Saturday, July 4, 2009

18 படி வரலாறு .

சபரிமலை அய்யப்பன் கோவில் பதினேட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார் என்கிறார்கள் . அந்த பெயர்கள் :
குளத்தூர் பாலன் , ஆரியங்காவு ஆனந்தரூபன் , எருமேலி ஏழைப் பங்காளன் , ஐந்து மலைத்தவன் , ஐங்கார சகோதரன் , கலியுக வரதன் , கருணாகரத் தேவன் , சத்திரியபரிபாலகர் , சற்குணசீலன் , சபரிமலைவாசன் , வீரமணிகண்டன் , விண்ணவர்தேவன் , விஷ்ணு மோகினிபாலன் , சாந்தசொரூபன் , சற்குணநாதன் , நற்குணஜாலந்தன் , உள்ளத்தமர்வான் , அய்யப்பன் .
மேலும் , அய்யப்பனின் கையில் வில் , வாள் உள்ளிட்ட 18 வகையான ஆயுதங்கள் இருந்ததாகவும் , அவற்றைக் கொண்டு அவர் போரிட்டதாகவும் அவையே 18 படிக்கட்டுக்களாக தீர்மானிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்கள் . அத்துடன் , இந்த படிகட்டுகள் 18 தேவதைகள் அமர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள் .
2 வழிகள் : சபரிமலைக்குச் செல்ல 2 பாதைகள் உள்ளன . பெருவழிப்பாதை , சிறுவழிப்பாதை என்று இதை அழைகிறார்கள் .
48 மைல் தூரம் காடு , மலை கடந்து , நடந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது பெருவழிப்பாதையாகும் . 41 நாட்கள் கடும் விரதம் இருந்தால் தான் இந்த பாதையில் செல்ல முடியும் . அவ்வாறு இல்லாமல் , 3 நாட்கள் விரதம் இருந்து செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் சென்று , அங்கிருந்து சபரிமலைக்கு 5 மைல் தூரம் நடந்து செல்வார்கள் . இது சிறுவழிப்பாதையாகும் .
பெரும்பாலானபேர் சிறுவழிப்பாதையில் தான் செல்கிறார்கள் . மகரஜோதி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் பெருவழிப்பாதையில் செல்கிறார்கள் .
இருமுடி பொருட்கள் என்ன?
சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள் . அவ்வாறு இருமுடி கட்டி செல்லும் பக்தர்களே சபரிமலை அய்யப்பன் கோவிலின் 18 படிகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் . அந்த இருமுடியில் உள்ள முன்முடியில் சுவாமி அய்யப்பனுக்கு உரிய பூஜை பொருட்களும் , பின்முடியில் அந்த பக்தருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்படும் .
அதாவது , முன்முடியில் மஞ்சள் , சந்தனம் , குங்குமம் , வெற்றிலை , பாக்கு , கற்பூரம் , பச்சரிசி , அவல் , பொரி , விபூதி , புதிய துணி , தேங்காய் , ஊதுவத்தி , பசுநெய் , மெழுகுவர்த்தி , முந்திரி , திராட்சை , பன்னீர் , அரக்கு , வெல்லம் , பேரிச்சம்பழம் மற்றும் நெய் தேங்காய் ஆகியவை இருக்கும் .
பின்முடியில் அவல் , வெல்லம் , அரிசி , படியில் உடைக்க 2 தேங்காய் மற்றும் 6 தேங்காய்கள் இருக்கும் . மற்றும் தோள் பை , பிளாஸ்டிக் குவளை , தண்ணீர் கேன் , போர்வை , துண்டு , சிறு கத்தி , டார்ச் லைட் ஆகியவையும் உண்டு .
--- தினத்தந்தி . 11 - 11 - 2008

No comments: