Monday, June 30, 2014

எந்த இலையில் சாப்பிடலாம்?

 வாழை,  புன்னை,  புரசு,  குருக்கத்தி,  மா,  தென்னை,  பன்னீர் ஆகியவற்றின் இலைகளில் உண்ணலாம்.
எந்த இலையில் சாப்பிடக்கூடாது?
     அரசு,  தாமரை,  பாதிரி,  தாழை,  அத்தி,  ஆலம்,  ஆமணக்கு,  நாவல்,  முள்முருங்கை,  எருக்கு,  இத்தி ஆகியவற்றின் இலைகளில் உண்ணக்கூடாது.
எந்தெந்த மாதங்களில் வீடு கட்டலாம்,  கிரகப்பிரவேசம் செய்யலாம்?
     சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை எனும் ஐந்து மாதங்களில் வீடு கட்டலாம்;  கிரகப்பிரவேசம் செய்யலாம்.
வீடு கட்டவோ, கிரகப்பிரவேசம் செய்யவோ கூடாத மாதங்களும்,  அதற்கான காரணமும்:
     சிவபெருமானை திரிபுர சங்காரம் செய்த மாதம் - ஆனி.  சீதாதேவி சிறைப்பட்ட மாதம் - ஆடி.  இரணிய சங்காரம் நடந்த மாதம் - புரட்டாசி.
பாரதப்போர் நடந்த மாதம் - மார்கழி.  சிவபெருமான் ஆலால விடமுண்டது - மாசி.  மன்மதனை சிவபெருமான் சங்காரம் செய்தது - பங்குனி.  மேலே சொன்ன ஏழு மாதங்களிலும் வீடு கட்டவோ, கிரகப்பிரவேசம் செய்யவோ கூடாது.
     அறப்பளீசுர சதகம் என்ற நூல் சொல்லும் சாஸ்திர கருத்துகள் இவை.
-- ஸாந்த்ரானந்தா.
-- தினமலர். வாரமலர். செப்டம்பர் 15, 2013.  

Sunday, June 29, 2014

தெரிஞ்சுக்கோங்க...

*  திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டு புலவர்கல்.  திருத்தணி விசாகப்பெருமாளையர்,  யாழ்ப்பாணத்தைச்
   சேர்ந்த ஆறுமுக நாவலர்.  இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும்.
*  காலையில் பிரட் ஆம்லெட், மதியம் பிரைட் ராஸ்; இரவில் நூடுல்ஸ், பீட்சா, இடையிடையே பர்கர், பப்ஸ், சிப்ஸ் என இன்றைய தலைமுறை மேற்கத்திய
   உணவுப்பழக்கத்திற்கு மாறி வருகிறது.  இவற்றை கொஞ்சமாக சாப்பிடாலே போதும், அதிக கலோரிகள் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம்
   பரவியிருப்பதே இதற்குக் காரணம்.  இப்படி நிலையில் தென்னிந்திய உணவான இட்லி, சாம்பாரில்தான் அதிக சத்துக்கள் இருக்கின்றன என்று ஆய்வில்
   கண்டறியப்பட்டுள்ளது.
--  தினமலர். வாரமலர். செப்டம்பர் 15, 2013. 

Saturday, June 28, 2014

கிச்சன் குறிப்புகள்...

*  திடீர் என்று தயிர் தேவையா?  பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு,  சிறிது வினிகர் சேருங்கள்.  நிமிடத்தில் தயிர் ரெடி.
*  சமோசா மீந்து விட்டதா?  அதை பிரிட்ஜில் வைக்கும் பிரீசரில் வைத்து விடுங்கள்.  தேவைப்படும் போது இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எடுத்து
   குறைந்த தணலில் சூடு செய்து சாப்பிடலாம்.
*  பல்லி தொந்தரவு அதிகம் இருக்கிறதா?  மயில் இறகுகளை வீட்டில் ஆங்காங்கே சொருகி வையுங்கள்.  பல்லி காணாமல் போகும்.  வீடு அழகாகி விடும்.
*  சமையலுக்கு கடுகு, வெந்தயம் தாளிக்கும் போது சாதாரண கடுகு, வெந்தயத்தை தாளிக்காமல் முளைவிட்ட கடுகு, வெந்தயத்தை தாளித்தால் பார்க்க
   அழகாக இருப்பதோடு,  சத்தும் அதிகமாக கிடைக்கும்.
*  இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது ஏலக்காய் பருப்பை மட்டும் உபயோகித்துவிட்டு தோலை தூர எறிந்துவிடுவோம்.  அந்த தோலை எடுத்து வைத்து
   டீயில் போட்டு கொதிக்க வைத்தால் சுவையான ஏலக்காய் டீ ரெடி.
*  தினமும் ஒன்றிரண்டு பூண்டு அல்லது கிராம்பை மென்று சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்டிரால் குறையும்.
*  ஒரு டீஸ்பூன் இஞ்சிசாறு,  சிலதுளிகள் எலுமிச்சை சாறு,  கொஞ்சம் தேன் சேர்த்து குடிக்க நன்கு பசி எடுக்கும்.
--  தினமலர். பெண்கள் மலர். 14- 9 -2013.

Friday, June 27, 2014

ஏன் சொல்லவில்லை...?

அடுக்களையை இடம்மாற்ற
ஆயிரம் ரூபாய் செலவு !
படுக்கையறைக்கோ
பத்தாயிரத்துக்கு மேல் !
பூஜையறைக்குப் புனிதம் தேட
புதுப்பித்தல் ஓராயிரம் !
வாஸ்து பார்த்துப் பார்த்து
வளம் காண எண்ணும்
என் அப்பாவிடம்,
எந்த ஜோசியனும்
ஏன் சொல்லவில்லை...
என்னை ' புகுந்த வீட்டுக்கு '
இடம் மாற்ற வேண்டும் என்று !
-- கிரிஜா நந்தகோபால், திருச்சி.
--  தினமலர். பெண்கள் மலர். 14- 9 -2013.

Thursday, June 26, 2014

கண்ணாடியில் கவனம்! ( பெண்களுக்கு )

  வெளியிடங்களுக்கு சென்று ஆடை மாற்றும்போது,  அந்த இடத்தில் கண்ணாடி இருந்தால் அது சாதாரண கண்ணாடிதானா என்று பரிசோதித்த பிறகே ஆடையை மாற்ற வேண்டும்.  சாதாரண கண்ணாடியாக இருந்தால்,  முன் பக்கம் நமக்கு தெரியும்.  பின் பக்கம் ஒன்றும் தெரியாது.  ஆனால், இருபுறமும் காட்டும் கண்ணாடியும் இருக்கிறது.  முன்புறத்தில் உங்களுக்கு நீங்கள் மட்டுமே தெரிவீர்கள்.  உங்களுக்குத் தெரியாமல் கண்னாடியின் மறுபுறம் நின்று உங்களை ஒருவர் பார்க்க வாய்ப்புண்டு.  அதை தெரிந்து கொள்ளவும் ஒரு எளியமுறை இருக்கிறது.
     உங்கள் விரலின் நுனிப்பகுதியை கண்னாடியின் மேல் வையுங்கள்.  உங்களுடைய விரலுக்கும்,  கண்னாடியில் தெரியும் பிம்பத்தின் விரலுக்கும் இடையே இடைவெளி இருக்கவேண்டும்.  அப்படி இருந்தால் அது வில்லங்கம் இல்லாத கண்ணாடி.
     மாறாக,  உங்களுடைய விரலும் ,  கண்ணாடியில் விழும் பிம்பத்தின் விரலும் நேரடியாக தொட்டுக் கொள்வது போல் இருந்தால்,  அந்தக் கண்ணாடியின் பின்னால் விபரீதம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளூங்கள்.  அது டூ வே கண்ணாடி.  அதாவது,  மறுபுறம் உங்களை யாரோ பார்த்தில் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
     ரெடிமேட் ஆடைகளை வாங்கும்போது,  சரியாக இருக்கிறதா என்று டிரையல் ரூமிற்கு சென்று அதை அணிந்து பார்ப்போம்.  ஒருவேளை இந்த அறையினுள் வக்கிரக் கண்கள் ஒளிந்திருந்தால் அதை கண்டுபிக்க சுலபமான வழிமுறை இருக்கிறது.
     டிரையல் ரூமிற்கு உள்ளே செல்லும் முன்,  அந்த அறையின் வாசலில் இருந்து உங்கள் செல் மூலம் யாருக்காவது போன் செய்து பேசுங்கள்.  பிறகு டிரையல் ரூமிற்கு சென்றதும்,  மீண்டும் ஒரு முறை போன் செய்து பேசுங்கள்.  அப்போது உங்கள் செல்போனில் இருந்து ' கால் ' போனால் அந்த அறையில் ஒரு பிரச்சனையும் இல்லை.  ' கால் ' போகாமல் இருந்தால் அங்கு கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
-- ஹரிணி.
--  தினமலர். பெண்கள் மலர். 14- 9 -2013.

Wednesday, June 25, 2014

இதையும் தெரிஞ்சுக்கோங்க!

*  கீரிக்கு ' நகுஷம் ' என்பது வடமொழிப் பெயர்.
*  இரவில் அதீக சுறுசுறுப்புடன் இரைதேடும் உயிரினம் கீரி.
*  உறங்கும்போது தலையையும்,  வாலையும் வயிற்றில் வைத்துத் தூங்குவது இதன் பழக்கம்.
*  பாம்பினைக் கழுத்தில் கடித்துத் துண்டாக்கிக் கொல்லும் உயிரினம் கீரி.
*  புளியம் பழத்திலோ,  இலைகளிலோ கவுரி தேவியை ஆவாகனம் செய்து பூஜை செய்வது திருந்துருணி கவுரி விரதம் எனப்படும்.
*  மரக்கிளைகளில் உள்ள இலைகள் தலை தாழ்த்தி உறங்கும், புளிய மரத்தை தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
*  வைணவ திவ்ய தேசங்களில், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி,  திருத்தலதில் உள்ள தலவிருட்சத்துக்கு ஏழு கிளைகள் உண்டு.
   இதன் கிளைகளில் உள்ள இலைகள் இரவில் உறங்குவது இல்லை.
*  ஸ்ரீநம்மாழ்வாரின் பூத உடல் இப்புளிய கரத்தடியில் புதைக்கப்பட்டு,  அங்கேயே ஆழ்வார்க்கு கோயில் அமைக்கப்பட்டது.
*  கொங்கு நாட்டில், கோவைக்கு அருகில் உள்ள பேரூர்பட்டிசரம் புகழ் பெற்றதாகும்.  இங்கே இரண்டு அரிய மரங்கள் உள்ளன.  ஒன்று இறவாப் பனை
   மற்றொன்று பிறவாப் புளி.  புளியங்கொட்டைகளை நட்டால் அவை முளைக்கும்.  இங்குள்ள புளியமரக் கொட்டைகளை நட்டால் முளைப்பதில்லை.
-- தினமலர். பக்திமலர்களிலிருந்து.

Tuesday, June 24, 2014

மகா சிவராத்திரி மகிமை !

மகாசிவராத்திரி மகிமை மிகுந்த நாள்.
மாசியில் பிரம்மதேவரும்,  பங்குனியில் மகாவிஷ்ணுவும்,  சித்திரையில் உமாதேவியும்,  வைகாசியில் சூரியனும்,  ஆனியில் ஈசானியரும்,  ஆடியில் குகனும்,  ஆவணியில் சந்திரனும்,  புரட்டாசியில் ஆதிசேஷனும்,  ஐப்பசியில் இந்திரனும்,  கார்த்திகையில் சரஸ்வதியும்,  மார்கழியில் மனோன்மணியும்,  தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது.
-- தேவராஜன்.
--  தினமலர். வாரமலர். 3-3-2013. 

Monday, June 23, 2014

ஆதியும் நான் அந்தமும் நான்

 அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் எலைன் னேஜெல்ஸ்ண் .  எம்.ஏ. படித்து முடித்தபின்,  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்க்காக சமயங்கள் பற்றி ஆய்வு செய்தார்.  அவர் எழுதிய THE  GNOSTIC  GOSPELS என்ற நூலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதை:
     Iam the first and last
     Iam the honored one and the scormed one
     Iam the whore and the holy one
     Iam the wife and the virgin ...
     Iam the barren one, and many are my songs...
     Iam the silence that is incomprehensible
     Iam the utterance of my name.
இதன் பொருள்:
ஆதியும் நான் அந்தமும் நான்
புகழப்பட்டவனும் நான்
இகழப்பட்டவனும் நான்
பினிதனும் நான் அற்பனும் நான்
காதல் மனைவியும் நான்
மலடியும் நான் -- குழந்தைகள்
பலரின் தாயும் நான்
புரியாத மவுனமும் நான் -- என்
பெயரை
உறக்கச் சொல்லும் சத்தமும்
நான்.
--- இரா.குமார்.
--- தினமலர். வாரமலர். 3-3-2013. 

Sunday, June 22, 2014

சக்கரவாகம்.

  முன்பு சக்கரவாகம் என்றொரு பறவை இருந்தது.  சிறிய பறவையான இது,  பந்து போல உருண்டு திரண்டிருக்கும்.  எனவே, இப்பறவையைப் பெண்களின் மார்பகத்துக்கு உவமையாகப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
    இப்பறவையிடம் ஓர் அரிய குணம் உண்டு.  இது,  எப்போதும் தன் இணையான பெண் பறவையுடனேயே இருக்கும்.  குறிப்பாக இரவில் தன் இணையைப் பிரிய நேர்ந்தால் துடிதுடித்து விடும். வருந்திக் குரல் எழுப்பும்.
-- மானஸதேவதா. தினமலர் பக்திமலர் . ஏப்ரல் 4, 2013.  

Saturday, June 21, 2014

பழத்துக்கு பஞ்ச கவ்யா.

  மாட்டுச்சாணம்,  கோமியம்,  தயிர்,  பால்,  நெய் ஆகிய பொருட்களை ஒன்றாக சம அளவு கலந்து 21 நாட்கள் பாத்திரத்தில் பதப்படுத்த வேண்டும்.  பதப்படுத்தப்பட்ட கெட்டியான திரவத்தை பயிர்கள்மேல் தெளிக்கலாம் அல்லது தண்ணீர் பாய்ச்சும் கால்வாயில் கலந்து விடலாம்.  இது பயிர்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்து.
     குறிப்பாக,  வாழை மரத்தில் குலை தள்ளிய,  காய்கள் சற்று வளர்ந்த நிலையில் வாழைப்பூவை ' கட் ' செய்து எடுக்கும் பகுதியில் ஒரு பாலிதீன் கவரில் பஞ்சகவ்யத்தை கட்டி விட வேண்டும்.  அப்படி கட்டும்போது கீழிருந்து மேல் நோக்கி உள்ள எல்லா பழங்களுக்கும் ஒரே மாதிரியான நல்ல சுவை கிடைக்கும்.
-- தினமலர் 13- 9-2013. 

Friday, June 20, 2014

தேங்கிய நீரில் முகம் பார்க்கலாமா?

இளங் கன்றினைக் கட்டி வைத்துள்ள தாம்பைத் தாண்டக் கூடாது.
அடை மழை பெய்யும்போது,  அதில் நனைந்துகொண்டு ஓடக்கூடாது!
நின்றிருக்கும் நீரில் தன்னுடைய பிரதி பிம்பத்தை ஒரு போதும் பார்க்கக் கூடாது.
கேடு பயக்கும் இம் மூன்று கரியங்களையும் எந்த விதத்திலும் நாம் செய்யதல் கூடாது.
-- தங்கவயல்  லோகிதாசன், எழுதிய ' செய்வினையால் ஏற்படும் நல்வினை , தீவினைகள் ' நூலிலிருந்து'--  இரா.பார்த்திபன்.
--  தினமலர் வாரமலர்.  

Thursday, June 19, 2014

மகான்கள் நிலை நாட்டியவை.

ஏகபத்தினி விரதம்  --  இரமர்.
பற்றற்ற கருமம்  --  கிருஷ்ணர்.
இல்லற ஒழுக்கம்  --  திருவள்ளுவர்.
ஆத்ம ஞானம்  --  சங்கரர்.
பக்தி  --  சைதன்யர்.
சத்தியாகிரகம்  --  பிரகலாதன்.
சமரச - சன்மார்க்கம்  --  இராமலிங்க சுவாமிகள்.
கொடை தர்மம்  --  கர்னன்.
மானம்  --  பீமசேனன்.
அகிம்சை  --  புத்தர்.
சத்தியம்  --  அரிச்சந்திரன்.
சகோதரத்துவம்  --  நபிகள் நாயகம்.
அன்பு  --  இயேசு நாதர்.
--- ' சப்தகிரி'நூலிலிருந்து. திசை. மீனாமுத்து.
--- தினமலர் வாரமலர்.   

Wednesday, June 18, 2014

பச்சை நிறமே... பச்சை நிறமே.

 ஜெகஜால கில்லாடி திருடர்கள் உலகம் பூரா இருந்திருக்கிறார்கள்.  போலீசார் பைனாகுலர், டெலஸ்கோப் வைத்துப் பார்த்தாலும் அதிலும் மண்ணைத் தூவிவிட்டுப் போய்விடுவார்கள்.  அவர்களைக் கண்டுபிடிக்க ஸ்மார்ட்வாட்டர் டெக்னிக்கில் வசமாக சிக்கிய யாஃபத் அஸ்கல் என்ற திருடனின் போட்டோவை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.  ஆசாமியின் முகத்தில் ஆங்காங்கே பச்சை நிறமாக உள்ளது.  எப்படி வந்தது இந்த பச்சை?
     இவன் ஒரு கார் கொள்ளையன்.  லாவகமாக திறந்தோ,  கதவை உடைத்தோ காரில் இருக்கும் பொருள்களை லபக்கிவிடுவான்.  இவனை கையும் களவுமாக பிடிக்க போலீசார் ' பச்சை வலை ' விரித்தார்கள்.  போலீசார் செட்டப் செய்து வைத்திருந்த காரில் அவன் நுழைந்ததும்,  மெலிதான ஸ்மார்ட்வாட்டர் அவன் மீது தானியங்கி மூலமாக ஸ்பிரே செய்யப்பட்டது.
     தன் முகத்தில் அது படுவது அவனுக்குக் கூட தெரியாது.  பிறஊதாக் கதிர் வெளிச்சத்தை அவன் மீது பாய்ச்சினால்,  ஸ்மார்ட்வாட்டர் பட்ட இடமெல்லாம் பச்சை பச்சையாகத் தெரியும்.  சந்தேகப்படும் வகையில் நடமாடுபவர்களை புறஊதாக் கதிர் வெளிச்சத்தில் பார்த்தால் திருடனா,  அப்பாவியா என்பது தெரிந்துவிடும்.
     கோடீஸ்வர வீடுகளிலும் இந்த ஸ்பிரேவை வைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.  ஸ்மார்ட்வாட்டர் வந்ததிலிருந்து இங்கிலாந்தில் கொள்ளைகள் கணிசமாகக் குறைந்திருக்கிறதாம்.
--- ரிலாக்ஸ்..
---   ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

Tuesday, June 17, 2014

மகாத்மா காந்தி.

 யாரோடு நீங்கள் இரவு உணவை அருந்த விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பதில்,' காந்தி 2010 -ல் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் கூறியது.  ' காந்தியும் அவர் இந்த உலகுக்கும் அமெரிக்காவுக்கும் தந்த செய்தியும் இல்லையெனில்,  அமெரிக்க அதிபராக நான் இங்கு நின்றிருக்க முடியாது என்பதை நான்  உணர்கிறேன் '.
-- எத்திசையும் காந்தி... கருத்துப் பேழை.
     241 மைல்களை 24 நாட்களில் தன்னுடைய 62 வயதில் வெறும் காலுடல் நடந்து கடந்தார் காந்தி... சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி சத்தியாகிரகத்துக்காக.
--  கருத்துப் பேழை.
--   ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

Monday, June 16, 2014

நோட்டா என்ற தோட்டா.

   முன்பு சமூக ஆர்வலர்கள் ' 49 ஓ ' என்று சுருக்கமாகக் குறிப்பிட்டுவந்த நிராகரிக்கும் உரிமைக்கு இப்போது நீதிமன்ற உத்தரவின்படி புதுப் பெயர்
 ' நோட்டா '.  மின்னனு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் வரிசையில் கடைசியாக ' மேற்கண்ட யாரும் இல்லை '  ( நன் ஆஃப் தி அபவ் ) என்ற வரியும் அதற்கான பொத்தானும் இடம்பெறப்கோகிறது.  அதன் சுருக்கமே ' நோட்டா.'  அதாவது, சுருக்கமாகச் சொன்னால் என்னிடம் நோட்டை  நீட்டி,  என் ஓட்டை வாங்க முயற்சிக்கும் வேட்பாளர்களுக்கெல்லாம் நான் ' நோட்டா ' போடலாம்.  ஆக ' நோட்டா ' மக்கள் கையில் கிட்டியிருகும் தோட்டா.
     அ.கி.வேங்கடசிப்பிரமணியன் எனக்கு ' 49 ஓ ' வை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காகப் பிரச்சாரத்தில் நான் ஈடுபடத் தொடங்கியபோது இதெல்லாம் என் வாழ்நாளில் நடக்குமா என்ற ஏக்கத்துடனேயேதான் ஈடுபட வேண்டியிருந்தது.  ஆனால்,  இதோ நடந்துவிட்டது.  கூடவே, எல்லாமே 10 ஆண்டுகளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கையும் இப்போது வந்திருக்கிறது!
-- ஞானி, மூத்த பத்திரிகையாளர்.  தொடர்புக்கு : gnanisankaran@ gmail.com.
--   ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

Sunday, June 15, 2014

வாழை!

 வாழையை இனி சேலையாக கட்டலாம்,  வந்தாச்சு வாழைப் பட்டு.  முழுக்க முழுக்க சைவப் பட்டு.
     வாழைப் பட்டு முழு சைவம் என்பதால்,  நெருடலின்றிப் பயன்படுத்தலாம்.  வாழைத் தண்டில் இருந்து உருவாக்கிய பஞ்சை வெட்டுக் காயங்களில் பருத்திப் பஞ்சுக்கு பதிலாக வைத்தால், விரைவில் காயங்கள் குணமாகும்.
-- பூச்செண்டு.
மனிதக் குற்றம்.
    வறண்ட இடங்களில் குறைவான மழை,  அதிக மழை இடங்களில் கூடுதல் மழை.  இப்படி விசித்திர கொடுமைகள் இனி நிறைய ஏற்படுமாம்.  பசுமைக்குடில் வாயு வெளியீடு அதிகரிப்புதான் காரணமாம்.  பருவ நிலை மாறுதல்களூக்கு மனித குலம்தான் நிச்சயமான காரணம் என்று கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
--எத்திசையும் ...
--  ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

Saturday, June 14, 2014

சுட்டது நெட்டளவு.

   ரேஷன் கடை ஒன்றில் அன்று வரலாறு காணாத கூட்டம்.  ஏகப்பட்டவர்கள் பொருட்களை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
     கடைசியாக வந்த ஒருவர் கியூவில் முன்னால் போக முயற்சி செய்தார்.  ஏற்கனவே நின்றுகொண்டிருந்தவர்கள் அவரைப் போக விடாமல் தடுத்தனர்.
' கடைசியா போயி நில்லுய்யா! ' என்று கத்தினார்கள்.
     அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  முண்டியடித்துக் கொண்டு முன்னால் போக முயற்சி செய்தார்.  எல்லோரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.
    " இதோ பாருய்யா!  நாங்க இருக்கிற வரைக்கும் நீ முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது... தெரிஞ்சிக்கோ!" என்றார்கள்.
    " நான் இங்கே பின்னாடி நிக்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்கமுடியாது!" என்றார் அவர்.
    " ஏன்?"
    " நாந்தான் ரேஷங்கடை  ஊழியர்.  கடையைத் திறக்க வேண்டிய ஆள்!"
-- கே.செல்வேதிரன். ரிலாக்ஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

Friday, June 13, 2014

நீரிழிவைத் தடுக்க.

பழம் சாப்பிட்டால் நீரிழிவைத் தடுக்கலாம்.
     தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால்,  நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.  இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.
    குறிப்பாக திராட்சை,  ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25 சதவிகிதம் குறைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.  அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இருந்தபோதும்,  இந்தியாவில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம்.  தமிழகத்தில் சுமார் 10 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவதால், இந்த ஆராய்ச்சி நமக்கும் முக்கியமானதாகிறது.
-- உயிர்மூச்சு, சுற்றுச்சூழல் சிறப்புப் பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013. 

Thursday, June 12, 2014

' Cross Ventilation Theory '

   காற்று வீட்டிற்குள் வரும் போதே கேள்வி கேட்டுக் கொண்டே தான் வருகிறது. ' உள்ளே வரலாமா? ' என்று கேட்பதில்லை.  உள்ளே வந்தால் வெளியே போக வழி இருக்கிறதா?  என்பதே காற்றின் கேள்வி.  வாசலுக்கு நேர் வாசல், ஜன்னலுக்கு  எதிர் ஜன்னல் என்று கட்டுவதுதானே முறை.  காற்றோட்டம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்.  வெளியேற வழி இருந்தால் தான் காற்று உள்ளேயே வரும்.  ஓட்டத்தில்தான் காற்றின் உயிரே இருக்கிறது.  வெளியேற வழி இல்லாதபடி ஒரு வாசலை மூடினால் காற்று உள்புகுவதில்லை! வர மறுத்து விடும்.
     செல்வமும் அப்படித்தான்.  செலவழிக்கத் தயாராகைல்லாதவனுக்கு வரவு வழியடைத்து விடும். இறைக்கிற கிணறு சுரக்கும்.  இல்லையேல் இருப்பதே இருக்கும்.  நாளடைவில் நாற்ரம் பிறக்கும்.  செல்வமும் அப்படித்தான்.  கொடுக்கக் கொடுக்க வளரும்.
-- .வாழ்ந்து பார்க்கலாம் வா ! நூலில்.
-- சுகி.சிவம்.   

Wednesday, June 11, 2014

கஸ்தூரி மான்!

 கஸ்தூரி மான் பற்றி ஒரு செய்தி சொல்வார்கள்.  அபரிமிதமான வாசனையைத் திடீர் என்று அது உணரும்.  எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தேடித் தேடி வெறிபிடித்தபடி அங்கும் இங்கும் ஓடும்.  பைத்தியம் பிடித்தமாதிரி ஓடி ஓடி களைத்து முடியாமல் விழும்.  முடிவில் சாகும் போது ஓர் உண்மையைக் கண்டுபிடிக்கும்.  அதனிடமிருந்து சுரக்கும் ஒரு திரவமே இத்தனை வாசனைக்கும் காரணம்.  அது தெரியாமல் ஓடியதும் தேடியதும் எத்தனைபைத்தியக்காரத்தனம்.  இந்தக் கஸ்தூரி மான் கதைதான் நமது வாழ்க்கையும், நம்மிலிருந்து பிறக்கும் எண்ணங்களே நமது பெருமைக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம்.
-- எழுதியவன் பேசுகிறேன்,  தலையங்கத்தில்...வாழ்ந்து பார்க்கலாம் வா ! நூலில்.
-- சுகி.சிவம்.  

Tuesday, June 10, 2014

கருத்துப் பேழை.

*  30,560 சென்னை மாநகராட்சியிலுள்ள உட்புறச் சாலைகளின் மொத்த எண்ணிக்கை.  இவற்றின் மொத்த நீளம் 5,616 கி.மீ.
*  நம்முடைய குழந்தைகள் தோற்றாலும் வென்ற குழந்தையைப் பாராட்டும் பண்பை நாம் கற்றுத்தர வேண்டும்.  அதற்கு நாம் இந்த பிளாஸ்டிக், பித்தளை,
   அலுமினியத்தாலான பொருள்களைப் பரிசுகள் என்ற பெயரில் வாங்கிக் குவிப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும். கோப்பைகள்,
  பதக்கங்கள், கேடயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் லாபத்துக்காக நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையை நாம் பலிகொடுக்கக் கூடாது.
*  கடந்த 30  ஆண்டுகளில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது 480 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறது.
-- ' தி இந்து' நாளிதழ். திங்கள், செப்டம்பர். 30, 2013.

Monday, June 9, 2014

தீர்க்க தரிசனம் !

 தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி,  டயானா தன் மூத்த மகன் வில்லியம்ஸுக்கு தன்னுடைய அன்பையும், வழிகாட்டலையும் ஒலிநாடாக்களில் பதிவுசெய்திருந்ததாக பிரிட்டன் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.  தன் மகனுக்கும் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கும் மட்டுமல்லாமல் வரப்போகும் தன் மருமகளுக்கும் டயானா சில செய்திகளைப் பதிவுசெய்திருக்கிறார்.  ' நீ ஓரு வித்தியாசமான ஒருத்தி என்பதை நீ உணர வேண்டும்.  அப்படியில்லை என்றால், நீ என்னுடைய வில்லியம்ஸின் மனைவியாக இருக்க முடியாது ' என்று தன் மருமகளைச் செல்லமாக மிரட்டவும் செய்திருக்கிறார் டயானா.
-- எத்திசையும்...கருத்துப் பேழை.
--' தி இந்து' நாளிதழ். திங்கள், செப்டம்பர். 30, 2013. 

Sunday, June 8, 2014

இதையும் தெரிஞ்சுக்கலாம்!

*  மரம் நடுதல் என்பது விருட்சப் பிரதிஷ்டை எனப்படும்.
*  அரச மரம்  --  அசுவத்தம் எனப்படும்.  மும்மூர்திகளின் வடிவம்.  விநாயகரின் பஞ்சபூத சொரூபங்களில் ஒன்று.
*  ஆலமரத்தைச் சிவமாகவே வழிபடுவர்.  ஆறுகள் கூடும் இடங்களில் சிவபெருமான் ஆலமர வடிவில் உள்ளான் என்பர்.
*  வேம்பு  --  அன்னையின் அடையாளம்.
*  கடம்பு  --  முருகனின் அடையாளம்.
* ஸ்தல மரம் கோயிலின் முக்கியமான அங்கம்.  முன்பு அங்கு அந்த மரங்கள் இருந்ததைக் காட்டும் அடையாளம் அது.
*  குயிலுக்கு இந்திர கோகிலம் என்ற பெயர் உண்டு.
-- புலவர் வே. மகாதேவன்.
--    தினமலர்.  பிப்ரவரி 7, 2013.

Saturday, June 7, 2014

வில்வத்தின் மகிமை.

  வில்வத்தை 3 தளங்களாகச் சாத்துவது நல்லது.  மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில்  வில்வத்தைப் பறிக்கக்கூடாது.  பிற நாட்களில் தூய்மையாகப் பறித்து ஓலைக் குடலை ( கூடை ) யில்  வைத்துச் சாத்தலாம்.
சிவனுக்கு 5 முகங்கள்.
     சிவபெருமானுக்கு 6 முகங்கள் உண்டு.  அவற்றுள் 5 முகங்கள் விசேஷமானவை.  இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஒரு தொழில் செய்யும். ஒரு வடிவத்தில் சிறப்பாகக் காணப்படும்.
சத்தியோஜாதம் :  மேல் நோக்கிய முகம். அருளல் தொழில்.  சதாசிவத்தின் முகம்.
வாமதேவம் :  வடக்கில் உள்ள முகம்.  மறைத்தல் தொழில். மகேசனுக்கு உரியது.
அகோரம் :  தெற்கே உள்ள முகம்.  அழித்தல் தொழில்.  ருத்ரனுக்கு உரியது.
தத்புருஷம் :  கிழக்கில் உள்ள முகம்.  காத்தல் தொழில்.  மகாவிஷ்ணுவுக்கு உரியது.
ஈசானம் :  மேற்கில் உள்ள முகம்.  படைத்தல் தொழில். பிரம்மனுக்கு உரியது.
--  தினமலர்.  பிப்ரவரி 7, 2013. 

Friday, June 6, 2014

படுக்கை ஒன்று, பெயர்களோ வேறு!

 திவ்ய தேசங்களில் சயனத் தலங்களும் அவற்றின் சயனப் பெயர்களும் பின்வருமாறு :
ஸ்ரீவில்லிபுத்தூர்  --  வடபத்ர சயனம்.
திருவிந்தளூர்  --  வீர சயனம்.
கடல்மல்லை  --  ஸ்தல சயனம்.
கும்பகோணம்  --  உத்தான சயனம்.
திருப்புல்லணை  --  தர்ப்பா சயனம்.
ஸ்ரீரங்கம்  --  புஜங்க சயனம்.
தில்லை சதிரகூடம்  --  போக சயனம்.
திருநீர்மலை  --  மாணிக்க சயனம்.
-- தினமலர்.  பிப்ரவரி 7, 2013. 

Thursday, June 5, 2014

ஏ.டி.எம். மையங்கள்!

 தமிழகத்தில் 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.  தமிழகத்தில் இதுவரை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததாக சரித்திரம் இல்லை.  அது சுலபமானதும் அல்ல.
     ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியில் ஐந்து அல்லது ஆறு அறைகளுக்குள் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  இந்த அறைகள் அலாய் ஸ்டீலால் ஆன பெட்டகத்தால் சூழப்பட்டிருக்கும். பெட்டகத்தை லாக் செய்தால் நான்கு பக்கமும் தலா இரு லாக் வீதம் மொத்தம் எட்டு லாக் செய்யப்படும். இந்த லாக்கை எவ்வித கூரிய ஆயுதத்தைக்கொண்டும் அறுக்க முடியாது.  மேலும் இந்தப் பெட்டகத்தை எந்திரத்தை வெல்டிங் ராடு உருக்க முற்பட்டால் அது மேன்மேலும் உறுதி அடையுமே தவிர உருகாது.  சில தனியார் வங்கிகள் இந்த பெட்டகத்தை 24 மணி நேரம் உயர் வெப்பத்தில் வைத்து சோதித்தப் பின்பே வாங்குகின்றன.  எனவே, யாரும் வீண் முயற்சியில் ஈடுபட்டு சிறைக்குள் கம்பி எண்ண வேண்டாம்.
     தமிழகத்தில் இம்மையங்கள் துவக்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும்.  கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் காமிரா கண்விழித்துக்கொள்ளும்.  காமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால்,  இன்றைக்கு 90 % மையங்களில் வாயில் கதவு லாக் சிஸ்டம் செயல் இழந்துவிட்டன.
     " தாய்லாந்து,  மலேஷியா,  ஜப்பான்,  சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு,  கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.  யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை நகர்த்தினாலோ, அடித்தாலோ, பின்புறமாக தொட்டாலோ மறு நொடியே கண்காணிப்புக் குழுவினர்,  சம்பந்தப்பட்ட வங்கி பொறுப்பாளர் மூலம்  அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும்.  தவிர, வழக்கமான காமிராவைத் தவிர ஆங்காங்கே இருக்கும் ரகசிய சிறப்பு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் கொள்ளையரை படம் பிடிக்கத் தொடங்கும்.  இவை தவிர,  அந்த மையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அலாரம் ஒலிக்கத்தொடங்கும்.  மேற்கண்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்த கூடுதல் செலவு, 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தேவை.  எதிர்காலத்தில் மேற்கண்ட வசதிகள் கொள்ளப்படும்.
--- மாநிலம். தி இந்து . செப்டம்பர் 28, 2013. 

Wednesday, June 4, 2014

தலைகுனிந்த பரமாத்மா.

 பரமாத்மாவான குழந்தை கிருஷ்ணன் படுசுட்டி.  அவனைக் கட்டுப்படுத்துவது யசோதையின் முக்கிய சவால்களில் ஒன்று.  உறியில் இருக்கும் வெண்ணெய்யைத் தனக்குத் தெரியாமல் கிருஷ்ணன் எடுப்பதைத் தடுக்க யசோதை ஒரு காரியம் செய்தாள்.  உறியில் சில மணிகளைக் கட்டிவைத்தாள்.  வெண்ணெய்யை எடுக்கக் கிருஷ்ணன் முயன்றால், மணிகள் அசைந்து ஒலித்து காட்டிக்கொடுத்து விடுமல்லவா!
     அன்றைக்கும் வழக்கம்போல் கிருஷ்ணனை உரலில் கட்டிவைத்திருந்தாள் யசோதை.  சமையலறைக்குள் அவள் மும்முரமாக இருந்தபோது,  கிருஷ்ணனுக்கு ஒரு திட்டம் தோன்றியது.  சுற்றும்முற்றும் பார்த்தான்.  உரலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ( பரமாத்மா ஆயிற்றே ! ) உறியின் அருகே சென்றான்.
     மணிகளைப் பார்த்துக் கேட்டான், " மணிகளே ... நான் யார் தெரியுமா?"
     மணிகள் பவ்யத்துடன் கூறின.  " தாங்கள் பரமாத்மா ஆயிற்றே. "
     உடனே மணிகளுக்குக் கட்டளையிட்டான் கிருஷ்ணன்.  " மணிகளே ... நான் வெண்ணேய் சாப்பிடப்போகிறேன்.  யாரும் ஒலிக்கக் கூடாது!"
     "அப்படியே ஆகட்டும் " என்றன மணிகள்.
     உரலை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தான்.  அதன் மீது ஏறினான்.  உறியில் கைவைத்தான்.  அதிலிருக்கும் பானையில் துழாவினான்.  வெண்ணெய்யை கை நிறைய எடுத்து வாயில் வைக்கப்போனான்.  அப்போது பார்த்து மணிகள் கணகணவென்று ஒலித்தன.  ஓடிவந்த யசோதை கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து நையப்புடைத்தாள்.
     யசோதை மீண்டும் சமையல்கட்டுக்குப் போன பின், மணீகளைப் பார்த்துக் கேட்டான் கிருஷ்ணன், " மணிகளே, ஒலிக்க மாட்டோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு ஒலித்தீர்களே,  சத்தியத்தை மீறிய பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?"
    " தெரியும் ஸ்வாமி! ஆனால், பகவானுக்கு நைவேத்யம் ஆகும்போது ஒலிப்பதுதானே எங்கள் சுதர்மம்? அதற்காகத்தனே பிறப்பெடுத்தோம்?  சுதர்மத்தை மீறுவது பெரும் பாவமல்லவா! அதற்கான தண்டனையும் அதிகமல்லவா" என்று பதில் கூறின மணிகள்.  பரமாத்மா தலைகுனிந்தாராம்.
-- ஆர்.எஸ். ஆனந்த ஜோதி.  உள்ளத்தில் உண்மை ஒளி.
-- தி இந்து.  செப்டம்பர் 26, 2013. 

Tuesday, June 3, 2014

மூட்டைக் காக்க ஓடுங்கள்.

 ஓடினால் மூட்டுவலி வரும் என்று அஞ்சியே நம்மில் பலர் ஓடுவதில்லை.  75 ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்களை,  அவர்களுடைய முதுமைக் காலத்தில் சோதித்து ஆராய்ந்ததில், ஓடியவர்களின் மூட்டுகள் நல்ல நிலையில் இருப்பதும் மூடுவலி அல்லது வாதம் என்பது அவர்களைத் தொடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.  கனடா நாட்டின் குவீன்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
புற்றும் குடும்பப் பற்றும்.
    புற்றுநோயாளிகளில் மணமாகாதவர்களைவிட,  மணமானவர்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றனர்.  ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் 75 ஆயிரம் பேரைச் சொதனை செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  புற்றுநோயாளிகள் ஏராளமானோர் திருமணத்திற்குப் பின் நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- தி இந்து. செப்டம்பர் 27, 2013.  

Monday, June 2, 2014

சுந்தரகாண்டம்.

சுந்தரகாண்டம். பாராயணம் செய்யலாம் !
     ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் சுந்தரகாண்டம்..  இது அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம்.  24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 885 சுலோகங்கள்.  68 அத்தியாயங்கள்.  வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.
     ஐந்தே நிமிடங்களில் சுந்தரகாண்டத்தை படிக்க அதன் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதைப் படித்தாலே சுந்தரகாண்டம் முழுமையாக படித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
     நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தரகாண்டம் உள்ளது :
' சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக்
கடந்து ஏறி,
மும்மதின் நீள் இலங்கை புக்கு,
கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள்
வைதேகிதனைக் கண்டு,
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு
அருளாய் :
அயோத்தி தனில் ஓர் இடவகையில்
எல்லியம்போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு
ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தனனாய் கைகேயி வரம்
வேண்ட
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும்
மறாது ஒழிய,
" குலக்குமரா ! காடுறைய போ !" என்று விடை
கொடுப்ப,
லக்குமணன் தன்னோடும் அங்கு
ஏகியதும்,
கங்கைதனில் கூரணிந்த வேல்
வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை
கொண்டதுவும்,
சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி
பணிந்ததுவும்,
சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும்
திரிந்தோடி,
" வித்தகனே! இராமா! ஓ! நின்
அபயம் " என்ன,
அத்திரமே அதன் கண்னை அறுத்
ததுவும்,
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது
விளையாட...
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து
எம்பிரான் ஏக,
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்,
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்,
" ஈது அவன் கை மோதிரமே!" என்று,
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு,
" அனுமான்! அடையாளம் ஒக்கும்" என்று,
உச்சி மேல் வைத்து உகக்க;
திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன்
மாக்கடிகாவை இறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு,
அன்பினால் அயோத்தியர் கோன் தளிர்
புரைய்யும்,
அடி இணை பணிய! '
-- தேவராஜன்.
-- தினமலர்.வாரமலர். ஜூலை 28, 2013.  

Sunday, June 1, 2014

புல்லட் ரயில் !

  துப்பாக்கியிலிருந்து குண்டு ( புல்லட் ) எவ்வளவு வேகமாகச் செல்கிறது!  அந்த மாதிரி புல்லட் ரயிலும் மிக வேகமாகச் செல்லும்.  மணிக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமான வேகம்.  இவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டியிருப்பதால் இந்த வகை ரயிலின் உடல் மெலிதாகவும், முன்புறம் சற்று கூர்மையாகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் காற்றுக்குக் குறைவான தடையை அளித்து காற்றைக் கிழித்தபடி வேகமாகச் செல்ல முடியும்.
     சக்கரத்தில் ஏற்படும் அதிர்வுகள் பயணிகளை அடையாதபடி சிறப்பான ஷாக் அப்சார்பர்கள் இருக்கும்.  தவிர புல்லட் ரயில்களுக்கென்றே தனி ரயில் பாதை போடப்படும்.  அதாவது இதன் தண்டவாளத்தில் வேறு எந்தவகை ரயிலும் குறுக்கிடாது.
--- குட்டீஸ் கேள்வி - பதில்.
-- தினமலர். சிறுவர்மலர். மார்ச் 22, 2013.