Tuesday, March 31, 2009

"இன்றுபோய் , நாளைவா !"

முதல் நாள் போரில் , ராமனை எதிர்த்த ராவணன் தேர் இழந்து , வாள் இழந்து , வில் இழந்து கவசம் இழந்து , கிரீடம் இழந்து தன்னந்தனியனாக நிற்கிறான் . ராமன் இஷ்டப்பட்டிருந்தால் , அப்பொழுதே அவனைக் கொன்று போரை முடித்திருக்கலாம் . அவனுக்கு நோக்கம் முக்கியம் . அந்த நோக்கத்தை எந்த வழியில் நிறைவேற்றுகிறான் என்பதும் முக்கியம் . யுத்தமானாலும் , அதையும் தர்ம வழியில் நடத்த வேண்டும் என்பது அவன் கொள்கை . அதனால் நிராயுதபாணியாக இருந்த ராவணனை அவன் கொல்ல விரும்பவில்லை . அதற்குப் பதில் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் , கம்பரின் பாட்டில் , ' இன்று போய் , நாளை வா என்று மட்டும் இல்லை' இன்னொரு முக்கியமான சொல்லும் இருக்கிறது . அந்தச் சொல்லோடு சேர்த்துச் சொன்னால்தான் இந்த வாசகத்துக்குச் சரியான பொருள் கிடைக்கும் .
ராமன் " இன்று போய் நாளை வா " என்று மட்டும் சொல்லவில்லை , " போர்க்கு " என்ற சொல்லைச் சேர்த்து , " இன்று போய் போர்க்கு நாளை வா " என்கிறான் .
இதில் ராமன் ஒரு கருத்தைச் சூசகமாகக் கூறுகிறான் . " போர் புரிவதானால் நாளை வா . இல்லை , என்னைச் சரண் அடைவதென்றால் இன்றே அடை , போரை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் " என்கிறான் .
இது ராமனை ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு நிறுத்தாதா என்று சிலர் கேட்கலாம் . அது என்ன இக்கட்டான நிலை ! வாலி வதத்தின்போது , ஏன் ராமன் மறைந்து நின்றான் என்று லட்சுமணன் விளக்கம் கூறுகிறானே , அந்த இக்கட்டான நிலை .
லட்சுமணன் கூறுகிறான் , " நின் தம்பி முன்பு வந்து சரண் புக , உன்னைக் கொல்லுவேன் என்று ராமன் அவனுக்கு வாக்குக் கொடுத்தான் . ராமன் உன் எதிரில் வந்திருந்தால் நீயும் சரண் புகுந்திருப்பாய் . அப்பொழுது நின் தம்பிக்குக் கொடுத்த வாக்கு என்ன ஆவது " என்று .
அதே மாதிரி , இங்கே ராவணன் சரண் புகுந்தால் , ஏற்கனவே விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து கொடுத்த அரசை ராவணனுக்கு எப்படிக் கொடுப்பது ? ஆனால் இது பற்றி ராமன் கவலைப்படவில்லை . அப்படி ராவணன் சரண் அடைந்திருந்தால் , கோசலை நாட்டை அவனுக்குக் கொடுத்திருப்பான் என்று காட்ட , கம்பர் , " இன்று போய் நாளை வா " என்று சொன்னது யார் தெரியுமா ,
" கோசலை நாடுடை வள்ளல் " என்று அப்பாட்டை முடிக்கிறார் .
-- புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் . சைதாப்பேட்டை , ஸ்ரீ ராம ஆஞ்சநேய பக்த அமாஜ் . கம்பராமாயணச் சொற்பொழிவில் . ஏப் . 14 . 1990 .

Monday, March 30, 2009

பிரதமர்களும், அதிபரும் !

இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் ஒரு ஹோட்டலில் உணவு வேளையில் சந்தித்தனர். தற்செயலாக அங்கே வந்த இங்கிலாந்து பிரதமர் ஆச்சர்யமானார் .
" அட , என்ன இங்கே மாநாடு ?"
"தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது குண்டு போட்டுப் பதினான்கு மில்லியன் பாகிஸ்தானியர்களையும், கூடவே முட்டைகள் விற்பனை செய்யும் ஒருவனையும் கொல்லத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம் " என்றார் இந்தியப் பிரதமர்.
இங்கிலாந்து பிரதமரின் நெற்றி குழப்பத்தில் சுருங்கியது.
" முட்டை விற்பவனா , என்ன சொல்கிறீர்கள்? " என்றார்.
இந்தியப் பிரதமர் மலர்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் பக்கம் திரும்பிச் சொன்னார்...." நான் சொல்லலே....பாகிஸ்தானியர்களைப்
பற்றி யாரும் பொருட்படுத்த மாட்டாங்கன்னு !"
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 02-04-2008 ).
வெற்றியின் ரகசியம் !
ஒரு மாபெரும் வெற்றியாளரிடம் கேட்டார்கள், " உங்கள் இமாலய வெற்றியின் ரகசியம் என்ன ?" அவர் சொன்னார் , " நான் எடுக்கும் சரியான முடிவிகள் தான் என் வெற்றி ரகசியம் ." "ஓகோ ! அதுதான் ரகசியமா ?" அதுசரி, அதெப்படி நீங்கள் மட்டும் எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கிறீர்கள் ?" "அதற்கு, என்னுடைய சில அனுபவங்கள்தான் காரணம்" " அனுபவங்களா?" " அந்த அனுபவங்களை எப்படிப் பெற்றீர்கள் ?" " சில தவரான முடிவுகள் எடுத்ததன் மூலமாகத்தான் "
வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோற்காதவர்கள் இல்லை . தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்கள் .Fear Of Failure தான்
பெரிய பிரச்சனை. தவறாவிட்டால் வெற்றி. தவறினால் அது பாடம் . அவ்வளவுதான் .
--சோம. வள்ளியப்பன். குமுதம். ( 06-08-2008 ).

Sunday, March 29, 2009

மூன்று

!வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம் ; காதடித்து நின்று அசைந்தாடும் யானை ; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப்பாம்பு !
ஒரு மழைத் துளி மணிக்கு ஏழு மைல் வேகத்தில் தரையில் விழுகிறது !
இரண்டாம் உலகப் போரில் 57 நாடுகள் பங்கு பெற்றன !
தனது காதுகளைச் சுத்தம் செய்யுமளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு நீளம் !
ஜூலியஸ் சீசர் தன் வழுக்கைத் தலையை மறைக்க , இலைகளால் ஆன கிரீடத்தைப் பயன்படுத்தினார் !
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலில் தனது இடது காலைத்தான் பதித்தார் !
யானைக்கு 'அடி' சறுக்குமோ இல்லையோ , உலகத்திலேயே 'ஜம்ப்' பண்ண முடியாத ஒரே விலங்கினம் யானைதான் !
--ஆனந்தவிகடன் .{ 23-07-2008 .}
விசுவாசம் !
அயர்லாந்துக்கு ஒருவன் சுற்றுலா சென்றிருந்தான் . மிகவும் தாகமெடுத்தது ஒரு வீட்டில் அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டான் .
அந்த வீட்டுப் பெண்மணி அவன் நிலை பார்த்து , ஒரு கோப்பையில் சூடான சூப் கொடுத்தாள் .
வீட்டு நாய்க்குட்டி விருந்தாளியிடம் ஓடி வருவதும் அவன் கால்களுக்கு இடையில் புகுந்து செல்வதும் , செல்லமாகக் குரைத்து அவன் கவனத்தைக் கவர்வதுமாக இருந்தது .
"நாயைக்கூட மிக நட்புடன் இருக்கப் பழக்கியிருக்கிறீர்கள் " என்றான் , வந்தவன் பாராட்டும்விதமாக .
"அப்படியில்லை, நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பது அதனுடைய உணவுக் கோப்பை . அதனால் உங்களைவிட்டு நகர மாட்டேன் எங்கறது " என்றாள் . அந்தப் பெண்மணி .
-- சத்குரு ஜக்கி வசுதேவ் . ஆனந்தவிகடன். ( 22-10-2008 ) .

Saturday, March 28, 2009

அறிஞர்கள் !

1 ) தாமஸ் ஆல்வா எடிசன் .
2 ) கிறிஸ்டோபர் கொலம்பஸ் .
3 ) மார்ட்டின் லூதர் கிங் .
4 ) கலிலியோ கலீலி .
5 ) லியனார்டோ டாவின்சி .
6 ) ஐசக் நியூட்டன் .
7 ) ஃபெர்டினன்ட் மெகல்லன் .
8 ) லூயி பாஸ்டர் .
9 ) சார்லஸ் டார்வின் .
10) தாமஸ் ஜெஃபர்ஸன் .
" ஆயிரம் ஆண்டுகளில் மக்களுக்குப் பெருந்தொண்டு செய்த அறிஞர்களின் பட்டியலை ' லைஃப் ' பத்திரிகை வரிசைப்படுத்தியுள்ளது. { இந்த வரிசையில் ஐன்ஸ்டீனுக்கு 22 , மகாத்மா காந்திக்கு 23 -வது இடங்கள் ! }".
--நானே கேள்வி...நானே பதில் ! ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .
கோடீஸ்வரர் !
இப்போது நம் நாட்டு கோடீஸ்வரர்களில் எளிமையானவர் , இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பிதாமகர் நாராயணமூர்த்தி. இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் , பெங்களூரில் முன்பு வசித்த அதே சாதாரண வீட்டில்தான் இப்போதும் ஜாகை . வேலைக்காரர்கள் , சமையல்காரர்கள் வைத்துக் கொள்ளாமல் வீட்டு வேலைகளை மனைவி சுதாமூர்த்தியுடன் பகிர்ந்துகொள்கிறார் . ' கார்ப்பரேட் காந்தி ' என்பது இவரது செல்லப்பெயர் . ' தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்காகத்தான் பணம் சம்பாதிக்கிறாம் . ஆனால் , அந்தத் தேவைகள் பூர்த்தியான பிறகும் பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது !' என்பது அவரின் அனுபவ மொழி . கூடுதல் பணம் என்பது சக மனிதர்களுக்குச் சேவை செய்வதற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வாய்ப்பு !' என்கிறார் !"
--ஆனந்தவிகடன். ( 03-09-2008 ) .

Friday, March 27, 2009

காலனை உதைத்த கால் !

" வெறி கொண்ட காலனை உதைத்த கால் உனது கால் , அதனால் தூக்கி நின்றான் " .
காலனை உதைத்த கால் உமையவளுக்குச் சொந்தமான இடது கால் , அதனால் அதற்கு மதிப்புக் கொடுப்பது போல , நடராஜர் , காலைத் தூக்கி ஆடியபோது , அந்தக் காலைத் தூக்கி ஆடினார் என்று இதற்குப் பொருள் .
கருணையின் வடிவமே உமையவள் . அவளை வணங்கினால் நாம் எல்லா நலன்களும் பெறலாம் . அவள்தான் மதுரையில் மீனாட்சியாகப் பிறக்கிறாள் . மதுரையை ஆண்ட அவள் திக் விஜயம் கிளம்புகிறாள் . பூவுலகில் அவளை எதிர்த்து நிற்பார் யாருமில்லை . எல்லாரும் சரண் அடைந்து விடுகிறார்கள் .
உடனே , மீனாட்சி அஷ்டதிக் பாலகர்கள் மீது பாய்கிறாள் .அவர்களும் , சரணடைகிறார்கள் . கடைசியில் தென் திசைக் காவலனான யமனாவது தன்னை எதிர்த்து நிற்பானா என்று நினைக்கிறாள் .
அவனோ , அவள் காலில் விழுந்து , " தாயே ! எனக்கு உயிர் கொடுத்த உமையவளே ! உன்னை நான் எதிர்த்துப் போரிடலாமா ! அது நீதியாகுமா ! அப்படிப் போட்டாலும் உன்னை நான் வெல்ல முடியுமா ! " என்று கேட்கிறான் .
" நான் உனக்கு உயிர் கொடுத்தேனா ! எப்பொழுது ? " என்று கேட்கிறாள் மீனாட்சி .
" ஏனம்மா ! மார்க்கண்டேயரை மறந்து விட்டாயா ? அவருக்குக் கொடுக்கப்பட்ட பதினாறு வயது ஆயுள் முடிந்துவிட , அவர் உயிரை எடுக்க நானே வந்தேன் . அப்பொழுது , அவர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள , நான் அதையும் சேர்த்து என் பாசக் கயிற்றினால் இழுத்தேன் . அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன் என்னை உதைக்கப் போனார் . பிறர் உயிரை வாங்கும் என் உயிரையே அவர் வாங்கிவிடுவாரோ என்று நடுங்கினேன் . உன்னை மனதார வேண்டிக் கொண்டேன் . அதன் காரணமாக , அவர் என்னை உதைத்த கால் உனது கால் , ஆதலால் நான் பிழைத்தேன் " என்கிறான் யமன் .
இதைக் கேட்டு மீனாட்சி அவன் மீது கருணை கூர்கிறாள் . அந்த கருணைதான் அவளைச் சிவனைச் சந்திக்கச் செய்து , அவனோடு மணம் முடித்து வைக்கிறது .
--- புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் . வண்ணாரப்பேட்டை சிவாய நம சிந்தனை அரங்கத்தில் , அவர் நிகழ்த்திய " பார்வதி கல்யாண" த்தின் போது . பிப் . 1 . 1990 .

Thursday, March 26, 2009

லிங்கம்

தியான லிங்கம்...
"தியான லிங்கம் " 1999 , ஜூன் 24-ம் தேதி பூரணமான நிலையில் ( கோவையை அடுத்த வெள்லியங்கிரி மலையடிவாரத்தில் ) இந்த உலகுக்கு அர்பணிக்கப்பட்டது . வேறு எங்கும் தியான லிங்கம் இல்லை . ஆசையின் அடிப்படையிலும் அச்சத்தின் அடிப்படையிலும் எழுப்பப்பட்ட கோயில்கள் வேறு . தன் அகங்காரத்துக்குத் தீனி போடும்விதமாக , அடுத்த நாட்டு அரசன் கட்டிய கோயிலைவிடப் பெரிதாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் கோயில்கள்தான் இங்கு அதிகம் . ஆனால் அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்து , தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது இந்த தியான லிங்கம் .ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய விதையை நமக்குள் தூவுவதற்காக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது இந்த அற்புதம் . நாம் இதுவரை அனுபவத்தில் உணர்ந்துள்ள வாழ்க்கை , இரு வேறு நிலைகளுக்கிடையில் ஊசலாடுவது . இருள் - வெளிச்சம் , ஓசை - நிசப்தம் , விருப்பு - வெறுப்பு , இன்பம் - துன்பம் , ஆண் - பெண் என எல்லாவற்றுக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு .இரண்டு நிலைகள் இருந்தால்தான் படைப்பு என்ற ஒன்று நிகழவே முடியும் . இந்த இருமை நிலையைத்தான் நம் பாரம்ப்ரியத்தில் சிவன் - சக்தி என்று உருவகப்படுத்தினார்கள் . மனித உடலில் இடகலை , பிங்கலை என இரண்டு நாடிகள் வழியாக வாழ்க்கை நடந்துகொண்டு இருக்கிறது . இது ஒரு புறம் . மனித வாழ்வில் , ஏழு முக்கிய வளர்ச்சி நிலைகள் உள்ளன . இவை மனித உடலில் ஏழு தளங்களில் ஏழு சக்கரங்களாக சூட்சுமமாக அமைக்கப்பட்டுள்ளன . இந்த சக்கரங்கள் பற்றியும் , இவற்றில் ஒரு தூங்கும் பாம்பாக அபார சக்தி உறங்கிக்கொண்டு இருப்பது பற்றியும் அனுபவபூர்வமாக உணராதவரை , அடுத்தவர் வார்த்தைகளில் அது வேடிக்கைப் பேச்சாகிவிடும் தியான லிங்கத்தில் ,இந்த ஏழு சக்கரங்களும் உச்ச நிலையில் தூண்டப்பட்டு இருக்கின்றன என்பதே அதன் தனித்தன்மை . தியான லிங்கத்தின் எல்லைக்குள் வருபவர் எவராயினும் , சூட்சுமமாக அவருள் ஒரு விதை விதைக்கப்படுகிறது . அது அவரை மேல் நிலை நோக்கி உயர்த்திச் செல்வதற்குப் பேருதவி புரியும் .
ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 ) .
தியான லிங்கம்...
"தியான லிங்கம் " 1999 , ஜூன் 24-ம் தேதி பூரணமான நிலையில் ( கோவையை அடுத்த வெள்லியங்கிரி மலையடிவாரத்தில் ) இந்த உலகுக்கு அர்பணிக்கப்பட்டது . வேறு எங்கும் தியான லிங்கம் இல்லை . ஆசையின் அடிப்படையிலும் அச்சத்தின் அடிப்படையிலும் எழுப்பப்பட்ட கோயில்கள் வேறு . தன் அகங்காரத்துக்குத் தீனி போடும்விதமாக , அடுத்த நாட்டு அரசன் கட்டிய கோயிலைவிடப் பெரிதாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் கோயில்கள்தான் இங்கு அதிகம் . ஆனால் அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்து , தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது இந்த தியான லிங்கம் .ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய விதையை நமக்குள் தூவுவதற்காக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது இந்த அற்புதம் . நாம் இதுவரை அனுபவத்தில் உணர்ந்துள்ள வாழ்க்கை , இரு வேறு நிலைகளுக்கிடையில் ஊசலாடுவது . இருள் - வெளிச்சம் , ஓசை - நிசப்தம் , விருப்பு - வெறுப்பு , இன்பம் - துன்பம் , ஆண் - பெண் என எல்லாவற்றுக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு .இரண்டு நிலைகள் இருந்தால்தான் படைப்பு என்ற ஒன்று நிகழவே முடியும் . இந்த இருமை நிலையைத்தான் நம் பாரம்ப்ரியத்தில் சிவன் - சக்தி என்று உருவகப்படுத்தினார்கள் . மனித உடலில் இடகலை , பிங்கலை என இரண்டு நாடிகள் வழியாக வாழ்க்கை நடந்துகொண்டு இருக்கிறது . இது ஒரு புறம் . மனித வாழ்வில் , ஏழு முக்கிய வளர்ச்சி நிலைகள் உள்ளன . இவை மனித உடலில் ஏழு தளங்களில் ஏழு சக்கரங்களாக சூட்சுமமாக அமைக்கப்பட்டுள்ளன . இந்த சக்கரங்கள் பற்றியும் , இவற்றில் ஒரு தூங்கும் பாம்பாக அபார சக்தி உறங்கிக்கொண்டு இருப்பது பற்றியும் அனுபவபூர்வமாக உணராதவரை , அடுத்தவர் வார்த்தைகளில் அது வேடிக்கைப் பேச்சாகிவிடும் தியான லிங்கத்தில் ,இந்த ஏழு சக்கரங்களும் உச்ச நிலையில் தூண்டப்பட்டு இருக்கின்றன என்பதே அதன் தனித்தன்மை . தியான லிங்கத்தின் எல்லைக்குள் வருபவர் எவராயினும் , சூட்சுமமாக அவருள் ஒரு விதை விதைக்கப்படுகிறது . அது அவரை மேல் நிலை நோக்கி உயர்த்திச் செல்வதற்குப் பேருதவி புரியும் .
ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 ) .

Wednesday, March 25, 2009

ஐந்து கடமைகள் !ஒட்டகக் கறி !

கலிமா எனப்படும் மூல மந்திரம் , தொழுகை , நோன்பு , ஜகாத் , ஹஜ் ஆகியவை முஸ்லிம்களின் ஐந்து கடமைகள் .
' வணக்கத்திற்குரியவன் அல்லா ( ஹ் ) . முகம்மது , அல்லா (ஹ் ) வின் இறுதித் தூதர் ' என்பதை மனத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிவது முதல் கடமையான கலிமா ஆகும் .
தினமும் ஐந்து நேரம் தொழுவது இரண்டாவது கடமை .
ரமலான் மாதம் முழுவதும் உபவாசம் இருப்பது மூன்றாவது கடமையான நோன்பு ஆகும் .
செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை ( இரண்டரை சத விகிதம் ) ஆண்டுதோறும் ஏழைகளுக்குத் திருக்குர் ஆனில் விதிக்கப்பட்டுள்ளபடி விநியோகிப்பது ' ஜகாத் ' எனும் நான்காவது கடமை .
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்காவுக்குச் சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவது ஐந்தாவது கடமை .
--நீதிபதி மு . மு . இஸ்மாயீல். ஆனந்தவிகடன் . 12-12-2008 .
ஒட்டகக் கறி !
" ஒட்டகக் கறி சாப்பிடுங்கள் . நான் இன்று சாப்பிட்டேன் , மிகவும் சுவை . ஆம் , ஆஸ்திரேலியாவைக் காப்பாற்ற அதுதான் ஒரேவழி ! " என்று டி . வி - யில் தோன்றிச் சொல்கிறார் அந்த ஆஸ்திரேலிய அதிகாரி . அந்நாட்டில் எகிடுதகிடாக எகிறி விட்ட ஒட்டகங்கள் அதிகளவு மீத்தேன் வாயுவை வெளியிடுவதோடு , ஏகப்பட்ட தண்ணீரைக் காலிசெய்து ஈகோ பேலன்ஸைக் கெடுக்கின்றனவாம் . அதனால்தான் ஒட்டகக் கறி திட்டம் !
--- ஆனந்தவிகடன் . 24 - 12 - 2008 .

Tuesday, March 24, 2009

தனிமை .

கர்ப்பத்தில் பத்துமாத தனிமை
பூப்பெய்தியபோது பதினாறு நாள் தனிமை
வாலிபம் வரை கனவுகளோடு தனிமை
தூங்கும்போதோ உறக்கத்தில் தனிமை
விதவை என்ன தவறு செய்தாள் ?
வாழ்நாள் முழுவதும் தனிமை !
மரணம் !
மெக்ஸிகோவில் உள்ள ஜீனி சமுதாய மக்கள் , மரணத்தின்போது பிணத்தை வைத்துக் கொண்டு நான்கு நாட்கள் கண்டிப்பாக அழவேண்டும் என்ற கட்டுப்பாடு இன்றும் உள்ளது . இதேபோல் , ஜப்பான் நாட்டிலும் அழுவதற்கென்று தனி சீசன் உள்ளது !
--- தினத்தந்தி .குடும்பமலர் . 14 - 12 - 2008 .
தோல்வி வெற்றியின் படிகளே !
--- 1831 -ம் ஆண்டில் வியாபாரத்தில் தோல்வி .
--- 1832 ------ சட்ட மன்ற தேர்தலில் தோல்வி .
--- 1833 ------மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி .
--- 1835 ------ காதலியின் மறைவு .
--- 1836 ------நரம்பு கோளாறு காரணமாக உடல் நலம் பாதிப்பு .
--- 1838 -----சட்ட மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி .
--- 1840 -----எலக்டர் தேர்தலில் தோல்வி .
--- 1843 ----காங்கிரஸ் தேர்தலில் தோல்வி .
--- 1855 ----செனட் தேர்தலில் தோல்வி .
--- 1856 ----துணை குடியரசு தலைவர் தேர்தலில் தோல்வி .
--- 1858 ----செனட் தேர்தலில் தோல்வி .
--- இத்தனை தோல்விகளையும் சந்தித்து கடைசியில் 1860 -ம் ஆண்டு அதிகாரமிக்க அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்தவர் , ஆபிரஹாம் லிங்கன் ஆவார் .
--- தினத்தந்தி . இளைஞர் மலர் . 06 - 12 - 2008 .

Monday, March 23, 2009

உலா !

தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :
--- திருக் கயிலாய ஞான உலா --------- சேரமான் பெருமாள் நாயனார் .
--- திருவெங்கை உலா ------------------------ சிவப்பிரகாச சுவாமிகள் .
--- சொக்கநாத உலா ---------------------------- தத்துவராயர் .
--- திருக்காளத்தி நாதர் உலா ------------ சேற்றை கவிராசர் .
--- திருவானைக்காவல் உலா ------------ காளமேகப்புலவர் .
--- திருவரங்கன் உலா ------------------------ ஸ்ரீவேணுகோபாலன் .
--- திருவாரூர் உலா --------------------------- அந்தகக் கவிராயர் .
--- திருக்குற்றாலநாத உலா -------------- திரிகூடராசப்ப கவிராயர் .
--- ஞான உலா ------------------------------------ வேதநாயகம் சாஸ்திரியார் .
--- மூவருலா ---------------------------------------- ஒட்டக்கூத்தர் .
--- சிவந்தெழுந்த பல்லவன் உலா ---- படிக்காசுப் புலவர் .
--- தென்தில்லை உலா ------------------------ பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .
படிக்காத மேதைகள் !
--- தாமஸ் ஆல்வா எடிசன் --- ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .
--- பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
--- பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .
--- கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .
இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல.... படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !
' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !
--- அவள் விகடன் . 02 - 01 - 2009 .

Sunday, March 22, 2009

ஆட்டோ 'கிராப் '

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் , ஒரு ஆட்டோவில் கண்ட வாசகம் :
' கடவுள் காதலித்தால் புராணம் ,
மனிதன் காதலித்தால் மயானம் ! '
சிரிப் 'பூ '
கஸ்டமர் : " இந்த புக் என்ன விலைங்க ? "
கடைக்காரர் : " 40 ரூபாய்..."
கஸ்டமர் : " சொல்லிக் கொடுங்க..."
கடைக்காரார் : " நாங்க விற்கத்தான் முடியும் , சொல்லித்தர முடியாது "
தத்துவமுங்கோ...
' கண்கள் அழுதால் துடைப்பது கர்ச்சிப் ,
இதயம் அழுதால் துடைப்பது பிரண்ட்ஷிப் ! '
--- தினத்தந்தி . 12 - 04 - 2008 .

சிவன் .

சிவனுக்கு ஈசானம் , தற்புருஷம் , அகோரம் , வாமதேவம் , சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள் . ஆனால் , சிவபெருமானுக்கு அதோ முகம் என்ற கீழ் நோக்கிய முகமும் உண்டு . .

Saturday, March 21, 2009

கம்ப்யூட்டர் !

தற்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு வரும் கீபோர்டு பழைய டைப்ரைட்டரின் மாடலின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது . 130 ஆண்டுகளுக்கு முன்பே டைப்ரைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது .
ஆரம்பகால டைப்ரைட்டரில் கீக்களுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால்தான் , அது கார்பனில் பட்டு எழுத்து அச்சாகும் . நமது விரல் ஒவ்வொன்றின் அளவுகள் வேறுபடுகின்றன . மேலும் அதன் அழுத்த சக்தியும் விரலுக்கு விரல் மாறுபடுகின்றன .
இதை மையமாக வைத்து தான் தற்போது பயன்படுத்தி வரும் லேஅவுட்டை , 1878-ம் ஆண்டு கிரிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் கண்டுபிடித்தார் . இந்த லேஅவுட்டிற்கு " QWERTY " ( குவார்டி ) என்று பெயர் . கீபோர்டின் இடது முனையில் மேல் வரிசையில் ஆரம்பிக்கும் முதல் 6 எழுத்துக்களை இந்த லேஅவுட்டிற்கு பெயராக வைத்துள்ளார்கள் .
நமது விரலின் தன்மைக்கேற்ப இந்த லேஅவுட் அமைக்கப்பட்டுள்ளது . எந்த எழுத்துக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அந்த எழுத்துக்களை அழுத்தம் அதிகம் கொடுத்கும் விரல்களில் படும்படி இந்த லேஅவுட் அமைக்கப்பட்டுள்ளது .
தற்போது உலகம் முழுவதும் ஆங்கில மொழியில் இயங்கி வரும் கீபோர்டில் " QWERTY " லேஅவுடில் ( சில எழுத்து மாறுதல்களுடன் ) பயன்படுத்தி வருகிறாம் .
--- தினமலர் கம்ப்யூட்டர் மலர் . 22 - 12 - 2008 .

Friday, March 20, 2009

வடமொழி , வேதம் , சைவம் .

வடமொழியில் ரிக் , யஜுர் , சாமம் , அதர்வணம் என்று நான்கு வேதங்கள் இருப்பது போல் , தமிழில் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற 4 உறுதிப் பொருள்கள் உள்ளன . இவையே ' நான் மறை ' என்று அழைக்கப்படுகிறது . வடமொழி வேதங்களின் உட்கருத்தும் இந்த 4 உருதிப் பொருட்களே .
வேதங்கள் சைவசமயத்தின் பொதுவான கொள்கைகளை விளக்குகிறது . சைவ சமயத்திற்கே உரிய கொள்கைகளை சைவ ஆகமங்கள் கூறுகின்றன . இந்த ஆகமங்கள் மொத்தம் 28 ஆகும் . அவற்றை சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் படைத்தார் .
திருவடி தீட்சை என்பது சைவ சமயத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது . சைவ சமய குரவர்கள் நால்வரில் திருஞான சம்பந்தருக்கு சீர்காழியிலும் , திருநாவுக்கரசருக்கு நல்லூரிலும் , சுந்தரருக்கு பண்ருட்டிக்கு அருகில் உள்ள சித்தவட மடத்திலும் , மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையிலும் சிவபெருமான் திருவடி தீட்சை வழங்கினார் .
சைவ சமய சாஸ்திரங்களை கூறும் நூட்கள் ' மெய்கண்ட சாஸ்திரங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன . அவை : திருவந்தியார் , திருக்களிற்றுபடியார் , சிவஞான் போதம் , சிவஞான சித்தியார் , இருபா இருபது , உண்மை விளக்கம் , சிவப்பிரகாசம் , திருவருட்பயன் , வினா வெண்பா , போற்றிப் பஃறொடை , கொடிக்கவி , நெஞ்சுவிடு தூது , சங்கற்ப நிராகணம் என்ற 14 நூட்களாகும் . தி . ம.பக்தி .ம ஜன .22 .2009 .
சிவன் .
சிவனுக்கு ஈசானம் , தற்புருஷம் , அகோரம் , வாமதேவம் , சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள் . ஆனால் , சிவபெருமானுக்கு அதோ முகம் என்ற கீழ் நோக்கிய முகமும் உண்டு .

' 0 ' சதவீதம் !

பாதாளத்தில் பணவீக்கம் வரலாறு காணாத வீழ்ச்சி.
புதுடில்லி , மார்ச் 20 .
மார்ச் 7 -ம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கான பணவீக்க அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது .
இதில் முந்தைய வாரத்தைவிட ஒரே மூச்சில் 1.99 சதவீதம் குறைந்து 0.44 சதவீதமாகியுள்ளது . கிட்டத்தட்ட பூஜ்யம் சதவீதத்தையே தொட்டுவிட்டது . இந்தியாவில் இப்போதுள்ள ' மொத்த விலை குறியீடு ' அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடும் முறை 1995-ல் தொடங்கப்பட்டுள்ளது . அதிலிருந்து பணவீக்கம் எப்பொழுதும் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்துள்ளது . இப்போது அது வரலாறு காணாத அளவில் ஒரு சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது .
அடுத்த சில வாரங்களில் பணவீக்கம் பூஜ்யத்திற்கும் கீழ் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் .
முரண்பாடு ஏன் ?
பணவீக்க வீதம் என்பது விலைவாசியை ஒட்டி அமைய வேண்டும் . அரிசி , பருப்பு போன்ற பெரும்பாலான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் நியாயமாக பணவீக்கமும் உயரவேண்டும் . ஆனால் அது தரைமட்டத்தை தொட்டு நிற்கிறது . இந்தியாவில் பணவீக்கம் கணக்கிட தவறான முறையை பின்பற்றுவதுதான் இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
' மொத்த விலை குறியீட்டு எண் ' - டபிள்யூபிஐ' அதாவது பொருட்களின் மொத்த விலை அடிப்படையில்தான் இங்கு பணவீக்கம் கணக்கிடப்படுகிறது . இது உண்மையான விலைவாசி நிலவரத்தை பிரதிபலிப்பதில்லை .
என்வே பொருட்கள் நுகர்வோரை அடையும்போது என்ன விலை இருக்கிறதோ அதை வைத்து பணவீக்கத்தை கணக்கிடும் ' நுகர்வோர் விலை குறியீட்டு எண் -- சிபிஐ' முறையை பின்பற்ற வேண்டும் .
முன்னேறிய நாடுகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றன . என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .
டபிள்யூபிஐ முறையிலிருந்து சிபிஐ முறைக்கு மாறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்று அரசு விளக்கம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 20 - 03 - 2009 .

நியூட்டன், தபால்தலை ,

சர் ஐசக் நியூட்டன் !
மனித வரலாற்றில் மிகப் பெரிய விஞ்ஞான மேதையாகக் கருதப்படும் ஐசக் நியூட்டன் பிறந்த மூன்றாவது மாதம் அவருடைய தந்தை காலமானார் . மூன்று வயது வரை ரொம்பவும் அம்மா செல்லம் . நியூட்டனுக்கு தாயே தெய்வம் என்றிருந்தபோது , திடீரென்று அந்தத் தாய் ஸ்மித் என்கிறவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்குச் சென்றுவிட , நியூட்டன் என்கிற மூன்று வயதுச் சிறுவனுக்கு இது பேரிடையாக அமைந்தது . 10 வயது வரை பாட்டியிடம் ஒருவித தனிமையான , ஏக்கமான வாழ்வு அவரை மிகவும் பாதித்தது . இதனால் பிற்பாடு அவருக்கு ஏற்பட்டது ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் அல்லது பெண்கள் மீது வெறுப்பு .
மார்ச் 1727 -ல் , 85 வயதில் இறந்த நியூட்டன் தன் வாழ்நாள் முழுவதும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொண்டது இல்லை என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை !
தபால்தலை !
உலகில் பிரிட்டிஷ் தபால்தலைகளில் மட்டுமே நாட்டின் பெயர் அச்சிடப்படுவதில்லை . ஆனால் , பிரிட்டிஷ் மகாராணியின் படம் உள்ள ஸ்டாம்புகளில் மட்டும்தான் அப்படி . ஒரு காலத்தில் பிரிட்டன் உலக மகா வல்லரசாக இருந்தபோது ' உலகமே என்னுடையது , தபால்தலையில் பிரிட்டன் என்று அறிமுகம் செய்துகொள்ளத் தேவை இல்லை ' என்கிற மனப்பான்மை அதற்கு இருந்தது . தவிர , நவீன ( ஒட்டுகிற ) தபால்தலையைக் கண்டுபிடித்ததும் பிரிட்டன் தான் . ஆகவே , இப்படி ஒரு ஸ்பெஷல் சலுகை !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 07 - 01 - 2009 .

Thursday, March 19, 2009

சனிசிங்கனாபூர் .

ஷீரடியிலிருந்து சுமார் 50 கி. மீ . தொலைவில் மெயின் ரோட்டில் உள்ளது சனிசிங்கனாபூர் எனும் ஸ்தலம் . இது சனிபகவான் ஸ்தலமாகும் . இங்கு சனிபகவானுக்கு விக்ரகம் கிடையாது . அதற்குபதில் ஒரு சிலா ( நிற்கும் நிலையில் உள்ள ஒரு கல் ) உள்ளது . அதற்குதான் அபிஷேகம் நடைபெறுகிறது . அபிஷேகம் செய்பவர்கள் எந்த நேரத்தில் செய்தாலும் ( இரவு முழுவதும் உண்டு ) அங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு , ஈர ஆடையுடன் பக்தர்கள் சுவயமாக அபிஷேகம் செய்கின்றனர் . அதுதான் அங்கு மரபு . மேலும் , கருப்பு ஆடை மட்டும் அல்லாது சிவந்த ஆடைகளும் அணிந்து பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம் . விசேஷமாக அந்த ஊரில் வீடு , கடை , கோயில் , பாத்ரூம் உட்பட எதற்கும் வாசல் கதவு என்பதே கிடையாது என்பது ஓர் வியப்பூட்டும் விஷயம் ஆகும் . இறைவன் காக்கின்றார் என்ற நம்பிக்கை மேலோங்கி உள்ளது .
தமிழ் நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் குச்சனூர் என்ற இடத்திலும் சனிபகவானுக்கு கோயில் உள்ளது . ஆனால் , திருநள்ளாறில் உள்ள சனிபகவான் மட்டிலுமே அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார் . எனவேதான் இந்த ஸ்தலம் விசேஷமானது .
நான் மற்றும் என் வீட்டினர் 5 பேர்களும் ஷீரடி , சனிசிங்கனாபூர் சென்று வந்துள்ளோம் .
--- R . தேவதாஸ் . என் நண்பர் மற்றும் TOUR ORGANISER . கூறக் கேட்டது .

Wednesday, March 18, 2009

ரசித்தேன் .

பார்த்தேன் ...ரசித்தேன் .
நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கண்டு ரசித்த வாசகம் :
' நமக்காக வாழும்போது வாழ்க்கை புளித்து விடுகிறது ,
பிறருக்காக வாழும்போது வாழ்க்கை பிடித்து விடுகிறது !'
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் பார்த்து வியந்த வாக்கியம் :
' உன் கனவில் கண்ட பெண்ணைவிட ,
உன்னை கருவில் கண்ட தாயை நேசி ! '
பூஜைக்கு ஆகாத பூக்கள் .
ஆமணக்கு இலையிலும் , பனை ஓலைக்கூடையிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது . விநாயகருக்கு துளசியும் , சிவபெருமானுக்கு தாழையும் , பார்வதிக்கு நெல்லியும் , சூரியனுக்கு அருகும் , வைரவருக்கு நந்தியாவர்த்தமும் , திருமாலுக்கு அட்சதையும் சாற்றக் கூடாது .

Tuesday, March 17, 2009

திருநாவுக்கரசர் .

பொது மக்கள் தற்காலத்தில் ஏதாவது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை பார்க்கிறோம் . ஆனால் , இந்த உண்ணாவிரதம் சுமார் ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது .
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது பழையாறை வடதளி என்று அழைக்கப்படும் சிவன் கோயில் . இது பல்லவர்கள் ஆட்சி காலத்தில் சமண சமயத்தவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது . சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் , உண்ணாவிரதம் மேற்கொண்டு சமணர்களிடமிருந்து இந்த கோயிலை மீட்டார் .
சர். சி.வி . ராமன் .
சர் . சி . வி . ராமன் திருச்சியில் 1888 -ம் ஆண்டு நவம்பர் 7 -ம் தேதி பிறந்தார் . பின் , விஞ்ஞானியாகி 1933 -ம் ஆண்டு பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கல்வி கழகத்தின் இயக்குனர் ஆனார் .1970 -ம் ஆண்டு நவம்பர் 21 -ம் தேதி மறைந்தார் .
--- தினமலர் . சிறுவர்மலர் . ஜனவரி 2 . 2009 .

Monday, March 16, 2009

மின்சாரம் !கர்ப்பம் .திருமால் !

சிலவகை எலக்ட்ரான்கள் நியூக்ளியஸை மட்டுமே சுற்றாமல் சுதந்திரமாக வேறு பகுதிகளிலும் சுற்றும் . இதற்கு ப்ரீ எலக்ட்ரான்கள் என்று பெயர் . இப்படி சுதந்திரமாகச் சுற்றும் எலக்ட்ரான்கள் ஒரே திசையில் பாயும் போது உண்டாவதுதான் மின்சாரம் .
மின்சாரத்தைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆண்ட்ரே ஆம்பியர் . மின்சாரத்தின் சக்தி இவர் பெயராலேயே ஆம்பியர் என்று அளவிடப்படுகிறது .
அவர் ஒரு பிரேஞ்சுக்காரர் . ஹான்ஸ் ஆர்ஸ்டட் என்ற விஞ்ஞானி மின்சாரம் உண்டாக்கும் மிங்காந்த வெளிகளைப் பற்றிக் கண்டறிந்தவர் . இவர்கள் கோடு போட்டார்கள் என்றால் அதன் மேல் ரோடு போட்ட ஜீனியஸ் தாமஸ் ஆல்வா எடிசன் .
--- தினமலர் . சிறுவர்மலர் . டிசம்பர் 26 . 2008 .
கர்ப்பம் .
பதட்டம் , டென்ஷன் , மனஅழுத்தம் 3 - க்கும் வித்தியாசம் தெரியணுமா ?
மனைவி கர்ப்பம் ஆனா பதட்டம் .
காதலி கர்ப்பம் ஆனா டென்ஷன் .
ரெண்டும் ஒண்ணா நடந்தா அதுதான் மன அழுத்தம் !
--- குமுதம் . 31 - 12 - 2008 .
திருமால் !
திருமால் எடுத்த பத்து அவதாரங்களையும் வரிசைப்படி வைத்துப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை விளக்குவதாக உள்ளது .
திருமால் முதல் முதலாக ஊர்வன வகையைச் சேர்ந்த கூர்மமாக அவதரித்து பின் , அதைவிட சற்று உயர்ந்ததான மச்ச அவதாரத்தை எடுத்தார் . தொடர்ந்து விலங்குகளில் வராகமாகவும் , விலங்குகளில் உயர்ந்த சிம்ம அவதாரமும் எடுத்தார் . மனித அவதாரம் எடுக்க முனைந்த திருமால் முதலில் வாமனன் என்னும் குள்ள வடிவை எடுத்து பின் ராமனாக மனித அவதாரம் எடுத்தார் .
இதிலிருந்து திருமாலின் அவதாரங்களின் வரிசை முறையில் ஒரு ஒழுங்கு இருப்பது அறியத் தக்கது .

Sunday, March 15, 2009

சுடர் !

செய்திச் சுடர் !
--- சந்திரனை விட பூமி 14 மடங்கு பெரியது .
--- ஒரு நாள் மட்டும் வாழக்கூடிய உயிரினம் ஈசல் .
--- பெட்ரோலியம் ' திரவத் தங்கம் ' என்று அழைக்கப்படுகிறது .
--- நெல்லிக்காயில் வைட்டமின் 'சி ' அதிகம் உள்ளது .
--- கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க உதவிய ராணி எஸபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை மட்டும்தான் குளித்திருக்கிறாராம்.
--- இந்தியாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் 1707ம் ஆண்டு காரைக்காலுக்கு அருகே உள்ள தரங்கம்பாடியில்தான் ஆரம்பிக்கப்பட்டது .
--- பர்மாவில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் ஆசி வேண்டி , உறவினர்கள் இறந்தவர் வீட்டில் ஒருவாரம் படுத்து தூங்குவார்களாம் .
யானை !
யானையின் துதிக்கை மூக்காக மட்டுமின்றி கைகளைப் போலவும் செயல்படுகிறது . அதன் மேல்பகுதி ' அப்பர் பிங்கர் ' ( மேல் விரல் ) என்றும் , கீழ்ப்பகுதி ' லோயர் பிங்கர் ' ( கீழ் விரல் ) என்றும் அழைக்கப்படுகிறது .
அதன் துதிக்கையில் மட்டும் 40 , 000 க்கும் அதிகமான தசைகள் உள்ளன .
யானை பொதுவாக ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரங்களை உணவு சாப்பிடுவதிலேயே கழிக்கும் .
விண்வெளி --- விலங்குகள் !
--- 1957 - ம் ஆண்டு சோவியத் யூனியன் ' லைக்கா ' என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பியது .
--- 1958 - ம் ஆண்டு அமெரிக்கா ' வாஸ்கா ' , ' பெஞி ' என்ற இரண்டு எலிகளை அனுப்பியது .
--- 1961 - ம் ஆண்டு விண்வெளிக்குச் செல்லும் அதிஷ்டம் ' ஹாம் ' என்ற சிம்பன்ஸி குரங்குக்குக் கிடைத்தது .
--- 1968 - ம் ஆண்டு பிரான்ஸ் தன் பங்குக்கு ' பெலிட்டி ' என்ற பூனையை அனுப்பியது .
வானில் பறக்க முதலில் பலூன்கள்தான் பயன்பட்டன . அதில் ஏற பயந்த மனிதன் , அவற்றில் நாய் , ஆடு , வாத்து , கோழி , போன்ற விலங்குகளை அனுப்பித்தான்.

Saturday, March 14, 2009

நாக்கு !

" ஒரு மனிதனிடம் மிகச்சிறந்தது எது ? " என்று குரு கேட்டார் சிஷ்யனிடம் .
" நாக்கு " என்றான் சிஷ்யன் .
" மிகக் கேவலமானது எது ? " மீண்டும் கேட்டார் குரு .
" நாக்கு " என்றான் சிஷ்யன் .
" ஏன் , இரண்டு கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்கிறாய் ? " என்றார் குரு .
அதற்கு சிஷ்யன் சொன்னான் : " ஒரு மனிதன் தனது நாக்கை எப்படிப் பயன்படுத்துகிறானோ அதைப் பொறுத்தே அவன் பெருமையும் , சிறுமையும் அடைகிறான் . அதனால்தான் இரண்டு கேள்விகளுக்கும் ' நாக்கு ' என்றே பதில் கூறினேன் ! "என்றான் சிஷ்யன் .
--- ( 02 - 12 -1982 ) .

Friday, March 13, 2009

அனுமன்

அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?
இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன் " கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் , " என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார் .
' கண்களால் கண்டனன் ' என்று சொல்வதில் என்ன விசேஷம் ? அனுமன் மாத்திரமல்ல , யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும் ? விளக்கம் :
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதையின் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனுமனுக்குத் தெரியாது . ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார் . மனைவியைப் பிரிந்து வாழும் ( தவிக்கும் ) ராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார் . அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் . அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் ' கண்களால் ' -- கண்டு கொண்டார் .
--- குமுதம் . ( 12 - 08 - 1982 ) .

ராமபிரான் .

ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது .
அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?
இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன் " கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் , " என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார் .
' கண்களால் கண்டனன் ' என்று சொல்வதில் என்ன விசேஷம் ? அனுமன் மாத்திரமல்ல , யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும் ? விளக்கம் :
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதையின் வடிவம் எப்படி இருக்கும் என்பது அனுமனுக்குத் தெரியாது . ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார் . மனைவியைப் பிரிந்து வாழும் ( தவிக்கும் ) ராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார் . அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் . அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் ' கண்களால் ' -- கண்டு கொண்டார் .
--- குமுதம் . ( 12 - 08 - 1982 ) .

Thursday, March 12, 2009

பெருஞ்சுவர் !

சீனப் பெருஞ்சுவர் !
சீனப் பெருஞ்சுவரைப்பற்றி பெருமைப்படக் கூடியது சந்திரனிலிருந்து மனிதனால் பார்க்கக்கூடிய ஒரே கட்டிட அமைப்பு என்பதே . 1938 ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய , ' அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் ' என்ற
நூலில் இடம் பெற்ற இக்குறிப்பைக் கொண்டே பாட நூல்களில் கூட இச் செய்தி இடம் பெற்றது . ஆனால் , தற்பொழுது இச்செய்தி தவறு என்று கண்டறியப்பட்டு சீனப் பாடநூல்களிலிருந்துகூட நீக்கப்பட்டுள்ளது .
என்பது சிலர் மட்டுமே அறிந்த உண்மை . அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கலமான ஸ்கைலாப்பிலிருந்து வில்லியம் போக் என்ற விஞ்ஞானி சீனப் பெருஞ்சுவரை வெறும் கண்களால் பார்த்ததாக அறிவித்தது கூட , பீகிங்கிங்குக்கு அருகிலுள்ள பெரிய கால்வாய் என்று பின்பு கண்டறியப்பட்டது . சீன விண்வெளி விமானி யாங்லிவெங் விண்வெளியிலிருந்து வெறும் கண்களால் சீனப்பெருஞ்சுவரைப் பார்க்க
முடியவில்லை என்று கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது . --- கு . கோவிந்தராஜன் .
---அன்புள்ள ஆசிரியருக்கு . ஆசிரியர் நாள் சிறப்பு மலர் . செப்டம்பர் , 2008 . ( காரைக்கால் -- புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்க அலுவல்முறைத் திங்களிதழ் . )

Tuesday, March 10, 2009

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள் கருத்து !
"தன் காலத்தில் தான் சொல்வது நிறைவேறப்போவதில்லை என்று தெரிந்தும் , தான் இல்லாத ஒரு நூற்றாண்டில் நிகழப் போகும் தனது சித்தாந்தத்துக்குத் தமது அன்றைய சொந்த வாழ்க்கையை , தனது சொந்தபந்தங்களை ஏன் பலியிட வேண்டும் ? " --- ஜெயகாந்தன் . -- 13 - 09 -1986 .
" ஒரு ஊனத்தின் மேலே இரக்கப்பட்டு எல்லோரும் தங்களை ஊனமாக்கிக் கொள்ளக் கூடாது . இரக்கம் உண்மையான இரக்கமாயிருந்தால் மற்றவர் ஊனத்தின் வேதனையைப் போக்க பாடுபடவேணும் . எனக்கு காலிலதான் ஊனமே தவிர மனசிலே இல்லே . அதனாலே நான் தைரியனா இருந்துப்பேன் . மனசிலே தைரியம் இல்லாம இருப்பாங்கபாரு , அவங்களைக் காப்பாத்து...." சா. விஸ்வநாதன் ( சாவி ) , 'ஆப்பிள் பசி .'--28-06-1986.
" எனக்குத் தமிழ்ப்பற்று கிடையாது ; அதற்கு அவசியமும் கிடையாது . பெண்டாட்டியை எவனாவது கண்ணடிப்பானா ? " --- கவிஞர் சுரதா . --- 13 -09 - 1986 .
" பெண்களை ஆண்டவன் படைத்திருப்பதே ஆண்கள் அவர்களை நுகர்வதற்காகத்தான் . பெண் பெரிய மனுஷியாகி விட்டால் , என்ன சொல்கிறோம் ? ' பெண் சமைந்து விட்டாள் ' . ஒரு பதார்த்தம் சாப்பாட்டுக்குத் தயார் ஆகிவிட்டது என்பதைக் குறிக்கத்தான் சமையல் என்று சொல்கிறார்கள் . அது போலத்தான் பெண் சமைந்து விட்டாள் என்றால் , அவள் ஆண் நுகரத்தயாராகி விட்டாள் என்று பொருள் ". -- பழ. கருப்பையா .
" தங்கத்தை , எந்தப் பொருளைக் கொண்டும் செய்வது எவ்வாறு முடியாத காரியமோ , அதேபோல் அவர் பெசிய வார்த்தைகளும் ." ---' புயல் .' --- 05 -10 -1986 .
" தாம்பத்யத்திற்கான சில ஒழுங்குமுறைகளை மதிக்காதவர்கள் குடும்பத்தில் வாழவே தகுதியற்றவர்கள் ." --- உஷா சுப்ரமணியன். ' இளமை கனவுகள் .' --- 28 - 06 -1986 .
" இந்திய ஜனாதிபதியைப் போல சம்பளம் வாங்குகிறேன் ; ஆனால் இந்தியாவைப் போல கடனும் வாங்குகிறேன் . " --- கவிஞர் கண்ணதாசன் . ---07 - 12 -1986 .
" திருமணம் என்பது -- உலகறிய ' உடல் ' களை இணைக்கும் ஒரு ஒப்பந்தம் . இதில் --- உள்ளங்கள் ஒன்று படுவது அவரவர் அதிஷ்டம் ." --- ராஜேஸ்குமார் . ' வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் ' -- 28 -06 -1986 .

உறுப்புக்கள் !

நமது உடலுக்கு மெய் என்ற பெயர் . நமது தோல் , வாய் , மூக்கு , கண்கள் , காதுகள் ஆகிய ஐந்தும் மெய்யுறுப்புகள் , இவ்வுறுப்புகளை ஒழுங்குபடுத்தினால் , இப்பயிற்சிக்கு இந்திரிய ஒழுக்கம் என்பார் வடலூர் வள்ளலார் . முதற்பிறப்பில் தோலுணர்வையும் , இரண்டாம் பிறப்பில் வாயுணர்வையும் , மூன்றாம் பிறப்பில் மூக்குணர்வையும் , நான்காம் பிறப்பில் கண்ணுணர்வையும் , ஐந்தாம் பிறப்பில் காதுணர்வையும் பெற்று
ஐந்து உறுப்புகளால் ஐந்து வகை அறிவையும் உயிர்கள் பெறுகின்றன . இவ்வைந்து வகை அறிவை நாம் அனைவரும் பெற்றுள்ளோம் . -- சோமகுணபாலன் . .

ஆசிரியர்கள் கருத்துக்கள் !

வீட்டின் 14 -வது குழந்தையாகப் பிறந்த அம்பேத்கர் , தன்னுடைய ஆசான் மீதுள்ள பற்றால் பீமாராவ் என்ற தன் பெயரை அம்பேத்கர் என்ற அவருடைய ஆசிரியர் பெயராக மாற்றிக்கொண்டார் .--- K.கரிகாலன் .

Sunday, March 8, 2009

புரட்சி !

" புரட்சியாளர்கள் ஏன் வன்முறையை நாடுகிறார்கள் ?"
" புரட்சியும் வன்முறையும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது . புரட்சி என்றால் , இதுவரை மனிதனால் சாதிக்க முடியாத ஒன்றைச் சாதித்துக் காட்டுவது . பல கோடி வருடங்களில் பூமியில் இரண்டு மனிதர்கள் முழுமையான அளவில் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியவில்லை . இவ்வளவு கோடி மக்களில் இரண்டே இரண்டு பேர் இது நடந்தால் , அது பெரிய புரட்சி . இப்படி நூறு பேர் சேர்ந்து வாழ்ந்தால் , அதிசயமான புரட்சி . ஆயிரம் பேர் சேர்ந்து வாழ்ந்தால் , மகத்தான புரட்சி ! அந்தப் புரட்சியைப் பண்ணத் தெரியாமல் , வன்முறையைப் புரட்சி என்று தப்பர்த்தம் செய்துகொள்வது வேதனையான வேடிக்கை !
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆனந்தவிகடன் . 17-12-2008 .

எம். ஏ,. பட்டதாரி !

ஒருவர் செக்கு ஆட்டிக் கொண்டிருந்தார் . அப்போது மாட்டை விட்டு விட்டு ரொம்ப நேரமாக செக்கில் குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியே சென்ற எம் . ஏ ,. படித்த பட்டதாரி இளைஞர் இதைப்பார்த்ததும் நேராக செக்குக்காரரிடம் சென்றார் .' ரொம்ப நேரமா செக்கில் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறீர்களே .... மாடு சுற்றாமல் நின்றால் உங்களுக்கு எப்படி தெரியும் ' என்றார் . அதற்கு அந்த செக்காட்டி , ' மாடு கழுத்தில் மணி கட்டியுள்ளேன் . அந்த ஒலி நின்றால் மாடு சுற்றவில்லை என்பது , தெரிந்து விடும் ' என்றார் .
உடனே அந்த பட்டதாரி இளைஞர் , ' மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு தலையை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள் ? ' என்று மறுபடியும் மடக்கினார் . செக்காட்டியோ சிறிதும் யோசிக்காமல் , ' மாடு எம். ஏ,. படிக்கவில்லையே ! ' என்றார் .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது .

Saturday, March 7, 2009

ஹிட்லர்

வீழ்ந்தது சாம்ராஜ்யம் ! ( ஹிட்லர் ) .
ஹிட்லர் தனது அறைக்கு ஈவா ப்ரானுடன் கைகோத்தவாறு மெள்ள நடந்து சென்றார் .அங்கே இருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தனர் . வழியில் தொங்கிய வெல்வெட் திரைச்சீலையை மெய்க்காப்பாளர் ஒருவர் மூடினார் .
ஏப்ரல் 30 , மணி , பிற்பகல் 3 - 30 .
முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார் . பிறகு ஹிட்லர் தன்னுடைய வால்த்தர் தயாரிப்பான கைத்துப்பாக்கியை ( 7 . 65 Caliber ) கையிலெடுத்துக்கொண்டார் .அரசியலில் குதித்த ஆரம்ப காலத்திலிருந்து அந்தக் கைத்துப்பாக்கி ஹிட்லரின் நெருங்கிய நண்பன் ! `சகாக்களிடம் ரொம்ப கோபம் வரும் போதெல்லாம் பலமுறை 'சுட்டுக்கொண்டு சாகப்போகிறேன் ' என்று ஆவேசத்துடன் ஹிட்லர் துப்பாக்கியை எடுத்து பயமுறுத்தியதுண்டு ! இந்த முறை நிஜம் !
வலது நெற்றிப்பொட்டில் கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தி தற்கொலை செய்து கொண்டார் ஹிட்லர் .
ஹிட்லர், சோபாவில் உட்கார்ந்த நிலையில் , நடுவில் இருந்த குட்டி டேபிள் மீது குப்புறக் கவிழ்ந்து கிடந்தார் . அவருக்குப் பக்கத்தில் ஈவா சரிந்த நிலையில் . ஈவாவின் உடை நனைந்திருந்தது . ரத்தத்தினால் அல்ல ! ஹிட்லர் குப்பற விழுந்தபோது தண்ணீர் ஜாடியை இடித்துக் கவிழ்த்திருக்கிறார் .!
டிரைவர் கெம்காவிடம் , மெய்க்காவல் படைத்தலைவர் கூன்ஷ் , ' தலைவரின் ஆணையை முதலில் நாம் செயல்படுத்த வேண்டும் . உடனே இருநூறு லிட்டர் பெட்ரோல் வேண்டும்...' என்று பரபரத்தார் .
மற்றவர்கள் , ஹிட்லர் -- ஈவா உடல்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள் .
தம்பதியின் உடல்களை அருகருகே சரியாகப் படுக்க வைத்தனர் .
கெம்கா, ஓரிரு நிமிடங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு , ஹிட்லரின் கைகளை மார்பின் மீது மடக்கி வைத்து , பிறகு.... ஒரு கிழிந்த துணியைப் பெட் ரோலால் ந்னைத்துக் கொண்டுவர , கூன்ஷ் தீக்குச்சியைக் கிழித்து அதைப் பற்ற வைக்க , கெம்கா ந்டுங்கிய கைகளால் துணியை வீசி உடல்கள் மீது போட்டார் .
மூன்று மணிநேரம் தொடர்ந்து பெட் ரோல் ஊற்றி உடல்களை முழுமையாக எரித்தார்கள் . பிறகு கொதித்துக்கொண்டிருந்த எலும்புத்துண்டுகளையும் , சாம்பலையும் ஒரு சிறு கோணிப்பையில் சேகரித்து ஆழமாகப் ப்ள்ளம் தோண்டிப் புதைத்துத் தரையைத் தேய்த்து மிதித்து சமனப்படுத்தினார்கள்....
ஹிட்லரோடு ஒரு சாம்ராஜ்யமாக ஜொலித்த நாஜி ஜெர்மனியும் வீழ்ந்து மண்ணுக்கடியில் போனது !
முன்பு ஒருமுறை ஹிட்லர் சில வார்த்தைகளை எடுத்துக்கொடுக்க , அவருடைய நண்பரான ஷிராக் என்னும் கவிஞர் அந்த வார்ர்த்தைகளுக்குக் கவிதை வடிவம் தந்தார் . அதன் கடைசி வரிகள்...
' ந ம்பிக்கையோடு நிற்பேன் ,
யார் என்னை விட்டு அகன்றாலும்...
என் புன்னகை உதடுகள் பைத்தியக்காரத்தனமாக
ஏதோ வார்த்தைகளை உச்சரிக்கும்...
நான் விழுந்த பிறகே
என் கையிலிருக்கும் கொடி கீழே விழும்....
இறந்து கிடக்கும் என் உடலுக்கு...
அந்தக் கொடி மெள்ளப் போர்வையாக மாறும் ...!
--- மதன் . மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் ! என்ற நூலில்

Friday, March 6, 2009

பார்த்தேன் ...ரசித்தேன் .

நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கண்டு ரசித்த வாசகம் :
' நமக்காக வாழும்போது வாழ்க்கை புளித்து விடுகிறது ,
பிறருக்காக வாழும்போது வாழ்க்கை பிடித்து விடுகிறது !'
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் பார்த்து வியந்த வாக்கியம் :
' உன் கனவில் கண்ட பெண்ணைவிட ,
உன்னை கருவில் கண்ட தாயை நேசி ! '
பூஜைக்கு ஆகாத பூக்கள் .
ஆமணக்கு இலையிலும் , பனை ஓலைக்கூடையிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது . விநாயகருக்கு துளசியும் , சிவபெருமானுக்கு தாழையும் , பார்வதிக்கு நெல்லியும் , சூரியனுக்கு அருகும் , வைரவருக்கு நந்தியாவர்த்தமும் , திருமாலுக்கு அட்சதையும் சாற்றக் கூடாது .

சிவன் .

சிவனுக்கு ஈசானம் , தற்புருஷம் , அகோரம் , வாமதேவம் , சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள் . ஆனால் , சிவபெருமானுக்கு அதோ முகம் என்ற கீழ் நோக்கிய முகமும் உண்டு .

Thursday, March 5, 2009

திருநள்ளாறு .

உலக அளவில் சனி பகவானுக்கு 2 இடங்களில்தான் கோயில் உள்ளது . அகமதாபாத்தில் உள்ள ஹேமந்த் நகருக்கு அடுத்தாற்போல் திருநள்ளாறு பகுதிதான் கோயிலாக விளங்குகிறது
--- புதுச்சேரி கவர்னர் கோவிந்த் சிங் குர்ஜார் .
வடமொழி , வேதம் , சைவம் .
வடமொழியில் ரிக் , யஜுர் , சாமம் , அதர்வணம் என்று நான்கு வேதங்கள் இருப்பது போல் , தமிழில் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற 4 உறுதிப் பொருள்கள் உள்ளன . இவையே ' நான் மறை ' என்று அழைக்கப்படுகிறது . வடமொழி வேதங்களின் உட்கருத்தும் இந்த 4 உருதிப் பொருட்களே .
வேதங்கள் சைவசமயத்தின் பொதுவான கொள்கைகளை விளக்குகிறது . சைவ சமயத்திற்கே உரிய கொள்கைகளை சைவ ஆகமங்கள் கூறுகின்றன . இந்த ஆகமங்கள் மொத்தம் 28 ஆகும் . அவற்றை சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் படைத்தார் .
திருவடி தீட்சை என்பது சைவ சமயத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது . சைவ சமய குரவர்கள் நால்வரில் திருஞான சம்பந்தருக்கு சீர்காழியிலும் , திருநாவுக்கரசருக்கு நல்லூரிலும் , சுந்தரருக்கு பண்ருட்டிக்கு அருகில் உள்ள சித்தவட மடத்திலும் , மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையிலும் சிவபெருமான் திருவடி தீட்சை வழங்கினார் .
சைவ சமய சாஸ்திரங்களை கூறும் நூட்கள் ' மெய்கண்ட சாஸ்திரங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன . அவை : திருவந்தியார் , திருக்களிற்றுபடியார் , சிவஞான் போதம் , சிவஞான சித்தியார் , இருபா இருபது , உண்மை விளக்கம் , சிவப்பிரகாசம் , திருவருட்பயன் , வினா வெண்பா , போற்றிப் பஃறொடை , கொடிக்கவி , நெஞ்சுவிடு தூது , சங்கற்ப நிராகணம் என்ற 14 நூட்களாகும் .

பிரார்த்தனை !

பிரார்த்தனை என்பது மூன்று காரணங்களுக்காகத்தான் செய்யப்படுகிறது .
ஒன்று , அச்சம் . ' எதிரியிடமிருந்து காப்பாற்று , விபத்திலிருந்து காப்பாற்று , நோயிலிருந்து காப்பாற்று ' என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கச் சொல்லி வேண்டுவது .
இரண்டாவது , பேராசை ,' எனக்குப் படிப்பு கொடு , கார் கொடு , வீடு கொடு , பதவி உயர்வு கொடு , செல்வம் கொடு ' என்றெல்லாம் விண்ணப்பங்கள் போடுவது .
மூன்றாவது , நன்றி சொல்வது . ' எனக்கு இது அளித்ததற்கு நன்றி , அதைச் செய்து கொடுத்ததற்கு நன்றி ' என்று நன்றி தெரிவிப்பது .
மன்னன் ஒருவன் நகர்வலம் போயிருந்தான் . சாதாரண ஆடைகளுடன் நடைபாடை ஓரம் அமர்ந்திருந்தும் ஆனந்தமாக இருக்கும் ஒரு துறவியைப் பார்த்தான் . " இவ்வளவு குறைவான வளம் இருந்தும் திருப்தியாகக் காணப்படுகிறீர்களே , உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது " என்றான் மன்னன் . " என்னைவிடக் குறைவான செல்வம் கொண்டுள்ள நீ இதைச் சொல்வதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது ." என்றார் துறவி . " என்னது , என் வளம் குறைவா ? எனக்குக் கீழ் 6 தேசங்கள் இருக்கின்றன . 14 குறுநில மன்னர்கள் இருக்கிறார்கள் . உங்களிடம் என்ன இருக்கிறது .? " என்றான் மன்னன் சூடாக . " இந்தப் பூமி , இந்தக் காற்று , வானம் , சூரியன் , நிலவு , அண்டவெளி , இந்தப் பிரபஞ்சம் . ஏன் , அதற்கும் அப்பால் எல்லாமே இருக்கிறது . என்னுள் படைத்தவன் இருக்கிறான் . உன் தேசங்களுக்கு எல்லைகள் இருக்கின்றன . எல்லையில்லாததுக்கு நான் சொந்தக்காரன் ! "
படைத்தவன் உள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால் , உங்களுக்குக் கிடைப்பது எல்லாம் அவனுக்குக் கிடைத்ததுதானே . அப்புறம் ஆனந்தம்தான் ஒரே விளைவு

Wednesday, March 4, 2009

கண்ணதாசன் !

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார் .' காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ' என்று கேட்டார் . நம்மிடம் இப்படி ஒருவர் வந்து கேட்டால் அடுத்த நிமிடமே அவரது கன்னம் பழுத்துப் போயிருக்கும் . ஆனால் , கண்ணதாசனோ மிக அமைதியாக , ' காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள் . ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ' என்றார் . இதுதான் டைமிங் சென்ஸ் என்பது .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது .
எம். ஏ,. பட்டதாரி !
ஒருவர் செக்கு ஆட்டிக் கொண்டிருந்தார் . அப்போது மாட்டை விட்டு விட்டு ரொம்ப நேரமாக செக்கில் குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியே சென்ற எம் . ஏ ,. படித்த பட்டதாரி இளைஞர் இதைப்பார்த்ததும் நேராக செக்குக்காரரிடம் சென்ரார் .' ரொம்ப நேரமா செக்கில் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறீர்களே .... மாடு சுற்றாமல் நின்றால் உங்களுக்கு எப்படி தெரியும் ' என்றார் . அதற்கு அந்த செக்காட்டி , ' மாடு கழுத்தில் மணி கட்டியுள்ளேன் . அந்த ஒலி நின்றால் மாடு சுற்றவில்லை என்பது , தெரிந்து விடும் ' என்றார் .
உடனே அந்த பட்டதாரி இளைஞர் , ' மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு தலையை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள் ? ' என்று மறுபடியும் மடக்கினார் . செக்காட்டியோ சிறிதும் யோசிக்காமல் , ' மாடு எம். ஏ,. படிக்கவில்லையே ! ' என்றார் .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது

Tuesday, March 3, 2009

ஜோக் !

கடைக்காரர் : விலை அதிகம்னு பாக்காதீங்கம்மா....இந்த செருப்பு நல்லா உழைக்கும் !
கடைக்கு வந்த பெண்மணி : செருப்பெல்லாம் உழைக்காதுப்பா... மனுஷங்க நாமதான் உழைக்கணும் . அதுவும் இந்த செருப்பெல்லாம் வாங்கணும்னா ரோம்பவே உழைக்கணும் .
" ஆல மர இலை 10 , அரச இலை 10 , வேப்பமர இலை 10 ,கூட்டினா என்ன வரும் ? "
" 30 "
" சேச்சே ... குப்பை தான் வரும் !
" உன் மனைவியை நகையோட ஒருத்தன் கடத்திட்டானாமே ?"
" விடுவேனா ? துரத்திட்டுப்போய் நகை பூரா பிடுங்கிண்டு வந்துட்டேன் ".
" ஊழல் பண்ணி மாட்டிக்கிட்டவரை தலைவர் கட்சியைவிட்டுத் தூக்கிட்டார் ."
" ஊழல்ன்னா தலைவருக்குப் பிடிக்காதா ?"
" ஊழல் பிடிக்கும் , மாட்டிக்கிறதுதான் பிடிக்காது !"
" சிஸ்டர் ! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு , நல்லபடியா வீடு போய் சேருவேன்ல ? "
" நல்ல ' பாடி ' யா வீடு பொய் சேருவீங்க ! "
" ஏதோ ....உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் ம்ழை பெய்யுது ! "
" அப்படியா... இல்லைன்னா ?"
" நிறையவே பெய்யும் ! "
" எலிக்கும் மவுசுக்கும் என்னடா வித்தியாசம் ? "
" தெரியலையே என்னடா ? "
" எலிக்கு பினாடி வால் இருக்கும் , மவுசுக்கு முன்னாடி வால் இருக்கும் ".

Monday, March 2, 2009

பிஸ்கெட்' ஜெ ' .செய்தித் துளிகள் .

பிஸ்கெட் என்றால்...
' பிஸ்கெட் என்ற வார்த்தை பிரெஞ்சு மொழியிலிருந்து தான் பிறந்தது . பிஸ்கெட் என்றால் , இரண்டு முறை சமைக்கப்பட்டது என்பதாகும் . பிஸ்கெட்டுக்கள் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்காக இரண்டு முறை வேக வைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே அதற்கு பிஸ்கெட் என்று பிரெஞ்சு மக்கள் பெயர் வைத்தனர் .
--குமுதம் சினேகிதி / செப்டம்பர் 16, 2008 .
மிஸ்ஸான ' ஜெ ' .
ஆங்கில எழுத்துக்கள் ஆரம்பத்தில் எத்தனை இருந்தன என்று தெரியுமா ? மொத்தமே இருபத்து நாலு எழுத்துக்கள் தானாம் ! இதில் ' J ' எழுத்து ஆரம்பத்தில் இல்லை . அதற்கும் அப்புறம் கடைசியாக வந்து சேர்ந்த
விருந்தாளி ' U '.
--- குமுதம் சினேகிதி / செப்டம்பர் 16 , 2008 .

செய்தித் துளிகள் .
--- தென்னாப்பிரிக்காவில் காந்திஜி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது , அங்கே கருப்பர் இனக் கைதிகளுக்கு
கொடுக்கப்படும் குல்லாய் காந்திஜிக்கும் வழங்கப்பட்டது . அதுதான் பின்னாளில் பிரசித்தமான காந்தி குல்லாயின் முன்னோடி .
---100 பூஜ்யங்களைக் கொண்ட எண்ணை ஆங்கிலத்தில் கூகால் ( GOOGOL ) என்கிறார்கள் .
--- நண்டு பக்கவாட்டில் தான் நடக்கும் .மீன் மிதந்தபடியேதான் தூங்கும் .குதிரை நின்றபடி ஓய்வு எடுத்துக் கொள்ளும் . வஞ்சகர் நெஞ்சில் வஞ்சகம் மட்டுமே குடி கொண்டிருக்கும்
--- பனிக்கட்டியில் கிருமிகள் உண்டாகாது , ஆகையால் தண்ணீரைவிட பனிக்கட்டி சுத்தமானது .
--- இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் பாதரசம் கிடைக்கிறது .
---- முதன் முதலில் 1300 -ம் ஆண்டு , ஹென்றிடிவிக் , என்பவர் கடிகாரத்தை உருவாக்கினார் .
--- மத்திய தரைக்கடலிலும், செங்கடலிலும் பவளங்கள் கிடைக்கின்றன .
--- எகிப்துதான் முதன் முதலில் காலண்டர் முறையை கண்டுபிடித்தது .
--- ' மே மாதம் 31-ம் தேதி , ' புகையிலை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கிறோம் .
--- பூக்காத பூ , அத்திப்பூ தான் .
--- எலும்புகளின் துணையின்றி தானே அசையும் இயங்கு தசை, நாக்கு .
--- குகைக்கோயில்களில் மிகப் பெரியது , எல்லோரா .
--- மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் கட்டுவதற்காக மண் தோண்டி எடுக்கப்பட்ட பள்ளம்தான் வண்டியூர் தெப்பக்குளம் .
--- பூஜை நாட்களில் அணிந்துகொள்ளும் நீளமான சட்டைக்கு வங்காளத்தில் ' பஞ்சாபி ' என்று பெயர் . அதே சட்டைக்கு பஞ்சாபில் ' பெங்காலி ' என்று பெயர் . என்ன ஒற்றுமை !

Sunday, March 1, 2009

ஊசி

ஊசி பயம் இனிமே இல்லை !
ஊசியை கண்டு அச்சப்படுபவர்களுக்காக மாஸ்கோவை சேர்ந்த ' ஷ்ரேயா லைப் சயின்சஸ் ' என்ற நிறுவனம் ' ஓரல்-- ரீகோசுலின் ' என்ற பெயரில் ஸ்பரே மூலமாக இன்சுலினை உட்செலுத்தும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .இது டைப்--1 மற்றும் டைப்--2 நீரிழிவு நோயாளிக்கு ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்தும் , குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி முறையாக பராமரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது . இதற்கான ரேபிட் மிஸ்ட் என்ற கருவியை அமெரிக்க கூட்டு நிறுவனமான லெனரெக்ஸ் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது . இக்கருவி ஸ்பிரே செய்யப்படும் இன்சுலின் , நிரையீரலில் சென்று சேராதபடி புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது .
இனிமே நீரிழிவு நோயாளிங்க ஊசி போட்டு, போட்டு உடம்பை புண்ணாக்கிக்க வேண்டாம் .
--சங்கீதா. தினமலர் . பெண்கள் மலர் . டிசம்பர் , 13 . 2008 .

புத்தர் !

ஒன்பதாண்டுகள் தன் சீடர்களுக்குப் போதித்த பின் மரணப்படுக்கையிலிருந்தார் ' போதி தர்மா' ( புத்தரின் முன்பிறப்பு ) .
" என் வாரிசாக கொள்கைகளைப் பரப்ப ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்" னு சீடர்களை ஒவ்வொருத்தரா அழைச்சாரு .
" நான் பிறர் காதுகளில் சென்ற்டையுமாறு போதிப்பேன்" னு ஒருத்தர் சொல்ல
" என்னுடைய சதைக்கு நீ பாத்தியதை உடையவன்"ன்னாரு குரு .
அடுத்தவர் வந்து" மக்களையெல்லாம் நேசிப்பேன் எனக்கு பேதமில்லை" ன்னாரு .
" என்னுடைய தோள் உனக்குரியது"ன்னாரு குரு .
அடுத்தவர் வந்து, " நான் புதிய சிந்தனைகளை உருவாக்குவேன்" னு சொல்ல ,
" என் எலும்களுக்கு சொந்தக்காரன் நீ " ன்னாரு குரு .
இனனொரு சீடர் வந்தாரு குருவை வண்ங்கிவிட்டு, எதுவும் பேசாம மௌனமா நின்னாரு .
குரு மகிழ்ந்து, " உன் மௌனமே சக்தி வாய்ந்தது. என் ஆன்மா உனக்குரியது, நீதான் அடுத்த குரு"ன்னாரு .
' ஹிகோ'ன்னு அழைக்கப்பட்ட அந்த சீடரே அந்த 'யென்' மரபின் இரண்டாவது குரு.