" கடவுள் பாதி... மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான மனிதன் ?"
" லியானார்டோ டாவின்ஸி தன்னுடைய ' லாஸ்ட் சப்பர் ' ஓவியத்தில், யேசுவின் படம் வரைவதற்கு மாடல் தேடிக்கொண்டிருந்தார். வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு சர்ச்சில் வசீகரமும், தேஜஸும் நிறைந்த அழகுடன் கூடிய பீட்ரோ பெண்டினம்லி என்ற இளைஞரைப் பார்த்தார். மிகவும் அகமகிழ்ந்து அவரை மாதிரியாகவைத்து யேசுவை வரைந்து முடித்தார். ஆனால், யேசு உள்ளிட்ட அனைத்துச் சீடர்களையும் வரைந்து முடித்த பிறகு, அந்த ஓவியத்தில் இடம் பெறவேண்டிய பாவங்களால் இறுகிப்போயிருக்கும் முகத்துடன் கூடிய யூதாஸ் பாத்திரத்துக்கு உரிய முகத்தை அதனால் ஓவியம் முழுமை அடையாமலேயே இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு, ரோம் நகரில் டாவின்ஸி எதிர்பார்த்த அதே தோற்றத்தோடு ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தார். உடனே அவனுக்குப் பணம் கொடுத்து அழைத்துவந்து அமர்த்தி, ஓவியத்தை வரையத் தொடங்கினார். அப்போது அவனிடம் ' உன் பெயர் என்ன ? ' என்று கேட்டார் டாவின்ஸி.
' நான் பீட்ரோ பெண்டினம்லி, பல வருடங்களுக்கு முன்னால் உங்களின் ஓர் ஓவியத்துக்கு யேசுவாக நான்தான் மாடலாக இருந்தேன் ' என்றான் அவன். ஒவ்வொரு மனிதனுமே கடவுளும் மிருகமும் கலந்து செய்த கலவை என்பதை உணர்கிறீர்களா?"
-- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.
-- .( நானே கேள்வி... நானே பதில் ! ).
-- ஆனந்த விகடன். 24 .7.2013.

No comments:
Post a Comment