வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்த ஹிட்லர் திடீரென்று " கோய பெல்ஸ் ....என் உயிலை டிக்டேட் பண்ணப் போகிறேன்....எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார் . கலங்கியவாறு நின்ற கோயபெல்ஸ் அதற்குத் தயாரானார். ஹிட்லர் சொல்ல ஆரம்பித்தார்:
" இத்தனை காலப் போராட்டத்தின் இடையில் திருமணம் என்கிற பொறுப்பையும் என்னால் ஏற்க முடியாமல் போனது. எனக்காகவே வாழ்ந்து , கடைசிவரை என்னைப் பிரியாமல் துணைநிற்கும் ஈவாவை -- இந்த உலகத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்வதற்கு முன்பு -- திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன். ஈவா அவளாகவே என்னிடம் வந்தாள் . என் சுக துக்கங்களில் பங்கு கொண்டாள். என்மீது அவள் வைத்திருந்த காத்ல் ஆச்சரியமானது. என்னோடு தானும் இறக்கவேண்டும் என்பது அவள் விருப்பம். மக்களுக்காகவே என்னை அர்பணித்துக்கொண்ட நான் அவளுக்கு என்று எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. மரணத்தையாவது நாங்கள் கைகோத்து ஒன்றாக சந்திக்கிறோம் ." என்று முடித்தார்.
பெருமிதத்துடனும், வேதனையுடனும், விம்ம ஆரம்பித்தார் ஈவா ப்ரான்.!.
--மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் . என்ற நூலில்.
No comments:
Post a Comment