Monday, March 27, 2017

ஆர்கானிக் பேட்டரி

 தாய்வான்  தேசிய  பல்கலைக்  கழகத்தைச்  சேர்ந்த  பேராசிரியர்  கங்பின்  லயோ,  ஆர்கானிக்  பேட்டரியை  உருவாக்கியுள்ளார்.  இந்த  பேட்டரியில்  தண்ணீர்  உள்பட  எத்தகைய  திரவத்தை  ஊற்றினாலும்  அது  மின்னுற்பத்தி  செய்யும்.  10  விநாடிகளில்  இது  சார்ஜ்  ஆகும்.  இதில்  சேமிக்கப்பட்ட  மின்சாரம்  2  நாளைக்கு  நிலைத்து  நிற்கும்.  இதில்  ஊற்றப்படும்  திரவத்தின்  தன்மைக்கேற்ப  மின்சாரம்  நிற்கும்.
     இதில்  குளிர்பானத்தையும்  ஊற்றலாம்.  வழக்கமாக  புழக்கத்தில்  உள்ள  பேட்டரிகளைக்  காட்டிலும்  பாதியளவு  மின்சாரத்தை  உற்பத்தி  செய்தாலும்,  இந்த  ஆர்கானிக்  பேட்டரி,  பிற  பேட்டரிகள்  சேமிக்கும்  மின்சார  அளவைக்  காட்டிலும்  கூடுதலாக  சேமிக்கும்  ஆற்றல்  பெற்றது.  இதில்  மின்னுற்பத்தி  செய்வது  மிகவும்  சிக்கனமானது.
நச்சை  உறிஞ்சும்  நானோபட்!
     நச்சுத்  தன்மையை  உறிஞ்சும்  ஸ்பாஞ்சுகள்  இப்போது  உருவாக்கப்பட்டு  வருகின்றன.  கண்னாடியின்  மூலக்கூறில்  உருவாக்கப்பட்ட  நானோபட்  ஸ்பாஞ்சுகள்  தண்ணீரை  உறிஞ்சாது.  ஆனால்  நச்சுப்  பொருள்களை  உறிஞ்சிவிடும்.
     இதனால்  கடலில்  பெட்ரோலிய  கலப்பு  உள்ளிட்ட  பிரச்சினை  ஏற்படும்போது  இதைப்  பயன்படுத்த  முடியும்.
     இது  உண்மையான  அளவைக்  காட்டிலும்  8  மடங்கு  நச்சுத்  தன்மையை  உறிஞ்சும்.  தண்ணீரில்  இதை  நனைத்தாலும்  அதில்  உள்ள  நச்சுத்  தன்மையை  இது  உறிஞ்சிவிடும்.
--  ( வணிக  வீதி ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள்,  டிசம்பர்  22, 2014.  

No comments: