Sunday, March 12, 2017

ஐன்ஸ்டீன்

   E=MC2  என்ற  கூற்று  1905ல்  இயற்பியல்  வரலாற்றில்  புரட்சியை  ஏற்படுத்தியது.  அந்த  கூற்றின்  அடிப்படையான  சிறப்புச்  சார்புக்  கோட்பாட்டைக்  கண்டறிந்தபோது ஐன்ஸ்டீனுக்கு  26  வயது.  மூன்று  வயதுவரை  ஐன்ஸ்டீன்  பேச்சாற்றல்  இல்லாத  குழந்தையாக  இருந்தார்.  அவர்  பள்ளியில்  எடுத்த  அதிகப்படியான  மதிப்பெண்  நூற்றுக்கு  ஐம்பதுதான்.  சிறு  வயது  முதல்  இசை  கேட்டு  ரசிப்பதும்,  வயலின்  இசைப்பதும்  ஐன்ஸ்டீனுக்கு  பிடித்தமான  விஷயங்கள்.
     ஐன்ஸ்டீனின்  வீட்டுக்கு  வந்து  டியூஷன்  மாஸ்டர்  கணிதம்  மற்றும்  தத்துவத்தைக்  கற்பித்தார்.  அவர்  ஒரு  நாள்  ஐன்ஸ்டீனிட்ம்  குழந்தைகளுக்கான  அறிவியல்  புத்தகம்  ஒன்றைத்  தந்தார்.  அதில் "மின்சாரக்  கம்பத்துக்குள்  மின்சாரம்  பாயும்  வழி  எங்கும்  நாமும்  ஓடினால்  எப்படி  இருக்கும்?"  என  எழுதியிருந்தது.  அதைப்  படித்தவுடன்  ஐன்ஸ்டீனின்  அறிவியல்  கற்பனைகள்  விரியத்  தொடங்கின.  "ஒலி  என்பது  அலையாக  இருந்தால்  அது  உறைந்த  நிலையில்தான்  காட்சி  அளிக்கும்.  ஆனால்  ஒளி  பாய்கிறதே.  இது  அணு  பற்றிய  கருத்தியலுக்குப்  புறம்பானதே."  என  மனதில்  சினிமாவாக  ஒளியின்  ஓட்டத்தைக்  காண  தொடங்கினார்.  அன்று  தோன்றியக்  காட்சியை  10  வருடங்களாக  அசைபோட்டதின்  விளைவாகவே  சிறப்புச்  சார்புக்  கோட்பாடு.
-- ம.சுசித்ரா.  ( பன்முக  அறிவுத்திறன் ).  வெற்றிக்கொடி.
-- 'தி இந்து'  நாளிதழ்.  இணைப்பு. செவ்வாய், டிசம்பர் 23, 2014.   

No comments: