவிடுகிறார்கள் . அதை எப்படி அழிப்பது . சோப் தண்ணீரால் துடைத்தால் சீக்கிரம் அழிவதில்லை . சோஃபாவும் லேசாக கலர் மங்குவதுபோல் தெரிகிறது... வேறு என்ன வழிகளில் இந்தக் கறையைப் போக்கலாம் ?
பதில் : " கிறுக்கிய இடத்தில் சிறிது க்ளீன் எக்ஸ் சொல்யூஷனைத் தடவி ஒரு அழுக்கில்லாத துணியால் அழுத்தமாகத் துடைத்தால் அந்தக் கறை போய்விடும் . போகவில்லை என்றால் இரண்டு மூன்று முறை தொடர்ந்து முயற்சி செய்யலாம் . அதேபோல் ஹேர் ஸ்பிரே அல்லது பாடி ஸ்பிரேயை அந்த இடத்தில் அடித்து மெதுவாகத் துணியால் துடைத்தாலும் போய்விடும் .உங்கள் சோஃபாவின் தரத்தைப் பொறுத்து அதன் தன்மை கெடாமல் கறையை நீக்க எந்த முறை சரியாக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ."
--- குமுதம் , 4 . 8 . 2010 .

Monday, February 21, 2011

சின்னக் குச்சி !

உங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு யானை வளர்க்கிறீர்கள் . அந்த யானையைக் கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள் ?
தோல் பட்டை ? தாம்புக் கயிறு ? இரும்புச் சங்கிலி ? ..... இவை எதுவும் தேவையில்லை . யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும் . இது என்ன கூத்து ? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குக் தக்கனூண்டு குச்சியா ? யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே .
உண்மைதான் . ஆனால் , அந்த யானை ' நினைக்க ' வேண்டுமே . அதுதான் மேட்டர் !
சின்ன வயதில் , அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள் . யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும் . இழுக்கும் . தள்ளும் , முட்டும் . மொதும் . ஒருபலனும் இருக்காது .
இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி , ஒருகட்டத்தில் தன்னால் இந்த பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது . விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது .
இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல் நிற்கிறது . ஆனால் , இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை . தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதரணக் குச்சிதான் , லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை .
நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான் நமது திறமைகள் என்னன்ன , நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் , அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம் .
--- குமுதம் , 4 . 8 . 2010 .

Sunday, February 20, 2011

எஸ். எம். எஸ். ஜாலி .

படிப்பு .
நல்லா படிச்சா
இந்தியாவுல நீ டாட்டா
ரொம்ப நல்லா படிச்சா
இந்தியாவுக்கே டாட்டா !
ஒரு லொள்ளுப் பையனின் பைக்கில்...
கேர்ள் ஃப்ரெண்ட்ஸை
குறைத்துக் கொள்ளுங்கள்
பெட்ரோலை சேமியுங்கள் !
--- குமுதம் , 11. 08. 2010.

Saturday, February 19, 2011

நீச்சல் அடி... பேப்பர் படி !

இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் உள்ள செத்த கடல் என்றழைக்கப்படும் டெட் சீ-யில் நீங்கள் மிதந்து கொண்டே சொகுசாகப் பேப்பர் படிக்கலாம் , காபி குடிக்கலாம். காரணம் , இந்தக் கடலின் உப்புத்தன்மை மிக அதிகம் . கிட்டத்தட்ட 33.7 % உப்பு . மற்ற கடலைவிட இது 8.6 மடங்கு அதிகம் . அதனாலேயே 1,240 அடி ஆழம்கொண்ட இக்கடலில் மிதப்பது சாத்தியமாகிறது . இதில் குளித்தால் தோல் நோய்களும் , சுவாசக் கோளாறுகளும் சரியாகும் என்பது மக்கள் நம்பிக்கை . இக்கடலின் ' பிட்டுமென் ' ( Bitumen ) என்ற பொருளை எடுத்துதான் எகிப்து பிரமிடுகளின் மம்மிகளைப் பதப்படுத்தினார்களாம் . இந்தக் கடலுக்கு அருகில் உள்ள குன்றின் மீது கட்டப்பட்ட ' மஸாதா ' எனும் யூதர்களின் கோட்டையைக் கைப்பற்ற ரோமானியர்கள் முயற்சி செய்தபோது , தோல்வியை விரும்பாத ஆயிரம் யூதர்கள் மலையில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்களாம் !
--- பா . முருகானந்தம் ,, கடல் விகடன் இணைப்பு . 09 .12. 2009 .

Friday, February 18, 2011

தெரியுமா ? தெரியுமே !

* கடலுக்கு அடியில் நிகழும் நிலநடுக்கங்கள்தான் சுனாமியை உருவாக்குகின்றன என்பதைக் கண்டுபிடித்தவர் தோக்கிதிடேஸ் என்பவர் . இவர் கி. மு. 460 -க்கும் 395 -க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியர் .
* 1912 ஏப்ரல் 14-ம் தேதி 66 ஆயிரம் டன் எடை உள்ள டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது மோதி மூழ்கியது . 1,513 பேர் உயிர் இழந்தனர் . லைஃப் போட்களின் எண்ணிக்கை உட்பட நாவலுக்கும் நிஜத்துக்கும் நூற்றுக்கணக்கான ஒற்றுமைகள் இருந்தன . ராபர்ட்ஸ் தன் நாவலில் அந்தக் கற்பனைக் கப்பலுக்கு வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா ? - டைட்டன் ! மார்கன் ராபர்ட்சன் ஓர் எழுத்தாளர் . டைட்டானிக் கப்பலின் கதையை எழுதியது 1898 -ம் வருடத்தில் .
* மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தில் இரணியனைக் கொன்றார் . நாராயண பக்தி கொண்ட பிரகலாதன் நன்முறையில் ராஜபரிபாலனம் செய்து ,பின்னர் அவன் மகன் அந்தகாசுரன் அரியணை ஏறினான் . இரணியனை ஒத்த தீய குணங்களை உடைய அந்தகாசுரன் தவத்தால் பெற்ற சக்தியால் அதிபலசாலியாகி அனைவருக்கும் துயர் விளைவித்தான் .
* " There must be an expiry date for blaming elders " என்று சொல்வார்கள் . பெரியவர்களைக் குறை சொல்கிற நேரத்தை, அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்வதற்குச் செலவிட முயற்சிக்கலாம் . அது இன்னும் பல வாயில்களைத் திறக்கும்
* .அமெரிக்க இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு சரியாக காதுகேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் . ஐபாட், எம்பி3 கருவிகளை காதில் மாட்டிக்கொண்டு முழு ஒலியில் கேட்பதுதான் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது .
* ஒலி அளவு 85 டெசிபலுக்கு மேல் போனால் செவித்திறன் பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
* முப்பது வயதைத் தொடுபவர்களுக்கு தங்களுக்கு வயதாகி விட்டதோ, இருபது வயதிப் பெண் தோற்றம் போய்விட்டதோ என்று அவர்களது அழகு மீது வரும் ஏஜிங் பிரச்னைதான் " கெராஸ்கோ போபியா ' என்பது ..
* தன் மனைவி மக்களைவிட நாயின் மீது அதிக அன்பு பாராட்டும் ஐரோப்பியர்கள்கூட 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாய்க் கறி சாப்பிட்டு இருக்கின்றனர் . ஜெர்மனியில் 1986 -ல் தான் நாய்க் கறி தடை செய்யப்பட்டது .

Thursday, February 17, 2011

டிப்ஸ் ...

* சிலர் தூக்கமின்மை வியாதியால் கஷ்டப்படுவார்கள் . நல்ல சூரிய ஒளி மேலே படும்படி ( தினம் 30 நிமிடம் ) இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் . தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் சுரக்க இது உதவும் .
* வாழை இலையை சுருட்டி செங்குத்தாக நிமிர்த்தி வைத்தால் நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது .
* தொப்பையைக் குறைக்க விரும்புகிறவர்கள் , உணவு முடிந்ததும் ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது . அது கொழுப்பை உறையச் செய்துவிடும் . ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் அது கொழுப்பை உடலில் தங்க விடாமல் கரைத்துவிடும் .
* நாம் காலையில் வாக்கிங் செல்லும் போது , மௌனமாக பகவான் நாமத்தை ஜபித்துக்கொண்டே நடந்தால் , வேறு சிந்தனை வராது . நடக்கும் சிரமமே தெரியாது . மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் .
* விளக்குக்குப் பஞ்சுத் திரிக்கும்போது நம் விரல்களில் சிட்டிகை அளவு விபூதி தொட்டு பஞ்சைத் திரிக்கவும் . திரி மெல்லிய இழையாக ஒன்றுகூடி வரும் . திரியும் நன்றாக சுடர் விட்டு எரியும் .
* மருத்துவர்கள் சிறு குழந்தைகளது தொண்டையைப் பரிசோதிக்கும்போது ஸ்பூனுக்குப் பதிலாக , ஒரு லாலிபாப்பை நாக்கில் அழுத்திப் பார்க்கலாம் . குழந்தைகள் அழாமல் நாக்கைக் காட்டும் .
---. மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

Wednesday, February 16, 2011

ஜோக்ஸ் ...!

* " எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானுங்களே !
" டார்லிங் ... என் இதயத்துக்குள்ள வா ..."
" செருப்பக் கழட்டவா ...? "
" என் இதயம் என்ன கோயிலா ? ! சும்மா செருப்போடவே வா.....! "
* மனைவி : " என்னங்க நான் ரசத்துல புளி போட மறந்துட்டேங்க ... "
கணவர் : " பரவாயில்ல... பரவாயில்ல ... பேலன்ஸ் பண்ணிக்கலாம் . ' நீ சமைக்கப் போறேன் 'னு சொன்னதுமே , என்
வயத்துல புளி கரைக்க ஆரம்பிச்சுடிச்சு !"
* மனிதர்களே...சிந்தியுங்கள் !
பிரார்த்தனை செய்யுங்கள்...
கடவுளுக்கு அருகில் செல்வீர்கள் .
சேவை செய்யுங்கள் ...
கடவுளே உங்கள் அருகில் வருவார் !
---அவள் விகடன் . 13 . 08 . 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி.

Tuesday, February 15, 2011

கொஞ்சம் மொக்கை...படிச்சா பொக்கை!

கொஞ்சம் மொக்கை...படிச்சா பொக்கை!
* மரம் வெட்டிக் களைத்துப் போன மனிதன்
இளைப்பாற தேடினான் ... ஒரு மரத்தின் நிழலை !
* மனுஷனா பொறந்தா சாதிக்கணும்னு சொல்வாங்க .
நல்லவேளை நான் குழந்தையாதான் பொறந்தேன் .
* " உங்களைப் போல நாலு பேரு இருப்பதால்தான் கொஞ்சம் மழை பெய்யுது ! "
" இலலன்னா ? "
" நிறைய பெய்யும் ."
* புலி தூங்கும்போது நீ எழுப்பினாலும் ,
நீ தூங்கும்போது புலி எழுப்பினாலும்
பிரச்னை உனக்குதான் . ( நோ...நோ...அழக்கூடாது ).
* " படியில நிக்காதீங்கப்பா . பஸ் உள்ளதான் கடல் மாதிரி இடம் இருக்குல்ல ..."
" எனக்கு நீச்சல் தெரியாதுங்களே ..."" !!! ? "
!!! ?
* இதயம் .
. உன்னை நான் பார்த்ததும்
இல்லை , என்னை நீ
பார்த்ததும் இல்லை . பின்பு
எதற்காக நான் வாழ நீ
துடிக்கிறாய் ?
* குக்கர் : " நீ ஏன் இவ்வளவு கறுப்பா இருக்கே ?
வாணலி : " நான் இவ்ளோ கறுப்பா இருக்கும்போதே , நீ என்னைப் பார்த்து இப்படி விசில் அடிக்கிற .."
* " ஏங்க இன்னிக்கு குழம்பு வைக்கவா ? ரசம் வைக்கவா ? "
" முத்ல்ல ஏதாவது வை . அப்புறம் அதுக்கு பேரு வெச்சுகலாம் ."
---. மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

Monday, February 14, 2011

சிரிப்பு விடுகதை !

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் . இரண்டு பழு ; ஒண்ணுல தண்ணியே இல்ல .
தண்ணியில்லாக் குளத்துக்கு வந்தது மூணு பேரு ; இரண்டு பேரு நொண்டி , ஒருவனுக்குக் காலேயில்ல .
காலில்லா மனுஷனைக் கட்டிய மனைவி மூணு ; இரண்டு பேரு முடம் , ஒருத்திக்கு கையேயில்லை .
கையில்லா முடத்துக்கு பிறந்த பிள்ளை மூணு ; இரண்டு பேரு குருடு , ஒரு பிள்ளைக்குக் கண்ணேயில்லை .
கண்ணில்லா பிள்ளையை வளர்க்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு ஊமை , ஒருத்திக்கு வாயேயில்லை .
வாயில்லா மனுஷியிடம் விஷயத்தைக் கேட்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு செவிடு ; ஒருவனுக்குக் காதேயில்லை .
அத்தனை பேரையும் ஆதரிக்க வந்தவங்க மூணு ; இரண்டு பேரு முண்டம் , ஒருவனுக்குத் தலையேயில்லை .
--- ராஜம்மாள் நடராஜன் , திருநெல்வேலி . மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

Sunday, February 13, 2011

எச்சரிக்கை !

பல்பு உடைஞ்சு போச்சுன்னா ...
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .
நன்றி : இனையதளம் .
--- ஷியாமளா சுவாமிநாதன் , திருவனந்தபுரம் . மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி .

Saturday, February 12, 2011

தெரிந்து கொள்ளுவோம் !

* ' சைக்கோ ' குற்றவாளிகளில் பெரும்பாலானோர் உடலுறவுக்கான சாத்தியம் குறைவானவர்களாகவோ அல்லது அதில் உச்சகட்டத்தை அடைய முடியாதவர்களாகவோதான் இருக்கிறார்கள் ' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ !
* கடவுளர்கள் , கடவுளின் சீடர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட தங்கள் வாழ்வை பாஸிட்டிவ் க்ளைமாக்ஸுடன் முடித்துக்கொள்ளவில்லை .
* விஷ்ணுவின் அவதாரம் என்று வணங்கப்படும் ராமர் சரயு நதியிலே குதித்து இறக்கிறார் . கிருஷ்ணரோ காற்றிலே திசைமாறி வந்த அம்பினால் சாகிறார் . இயேசு கிறிஸ்துவின் துயர் மிகுந்த மரணம் அனைவரும் அறிந்ததே . தவிர , இயேசுவின் 13 சீடர்களும் கொடூரமான முறையில்தான் இறந்திருக்கின்றனர் !
* ' சூரியன் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதால் , தற்போதைய அளவை விட 40 சதவிகிதம் அதன் வெப்பம் அதிகரிக்கும் . இதனால் நிலைப்புத்தன்மையை இழக்கும் சூரியனின் நடுவே கறுப்பு நிறத்தில் பெரிய துளை ஏற்பட்டு வெடித்துச் சிதறும் . அதனால் , பூமி அதீத வெப்பத்தினால் கருகி , அழிந்து சிதறிவிடும் . இதுதான் பூமிக்கும் சூரியனுக்குமான க்ளைமாக்ஸ் ' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .
* ' சூரியனால்தான் பூமி அழியும் ' என்பது அறிவியல் விதி . ஆனால் , மனிதன்தான் வேகவேகமாக உலக உருண்டையை க்ளைமாக்ஸை நோக்கி உருட்டிக்கொண்டு இருக்கிறான் !
--- , க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

Friday, February 11, 2011

' ஆ'யுதம் ! '

* அணு ஆயுதங்கள் .... ஒரு விசை அழுத்தத்தில் உலகையே காலி செய்யக் கூடிய சாத்தான்கள் . விளைவுகளை அறிந்து , அதை அனுபவித்தப் பிறகும் மனிதன் தனக்குதானே சேகரித்து வைத்துக்கொள்ளும் கொள்ளி . அணு ஆயுத திறனில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சரியாகப் பொருத்தினால் , ஒட்டுமொத்த உலகையும் ஒரு முறை அழித்துவிடலாம் .
* அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களால் மட்டும் இந்த உலகத்தை 27 முறை முழுவதுமாக எரிக்க முடியும் .
* உலகெங்கும் உள்ள அணு ஆயுதங்களைப் பகிர்ந்துவைத்து ... ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தால் , உலகை 100 முறை முழுவதுமாக எரிக்கமுடியும் .
* அணுகுண்டின் அழிப்புக்கு என்றென்றைக்குமான உதாரணம் ஜப்பானின் ஹிரோஷிமா , நாகசாகி . 1945-ல் வீசப்பட்ட லிட்டில்பாய் , ஃபேட் மேன் என்ற இரண்டு அணுகுண்டுகளிலேயே ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மக்களையும் கொன்று குவித்தது . இதில் அணுக்கதிரின் ஒளியாலும் சத்தத்தாலும் மட்டும் அதே இடத்தில் 60 சதவிகித மக்கள் இறந்துவிட்டார்கள் . பிறகு , அதன் பாதிப்பால் இறந்தவர்கள் போக , காதில் இருந்து திடீரென ரத்தம் வருவது , தலைமுடி தானாக உதிர்வது , தோல் உரிவது , மிக மோசமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது என ஜப்பான் சுடுகாடு ஆனது . 50 வருடங்களைக் கடந்த பின்னும் , இன்னும் அங்கு கதிர் வீச்சின் தாக்கம் இருக்கிறது . இரண்டு ஊர்களிலும் இப்போதும் சிறு புல்கூட முளைப்பது இல்லை . மனிதர்களாலேயே நேரடியாக பாதிப்புக்ளுக்கு உள்ளான நாடு ஜப்பான் .
இரா . மன்னர்மன்னன் , க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

Thursday, February 10, 2011

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் !

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .
* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .
* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! "
* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "
* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "
* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "
* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "
* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "
* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "
* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "
* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "
* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "
* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "
* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்
* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .
* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! "
--- கார்த்திகா , க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

Wednesday, February 9, 2011

Y 2 K .

பொதுவாக கம்ப்யூட்டரில் வருடத்தைக் குறிப்பிட இரண்டு தசம எண்களைத்தான் ( 1976 என்பதை ' 76 என்று ! ) பயன்படுத்தினார்கள் . 1999 வரையிலான வருடங்களை சுருக்கமாக 96 , 97 , 98 , 99 என்றுதான் குறிப்பிட்டார்கள் . ஆனால் , 2000 வருடம் பிறந்தபோது , நான்கு தசம எண்கள் வந்துவிடுகிறது . இதற்கு ஏற்றாற்போல் கணிப்பொறிகள் புரொகிராம் செய்யப்படவில்லை . ஆகவே , கணிகள் மீண்டும் தானாகவே 1900 என நினைத்து 00, 01, 02, 03,.... 96, 97 , 98, 99 என்று கணக்கிடத் தொடங்குமோ என்று கிலி கிளப்பினார்கள் சாஃப்ட்வேர் ஆசாமிகள் . 1958 -லேயே இப்பிரச்னைப்பற்றி பாப் பர்னோ என்பவர் ஆய்வு மேற்கொண்டார் . மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் ( ஜனவரி 0, 1900 என்று தேதி காட்டியது ) .
ஆனால் , 2000 பிறந்த கணத்தில் எந்த விபரித வில்லங்கமும் அரங்கேறவில்லை . ' ஹாப்பி நியூ இயர் ' என்று வாழ்த்தியபடி கணினிகள் தேமேவென்று பணிசெய்து கிடந்தன . அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற கம்ப்யூட்டர்களை பெருமளவில் பயன்படுத்திய நாடுகளில், பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் வருடங்களை நான்கு தசம எண்களாக குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் . இதனால், அங்கே மிக சொற்ப அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது . கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் இல்லாத இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அப்படி ஒரு பிரச்னை வந்ததாகவே தெரிய வில்லை.
பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட Y 2 K வில்லன், கைப்புள்ள கணக்காக பிஸ்ஸென்று ஆகிவிட்டது !
--- க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

Tuesday, February 8, 2011

செல்போன் ஒட்டுகேட்கும் கருவி !

செல்போன் ஒட்டுகேட்கும் கருவி கண்டுபிடிப்பு . விலை ரூ . 69,000.
செல்போனில் பேசுவதை ஒட்டுகேட்க உதவுவதுடன் அவற்றை பதிவு செய்யும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் விலை ரூ . 69 ஆயிரம் . செல்போன் பேச்சுக்களை இடைமறித்து கேட்க , உதவும் கருவியை அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரை சேர்ந்த கிறிஸ்பேகட் என்ற நிபுணர் கண்டுபிடித்து உள்ளார் . இவர் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி கோடுகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார் . அதன்படி ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் எவ்வளவு அபாயகரமானது என்பதை விளக்கவே இந்த சாதனத்தை உருவாக்கினேன் . இதன்மூலம் அந்த தொழில்நுட்பம் பயனற்றதாகி விட்டது . இதே போன்ற சாதனத்தை உருவாக்கி கிரிமினல்கள் பயன்படுத்தக்கூடும் . எனவே செல்போன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான தொழில் நுட்பம் கொண்ட சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . ஐபோன் , 3ஜி மற்றும் 4ஜி போன்ற நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் போன் மற்றும் ஸ்மார்ட் போனையும் ஒட்டுகேட்க முடியும் என கிறிஸ் பேஜட் தெரிவித்தார் .
--- தினகரன் & தினமலர் . 2 ஆகஸ்ட் , 2010 .

Monday, February 7, 2011

' க்ளைமாக்ஸ் '

பலரின் உயிரை கொடூரமாகப் பறித்த ஹிட்லருக்கு , அன்பு மனைவியின் உயிர் தன் கண் முன் பிரிவதைக் காணவேண்டிய பரிதாப சூழ்நிலை . ரஷ்யப் படை பெர்லினை நெருங்கிக்கொண்டு இருக்கிறது . நம்பியவர்கள் எல்லாம் கடைசி நிமிடத்தில் கைவிட்டுவிட்டார்கள் . ' இனி போரிட்டு ஜெயிக்க முடியாது ! ' என்பது ஹிட்லருக்குப் புரிகிறது . தன்னுடன் இருந்த அதிகாரிகளிடம் , ' எங்காவது போய்விடுங்கள் ' என்று உத்தரவிடுகிறார் . காதலி ஈவா ப்ரவுனுடன் தனியறைக்குச் செல்லும் ஹிட்லர் , காதலியின் விருப்பத்துக்கு இணங்க அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் . சிறிது நேரத்தில் ரஷ்யப் படைகள் 300 மீட்டர் தூரத்தில் நெருங்கிவிட்டன . ஈவா ப்ரவுன் சயனைடு சாப்பிட்டு வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்தார் . ஹிட்லரோ துப்பாக்கியை வாயில் வைத்து , மூளை சிதறும்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார் . இவர்கள் மட்டுமல்ல ; தோட்டக்காரர் , சமையல்காரி , கார் ஓட்டுனர் போன்றோர் ஹிட்லரின் இறுதி மூச்சு பிரியும் வரை கூடவே இருந்து , கூடவே சேர்ந்து தங்கள் உயிரையும் மாய்த்துகொண்டார்கள் . வாழ்நாள் முழுக்க கொடூரமான சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கடைசி நேரத்தில் தற்கொலை முடிவை எடுப்பதற்கு வேறோரு காரணமும் இருந்தது .
--- க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

கணக்கு !

பசு கணக்கு !
நண்பர்களிடம் , " நான் ஒரு மேஜிக் கணக்கு சொல்வேன் . கடைசியில் வரும் விடையில் என்ன எண் இருக்கிறதோ , அந்த எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தில் தொடங்கும் விலங்கை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் ... அது என்ன விலங்கு என்று நான் சட்டென சொல்லிவிடுவேன் ! " என்று ' பில்டப் பேச்சு ' பேசுங்கள் .
பிறகு கீழ்க்கண்டபடி சொல்லுங்கள் ...
1 . ஒன்று முதல் 10 க்குள் எந்த எண்ணையும் நினைத்துக் கொள்ளுங்கள் .
2 . அதை 2 -ஆல் பெருக்குங்கள் .
3 . வரும் விடையோடு 10 ஐ கூட்டுங்கள் .
4 . வரும் விடையை 2 -ஆல் வகுத்துக் கொள்ளுங்கள் .
5 . வரும் விடையில் இருந்து , நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழித்துக் கொள்ளுங்கள் .
6 . வரும் விடையில் இருந்து 2 -ஐ கழித்துக் கொள்ளுங்கள் .
7 . வரும் விடைக்கு உரிய ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள் . அந்த எழுத்தில் துவங்கும் பால் தரும் விலங்கு ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் !
--- இப்படிக் கூறிவிட்டு , அவர்கள் தலையசைத்ததும் , ' பசு ' என்று சொல்லுங்கள்... ' கரெக்ட் ! ' என்று சபாஷ் போடுவார்கள் !
இந்த கணக்கில் எந்த எண்ணைப் பயன்படுத்தினாலும் கடைசியில் 3 என்றுதான் விடைவரும் . அதற்குரிய ஆங்கில எழுத்து ' சி ' . எனவே , ' கவ் ' ( பசு ) என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள் !
--- தினமலர் , ஜூலை 23 , 2010.

Sunday, February 6, 2011

கவிதை !

மல்லாந்து படுத்துக்கிட்டு யோசிச்சது மாமூ....!
மனுஷனுக்கும்
மொபைலுக்கும் ஒரு
ஒற்றுமை இருக்கு....
மனுஷனுக்கு கால்
இல்லேனா பேலன்ஸ்
பண்ண முடியாது .
மொபைலுக்கு பேலன்ஸ்
இல்லேனா கால் பண்ண
முடியாது !
எப்பூடி நம்ம திங்கிங் ?!
--- சுதா , அவள் விகடன் . 30 .07. 2010. இதழ் உதவி : N .கிரி , ( News Agent , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி.

Friday, February 4, 2011

போதைப் பொருட்கள் !

இந்தியாவுல அதிகமா உபயோகப்படுத்துறது கஞ்சாதான் , ( Cannabis ) . இது ஒரு செடி . இதை தமிழ்நாடு , கேரளாவுல சில இடங்களில் காட்டுக்குள்ள சட்டத்துக்கு புறம்பா பயிரிடுறாங்க . இதுல இருந்து ஹஷீஷ் . அப்புறம் ஹஷீஷ் எண்ணெய் தயாரிக்கிறாங்க . இதுவும் போதைப்பொருட்கள்தான் . அடுத்து ஒபியம் ( Opium ) . இது பாப்பி ( Poppy ) செடியிலிருந்து கிடைக்கிறது . இது ராஜஸ்தான் , உத்திரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் பயிரிடுறாங்க .ஆனா , இதை அரசாங்கம் அனுமதி கொடுத்து பயிரிட்டு மருந்துகள் தயாரிக்க விலைக்கு வாங்கிக்கிறாங்க . இதை சட்ட விரோதமா பயிரிட்டுத் தான் இதுல இருந்து ஹீராயின் ( Heroin ) ங்கிற போதிப் பொருளைத் தயார்பண்றாங்க . அடுத்து கோகைன் ( Cocaine ). இது கோகோ செடியில் இருந்து கிடைக்குது . ஆனா, இது நம்ம நாட்டுல பயிரிடுறதில்லை . தென் அமெரிக்க நாடுகளில் இருந்து சட்ட விரோதமா கடத்திக் கொண்டு வந்து மக்களை உபயோகிக்க வைக்கிறாங்க .
இது தவிர , தயாரிக்கப்படுகிற மருந்துகள்ன்னு ( Psychotropic ) சொல்லுவோம் . டயாஸ்பாம் , கல்ப்ராஸோம்னு.... இவைகள் எல்லாம் நோயாளிகளுக்கு கொடுக்குற மருந்துகள் . ஆனா , போதைக்காக சாதாரண மக்கள் பயன்படுத்துறாங்க .
--- R .வெங்கட்டரமணன் . பாடம் , ஜூலை 2010. இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Thursday, February 3, 2011

பங்க்சுவேஷன்

A Woman Without her man is nothing இந்த வாக்கியத்தில் ஓர் ஆச்சர்யம் உண்டு . அது பங்க்சுவேஷன் தான் அந்த ஆச்சரியம் !
1 . A Woman , without her man , is nothing .
2 . A Woman without her , man is nothing .
-- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் . 28. 07. 2010.

Wednesday, February 2, 2011

தெரிந்து கொள்வோம் !

* வனங்கள் மற்றும் சமூக வனங்களிலிருந்து பெறக்கூடிய மரக்கழிவுகள் , விறகு , விவசாயக் கழிவுகளான வைக்கோல் , உமி , தவிடு மற்றும் கால்நடை சாணம், வரட்டி, மனித கழிவுகள், நகர்புற கழிவுகளான பேப்பர் குப்பை இப்படி எல்லாமே பயோமாஸ் தான் . இப்படிப்பட்ட இயற்கையான மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து பெறக்கூடிய சக்தியைத்தான் பயோமாஸ் எரிசக்தி என்கிறோம்
* ஹெலன் ஃபிஷர் எனும் மானுடவியல் அறிஞர் , மனைவியை விட்டு வேறு பெண்களிடம் இன்பம் தேடிச் செல்பவர்களுக்கு Sensation seekers என்றும் ஆண்களின்
ஆர்ப்பரிக்கும் ஆசைக்கு Physiology of Adyltery என்றும் பெயரிட்டார் .
* புத்தகங்களை ரசிப்பவர்களுக்கு Bibliophiles என்று பெயர் . தாடியை ரசிப்பவர்களுக்கு -- Pogonophile ( போகொனோஃபில் ) என்று பெயர்

Tuesday, February 1, 2011

அளவுக்கு மிஞ்சினால் ?

இரும்பு சத்து , விட்டமின்கள் அளவுக்கு மிஞ்சினால் ?
நம் உடலுக்கு ஒருகால கட்டத்தில் அவசியமான சத்து மற்றொரு காலகட்டத்தில் நஞ்சாக மாறி விடுவது எதனால் ? உதாரணமாக , இரும்பு , மற்றும் தாமிரம் உள்ளிட்ட கனிம பொருட்கள் நம் உடலுக்கு சத்தளிக்கின்றன . இரும்பு சத்து குறைபாடு காரணமாக , ரத்த சோகை ஏற்படுகிறது . நம் முடியின் நிறத்தை தாமிரம் நிர்ணயிக்கிறது . மற்றும் பல நாளமில்லா சுரப்பிகள் சுரப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது . இளம் வயதில் இந்த சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் ஒன்றும் கேடு இல்லை . 50 வயதுக்கு பின்னர் கனிம வகை சத்துக்களை அதிகம் எடுத்துக் கொண்டால் அது நஞ்சாக மாறி உடலின் திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் . ஞாபகத்திறன் குறைபாடு உள்ளிட்ட வயது தொடர்பான நோய்கள் பரவ காரணமாக அமைந்துவிடும் .
* எனவே முதியவர்கள் விட்டமின் மற்றும் கனிம சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் .
* குறைந்த அளவிலான ஆடு மற்றும் மாட்டிறைச்சிகளை உண்பது நல்லது . ( இறைச்சிகளில் அதிக இரும்பு மற்றும் தாமிர கனிமம் உள்ளது .)
* தாமிர குழாய்களில் இருந்து வரும் தண்ணீரை குடிப்பதை தவிர்க்கவும் .
* இரத்த தானம் செய்வதன் மூலம் உடம்பில் உள்ள இரும்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் .
( ஆதாரம் : Chemical Research in Toxicology , December 7 ).
--- பாடம் , மே 2010 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .