Saturday, June 30, 2012

பொது அறிவு .


* முன்னர் சயாம் என்று அழைக்கப்பட்ட நாடு -- லாவோஸ்.
* தேசியகீதம் முழுமையாகப் பாடப்பட்டால் -- 52 வினாடி பிடிக்கும்.
* பாரக் ஒபாமா, அமெரிக்காவின் -- 44 வது அதிபர்.
* திரிபுரா மாநிலத்தில் பேசப்படும் மொழி -- பெங்காலி.
* ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதியவர் -- விகாஸ் ஸ்வரூப்.
* இலங்கை யாழ்ப்பாணம் ஆங்கிலத்தில் -- ஜப்னா என்று அழைக்கப்படுகிறது.
* உலக சுற்றுச்சூழல் நாள் -- ஜூன் 5.
* முப்படைகளின் தலைவர் -- பிரதீபா பாட்டீல்.
* அயோத்தி நகரம் -- உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
* நாட்டின் முதல் பெண் முதல்வர் சிசேதா கிருபளானி -- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
-- தினமலர் , 26 . 3 . 2012.

Friday, June 29, 2012

அறுபதில் வருவது .


அறுபதில் வருவது பொக்கை !
* இருபதில் திருமணம் -- வருவது பொக்கே
அறுபதில் திருமணம் -- வருவது பொக்கை !
* சாப்பிட வேணும் தட்டு
கல்யாணத்துக்கு வேணும் துட்டு !
* பூக்கள் இணைந்தால் மாலை
மனங்கள் இணைந்தால் சோலை !
* ஆறில் திருமணம் பால்ய விவாகம்
அறுபதில் திருமணம் சால்வை விவாகம் !
* பரிசம் போட்டா வருவது நிச்சயத்தட்டு
பந்தல் போட்டா வருவது கூறைப்பட்டு !
* அலங்காரம் செஞ்சுக்காத பொண்ணும்
அலட்டல் செய்யாத மாப்பிள்ளையும்
திருமணம் செஞ்சுக்கிட்டதா சரித்திரம் இல்லை !
--- பி.விக்டோரியா, சேலம்.
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Thursday, June 28, 2012

அறிந்து கொள்வோம்....அமெரிக்கா


** அமெரிக்க தேசிய கொடிக்கு ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டைரப்ஸ், ஓல்ட், குளோரி, தி ஸ்டார் ஸ்பாங்க்ல்ட் பேனர்
என்ற பெயர்களும் உண்டு.
** அமெரிக்க தேசிய கொடியில் மூன்று வண்ணங்கள் உள்ளன. அவை, வெள்ளை, சிகப்பு, ஊதா.
** வெள்ளை, சிவப்பு நிறத்தில் 13 நீள கோடுகள் இடம் பெற்றுள்ளது. பிரிட்டனிடம் இருந்து போராடிய 13 காலனிகள்
இணைந்து அமெரிக்கா என உருவானதை அந்தக் கோடுகள் சுட்டிக் காட்டுகின்றன.
** 50 வெள்ளை நிற நட்சத்திரங்கள், 50 மாகாணங்களை நினைவுபடுத்துகின்றன.
** தலைநகரம். வாஷிங்டன் டி.சி. ( டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா ).
** பெரிய நகரம் நியூயார்க்.
** பார்லிமென்ட் ( காங்கிரஸ் ): செனட் சபை ( 100 உறுப்பினர்கள் ). பிரதிநிதிகள் சபை ( 435 உறுப்பினர்கள் ).
** அதிபர் வசிக்கும் இடம்: வெள்ளை மாளிகை.
** மோட்டோ : இன் காட் வி டிரஸ்ட்.
** பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது: 1776, ஜூலை 4. அங்கீகாரம், 1783 செப்டம்பர் 3.
--- தினமலர் .2 . 4 . 2012.

Wednesday, June 27, 2012

சிரிச்சு வையுங்க !


** " என் மனைவி கூகுள் மாதிரி...."
" புரியலையே.....?"
" ஒண்ணு விடாம தேடிக் கண்டுபிடிச்சுடுவா....!"
** " வெளியே செல்லுமுன் அபிஷேக் பச்சன் தன் மனைவியை எப்படி அழைப்பார் ?"
" ஐஸ் வர்யா ?"
** " என்னங்க, அத்தை சொன்னா கேளுங்க..."
" அப்புறம் உனக்குக் கோபம் வருமே?"
" அத்தை சொன்னா கேளுங்க... நான் சொன்னா மட்டும் செய்யுங்க... சரியா?"
** " உன் திருமணத்துக்கு வந்தவங்க எல்லாரும் ஹனிமூனுக்கு வந்தாங்களா.. எப்படி?"
" திருமணம் நடந்ததே கொடைக்கானலில்தானே !"
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Tuesday, June 26, 2012

- தெரிந்துகொள்வோம்.

பிறந்த ஊர் -- தெரிந்துகொள்வோம்.
* ஜெயலலிதா -- மேலுகோடே ( கர்நாடகா ).
* சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா -- வத்தலகுண்டு.
* தில்லையாடி வள்ளியம்மை -- ஜோக்கன்னஸ்பர்க் ( தென். ஆப் ).
* வ.உ.சி. -- ஒட்டப்பிடாரம்.
* திரு.வி.க. -- துள்ளம் 9 திருவள்ளூர் ).
* பாரதிதாசன் -- புதுச்சேரி .
* வ.வே.சு. ஐய்யர் -- வரகனேரி ( திருச்சி ).
* புலித்தேவன் -- நெல்கட்டும் செவல் ( நெல்லை ).
* மருது சகோதரர்கள் -- முக்குளம் ( அருப்புக்கோட்டை ).
* சத்தியமூர்த்தி -- திருமயம் ( புதுக்கோட்டை ).
-- தினமலர் , 26 . 3 . 2012.

Monday, June 25, 2012

சிரிப்பு வருது...!

சிரிக்க... சிரிக்க... சிரிப்பு வருது...!
வெஜ்னா - தக்கா ' lee'
ஃப்ரூட்னா - பப்பா 'lee'
பேர்னா - சோனா 'lee'
ஃபர்னிச்சர்னா - நாற்கா 'lee'
ஃபியர்னா - பெருச்சா 'lee'
டிஸீஸ்னா - தலைவ 'lee'
ஸ்வீட்னா - போ 'lee'
ப்ரேக்ஃபாஸ்ட்னா - இட் 'lee'
ஃபெஸ்டிவல்னா - தீபாவ 'lee'
கவிதைன்னா - வா 'lee'
( தெரிது தெரிது நீங்க ரொம்ப ஜா 'lee' )
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Sunday, June 24, 2012

தெரிந்து கொள்வோம்...


* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே.
* உலகின் கூரை திபெத்.
* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.
* வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான்.
* வாஷிங் மிஷினை கண்டுபித்தவர் ஜேம்ஸ் கிங்.
* நாட்டின் முதல் பெண் கவர்னர் டாக்டர் சரோஜினி நாயுடு.
* மகிழ்ச்சியின் சர்வதேச அடையாள பறவை புளூபேர்ட்.
* டகா என்பது வங்கதேசத்தின் கரன்சி.
* தேசிய இளைஞர் நாள் ஜனவரி 12.
* நாட்டின் நீண்டதூர பயணம் மேற்கொண்ட ரயில் விவேக் எக்ஸ்பிரஸ்.
* அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி பெயர் மிச்செல்.
--- தினமலர் , 19 . 3 . 2012.

Saturday, June 23, 2012

Sorry மன்னிப்பாயா?


ஹாவாய்க்காரர்கள் நான்கு வாக்கியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எப்படி மன்னிப்பது? எப்படி மன்னிப்பு கேட்பது?
-- இதோ இந்த வாக்கியங்களில் மன்னிப்பை வேண்டுங்கள்:
" நான் வருந்துகிறேன் "
" நான் உங்களை நேசிக்கிறேன் "
" தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் "
" உங்களுக்கு நன்றி "
இது நல்ல பயன்தரும் சிகிச்சை முறை. ஆனால், இந்த வாக்கியங்களை மனசுக்குள் இதே வரிசையில் மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டும் என்பது முக்கியம்.
நன்றி: ' சன்டே எக்ஸ்பிரஸ் '
தகவல்: ஸ்ரீதரப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர்.
-- மங்கையர் மலர் . ஏப்ரல் 2012.
--- இதழ் உதவி: N. கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

Friday, June 22, 2012

பறக்க பரிசோதனை.


* வானில் பலூன் மூலம் பறப்பதற்கு உரிய முறைப்படி பரிசோதனையில் வென்று லைசென்ஸ் பெறவேண்டும். இது உலகம் முழுவதும் உள்ள விதியாகும்.
* தும்மலின் வேகம் மணிக்கு 166.7 கிலோமீட்டர் தூரம் ஆகும். தும்மலின் துளிகள் 3.5 மீட்டர் வரை பரவும்.
* 6 செ.மீ அகலம், 3 செ.மீ தடிமனில் உள்ள சிறுநீரகங்களில் சுமார் ஒரு மில்லியன் சிறுநீர் முடிச்சுகள் ( நெப்ரான்கள் )
இருக்கின்றன. இந்த முடிச்சுகளை இழுத்து இணைத்து நீண்ட குழாய் மாதிரி செய்தால் அதன் நீளம் சுமார்
அறுபது கிலோ மீட்டர் வரை இருக்கும்.
* விநாயகப் பெருமானை துளசிமலராலும், சிவபெருமானை தாழம்பூவினாலும், விஷ்ணுவை ஊமத்தம் பூவினாலும்,
அம்பிகையை அருகம் புல்லாலும், லட்சுமியை தும்பைப்பூவினாலும், சரஸ்வதியை பவளமல்லியாலும் பூஜிக்க
கூடாது.
--- தினமலர் இணைப்பு , 24 . 3 . 2012.

Thursday, June 21, 2012

12 வகை உணவுப் பழக்கம்.


தமிழர்கள் 12 வகை உணவுப் பழக்கம்.
உணவு விஷயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
* 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
* 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
* 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
* 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
* 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
* 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
* 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
* 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
* 9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
* 10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
* 11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
* 12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.
-- குமுதம் , ஃபுட்ஸ் ஸ்பெஷல் . 28 . 3 . 2012 .

Wednesday, June 20, 2012

'ஓம்'


போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Tuesday, June 19, 2012

பொது அறிவு .


** அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? -- ஜார்ஜ் வாஷிங்டன்.
** சாலிஸ்பரி என்று முன்னர் அழைக்கப்பட்ட நகரம் எது ? -- ஹராரே.
** ஒரு மைல் எத்தனை மீட்டர்? -- 1609.344.
** எந்த நாட்டின் தபால்தலையில் ஹெல்வெடியா என இருக்கும்? -- சுவிட்சர்லாந்து.
** யென் எந்த நாட்டின் கரன்சி? -- ஜ்ப்பான்.
** ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் எது? -- கோல்டன் வாட்டில்.
** பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் குளிர்கால தலைநகரம் எது? -- சிம்லா.
** செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் இருக்கும்? -- 64.
** ஐந்து வரி வடிவங்களில் எழுதப்ப்படும் மொழி எது? -- கொங்கனி.
** பின்கண்டவற்றில் எது உலோகம் இல்லை? -- வைரம்.
--- தினமலர் , 12 . 3 . 2012.

Monday, June 18, 2012

தெரிந்து கொள்வோம்...


தேசிய நெடுஞ்சாலைகள்.
என் எச் 4 -- சென்னை -- மும்பை
என் எச் 5 -- சென்னை -- கோல்கத்தா
என் எச் 7 -- சென்னை -- வாரணாசி
என் எச் 45 -- சென்னை -- திண்டுக்கல்
என் எச் 47 -- சேலம் -- கன்னியாகுமரி
என் எச் 49 -- மதுரை -- ராமேஸ்வரம்
என் எச் 220 -- கொல்லம் -- தேனி
--- தினமலர் , 12 . 3 . 2012.

Sunday, June 17, 2012

வேத மரம் !


காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலின் மிகப் பழமையான மாமரம் காய்த்திருப்பதில் பக்தர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!
'ஏகம்' என்றால் ஒன்று, ' ஆம்பரம்' என்றால் மரம். 'மரமாய் உருவாகி நின்றவர் ஏகாம்பரநாதர்' என்பது இம்மரத்தைப் பின்னணியாய்க்கொண்ட புராணச் செய்தி. இதன் ஒவ்வொரு மரக் கிளையில் இருந்து உருவாகும் ஒவ்வொரு காயும் தனித் தனி சுவைகொண்டது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு கிளை. ரிக் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் புளிப்பும், யஜுர் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் இனிப்பும், சாம வேதக் கிளையில் கசப்பும், அதர்வண வேதக் கிளையில் உவர்ப்புச் சுவையும் என நான்கு வித சுவைகொண்ட காய்களை ஒரே மரத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இம்மரம் வேரோடு சாய, பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். பிறகு மரத்தின் பழங்களை, கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்குக் கொண்டுசென்று, ஆய்வு செய்து, அப்பழ விதையை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்து, மீண்டும் மரத்தைத் துளிர்க்கச் செய்து உள்ளனர். இப்படி அறிவியலும் ஆன்மிகமும் சேர்ந்த ஒரு அற்புத மரம், இந்த வேத மரம்!
--- எஸ். கிருபாகரன். ஆனந்தவிகடன் இணைப்பு , 11 . 5 . 2011.

Saturday, June 16, 2012

ஓம் !


இவ்வளவு நேரம்தான் ஒலிக்க வேண்டும்.
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை மாத்திரை என்று சொல்லுவார்கள். ஒரு நொடிப்பொழுது அல்லது இயல்பாக கண் இமைக்கும் நேரத்தை ஒரு மாத்திரை என்று இலக்கண நூல்கள் சொல்கின்றன.
ஓம் என்கின்ற மூல மந்திரத்தை எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பெரியாழ்வார்.
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்எழ வாங்கு என்பது ஆழ்வார் வாக்கு. மந்திர சாஸ்திர நூல்கள் இம்மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் அல்லது இரண்டரை மாத்திரை நேரம் ஒலிக்கலாம் என்று சொல்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. இரண்டரை மாத்திரை நேரம் ஒலித்தால் இவ்வுலக இன்பங்களை எளிமையாக, முழுமையாக பெறலாம். மூன்று மாத்திரை நேரம் ஒலித்தால் இறை ஞானம் விரைவில் கிட்டும்.
--- தினமலர் இணைப்பு . 15 . 3 . 2012 .

Friday, June 15, 2012

தகுதி !


எதற்குமே தகுதி என்ற ஒன்று வேண்டும். வாழும்போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தகுதி வேண்டும்.
பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest. ' எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும். தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும். அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம்! ஆனால், எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அவற்றைத் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்.
' எலிஜிபிள் பேச்சிலர் ' என்னும் சொல்லாடலைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். திருமண மாப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய அதிமுக்கிய தகுதியை, நாவிதர் மூலம் திருமணத்திற்கு முந்தைய நாள் பரிசோதிக்கும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது.
வாழ்வில் வெற்றிபெறச் சில அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என 60 வகையான தகுதிகளைச் சில சுய முன்னேற்றப் பயிற்சிகளில் வலியுறுத்துவார்கள். இதை Soft skills என்பார்கள். நம்பகத்தன்மை, வளைந்துகொடுத்துப் பேசுவது, கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது, கூட்டுமுயற்சியில் ஒத்துழைப்பது, அனுபவம், கண்ணியம் என நீளும் அந்த லிஸ்ட்...
' இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். '
என்ற திருக்குறளில் திருவள்ளுவர் ஆராயச் சொன்னது தகுதியைத்தான் !
--- லதானந்த், குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Thursday, June 14, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்? -- லட்சுமணன் - ஊர்மிளை, பரதன் - மாண்டவி,
சத்ருக்கனன் - சுருதகீர்த்தி.
** சூரியனின் நட்பு கிரகங்கள் எவை ? -- செவ்வாய், குரு, சந்திரன்.
** குற்றாலநாதரின் அம்பாள் பெயர் -- குழல்வாய்மொழி நாயகி.
** நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது? -- திங்களூர் ( தஞ்சாவூர் மாவட்டம் ).
** காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்? -- ஜுரகேஸ்வரர்.
** தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி -- அட்டை.
** ' பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை? -- நரசிம்மர்.
** ' பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? -- பக்தர்களிடம் கருணை உள்ளவன் ( வத்சலம் - கருணை ).
** இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது? -- ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்/
** ' நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக கருதி பாடிய சிவபக்தர் யார்? -- மாணிக்கவாசகர்.
--- -தினமலர் இணைப்பு. 7 . 5 . 2011. ( சென்னை பதிப்பு )

Wednesday, June 13, 2012

தமாஷ் !


** டேக் கேர் டங்க் !
பேசும் வரை அந்த வார்த்தைகள் உனக்கு அடிமை... பேசிய பின்பு அந்த வார்த்தைகளுக்கு நீ அடிமை !
** சங்கப் பலகை !
கேலண்டரில் தேதி கிழிக்கிறது முக்கியம் இல்ல... அந்தத் தேதியில நாம என்ன கிழிச்சோம்கிறதுதான்
முக்கியம்.
** பவர்கட் புலம்பல்!
சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்... கரன்ட் கட் பார்த்து டைம் சொல்றது இந்தக் காலம்.
தேங்க்ஸ் டு தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு !
--- அவள் விகடன் , 27 . 3. 2012 .
--- இதழ் உதவி: N.கிரி , நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).

Tuesday, June 12, 2012

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் !


** ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் -- புனர்பூசம்.
** 'திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள் -- திருவாதிரை, திருவோணம்.
** ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் -- கிருஷ்ணர்.
** ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் -- இரண்டேகால்.
** சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் -- மூலம்.
** ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள் -- ஆடிப்பூரம்.
** நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்தநாள் -- சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்.
** முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள் -- கார்த்திகை, விசாகம்.
** சுப நிகழ்ச்சிகள் செய்ய ---- நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர். -- ரோகிணி.
** நட்சத்திர மண்டலத்தில் முதல் நட்சத்திரமாக திகழ்வது -- அசுபதி.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Monday, June 11, 2012

காசி.


காசிக்கு தம்பதியராகப் போவதுதான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாத்திரங்கள் கூறுகின்றன.
-- ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார் , மயிலாடுதுறை.
'ஓம்'
போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

Sunday, June 10, 2012

ரீடர்ஸ் பேட்டை,


** மயிலுக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம் ...?
யோசிங்க... யோசிங்க... மயில் தேசியப் பறவை. கிளி ஜோசியப் பறவை ! எப்பூடி...?
** சிவன் கோயிலுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்...
அங்கே நந்தி இருக்கும்;
இங்கே தொந்தி இருக்கும் !
** மேனேஜர் : இப்ப சுத்தறதைவிட உலகம் 30 மடங்கு வேகமா சுத்தினா என்னாகும்...?
கிளார்க் : எனக்கு தினமும் சம்பளம் கிடைக்கும் சார் ...!
--- குங்குமம் 29 . 11 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Saturday, June 9, 2012

தெரிந்து கொள்வோம் !


** பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் கால்வாய் பனாமா. இது வட, தென்
அமெரிக்காக்களை இணைக்கிறது. கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் தென்மெரிக்கக் கண்டத்தைச்
சுற்றியே செல்ல வேண்டி இருந்தது. 1914ம் ஆண்டு கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. அதன் நீளம் 82 கி.மீ, அகலம் 1000
அடி, ஆழம் 45 அடி.
** பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு, 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின்
பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கி கொண்டு தங்கள் கருத்துகளை
பரிமாறிக் கொள்ளலாம். பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்கள் புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்புகொள்ளும்
விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.
** கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக்கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில்
ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும்.

Friday, June 8, 2012

ஜோக்ஸ்.


** " நம்ம தலைவருக்கு பிடிச்ச போலீஸ்காரங்க நிறைய இருக்காங்க..."
" சரியா சொல்லு... தலைவருக்குப் பிடிச்சவங்களா... இல்ல, தலைவரைப் பிடிச்சவங்களா...?"
** " டூவீலர்ல போகும்போது ' 60 ' க்கு மேல போகாதேன்னு அப்பவே அவன்கிட்ட நான் சொன்னேன்! கேட்டானா ? "
" ஏன் ? என்ன ஆச்சு ? "
" இப்ப ' 108 ' ல் போயிட்டிருக்கான் ."
** " டாக்டர் என் வலது காது சரியா கேட்க மாட்டேங்குது..."
" பயப்பாடாதீங்க ! வயசாகுதில்லையா ?"
" என்னை ஏமாத்துறீங்களா ? ரெண்டு காதுக்கும் ஒரே வயசுதானய்யா ஆகுது ?"
** " திருமணமான புதிதில் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தா நாய் குரைக்கும். அப்போ மனைவி அன்பா வந்து முத்தம்
தருவா."
" இப்ப எப்படி நடக்குது ?"
" இப்போ வீட்டுக்கு வந்தா, நாய் அன்பா ஓடி வந்து முத்தம் கொடுக்குது. மனைவி குரைக்கிறா."

Thursday, June 7, 2012

தண்டனை .


தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
--- லதானந்த், குங்குமம் 18 . 10 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

Wednesday, June 6, 2012

அர்த்தப் புதையல் .


சூர்பகர்ணாயே
நமஹ:
சூர்பம் -- முறம்;
கர்ணம் -- காது.
முறம் போன்று இருக்கும் யானையின் காது, அரிசியை புடைக்கும்போது, முறம் தூசிகளை கீழேதள்ளி விடுகிறது. தூசியில்லா அரிசிதான் முறத்தில் எஞ்சியிருக்கும். அதுபோல், காதில் விழும் வார்த்தைகளில் நல்லதை தேர்ந்தெடுத்து, தீயதை தள்ள வேண்டும் என்று விநாயக அஷ்டோத்தரத்தில் வருகிறது.
-- அனகா, சென்னை. தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Tuesday, June 5, 2012

' மாயா '


உடல் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அது இல்லை என்பதும் உண்மை. சற்று ஆழமாகப் பார்த்தால் உடல், மனம் இரண்டும் வேறு வேறு பொருளல்ல. கண்ணுக்குத் தெரியும் மனமே உடல், கண்ணுக்குத் தெரியாத உடலே மனம் என்கிறார் ஓஷோ. விஞ்ஞானமும் அப்படித்தான் சொல்கிறது. இதைத்தான் ஐன்ஸ்டீன் E = MC 2 என்று கூறினார். உயிரணுக்களின் அமைப்பின், இயக்கத்தின் வேக தாளத்தைப் பொறுத்து ஒன்று கண்ணுக்குத் தெரியும், இன்னொன்று தெரியாது. வேகம் கூடக்கூட ஐம்புலன்களுக்குப் புலப்படாது. அப்படியானால் எல்லாமே வெறும் தோற்றம்தான். இந்த உண்மையைத் தான் நமது மரபு ' மாயா ' என்று கூறியது. நமக்கு ' சாயா ' குடிப்பதில் உள்ள ஆர்வம் கூட மாயா பற்றி இல்லை .
--- நாகூர் ரூமி , கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Monday, June 4, 2012

ஒற்றுமை !


ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை :
** இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது .
** இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
** இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
** இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
** இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள். ' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' --
ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள். ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
** இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு
கட்டுப்பட்டார்.
** பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
-- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம். தீபம். அக்டோபர் 5, 2011 .
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Sunday, June 3, 2012

காது குத்த...


குழந்தைகளுக்கு காது குத்த கனிவான நாள் :
குழந்தை பிறந்து 6, 7, 8 வது நாளில் அல்லது முதல் பிறந்த நாளில் காது குத்தும் விழா செய்யலாம். இரண்டு திதி அல்லது இரண்டு நட்சத்திரம் வராத நாளாக அது இருக்க வேண்டும் . திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும், வளர்பிறை, த்விதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய 6 திதிகளும், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சித்திரை, திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் சிம்மம், விருச்சிகம், கும்பம் தவிர மற்ற 8 லக்னங்களும், கர்ணவேதை ( காது குத்ததல் ) செய்ய உகந்தவை . லக்னத்துக்கு 8 -ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது .குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது . குழந்தையின் தாய் மாமாவின் மடியில் அமர்த்தி காது குத்தல் செய்ய வேண்டும் .
--- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி . 26 . 2 . 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Saturday, June 2, 2012

தத்துவம் மச்சி தத்துவம் .


**" பர்சனல் லோன் கேக்கறீங்களே...எதுக்குன்னு சொல்லமுடியுமா ? "
" அதான் பர்சனலாச்சே... எப்படி சார் சொல்ல முடியும் ..?"
** " இந்த வீடு எங்கப்பா எம்.எல்.ஏ -வா இருக்கும்போது, ஒவ்வொரு கல்லா..."
" பார்த்துப் பார்த்து கட்டினாரா ...? "
" இல்லை... மேடையில வந்து விழுந்ததை வச்சு கட்டினது .."
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

Friday, June 1, 2012

ஜோக்கூ....


** கேட்கும் கேள்விகளுக்கு
பெண்கள்
சரியான பதிலைச் சொல்வது...
எக்ஸாம் பேப்பரில் மட்டுமே !
** கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் ...
பக்கத்து வீட்டு ஃபிகர்
ஊரில் இல்லை .
--- குங்குமம் , 18 . 7. 2011 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .

காந்திஜி -- கோட்சே !


காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . கோட்சே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மனம் வருந்தியவனாக ' எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாது. காந்திஜி உயிரோடு இருந்தால் இதை அனுமதிக்க மாட்டார் ' என்று கெஞ்சினான .
அதனை ஒரு கருணை மனுவாகவும் எழுதிக் கொடுத்தான் . அந்தக் கருணை மனு அப்போது இந்தியாவின் கவர்னல் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ராஜாஜி அளித்த பதில் : ' உண்மைதான் காந்திஜி உயிரோடு இருந்தால் கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா ? '
--- இலக்கியப்பீடம், பிப்ரவரி , 2012 .
--- இதழ் உதவி : செல்லூர் கண்ணன் . செல்லூர் , காரைக்கால் .