காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலின் மிகப் பழமையான மாமரம் காய்த்திருப்பதில் பக்தர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!
'ஏகம்' என்றால் ஒன்று, ' ஆம்பரம்' என்றால் மரம். 'மரமாய் உருவாகி நின்றவர் ஏகாம்பரநாதர்' என்பது இம்மரத்தைப் பின்னணியாய்க்கொண்ட புராணச் செய்தி. இதன் ஒவ்வொரு மரக் கிளையில் இருந்து உருவாகும் ஒவ்வொரு காயும் தனித் தனி சுவைகொண்டது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு வேதத்திற்கும் ஒரு கிளை. ரிக் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் புளிப்பும், யஜுர் வேதக் கிளையில் காய்க்கும் காய்கள் இனிப்பும், சாம வேதக் கிளையில் கசப்பும், அதர்வண வேதக் கிளையில் உவர்ப்புச் சுவையும் என நான்கு வித சுவைகொண்ட காய்களை ஒரே மரத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இம்மரம் வேரோடு சாய, பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். பிறகு மரத்தின் பழங்களை, கோவை வேளாண் பல்கலைக் கழகத்துக்குக் கொண்டுசென்று, ஆய்வு செய்து, அப்பழ விதையை அறிவியல்பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்து, மீண்டும் மரத்தைத் துளிர்க்கச் செய்து உள்ளனர். இப்படி அறிவியலும் ஆன்மிகமும் சேர்ந்த ஒரு அற்புத மரம், இந்த வேத மரம்!
--- எஸ். கிருபாகரன். ஆனந்தவிகடன் இணைப்பு , 11 . 5 . 2011.
No comments:
Post a Comment