ஐ.எஸ்.ஐ .என்றால்...
.ஒரு பொருளுக்கு ஐ.எஸ்.ஐ . , முத்திரை வழங்கும் முன் , தயாரிப்பாளர்கள் ஏராளமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் . முதலில் , நிறுவனம் வெளியிடும் தர நியமங்கள்படி பொருள் தயாரிக்க முடியுமா என்று கண்டறிதல் அவசியம் .
பிறகு , இத்தர நியமத்தின் படி தங்கள் பொருள்களை தயாரித்து , சோதனைச் சாலையில் பரிசோதித்து , பின் ' இந்திய தர நிர்ணய அமைவன'த்தை அணுகினால் , அதன் தொழில் நுட்ப அதிகாரிகள் , அந்த தொழிற்சாலைக்கு விஜயம் செய்து தயாரிப்பாளர்கள் தரமான பொருள்களை தயாரிக்க முடியும் என்று கண்டறிந்த பின்பே ஐ.எஸ்.ஐ .முத்திரையை குறிப்பிட்ட பொருள்களில் உபயோகிக்க அனுமதி வழங்குவார்கள் .
இந்த உரிமம் கூட ஒரு வருட காலத்திற்கு மட்டுமே . இந்த ஒரு வருட காலத்திலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தொழில் நுட்பாளர்கள் முன்னறிவிப்புடனோ , முன்னறிவிப்பு கொடுக்காமலோ , தொழிற்சாலைக்கு திடீர் விஜயம் செய்து , பொருள்கள் , அவர்கள் சொன்ன வழிமுறைகள் படி தயாரிக்கப்படுகின்றனவா என்று கண்டறிவர் .
அதையும் தவிர தொழிற்சாலைகளிலிருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் பொருள்கள் , யார் யாருக்கு விற்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து அந்த கடைகளுக்கோ , கோடவுன்களுக்கோ சென்று மாதிரி பொருள்களை எடுத்து வந்து மறுபடி அவர்களது பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பார்கள் .
எல்லாவற்றிற்கும் மேலாக நுகர்வோர்கள் , கடைகளில் ஐ.எஸ்.ஐ. , முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடு இருப்பதாக அறிந்தால் , அவர்கள் அருகில் உள்ள ' இந்திய தர நிர்ணய அமைவன' த்துடன் தொடர்பு கொண்டால் , அவர்களது ' புகார் நீக்கும் அதிகாரி ' உடனே குறைகளை களைய ஏற்பாடு செய்வார் .
ஐ.எஸ்.ஐ ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ . 50 ஆயிரம் வரை அபராதமும் , ஆறு மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்க பாராளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது.
--- டி.ஆர். ராஜகோபால். இயக்குனர் , ' இந்திய தர நிர்ணய அமைவனம் ' ஜனவரி . 09 , 1994 தினமலர் இதழில்
No comments:
Post a Comment