Friday, February 28, 2014

வைர மழை பொழியும்.

  சனி, வியாழன் ஆகிய கிரகங்களில் வைர மழை பொழியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  இவ்விரு கிரகங்களிலும் காற்று மண்டலத்தில் கார்பன் மிகுந்து காணப்படுகிறது.  மின்னல், சூராவளி  போன்றவை மித்தேன் வாயுவைக் கரியாக மாற்றுகின்றன.  அந்தக் கரி கீழே வேகமாக விழும்போது கிராஃபைட்டாகவும், வைரங்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.  எல்லாம் சேர்ந்து திரவ வடிவில் பெரிய கடலாக மாறிவிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஓரின ரத்த தானம்.
     ஓரின உறவாளர்கள் ரத்த தானம் செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும் இறுதி முடிவை பிரிட்டனே எடுக்கட்டும் என்கிறது வடக்கு அயர்லாந்து.  எயிட்ஸ் நோய் குறித்த அச்சம் உச்சக்கட்டத்தில் இருந்த 1980 களில்  ஓரின உறவாளர்கள் ரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.  இப்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது.  வடக்கு அயர்லாந்து எஞ்சுகிறது.
-- எத்திசையும்...  கருத்துப் பேழை.
--     ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.

Thursday, February 27, 2014

எத்தனை பழங்கள்?

  பழ வியாபாரி ஒருவர் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை வைத்திருந்தார்.  முதலில் பழம் வாங்க வந்தவர்,  கூடையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரை அரஞ்சுப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
      அடுத்து வந்தவர் மீதியிருந்த பழங்களில் சரி பாதியும், அரைப் பழத்தையும் வாங்கிச் சென்றார்.
      கடைசியாக வந்தவர் கூடையில் மீதியிருந்த ஆரஞ்சுப் பழங்களில் சரி பாதியும், அரைப் பழமும் வாங்கிச்சென்றார்.  கூடை காலியாகிவிட்டது.  பழம் வாங்கியவர்களுக்கு வியாபாரி எந்தப் பழத்தையும் பாதியாக அறுத்துத் தரவில்லை.
     இப்போது சொல்லுங்கள்.  பழ வியாபாரி தன் கூடையில் மொத்தம் எத்தனைப் பழங்கள் வைத்திருந்தார்?
விடை :  7 ஆரஞ்சுப் பழங்கள்.  ஏழில் சரிபாதி மூன்றரை.  அதோடு பாதிப் பழத்தைச் சேர்த்தால் 4 பழங்கள்.  இதை எதற்காக வெட்ட வேண்டும்?
      முதலில் வந்தவர் வாங்கிச் சென்றது 4.  மீதி 3 .  அடுத்து வந்தவர் மூன்றில் சரிபாதியும் ( ஒன்றரை )  பாதிப் பழம் ( அரை ) சேர்த்து 2 பழங்கள்  வாங்கினார்.  இதையும் வெட்ட வேண்டாம் அல்லவா?
      மீதி ஒன்று.  அதில் சரி பாதி அரை,  அதோடு அரை பழம் என்றால் ஒன்று.  மீதி பூஜ்ஜியம்.
-- மாயாபஜார். குழந்தைகளின் குதூகல உலகம்.  சிறப்புப் பகுதி.
--    ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.   

Wednesday, February 26, 2014

யாசர் அராபத்

   யாசர் அராபத்துக்கு விஷம்?
     பாரீஸ் :  பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
     அராபத்தின் உள்ளாடை, தலைப்பாகை, டூத் பிரஷ், ஆஸ்பத்திரியில் அவர் பயன்படுத்திய துணிகள் உள்ளிட்டவற்றை ஸ்விட்சர்லாந்தின் லாவ்சேனில் உள்ள கதிரியக்க இயற்பியல் துறை மற்றும் சட்ட மருத்துவ பல்கலைக்கழக மையத்தில் 8 விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
     அதில்,  போலோனியம் 210 என்ற கதிரியக்கப் பொருள் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  அவரின் உடலின் எஞ்சிய பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் போலோனியம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.  எனினும்,  அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
      அராபத், 2004-ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிரான்ஸில் உயிரிழந்தார்.  அப்போது அவருக்கு வயது 75.  அப்போது அவர் இறந்ததற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.  அவரின் மனைவியின் வேண்டுகோளை ஏற்று, பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை.
      அவர் விஷம் வைத்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் 2012 ம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.  இதையடுத்து 2012 ம் ஆண்டு நவம்பரில் அராபத்தின் உடல் தோண்டி யெடுக்கப்பட்டு ,  உடைகள், எஞ்சிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.  அதை பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தனித்தனியே ஆய்வு செய்து வருகின்றனர்.
-- பி.டி.இ.  சர்வதேசம்.
--  ' தி இந்து ' . புதன், அக்டோபர் 16,2013.   

Tuesday, February 25, 2014

நினைவு நாள் !

பாட்டி திவசத்தன்று
அப்பாவுக்கு பிடித்த அரிசிப் பாயசம்
அண்ணனுக்குப் பிடித்த அவியல்
தங்கை கேட்டாள் என்று மோர்குழம்பு
தம்பி ஆசைப்பட்டானே என்று முறுக்கு
எனக்குப் பிடித்த எள்ளுருண்டை
தனக்குப் பிடித்த மாங்காய்பச்சடி
என்று அமர்க்களமாய்
விருந்து தயாரித்தாள் அம்மா
தான் விரும்பும்
பருப்பு வடையோ
பயத்தங்கஞ்சியோ
இருக்கிறதா என்று
இலையில்
துழாவிப் பார்த்து
ஏமாற்றத்துடன்
ஏங்கி கலங்கின
படத்திலிருந்த
பாட்டியின் கண்கள் !
-- இந்திரஜித். புள்ளமங்கலம்.
-- தினமலர். வாரமலர். ஆகஸ்ட் 28, 2011.  

Monday, February 24, 2014

மால் அரியா

  மலேரியா என்ற பெயர் ' மால் அரியா ' என்ற இத்தாலிய மொழிப் பெயரிலிருந்து வந்ததாகும்.  மால் அரியா என்றால் அம்மொழியில் அசுத்தக்காற்று என்று அர்த்தம்.  இந்த நோய் அசுத்தக்காற்றினால்தான் உருவாகிறது என்று 20-ம் நூற்றாண்டு வரை மக்கள் நம்பினர்.  அதன் பிறகுதான் விஞ்ஞானிகள் கொசுக்களினால் இந்நோய் பரவுகிறது என்பதை நிரூபித்தனர்.
இரண்டு ( 2 ).
    இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு சைப்ரஸ்.
    இரண்டு நாடுகள் இணைந்த நாடுதான் சானியா.
    இரண்டு தேசிய கீதம் பாடும் நாடு ஆஸ்திரேலியா.
    இரண்டு நட்சத்திரத்தை தேசிய கொடியாக கொண்டுள்ள நாடு பனாமா.
    இரண்டு மொழிகளில் தேசிய கீதம் உள்ள நாடு செக்கஸ்லோவியா.
    இரண்டு கண்டத்தில் உள்ள நாடு துருக்கி.
    இரண்டு பிரதமர்கள் இருந்த நாடு சான்மரினோ.
-- தினமலர். பெண்கள்மலர். ஜூன் 9, 2012. 

Sunday, February 23, 2014

இணைய வெளியிடையே...

*  உன்னை முத்தமிட்ட பிறகு எழுந்தது ஓர் சந்தேகம்...
   நீ உதட்டுக்கு சாயம் பூசுகிறாயா, சாராயம் பூசுகிறாயா...?
   alexious @ twitter.com.
*  இவன் பசுவின் பாலைக் கறந்தால் ' பசு பால் தரும் ' என்கிறான்.
   காகம் இவன் வடையை எடுத்தால் ' காகம் வடை திருடிற்று ' என்கிறான.
   kasianandan @ twitter.com
*  அலுவலகத்தில் இருப்பவனுக்கு அது குப்பைத் தொட்டி.
   குப்பை பொறுக்கி வாழ்பவனுக்கு அது அலுவலகம்.
--  தினமலர்.17-11-2013. 

Saturday, February 22, 2014

மலேரியா தடுப்பு மருந்து


மலேரியா தடுப்பு மருந்து

மலேரியா தடுப்பு மருந்து
மலேரியா தடுப்பு மருந்தும் சோதனைச்சாவடி எலிகளும்.
     கொசுவினால் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு உலகின் முதல் தடுப்பூசி மருந்தைச் சந்தைப்படுத்தக் காத்திருக்கிறது பிரிட்டனின் மருந்து தயாரிப்பு நிறுவனம் ' கிளாக்ஸோ ஸ்மித்கிஸைன் .'  " ஆர்.டி.எஸ்.எஸ். என்று இதற்குப் பெயர்   லாப நோக்கமற்ற ' மலேரியா தடுப்பு இயக்கம் ', ' பில் கேட்ஸ் - மெலின் டா கேஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் தடுப்பூசியை    விற்பனைக்குக் கொண்டுவர கிளாக்ஸோ விரும்புகிறது.  7 ஆப்பிரிக்க நாடுகளில் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியை போட்டு சோதனை செய்துள்ளனர்.  மூன்றாம் உலக மக்கள்தான் எப்போதும் சோதனைச்சாலை எலிகளா?
-- எத்திசையும்... கருத்துப் பேழை. .
--   ' தி இந்து 'நாளிதழ்  வெள்ளி,. அக்டோபர் 11, 2013. 

ஐசா வால் நட்சத்திரம்.

  கடந்த 2012-ம் ஆண்டு விடாலி வெஸ்கி,  ஆர்ட்யோம் என்ற 2 நிபுணர்கள் வான் வெளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சத வால் நட்சத்திரத்தின் நகர்வுகளை கண்டுபிடித்தனர்.  இதற்கு அறிவியல் ரீதியாக ' சி/ 2012 எஸ் 1 ' என பெயர் வைத்தனர்.  இந்த நட்சத்திரமே தற்போது ஐசான் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
     வால் நட்சத்திரம் என்று கூறுவது, உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல.  சில கி.மீ.குறுக்களவு கொண்ட பனி மற்றும் தூசுகலந்த ஒரு தொகுப்பு.  வால் நட்சத்திரத்தில் நீர், அமோனியா, மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு, உறைபனி மற்றும் கட்டுக்கடங்காத தூசி மற்றும் கடினமற்ற பாறைப்பொருட்களே அடங்கி இருக்கின்றன.  சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளையும் தாண்டி கியூபியர் பட்டை என்ற பகுதி உள்ளது.  இதையும் தாண்டி ஊர்ட் மேகம் என்ற ஒரு அண்ட வெளி உள்ளது.
     இந்த ஊர்ட் மேகம் பகுதிக்கும் கியூபியர் பட்டை என அழைக்கப்படும் வான்வெளி பகுதிக்களூக்கு இடையே உள்ள பகுதியில்தான் கோடிக்கனக்கான வால் நட்சத்திரங்களின் தொகுப்பு மற்றும் நகர்வுகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இவை சூரிய குடும்பம் உருவான போதே தோன்றியுள்ளதாக அறிவியலார்கள் தெரிவிக்கின்றனர்.
-- தினமலர்.17-11-2013.    

Friday, February 21, 2014

செக்ஸ் ?

