Thursday, April 30, 2009

விஞ்ஞானிகள் !

--- உயிர் காக்கும் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் , துப்பாக்கி சுடுவதில் கில்லாடி . முதல் உலகப் போரின் சமயம் , குண்டடி பட்டு விழுந்த வீரர்களுக்குப் போர் முனையில் டாக்டராக இருந்தும் உயிர்காத்தார் .
--- புவிஈர்ப்பு சக்தியை ஆப்பிளினால் அறிந்த ஐசக் நியூட்டனுக்கு , அவருடைய அம்மாவோ , அப்பாவோ எதுவுமே சொல்லித் தந்ததில்லையாம் . காரணம் , நியூட்டன் பிறப்பதற்கு மூன்று மாதம் முன்பே அப்பா காலமானார் . நியூட்டனின் மூன்றாம் வயதில் அவரைப் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு , அம்மா மறுமணம் செய்துகொண்டு தொலைதூரம் போய்விட்டார் .
--- சாளேஸ்வரக்காரர்களின் வரப்பிரசாதமாக மூக்குக் கண்ணாடி கண்டுபிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் , நாணயங்களை மட்டுமே நம்பியிருந்த இந்த உலகத்தைத் தைரியமாக ரூபாய் நோட்டுக்கு மாறவைத்த பெருமைக்கும் உரியவர் . பின்னே... சுலபத்தில் கள்ளநோட்டு தயாரிக்க முடியாத அளவுக்கு ஒரிஜினல் அமெரிக்க டாலரைத் தயாரிக்கும் சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவராச்சசே . ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இன்றும் அமெரிக்க மக்கள் போற்றும் அன்புத் தலைவர் இவர் .
--- ' குரங்கில் இருந்து வந்தவன்தான் மனிதன் ' என்று நம் பூர்வீகத்தைத் சொன்ன சார்லஸ் டார்வினுக்கு மொத்தம் பத்து குர... ஸாரி , குழந்தைகள் ! விஞ்ஞானி என்றாலே குடும்ப விஷயத்தில் விட்டேத்தி என்பது இவரைப் பொறுத்தவரை பொய் ! நெருங்கிய சொந்தத்திலேயே திருமணம் முடித்திருந்ததால் , தன் குழந்தைகளுக்கு லேசாகக் காய்ச்சல் வந்தால்கூட பதறிப் போய் , அவர்கள் பக்கத்திலேயே இருப்பார் . பத்தில் இரண்டு குழந்தைகள் அல்பாயுசில் இறந்துபோனது இவரால் தவிர்க்க முடியாத சோகம் .
--- தற்போதைய கம்யூட்டரின் மூல விதையான டிஃபரன்ஸ் இஞ்சினை வடிவமைத்த சார்லஸ் பேபேஜூக்கு எட்டாவது வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது , சிறுவனைக் கட்டாயப்படுத்தி அதைப்படி , இதைப்படி என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்காதீர்கள் என்று டாக்டர்கள் புத்தி சொன்னார்களாம் . ஆக , ' ஃப்ரீயா வுடு மாமே ' தத்துவத்தில் வளர்ந்தாலும்கூட , குழந்தைகள் மகா புத்திசாலியாக இருக்கும் என்பதற்கான உதாரணம் இவர் .
--- மோனலிஸா ஓவியம் தந்த லியனார்டோ டாவின்சி ஒரு சூப்பர் விஞ்ஞானியும் கூட ! விமானமே கண்டுபிடிக்காத காலகட்டத்தில் பாராசூட் பற்றிக் கற்பனை செய்தவர் ! அறிவியலின் மீதிருந்த தாகத்தால் , மதகுருமார்களின் கட்டுப்பாடுகளை மீறி , கல்லறையில் புதைக்கப்பட்ட சடலங்களை ரகசியமாகத் தோண்டி எடுத்து , மனித உடற்கூறுகளை அறுத்துப் பார்த்துப் படமாக வரைந்து வைத்துவிட்டுப் போனார் டாவின்ஸி !
--- சார்பியல் தத்துவத்தைச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் , ஆரம்பத்தில் காப்புரிமை ஆபீஸில் கிடைத்த சாதாரண உத்தியோகதையே ஆசையாகப் போய் ஏற்றுக்கொண்டார் . பிற்பாடு உலகமே கொண்டாடும் விஞ்ஞானியாக அவர் உருவெடுத்த பிறகு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிகூட அவருக்கு தங்கத் தட்டில் வைத்து நீட்டப்பட்டது . அதை அவர் ' ஜஸ்ட் லைக் தட் ' மறுத்தது வேறு விஷயம் !
--- மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞானி மட்டுமின்றி , பக்கா வியாபாரி . அவர் தொழிற்சாலையில் புதுமை கண்டுபிடிப்புகள் மெகா புரொடக்க்ஷன் ஆகி , லாபம் குவிந்தது தனிக் கலை , ' ஜெனரல் எலெக்ரிக் ' உட்பட 14 கம்பெனிகளைத் தோற்றுவிக்கக் காரணமாக விளங்கிய எடிசன் , சின்ன வயதிலேயே ரயிலில் மிட்டாய் -- காய்கறி -- பேப்பர் விற்ற அனுபவம் கொண்டவர் .
---ஆனந்தவிகடன் . 28 - 01 - 2009

Wednesday, April 29, 2009

கேட்டவனும் , கேட்காதவனும் .

" என் தாத்தா பீஷ்மர்மீது நான் எப்படிப் பாணங்களைப் போடுவேன் ! என் குரு துரோணரை நான் எப்படிக் கொல்லுவேன் ? இவர்களைக் கொல்லுவதைவிட , இந்த உலகில் பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை சிறந்தது " என்கிறான் அர்ஜூனன் .
இந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதையை உபதேசிக்கிறான் . " உன் கடமையைச் செய் . உன் கடமையைச் செய்யும்போது உற்றார் , உறவினர் என்றெல்லாம் பார்க்காதே " என்கிறான் .
இருந்தும் , போரில் முதல் நாலைந்து நாட்களுக்கு அர்ஜுனன் பீஷ்மரைப் பலமாகத் தாக்க நடுங்குகிறான் . பீஷ்மர் விட்ட பாணங்களையெல்லாம் தம் மீது வாங்கிக்கொண்டு , கண்ணன் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட நின்ற பிறகுதான் அர்ஜுனனுக்கு ஆவேசம் பிறக்கிறது . மூர்க்கத்தனமாக சண்டை போட ஆரம்பிக்கிறான் .
இது கேட்டவன் , அதாவது கீதையைக் கேட்டவன் !
ஆனால் கீதையைக் கேட்காதவன் , அதுதான் கர்ணன் எப்படி நடந்துகொள்லுகிறான் என்று பாருங்கள் .
யுத்த ஆரம்பத்திலிருந்தே கர்ணனுக்கு பஞ்சபாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பது தெரியும் . தெரிந்தும் , அவன் மூர்க்கத்தனமாகவே அவர்களைத் தாக்கினான் . கடனையைச் செய்யும்பொழுது உற்றார் , உறவினர் என்று பார்க்கக்கூடாது என்ற கீதையின் கோட்பாட்டை அறியாமலேயே அவன் பின்பற்றுகிறான் .
தர்மம் தலை காக்கும் என்று சொல்லுவார்கள் . அது போலவே அர்ஜுனனின் பாணங்கள் அவனைக் கொல்லமுடியாதபடி அவன் செய்த புண்னியம் அவனைக் காப்பாற்றுகிறது . அதைக்கண்ட கண்ணன் , அவன் புண்ணியத்தையும் , ஒரு கிழ , அந்தணர் உருவில் சென்று யாசகமாகக் கேட்டுப் பெறுகிறான் . கர்ணன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் ரத்தத்தைக்கொண்டே தாரை வார்த்துக் கொடுக்கிறான் .
இந்த இரு செயல்களையும் பாராட்டி கண்ணன் இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டார் .
-- புலவர் சிதம்பரம் சுவாமினாதன் . சென்னை அமைந்தகரை , அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து . மே 29 . 1990 .

Tuesday, April 28, 2009

சுற்றுலாவின் வகைகள் 'அபாப்டோசிஸ்'---.

அலையகச் சுற்றுலா , மலையகச் சுற்றுலா , கலையகச் சுற்றுலா , வரலாற்றுச் சுற்றுலா , வர்த்தகச் சுற்றுலா , மருத்துவச் சுற்றுலா , மனமகிழ்ச் சுற்றுலா , ஆய்வுச் சுற்றுலா , ஓய்வுச் சுற்றுலா , பண்பாட்டுச் சுற்றுலா , பாரம்பரியச் சுற்றுலா , சுற்றுச்சூழல் சுற்றுலா , சுறுசுறுப்புச் சுற்றுலா , இலக்கியச் சுற்றுலா , இதிகாசச் சுற்றுலா , கல்விச் சுற்றுலா , தொல்லியல் சுற்றுலா , ஆன்மிகச் சுற்றுலா , சமயச் சுற்றுலா , கானகச் சுற்றுலா , ஊரகச் சுற்றுலா , விளையாட்டுச் சுற்றுலா , வீரதீரச் சுற்றுலா , சாகசச் சுற்றுலா , புனைவியல் சுற்றுலா , பொழுதுபோக்குச் சுற்றுலா , அருவிச் சுற்றுலா , ஆரவாரச் சுற்றுலா , பண்டிகைச் சுற்றுலா , பலகாரச் சுற்றுலா என்று எண்ணற்ற சுற்றுலாக்கள் உள்ளன .
-- இறையன்பு . தி.ம. 14 -01 - 2009 .
'அபாப்டோசிஸ்'---
நம் முதுமையை நிர்ணயிக்கும் ' அபாப்டோசிஸ் ' என்ற என்சைம் எனும் புரதப்பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ம் தேதி கண்டுபிடித்தனர் . என்சைம் ( நொதி அல்லது நொதியம் ) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கியாகும் .
உடலில் உள்ள எல்லா செல்களின் இயக்கத்திற்கும் இது அவசிய தேவையாகும் . என்சைம்கள் இல்லாவிட்டால் , சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு மெதுவாகவே நடக்கும் . மெதுவான செயல்பாட்டால் மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ இயலாது .
நம் உடலில் 1000க்கும் மேலான வெவ்வேறு வகை என்சைம்கள் உருவாகி செயல்படுகின்றன . இன்று வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 4 ஆயிரம் உயிர் - வேதியியல் வினைகளுக்கு என்சைம்கள் அடிப்படையாக உள்ளன . செடி கொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது போல மனிதர்களின் உடலில் உணவு செரிப்பது , மூளை இயங்குவது , இதயம் துடிப்பது , மூச்சு விடுவது ஆகிய அனைத்துக்குமே என்சைம்கள் இன்றியமையாதவையாகும் .
சர்க்கரைக் கரைசலை ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரியை கொண்டு லூயி பாஸ்ச்சர் என்பவர் நொதிக்கவைத்து ஆல்கஹாலாக மாற்றினார் . ஆல்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட் செல்கள் உயிர்ப்புடன் இருந்ததுதான் என்று கண்டுபிடித்தார் .
அபாப்டோசிஸ் என்னும் என்சைம் குறைபாட்டால் நம் உடலில் உள்ள செல்கள் தினமும் இறக்கின்றன . இதனால் சீக்கிரம் முதுமை ஏற்படுகிறது என்பதை அறிஞ்ர்கள் கண்டுபிடித்தனர் .
இந்த என்சைம்கள் நம் உடலில் சரியான அளவில் இருந்தால் முதுமை அடைவது தள்ளிப்போகிறது என்றும் கண்டுபிடித்தனர் . இந்த ஆய்வு முடிவை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அறிவித்தார் . தி.ம. 14 -01 -2009 .

Monday, April 27, 2009

உறுதிமொழிகள் ! செல்லாது !

'டாப் 10 ' உறுதிமொழிகள் !
1 . தீவிரவாதத்தை அழிக்கும் ' தீ 'யாக நான் திகழ்வேன் .
2 . புதைப்போம் தீவிரவாதத்தை ! விதைப்போம் தேசப்பற்றை ! காப்போம் தேசத்தை !
3 . தாயைப் பழித்தவனை விடேன் ; எம் தேசத்தை பங்கப்படுத்துபவனை விடேன்...விடேன் ...
4 . தேசத்தாயின் கருவறையில் தான் பிறந்தேன் . தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியேற்பேன் .
5 . நேசம் வளர்ப்போம் , நாசம் தவிர்ப்போம் , தேசம் காப்போம் .
6 . சுவாசிக்காமல் கூட இருப்பேன் ; என் தாய் நாட்டை நேசிக்காமல் இருக்கமாட்டேன் .
7 . தீவிரவாத முள் மரத்தை என் கைகளால் வெட்டி வேரறுப்பேன் .
8 . மதத்தின் பெயரால் , மனதால் விலங்காய் மாற மாட்டேன் .
9 . எனது தாயையும் , எனது நாட்டையும் தெய்வமாக போற்றுவேன் .
10. வேரறுப்போம் தீவிரவாதத்தை ; விதைப்போம் சகோதரத்துவத்தை ... தி.ம. சிறு. மல .ஜன . 16 . 2009 .
இது செல்லாது !
குற்றவாளிகளிடம் இருந்து உண்மையை வரவழைக்க , ' உண்மை கண்டறியும் சோதனை ' என்ற பெயரில் குற்றவாளியை மருந்து மூலம் மயக்கம் அடையச் செய்து மயங்கிய நிலையில் கேள்விகளை திரும்ப , திரும்ப கேட்டு தகவல்களை பதிவு செய்கிற முறை இந்தியாவில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது . இதை ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' என்று கூறுவர் . தென்னிந்தியாவில் இப்போது பெங்களூரில் இந்த மையம் உள்ளது . சென்னையில் மையம் துவக்கப்பட உள்ளது . இந்த உண்மை கண்டறியும் சோதனை பயனற்றது , நம்பகத்தன்மை அற்றது எனக்கூறி அமெரிக்கா 30 ஆண்டுகளுக்கு முன்பே இதை தடை செய்துவிட்டது . இந்த முறை இந்திய அரசியல் அமைப்பின் 20 (3) ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பதால் செல்லாது என ஐகோர்ட் கூறியுள்ளது . மேலும் , இந்திய தண்டனைச் சட்டம் 126 பிரிவு 2-ல் குற்றவாளி பதில் கூறாமல் மவுனம் காக்கும் உரிமையை வழங்கியுள்ளது .
எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் சுயநினைவுடன் எழுதும் உயில்தான் செல்லும் என்பது சட்டம் . அப்படியிருக்க சுயநினைவு தவறிய நிலையில் கூறுவது எப்படி செல்லுபடியாகும் . மேலும் , உலகின் எந்த அறிவியல் அமைப்பும் ' நார்நாட்டிக் அனாலிசிஸ் ' முறையின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொள்ளவே இல்லை . நம் நாட்டின் தடயவியல் விஞ்ஞானி சந்திரசேகரனும் இதையே கூறியுள்ளார் . எனவே , உதவாத , மனிதௌரிமைக்கு எதிரான , அடிப்படை உரிமைக்கு மாறான இந்த முறையை கைவிட வேண்டும் .
--ஆர். டி. மூர்த்தி , திருவையாறு . தி.ம. 13 - 01 - 2009 .

Sunday, April 26, 2009

யோஜனை ! சலுகை ! கொட்டாவி !

விருந்தாளிகளுக்கு உபசரிப்பதற்காக ஒரு தட்டில் நாலைந்து ஜூஸ் டம்ளர்களை அல்லது தண்ணீர் டம்ளர்களை வைத்து எடுத்துச் செல்கிறீர்கள் . நடையின் அசைவில் ஜூஸ் அல்லது தண்ணீர் தளும்பி வழிகிறதா ? கவலை வேண்டாம் . ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு ஸ்பூன் போட்டு எடுத்துச் செல்லுங்கள் : தளும்பாது .
தம்பிகளுக்கே சலுகை !
ராமாயணத்தில் பட்டம் கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தம்பிகளாகவே இருப்பதைக் காணலாம் .
ராமன் காட்டுக்குச் செல்ல , தம்பி பரதனுக்குதான் முதலில் அரசாளும் உரிமை வருகிறது .
வாலி வதத்திற்குப் பிறகு , தம்பி சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாகிறான் .
ராவண வதத்திற்குப் பிறகு , ராவணனின் தம்பி விபீஷணன் இலங்கையின் அரசனாகிறான் .
-- ரகோத்தமாச்சார் சொற்பொழிவிலிருந்து .
ஆ.வி .21 - 01 - 2009 .
கொட்டாவி !
குழந்தை தாயின் வயிற்றில் 20 வாரக் கருவாக இருக்கும் போதே கொட்டாவி விடுவது தொடங்கிவிடுகிறது .
ஒவ்வொரு கொட்டாவியும் சுமார் 6 லிருந்து 7 நொடிகள் வரை நீடிக்கிறது . அப்போது இதயம் 30 தடவைகளுக்கு மேல் அதிகமாக துடிக்கிறது என்றும் கண்டுபிடித்தனர் . பிறகு , பறவைகள் , விலங்குகள் , மனிதர்களின் கொட்டாவிகளைத் தொடர்ந்து கண்காணித்ததில் விஞ்ஞானிகள் கண்ட உண்மை : கொட்டாவி மூளையின் வெப்பத்தை கட்டுப்படுத்தி , அதனைக் குளிர்விக்கிறது என்பதே . கொட்டாவியை ஒரு ' தெர்மோ ரெகுலேட்டர் ' என்கிறார்கள் விஞ்ஞானிகள் . ரத்த ஓட்டத்தைக் குளுமைப்படுத்தி மூளையையும் அதன் மூலம் ' கூல் ' படுத்துகிறதாம் கொட்டாவி .

Saturday, April 25, 2009

அரச மரம் ! முன்னோர்கள் !

மரத்தைத் தெய்வமாக மதித்து வணங்கிய பழக்கம் இந்து மதத்தில் உண்டு . புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன . அடிப்பகுதி பிரம்ம வடிவம் , நடுப்பகுதி விஷ்ணு சொரூபம் , மேல்பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம் . மரங்களின் அரசனான அரச மரத்தை வலம் சுற்றி வணங்கும் போது :
மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதே விஷ்ணு ரூபிணே
அக்ரதச் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம :
என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்குதல் வேண்டும் .
தி. ம . பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .
முன்னோர்கள் !
காக்கைக்கு உணவு இடுவது ஏன் ?
இறந்து போன முன்னோர்கள் எந்தப் பிறவியில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது .
தெய்வமாக இருக்கலாம் , யாகம் மூலம் ப்ரீதி செய்கிறார்கள் . மனிதராக இருக்கலாம் , மனிதரை அமர்த்தி வணங்கி உணவிடுகிறார்கள் . பறவையாகவோ , விலங்காகவோ பிறந்திருக்கலாம் , வாயசம் எனப்படும் காக்கைதான் பித்ரு சொரூபம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது . எனவே , காக்கைக்கு உணவிடுகிறார்கள் . ரிஷியாக இருக்கலாம் , அர்க்யம் கொடுத்து வழிபடுகிறார்கள் . முன்னோர் பித்ரு லோகத்திலேயே இருந்தால் தர்பணம் அவர்களைச் சென்றடைகிறது . கீழே சிந்தும் எள்ளும் , தர்ப்பையும் அவர்கள் பைசாசமாக இருந்தால் அவர்களைச் சென்றடைகிறது என்பது சாஸ்திரம் . எனவெதான் திவச நாட்களில் காக்கைக்கு உணவிடுகிறோம் .
கயா முதலிய இடங்களில் செய்யும் விசேஷத் திவசத்தில் விஷ்ணு பாதத்துக்கு பிண்டமிடுவதற்கு முன் ஒரு தனி உருண்டையைக் காக்கைக்கு இடுவார்கள் .
-- மானஸ தெவதா . --- தி. ம. பக்தி மலர் . ஜனவரி 15 . 2009 .

Friday, April 24, 2009

தாலி ,YAHOO ,அபூர்வ மனிதர் !

' அடுக்களைத் தாலி '
இரண்டாம் , மூன்றாம் தாரமாக , கிழவர்கள் ரகசியமாக இரவில் தாலி கட்டிக் கூட்டி வருவார்கள் . அதற்கு ' அடுக்களைத் தாலி ' என்று பெயர் . தாலி எனில் தமிழில் கீழாநெல்லி என்றும் மட்பாண்டம் என்றும் பொருள் தருவது . தாலி என்பது ஒரு பாக்கியமாகக் கருதப்படுகிறது . தாலி பாக்கியம் என்பதும் தாலிப் பிச்சை என்பதும் தமிழ் வழக்குகள் .
YAHOO !
' YET
ANOTHER
HIERARCHICAL
OFFICOUS
ORACLE '
இதுதான்
YAHOO வின்
விரிவாக்கம் .
அபூர்வ மனிதர் !
கோல்கட்டாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தேவேந்திர ஹார்னோவுக்கு கைகளில் 12 விரல்களும் , கால்களில் 13 விரல்களும் உள்ளன .
அனைத்து விரல்களுமே செயல்படக் கூடியவை . இதனால் , இவனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது .
இது போன்ற விரல்கள் கொண்டவர்களை , ' பாலிடேக்டலிசம் ' என்று கூறுகின்றனர் . கிரேக்க மொழி வார்த்தையான இதற்கு பல விரல்கள் என்று பொருள் .
-- தினமலர் .சென்னை பதிப்பு . 12 - 08 - 2008 .

Thursday, April 23, 2009

ராமானுஜர்

" ராமானுஜர் சுமார் 120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார் . ஆனால் , இதைப் பலரும் சந்தேகக்கண்கொண்டுதான் பார்க்கிறார்கள் . ராமானுஜரைத் துன்புறுத்திய மன்னன் குலோத்துங்க சோழனா என்ற சந்தேகமும் உள்ளது . எனவே , இதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தத் தேடுதலில் இறங்கினேன் . ராமானுஜர் குறித்த பல்வேறு பழைய நூல்களைத் திரட்டினேன் . அதில் ஒன்று பிள்ளை லோகஞ்சீயர் எழுதிய ' ராமானுஜார்ய திவ்ய காதை '. அந்தப் புத்தகத்தில் பிங்கல ஆண்டு , கலியுக 4118 , சித்திரை மாதம் , சுக்லபட்சம் , பஞ்சமி , குருவாரம் , திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்ததாக வருகிறது . ராமானுஜருக்கு அடுத்து வந்த மணவாள முனிவரின் சிஷ்யர் வழி வந்தவர் எழுதிய நூல் இது . இதை வைத்து ஆங்கிலத் தேதியைக் கணக்கிட்டேன் . அதன்படி ராமானுஜர் பிறந்தது 1017 -ம் வருடம் , ஏப்ரல் மாதம் 13 -ம் தேதி ஆகும் .ராமானுஜர் 1077 -ம் ஆண்டு பிறந்ததாகச் சிலர் சொல்கிறார்கள் . ஆனால் , பிள்ளைலோகஞ்சீயர் சொல்லும் வரையறைகள் , இந்த ஆண்டுக்குப் பொருந்தவில்லை .எனவே , இதுதான் சரியானது . பக்த எல்லைக்குள் ஆய்வுத்தன்மைகள் வர வேண்டியது வரவேற்க வேண்டியதுதானே !
-- சென்னை ஐ. ஐ. டி. இயற்பியல் பேராசிரியர் ரங்கராஜன் . ஆனந்தவிகடன் . 14 -01 - 2009 .

பொது அறிவு !,திருக்குறள் - ஆங்கிலத்தில் !

ஓய்வூதியம் வழங்கும் முறையைக் கொண்டு வந்தவர் பிஸ்மார்க் .
--- ஒட்டும் தபால்தலையை உருவாக்கியவர் ஜேம்ஸ் கேனல் .
--- உலகின் மிகச் சிறிய சந்து ரோமில் 48 செ. மீ ., அகலம் கொண்ட புனித ஜான் சந்து .
--- பிரிட்டிஷ் ஆட்சியில் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுகள் .
--- வரதட்சனைக்கு எதிரான போராட்டம் 1914 ல் தொடங்கியது .
--- ஊட்டியின் உண்மையான பெயர் ஒற்ரைக்கல் மந்து .
திருக்குறள் - ஆங்கிலத்தில் !
நூலில் இருந்து ஒரு துளி :
' உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் '
என்ற குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பாடல் :
Who know not with the world in harmony to dwell ,
May many things have learned , but nothing well .
இதற்கான ஆங்கில உரை :
" Those who know not to act agreeably to the world , though they have learnt many things , are still ignorant ".
-- ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் : ஜி.யு.போப் , டபிள்யூ எச். ட்ரூ , ஜான் லசாரஸ் .

Tuesday, April 21, 2009

யோஜனை !

ஒரு யோஜனை !
" என் முகம் போட்டோவில் அழகாகவே விழமாட்டேன் என்கிறது " என்று குறைப்பட்டுக் கொள்ளும் சகோதர , சகோதரிகளுக்கு ஒரு யோஜனை ....
படம் எடுக்கும்போது சீஸ் (Cheese ) என்ற வார்த்தையைச் சொல்கிற மாதிரி உதடுகளை வைத்துக்கொள்ளுங்கள் . புன்முறுவலாகவும் , மிகக் கொஞ்சமாகவும் பற்கள் தெரியும் . படத்தில் முகம் எடுப்பாகவும் அழகாகவும் தோன்றும் .

ஜனநாயகம் !

"பெரும்பான்மை என்பதுதான் ஜனநாயகமா? "-- "இல்லை .சிறுபான்மை உணர்வுகளுக்குப் பெரும்பான்மை மதிப்பு அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் .' இந்தியாவில் இந்தி பேசும் மக்கள்தான் பெரும்பான்மை .எனவே , இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் ' என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது , அறிஞர் அண்ணா சொன்னது : ' இந்தியாவில் காக்கைகள்தான் அதிகம் .ஆனால் , தேசியப் பறவை மயில்தானே !"
-- நானே கேள்வி... நானே பதில் ! ஆனந்தவிகடன் . ( 10-12-2008 ) .

Monday, April 20, 2009

செய்திச் சுடர் .

'கீதாஞ்சலி 'யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து , தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்தவர் ' ரோதென்ஸ்டின் ' என்ற ஆங்கில அறிஞர் .
அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆரய்ச்சி நிலையத்தின் பெயர் - தட்சிண கங்கோத்திரி .
மருதாணி சிவக்க காரணமான நிறமி - லாஸோன் .
நாய்களுக்கு வியர்வை சுரப்பிகள் - அதன் பாதங்களில் உள்ளன .
' கற்பூரம் ' - லாரல் மரத்திலிருந்து பெறப்படுகிறது .
ஹீமோகுளோபின் இல்லாததால் - கரப்பான் பூச்சியின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கிறது .
எல்லா உணவுப் பொருட்களிலும் - வைட்டமின் ' இ ' கலந்துள்ளது .
பருத்தியின் தாவரவியல் பெயர் - காஸிப்பியம் .
ஆந்தையால் - தன் விழிகளை அங்கும் , இங்கும் அசைக்க முடியாது .
எலி - ஒரு நாளில் சராசரியாக 10 மைல் தூரம் ஓடுகிறது .
ஒரு சிப்பியில் - முத்து வளர்வதற்குச் சுமார் 15 வருடங்களுக்கு மேலாகும் .
சர்க்கரையைவிட பன்மடங்கு அதிக இனிப்பு உள்ள ' சாக்கரின் ' - நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது
தன்னைவிட 30 மடங்கு கனமான எடைகளை எறும்புகளால் தூக்கிச் செல்ல இயலும் .

Sunday, April 19, 2009

ஓநாய்கள் !

இரண்டு ஓநாய்கள் !
சான்ஃபிரான்சிஸ்கோ முதல் சென்னை வரை படர்ந்து விரிந்திருக்கும் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் பிதாமகர் அவர் . விடுமுறைக்குத் தன் இரு பேத்திகளுடன் அடர்ந்த காட்டுக்குள் ' ச்ஃபாரி ரைட் ' மேற்கொண்டார் .ஓரிடத்தில் ஓநாய்கள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர் , வண்டியை நிறுத்தச் சொன்னார் . " எனக்குள் எந்நேரமும் இரு ஓநாய்கள் மூர்க்கமாய்ச் சண்டையிட்டப்படியே இருக்கிறது .அது மிக ஆக்ரோஷமான போர் . அகங்காரம் , ஆக்ரோஷம் , பயம் , கோபம் , பேராசை போன்ற குணங்கள் நிரம்பியது ஒரு ஓநாய் . மற்றொன்றோ தைரியம் , தன்னம்பிக்கை , மனிதாபிமானம் ,காதல்
ஆகியவற்றால் நிரம்பியது . இதுபோன்ற இரண்டு ஓநாய்கள் அனைவரின் மனதிலும் ரெளத்ர யுத்தம் நடத்திக்கொண்டே இருக்கும் .
தங்கள் தாத்தா சொல்வதைக் கவனமாகக் கோட்டுக்கொண்டு இருந்த பேத்திகள் , " எந்த ஓநாய் தாத்தா ஜெயிக்கும் ?" என்று ஆர்வமாகக் கேட்டனர் .
" நீங்கள் எந்த ஒநாய்க்கு உணவிடுகிறீர்களோ , அது !"
முன்னிழுக்கும் முனைப்பு ( ஃபார்வர்ட் ஃபோகஸ் ), பின்னிழுக்கும் பிறழ்வு ( பேக்வர்ட் ஃபோகஸ் ) ஆகியவற்றுக்குத்தான் அந்த இரு ஓநாய்ளை உருவகப்படுத்துகிறார்கள் .நமது எண்ண ஓட்டங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ , அவைதான் செயல்களாக வெளிப்படுகின்றன என்பதற்கு இந்த குட்டிக் கதையை உதாரணமாகச் சொல்கிறார்கள் கெவின் மற்றும் ஜாக்கி . இந்தியாவின் டாடா நிறுவன சி.இ.ஒ.வில் துவங்கி , ஸோனி நிறுவன உயரதிகாரிகள் வரை , இவர்களின் ' பூம் ' புத்தகத்துக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள் .
--எனக்குள் இரண்டு ஓநாய்கள் ! கட்டுரையில் , கி. கார்த்திகேயன் . ஆனந்தவிகடன் . (10-12-2008 ) .

Saturday, April 18, 2009

கடமைகள் ! தனிமை .

ஐந்து கடமைகள் !
கலிமா எனப்படும் மூல மந்திரம் , தொழுகை , நோன்பு , ஜகாத் , ஹஜ் ஆகியவை முஸ்லிம்களின் ஐந்து கடமைகள் .
' வணக்கத்திற்குரியவன் அல்லா ( ஹ் ) . முகம்மது , அல்லா (ஹ் ) வின் இறுதித் தூதர் ' என்பதை மனத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிவது முதல் கடமையான கலிமா ஆகும் .
தினமும் ஐந்து நேரம் தொழுவது இரண்டாவது கடமை .
ரமலான் மாதம் முழுவதும் உபவாசம் இருப்பது மூன்றாவது கடமையான நோன்பு ஆகும் .
செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ( இரண்டரை சத விகிதம் ) ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் திருக்குர் ஆனில் விதிக்கப்பட்டுள்ளபடி விநியோகிப்பது ' ஜகாத் ' எனும் நான்காவது கடமை .
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்காவுக்குச் சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவது ஐந்தாவது கடமை .
--நீதிபதி மு . மு . இஸ்மாயீல். ஆனந்தவிகடன் . 12-12-2008 .
ஒட்டகக் கறி !
" ஒட்டகக் கறி சாப்பிடுங்கள் . நான் இன்று சாப்பிட்டேன் , மிகவும் சுவை . ஆம் , ஆஸ்திரேலியாவைக் காப்பாற்ற அதுதான் ஒரேவழி ! " என்று டி . வி - யில் தோன்றிச் சொல்கிறார் அந்த ஆஸ்திரேலிய அதிகாரி . அந்நாட்டில் எகிடுதகிடாக எகிறி விட்ட ஒட்டகங்கள் அதிகளவு மீத்தேன் வாயுவை வெளியிடுவதோடு , ஏகப்பட்ட தண்ணீரைக் காலிசெய்து ஈகோ பேலன்ஸைக் கெடுக்கின்றனவாம் . அதனால்தான் ஒட்டகக் கறி திட்டம் !
--- ஆனந்தவிகடன் . 24 - 12 - 2008 .
தனிமை .
கர்ப்பத்தில் பத்துமாத தனிமை
பூப்பெய்தியபோது பதினாறு நாள் தனிமை
வாலிபம் வரை கனவுகளோடு தனிமை
தூங்கும்போதோ உறக்கத்தில் தனிமை
விதவை என்ன தவறு செய்தாள் ?
வாழ்நாள் முழுவதும் தனிமை !

Friday, April 17, 2009

மரணம் !

மெக்ஸிகோவில் உள்ள ஜீனி சமுதாய மக்கள் , மரணத்தின்போது பிணத்தை வைத்துக் கொண்டு நான்கு நாட்கள் கண்டிப்பாக அழவேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் உள்ளது . இதேபோல் , ஜப்பான் நாட்டிலும் அழுவதற்கென்று தனி சீசன் உள்ளது !
--- தினத்தந்தி .குடும்பமலர் . 14 - 12 - 2008 .
தோல்வி வெற்றியின் படிகளே !
--- 1831 -ம் ஆண்டில் வியாபாரத்தில் தோல்வி .
--- 1832 ------ சட்ட மன்ற தேர்தலில் தோல்வி .
--- 1833 ------மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி .
--- 1835 ------ காதலியின் ம்றைவு .
--- 1836 ------நரம்பு கோளாறு காரணமாக உடல் நலம் பாதிப்பு .
--- 1838 -----சட்ட மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி .
--- 1840 -----எலக்டர் தேர்தலில் தோல்வி .
--- 1843 ----காங்கிரஸ் தேர்தலில் தோல்வி .
--- 1855 ----செனட் தேர்தலில் தோல்வி .
--- 1856 ----துணை குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வி .
--- 1858 ----செனட் தேர்தலில் தோல்வி .
--- இத்தனை தோல்விகளையும் சந்தித்து கடைசியில் 1860 -ம் ஆண்டு அதிகாரமிக்க அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்தவர் , ஆபிரஹாம் லிங்கன் ஆவார் .
--- தினத்தந்தி . இளைஞர் மலர் . 06 - 12 - 2008 .

Thursday, April 16, 2009

' உலா ' படிக்காத மேதைகள் !

தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :
--- திருக் கயிலாய ஞான உலா ---- சேரமான் பெருமாள் நாயனார் .
--- திருவெங்கை உலா ------------------------ சிவப்பிரகாச சுவாமிகள் .
--- சொக்கநாத உலா ---------------------------- தத்துவராயர் .
--- திருக்காளத்தி நாதர் உலா ----------- சேற்றை கவிராசர் .
--- திருவானைக்காவல் உலா ------------ காளமேகப்புலவர் .
--- திருவரங்கன் உலா ------------------------ ஸ்ரீவேணுகோபாலன் .
--- திருவாரூர் உலா --------------------------- அந்தகக் கவிராயர் .
--- திருக்குற்றாலநாத உலா -------------- திரிகூடராசப்ப கவிராயர் .
--- ஞான உலா ------------------------------------ வேதநாயகம் சாஸ்திரியார் .
--- மூவருலா ---------------------------------------- ஒட்டக்கூத்தர் .
--- சிவந்தெழுந்த பல்லவன் உலா - படிக்காசுப் புலவர் .
--- தென்தில்லை உலா ------------------------ பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .
படிக்காத மேதைகள் !
--- தாமஸ் ஆல்வா எடிசன்..... ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .
--- பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
--- பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .
--- கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல.... படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !
' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !
--- அவள் விகடன் . 02 - 01 - 2009 .

Wednesday, April 15, 2009

சிரிப் 'பூ '

ஆட்டோ 'கிராப் '
தஞ்சாவூர் பெரிய கொவில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் , ஒரு ஆட்டோவில் கண்ட வாசகம் :
' கடவுள் காதலித்தால் புராணம் ,
மனிதன் காதலித்தால் மயானம் ! '
சிரிப் 'பூ '
கஸ்டமர் : " இந்த புக் என்ன விலைங்க ? "
கடைக்காரர் : " 40 ரூபாய்..."
கஸ்டமர் : " சொல்லிக் கொடுங்க..."
கடைக்காரார் : " நாங்க விற்கத்தான் முடியும் , சொல்லித்தர முடியாது "
தத்துவமுங்கோ...
' கண்கள் அழுதால் துடைப்பது கர்ச்சிப் ,
இதயம் அழுதால் துடைப்பது பிரண்ட்ஷிப் ! '
--- தினத்தந்தி . 12 - 04 - 2008 .

கற்பனை !

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது அதீத கற்பனையினால்தான் .
ஒருநாள் யோஹான் கூட்டென்பெர்க் நாணயங்களை அச்சிடும் முத்திரைகளைப் பார்த்தார் . இன்னொரு நாள் ஒயின் தயாரிப்புக்காக திராட்சைகளைப் பரவலாக நசுக்கிப் பிழியும் இயந்திரம் அவர் கவனத்தைக் கவர்ந்தது . ' இந்த அகலமான ஒயின் இயந்திரத்துக்குள் , அந்தக் குட்டிக் குட்டி நாணய முத்திரைகளைப் பொருத்தினால் ?! ' என்ற கற்பனை அவருக்குப் பிறந்தது . அந்தக் கற்பனையில் பிறந்ததுதான் அச்சு இயந்திரம் ! .
---ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 03 - 01 - 1999 .

பஞ்சாங்கம் .

அறிவியல் ரீதியான பஞ்சாங்கம் .
தமிழகத்தில் மற்றும் பாரதத்தில் வழங்கும் கிரகக் கணக்கீட்டு மற்றும் பஞ்சாங்க முறைதான் அமெரிக்கன் எபிமெரிசுக்கு அடிப்படையாக அமைகிறது . விஞ்ஞானிகள் அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில்தான் , விண்வெளிக் கலங்களை ஆகாயத்தில் செலுத்துகிறார்கள் . இப்படி அறிவியலாரும் , அடிப்படையாகக் கொள்ளும் உயர்வு படைத்ததுதான் இந்திய வானியல் ஆகும் .
பஞ்சாங்கங்களில் போடப்பட்டுள்ள ஆண்டுக் கணக்கு முறைதான் , வானியல் அடிப்படையில் அமைந்தது . சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் அமையும் காலப் பகுப்பு , ஒரு மாதம் . சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்கியிருக்கிறான் . அவன் எந்த ராசியில் தங்கியிருக்கிறானோ அந்த அடிப்படையில் மாதத்தின் பெயர் அமைகிறது . சூரியன் மேஷ ராசியில் தங்கியிருக்கும் காலம் மேஷ மாதம் . இது போலவே மற்ற ராசிகளிலும் தங்கியிருக்கும் மாதத்தை அந்த ராசியின் பெயரால் சொல்வார்கள் .
சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் நேரத்தில் , சந்திரன் ஒருமுறை 12 ராசிகளையும் வலம் வந்து விடுகிறான் . தாந்திரமான அடிப்படையில் சந்திரன் பவுர்ணமி நாளில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறானோ அதன் அடிப்படையில் அந்த மாதத்தின் பெயர் இருக்கும் . சித்திரை மாதத்தில் சித்திரா நட்சத்திரமும் , பவுர்ணமியும் சேர்ந்து வரும் . சித்ரா பவுர்ணமி மிகவும் விசேஷமான நாள் . அந்த அடிப்படையில் அந்த மாதம் சித்திரை மாதம் எனப்படுகிறது . இதுபோலத்தான் பிற மாதங்களின் பெயர்களும் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் அமைகின்றன .
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சந்திர , சூரிய இயக்கத்தின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக அமைந்தவை .
வழிபாட்டு நிலையங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கடற்கரை ஓரம் உள்ள திருவிழாக்கள் , திதிகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன . நதிக்கரை ஓரம் உள்ள ஊர்களின் திருவிழாக்கள் நட்சத்திர அடிப்படையில் அமைகின்றன .
வீடுகளில் கடைபிடிக்கும் விழாக்கள் , விரதங்கள் , பண்டிகைகள் எல்லாமும் பஞ்சாங்க அடிப்படையிலேயே அமையக்கூடியவை . ராம நவமி , கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி , கந்த சஷ்டி , வைகாசி விசாகம் , கிருத்திகை , திருவோணம் என எல்லாமே இந்த அடிப்படையில் அமைபவைதான் .
வீடுகளில் பிறந்த நாளை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுகிறோம் . முன்னோர் வழிபாட்டில் திதிக்கு முக்கியத்துவம் தருகிறோம் .
இப்படி எல்லா வகையிலும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழ் மாதங்களில் , சித்திரை இன்று 14 -ம் தேதி பிறக்கிறது . சித்திரை முதல் நாளை இறையுணர்வுடன் எதிர் கொண்டு நன்மைகள் செய்து பலன் அடைவோமாக .
--- புலவர் . வே . மகாதேவன் . தினமலர் . ஏப்ரல் 12 , 2009 .

Tuesday, April 14, 2009

ஜோக் !

அமெரிக்காவில் லெஸ்பியன் பற்றி ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம் . சர்வே எடுப்பவர் ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறார் . இளம் பெண் ஒருத்தி வெளியே வருகிறாள் . ' உங்கள் பெயர் என்ன ? ' ' ஜெனிஃபர் '. ' நீங்கள் லெஸ்பியனை ஆதரிக்கிறீர்களா ?' ' இந்த மாதிரியான விஷயங்கள் பற்றியெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது . வேண்டுமானால் என் கணவரைக் கூப்பிடுகிறேன் ' என்றவள் , வீட்டின் உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தாள் , ' ஸ்டெல்லா...ஸ்டெல்லா ! '
" ரேஷன்காரரே , பொங்கலுக்கு பாமாயில் , மண்ணெண்ணெய் போடுவீங்களா ?"
" பொங்கலுக்கு வழக்கமா நெய்...இல்லாட்டி டால்டாதானே எல்லோரும் போடுவாங்க ! "
" நான் இன்னிக்கு ஒரு மனுஷனா உங்க முன்னாடி நின்னுக்கிடிருக்கேன்னா , அதுக்குக் காரணம் , அதோ போராரே...அவர்தான் ! "
" யாருங்க அவரு ? "
" எங்கப்பா ! "
" நம்ம தலைவர் பெண்களை எல்லாம் தாயாக நினைப்பாராமே ...ரோம்ப டச்சிங்தான் !"
" யோவ் ! அவரு 'தாயாக்க' நினைக்கிற டைப்புய்யா !"
தண்டனை - மன்னிப்பு !
' மனிதர்கள் தண்டிக்கிறார்கள் . மகத்தான மனிதர்கள் மன்னிக்கிறார்கள் . மன்னித்ததும் திருந்துபவர்களை மனிதர்கள் என்கிறோம் . திருந்தாதவர்களை ? எப்போதோ , எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது .'
' ஒரு டாக்டரின் தவறு
ஆறடி மண்ணில் புதைந்து விடுகிறது .
ஒரு நீதிபதியின் தவறோ
ஆறடி உயரத்தில் தொங்கிவிடுகிறது ! '

Monday, April 13, 2009

வாழ்க்கைக் கணக்கு.

வாழ்க்கைக் கணக்கு.
நல்லவற்றைக் கூட்டிக்கொள்
தீயவற்றைக் கழித்துக்கொள்
அறிவைப் பெருக்கிக்கொள்
நேரத்தை வகுத்துக்கொள்
இன்ப துன்பத்தைச் சமமாக்கிக்கொள்
செலவை குறைத்துக்கொள்
வரவை அதிகரித்துக்கொள் . தினத்தந்தி , 12 - 01 - 2009 .

Sunday, April 12, 2009

மாதங்கள், கொழுப்பு

தமிழ் மாதங்கள் , தனித் தமிழில் ...
தை , மாசி , பங்குனி என தற்போது வழ்க்கத்தில் உள்ள 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் சமஸ்கிருதம் கலந்தவையாகும் . அவற்றின் தனித்தமிழ்ப் பெயர்களும் , அவற்றுக்குரிய ராசிகளும் :
...........................................................................................................................................................................................................
மாதம் தனித் தமிழ்ப் பெயர் ராசி
............................................................................................................................................................................................................
தை கறவம் மகரம்
மாசி கும்பம் கும்பம்
பங்குனி மீனம் மீனம்
சித்திரை மேழம் மேஷம்
வைகாசி விடை ரிஷபம்
ஆனி ஆடவை மிதுனம்
ஆடி கடகம் கடகம்
ஆவணி மடங்கல் சிம்மம்
புரட்டாசி கன்னி கன்னி
ஐப்பசி துலை துலாம்
கார்த்திகை நளி விருச்சிகம்
மார்கழி சிலை தனுசு .
தினத்தந்தி , 14 - 01 - 2009 .
கொழுப்பு குறையணுமா?
இசை கேட்டால் கொழுப்பு குறையும் என்று தெரியவந்துள்ளது .
இதுகுறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையில் கூறப்பட்டதாவது : உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் , இதய பாதுகாப்புக்கும் இசைகெட்பது நல்ல பலன் தரும் . இதய நோயாளிகள் பிடித்தமான இசையை தினமும் அரைமணி நேரம் கேட்டால் அவர்களுடைய மனம் ரிலாக்ஸ் ஆகிறது . மேலும் உடல் ரீதியான ஆரோக்கியமும் மேம்படுகிறது . இசையை ரசிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன .
இசையை ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுகிறது . இது ரத்தம் உறைவதை தடுக்கிறது .மேலும் , கொழுப்பு சேர்வதையும் கரைக்கிறது . இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது . தி.ம . 19 - 01 - 2009 .

Saturday, April 11, 2009

மூலிகை உணவுகள் .

நோய்களை தீர்க்கும் மூலிகை உணவுகள் .
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு , நம் நாட்டின் பழமை வாய்ந்த , எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் . அவ்வாறு நம்மைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கு சாப்பிட வேண்டிய மூலிகை உணவுகள் பிரபல மூலிகை மருத்துவரான தேவூர் ஜி . மணிவாசகம் கூறியுள்ளதாவது :
..................................................................................................................................................................................................................................................................................................................................................................
தாக்கும் நோய்கள் சாப்பிட வேண்டிய மூலிகை உணவுகள்
.............................................................................................................................................................................................................................................................................................................................................................
1 . சர்க்கரை நோய் .....................................................வெந்தய ஓமப்பொடி
2 . அதிக ரத்தக் கொதிப்பு மருதம் பட்டை சுவை நீர்
3 . குறைந்தரத்தக் கொதிப்பு இஞ்சி செம்பருத்தை சுவை நீர்
4 . சுவாசகாசம் ( ஆஸ்துமா ) நாய்க் கடுகு துவையல்
5 . மூட்டுவலிகள் / பித்தம் முடக்கற்றான் வெந்தய தோசை
6 . பிலால் மோகம் ( சோரியாசிஸ் ) வெட்பாலை தைலம்
7 . வெண்தழும்பு வெட்டை கரிசாலை துவரை கூட்டு
8 . கால் ஆணி / மரு அம்மன் பச்சரிசி கீரை
9 . பக்க / முக வாதம் நரம்பு தளர்ச்சி தூதுவளை துவயல்
10. ரத்தசோகை , மலடு சீமை அத்திப்பழம்
11. புற்று நோய்கள் மலை மரிக்கொழுந்து கசாயம்
12. ஞாபக மறதி / மது மறப்பு வல்லாரை துவையல்
13. கற்கள் / மாரடைப்பு ஓம கசாயம்
14. குடல் புழுக்கள் / வலிப்பு அகத்திக்கீரை துவட்டல்
15. மூலம் / பவுத்திரம் குப்பைமேனி கீரை துவட்டல்
16. கருப்பை கட்டிவலி ............................................. .. பப்பாளி பிஞ்சு வாழைப்பூ கூட்டு . தினத்தந்தி . 11 - 01 - 2009 .

Friday, April 10, 2009

கன்னிமாரா ஞானவிளக்கு .

கன்னிமாரா நூலகம் !
05-12-1896 .
இந்திய நூலகங்களில் தனிச்சிறப்பு பெற்ற சென்னை கன்னிமாரா நூலகம் 1896-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது .
இங்கிலாந்தில் இந்திய நிர்வாக படிப்பான ஐ.சி.எஸ்.பயிற்சி தரும் ஹேய்ல்பரி கல்லூரியில் ஏராளமான புத்தகங்கள் தேங்கி கிடந்தன . அவற்றை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது . அதன்படி அனுப்பப்பட்ட புத்தகங்களை கொண்டு சென்னைக்கு உடனடி தேவையாக இருந்த பொது நூலகம் அமைக்கலாம் என்று சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா ,( பார்த்திபன் வளாகத்தில் ) முடிவுசெய்தார் .
கவர்னர் மாளிகை தலைமை இஞ்சினியர் இர்வின் வடிவமைப்பில் புதிய கட்டிடம் எழுந்தது .கட்டுமான பணிகளுக்கு பொறுப்பாளராக கேப்டன் மிச்செல் என்பவர் நியமிக்கப்பட்டார் . நூலகத்தின் முன்னோடி என்று அவரையே கூறுகின்றனர் .
1896-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் எலிபாங்க் ஹேவலாக் நூலகத்தை திறந்து வைத்தார் .நூலகம் தோன்ற காரணமாக இருந்த கன்னிமாரா பெயரே நூலகத்துக்கும் சூட்டுவதாக ஹேவலாக் அறிவித்தார் .
இந்தியாவில் உள்ள 4 தேசிய சேமிப்பு நூலகங்களில் கன்னிமாராவும் ஒன்று .ஐநா சபையும் கன்னிமாரா நூலகத்தை தனது சேமிப்பு மையமாக பயன்படுத்துகிறது .
--தினமலர் . ( 05-12-2008 ) .
ஞானவிளக்கு .
அரவிந்தர் , ( 15-08-1872 -- 05 -12-1950 ).
புதுச்சேரியிலிருந்து ஞான ஒளி வீசி வந்த தீபம் .
1927-ம் ஆண்டு முதல்தான் ஸ்ரீஅரவிந்தர் யோகியானார் .அந்த நாள் முதல் அதே ஆசிரமக் கட்டடத்தில் வசித்துவந்தார் . இவருடைய திவ்ய ஞான ஒளியோ உலகெங்கும் பரவி வந்திருக்கிறது .
இந்த ஞான யோகிக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 -ம் தேதியோடு 136 - வது ஜன்ம தினம் பூர்த்தியாகிறது .ஆனால் , இவர் தந்த ஞானத்திற்கு வயதும் மூப்பும் உண்டா ?
அரவிந்தர் , 'வந்தே மாதரம் ' என்ற பத்திரிகையின் ஆசிரியப் பிரதமராக வீற்றிருந்து , சொற்களுக்கு வெடிகுண்டுகளின் வேகத்தையும் சக்தியையும் ஊட்டினார் .
இவர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு விஷயமாகத்தான் முதன் முதல் கைதியானார் . சிறையில் ஒரு தனி அறையிலே இவரை அடைத்து வைத்தார்கள் . அந்த சந்தர்ப்பத்தை கீதை , உபநிஷதம் , வேதம் என்ற இந்திய ஞானப் பொக்கிஷத்தை மதிப்பிடப் பயன்படுத்திக்கொண்டார் . அதன் பயனாக , தேசபக்த ஞானியாக வளர்ந்தோங்கி உலகத்திற்கே அருள் நிழல் வழங்க முன் வந்தார் .
இவ்விதமாக , இந்த உலகின் இருள் நீங்கி வந்துதித்த அரவிந்த ஞான தீபம் அணைந்து போக முடியுமா ? சூட்சுமமாக இன்னும் பிரகாசிக்கும் , மேன்மேலும் பிரகாசிக்கும் என்பது திண்ணம் .
--ஆனந்தவிகடன் . ( 10-12-2008 ) .

Thursday, April 9, 2009

துணிச்சல் - தைரியம் !

" ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் துணிச்சல் , தைரியம் அதிகம் என்று சொல்கிறார்கள் , அது நூற்றுக்கு நூறு உண்மை . காரணம் , ' பதின் வயதுகளில் இருந்தே அவர்கள் ரத்தத்தை ( மென்சஸ் ) பார்த்தே வளர்வதால் ! ' என்கிறது ஓர் உளவியல் ஆய்வு ! ".
ரசனைக்குறிய வாசகம் ஒன்று !
" ஒரு சுவர் வாசகம் . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டு இருந்தது . ' வேலை கொடுங்கடா , எங்களுக்கு வேலை கொடுங்கடா , இல்லையென்றால் ஆள விடுங்கடா , நாட்டை ஆளவிடுங்கடா...! "
--நானே கேள்வி...நானே பதில். ஆனந்தவிகடன் .30-07-2008 .
பெட்ரோல் !
ஓரு லிட்டர் பெட்ரோலை வண்டியில் நிரப்பிக்கொண்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினால் பங்க் ஊழியர் என்ன சொல்வார் ?
பொறுமைசாலி என்றால் ' நூறு ரூபாய் நோட்டுன்னு தப்பா நினைச்சுட்டீங்களா ? ' என்றபடி நோட்டைத் திருப்பிக் கொடுப்பார் . இல்லையென்றால் , ' என்ன சார் கிண்டல் பண்றீங்களா ? ' என்று கடுகடுக்கலாம் .
ஆனால் இரண்டுமே இல்லாமல் அமைதியாக அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு ' இந்தாங்க பாக்கி ' என்று எட்டு ரூபாயை உங்களிடம் நீட்டினால் ?
ஆம் , வெனிசுவேலா நாட்டில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2-12 ரூபாய்தான் . ஒரு சாக்லெட்டைவிட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கம்மி !
ஏன் கொடுக்க மாட்டார்கள் ? அந்த நாடு நிலத்தால் ஆனதா அல்லது பெட்ரோலால் ஆனதா என்று சந்தேகம் வருமளவுக்கு வெனிசுவேலாவின் நிலத்தடியில் நிரம்பிக்கிடக்கிறது பெட்ரோல் .
--ஜி.எஸ்.எஸ். பெட்ரோலின் கதை. ஆனந்தவிகடன் . 30-07-2008 .
தவளை !
தவளை தேவை இல்லாமல் சத்தம் போடுவது பற்றி நாம் அவஸ்த்தைப்படுகிறோம் அது பெண் தவளையைப் புணர்வதற்காகக் கூப்பிடுகிறது .
--ஹாய் மதன் . 30-07-2008 .

Wednesday, April 8, 2009

அதிசயம்.

புதிய அதிசயம்.
ஒரு புலவர் துரைரங்கன் என்ற மன்னனிடம் சென்றார் . துரைரங்கன் என்பவர் குறுனில மன்னர் . சிறந்த ரசிகர் . அறிஞர் .ஜோதிடக் கலையிலும் வல்லவர் . புலவர் , புரவலனைப் பார்த்து , " மன்னவரே ! ஒரு புதுமை சொல்லுகிறேன் கேள் . ஒரு பெண்ணுக்கு நான்கு புருவம் , ஐந்து கம்மல் , ஆறு தனம் , ஏழு கண் ," என்று ஒரு பாடலைப் பகர்ந்தார் .
" துங்கவரை மார்ப ! துரைரங்க பூபதியே !
இங்கோர் புதுமை இயம்பக் கேள் ! பங்கையக்கை
ஆயிழைக்கு நான்கு நுதல் , ஐந்து குழை , ஆறுமுலை
மாயவிழி ஏழா மதி ."
மன்னவன் , " பேஷ் !" என்று மெச்சி ஆயிரம் பொன் தந்தார் .
அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ' என்ன ! ஒரு பெண்ணுக்கு நான்கு புருவமா ? ஐந்து கம்மலா ? ஆறு முலையா ? ஏழு கண்ணா ?" என்று எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து விளங்காது விழித்தார்கள் .
புலவர் விளக்கினார் . ராசிகள் 12 . மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் . இந்த அடிப்படையில் --
ஆயிழைக்கு நான்கு நுதல் -- ஆயிழை கன்னி . பன்னிரு ராசிகளில் கன்னி என்பது ஒரு ராசி . கன்யா ராசிக்கு நாலாவது ராசி தனுசு , நுதல் -- அதாவது அந்தப் பெண்ணின் புருவம் வில்லைப் போன்றுள்ளது .
ஐந்து குழை -- கன்யா ராசியில் இருந்து ஐந்தாவது ராசி மகரம் . அவளுக்கு மகரக் குழை .
ஆறு முலை -- கன்னியா ராசியிலிருந்து ஆறாவது ராசி கும்பம் . கும்பம் போன்ற தனம் .
ஏழாவது ராசி -- மீனம் . மீன் போன்ற கண் .
--திருமுருக கிருபானந்தவாரியார் . வாரியார் விருந்து . குமுதம் . இலவச இணைப்பு , 07-09-1995

Tuesday, April 7, 2009

செல்வம் .

'செல்வம் ' என்கிற சொல் , ' செல்வோம் ' என்ற சொல்லினுடைய திரிபு என்று சிலர் வேடிக்கையாகச் சொல்வதுண்டு .அதாவது , யாரிடமும் நிலைத்து நிற்கமாட்டோம் , சென்று கொண்டே இருப்போம் என்கிற அர்த்தத்தில்தான் செல்வோம் என்று அது அழைக்கப்பட்டுப் பிறகு மறுவியதாகச் சொல்வார்கள் .
உழைக்கிறவர்களிடம் செல்வோம் , முயற்சிக்கிறவர்களிடம் செல்வோம் என்றுதான் இதை அர்த்தப்படுத்திப் பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது .
கைக்கண்ட வழி !
எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ , அவ்வளவு சேர்க்க வேண்டும் . எவ்வளவு முறையாகச் செலவழிக்க முடியுமோ , அவ்வளவு செலவழிக்க வேண்டும் . எவ்வளவு மிச்சம் வைக்க முடியுமோ , அவ்வளவு மிச்சம் பிடித்துச் சேமிக்க வேண்டும் . எவ்வளவு கொடுக்க முடியுமோ , அவ்வளவு கொடுக்க வேண்டும் . பெறுவது , செலவிடுவது , சேமிப்பது , கொடுப்பது என்ற நான்கு செயல்களும் பணம் சேர்த்தவர்கள் கைக்கண்ட வழிகள் . இந்த நான்கையும் கைக்கொண்டால் பணம் நிறையக் குவியும் .
--அமரர் எஸ். ஏ. பி. நினைவாக... குமுதம் . இலவச இணைப்பு . ( 27-04-1995 )

Monday, April 6, 2009

ராமானுஜம் .நேதாஜி !

கணிதமேதை ராமானுஜம் ( 22 - 12 - 1887 --- 26 - 04 - 1920 ) .
பிரிட்டிஷ் கணிதமேதை ஹார்டி , ராமானுஜத்தின் கணிதத் திறமையைச் சோதிக்க விரும்பி , " நாளை இந்த காரை ( பதிவு எண் 1729 ) கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைப்பேன் . காரின் எண்ணை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் . மறந்துவிடாதீர்கள் " என்றார் .
உடனே ராமானுஜம் , " கவலைப்படாதீர்கள் , 13 + 123 இல்லையெனில் 10 3 + 93 என்று ஞாபகம் வைத்துக்கொள்வேன் " என்றார் நிதானமாய் .
அசந்துபோனார் ஹார்டி !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .
இந்திய சரித்திரம் இதுவரை காணாத அந்த சாகசங்களின் பேரரசன் பிறந்தது அறிவியலில் சிறந்த வங்காளத்தில் .
கட்டாக் நகரம், தற்போது ஒரிஸ்ஸாவில் இருக்கும் இந்த நகரில் கவனிக்கத்தக்க குடும்பம் ஜானகிநாத், அரசு வழக்கறிஞர். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு பிறந்த16 குழந்தைகளில் 6 -வது குழந்தையாக, 1897 ஜனவரி 23 -ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார் .
' பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது '.

Sunday, April 5, 2009

எதற்காக ?

நான்கு பிள்ளைகள் எதற்காக ?
தனக்குப் பின் நாட்டை ஆளவும் , தான் நல்ல கதி அடைய உதவவும் , தசரதன் கேட்டது ஒரு பிள்ளைதான் . தேவர்கள் கேட்டது ராவணனை வதம் செய்ய ஒரு ராமன் தான் . அப்படியிருக்க , பகவான் ஏன் , தம் அம்சங்களுடன் , நான்கு பிள்ளைகளாகத் தோன்றினார் .
தர்மம் நான்கு வகைப்படும் . அந்த நான்கு வகை தர்மங்களையும் மக்களுக்கு அனுஷ்டித்துக் காட்டத்தான் அந்த நான்கு சகோதரர்கள் தோன்றினார்களேயன்றி , ராவணனை வதம் செய்ய அல்ல .
அந்த நான்கு வகை தர்மங்கள் யாவை ?
முதலாக வருவது சாமானிய தர்மம் . அதாவது , பிள்ளைகள் பெற்றோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் , சீடன் குருவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் , மனைவி கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற சாமானிய தர்மங்களைச் சொல்லுவது . இதைத் தான் ராமன் அனுஷ்டித்துக் காட்டினான் .
சாமானிய தர்மங்களை முழுமையாகச் செய்துகொண்டு வந்தால் , கடைசியில் ஒரு நிலைவரும் . அந்த நிலையில் , பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்கிற நினைப்பு ஏற்படும் . அத்தகைய தர்மத்திற்கு சேஷதர்மம் என்று பெயர் . அதைத்தான் அனுஷ்டித்துக் காட்டினான் லட்சுமணன் .
மூன்றாவது தர்மத்திற்கு விசேஷ தர்மம் என்று பெயர் . அதாவது தூரத்தில் இருந்துகொண்டே , எப்பொழுதும் பகவான் ஞாபகமாகவே இருப்பது . இது முன் சொன்ன சேஷ தர்மத்தைவிட கடினம் . அதைச் செய்து காட்டினான் பரதன் .
நான்காவது தர்மத்திற்கு விசேஷ தர தர்மம் என்று பெயர் . இதைக் கடைபிடித்தான் சத்ருக்கனன் . பகவானைவிட அவனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதுதான் இந்த தர்மம் . அதனால்தான் சத்ருக்கனன் , பாகவத உத்தமனாகிய பரதனை விடாமல் பின்பற்றி , அவனுக்குத் தொண்டுகள் செய்தான் .
ஆக , பகவான் நான்கு அவதாரர்களாகத் தொன்றியது இந்த நான்கு தர்மங்களையும் அனுஷ்டித்துக் காட்டத்தான் .
-- சுந்தர்குமார் .சுப்ரமண்ய நகர் , ஸ்ரீ சங்கர ஜயந்தி மகோத்சவத்தில் . மே 20 , 1990 .

Saturday, April 4, 2009

கோயில்

பிறவா யாக்கை பெரியோன் கோயில்
பிற மதத்தினர் , இந்துக்களைப் பார்த்து " உங்கள் மதத்தில் இத்தனை தெய்வங்களா ? எங்கள் மதத்தில் ஒரே ஒரு தெய்வம்தான் " என்று சொல்லும்போது , நம் மதத்தின் கோட்பாடுகளை நன்கு அறியாத பலர் , இது குறித்து வெட்கப்படுகிறார்கள் . " நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் ? " என்று வேதனைப்படுகிறார்கள் .
ஆதியிலும் சரி , இன்றும் சரி , பிரம்மம்தான் இருந்தது , இருக்கிறது . இந்த பிரம்மம் உருவமெடுக்கத் தொடங்கிய நிலையில் சிவம் என அழைக்கப்பட்டது .
அது அருவமாக இருந்தது . அதாவது அதற்கு உருவம் என்று எதுவும் கிடையாது . அது பிருதிவியில் புகுந்ததும் , அதற்குப் படைக்கும் தெய்வமான பிரம்மா என்று பெயர் வந்தது . தண்ணீரில் புகுந்ததும் காக்கும் கடவுளான விஷ்ணு என்று பெயர் பெற்றது . அக்னியில் புகுந்ததும் அழிக்கும் கடவுளான ருத்திரன் என்று பெயர் பெற்றது . வாயுவில் புகுந்து மகேஸ்வரனாக மாறிற்று . ஆகாசத்தில் புகுந்து அனுக்கிரகம் செய்யும் சதாசிவனாக மாறிற்று .
இருந்தும் அருவமான சிவத்தை வணங்கியவர்கள் அதற்கு உருவம் இருந்தால் தியானம் பண்ண எளிதாக இருக்குமே என்று நினைத்தார்கள் . அதற்காக சிவம் சிவலிங்கமாக மாறிற்று . ஆனால் பகவானுக்கும் நம்மைப்போல கண் , காது , கை இருந்தால்தானே அவர் நம்மைப் பார்த்து , நம் குறைகளைக் கேட்டு , கைகளினால் வாரிக் கொடுப்பார் என்று நினைத்தார்கள் . அதனால் சிவம் பரமசிவனாகவும் , பராசக்தியாகவும் காட்சியளித்தார் .
--பெரம்பூர் ஸ்ரீ காஞ்சி காமகோடி சேவா சமிதியில் , சிதம்பரம் சுவாமிநாதன் . ஜூன் 21 . 1990 .

பெண்

பெண் - வேலை !
ஒரு பெண் ஒரு பெரிய கம்பெனியில் வேலை தேடினாள் .
"ஆரம்பத்திலேயே உன்னைப் பெரிய கம்பெனிகளில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் , சிறிய கம்பெனிகளில் முயற்சி செய் .அனுபவம் பெற்ற பிறகு பெரிய கம்பெனிகளைப் பார் ," என்று பல பேர் அவளுக்குப் புத்தி சொன்னார்கள் .
அவள் கேட்கவில்லை . பெரிய கம்பெனிகளுக்குத்தான் விண்ணப்பித்திருந்தாள் . பேட்டியின்போது , " முன் அனுபவமே உனக்கு இல்லையே ?" என்றார்கள் .
"அதற்காகத்தான் உங்களிடம் வந்தேன் .அனுபவம் பெற உங்கள் கம்பெனியே சிறந்தது . நீங்கள் தரும் உயர்ந்த பயிற்சி வேறெங்கும் கிடைக்காது . அங்கெல்லாம் போய் என் திறமையைப் பாழடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை . உங்கள் கம்பெனியில் சம்பளம் இல்லாமல் கூடப் பயிற்சி பெற நான் தயார் . உங்கள் பயிற்சி வேறெங்கும் கிடைக்காது...." என்று கனிவாகவும் , பணிவாகவும் சொன்னாள் அவள் .
அவளுக்கு அந்தப் பெரிய கம்பெனியிலேயே வேலை கிடைத்துவிட்டது --சம்பளத்துடன்
தடைகள்- படைகள் !
வாழ்க்கையில் தடைகளை அடைத்து முன்னேறுங்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள் . நான் உங்களுக்குச் சொல்கிறேன் , தடைகளை உடைக்க வேண்டா . படைகளாக்கிக் கொள்ளுங்கள் . தடைகளே வெற்றிக்கு விடைகள் .பழையதை உடைக்க வேண்டா . புதியதைப் படைக்க முயலுங்கள் .
--அமரர் எஸ். ஏ. பி.நினைவாக...குமுதம். இலவச இணைப்பு . ( 27-04-1995 )..

Thursday, April 2, 2009

ஏழும் , எழுபதும்

இருவரும் சிவனடியார்கள் , இருவரும் தங்கள் தீந்தமிழ்ப் பாக்களால் பரமசிவனை மகிழ்விப்பார்கள் . ஒருவருக்கு வயது ஏழு , இன்னொருவருக்கு வயது எழுபது . இருவரும் சந்தித்ததில்லை . ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டுள்ளனர் . அந்த எழுபது வயதுக் கிழவர் ஏழு வயதுச் சிறுவனைக் காணத் துடிக்கிறார் . அந்த எழுபது வயதுக் கிழவரைக் காணத் துடிக்கிறான் , ஏழு வயது சிறுவனும் .
ஆம் , சம்பந்தரும் , அப்பரும்தான் இந்தச் சிவனடியார்கள் . ஒருநாள் இவர்கள் சந்திக்க , இருவரும் சேர்ந்து பல தலங்களுக்குச் செல்லுகிறார்கள் .ஒருநாள் வேதாரண்யம் வந்து சேர்கிறார்கள் . அங்கு கோயில் பூடிக் கிடக்கிறது !
உடனே , சம்பந்தர் , அப்பரைப் பார்த்து , " தாங்கள் சில பதிகங்கள் பாடுங்கள் , கதவு திறக்கும் " என்று சொல்லுகிறார் .
உடனே அப்பர் பதினாறு பதிகங்கள் பாட , கதவு திறக்கிறது . இருவரும் உள்ளே சென்று , சுவாமி தரிசனம் செய்கிறார்கள் . அப்பொழுது ஒரு அசரீரி கேட்கிறது . " மீண்டும் பதிகம் பாடி, கதவை மூடுக " என்று சொல்லுகிறது .
அப்பொழுது அப்பர் , சம்பந்தரைப் பார்த்து , " தாங்கள் பதிகம் பாடுங்கள் , கதவு மூடிக் கொள்ளும் " என்கிறார் .
சம்பந்தர் ஒரு பதிகம் பாடி முடித்ததுதான் தாமதம் , கதவு மூடிக்கொள்கிறது .
உடனே அப்பர் , சம்பந்தரைப் பார்த்து , " தாங்கள்தான் என்னை விட அதிக பக்திமான் . தங்கள் ஒரு பதிகத்திற்கே கதவு மூடிக்கொண்டது . நான் கதவைத் திறக்க பதினாறு பதிகங்கள் பாடவேண்டி வந்தது " என்கிறார் .
அதற்கு சம்பந்தர் " இல்லை , தாங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தர் . ஆண்டவன் தங்கள் பதிகங்களைத்தான் அதிகம் கேட்க விரும்பினான் . அதனால்தான் தங்களைப் பதினாறு பதிகங்கள் பாடவைத்தான் " என்று சொல்லுகிறார் .
அப்பர் , சம்பந்தர் போன்ற மகான்களே , " நீங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தன் " நீங்கள்தான் என்னைவிடச் சிறந்த பக்தன் " என்று வாதாடும்போது , நாமெல்லாம் எந்த மூலை .
-- ஹரிதாஸ் கிரி . காஞ்சியில் , பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , ஸ்ரீ ஞாநேச்வரி என்னும் நூலை வெளியிட்டபோது . ஜூன் 27 . 1990 .

மார்கழி

மார்கழி மாதம் !
நட்சத்திரங்கள் 27 . இவற்றுள் ' திரு ' அடைமொழி கொண்டவை இரண்டே .
1 . திருவாதிரை . 2 . திருவோணம் .
திருவாதிரை சிவனுக்கு உரியது . திருவோணம் திருமாலுக்கு உரியது .
சிவனுக்கு அர்சிக்கப்படுவது வில்வம் . திருமாலுக்கு பூசிக்கப்படுவது துளசி .
சிவபெருமான் கையில் தீச்சட்டியேந்தி வெப்பமாக உள்ளவராதலால் தண்மை மிகு வில்வம் அவருக்கு அர்சிக்கப்படுகிறது . திருமால் பாற்கடலில் துயில்பவர் தண்மை மிகுந்தவர் , எனவே துளசியால் போற்றப்படுகிறார் .
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் தமிழருக்கே சிறப்பான ' ழ ' கரம் பெற்று விளங்கும் மாதம் மார்கழி ஒன்றே ! இம்மார்கழியில் சைவமும் , வைணவமும் ஒன்றாய் அவரவர்கள் இறையைப்போற்றி வழிபடுகிறார்கள்

' என்னிடம் சொல்லப்படுவதை ஒரு மணி நேரம் மறக்கமாட்டேன் . நான் பார்ப்பதை ஒரு நாள் மறக்கமாட்டேன் . ஒரு முறை நான் செய்தால் , ஆயுளுக்கும் மறக்கமாட்டேன் !' என்று சீனாவில் சொல்வார்கள் ..
யதார்த்தத்துக்கும் , கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுக்கு நமது ஆலோசனை .....
4 T ஃபார்முலாவைக் கடைபிடியுங்கள் :
T 1 : Touch ( ஸ்பரிசம் ) .
T 2 : Trust ( நம்பிக்கை ) .
T 3 : Talk ( பேச்சு ) .
T 4 : Time ( காலம் ) .
இனிமையான உறவுக்கு ஸ்பரிசம் முதல் தேவை . ஸ்பரிசம் ஆனந்தமாக அமைய அந்த உறவில் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை வேண்டும் . இருவரும் மனம் விட்டுப் பேசும்போதுதான் அந்த நம்பிக்கை ஏற்படும் .இப்படிப் பேசுவதற்கு கணவன் , மனைவி இருவரும் நேரம் ஒதுக்க வேண்டும் .
--- டாக்டர் டி. நாராயணரெட்டி . ஆனந்தவிகடன் . 17-12-2008 .

Wednesday, April 1, 2009

ஏப்ரல் 1.

ஏப்ரல் முதல் தேதி , உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது . அன்று யாரை ஏமாற்றி ' முட்டாள் ' ஆக்கினாலும் , அவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள் . முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோஜனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான் .
சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட்டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது .
ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர் , லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர் . இதில் முக்கிய அம்சம் , ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும் .
இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் ' ஏப்ரல் ஃபிஷ் ' ( மீன் ) என்றழைக்கிறார்கள் . அக்காலத்தில் ஏப்ரலுக்கு ஏப்ரல் ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வந்தது . அந்த வருடப் பிறப்பன்று பிறரை முட்டாள்களாக்கிக் குதூகலமாகக் கொண்டாடி வந்தனர் . ஏப்ரல் முட்டாள் விளையாட்டுக்களெல்லாம் அன்று காலை வேளையில் மட்டும்தான் செய்யப்படவேண்டும் . மாலையில் கிண்டல் செய்தால் , கிண்டல் செய்பவரேதான் முட்டாள் !
இதைக் குறிப்பிடும் ஒரு கவிதை ...
' மார்ச் மறைந்தது ; ஏப்ரல் வந்தது . நீதான் முட்டாள் ; நானில்லை !' ( March has gone and April comes ; you are a fool and I'm none .)
-- ' நஜன் ' ஆனந்தவிகடன் .01 - 04 - 2009 .