தமிழகத்தில் இருந்த சித்த மகாபுருஷர்களுள் ஒருவரான தேரையார், "காலையில் கல்லும், மாலையில் புல்லும் ஆளை வெல்லும்" என்று சொல்லியிருக்கிறார். அதிகாலையில் துயிலெழ வேண்டும். துயிலெழுந்தவுடன் பல் துலக்கிவிட்டுக் கொஞ்ச தூரமாவது கட்டாந்தரையில் நடக்க வேண்டும். கல் தரையில் நடக்க வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனமானபின் புல் தரையில் நடக்க வேண்டும். நடக்கும் போது வெறுங்காலுடன் நடக்க வேண்டும். இந்த நடைப்பழக்கம் பாதத்தில் உள்ள நரம்பு முடிச்சுகளுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். அதன்மூலம் நோயற்ற வாழ்வு கிடைக்கும். இதைத்தான் தேரையாரின் வாக்கு குறிப்பிடுகிறது.
-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 14, 2014.
-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 14, 2014.
No comments:
Post a Comment