செக்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
     செக்ஸ் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் இரண்டு விதமான பொருள்கள் உண்டு.  மனிதர்கள் உள்ளடக்கிய உயிரிங்களில் ஆணா, பெண்ணா என்பது போன்று பிரித்து வகைப்படுத்தும் பொருளில் ' பால்,  பாலினம் ' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.
     ( எ.கா ) கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளும் சோதனையைச் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது./ திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலாக எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடிவருகின்றனர்.
     இரண்டாவது பொருள், மனிதர்கள் காம உணர்வின் காரணமாக உடல்ரீதியாக உறவுகொள்வதைக் குறிக்கும்.  இந்தப் பொருளூக்கு ' உடலுறவு ' என்று சொல்லைப் பயன்படுத்தலாம்.
    ' புணர்ச்சி ' என்ற சொல்லுக்கும் இதே பொருள் இருந்தாலும், அந்தச் சொல் இந்தப் பொருளில் தற்போது அருகிக்கொண்டுவருகிறது.
     செக்ஸுவல் ஃபீலிங் ( sexual feeling ), செக்ஸுவல் டிசையர் (  sexual desire ) ஆகிய சொற்களுக்கு ' பாலுணர்வு, பாலுறவு உந்துதல் ' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.  ' காமம், காம உணர்வு ' என்ற சொற்களும் இதே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.
-- சாத்தனார்.   கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.  


நம்பிக்கை.

  ஒரு துறவி காட்டில் கடும் தவம் இருந்துவந்தார்.  ' அவனின்றி ஓர் அணுவும் அசையாது ' என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.  ஒரு நாள் திடீரென பல்வலி ஏற்பட்டு கடும் அவதிப்பட்டார்.  பல் வலி தீர கடவுளை வேண்டினார்.
     கடவுளூம் நேரில் தோன்றி ஒரு பச்சிலையை அடையாளம் காட்டி அதை பல்லில் வைக்கச் சொன்னார்.  கடவுள் சொல் பொய்க்குமா என்ன?  பல் வலி போயே போச்சு.
     ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் அதே பாழாய்போன பல் வலி . துறவி அதே பச்சிலை வைத்தியத்தை கையாண்டார்.  எந்தப் பயனும் இல்லை.  கடவுளிடம் மீண்டும் முறையிட்டார்.  கடவுளும் தோன்றினார்.
    " கடவுளே மீண்டும் எனக்கு பல் வலி வந்தது.  நான் கடந்த முறை நீங்கள் சொன்ன பச்சிலையை வைத்துப் பார்த்தேன் பலன் இல்லை."  என்று கூறினார்.  அதற்கு கடவுள், " முதலில் என்னை நம்பினாய்.  இப்போது பச்சிலையை நம்பிவிட்டாய்.  அதுதான் பிரச்சனை" என்றார்.
-- அ.முகமது ஹுமாயூன்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து 'நாளிதழ்.   திங்கள். அக்டோபர் 7, 2013.  Thursday, February 20, 2014

உயர் ரக காபி வேண்டுமா?

  காபிக் கொட்டைகளில் மிகச் சிறந்தது எது என்று தெரிந்தால், காபி சாப்பிடுவதையே நாம் விட்டுவிடுவோம்.  ஆம்.  பிராணிகள், பறவைகள் காபிப் பழத்தை உண்டு, மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளையே ருசியில் சிறந்தவை என்று தரம்பிரிக்கிறார்கள்.  குரங்குகள், எலிகள் உண்பதை
'குரங்கு வஸ்து,'  ' எலி வஸ்து 'என்று வகை பிரிப்பார்கள்.  இதிலேயே மிக உயர்வானது ' புனுகுப்பூனை வஸ்து ' தான்.
     புனுகுப்பூனைகளை காபித் தோட்டத்தில் குடியானவர்கள் வளர்க்கிறார்கள்.  அவை வேண்டாம் என்றால்கூட, காபிப் பழத்தையே தொடர்ந்து தின்னக் கொடுக்கிறார்கள்.  சுகாதாரமற்ற கூண்டுகளில், நகரக்கூட இடமின்றி அடைத்துவைக்கப்படும் புனுகுப்பூனைகளும் - காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற நிலையில் - அதைத் தின்கின்றன.  பிறகு, குடியானவர் அவை கழிக்கும் ' புனுகுப்பூனை வஸ்து ' வைப் பத்திரப்படுத்தி, தினமும் விற்பனைக்குத் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.  இந்த காபிதான் இப்போது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ' பெடா ' என அழைக்கப்படும் பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-- சி.ஹரி.  கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.   

உயர் ரக காபி வேண்டுமா?

  காபிக் கொட்டைகளில் மிகச் சிறந்தது எது என்று தெரிந்தால், காபி சாப்பிடுவதையே நாம் விட்டுவிடுவோம்.  ஆம்.  பிராணிகள், பறவைகள் காபிப் பழத்தை உண்டு, மலம் கழிக்கும்போது வெளியேறும் கொட்டைகளையே ருசியில் சிறந்தவை என்று தரம்பிரிக்கிறார்கள்.  குரங்குகள், எலிகள் உண்பதை
'குரங்கு வஸ்து,'  ' எலி வஸ்து 'என்று வகை பிரிப்பார்கள்.  இதிலேயே மிக உயர்வானது ' புனுகுப்பூனை வஸ்து ' தான்.
     புனுகுப்பூனைகளை காபித் தோட்டத்தில் குடியானவர்கள் வளர்க்கிறார்கள்.  அவை வேண்டாம் என்றால்கூட, காபிப் பழத்தையே தொடர்ந்து தின்னக் கொடுக்கிறார்கள்.  சுகாதாரமற்ற கூண்டுகளில், நகரக்கூட இடமின்றி அடைத்துவைக்கப்படும் புனுகுப்பூனைகளும் - காபிப் பழத்தைத் தவிர, வேறெதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற நிலையில் - அதைத் தின்கின்றன.  பிறகு, குடியானவர் அவை கழிக்கும் ' புனுகுப்பூனை வஸ்து ' வைப் பத்திரப்படுத்தி, தினமும் விற்பனைக்குத் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.  இந்த காபிதான் இப்போது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம். இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ' பெடா ' என அழைக்கப்படும் பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
-- சி.ஹரி.  கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.  வெள்ளி, நவம்பர் 15, 2013.   

Wednesday, February 19, 2014

ஆசனங்கள்.

  ஆசனங்கள் எத்தனை வகைப்படும்?  திருமூலர் ' எட்டு, எட்டுப் பத்தொடு நூறு பல ஆசனமாமே '  என்கிறார்.  8 + 8 + 10 + 100 எனக் கூட்டி  ஆசனங்கள் 126 என்று வரையறை காண்பவரும் உண்டு என்கிறார் சைவசித்தாந்தப் பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார்.
     பல ஆசனங்களில் சில முக்கியமானவை.  அந்த ஆசனம் அடைப்புக்குறியில் இருப்பதனை நினையூட்டுவன.
     மச்சம் ( மீன் ),  கூர்மம் ( ஆமை ),  மகரம் ( முதலை ),  தனுசு ( வில் ),  பச்சிமோத்தானம் ( பின்பாகம் மேலெழுதல்),  மாயூரம் ( மயில் ),  மண்டூகம் ( தவளை ),  மற்கடம் ( குரங்கு ),  ஏகபாதம் ( ஒற்றைக்கால் ),  சிரசு ( தலை ),  அலம் ( கலப்பை ),  நயுகம் ( ஓடம் ),  சர்வாங்கம் ( முழு உடல் ),  சவம் ( பினம் ) முதலியன.  இவற்றினைக் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படுத்த ஆசங்கள் பலவாகும்.
-- புலவர் வே.மகாதேவன்.
--   தினமலர். பக்திமலர். நவம்பர் 14, 2013.   

Tuesday, February 18, 2014

தொட்டால் சிணுங்கி.

  தொட்டால் சிணுங்கியில் உள்ளவை கூட்டு இலைகள்.  இவற்றின் காம்புக்கு அடியில் உள்ள முண்டு போன்ற பகுதி, சற்றுப் பருத்து இருக்கும்.  இது மெல்லிய சவ்வு செல்களால் ஆனது.  நீர் எளிதில் சென்று வரமுடியும்.  இதில் நீர் நிறைந்திருக்கும்போது இலைகள் விரிந்து இருக்கும்.
     காற்று, பூச்சி, மனிதன் போன்றவற்றில் ஏதோ ஒன்று தன்மீது சற்று வேகமாகப்பட்டால், இலைகளின் கீழ் உள்ள பருத்த பகுதியில் உள்ள செல்கள் நீரை இழக்கின்றன.  அதாவது, தண்ணீர் செடியின் தண்டுக்குள் இறங்கிவிடுகிறது. உறுதியிழந்த் நிலையில், காம்பினால் இலைகளைத் தூக்கிப் பிடிக்க முடியாது.  எனவே, இலைக்காம்பு இறங்குகிறது, சுருங்குகிறது.  சில நிமிடங்களுக்குப் பிறகு நீர் பழைய நிலையை அடைய இலைகள் விரிந்ததாகத் தோற்றமளிக்கின்றன.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை.
--  தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 15, 2013. 

Monday, February 17, 2014

தெரிஞ்சுக்கோங்க !

பாவம் பேச்சிலர்ஸ் !
*  மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.
*  மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.
*  மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.
33 !
*  கணிதமேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார்.  அவர் வாழ்ந்த காலம் 1887  -  1920.
*  கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார்.  அவரது காலம் கி.மு. 323  -  கி.மு.356.
*  சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தபோது இயேசு கிறிஸ்துவின் வயது 33 தான்.
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 15, 2013. 

Sunday, February 16, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  1947, ஆகஸ்ட் 15 முதல் 1964, மே மாதம் 24-ம் தேதி வரை ,  6,130 நாட்கள் சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்திருகிறார் நேரு.
*  என்னுடைய தந்தை ஒரு அரசியல் தலைவர்.  நானோ ஒரு அரசியல்வாதி . --  இந்திரா காந்தி.
*  உலகிலேயே எந்த அரச வாரிசும் அரியணை ஏற இத்தனை நாட்கள் காத்திருந்ததில்லை என்ற புதிய சாதனையைப் படைத்தூள்ளார் இங்கிலாந்தின்
   இளவரசர் சார்லஸ்.  இன்று( நவம்பர் 14 )  பிறந்தநாள் கொண்டாடும் சார்லஸ், 1948ம் ஆண்டில் பிறந்தவர்.  1952லேயே இங்கிலாந்தின் அடுத்த
   இளவரசராக  இவர் அங்கீகரிக்கப்பட்டர்.  ஆனால் இளவரசர் பதவியில் இருந்து அரசராக பதவியேற்கும் காலம் மட்டும் இன்னும் அவருக்கு கனியவில்லை.
*  நியூயார்க்கில் கட்டப்பட்டுவரும் உலக வர்த்தக மையம், கட்டி முடிக்கப்பட்டால்  அது அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும்,  இதன்மூலம்,
   கட்டிடத்தின் உயரம் 417 மீட்டர் ( 1,368 அடி ) ,  கோபுரத்தின் உயரம் இரண்டும் சேர்ந்து கட்டிடத்தின் மொத்த உயரம் 1,776 அடியாக இருக்கும்.  இதன்
   மூலம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாக இது இருக்கும்.
*  தற்போது சிகாகோவில் உள்ள சீயர்ஸ் கோபுரம் ( 442 மீட்டர். 1,450 அடி).
*  உலகின் உயர்ந்த கட்டிடம் துபையில் உள்ள புர்ஜ் கலிபா ( 830 மீட்டர், 2,723 அடி ) ஆகும்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013. 

Saturday, February 15, 2014

' காசி '

 காசி, முத்தித் தலங்களில் முக்கியமான தலம்.  இங்கே இல்லாததே இல்லை.  புண்ணிய நதி, விசுவநாதர், விசாலாட்சி, பைரவர்கள் என எல்லாம் இருக்கும் தலம் காசி.
     காசியில் 6 பைரவரும், 108 விநாயகரும் இருப்பதாகப் புராணக்குறிப்புகள் உண்டு.
     இந்து சமயத்தில் காசிக்கு முதன்மை தரப்பட்டிருக்கிறது.  அதனால்தான், தெற்கே தென்காசி உருவாயிற்று.  ஆங்காங்கே காசி விசுவநாதருக்குக் கோயில்கள் கட்டப்பட்டன.  வடக்கேயும் காசி உண்டு.  இமாச்சல உத்தரகாண்டில் ஹரித்துவாருக்கு மேலே உள்ளது உத்தர காசி.
     எல்லாரும் காசியில் வசிப்பது என்பது சாத்தியமற்றது.  அந்தப்பேறு சிலருக்கே வாய்க்கும்.  காசியில் இறக்க வேண்டும் என்று அந்திம காலத்தில் காசியில் வாழ்பவர்களும் உண்டு.
-- தினமலர். பக்திமலர். நவம்பர் 14, 2013.  

Friday, February 14, 2014

சுட்டது நெட்டளவு.

   ஒரு சாவியைப்பார்த்து சுத்தியல் கேட்டது, " உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.  ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.  ஆனால், நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி?"
     அதற்கு சாவி, " நீ என்னை விட பலசாலிதான்.  அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.  பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.  ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் " என்றது.
-- ரிலாக்ஸ்.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013.  

Thursday, February 13, 2014

பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு தொல்லைக்கு முடிவு கட்ட முயற்சி.
     எல்லாவற்றுக்கும் கடவுச் சொல்லை ( பாஸ்வேர்டு )  நினைவு வைத்திருக்க வேண்டியுள்ளது.  இதற்கு முடிவு கட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
     விரல் ரேகைகள், கண்விழி, முகம், குரல் உள்ளிட்டவற்றை அடையாளமாகக் கொண்டு பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் வாழ்க்கையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளன.
     பல்வேறு வகையான கடவுச் சொற்களை நினைவு வைத்திருப்பதற்குப் பதில் இது போன்ற பயோமெட்ரிக் பாதுகாப்பு முறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வருகிறார்கள்.
     இதைப் பெரிய அளவில் புழக்கத்தில் விடுவதற்கு முன், சோதனை அடிப்படையில் பரிசோதித்து வருகிறார்கள். கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்கும் தொல்லையிலிருந்து எதிர்கால சமூகத்தினரை மீட்பதே விஞ்ஞானிகளின் நோக்கம், குறிக்கோள்.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
--. ' தி இந்து' நாளிதழ்.  வியாழன், நவம்பர் 14, 2013. 

Wednesday, February 12, 2014

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

  இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது.  அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.  புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி ( ஸல் )  அவர்கள் கஃபதுல்லாவைக் கூறியுள்ளார்கள்.
     அபூஸயீதுல் குத்ரீ ( ரஸி ) அறிவிக்கிறார்கல். ( புண்ணியத்தைத் தேடி )  மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது.
1. அல் மஸ்ஜிதுல் ஹராம்,  2. மஸ்ஜிதுன் நபவி,  3. மஸ்ஜிதுல் அக்ஸா என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். ( நூல் : புகாரி 1189 ).
      மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது கஃபா ஆலயம் சென்று ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.
      அல்லாஹ் கூறுகிறான்,  மனிதர்களில் யார் ( உடலாலும் செல்வத்தாலும் ) அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கிறாகளோ அவர்கள் அல்லாஹ்விற்காக காபா எனும் அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். ( அல்குர் ஆன் 3 : 98 ).
-- அப்துன்நாஸிர். செய்திச் சுரங்கம். அக்டோபர்  16 / 2013. புதங்கிழமை . தியாகத் திருநாள் .2013 சிறப்பு மலர்.
-- இதழ் உதவி :  செய்திச் சுரங்கம். ஆசிரியர்: Dr. A.ஷேக் அலாவுதீன் .  MD. ( AUC )., D.M.T., R.M.P. ( AA ). காரைக்கால். 

Tuesday, February 11, 2014

சுட்டது நெட்டளவு.

    காவல்துறை அதிகாரி ஒருவர் ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  தனக்கு உதவியாக இருக்கும் என்று கருதி மூன்று சர்தார்ஜி காவலர்களை அழைத்தார்.  அவர்களிடம் ஒரு படத்தைக் காட்டினார். " இவன் ஒரு கிரிமினல், இந்தப் படத்தை வைத்து இவனைப் பற்றி உங்களால் ஏதாவது சொல்ல முடிகிறதா?" என்று கேட்டார்.
     முதல் சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல், " அவனுக்கு ஒரு கண்தான் இருக்கிறது.  இதை வைத்து எளிதாகப் பிடித்துவிடலாம்."  என்றார்.
     அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. " இது என்ன முட்டாள்தனம்?   பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்?  அவனுக்கு இன்னொரு கண் இருக்காது எப்படி முடிவுபண்ணலாம்?" என்று எகிறிவிட்டு அடுத்த சர்தார்ஜி பக்கம் திரும்பினார்.
     அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி! " இந்தக் கிரிமினலுக்கு ஒரு காதுதான் இருக்கிறது".  என்றார் அந்தச் சர்தார்ஜி.
     அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
     முன்றாவது சர்தார்ஜி வந்தார்.  கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், " அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்! " என்றார்.
     அதிகாரிக்கு அது புதிராக இருந்தது.  இது உண்மையாக இருக்குமோ என்று அந்தக் கிருமினலின் பழைய ஆவணங்களை எடுத்துப் பார்த்தார்.  என்ன ஆச்சரியம் !
     அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவந்தான் !
    " என்னால் நம்பவே முடியவில்லை.  அற்புதம்.  அது எப்படி அவ்வளவு கரெக்ட்டாகச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்.
     அதற்கு அந்த சர்தார்ஜி சொன்னார், " இதில் என்ன ஆச்சரியம் இருக்கு?  அவனால்      சாதாரணக் கண்ணாடி அணிய முடியாது.  அவனுக்கு ஒரு காது... ஒரு கண்தானே இருக்கு !"
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ் .
--  ' தி இந்து' நாளிதழ்.  ஞாயிறு, அக்டோபர் 27, 2013. 

Monday, February 10, 2014

மக்காவின் மறுபெயர்கள்.

   1.மக்கா,  2. பக்கா,  3. அல் பைத்துல் ஹராம் ( புனித மிக்க வீடு ),  4. அல் பலதுல் அமீன் ( அபயமளிக்கும் ஊர் ),  5. உம்முல் குரா ( நகரங்களின் தாய் ),  6. உம்மு ரஹீம் ( கருணையின் தாய் ),  7. அல் மஃமூன் ( பாதுகாக்கப்பட்டது ),  8. அல் காதிஸ் ( பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது ),  9. அல் பைத்துல் அதீக் ( பூர்வீக வீடு ),  10. அல் முகத்திஸா ( பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டது ),  இன்னும் பல சிறப்புப் பெயர்களும் உள்ளன.  ( தப்ஸீர் இப்னு கஸீர் ).
-- அப்துன்நாஸிர். செய்திச் சுரங்கம். அக்டோபர்  16 / 2013. புதங்கிழமை . தியாகத் திருநாள் .2013 சிறப்பு மலர்.
-- இதழ் உதவி :  செய்திச் சுரங்கம். ஆசிரியர்: Dr. A.ஷேக் அலாவுதீன் .  MD. ( AUC )., D.M.T., R.M.P. ( AA ). காரைக்கால்.   

Sunday, February 9, 2014

மகிழம்.

 மகிழ மரத்தின் பழைய தமிழ்ப் பெயர் வகுளம்.  மகிழ் என்றும் அழைக்கப்படுகிறது.  அறிவியல் பெயர் Mimusops elengi ( L ) ஆங்கிலத்தில்  Bullet wood, Indian Medlar, Spenish Cherry .  இது சப்போட்டா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறாத் தாவரம்.  இலைகள், மலர்கள் சப்போட்டாவை ஒத்திருக்கும்.  பழங்கள் மஞ்சளாக ஒட்டும் தன்மையுடன் இருக்கும்.  இவற்றைச் சாப்பிடலாம்.  இந்தியா, பசிஃபிக், ஆஸ்திரேலியா நாடுகளில் இயல்பாக வளரக்கூடியது.  எண்ணெய் போன்ற நறுமணப் பொருளைத் தரும்.  இந்த மரம் ரொம்பவும் உறுதியானது, கடினமானது, மதிப்புமிக்கது.  அதன் காரணமாகத்தான் ஆங்கிலத்தில் ' புல்லட்  உட் ' என்ற பெயர் இதர்கு வந்தது.  இந்த மரத்துக்கு பலிஷ் போட்டால் அடர்சிவப்பாக இருக்கும்.
-- ஆதி வள்ளியப்பன்.  உயிர் மூச்சு.  பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--  ' தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,அக்டோபர் 29, 2013. 

Saturday, February 8, 2014

அஷ்டாவக்கிரர்.

  முறையாகப் படிக்காத தன் தகப்பன் தப்புத் தப்பாக வேதமந்திரங்களைச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கருவில் இருந்த குழந்தை உடலை முறுக்கிக் கொண்டது.  இதனால் குழந்தையின் உடல் எட்டு விதமான கோணல்கள் கொண்டதாக ஆனது.  எனவே அஷ்டா ( எட்டு ) வக்கிரன்
( கோணல் கொண்டவன் ) என்று பெயர்.
கனவு .
     கனவில் நான்கு நிலைகள் உள்ளது.  கனவு, ஆழ் உறக்கம், விழிப்பு, துரீயம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.  இவற்றில் ஒவ்வொரு நிலையில் நாம் பெறும் அனுபவங்களும் அடுத்த நிலையில் மறைந்துவிடுகின்றன.  விழிப்பைத் தாண்டிய துரீய நிலையை அடைந்துவிட்டால் விழிப்பில் பெறும் அனுபவங்களும் பொய்யாகிக் கரைந்துவிடும்.  அப்போது ஏற்படும் அனுபவங்களைச் சொற்களால் விவரிக்க இயலாது.  அந்த நிலையை எய்துபவனே ஜீவன் முக்தன்.
-- அரவிந்தன். ஆனந்த ஜோதி. உள்ளத்தில் உண்மை ஒளி.  சிறப்புப் பகுதி.
-- . ' தி இந்து' நாளிதழ்.  வியாழன்,அக்டோபர் 31, 2013.  

Friday, February 7, 2014

அகண்ட முகம் !?

   அகண்ட முகங்களிடம் ' அலர்ட்' டா இருங்க!
     மனிதர்களின் முக அமைப்பு, மச்சங்கள், விரல்களின் நீள அகலங்கள் போன்றவைகளை மையமாகக் கொண்டு,  அவர்களுடைய குணாதிசயங்களை பட்டியலிடும் ஆய்வுகள் உலகமெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு, அகண்ட முகம் கொண்ட ஆண்கள் அதிகம் பொய் பேசுவார்கள் என அதிர வைக்கிறது.
     லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வில்  150க்கும் அதிகமான ஆண்கள் கலந்துகொண்டனர்.  அவர்களிடம் ஆன்லைனில்,  தாயம் ( டைஸ் ) உருட்டச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது.  அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அதிகளவில் டிக்கெட் வாங்க ஆசைப்பட்டு,  கலந்துகோண்ட ஆண்களில் 5ல் ஒருவர் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது.  இப்படி பொய் சொன்னவர்களில் பெரும் பாலானோர் அகண்ட முகம் கொண்டவர்கள்.
    ' நீண்ட முகத்தை காட்டிலும் அகண்ட முகம் கொண்டவர்கள் அதிகம் பொய் பேசுபவர்கள், மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் என்பது எங்களின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  இதை அடிப்படையாகக் கொண்டு மோசடி பேர்வழிகளை பார்த்தவுடனே அடையளம் கண்டு கொள்ளலாம் ' என்கிறார் இந்த ஆய்வை நடத்திய செரில்மெக்காமிக்.
--  சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013. 

Thursday, February 6, 2014

எந்த கிரகம் எதை வழங்குகிறது?

  நவகிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும் நமக்கு,  ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன.  அதன் விவரம் வருமாறு :
சூரியன் ....................ஆரோக்கியம், தலைமைப் பதவி.
சந்திரன் ...................கீர்த்தி, சிந்தனாசக்தி.
அங்காரகன் ............. செல்வம், வீரம்.
புதன் ....................... அறிவு, வெளிநாட்டு யோகம், நகைச்சுவை உணர்வு.
வியாழன் .................. நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல்.
சுக்கிரன் ................... அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை.
சனி .......................... சந்தோஷம், ஆயுள் விருத்தி.
ராகு .......................... பகைவர் பயம் நீங்குதல், பண வரவு அதிகரித்தல்.
கேது ........................  குல அபிவிருத்தி.
--- தினத் தந்தி. தமிழ்மாத ஜோதிடம் இணைப்பு. 11-11-2013.                      
-- இதழ் உதவி : N. கிரி, நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).   

Wednesday, February 5, 2014

பத்ம விருது படும்பாடு.

நாட்டில் பத்ம விருது படும்பாடு.  எங்க மச்சானுக்கு ஒரு விருது தாங்க !
     நாட்டின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் வி ஐபிகளின் உறவினர்களுக்கு அதிகமாக வழம்கப்பட்டுள்ளது அம்பலமாகி இருக்கிறது.  வி ஐ பி.களின் பரிந்துரைகளின் பேரிலே இந்த விருதுகளை அவர்கள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
     பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன்  போன்றவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாக கருதப்படுகின்றன.  இந்த விருதுகள் ஆண்டு தோறும் குடியரசுத்தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்படும்.  ஜனாதிபதி மாளிகையில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கும் விழாவில் ஜனாதிபதி வழங்குவார்.  இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறையில் வி ஐ பிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.
     இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட விருதுகளில் யார்யாருக்கு எந்தெந்த வி ஐ பிகள் பரிந்துரை செய்தார்கள் என்ற தகவலை தருமாறு தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் மனு செய்திருந்தார்.  இந்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.  அதில் சில ஆச்சரியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.
     பிரபல நடிகையும்,  ராஜ்யசபா எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு சமாஜ்வாடியின் முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் பரிந்த்ரை செய்திருந்தார்.  பரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் தன்னுடைய சகோதரி உஷாவுக்கும், பிரபல் இசைக்கலைஞர் உஸ்டட் அம்ஜத் அலிகான் தன்னுடைய மகன்கள் அமான், அயான் ஆகியோருக்கும் பரிந்துரை செய்திருந்தனர்.  காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் எம்.பி.சுப்பராம ரெட்டி, இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் ஜேஸ்ராஜ் ஆகியோரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிந்துரை செய்த தகவலும் வெளியாகி உள்ளது.  இந்த விருதுக்காக 1,300 பரிந்துரைகள் வந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
--  சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013.  

Tuesday, February 4, 2014

பதிவுகள்.

*  காகம் கரைந்தது... விருந்தாளிகள் வருகை என்று.
   சேவல் பதறியது... விருந்தாக போகிறொம் என்று !
    Kelvi @ twitter.com.
*  பொறுப்பு ' குருப்பு '
    படகுப் போட்டியின்போது சில்மிஷம் செய்து,  அதில் அசிங்கமாக நடந்து கொண்டார்  காங். எம்.பி. பீதாம்பர குருப்பு. -- ஸ்வேதா மேனன்.
   ( படகு ) முழுகாம இருக்க நான் பொறுப்பு -ன்னு சொல்லி இருப்பார் போல அந்த ' குருப்பு '!
   sabasabas @ facebook.com.
--  சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013. 

Monday, February 3, 2014

மூளைக்காரன்பேட்டை.

 ஒரு பிரபலத்தைப் பற்றிய எட்டு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.  முதலில் இடம் பெறும் சில குறிப்புகளிலேயே இவரைக் கண்டு பிடித்து விட்டால் எங்கள் சார்பில் சபாஷ்.
1.  ஸ்காட்லாண்டில் பிறந்த கண்டுபிடிப்பாளர்.
2.  பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
3.  12வயதில் இவரது முதல் கண்டுபிடிப்பு நெல்லிலிருந்து உமியை நீக்கும் கருவி.
4.  கேட்கும், பேசும் திறனற்றவர்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றியவர்.
5.  தன் தாத்தாவின் பெயர்தான் இவருக்கும்.
6.  இவரது நண்பரின் பெயர் வாட்ஸன்.
7.  கனடா, அமெரிக்கா இரண்டிலும் வாழ்ந்த இவர், 1922ல் கனடாவில் இறந்தார்.
8.  இவரது கண்டுபிடிப்பை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் தகவல் பரிமாற்றத்திற்காக தினமும் பயன்படுத்துகிறோம்.
-- புதிருக்கான விடை :  தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.
-- ரிலாக்ஸ். ' தி இந்து' நாளிதழ்.  ஞாயிறு, நவம்பர் 10, 2013. 

Sunday, February 2, 2014

தெய்வீக மூலிகைகள் !

   தெய்வீக மூலிகைகள் என்று கருதப்படும் ஐந்து வித இலைகள் முக்கியமானவை.  அவை துளசி, வில்வம், வேம்பு, அருகு, வன்னி ஆகியவையாகும்.  இவை உடல் நலத்தை சீராக்கும் மூலிகைகளாகும்.  இவைகளை பாத்திரங்களில் போட்டு நீர் விட்டு கோவில்களில் உபயோகப்படுத்துவார்கள்.  இந்த தீர்த்தப் பாத்திரத்திற்குப் பெயர் பஞ்சபாத்திரம்.  நம் உடம்பை பத்திரமாக வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் என்று கூட பொருள்கொள்ளலாம்.  ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதத்தில் உடம்பைச் சீராக்குகிறது.
கைரேகை அற்புதங்கள்.
     ' திரு ' என்றால் அழகிய என்றும்,  ' மணம் ' என்றால் சேர்க்கை என்றும் பொருள்.  ஆணும் பெண்ணும் அழகாக சேர்ந்து இல்வாழ்க்கை நடத்த பத்து பொருத்தங்கள் பார்த்து, பெற்றோர் திருமணம் நடத்துகிறார்கள்.  ஒரு திருமணம் நல்ல முறையில் நடக்க 10 பொருத்தங்கள் முக்கியமானவை.  அதில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ரஜ்ஜு ( சரடு ) பொருத்தம் ஆகியவை முக்கியமானவை.  இவற்றிலும் சரடு பொருத்தம் அதி முக்கியமானது.
-- தினத் தந்தி. தமிழ்மாத ஜோதிடம் இணைப்பு. 11-11-2013.                      
-- இதழ் உதவி : N. கிரி, நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ). 

Saturday, February 1, 2014

வந்தாச்சு...

 ( சிறப்பு }
வந்தாச்சு ஆன்லைன் பேப்பர்   'ஆப்' பேஸ்புக் நிறுவனம் அறிமுகம்.
     வாஷிங்டன்
     ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை ( ஆப்ஸ் ) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இந்த நிறுவனம் வெளியிடும் முதல் தாயாரிப்பு இதுவாகும்.
     ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில் ஆன்லைன் செய்தித்தாளுக்கான 'ஆப்' - ஐ  ஃபேஸ்புக் வெளியிடுள்ளது.
     உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும்.  மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும்.  பல்வேறு விதமான செய்திகளிலிருந்து, வாடிக்கையாளர் தமக்குத் தேவையான குறிப்பிட்ட ரக செய்திகளை மட்டுமே பின் தொடரும் வசதி இதில் உள்ளது.  உணவு, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் செய்திகளைப் படிக்கலாம்.
    பிரசித்தி பெற்ற பல்வேறு வெளியீட்டாலர்களின் செய்தி கட்டுரைகளையும் இதில் காண முடியும்.
    இதில் எந்தெந்த நிறுவனங்கள் கூட்டாளியாக இருக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.  ஆயினும், இது தொடர்பான வீடியோ விளம்பரத்தில் நியூயார்க் டைம்ஸ், டைம், யுஎஸ்ஏ டுடே, ஹபிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தால்களின் செய்திகள் வாசிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் சமூக இணைய தளத்தின் நியூஸ்பீட் பகுதியிலிருந்தும் தகவல்கள் பெறப்படுகின்றன.  இத்தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-- பி.டி.ஐ.
-- 'தி இந்து' நாளிதழ், சனி,பிப்ரவரி 1,2014. 

மங்கலம்.

   அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை,  அப்போதே பலித்து விடும்.
     இதை, ராமாயணம் தசரதர் வாயிலாக விவரிக்கிறது.
     ராமருக்கு ராஜ்யத்தை அளித்து,  அவரை அரசராகப் பார்த்துவிட்டு,  காட்டிற்கு போய் தான் தவம் செய்யப் போவதாக சபையில் அறிவித்தார் தசரதர்.
     அந்த அறிவிப்பை வெளியிடும் கம்பரின் பாடல்...
    ' ஆதலால் இராமனுக்கு அரசனை நல்கி இப்
     பேதமைத்தாய் வரும் பிறப்பை நீக்குவான்
     மாதவம் தொடங்கி அவ்வனத்தை நணுவேற்கு
     யாதுநும் கருத்தென இளைய கூறினான் '
இப்பாடலை,  மேலோட்டமாக பார்த்தால் ' ராமனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிட்டு, பேதமை நிறைந்த இப்பிறப்பை நீக்குவதற்காக, நான் காட்டிற்கு போய் பெருந்தவம் செய்யப்போகிறேன் ' எனத் தசரதர் கூறுவதாக தோன்றும்.  ஆனால்,
     இப்பாடலில் தசரதர் அமங்கல வர்த்தைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்.
     ராமனுக்கு என்பது அந்த நேரத்தில் அங்கு இல்லாமல்,  தாய் மாமனான யுதாஜித்துடன் இருந்த பரதனைக் குறிக்கும்.
     அரசு அந்த பரதனுக்குத்தான் போகப் போகிறது.  ஏன் அப்படி?
     அவனுடைய தாயான பேதமை நீறைந்த கைகேயி வந்து வரங்களைக் கேட்கப் போகிறாள்.  அது தாங்காமல், நான் இறந்து போய்விடுவேன் என்பது, தசரதரே அறியாமல் வந்து விழுந்த அமங்கல வார்த்தைகள்.  அதைவிட பாடலில் வரும் மூன்றாவது வரி,  சீதை வனத்தில் படப்போகும் துயரத்தை நுணுக்கமாக விவரிக்கிறது.
     சீதை, ராமர் முதலானோர் காட்டுக்கு பொய் 14 ஆண்டுகள் தவம் செய்யபோகிறார்கள் என்கிறது மூன்றாவது வரி.
     தமிழில், எழுத்துகளைக் கணக்கிடும் போது, ஒற்று நீக்கித்தான் எண்ணப்படும்.  அதன்படி ' மாதவ தொடங்கிய வனத்தை நணுவேற்கு '  இவ்வாறு ஒற்று
நீக்கி கணக்கிட்டால் 14 எழுத்துகள் வரும்.  ( வை.மு.கோ. கம்பராமாயண உரை ).
     தசரதரிடமிருந்து வெளிப்பட்ட அந்த அமங்கல வார்த்தைகள் அப்படியே பலித்தன என்பது நமக்கு தெரிந்ததுதான்.
--  ஸாந்த்ரானந்தா,  தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.