ஒரு குடும்பத்துக்கு ஒரே குழந்தை என்ற அரசு விதியை சீன நாடாளுமன்றதின் நிலைக்குழு நேற்று ரத்துசெய்தது. கூடவே, தவறு செய்தவர்களுக்கான கடும் உடலுழைப்பு முகாம்களும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. கணவன் அல்லது மனைவி ஆகியோரில் ஒருவர் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாதவர்களாக இருந்தால், அவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. உடலுழைப்பு முகாம்கள் மூடப்படுவதாகக் கூறப்பட்டாலும், போதை மருந்துக்கு அடிமையானவர்களை மீட்கும் முகாம், சிந்தனை சீர்திருத்த முகாம் என்ற வேறு பெயர்களில் இவை தொடர்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-- எத்திசையும். அரசியல் களம்.
-- ' தி இந்து ' ஆளிதழ். ஞாயிறு, டிசம்பர் 29, 2013.
-- எத்திசையும். அரசியல் களம்.
-- ' தி இந்து ' ஆளிதழ். ஞாயிறு, டிசம்பர் 29, 2013.
No comments:
Post a Comment