Monday, November 30, 2009

சுலோகம் !

ஒரு சமயம் நாடகத் தந்தை சம்பந்த முதலியார் அவர்கள் சிவகெங்கையில் ஒரு வயோதிகரைச் சந்தித்தார் . அவருக்கு சுமார் 90 வயது இருக்கும் என்று முதலியார் அவர்கள் தீர்மானித்து , சற்று தயக்கத்தோடு அவரிடம் , " உங்களுக்கு என்ன வயதாகிறது ?" என்று கேட்டார் .
உடனே அவர் " ஒருவன் தன் வயதை வெளியில் சொல்லக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருகிறது .." எனச் சொல்லி அப்படி இருக்கும் அந்த வடமொழி சுலோகத்தையும் சொன்னார் .
இச்சம்பவம் நடந்த பிறகு , சம்பந்தமுதலியார் அவர்கள் " அந்த வடமொழி சுலோகத்தை நான் அவரிடம் சரியாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்லாமல் பொய்விட்டேன் ... தற்போது தங்கள் வயதைச் சொல்லிக் கொள்ளத் தயங்கும் சினிமா நடிகைகளுக்கும் , நடிகர்களுக்கும் அந்த் சுலோகத்தைச் சொல்லிக் கொடுத்திருப்பேனே !" என் வருந்தினாராம் .
--- ஆனந்தவிகடன் ( 21 - 02 - 1965 ) .

Sunday, November 29, 2009

தலைமுறை ஏழு .

ஆணின் விந்தில் உள்ள பல நூறு அணுக்களில் ஒன்றும் , பெண்ணிடம் உருவாகும் கருமுட்டைகளில் ஒன்றும் இணைந்து கரு உருவாகிறது என்பது இயற்கை . அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல் . குழந்தையின் பண்புகள் இந்த ஜீன்களால் நிர்ணயிக்கப்படுகின்றன . ஜீன்களைப் பற்றி .ஆராய்ச்சி , அறிவியல் உலகில் இன்றும் தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது . இந்தச் செய்தியை முன்னோர்கள் சிந்தித்தனர் . ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை , தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .
தந்தையிடமிருந்து 21 அம்சங்கள் ; பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள் ; முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் ; ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . நான்காவது தாதையிடமிருந்து 6 அம்சங்களும் ; ஐந்தாவது தாதையிடமிருந்து 3 அம்சங்களும் ; ஆறாவது தாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . எனவே , ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெறுகின்றன . எனவேதான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .
நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் - இவர்கள் மூவருக்கும் திவசத்தில் பிண்டம் தரவும் தில தர்ப்பணம் கொடுப்பதற்கும் இதுவே காரணம் .
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Saturday, November 28, 2009

முன்னோர் வழிபாடு .

வேதவேள்விகளைப் புரிவதை விடவும் , கோயில் , குளங்களுக்குச் சென்று சுவாமி கும்பிடுவதை விடவும் முன்னோர்களை வழிபடுவது முக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .
' மாதுர் தேவோ பவ ; பிதுர் தேவோ பவ ; ' -- என்பது சாஸ்திரத் தொடர் .
முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழ்நெறி . ஒருவன் தான் சம்பாதித்த பணத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கொண்டு செலவிட வேண்டும் என திருவள்ளுவர் கூறியிருக்கிறார் .
ஒரு பகுதி அரசனுக்குரிய வரி , தென்புலத்தார் , தெய்வம் , விருந்து , சுற்றம் , தன் சொந்தச் செலவுகள் என்று ஐந்து வகை . ஆக மொத்தம் ஆறு வகை .
இவற்றுள் தென்புலத்தார் என்பது தெற்கில் உள்ள பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்களைக் குறிக்கும் . தெய்வ வழிபாட்டை விடத் தென்புலத்தார் வழிபாட்டுக்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்ததைத் " தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " என்ற இந்தக் குறள் காட்டுகிறது
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் , வாரமலர் . ஜூலை 19 , 2009 .

Friday, November 27, 2009

அப்படியா ?.

* ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் நபரின் வேலைத்திறன் 25 சதவீதம் உயர்வதாக ராடல் என்ற நார்வே உளவியல் நிபுணர் கண்டுபிடித்துள்ளார் .
*' ஒன் மொமன் ட் ப்ளீஸ் ' என்ற ஆங்கில சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறோம் . மோமன்ட் என்பது ஒன்னரை நிமிட நேரத்தைக் குறிக்கும் சொல்லாகும் .
* செஸ்பி என்ற நட்சத்திரம் சூரியனைப் போல் 1200 மடங்கு பெரியதாம் . இதனுடைய விட்டம் 160 கோடி கிலோ மீட்டராம் .
* வெள்ளை நிறத்தைக் கண்டு பயப்படும் ஒரே விலங்கு புலி .

Thursday, November 26, 2009

ஜூலை மாதம் .

* ஜூலை 24 , 1969 நிலவுசென்று மீண்டும் பூமிக்கு திரும்பியது அப்பல்லோ - 2 விண்கலம் .
* ஜூலை 25 , 2002 ஜனாதிபதியாக அப்துல்கலாம் பதவி ஏற்றுக்கொண்ட தினம் .
* ஜூலை 25 , 1978 முதல் சோதனைக் குழாய் குழந்தை இங்கிலாந்தில் பிறந்தது .
* ஜூலை 25 , 2007 இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி ஏற்பு .
* ஜூலை 26 , 1856 ஜார்ஜ் பெர்னாட்ஷா பிறப்பு .
* ஜூலை 26 , 1956 சூயஸ் கால்வாய் தேசியமயமானது .
* ஜூலை 27 , 1876 நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறப்பு .
*ஜூலை 27 , 1877 நவீன அணுக்கொள்கையின் தந்தை ஜான் டால்டன் மறைவு .
*ஜூலை 28 , 1979 மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் .
*ஜூலை 29 , 1883 சர்வாதிகாரி முசோலினி பிறப்பு .
* ஜூலை 29 , 1927 இந்தியாவின் 2 வது வானொலி நிலையம் கல்கத்தாவில் உருவானது .
* ஜூலை 30 , 1863 மோட்டார் கார் தயாரிப்பாளரான ஹென்றி போர்டு பிறப்பு .

Wednesday, November 25, 2009

தெரிந்து கொள்வோம் .

* வால்பாறையிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள ' சின்னக்கல்லாறு ' புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் . ' தமிழகத்தின் சிரபுஞ்சி ' என்றே அழைக்கப்படுகிறது . இதுதான் உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் இரண்டாவதாகும் . அங்கிருந்து சோலையாறு பக்கம் . ஆசியாவின் மிக ஆழமான இரண்டாவது அணை இதுதான் .
* ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் ஓர் ஆணைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவது போலவே , ஓர் ஆண் இன்னோர் ஆணைப் பார்த்து ( அ ) ஒரு பெண் இன்னோர் பெண்ணைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவதும் இயல்பானதே .
* இருபால் சேர்க்கையாளர் ( Hetro Sexuals ) போலவேதான் ஓரினச் சேர்க்கையாளர்களையும் ( Homo Sexuals ) கருத வேண்டும் .
* ' உலகம் முழுதுமே இருபால் சேர்க்கையாளர்களால் தான் ஹெ.ஐ.வி. அதிகமாகப் பரவுகிறது . ஓரின சேர்க்கையாளர்களால் அல்ல ' என்கிறது ஓர் ஆய்வு
* குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை அவர்கள் அறிந்த விஷயங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள் .
* நினைவாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் கலைகளில் மிக முக்கியமானது அவதானம் . கவனகம் என்றும் சொல்வார்கள் .
* ஒரு நபர் ஒரு நேரத்தில் 10 விஷயங்களைச் செய்து காட்டினால் அவர் தசாவதானி . சோடஷாவதானம் என்றால் 32 விஷயங்களைச் செய்து காட்டுவது . 100 விஷயங்களைச் செய்து காட்டினால் அதன் பெயர் தசாவதானம் .

Tuesday, November 24, 2009

தமாஷ் !

* போலீஸ்காரர் : ஏம்பா ! நீ அந்த சிவப்பு விளக்கைக் கவனிக்கலையோ ?
சைக்கிள்காரர் : கவனிச்சேனுங்க... ஆனா உங்களைத்தான் கவனிக்கலே !
* தாத்தா : " காலம் ரொம்பத்தான் மாறிப் போச்சு ! "
பேரன் : " ஏன் தாத்தா ? "
தாத்தா : " ராஜாவை மந்திரியாக்கிட்டாங்களாமே ! "
* ஒரு கல்லூரி மாணவரின் செல்ஃபோனை குடைந்தபோது கிடைத்த எஸ். எம். எஸ் .:
" இளநீர் , தண்ணீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . பீர் , பிராந்தி , ரம் என்று சொல்லும்போதுதான் உதடுகள் ஒட்டும் ."
* இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் இரண்டு KINGS யாரெனத் தெரியுமா உங்களுக்கு ....?
1 . SMO - KING 2 . DRINK - KING . முடிஞ்சா இந்த மோசமான KINGS - கிட்டேர்ந்து உலகைக் காப்பாத்திக்கோங்க .
* " காலேஜுக்கு ஏன்டா லேட்டு ?"
" பைக் பஞ்க்சர் சார் !"
" சரி .... பஸ்ல வர்றது ...?"
" பஸ் வாங்க வசதி இல்லை சார் !"
* " டாக்டர் ! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும் ..."
" அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க !"
* " தவளை தண்ணியிலேயும் இருக்கும் , தரையிலேயும் இருக்கும் . ஆனா , நம்ம தலைவர் ..."
" தண்ணியிலே தரையில கிடப்பார் !"
* " நம்ம தலைவரு அஞ்சாவது படிக்கும்போதே கள்ளச்சாராயம் வித்தவர்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றதை என்னால் நம்பவே முடியலை !"
" எதனால அப்படிச் சொல்றே ?"
" தலைவர் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்காரா ?"
* ' LOVE ' என்று சொன்னாலும் , ' காதல் ' என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது ... PICK UP , DROP , ESCAPE என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் .
* " வக்கீலுக்கும் , டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ?"
" தெரியவில்லையே "
" வக்கீல் சரியாக இல்லைன்னா கேஸ் முடியாது , டாக்டர் சரியில்லைன்னா கேஸ் முடிந்து விடும் !"

Monday, November 23, 2009

போராளி - தீவிரவாதி .

போராளி - தீவிரவாதி வித்தியாசம் என்ன ?
போராளி -- போராட்டத்தில் தான் சாவதற்கு அஞ்சமாட்டான் . தீவிரவாதி -- மற்றவர்கள் சாவதைக்கண்டு அஞ்சமாட்டான் . .
--- அரசு பதில்கள் , குமுதம் 22 - 07 - 2009 . . .

Sunday, November 22, 2009

இன்ஷூரன்ஸ் .

வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் .
வாகனத்தை ஓட்டுபவருக்கும் , சாலையில் செல்பவருக்கும் விபத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்வதற்காகத்தான் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இன்ஷூரன்ஸ் இல்லையென்றால் இழப்பீடும் பெறமுடியாது . இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை சாலையில் ஓட்டுவது சட்டப்படி குற்றம் .
இருசக்கர வாகனத்திற்கான இன்ஷூரன்ஸ் தொகையை நிர்ணயிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன . புதிய வண்டியென்றால் வாகன விலையில் ஐந்து சதவீதம் மட்டும் குறைத்து நிர்ணயிக்கப்படும் . உதாரணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என்றால் ரூ. 47, 500 க்கு இன்ஷூர் செய்யலாம் . அதுவே 6 மாதம் முதல் ஒரு வருடம் ஆன வாகனத்திற்கு 15 % குறைத்துக்கொள்ள வேண்டும் . ஒன்று முதல் இரண்டு வருடம் ஆன வாகனங்களுக்கு அதன் மதிப்பில் இருபது சதவிகிதமும் , இரண்டு முதல் மூன்று வருடம் ஆன வாகனத்திற்கு முப்பது சதவிகிதமும் , மூன்று முதல் நான்கு வருடம் ஆன வாகனத்திற்கு நாற்பது சதவிகிதமும் , ஐந்து வருடம் ஆன வாகனத்திற்கு ஐம்பது சதவிகிதம் குறைத்துக்கொண்டு கட்டவேண்டும் . ஐந்து வருடத்திற்கு மேல் 12 வருடம் ஆன வாகனத்திற்கு வண்டியின் கண்டிஷனைப் பொருத்து நாம் விரும்பும் தொகைக்கு இன்ஷூரன்ஸ் செய்யலாம் .
--- இளையரவி, ( தகவல் தமயந்தி ) குமுதம் . 22 - 07 - 2009 .

Saturday, November 21, 2009

அப்படியா ?

* வானில் சப்தரிஷி மண்டலம் தென்படுவதாகக் கூறுவார்கள் . சப்தரிஷிகளின் பெயர்கள் : அத்திரி , வசிஷ்டர் , கௌதமர் , காஸிபர் , விஸ்வாமித்திரர் , பரத்வாஜர் , ஜமத்கனி . ,
* சட்டையைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்து நாட்டவர்கள் .
* நமது உடலில் அதிக அளவாக 115.7 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் , குறைந்த அளவாக 60.8 பாரன்ஹீட் டிகிரி வெப்பத்தையும் தாங்கக்கூடியது .
* ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் 100 சைபர்கள் கொண்ட எண்ணுக்கு கூகால் என்று பெயர் .
* நாம் சமைத்து உண்ணும் அரிசியில் மட்டும் 60,000 ரகங்கள் இருப்பதாக ஐ . நா , சபையின் விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது .
* மனைவி இறந்ததும் மறுமணம் செய்து கொள்வது மனிதர்கள் வழக்கம் . ஆனால் , தன்னோடு வாழ்ந்த பெண் நரி இறந்துவிட்டால் ஆண் நரி வேறு பெண் நரியைத் தேடிப் போகாதாம் .
* நாயின் மூக்கில் வாசனையை உணர்வதற்காக மொத்தம் 22 கோடி செல்கள் உள்ளனவாம் .
* உலகிலேயே பெருமளவு உற்பத்தி செய்யப்படும் தானியம் ' சோளம் ' ஒன்றுதான் .
* அடைகாக்கும் கோழி , முட்டை கூட்டுக்குள் மஞ்சள் கரு உடையாமல் இருக்க , ஒருநாளில் 50 முறையாவது முட்டைகளை திருப்புகிறதாம் .
* செம்மறியாட்டின் குடல் தசை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் வலுவான நூல் போன்ற நரம்புக்கு கேட் - கட் என்று பெயர் . அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த நூலினால் தான் தையல் போடுவர் .
* ஒரு துளி ரத்தம் மனித உடலை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 2 வினாடிகள்.
* இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தியை அறிவித்த வானொலி அறிவிப்பாளர் பூர்ணம் விஸ்வநாதன்
* உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் கரையான் .
* வயலின் இசையை தினமும் தொடர்ந்து சில மணி நேரங்கள் கேட்டு வந்தால் , தலைமுடி நீளமாக வளர்கின்றது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
* ஆபிரஹாம் லிங்கனுக்கு 2 2 வயதில் ஆன் என்ற பெண்ணிடம் காதல் வந்தது . ஆனுக்கு 22 வயதானபோது டைபாய்டு காய்ச்சலில் இறந்து போனாள் . ஆன் கல்லறையில, " உறவினால் அல்ல , பிரிவினால் மணந்த ஆன் இங்கே உறங்குகிறாள் " என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம் .
* யானையில் ஆண் யானைகள்தான் தந்தங்களோடு இருக்கும் . ஆனால் , அபூர்வமாக சில பெரிய ஆண் யானைகள் தந்தங்களின்றி இருக்கும் . அவை ' மக்னா ' என்று அழைக்கப்படுகின்றன .
* பூனை தன் தலையைச் சொறிந்து கொள்ள முன்னங்கால்களை உபயோகிக்க முடியாது . எப்போதுமே பின்னங்கால்கள்தான் .
* உருளைக்கிழங்கு செடியில் பூப்பூக்கும் . காய் காய்க்கும் . விதை கூட உருவாகும் . ஆனால் , இனப்பெருக்கம் விதைகளால் கிடையாது . கிழங்கின் மேல் காணப்படும் சிறு சிறு குழிகளை கிழங்கோடு வெட்டி புதைத்தால் தான் உருளைக்கிழங்கு செடி உருவாகுமாம் .
--- பாக்யா , ஜூலை 24 - 30 ; 2009 .-- செப்டம் 18 - 24 ; 2009 .

Friday, November 20, 2009

அறிந்து கொள்வோம் .

* உலகின் மிகப்பழமையான மரம் - பேரீச்சை .
* செயற்கைக்கோளினை முதலில் விண்ணுக்கு அனுப்பிய நாடு - ரஷ்யா .
* கின்னஸ் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஆண்டு - 1955.
* தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் - காளிதாஸ் .
* சீனாவின் பழைய பெயர் - கதாய் .
* தாய்லாந்தின் பழைய பெயர் - ஸயாம் .
* எகிப்தின் பழைய பெயர் - யுனைடைட் அரபு ரிபப்ளிக் .
* ஆசியாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் நீர்ச்சந்தி - பீரிங்னீர்ச்சந்தி .
* எரிமலையே இல்லாத நாடு - இந்தியா .
* அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் - கரப்பான்பூச்சி .
* தலையில் இதயம் உள்ள உயிரினம் - இறால் .
* ரவீந்திரநாத்தாகூர் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் - ஆகாஷ் வாணி ( வானொலி ) .
* மனிதனைப் போல கனவு காணும் உயிரினம் - நாய் .
* படைவீரர்களுக்கு முதன் முதலில் சீருடை அணியும் முறையைக் கொண்டுவந்தவர் - மாவீரன் நெப்போலியன் .
--- தினத்தந்தி , 13 - 07 - 2009 .

Thursday, November 19, 2009

பேறுகள் .

16 வகை பேறுகள் .
1 . புகழ் . 2 . கல்வி . 3 . வலி . 4 . வெற்றி . 5 . நன்மக்கள் . 6 . பொன் . 7 . நெல் . 8 . நல்லூழ் . 9 . நுகர்ச்சி . 10 . அறிவு . 11 . அழகு . 12 . பொறுமை . 13 . இளமை . 14 . துணிவு . 15 . நோயின்மை . 16 . வாழ்நாள் .
--- முத்துக்குமார் , நாகப்பட்டினம் . தினத்தந்தி . 13 - 07 - 2009 .

Wednesday, November 18, 2009

64 கலைகள் .

1. அக்கர இலக்கணம் . 2 . இலகிதம் . 3 . கணிதம் . 4 . வேதம் . 5 . புராணம் . 6 . வியாகரணம் . 7 . நீதி சாஸ்த்திரம் . 8 . ஜோதிட சாஸ்திரம் . 9 . தரும சாஸ்திரம் . 10 . யோக சாஸ்திரம் .
11 . மந்திர சாஸ்திரம் . 12 . சகுன சாஸ்திரம் . 13 . சிற்ப சாஸ்திரம் . 14 . வைத்திய சாஸ்திரம் . 15 . உருவ சாஸ்திரம் . 16 . இதிகாசம் . 17 . அலங்காரம் . 18 . காவியம் . 19 . மதுரபாடனம் . 20 . நாடகம் .
21 . நிருத்தம் . 22 . சுத்தபிரமம் . 23 . வீணை . 24 . வேணு . 25 . மிருதங்கம் . 26 . தாளம் . 27 . அத்திரபரிட்சை . 28 . கனக்படிட்சை . 29 . ரதப்பரிட்சை . 30 . கஜபரிட்சை . 31 . அசுவபரிட்சை . 32 . ரத்தின பரிட்சை .
33 . பூ பரிட்சை . 34 . சங்கிராம இலக்கணம் . 35 . மல்ல யுத்தம் . 36 . அக்ருஷணம் . 37 . உச்சாடனம் . 38 . வித்துவேஷணம் . 39 . மதன சாஸ்திரம் . 40 . மோகனம் . 41 . வசீகரணம் . 42 . ரசவாதம் .
43 . காந்தர்வ வாதம் . 44 . பைபீல வாதம் . 45 . கவுதுக வாதம் . 46 . தாது வாதம் . 47 . காருடம் . 48 . நட்டம் . 49 . முட்டி . 50 . ஆகாயப்பிரவேசம் . 51 . ஆகாய கமனம் . 52 . பரகாயப் பிரவேசம் . 53 . அதிர்ச்யம் .
54 . இந்திரஜாலம் . 55 . மகேந்திரஜாலம் . 56 . அக்னித் தம்பம் . 57 . வாயுத் தம்பம் . 58 . ஜல ஸ்தம்பம் 59 . சுக்கிலத்தம்பம் . 60 . கன்னத்தம்பம் . 61 . கட்கத் தம்பம் . 62 .அவத்தைப்பிரயோகம் .
63 . திட்டித் தம்பம் . 64 . வாக்குத்தம்பம் .
--- கார்த்திக்குமார் , தஞ்சாவூர் . தினத்தந்தி . 13 - 07 - 2009 .

Tuesday, November 17, 2009

தெரிந்து கொள்வோம் !

* சீன மொழியை 100 நாடுகளில் 30 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கற்றுக்கொண்டு வருகிறார்கள் . அந்த மொழியின் முக்கியத்துவத்தை இப்போது புரிந்து கொள்ளமுடியும் .
* இப்பூமி தோன்றி 4750 மில்லியன் ஆண்டுகள் கடந்துவிட்டதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது .
* உலகில் எஞ்சினியர்களை உருவாக்குவதில் , இந்தியா இப்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது .
* ஒரு மனித உடலில் சுமார் 30 , 35 பில்லியன் கொழுப்பு கூறுகள் உள்ளன . அவன் இளைத்தாலும் கூறுகள் சுருங்கிவிடுகின்றனவே தவிர எண்ணிக்கையுள் குறைவதில்லை .
* அமெரிக்காவில் 2008 ல் வாழ்ந்தவர்களில் அந்நிய நாட்டு மக்கள் கீழ்வருமாறு :
1 . மெக்சிகோ .........- 4.40 லட்சம் .
2 . இந்தியா ............... - 4.25 லட்சம் .
3 . ஜப்பான் ....... .........- 2.57 லட்சம் .
4 . தென்கொரியா - 2.166 லட்சம் .
5 . பிரிட்டன்..............- 2.162 லடசம்
6 . சைனா ..................- 1.63 லடசம் .
7 . பிறர் உட்பட ....- 3.6 மில்லியன் .
--- அருட்செல்வர் சேக்கிழார் .ஜூன் 2009 .

Monday, November 16, 2009

அப்படியா ...

* காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த சாரைப் பாம்பின் விஷம் பயன்படுகிறதாம் .
* உலகிலேயே மிகக் குறைவான எழுத்துக்கள் உள்ள மொழி ஹவாய் மொழிதான் . அதில் மொத்தம் 12 எழுத்துக்கள்தான் உள்ளன .
*1947 - ல் நடந்த இங்கிலாந்து எலிசபெத்- ராஜகுமாரன் பிலிப்ஸ் திருமணத்திற்கு காந்திஜி அனுப்பிய பரிசு ஒரு கோவணம் .
* கிரிக்கெட் மட்டையை முதலில் வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ' ஜான்பால் ' என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி .
* நண்டு தனது ஆயுளில் 20 முறை சட்டையுரித்துக் கொள்ளும் .
* சிலந்திப் பூச்சியின் வலைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் , எந்த இரு சிலந்தி வலைகளும் ஒன்று போல் இருப்பதில்லை .
--- பாக்யா , ஜூலை 10 - 16 ; 2009 .

Sunday, November 15, 2009

ஸ்டார் சென்சார் .

நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .
--- தினமலர் , 18 - 07 - 2009 .

Saturday, November 14, 2009

சாவே ! உனக்கொரு நாள் !

சாவே ! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ ?
சீரிய நெற்றி எங்கே ?
சிவந்தநல் இதழ்கள் எங்கே ?
கூரிய விழிகள் எங்கே ?
குறுநகை போன தெங்கே ?
நேரிய பார்வை எங்கே ?
நிமிர்ந்த நன்நடைதான் எங்கே ?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே .
அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரிய விட்டார்
தீய சொல் சொல்லா வாயை
தீயிலே கருகவிட்டார் .
பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்து விட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்க் கிளியைக் கலங்கவிட்டு
தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான் .
சாவே ! உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே ! நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே ! உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாரோமோ
யாரிடத்துப் போயுரைப்போம் ?
யார் மொழியில் அமைதி கொள்வோம் ?
யார் துணையில் வாழ்ந்திருப்போம் ?
யார் நிழலில் குடியிருப்போம் ?
வேரொடு மரம் பறித்த
வேதனை எம்மையும் நீ
ஊரோடு கொண்டு சென்றால்
உயிர்வாதை எமக்கிலையே
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார் தருவார்
நேரு இல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார் ?
ஐயையோ காலமே
ஆண்டவனே எங்கள் துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே
கை கொடுத்த நாயகனை
கைப் புறத்தே மறைத்தாயே
கண் கொடுத்த காவலனைக்
கண் மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா
நேருவா மறைந்தார் , இல்லை !
நேர்மைக்குச் சாவே இல்லை !
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணமில்லை
இருக்கின்றார் நேரு
இங்கே தான் !
இங்கே தான் !
எம்முயிரில் -- இரத்தத்தில்
இதயத்தில் நரம்புகளில்
கண்ணில் -- செவியில்
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா... அம்மா... அம்மா...
--- கவிஞர் கண்ணதாசன் , ( ' தென்றல் திரை ' -- 30 - 05 - 1964 .)

Friday, November 13, 2009

தனி விமான சேவை !

செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது .
வளர்ப்பு பிராணிகளை பலர் செல்லமாக வளர்த்து வருகின்றனர் . நாய் , பூனை , குருவி போன்றவற்றை சிலர் குழந்தைகளுக்கு நிகராக பாவித்து வளர்த்து வருகின்றனர் . இவற்றை , ஒரு இடத்துக்கு சரக்கு விமானங்களில் மட்டுமே அழைத்துச் செல்லமுடியும் என்பதால் தேவையான வசதிகள் கிடைக்காமல் அல்லல்படுகின்றன . அமெரிக்காவில் செல்லங்களின் விமான பயண பிரச்னைக்கு இப்போது இதற்கு விடிவு ஏற்பட்டுள்ளது .
செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் . பெட் ஏர்வேஸ் எனப்படும் இந்த விமான சேவை அமெரிக்காவில் நியூயார்க் , வாஷிங்டன் , சிகாகோ , டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய 5 நகரங்களுக்கு இடையே இப்போது இயக்கப்படும் . இந்த விமானத்தில் செல்லப் பிராணி ஒன்று பயணம் செய்ய கட்டணம் 149 டாலர் ( ரூ .12,450 ) மட்டுமே .
விமான பயணத்தில் பிராணிகள் பராமரிப்பு , தட்பவெப்ப கட்டுப்பாட்டு அறை வசதிகள் இலவசமாக வழங்கப்படும் . ஒவ்வொரு விமானத்திலும் விமானி , துணை விமானி , ஆகியோருடன் பிராணிகள் உதவியாளர்களும் இருப்பார்கள் . விமானத்தில் இருக்கும் பிராணிகள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படும் . நீண்ட தொலைவு விமானங்கள் ' பாத்ரூம் பிரேக் ' வசதிக்காக நிறுத்தப்படும் . அங்கு உணவு வழங்கப்படும் .
---- தினமலர் 18 - 07 - 2009 .

Thursday, November 12, 2009

கோயில் செய்திகள் .

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் மூலவரை ரத்னவீதி உற்சவத்தில் நாராயணனாகவும் , ஸ்நானவேதி உற்சவத்தில் விநாயகராகவும் , ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவகுலேவரா உற்சவத்தில் சிவபெருமானாகவும் , சயனத்திருவிழாவில் சக்தி தேவியாகவும் , ரதோற்சவத்தில் சூரிய பகாவானாகவும் பாவித்து கொண்டாடுவார்கள் . ஒரே தெய்வத்தை இவ்வாறு பல பாவனைகளில் வழிபடுவது பூரி தலத்தில் மட்டும்தான் .
பொதுவாக சிவபெருமான் தன் வலக்கரத்தில் மழுவையும் , இடக்கரத்தில் மானையும் ஏந்தியிருப்பதுதான் வழக்கம் . ஆனால் , ' வலங்கைமான் ' திருத்தலத்தில் , வலக்கரத்தில் மானும் , இடக்கரத்தில் மழுவும் ஏந்திக் காட்சி தருகிறார் ஈசன் .
* ஆந்திர மாநிலத்தில் ராஜ முந்திரியில் உள்ள விஷ்ணு ஆலயத்தில் 5 அடி உயர கம்பீரமான விஷ்ணு சிலையின் பின்புறம் மோகினி வடிவம் செதுக்கப்பட்டுள்ளது . அதுவும் மோகினியின் பின்புறத்த் தோற்றத்தை வடித்துள்ளார் சிற்பி . கொண்டை , அதில் கூந்தல் அணிகலன்கள் , சிற்றிடை நளினம் இப்படியுள்ளது மோகினியின் ஒயிலான தோற்றம் .
கோகர்ணத்தில் உள்ள சிவாலயத்தில் சிவனின் சிலை உள்ளது . இச்சிலையின் பின்புறம் ஒரு பூதத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது . பூதராஜா சன்னதி எங்கின்றனர் இதனை .
--- விஜயலட்சுமி சுப்ரமணியம் ,-- துர்க்கா கண்ணன் , குமுதம் பக்தி ஸ்பெஷல் . நவம்பர் 1 - 15 , 2008 .

Wednesday, November 11, 2009

ஒரு ரசிகர் !

மறக்க முடியாத ஒரு ரசிகர் பற்றி ?
ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ஒரே மகன் தீர்த்தாரப்பன் . அந்த தீர்த்தாரப்பன் இளம் வயதில் இயற்கை எய்தி விட்டான் .
தம் இனிய நண்பரின் மகன் இறந்து விட்டதை அறிந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு இரங்கற்பா எழுதி , ரசிகமணி டி. கே. சி. க்கு அனுப்பினார் .
அதைப் படித்து அதன் இலக்கியச் சுவையில் ஈடுபட்ட ரசிகமணி , கவிமணிக்கு , " இவ்வளவு அழகான இரங்கற்பா பெறும் பொருட்டு இறந்து போக இனியொரு மகன் எனக்கு இல்லையே " ந்னு எழுதினாராம் .
--- K. பாக்யராஜ் , பாக்யா , ஜூலை 17 - 23 ; 2009 .

Tuesday, November 10, 2009

இராமாயணமா ? மகாபாரதமா ?

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் ஒன்று ' சப்தார்த்த சிந்தாமணி ' என்பதாகும் . கி. பி. 1684 -- 1712 வரை தஞ்சையை ஆட்சி புரிந்த ஷாஜி ( சகசி மன்னன் ) என்ற மராட்டிய மன்னரின் அவைப்புலவராய் விளங்கிய ' சிதம்பர கவி ' என்பவரால் எழுதப்பட்டது இந்நூல் . வடமொழியில் உள்ள இந்த நூலை முதல் சுவடியிலிருந்து படிக்கத் தொடங்கினால் இராமாயண காவியமாகவும் , இதனையே கடைசி சுவடியிலிருந்து உருது மொழி படிப்பது போன்று திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளது .
--- மலர்சூரியா, பாக்யா . ஜூலை 17 - 23 ; 2009 .

Monday, November 9, 2009

சூரியன் .

ஒவ்வொரு மாதத்தில் ஒரு பெயர் .
12 ஆதித்தியர்கள் சேர்ந்து உருவானவரே சூரியன் . அவன் ஒவ்வொரு ராசியில் ஒரு பெயர் பெறுவான் . மேஷ ராசியில் அம்சமான் , ரிஷபத்தில் தாதா , மிதுனத்தில் சவிதா , கடகத்தில் அரியமான் , சிம்மத்தில் விஸ்வான் , கன்னியில் பகன் , துலாத்தில் பர்ஜன் , விருச்சிகத்தில் துவஷ்டா , தனுஷில் மித்திரன் , மகரத்தில் விஷ்ணு , கும்பத்தில் வருணன் , மீனத்தில் பூஷா என்பது சூரியன் பெறும்
பெயர்கள் .
உலகம் முதன் முதல் தோன்றிய போது பல ஒலிகள் அங்கு தோன்றின . அவற்றில் முதலாவதாக தோன்றிய ஓசை ஓம் என்று சொல்லப்படக்கூடிய மூல மந்திரமாகும் . ஆதி மந்திரமான ஓங்கார ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் அவதாரம் செய்தான் என்கிறது மார்க்கண்டேய புராணம் .
பிரம்மதேவனால் தோற்றுவிக்கப்பட்ட சப்த ரிஷிகளில் ஒருவர் மரீசி மகரிஷி . அவர் மகன் காச்யபர் . காச்யப்பரின் மனைவி அதிதி . அவள் வயிற்றில் பிறந்தவர்கள் துவாதச ஆதித்யர்கள் . இந்த பன்னிரெண்டு பேரும் ஒருவராகி சூரியன் என்ற பெயரை பெற்றனர் .
---- தினமலர் . பக்திமலர் , ஜூலை 16 . 2009 .

Sunday, November 8, 2009

மூவர் தூக்கம் !

ரோகி , போகி , யோகி மூவருமே இரவில் தூங்கமாட்டார்கள் . ரோகி என்றால் நோயாளி . உடல்நிலை மோசமாக இருக்கும்போது , ஒருவனுக்குத் தூக்கம் வராது . போகி என்றால் இன்பத்தை நாடிப் போகிறவன் . அவன் நாடும் இன்பங்கள் பலவற்றுக்கு இரவுதான் உகந்தது . யோகி இரவில் தூங்காமல் இருப்பதற்குக் காரணம் , இரவும் இருளும் அவருடைய ஆன்மிகப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் .
காரணம் , இருளில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பாகுபாடு இன்றி ஐக்கியமாகிவிடுகின்றன . வெளிச்சம் வந்ததும் ஒவ்வொன்றும் தன் தனி அடையாளத்தோடு விறைத்து நிற்கிறது . இருள் என்பது உண்மைக்கு வெகு அருகில் இருக்கிறது . வெளிச்சம் என்பது பொய்க்கு அருகில் இருக்கிறது .
ஆன்மிகத்தில் இருள் என்பது உன்னதமாக கருதப்படுகிறது .
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ( ஆயிரம் ஜன்னல் ) ஆனந்தவிகடன் , 27 - 05 - 2009 .

Saturday, November 7, 2009

மைக்கேல் ஜாக்சன் .

" Gone too soon " ( சீக்கிரமே மறைந்து விட்டாய் ) என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று . எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்து போன போது ஜாக்ஸன் அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார் . உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும் , பாடல் வரிகளும் , வீடியோவும் , எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துச் சொன்னது .
மைக்கேல் ஜாக்ஸ்னின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கரையுடன் எழுதப்பட்டவையே . பலப் பாடல்களை அவரே எழுதினார் . நிறவெறி , யுத்த வெறிக்கான எதிர்ப்பு , உலக அமைதிக்கான கோரிக்கைகள் , கறுப்பின மக்களின் துயர்கள் , காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது .
உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் ( சுமார் 39 நிறுவனங்கள் ) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது .
உலக இசை சரித்திரத்தில் மைக்கேல் ஜாக்ஸனைப் பொல் மக்களிடையே பிரபலமானவர் வேறு யாரும் இல்லை . பீட்டில்ஸ் இசைக்குழு ( ' நாங்கள் ஏசுநாதரை விடப் புகழ் பெற்றவர்கள் ' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர்கள் ) , எல்விஸ் பிரஸ்லி போன்றவர்களும் கோடிக்கணக்கான வெறி கொண்ட ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் யாருமே தங்கள் வாழ்நாளில் ஜாக்ஸன் அலவுக்கு 750 மில்லியன் இசைத் தொகுதிகளை விற்றதில்லை .
' இசை என்பது கேட்பதற்கு மட்டும் இல்லை , பார்ப்பதற்கும்தான் ' என்கிற மோடவுன் வீடியோ கலாச்சாரத்தை உருவாக்கியவர் ஜாக்ஸன் .
கிறிஸ்டல் கையுறைகள் , தங்கம் மின்னும் உடைகள் , ' மூன்வாக் ' என்று சொல்லப்பட்ட பிரத்யேக அலை நடை கொண்ட நடனம் , வெளிறிய நிறம் , கருகிய தலைமுடி , வசீகரப் புன்னகை , கூலிங்கிளாஸ் , தொப்பி , சைக்கடலிக் வண்ணவிளக்குகள் புகைந்த பிரும்மாண்ட செட் இவைகளுடன் அவர் மேடைகளிலும் , வீடியோக்களிலும் காண்பித்த பொழுதுபோக்கு இசை , நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களைப் பைத்தியமாகவே ஆக்கின .
தன் 45 வருட இசைத் தொழிலில் 2500 கோடி ரூபாய் டாலர்கள் சம்பாதித்த பாப் இசையின் அரசன் ஐம்பது வயதில் அகால மரணமடைந்தது ஏன் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் தாங்க முடியாத கேள்வி .
ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவம் துயரத்துடன் கழிந்தது . இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் . தந்தை ஒரு மில் தொழிலாளி . அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது . தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார் . ஒரு காலைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி மைக்கேலை அலற அலற அடிப்பார் .
ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் ஷோவில் அவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார் . சின்ன வயதில் அப்பா கொடுமைப்படுத்தியதைப் பற்றிச் சொன்னபோது வாய்விட்டு அழுதார் . விட்டிலிகோ என்கிற தோல் நோய் இருப்பதை ஒப்புக்கொண்டார் . ஒரு விபத்தின்போது உடைந்த மூக்கு நுனி அடுத்தடுத்த ஆபரேஷன்களில் இன்னும் மோசமானதாக அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . ஆனால் , சிறுவர்களை முறைகேடாகப் பயன்படுத்டியதே இல்லை என்றும் அழுத்தமாகச் சொன்னார் .
' ஐ வில் பீ தேர் ' என்பது அவருடைய மற்றொரு ஹிட் பாடல் . அது உண்மைதான் . ஜாக்ஸன் எப்போதும் இருப்பார் , தன்னுடைய அழியாத பாடல்களின் மூலம் .
* முழு உலகமே பாப் இசையின் முதல் பெரும் நட்சத்திரமாக மதித்துப் போற்றும் மைக்கேல் ஜாக்சன் வெறும் 60 பாடல்கள்தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?
அவரது முதல் இசைத் தொகுப்பு இரண்டு கோடிப் பிரதிகள் விற்றிருக்கின்றன . அவரது ' த்ரில்லர் ' தான் இன்று வரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத் தொகுப்பு . தன் 50 வயதிலேயே , அவரே ஒரு பாடலில் சொல்லிக் கொள்வது போல , ' மாலை வானத்தில் எரிந்து செல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார் !'.
---- கிருஷ்ணா டாவின்ஸி , குமுதம் . 08 - 07 - 2009 .
---- ஷாஜி , தமிழில் : ஜெயமோகன் . ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

Friday, November 6, 2009

பார்வை வெளிச்சம் .

சமீபதில் , அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப் பகுதியில் , பல ஆயிரம் வருடப் பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண் , மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்துபோனார் . இவர்தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண் . அவளது மரணத்தோடு உலகிலிருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்துபோனது . இனி , அந்த மொழி பேசும் இனக் குழு உலகில் இல்லை . பல்கலைக்கழகங்களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன . ஆனால் , அதைப் பேசத் தெரிந்த பூர்வகுடி மனிதர் எவரும் இனி உலகில் இல்லை !
--- எஸ் . ராமகிருஷ்ணன் . ( சிறிது வெளிச்சம் ) ஆனந்தவிகடன் , 27 - 05 - 2009 .

Thursday, November 5, 2009

தெரிந்து கொள்வோம் .

* இந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707 - ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது .
* கத்தரிக்கோலைக் கண்டுபிடித்தவர் , மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனார்டோ டாவின்சிதான் .
* ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்ட நாள் 1911 - ம் ஆண்டு டிசம்பர் 27 ( கல்கத்தாவில் ) .
* ஜன கண மன தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24 .
* எந்தப் பத்திரிகையும் வெளி வராத இந்திய பகுதிகள் அருணாசலப் பிரதேசம் , லட்சத்தீவு .
*சைலண்ட் கில்லர் எனப்படும் நோய் - ரத்த அழுத்த நோய் .
* நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு - கணையம் .
* பற்களை பாதிக்கும் நோய் - கேரிஸ் .
* புரோட்டீனின் முக்கிய பொருள் - அமினோஆசிட் .
* மிகச்சிறந்த ஞாபகசக்தி ' பாராமென்சியா ' என அழைக்கப்படுகிறது .
* மருத்துவ அறிவியலின் தந்தை - ஹிப்போகிரேடஸ் .
* மலேரியா என்பதன் பொருள் - சுத்தமற்ற காற்று .
--- தினத்தந்தி , 04 - 07 - 2009 .

Wednesday, November 4, 2009

புகை !

ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !
--- மகரம் , ஆனந்தவிகடன் . 06 - 05 - 1951 .

Tuesday, November 3, 2009

H2 O .

இயற்கையின் ஆச்சர்யம் ! 1784 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட் , ஒரு டெஸ்ட் டியூப்பில் ஹைட் ரஜன் ( H ) வாயுவையும் , இன்னொரு டியூபில் ஆக்ஸிஜனையும் ( O ) இருத்தி , ' டியூப் ' களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது , ' டப் ' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின . வாயுக்களைக் காணோம் !
இரு வாயுக்கள் இணைந்தால் -- அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன் , ஒரு அணு ஆக்ஸிஜன் -- தண்ணீர் உருவாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு . ஒரு மாலிக்யூல் தண்ணீய்ரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் , நடுவில் உருண்டையாக ஆக்ஸிஜன் அணுவும் , அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் -- பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும் !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 17 - 06 - 2009 .

Monday, November 2, 2009

ஐன்ஸ்டீன் .

" ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ...."
" ' ரிலேட்டிவிட்டி தியரி ' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா ? அதுதான் இல்லை . காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது . காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது :
' இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ! ".
--- வி . மருதவாணன் , கும்பகோணம் . ஆனந்தவிகடன் , 17 - 06 - 2009 .

Sunday, November 1, 2009

' லபூப் - இ - சகீர் ! '

உலர்ந்த திராட்சை அதை ஹை - டெம்ப்ரச்சரில் வைத்து மேலும் உலரவைத்து பெளடராக்கி வைத்துக் கொள்கின்றனர் . அதேபோல் பரங்கி சக்கை எனும் மரசக்கைகளை துண்டுகளாக்கி இதையும் நுண்ணிய பெளடராக்கிக் கொள்கின்றனர் . இவைகளுடன் முந்திரி , பாதாம் , பிஸ்தா , வால்நட் , அக்ரூட் ஆகியவைகளையும் சேர்த்து தூளாக்கி அதில் பன்னீரை சேர்த்து குழைத்து அதனுடன் தேன் , நெய் ஆகியவற்றை சேர்த்து பக்குவமான சூட்டில் கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் அதை எந்திரம் மூலம் மிக்ஸிங செய்து பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துக் கொடுக்கின்றனர் . இதுதான் லபூப் - இ - சகீரின் ரகசிய ஃபார்முலா .
அரைகிலோ லபூப் - இ - சகீர் லேகியம் வெறும் 125 ரூபாய் தான் . அது சரி ' லபூப் - இ - சகீர் ' என்பது என்ன?
தமிழக அரசின் ' டாம் கால் ' நிறுவனம் தயாரித்த ஆண்மைக் குறைவுக்கான லேகியமே அது . சந்தைக்கு வந்த அரை மணிநேரத்தில் மொத்தமும் , அதாவது முதல் பேட்சில் தயாரித்து அனுப்பிய ஐனூறு கிலோ லேகியமும் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் டாம்கால் நிறுவனத்தின் பொதுமேலாளர் பால்ராஜ் . அதுமட்டுமல்ல , தங்களின் தேவைக்காக முன்பதிவு செய்துகொள்ள உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு க்யூவில் நிற்கின்றனர் .
--- புஷ்கின்ராஜ்குமார் , குமுதம் . 01 - 07 - 2009 .