Monday, June 11, 2012

காசி.


காசிக்கு தம்பதியராகப் போவதுதான் விசேஷம். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராட சில நியதிகள் உண்டு. ஒன்று மனைவி அல்லது மகனின் கையைப் பிடித்துக்கொண்டு நீராட வேண்டும். இருவரும் இல்லாத பட்சத்தில் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். இம்மூன்றிலும் தம்பதியராக நீராடுவதே உத்தமம் என சாத்திரங்கள் கூறுகின்றன.
-- ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார் , மயிலாடுதுறை.
'ஓம்'
போற்றி பாடும் போது ' ஓம்' என்பது ஏன்?
108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் 'ஓம்' சேர்க்கிறோம். முடியும் இடத்தில் 'போற்றி' என்கிறோம். உதாரணத்துக்கு 'ஓம் முருகா போற்றி'. 'ஓம்' என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று :
" ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், ' என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் 'ஓம்' என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வத்தை அழைக்கிறோம். அப்படி சொல்லும்போது, அந்தந்த தெய்வங்களிடம் ' என்னை உன்னோடு சேர்த்துக்கொள்' என்று பொருள். தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறொம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குறிய பலன் உறுதியாக கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமாந்தமும் ஏற்படும்.
---தினமலர் இணைப்பு. 23 . 4 . 2011. ( சென்னை பதிப்பு )

No comments: