மொபைல் ஆஸ்பத்திரி, மொபைல் கோர்ட் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது மொபைல் வீடும் வந்துவிட்டது. இங்கல்ல, அமெரிக்காவில்.
' தி ஹீட் ' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மொபைல் வீடு 53 அடி நீளமும், 30 டன் எடையும் கொண்டது. ஹைட்ராலிக் முறையில் இதன் இரண்டாவது தளம் மேலெழும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி மேலெழும்பும் போது 15 அடி 10 இன்ச் உயரம் கொண்டதாக இருக்கும். 2 குளியலறைகள், சமையலறை, ஹால், பெட் ரூம் என்ற சகலவசதிகளுடன் இருக்கும். இந்த வீட்டில், 7 இடங்களில் 60 இன்ச் கொண்ட 3டி தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வெளியில் நிலவும் தட்பவெப்பத்திற்கேற்ப இந்த வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் உதவியுடன் வீடு தானாகவே குளிர்ச்சி அல்லது வெப்பப்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்த வீட்டை சுற்றிலும் 360 டிகிரி கோணத்தில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், வீட்டிற்கு வெளியே யாராவது நின்றால் கூட உள்ளே இருக்கும் டிவியில் தெரிந்து விடும். 12 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் யார் வேண்டுமானாலும் நுழையலாம். ஆனால், படுக்கை அறையில் மட்டும் டெமிமூர் ரேகை வைத்தால் மட்டுமே கதவு திறக்கும்.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 8,2013.

No comments:
Post a Comment