Friday, March 17, 2017

ஆன்ம லாபம்.

  ஆன்ம  லாபம் பெறவேண்டுமாயின்,  திருமூலர்  கூறுகின்றார் :
'உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்
 திடம்  பட  மெய்ஞ்ஞானம்  சோரவும்  மாட்டார்
 உடம்பை  வளர்க்கும்  உபாயம்  அறிந்தே
 உடம்பை  வளர்த்தேன்  உயிர்  வளர்த்தேனே'
     'உடம்பு  ஆலயம்  போன்றது'  என்று  வேதங்கள்  சொல்லியிருக்க்கின்றன.
இதனைத்  திருமூலர்,
'உள்ளம்  பெரும்கோயில்  ஊன்  உடம்பு  ஆலயம்
 வள்ளல்  பிரானார்க்கு  வாய்  கோபுர  வாசல்
 தெள்ளத்  தெளிந்தோர்க்குச்  சீவன்  சிவலிங்கம்
 கள்ளப்  புலன்  ஐந்தும்  காளா  மணிவிளக்கே'
     என்ற  பாடலில்  புலப்படுத்துவார்.
     உடம்பு  மிக  மிக  முக்கியம்.  அழியக்  கூடியதானாலும்,  இருக்கும்  வரை  ஆரோக்கியமாக  இருக்க  வேண்டும்.  உடலைக்  காத்து  ஆன்ம  லாபம்  தேடும்  முயற்சிகளில்  ஈடுபடுவோமாக!
-- ஞானவாயில்.  உடம்பின்  பெருமை!
--  தினமலர் பக்திமலர்.  25-12-2014.     

No comments: