Friday, October 31, 2008

குதிரைத் திறன் !

75 கிலோ கிராம் எடையை ஒரு வினாடி நேரத்தில் , ஒரு மீட்டர் இழுக்கவோ , உயர்த்தவோ தேவைப்படும் சக்தியை ஒரு குதிரைத் திறன் { HORSE POWER } என்கிறோம்.

Thursday, October 30, 2008

மொழி !

உலகம் சுற்றிய தனினாயக அடிகள் கூற்று:
பக்தி மொழி-தமிழ்.
தத்துவ மொழி-ஜெர்மன்.
சட்ட மொழி-லத்தீன்.
இசை மொழி- கிரேக்கம்.
வ்ணிக மொழி -ஆங்கிலம்.
தூதுவர் மொழி- பிரெஞ்சு..
-எனது மாமனார் ,காலஞ்சென்ற, கீழ்வேளூர் தி. ரத்தின முதலியார் கூறியது

Wednesday, October 29, 2008

பாரதியார் !

வெளியிடங்களில் காலை நேரங்களில் சிலர் காலைக் கடன்களைக் கழிக்கும் முறையைப் பார்த்து வெளி நாட்டுக்காரர் ஒருவர்,
" இந்தியர்களாகிய நீங்கள் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் சாப்பிட்ட உணவை வெட்ட வெளியிலே......." என்று முகத்தை சுளித்தவாறு என்னிடம் கூறினார்.
இதைத் தான் பாரதி "ஊர்க் காற்றை மக்கள் விஷமாக்கி விடுகிறார்கள்...." என்று பாடினார்.
-குமரி அனந்தன். தயாரிப்பு. குமுதம் {09-05-1991}.

Tuesday, October 28, 2008

விஹார்.!

புத்தரின் சீடர்கள் தங்கிய இடங்கள் 'விஹார்' என்றழைக்கப்பட்டது. இப்படி ஏராளமான விஹார்கள் இருந்த காரணத்தால் விஹார் என்று அழைக்கப்பட்ட மானிலம் தான் இன்றைய ' பீஹாராக' ஆகிவிட்டது.

Monday, October 27, 2008

'மஃப்டி டிரஸ்'

திருக் குரானின் வாசகங்களை விளக்கிச் சொல்லும் மத குருவிற்கு 'மஃப்டி' என்று பெயர். மஃப்டிகள் எளிய உடைகளையே அணிவது வழக்கம். அந்த உடையும்' மஃப்டி டிரஸ்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில், மற்ற உத்தியோகஸ்தர்கள் அணியும் சாதாரண உடைக்கும் இதே பெயர் நிலைத்து விட்டது. '

Sunday, October 26, 2008

'RUBBER BELT'

பூமத்திய ரேகையின் இரு புறமும் 10 டிகிரி வரையுள்ள பகுதிக்கு ரப்பர் பெல்ட் என்று பெயர். இப்பகுதியில் ரப்பர் மரங்கள் நன்றாக வளர்வதால் ஏற்பட்ட பெயர் இது.

Saturday, October 25, 2008

ஐ--I .

தமிழ் எழுத்துக்களில் 9 வது எழுத்து -ஐ.
ஆங்கில எழுத்துக்களிலும் 9 வது எழுத்து -'ஐ' !

Thursday, October 23, 2008

மன்மத பாணங்கள் .!

காதல் தலைவன் மன்மதனின் ஐந்து பாணங்கள்:
தாமரை--------மயக்குதல்.
அசோகம்-----ஸ்தம்பிக்கச் செய்தல்.
மா----------------வற்றச் செய்தல்.
நவமல்லிகா-பைத்தியமாக்குதல்.
நீலோற்பலம்-மாய்த்தல்.

Wednesday, October 22, 2008

வாசக சாலை.

வாசக சாலையில் ஓர் அறிவிப்பு:
'READING ALOUD IS NOT ALLOWED
READING ALLOWED IF NOT ALOUD'

Tuesday, October 21, 2008

எட்டு.

ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈர் எட்டில் கற்காத கல்வியும்
மூ வெட்டில் ஆகாத மணமும்
நா லெட்டில் பிறவாத பிள்ளையும்
ஐ எட்டில் சேர்காத திரவியமும்
ஆறெட்டில் சுற்றாத சுற்றுலாவும்
ஏழெட்டில் அடையாத ஓய்வும்
எட்டெட்டில் இறவாத இறப்பும்..........பாழ்.

Monday, October 20, 2008

ரிடையர் !

இருபது வயதிலே வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனிதன், நாற்பது வயதிலே ' TIRED'ஆகிறான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு முன்னேறுகிறான். ஆனால் அறுபது வயதிலே 'RETIRED' {மறு களைப்பு } ஆகிறான்.அதைத்தான் 'ரிடையர்' என்கிறார்கள்..
-கவியரசு கண்ணதாசன்.

Sunday, October 19, 2008

மாதிரி.!

சோத்தைப் போட்டு தொண்டையை நெறிக்கிற மாதிரி !
அண்ணனைக் கொன்ற பழியை சந்தையில தீர்த்துக்கற மாதிரி !
அடை மழை பெய்ததில ஆட்டுக்குட்டி செத்த மாதிரி !
துளியூண்டு மோர் மொத்த பாலையும் கெடுத்திடுங்கிற மாதிரி !
நெருப்புக்கு காத்து உதவுற மாதிரி !
குடியிருக்கிற வீட்டுக் கூரையைக் பிய்த்து எறிகிறது மாதிரி !
சங்கு ஓட்டையா இருந்தாலும் , சத்தம் வந்தா சரிங்கற மாதிரி !
ஏணிப்படிக்கு கோணல் கழி வெட்டின மாதிரி !
பொதுப் பானையை நடுத் தெருவுல உடைக்கிற மாதிரி !
சுருக்கம் விழுந்த கழுத்துல முத்து மாலை தொங்கற மாதிரி !
முழுகி எழுந்திருக்கற போதெல்லாம் முத்துக்களை அள்ளிட்டு வர மாதிரி !
ராஜா இருந்தாலும் பட்டணம் பாழாப் போறதேங்கற மாதிரி !
அக்னி மலையில கற்பூர அம்பு விழுந்த மாதிரி !

Saturday, October 18, 2008

கல்வி.

நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பதற்குப் பெயர்தான் கல்வி.-ஜார்ஜ் ஸனவல்.
சிறந்த ஆசிரியர் மாணவன் நிலைக்கு இறங்கி வந்து, அவன் கண்களால் பார்த்து, அவன் காதுகளால் கேட்டு, அவனது அறிவாற்றலுக்கு ஏற்பப் புரிந்து கொண்டு உணர்த்தவும் செய்வான். -விவேகானந்தர்.
ஆசிரியர் ஆவதற்கு அறிவுத் திறன் மட்டும் போதது, நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்க வேண்டும்.-எமர்சன்.
படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது.எந்தப் பிரச்சனையோடாவது உராயும் போதுதான் அதிலிருந்து சிந்தனைச் சுடர் பிறக்கிறது.-விவேகானந்தர்.
கல்வியின் நோக்கம் பொருள்களை அறிவது மட்டுமன்று : வேலைக்கு அடிப்படை அமைப்பதும் அல்ல: பெருந்தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதே.-ரஸ்கின்.
கல்வி ஏழைகளுக்கு மூலதனம். செல்வந்தனுக்கு வட்டி! -ஹேரேஸ்மன்.
ஒரு மாணவன் மோசமானவனாக மாறினால் அது அவனை மட்டுமே பாதிக்கிறது. ஒரு ஆசிரியர் தம் கடமையைச் சரியாகச் செய்யாது போனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிக்கப்படுகிறார்கள்.-சத்ய சாயி பாபா.
சிந்திக்காமல் படிப்பது வீண்: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து -கன்பூசியஸ்.
செய்யத் தெரிந்த மனிதன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.-கர்னல் கீல்.
தீர்க்க முடியாத சந்தேகங்களை தீர்ப்பவரே குரு.
கல்வித் துறையின் மிகமுக்கியமான நோக்கம் தன்னம்பிக்கையை வளர்பதாகவே இருக்க வேண்டும்.-விவேகானந்தர்.
மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றியே அடங்கியுள்ளது. இதை எத்தனை ஆசிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.-எமர்சன்.

Friday, October 17, 2008

தேள்.

ஆண் தேள், பெண் தேளின் கால்களைப் பிடித்துக்கொண்டு முன்னும், பின்னுமாக இழுக்கும். அப்படிச் செய்யும் போது ஆண் தேள் தனது விந்துத் துளிகளைத் தரையில் தெளித்து, பெண் தேளை முன்னும் பின்னும் இழுத்து அத்துளிகளின் மேல் ஊர்ந்து போகச் செய்யும் -அப்போது பெண் தேளின் இனவிருத்தி உறுப்பு அந்த துளிகளை உறிஞ்சிக் கொண்டு, பின்னர் கருத்தரிக்கும். இந்த உடலுறவு விசித்திரமானது.

மனித வாழ்க்கை.

"தந்தையால் பிறப்பு;
இறைவனால் இறப்பு:
இரண்டுக்கும் நடுவே
அரிதாரம் பூசாத நடிப்பு
இதுதான் மனித வாழ்க்கை" !

Thursday, October 16, 2008

ம்னித வாழ்வில் 7 நிலைகள்.

பிறந்தார்
கிடந்தார்
இருந்தார்
தவழ்ந்தார்
நடந்தார்
இறந்தார்
பிணமானார்.
-வானொலியில், வாரியார் சுவாமிகள்.13-04-1995.

Tuesday, October 14, 2008

சில நேரங்களில் சில ராகங்கள் !

காலை மணி 5-6 .........பூபாளம்.
6-7..........பிலஹரி.
7-8...........தன்யாசி
8-9
9-10..........ஆரபி, சாவேரி
10-11..........மத்யமாவதி.
11-12..........மணிரங்கு.
பகல் மணி12-100.......ஸ்ரீ ராகம்..
1-2............மாண்டு.
2-3............பைரவி, கரகரப்பிரியா.
3-4..............கல்யாணி, யமுனா கல்யாணி.
மாலை மணி4-5 .........காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
திருவெண்காடு, T.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டது.{10-06-1995}.

ஆப்டிமிஸ்ட் - பெஸ்ஸிமிஸ்ட்.

Optimism:-doctrine that everything is for the best -எல்லாம் நன்மைக்கே என்ற கொள்கை-hope that there will be a happy ending to every happening- வடையில்- வடையைப் பார்த்து மகிழ்பவர்.
Pessimism:- Unfavouble view of affairs - நம்பிக்கையற்ற குணம் pessimist-one who expects that something unpleasant will happen -inclimed to look always on the dark side of things -வடையின் நடுவில் உள்ள துவாரத்தில் மட்டும் ஏன் வடையைக் காணோம் என்று குறைபடுபவர்.
-H.M. திரு. N.இராமகிருஷ்ணன், கூறக்கேட்டது.

Monday, October 13, 2008

SPACE-கடவுள் !

ஒரு புள்ளிக்கு எந்தத் திக்கிலும் அளவு இல்லை. அது நேராக நகர்ந்தால் நேர்க்கோடு. நேர்க்கோடு மேல் நோக்கி நகர்ந்தால் அது பரப்பளவு. பரப்பளவு தனக்கு தனக்கு செங்குத்தாக நகர்ந்தால் அது கன அளவு , கன அளவு நகர்ந்து கொண்டே போனால்,' SPACE' கிடைக்கும். இதில் என்ன தெரிகிறது ? ஒரு புள்ளி தன் அசைவினால் 'SPACE' ஐ நிறுவி விட்டது. " கடவுள் இல்லை என்பவர்கள் புள்ளியுடன் நின்று விடுகிறார்கள்.'உண்டு' என்பவர்களுக்குத்தான் உலகில் ' 'SPACE' கிடைக்கிறது, ஆகவே...."
-கடவுள் உண்டா, இல்லையா? என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவரின் தீர்ப்பு.-கல்கி, 14-04-1996.

Sunday, October 12, 2008

ஒன்பதா? தொன்பதா?

பத்துக்கு முன்னால் வரும் ஒன்பது என்ற இலக்கத்தை'தொன்பது' என்று சொல்ல வேண்டும். காரணம் : தொல் பத்து. அதாவது பத்துக்கு முந்தியது என்ற பொருள். தொண்ணூறு என்பதும் தொள்ளாயிரம் என்பதும் 'தொல் நூறு' என்றும், 'தொல் ஆயிரம்' என்றும் சொல்ல வேண்டும்.
-வள்ளலார் வாக்கு, என்ற நூலிலிருந்து.

Saturday, October 11, 2008

நால்வகை பிறப்பு.

இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும்,
நாணயமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்,
நன்மை, தீமை தெரியும் நெஞ்சில் மெய்யுணர்வு பிறக்கும்,
ஆணவமில்லாத நெஞ்சில் மரியாதை பிறக்கும்.
-கன்பூஷியஸ்.

Friday, October 10, 2008

மேட்டூர் அணை.

1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாளன்று மேட்டூர் அணைத் திட்டத்தைச் சென்னை கவர்னர் கோஷன் பிரபு தொடங்கி வைத்தார். 1928 -ல் வேலைகள் தொடங்கப் பெற்றன். இவ்வணை ஆறு ஆண்டுகளில் 450 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பெற்று 1934, ஆகஸ்டு ,21 -ல் சென்னை கவர்னர் லேர் பிரடெரிக் ஸ்டான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Thursday, October 9, 2008

உயிர்கள்.

1) ஓரறிவு-புல்லும்,மரமும் (நகராது).
2) ஈரறிவு-சிப்பி, சங்கு (நகரும் ).
3) மூவறிவு- கரையான், எறும்பு (பறக்க முடியாது ).
4) நாலறிவு- தும்பி,வண்டு (பறக்கும் ).
5 )ஐந்தறிவு- மிருகம் (கண்டு,கேட்டு, உண்டு, வாழும் ).
6)ஆறறிவு- மனிதன் (எது தீமை, எது நன்மை என்று தெரியக் கூடிய பகுத்தறிவு உடையவன் ).

Wednesday, October 8, 2008

மாத்திரையை விழுங்க !

"ஹம்சத்வனியை ஹரிஹரன் ஹாலாபனை செய்தான் " என்று ஒரிரு தடவை சொல்லுங்கள், மாத்திரை உள்ளே போய்விடும். 'ஹ' என்ற எழுத்தை பல தடவைகள் உச்சரிக்கும் போது தொண்டையில் அதிக இடைவெளி ஏற்படுவதால் மாத்திரை உள்ளே போவது எளிதாகிறது.

மூவகை மனித தன்மைகள் !

1) அநாகதவிதாதா- வருமுன் காப்போன்.
2) ப்ரத்யுத்ப ந்நதி- அப்பொழுதே தப்ப வழி தேடும் புத்தி கூர்மை உடையவன்.
3) யத்பவிஷ்யன்- வருவது வரட்டும் என்று இருப்பவன்.

Tuesday, October 7, 2008

திருக்குறள்- எண்கள் !

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என்ற எண்ணை 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரே ஒரு இடத்திலும், ஏழை 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பதை முறையே ஒவ்வொரு குறளிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (1/2 ) ஒரு இடத்திலும் ,காற்பாம் (கஃசா) ஒரு குறளிலும் எழுதியுள்ளார். ஆனால், 'ஒன்பது 'என்ற சொல்லை மட்டும் எங்கேயும் பயன்படுத்தவில்லை.

Monday, October 6, 2008

ஏழு குதிரைகளின் பெயர்கள் !

சூரியனின் ரதத்தை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த ஏழு குதிரைகளின் பெயர்கள்:காயத்திரி, ப்ருஹதி,
உஷ்ணிக், ஜகதி, திருஷ்ஷம், அனுஷ்டுய், பக்த்தி இதையொட்டியே வாரத்திற்கு ஏழு நாட்கள் அமைந்திருக்கின்றன.

Sunday, October 5, 2008

மூவகை உடம்புகள் !

உலகில் நிலவும் உயிர்கட்கு மூவகை உடம்புகள் கூறப்பெறும்.
1) புறத்தே தோன்றும் உடம்பு தூல உடம்பு அல்லது பருவுடம்பு அல்லது பூதனாசாரம்.
2) உடம்புக்குள்ளே சூட்சுமமாய் இருக்கும் புரியட்ட சரீரம்.
3) நரகத்தில் கிடக்கும் உடம்பு யாதனா சரீரம்.
-மு. சுந்தரேசம் பிள்ளை. குமரகுருபரர் மாத இதழ்.

Saturday, October 4, 2008

பிரியா விடை !

அன்பு வாசக நெஞ்சங்களுக்கு,

கடந்த 15-5-2008 முதல் இன்று வரை எனது தொகுப்பினைப் படித்து வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இதுவரையில் நான் அமெரிக்காவில் (USA) கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜலஸில் இருந்து BLOG எழுதினேன். COMPUTER, LAPTOP என்றாலே என்னவென்று தெரியாத எனக்கு இது ஒரு புதிய அறிமுகம், அனுபவம். 6-5-08ல் இங்கு வந்த எனக்கு சுமார் 25 நாட்கள் 52" TV-யும், கம்யூட்டரில் சீரியல்கள், இசை (என் மகன் ஐயப்பன் போட்டுக் காட்டியது தான்) என்று பொழுது போனது தெரியாமல் போனது. அதன் பிறகு என் மகன் சிறிது சிறிதாக சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொண்டேன். ஆகவே இதில் வேறு அன்பர்கள் எழுதும் கருத்துக்களைப் பார்க்கவோ, படிக்கவோ தெரியாது. எனது மகனின் பணி, வீட்டு வேலைகளுக்கு இடையே எனக்கு, லேப்டாப்பை கொடுக்க இயலாமற் போனது. இடையில் கம்ப்யூட்டரும் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டது. நடுவில் உள்ளுர், வெளியூர் என்று பல இடங்களுக்கும், சுற்றிப் பார்க்க சென்று விட்டோம். ஆகவே என்னால் முடிந்த அளவுக்குத் தொகுப்பினைக் கொடுத்துள்ளேன், இதன் பிறகு நான் ஊர் திரும்பியதும், இறைவன் அருள் இருந்தால், தொடர்ந்து எழுதுகிறேன். இதுவரை எனக்கு தங்களது முழு ஒத்துழைப்பினைத் தந்த என் மகன் ஐயப்பனுக்கும், மருமகள் ரோஷிணிக்கும் எங்கள் குடும்பத்தாரின் நல் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் கூறி, பிரியா விடை கூறுகின்றேன்.

இது வரை நாங்கள் சென்ற இடங்களையும், பார்த்தவற்றையும், இங்கே குறிப்பிடுவது மிக முக்கியமானது என்பதால் அதையும் இங்கே தெரிவிக்கிறேன்.

மே 10 - Malibu Hindu Temple. மாலிபுவில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோவில்.
மே 17 - அண்ணன் தம்பி - மலையாளப் படம்.
மே 24 - யுனிவர்சல் ஸ்டுடியோஸ், (Water World என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ஒரு காட்சியை சுமார் 1/2 மணி நேரம் நடித்துக்காட்டினர் / Shrek 4D திரைப்படம் - 3D படம் போலல்லாது, எதிரே நீர் தெளிக்கும், நார்க்காலிகள் ஆடும் / Backdraft / Studio Tour - Tram ல் ஸ்டுடியோவைச் சுற்றிப் பார்த்தோம் / Animal Planet / Jurassic Park / Special Effects Stages / Terminator 2 - 3D திரைப்படம் முதலியன பார்த்தது

ஜுன் 1 - Getty Center - Museum.
ஜுன் 7 - Queen Mary Ship ஐப் பார்த்தது. Long Beach ல் சுமார் 3/4 மணி நேரம், பசிபிக் கடலில் Boat Trip.
ஜுன் 8 - Hollywood ஹாலிவுட்டைப் பார்த்தது.
ஜுன் 13 - தசாவதாரம் தமிழ் திரைப்படம்.
ஜுன் 21 - Lake Shrine Temple - பரமஹம்ச யோகானந்தா ஆசிரமம்.
ஜுன் 20 - Getty Museum.
ஜுன் 27 - Earth Quake - நில அதிர்வு - சுமார் 5.4 ரிக்டேர் அளவுக்கு ஏற்பட்டது.

ஆகஸ்டு 9 - மான்டிபெலோ - ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா ஸன்ஸ்தான்.
ஆகஸ்டு 16 - வெளியூர் செல்ல வேண்டி புறப்பட்டது. Las Vegas-ப் போக California State தாண்டி Nevada State-க்குப் போய் அங்கிருந்து லாஸ் வெகஸ் போனோம்.
ஆகஸ்டு 16 - LAS VEGAS - தங்கியிருந்த STRATOSPHERE HOTEL ல் SLOT MACHINE (சுதாட்டத்திற்கு பயன் படும் மிஷின்) ஐப் பார்த்து வியந்தது. 108 floor டவரில் elevator ல் 21 Miles Per Hour ஏறிப் பார்த்தது.
BELLAGIO - CASINO.
BELLAGIO - DANCING FOUNTAIN ! ஆச்சர்யம்.
PARIS - EIFFEL TOWER & CASINO (பொதுவாகவே இங்கு லாஸ் வேகஸில் குடி, சுதாட்டம், விபசாரம் இவைகளுக்கு தடை கிடையாது)
ஆகஸ்டு 17 - Stratosphere Tower Thrill Rides
BOULDER CITY- LAKE MEAD - HOOVER DAM வழியாக புறப்பட்டது.
HOOVER DAM ல் இருந்து, நெவேடா மானிலம் முடிந்து, அரிசோனா மானிலம் தொடங்குகிறது.
GRAND CANYON - SUNSET இரவு 7:14 க்குப் பார்த்தது.
ஆகஸ்டு 18 - GRAND CANYON -SUNRISE விடியற்காலை 5:40க்குப் பார்த்தது. சாதாரணமாக ஒரு நபர் நம் தமிழ் நாட்டில் அதிகபட்சமாக, நெடுந் தொலைவுக்குப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், சுமார் கொஞ்ச தூரம் தான் பார்க்க முடியும். சிறிது காலங்களுக்கு முன்னால் 90 மைல் தூரம் வரை கிராண்ட் கான்யலில் பார்க்க முடியுமாம். ஆனால் இப்பொழுது 21 மைல் வரை தான் பார்க்கமுடியுமாம். நாங்கள் இங்கு SOUTH RIM வழியே தான் பார்க்கமுடிந்தது.
YAVAPAI POINT MUSEUM -
GRAND CANYON பற்றிய IMAX படம் பார்த்தோம். IMAX FILM தமிழ் நாட்டில் பார்க்க முடியாது. காரணம் அதற்கான தியேட்டர் கிடையாது. 35 mm போல சுமர் 9 மடங்கும், சினிமா ஸ்கோப் போல 3 மடங்கும் பெரிய திரை. தென்னிந்தியாவில் ஹைதராபத்தில் மட்டுமே இந்த தியேட்டர் உள்ளது. இந்தியாவில் 4 இடங்களில் உள்ளது. நீளம் 72 அடி, உயரம் 53 அடி. உலகிலேயே மிகப் பெரிய தியேட்டர் ஹைதராபாத்தில் தான் உள்ளது.
சென்ற வழியே திரும்பி, HOOVER DAM வந்தோம். இரண்டு மலைகளுக்கு இடையே ஓடும் கொலராடோ நதியின் குறுக்கே கட்டப்பட்டது தான் HOOVER DAM.
மீண்டும், லாஸ் வேகஸ் வந்தது.
THE VENETIAN ஐப் பார்த்தது. உண்மையான வெனிசை பார்ப்பது போலவே இருந்தது. Canals எல்லாம் இருந்தது.
PARIS CASINO - பாரீஸில் கடை வீதியில் போவது போலவே இருந்தது. உண்மையான வானம் போலவே வானம் இருந்தது.
ஆகஸ்டு 19 - CAESARS PALACE பார்த்துவிட்டு ஊர் திரும்பினோம்.
BAKARSFIELD - CA வில் உலகிலேயே பெரிய தர்மா மீட்டர் பார்த்துவிட்டு ஊர் திரும்பி விட்டோம்.
ஆகஸ்டு 30 - SANFRANCISCO - GOLDEN GATE BRIDGE 4200 அடி பாலம். 4 வருட கட்டுமானத்திற்குப் பிறகு 1937 ல் தொடங்கப் பட்டது. இரண்டு 746 - Foot tall tower. orange, red Golden Gate Bridge.
ALCATREZ ISLAND (prison ) இருந்தது. இது பற்றிய ஆங்கிலப் படம் (Escape From Alcatraz) ஒன்றை TV-ல் பார்த்தோம்.
ஆகஸ்டு 31 - SANJOSE.-
ஆகஸ்டு 31 - WINCHESTER MYSTERY HOUSE.
THE TECH MUSEUM OF INNOVATION.
IMAX FILM: BLUE PLANET - 360 டிகிரி (அரை கோள வடிவம் ) யில் படம் பார்த்தோம்.
செப்டம்பர 1 - MYSTERY SPOT - Santa Curz, CA
சான் பிரான்சிஸ்கோ சென்ற பாதையெங்கும், திராட்சை, ஆரஞ்சு, கம்பு, பூண்டு, சோளம், எலுமிச்சை தோட்டங்கள். ஹெலிகாப்டரிலிருந்து மருந்து தெளித்தார்கள்.

அன்றாட பொருட்கள் வாங்க சென்ற கடைகள்
  • WALMART,
  • WALGREENS,
  • IKEA,
  • INDIAN STORES,
  • COSTCO & SHOPPING MALLS

சென்ற உணவு விடுதிகள் :
  • அன்னபூர்ணா - Culver City - CA
  • பஞ்சாபி ஹோட்டல் - Long Beach - CA
  • காந்திஜி ஹோட்டல் - Las Vegas - NV
  • இந்தியா பேல்ஸ் - Las Vegas - NV
  • ஹோட்டல் சரவண பவன் (சென்னையில் உள்ளதுதான்) - Sunnyvale - CA
  • திருப்பதி பீமாஸ் - Artesia - CA
  • ரஸ் ராஜ் - Artesia - CA

குறிப்பாக, தினமும் நாங்கள் Walking போவதற்கு மிக வசதியாக இருந்தது FOX HILLS PARK. அப்போது அறிமுகமான பெங்களூர் திரு சீத்தாராம அய்யர், மற்றும் பொள்ளாச்சி திரு, ஆறுமுகம் செட்டியார் குடும்பத்தார்கள், அதிலும் மிகக்குறிப்பாக எங்கள் அன்பு செல்வி. அர்ச்சனாவை எங்களால் வாழ்வில் மறக்கவே முடியாது.

இம்மாதம் 31 ம் தேதி வரையில் Blog Posts-களை எழுதி SCHEDULED ல் போட்டுள்ளேன் . அன்பர்கள் தொடர்ந்து படிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஆகவே சுகமான நினைவுகளோடும், கனமான நெஞ்சோடும் பிரியா விடை பெறுகிறோம். நன்றி, வணக்கம்!

Friday, October 3, 2008

பழமொழிகள் !

பிராணிகளிலேயே நிமிர்ந்து நடக்கும் பிராணி மனிதன் தான். அப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு நல்ல மனைவி வாய்க்காவிட்டால் அவனால் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.!
உணவுப் பொருளை உண்டக்கிக் கொடுத்து, தானும் உணவாவது மழை.!
அறிவு வளரக் கூடியது, ஞானம் நிலைத்து விடக் கூடியது.
மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
கேட்பதை எல்லாம் நம்பாதே, தெரிந்ததை எல்லாம் சொல்லாதே.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.
ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர் !
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லசமாகத் திரிகின்றன. நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.

பழமொழிகள் !

பிராணிகளிலேயே நிமிர்ந்து நடக்கும் பிராணி மனிதன் தான். அப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு நல்ல மனைவி வாய்க்காவிட்டால் அவனால் நிமிர்ந்து நடக்க முடிவதில்லை.!
உணவுப் பொருளை உண்டக்கிக் கொடுத்து, தானும் உணவாவது மழை.!
அறிவு வளரக் கூடியது, ஞானம் நிலைத்து விடக் கூடியது.
மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.
கேட்பதை எல்லாம் நம்பாதே, தெரிந்ததை எல்லாம் சொல்லாதே.
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி இல்லை.
ஆடவருக்கு தொழில் உயிர், பெண்களுக்கு ஆடவர் உயிர் !
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லசமாகத் திரிகின்றன. நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.

Thursday, October 2, 2008

செய்தித் துளிகள்.

ஜனகராஜன் தனது மிதிலாபுரி முழுவதும் பற்றி எரிகிறது என்று சொல்லியும் அசைவற்றிருந்தார்.
பிரம்மா, மன்மதன், அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய நால்வரும் விஷ்ணுவின் குழந்தைகள்.
கீழே உள்ள 7 உலகம்:-அதலம், விதலம், சுதலம், ரஸாதலம், தலாதலம், மஹாதலம், பாதாலம்.
' த்ருதராஷ்ட் ரன்' என்றால் (ராஷ்ற்றம் ) அரசாட்சியை ( த்ருதன்) தாங்கியவன் என்று பொருள். அந்தப் பெயர் அவர் பிறந்தசமயத்திலேயே அவருக்குக் கொடுக்கப்பட்டது.
நாரதர் :- முற்பிறப்பில் வேதியர் ஒருவரின், வீட்டு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தவர்.
தசரத சக்ரவர்த்தியின் தந்தை பெயர் 'அஜன்' - கொள்ளுத்தாத்தா 'ரகு' , எள்ளுத்தாத்தா பெயர் 'திலீபன்'.
இராமன்-சீதை( ஜானகி)., லட்சுமணன்-ஊர்மிளை, குசன்-சம்பிகா, லவன்- சுமதி.
திரிமூர்த்திகள் பிர்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரும் மஞ்சள், கருப்பு, வெளுப்பு: இந்த மூவருடைய சக்திகளும் முறையே வெளுப்பு, மஞ்சள், கருப்பு நிறங்கள். பராசக்தி சிகப்பு நிறம்.
அகத்தியரின் மனைவி பெயர் உலோபாமித்திரை.

அறிவில் 3 பிரிவு.

1) நல்லறிவு:- நல்ல பேச்சு, செயல், திறன், சிந்தனை,மனிதரிடம் பழகுதல்.
2) புல்லறிவு:-10 காசு அறிவு இருக்கும் போது, 10 ரூபாய் அறிவு இருப்பதாக நினைத்துக் கொள்வர்.
3) கார் அறிவு:-திருடப்பழக்குவது இவ்வறிவு.
-திருக்குறள் முனுசாமி. ( கேசட் ).24-04-1989.

Wednesday, October 1, 2008

தையல்

ஔவையார் தம் ஆத்திச்சூடியில் 'தையல் சொல் கேளேல்.......' என்றார். பாரதியார் ' தையலை உயர்வு செய்.....என்று படினான். பாரதிதாசனோ ' பெண்ணோடு ஆண் நிகர்.....' என்று சமத்துவம் கண்டார்.

பாலைவனம்.

125 மில்லி மீட்டருக்கு குறைவான மழை அளவை, வருட மழையாக ( அளவாக) கொண்டுள்ள பகுதிகள்தாம் பாலைவனம் என அழைக்கப்படுகின்றன.

ஹம்சம்

நீரைப் பாலினின்று பிரித்து, பாலை மட்டுமே பருகும் பறவை ஹம்சம், அன்னம். மாயையான உலகிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பிரித்துத் தன்னுள் கிரகிக்கும் ஞானிக்கு ஹம்சன் என்றும் பரமஹம்சன் என்றும் பெயர்.
-ரா. கணபதி.