ரம்ஜானும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் டிசம்பரில் வருகிறது. இது இப்படி இருக்க திருப்பாவை , திருவெம்பாவை பற்றி சைவ வைணவ பேதமாக சிலர் நினைப்பது என்?
திருப்பாவையின் 'முதல் பாட்டின் முதல் எழுத்து "மா".(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்.....)
திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து "ஆ"(ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியை.....).
ஆண்டாள் பாடிய 'மா' என்ற திருப்பாவைப் பாட்டின் முதல் எழுத்து , திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரைக் குறிக்கும்.
அதேபோல மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை யின் முதல் பாட்டின் முதல் வரியான 'ஆ' என்பது திருப்பாவை பாடிய ஆண்டாளைக் குறிக்கும்.
காஞ்சி பெரியவர் கூறியது - 27-05-1985
4 comments:
நல்ல பொருத்தம்.
இஸ்லாமியர் நாள்காட்டியில் நாட்கள் ஆங்கிலக் நாட்காட்டி முறையைவிட குறைவு, நீங்கள் குறிப்பிட்டது போல் ரம்ஜான் டிசம்பர் மாதத்தில் மட்டுமே வராது.
அன்பு கோவி. கண்ணன் அவர்களுக்கு!
என்னுடைய தொகுப்பினை படித்து பார்த்து கமெண்ட்,மற்றும் ஆலோசனைகள் தருவதற்கு முதலில் நன்றி!
'ஆ' ,'மா' பற்றியும் கெட்டுள்ளீர்கள். பெரும் பாலும் ரம்ஜான் பண்டிகை டிசம்பரில் வருவதையொட்டியும், காஞ்சி பெரியவர்கள் சொன்னதையும் வைத்துத்தான் நான் அப்படி குறிப்பிட்டேன்.
சமயத்துக்கும் எனக்கும் ரொம்பத்தூரம் ஆனாலும் ஒரு புதுத்தகவல்.... நானும் யாரோடயாவது பேசும்போது அடிச்சு விடுறேன்
Post a Comment