ஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .
* லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் இடம் 2-வது தளத்தில் அமைந்துள்ளது .
* ஆஸ்கர் விருது வழங்கும் இந்த அரங்கம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது . தியேட்டருக்கு மட்டும் ஆன செலவு 96 கோடி டாலர் . முழு அரங்கம் கட்டி முடிக்க 600 கோடி செலவு ஆயிற்று .
* 3400 இருக்கைகள் கொண்டது . A யில் ஆரம்பித்து Q வரை இருக்கைகள் உள்ளன . முதல் 4 வரிசை இருக்கைகள் வாத்தியக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .
* M இருக்கைவரை நடிகர் , நடிகைகளுக்கு மட்டும் . அதன் பின் வரிசைகள் மற்றவர்களுக்கு .
* விழா நடக்கும் போது எந்த ஒரு இருக்கையும் காலியாக இருக்கக் கூடாது . இதற்காக 120 இளம்பெண்கள் சீருடை அணிந்து தயாராக இருக்கிறார்கள் . இருக்கைகள் காலியானால் உடனுக்குடன் சென்று இவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .
* இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்கும் . வெள்ளி , சனிக்கிழமைகளில் கலைஞர்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் .
*இந்த ஸ்டுடியோவில்தான் எம்மி விருதுகள் , விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன . வருகின்ற 2010 -ம் ஆண்டிலிருந்து ஆஸ்கர் விருது வழங்கும் விழா மட்டுமே இங்கு நடைபெறுமாம் .
--- சாந்தா பத்மநாபன் . குமுதம் .18 - 03 - 2009 .
No comments:
Post a Comment